12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
விலங்கியல் - மனித நலனில் நுண்ணுயிரிகள்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
'திரள்' என்றால் என்ன?
2.
மனிதர்களின் மருத்துவ சிகிச்சையில் பயன்படும் நுண்ணுயிரிகளையும் அதன் முக்கியத்துவத்தையும் கூறு.
3.
வணிக ரீதியிலான நொதிகளின் உற்பத்திக்கு ஈஸ்ட் (சக்காரோமைசீஸ் செரிவிசியே) எவ்வாறு பயன்படுகிறது?
4.
பூஞ்சையிலிருந்து உருவாகும் ஏதேனும் இரு கரிம அமிலங்களை குறிப்பிடுக.
5.
பாஸ்டியர் விளைவின் முக்கியத்துவம் யாது?
6.
சூப்பர் பக் என்றால் என்ன?
7.
ஆன்டிபயாடிக் (அ) உயிர் எதிர்ப்பொருளுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
8.
முதல் உயிர் எதிர்ப்பொருள் கண்டறிந்தவர் யார்? உயிர் எதிர்ப்பொருள் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் யார்?
9.
இயற்கை வேளாண்மை எவ்வாறு வேதியியல் உரங்கள் பயன்படுத்தும் வேளாண்மை முறையை விட மேலானது?
10.
பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் நோய்களுக்கு எதிராக எவ்வகை நுண்ணுயிரிகள் செயல்படுகின்றன என்பதை தகுந்த எடுத்துக்காட்டுடன் கூறு.
11.
கோதுமை அரிசி, உளுந்தினால் தயாரிக்கப்படும் சில இந்திய உணவுகளைக் கூறு. அவற்றில் நுண்ணுயிரிகளின் பாங்கினைக் கூறு.
12.
எந்த உணவுப் பொருளில் லாக்டிக் அமில பாக்டீரியா காணப்படுகிறது? அதன் செயல் யாது?
13.
உயிரிய ஆக்சிஜன் தேவை(BOD) என்றால் என்ன?
14.
15.
பால் எவ்வாறு தயிராக மாற்றப்படுகிறது? தயிர் உருவாகும் முறையினை விளக்குக.
1.
1. இரண்டாம் நிலை சுத்திகரிப்பின் போது முதல்நிலையில் உருவான நீர் பெரிய காற்றோட்டமுள்ள தொட்டிக்குள் செலுத்தப்படுகிறது.
2. அங்கு அவை இயந்திரங்களின் உதவியால் தொடர்ச்சியாக கலக்கப்படுவதால் காற்று உட்செலுத்தப்படுகிறது.
3. இதனால் காற்று சுவாச நுண்ணுயிரிகள் தீவிரமாக வளர்ந்து திரளாக உருவாகின்றன.
4. திரள் என்பது பாக்டீரியாத் தொகுப்பும் பூஞ்சை இழைகளும் இணைந்து வலைப்பின்னல் போன்ற அமைப்பாக காணப்படும்.
2.
எ.கோலை மற்றும் சக்காரோமைசெஸ் செரிவிசியே ஆகியவை மறுசேர்க்கை மனித இன்சுலின் உற்பத்திக்கு பயன்படுகிறது.
3.
1. துணிகளில் படிந்த எண்ணெய் கறைகளை நீக்க லைபேஸ் நொதி சலவைப் பொருட்களில் பயன்படுகிறது.
2. பெக்டினேஸ், புரோட்டியேஸ் மற்றும் செல்லுலோஸ் நொதிகள் புட்டியில் அடைக்கப்பட்ட சாறுகளை தெளிவடைய செய்ய பயன்படுத்தப்படுகின்றன.
4.
1. சிட்ரிக் அமிலம் ⟶ ஆஸ்பர்ஜில்லஸ் நைஜர்
2. ஃபியூமரிக் அமிலம் ⟶ ரைசோபஸ் ஒரைசே.
5.
நொதித்தல் நிகழ்வின் மீது ஆக்சிஜன் ஏற்படுத்தும் தடையின் விளைவாகும்.
6.
பல்வேறு உயிர் எதிர்ப்பொருளுக்கான எதிர்ப்புத் தன்மையை பெற்ற திரிபுகளே 'சூப்பர் பக்' என்று அழைக்கப்படும்.
7.
1. எரித்ரோமைசின்
2. குளோரோமைசிடின்
3. கிரைசோஃபுல்வின்
4. நியோமைசின்
5. கனாமைசின்
6. பாசிட்ராசின்
8.
1. ஸ்ட்ரெப்டோமைசின் என்ற உயிர் எதிர்ப்பொருளை செல்மேன் வாக்ஸ்மேன் என்பவர் கண்டறிந்தார்.
2. 1943 ஆம் ஆண்டில் உயிர் எதிர்ப்பொருள் என்ற சொல்லையும் முதலில் அவர் பயன்படுத்தினார்.
9.
1. இயற்கை வேளாண்மை என்பது இயற்கையான வழிகளில் தாவரங்களை பயிர் செய்தல் மற்றும் விலங்குகளை வளர்த்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.
2. கரிமப் பொருட்களை பயன்படுத்தி மண்ணின் தரத்தைப் பாதுகாத்தல் மற்றும் உயிரியல் செயல்பாடுகளை ஊக்குவித்தல்.
3. மண் வாழ் நுண்ணுயிரிகளை பயன்படுத்தி பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்களை அளித்தல்.
4. சூழியல் சமநிலை பராமரிக்கப்படுகிறது.
5. இதன்மூலம் மாசடைதலும் கழிவுகளும் குறைகின்றது.
6. இயற்கை முறையில் களை மற்றும் தீங்குயிரிகளை கட்டுப்படுத்துதல்.
10.
ஸ்ட்ரெப்டோமைசின்:
1. இது பரந்த செயலாற்றலுள்ள உயிர் எதிர்ப்பொருள்.
2. ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரைசியஸ் என்ற ஆக்டினோமைசெஸ் வகையைச் சேர்ந்த பாக்டீரியாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
3. இந்த மருந்து பொதுவாக கிராம் பாசிடிவ் மற்றும் கிராம் நெகடிவ் பாக்டீரியாக்களை அழிக்கவல்லது.
4. குறிப்பாக மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸை அழிக்கின்றது. இது காசநோய்க்கு காரணமானது.
11.
1. இட்லி மற்றும் தோசை மாவை நொதிக்கச் செய்வதற்கு லியூகோனோஸ்டாக் மெசென்டிராய்ட்ஸ் என்ற பாக்டீரியம் பயன்படுகிறது.
2. ரொட்டி தயாரிப்பதற்கு பயன்படும் மாவை சக்கரோமைசஸ் செரிவிசியே (அடுமனை ஈஸ்ட்) என்ற ஈஸ்ட் நொதிக்கச் செய்கிறது.
12.
1. சிறிதளவு தயிரில் மில்லியன் கணக்கில் லாக்டோபேசில்லி இன பாக்டீரியாக்கள் உள்ளன.
2. பாலில் வளரும் லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் பாலில் உள்ள பால் புரதத்தை செரித்து கேசின் எனும் தயிராக மாற்றுகிறது.
13.
1. ஒரு லிட்டர் நீரிலுள்ள அனைத்து கரிம பொருட்களையும் ஆக்சிஜனேற்றம் செய்வதற்கு பாக்டீரியாவால் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவே "உயிரிய ஆக்சிஜன் தேவை" எனப்படும்.
2. கழிவு நீரில் உயிரிய ஆக்சிஜன் தேவை அதிகரிக்க அதிகரிக்க கழிவு நீரின் மாசுபடுத்தும் தன்மையும் அதிகரிக்கிறது.
14.
15.
1. பாலில் வளரும் லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் பாலில் உள்ள பால் புரதத்தை செரித்து கேசின் எனும் தயிராக மாற்றுகிறது.
2. தூய பாலில் உறை (அ) மூல நுண்ணுயிரிகள் சேர்க்கப்பட்டு சிறிதளவு தயிரில் மில்லியன் கணக்கில் லாக்டோபேசில்லஸ் இன பாக்டீரியாக்கள் உள்ளன.
3. அனுகூலமான வெப்பநிலையில் (≤40o C) இவை எண்ணிக்கையில் பெருகி பாலை தயிராக மாற்றுகிறது.
4. பாலை விட தயிரில் அதிக சத்தான கரிம அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards