12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/10/2019
விலங்கியல் - மூலக்கூறு மரபியல்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
ரெட்ரோ வைரஸ் ஏன் மூலக்கூறு உயிரியலில் மையக் கருத்தைப் பின்பற்றுவதில்லை?
2.
மனித மரபணு முக்கிய இலக்குகள் யாவை?
3.
ஊஞ்சலாட்டக் கோட்பாடு யாது?
4.
கீழ்க்கண்ட குறியீடுகளை இனங்கண்டறியும் எதிர்குறியீடுகளை எழுதுக.
AAU, CGA, UAU மற்றும் GCA
5.
ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றுக்கிடையே உள்ள அமைப்பு சார்ந்த வேறுபாடுகள் மூன்றினைக் குறிப்பிடுக.
6.
கடத்து ஆர்.என்.ஏ, ‘இணைப்பு மூலக்கூறு’ என ஏன் அழைக்கப்படுகிறது?
7.
வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோர் டி.என்.ஏ அமைப்பைப் பரிசோதனை செய்ததன் மூலம் டி.என்.ஏ இரட்டிப்பாதல், குறியீடு திறன் மற்றும் திடீர் மாற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் முறை குறித்து என்ன முடிவுகளுக்கு வந்தனர்?
8.
மனித மரபணுத் திட்டம் ஏன் மகாதிட்டம் என அழைக்கப்படுகிறது.
9.
தாழ்நிலை ‘லாக் ஓபரான்’ வெளிப்பாடு எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. இக் கூற்றை நியாயப்படுத்துக.
10.
அமைப்பு மரபணுக்கள், நெறிப்படுத்தும் மரபணுக்கள் மற்றும் இயக்கி மரபணுக்களை வேறுபடுத்துக.
1.
ஆம் RNA வை மரபணுவாகக் கொண்ட சில ரெட்ரோ வைரஸ்கள் (HIV)
எனும் எதிர் இழைகளாக அல்லாமல் கடத்தப்படாமல், இவற்றில் இத்தகவல் தலைகீழாக நடைபெறுகிறது.
2.
(i) கண்டறிதல் - மனித DNA விலுள்ள அனைத்து மரபணுக்களையும் (ஏறத்தாழ 30,000) கண்டறிதல்.
(ii) தீர்மானித்தல் - கூடவே அதிலுள்ள 3 பில்லியன் வேதி கார இணைகளின் வரிசையைத் தீர்மானித்தல்.
(iii) தகவல்களைச் சேமித்தல் - தகவல்களை தரவுத்தளங்களில் சேமித்தல்
(iv) கருவிகளை மேம்படுத்துதல் - தரவுகளை ஆய்வு செய்வதற்கான கருவிகளை மேம்படுத்துதல்
(v) தொடர்புடைய தொழில்நுட்பங்கள் தொழிற்சாலை போன்ற பிற இடங்களுக்கும் இடம் மாறுதல்
(vi) ELSI - அறம் சார்ந்த சட்ட, சமூக இடர்பாடுகளை (ELSI) தெரிவித்தல்.
3.
உருவாக்கியவர் கிரிக் - 1966
(i) தனது 5' முனையில் கடத்து RNA வின் எதிர்க்குறியீடு தூது RNA வின் குறியீடுகளுடன் இணையும் போது சில நேரம் மூன்றாவது காரம் இணையற்றதாகக் காணப்படுவதை ஊஞ்சலாட்ட நிலை (Wobble Position) எனப்படுகிறது.
முக்கியத்துவம்
(i) இரண்டு இடங்களில் காரங்கள் இருக்க ஒரு பாலிபெப்டைடு உருவாக்க கடத்து RNAக்களின் தேவை குறைக்கப்படுகிறது.
(ii) மேலும் சிதைத்தல் குறியீடுகளின் விளைவில் இருந்து விரைவில் வெளியே வருகிறது.
(iii) குறியீடும் எதிர் குறியீடும் சரியாகப் பொருந்தாத போதும் தேவையான அமினோ அமிலம் கொணரப்படுகிறது
எ.கா. - வேலைன் எனும் அமினோ அமிலம் (GUA, GUC, GUU, GUG)
4.
5.
| பண்பு | RNA | DNA | |
| 1 | இழைகள் | ஓரிழையானது | இரண்டு இழைகளால் ஆனது விதிவிலக்கு - சில DNA வைரஸ்கள் |
| 2 | சர்க்கரை | ரிபோஸ் சர்க்கரை | டி - ஆக்சிரைபோஸ் சர்க்கரை |
| 3 | நைட்ரஜன் காரங்கள் | அடினைன், குவானைன் யூராசில் மற்றும் சைட்டோசின் | அடினைன், குவானைன் தயமின் மற்றும் யூராசில் |
6.
1. இணைப்பு மூலக்கூறு - என்ற சொற்களை உருவாக்கியவர் ஃபிரான்சிஸ் கிரிக்.
2. கிராம்பு இலை வடிவத்தை ஒத்திருக்கும் இரண்டாம் நிலை கட்டமைப்புடைய கடத்து RNA(tRNA) அமைப்பானது அதன் பணிகளுக்கு ஏற்றதாக உள்ளது.
3. தூது RNA மூலக்கூறிலுள்ள அமினோ அமிலங்களுக்கான குறிப்பிட்ட குறியீடுகளை படிப்பதும் கூடவே செல்லின் சைட்டோபிளாசத்தில் சிதறிக் கிடைக்கும் அமினோ அமிலங்களை புரதம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்து வரும் கடத்தியதாக செயல்படுதலும் ஆகிய இரு பணிகளை செய்வதால் கடத்து RNA இணைப்பு மூலக்கூறுகள் என வழங்கப்படுகின்றன.
7.
1. DNA அமைப்பு மாதிரியைக் கொண்டு - DNA பாதி பழைமை பேணும் தன்மை - தெரியவந்தது.
2. இரட்டை இழை பிரிந்து - ஒரு முனையில் ஹைட்ரஜன் பிணைப்பு நீங்கி பிரிதலடைய ஒரு இழை வார்ப்பாக செயல்பட்டது.
3. மேலும் சார்காஃபின் 4 கார இணை விதியை இவர்கள் பயன்படுத்தி மேலும் இரட்டிப்பாதல் மற்றும் 4 காரங்கள் 20 அமினோ அமிலங்களுக்கும் குறியீடாவது குறித்த புரிதல் சாத்தியமானது.
4. DNA இந்த கார இணையில் ஏற்படும் மாற்றம் அமினோ அமிலக் குறியீடு மாறுவதால் திடீர் மாற்றம் (அ) சடுதி மாற்றம் ஏற்படக்காரணமானது போன்றவைகளை தெளிவாக இருவரும் அறிந்து கொள்ள வழி வகுத்தது.
8.
காலம்:
மனித மரபணு திட்டம் 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது நிறைவுற 13 ஆண்டுகளானது.
அளவு:
1. இது வரை வரிசைப்படுத்தப்பட்ட உயிரினங்களை விட மனித ஜீனோம் 25 மடங்கு பெரியது.
2. முதன் முதலில் நிறைவு செய்யப்பட்ட முதுகெலும்பி மரபணு மனிதனுடையதாகும்
3. இதில் 3 X 109 கார இணைவுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தரவு சேமிப்பு மற்றும் பயன்பாடு:
1. மனித ஒரு செல்லின் மரபணு தரவுகள் சேமிக்க ஏறத்தாழ 3300 புத்தகங்கள் தேவை (1000 எழுத்துகள் 1000 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம்)
2. இவைகளை சேமிக்க, பெற, ஆய்வு செய்ய, அதிநவீன கணினி அமைப்புகள் தேவை.
பயோ - இன்ஃபர்மேடிக்ஸ்:
உயிரியலில் இந்த புதிய பிரிவு, கணினி அறிவையும், தொழில்நுட்பத்தையும், மனித மரபணு சார்ந்த தரவுகளை நிர்வகிக்க, ஆய்வுகளை செய்ய பயன்படுத்துகிறது.
இது போன்ற பல்வேறு தன்மைகளாலே மனித மரபணு திட்டம் (Human Genome Project) ஒரு மகா திட்டமாக கருதப்படுகிறது.
9.
1. வெளி ஊடகத்திலிருக்கும் லாக்டோஸ் பாக்டீரியா செல்லினுள் நுழைய பெர்மியோஸ் நொதி தேவைப்படுகிறது
2. லாக்டோஸ் செல்லினுள் நுழைய இயலவில்லை எனில் அது தூண்டியாக செயல்பட இயலாது.
3. அது லாக் - ஓபரானை தடுக்கும் அடக்கிப் புரதத்துடன் இணைந்து அதனை செயலற்றதாக்குகிறது லாக் ஓபரான் - செயல்பட தொடங்குகிறது.
4. எனவே லாக் ஒபரானின் தாழ் நிலை வெளிப்பாடு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.. அதனால் பல்வேறு மரபினோய் சிகிச்சைக்கும் பயன்படுகிறது.
10.
ஊக்குவிப்பான் மரபணு:
எல்லா மரபணுக்களும் ஊக்குவிப்பான் மரபணுவின் கட்டுப்பாட்டில் உள்ளன.
1. இவை RNA உற்பத்தியைத் தொடங்கி வைக்கின்ற DNA விலுள்ள சமிக்ஞை வரிசைகளாகும்.
2. படியெடுத்தல் தொடங்குவதற்கு முன்பு ஊக்குவிப்பானுடன் RNA பாலிமெரேஸ் இணைகிறது.
இயக்கி மரபணு:
அமைப்பு மரபணுக்களுக்கும், ஊக்குவிப்பான்களுக்கும் இடையே இயக்கிகள் அமைந்துள்ளன.
ஓபரானின் இயக்கிப் பகுதியில் அடக்கி புரதம் பிணைகிறது.
அடக்கி மரபணு:
அடக்கி மரபணு ⟶ அடக்கி புரதத்தை குறியீடு செய்கின்றன இது - ஓபரானின் இயக்கி பகுதியில் அடக்கிப் புரதம் பிணைகிறது - ஊக்குவிப்பானை தடுத்து அமைப்பு மரபணுக்களின் படியெடுத்தலைத் தடை செய்கிறது.
அமைப்பு மரபணுக்கள்:
இவை பாலிசிஸ்ட்ரானிக் பண்பு உடையவை. இதில் லேக் Z, லேக்Y மற்றும் லேக் 'a' லேக் மரபணுக்களாகும்.
இவை Z மரபணு - β லேக்டோசிடோஸ் நொதிக்கான குறியீட்டைக் கொண்டுள்ளது.
இவை Y மரபணு - பெர்மியேஸ் நொதிக்கான குறியீட்டைக் கொண்டுள்ளது.
இவை 'a' மரபணு - டிரான்ஸ் அசிடைலேஸ் நொதிக்கான குறியீட்டைக் கொண்டுள்ளது.
இவ்வாறு ஊக்குவிப்பான் மரபணு மற்றும் அடக்கி மரபணு இவை அமைப்பு மரபணுக்களை நெறிப்படுத்துகின்றன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards