12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
விலங்கியல் - மூலக்கூறு மரபியல்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
ETS, YAC விரிவாக்கம் தருக.
2.
VNTR என்றால் என்ன?
3.
பொருளற்ற குறியீடு என்றால் என்ன?
4.
சிக்மா துணை அலகு மற்றும் 'ரோ' துணை அலகு படியெடுத்தல் இவற்றின் பணிகள் யாவை?
5.
மோனோசிஸ்ட்ரானிக் மற்றும் பாலிசிஸ்ட்ரானிக் அமைப்பு மரபணுக்களை வேறுபடுத்துக.
6.
H1 புரதங்களின் பணிகள் யாவை?
7.
DNA இரட்டை இழை மாதிரியில் ஹைட்ரஜன் பிணைப்புகளின் முக்கியத்துவம் யாது?
8.
ஏன் DNA இரட்டிப்படைதல் - பழையன காத்தல் எனப்படுகிறது?
9.
DNA ஹைட்ரோ - கேட்டலிட்டிக் மற்றும் ஆட்டோ - கேட்டலிட்டிக் தன்மையுடையது விளக்குக.
10.
மரபணு ஜீன் கோட்பாட்டைக் கூறு.
11.
SNPs என்றால் என்ன?
12.
ஈ.கோலையில் உள்ள மூன்று நொதிகளான β- கேலக்டோசிடேஸ், பெர்மியேஸ் மற்றும் டிரான்ஸ் அசிட்டைலேஸ் ஆகியவை லாக்டோஸ் முன்னிலையில் உற்பத்தியாகின்றன. இந்நொதிகள் லாக்டோஸ் இல்லாத நிலையில் உற்பத்தியாவதில்லை – விளக்குக.
13.
வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும் குறியீட்டு இழை
14.
முதன்மை இழை மற்றும் பின்தங்கும் இழை – வேறுபடுத்துக.
15.
மரபணு குறியீடு ‘உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கது’. – காரணங்கள் கூறு.
1.
2.
3.
4.
| சிக்மா துணை அலகு (σ) | 'ரோ' துணை அலகு (ρ) |
| படியெடுத்தலின் துவக்கத்திற்கு - மரபணுவின் முன்பகுதியை ஊக்குவிப்பானுடன் RNA பாலிமெரேஸ் பிணைகிறது. சிக்மா துணை அலகு ஊக்குவிப்பான்களின் அங்கீகாரத்திற்குப் பொறுப்பாகும். | RNA வில் கொண்டை ஊசி வளைவு அமைப்பை உருவாக்கும் நிறைவி வரிசையில் மரபணுவின் முடிவு குறிக்கப்படுகிறது. நிறைவியின் முழுமையான செயல்பாட்டிற்கு அங்கீகார புரதமான 'ரோ' (ρ) துணை அலகு தேவைப்படுகிறது. |
5.
| மோனோசிஸ்ட்ரானிக் | பாலிசிஸ்ட்ரானிக் |
| ஒரு தனி புரதத்தினை உருவாக்கும் வெளிப்பாட்டை நெறிப்படுத்துதலை ஒற்றை அமைப்பு மரபணு பொறுப்பெடுக்கிறது இதற்கு மோனோ சிஸ்ட்ரானிக் என்று பெயர். எ.கா: யூகேரியாட்டுகள் | ஜேகாப் மற்றும் மோனோடு முன் மொழிந்த 'லேக்' ஒபரான், மாதிரியில் இதில் லேக் z, லேக் y, மற்றும் லேக் a எனும் மூன்று அமைப்பு மரபணுக்கள் இருப்பதாலும் இது பாலிசிஸ்ட்ரானிக் என்று அழைக்கப்படுகிறது. எ.கா: புரோகேரியாட்டுகள். |
6.
1. ஹிஸ்டோன் எண்மத்தை சுற்றி DNA இரு முழுமையான திருகுகளை உருவாக்கியுள்ளன.
2. இரண்டு திருகுகளையும் H1 மூலக்கூறு (இணைப்பு DNA) மூடுகிறது.
3. ஒரு நியூக்ளியோசோமின் H1 அடுத்துள்ள நியூக்ளியோசோமுடன் வினைபுரிவதால் இழை மேலும் முடிகிறது.
4. H1 புரதங்கள் விரிச்சுருளமைப்புக்கு நிலைப்புத்தன்மை தருகிறது. எனவே இணைப்பு DNA எனப்படுகிறது
7.
1. நைட்ரஜனின் கார பேஸ்கள் ஒன்றுடன் ஒன்று ஹைட்ரஜன் பிணைப்புகளாலே இணைகிறது.
2. ஒரு பியூரின் பிரிமிடினுடனும், ஒரு பிரிமிடின் பியூரினுடன் பிணைவதாலே இரு இழைகளும் சமமான தூரம் அமைகிறது.
8.
1. DNA இரட்டிப்படைதலில், மூல இரட்டை வட திருகுச் சூழல் வார்ப்புருவாக பணியாற்றுகிறது.
2. மூல மூலக்கூறுகள் பாதுகாக்கப்பட்டு, முழுதும் புதிதான இரு இழைகளாக DNA மூலக்கூறுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன
3. இறுதியில் ஒவ்வொன்றிலும் பழையன மற்றும் புதிய துண்டங்கள் இணைந்தே உள்ளன. இதற்கு பழையன காத்தல் அல்லது பாதி பழைமை பேணுதல் என்று பெயர்.
9.
1. DNA ஹைட்ரோ - கேட்டலிட்டிக்
mRNA மற்றும் புரதத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருக்கிறது
2. DNA ஆட்டோ - கேட்டலிட்டிக்
DNA - தனது உருவாக்கத்தையும் மேற்கொள்கிறது - இதற்கு இரட்டிப்படைதல் என்று பெயர்.
10.
1. இக்கோட்பாட்டை 1902ல் சட்டன் அறிமுகப்படுத்தினார்.
2. மரபணு - வரையறுக்கப்பட்டுள்ள, குரோமோசோம்களின் நிலையான இடத்தை ஆக்கிரமித்துள்ள மென்டலின் மரபு கடத்தல் விதிகளைப் பின்பற்றுகின்ற மற்றும் புற பண்புகளின் வெளிப்பாட்டிற்கு காரணமாகவும் அமைகின்ற தனித்துவ துகள்களே மரபணுக்கள் எனப்படுகின்றன.
11.
ஒற்றை நியூக்ளியோடைட் பல்வுருவ அமைப்பு (Single nucleotide polymorphism - SNP ⟶ SNPs என உச்சரிக்கப்படுகிறது.
மனிதனில் 1.4 மில்லியன் இடங்களில் SNPs கண்டறியப்பட்டுள்ளது.
பயன்கள்:
(i) நோய்களுடன் தொடர்புடைய வரிசைகளுக்கான குரோமோசோம் இடங்களைக் கண்டறிதல்
(ii) மனித வரலாற்றைத் தேடவும் உதவி புரிகிறது.
12.
13.
| வார்ப்புரு இழை | குறியீட்டு இழை | |
| 1 | இவ்விழை mRNA உருவாக்கத்திற்கு வார்ப்பாக செயல்படுகிறது. | இது வார்ப்புரு பணியைச் செய்வதில்லை |
| 2 | இதன் நைட்ரஜன் காரங்கள் mRNA இழைக்கு ஈடான இழைகளை உருவாக்குகிறது. | இதன் நைட்ரஜன் காரங்கள் அப்படியே mRNA இழையில் காணப்படுவதேயாகும். |
| 3 | இது 3' ⟶ 5' திசையில் கொண்டது | இது 5' ⟶ 3' திசையில் கொண்டது |
14.
| முதன்மை இழை | பின்தங்கும் இழை | |
| 1 | இது தொடர் இழை (அ) வழிகாட்டு இழை எனப்படும். இது 3' ⟶ 5' திசை கொண்ட வார்ப்புரு இழையில் இரட்டிப்பதால் - தொடர்ச்சியாக நடைபெறும். | மற்றொரு 5' ⟶ 3' திசை கொண்ட இழையின் இரட்டிப்பதால் தொடர்ச்சியற்றதாகும். இது பின்தங்கும் இழை எனப்படும். |
| 2 | DNA லிகேஸ் நொதி தேவைப்படுவதில்லை | தொடர்ச்சியற்ற புதிய துண்டங்களை DNA - லிகேஸ் நொதி ஒன்றிணைக்கின்றது. |
| 3 | உருவாக்கம் 5' ⟶ 3' திசையில் நடைபெறுகிறது. வார்ப்புரு இழையின் திசை 3' ⟶ 5' ஆகும் | இதன் திசை 5' ⟶ 3' ஆயினும் ஒட்டு மொத்த வார்ப்புரு இழையின் திசை 3' ⟶ 5' ஆகும். |
15.
1. மரபணுக்குறியீடுகள் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கது.
2. இது பொதுவான எல்லா உயிரின மண்டலங்களுக்கு உட்கரு அமிலங்களையும் அதே முக்குரியங்களையும் பயன்படுத்தியே அமினோ அமிலங்களிலிருந்து புரதத்தை உற்பத்தி செய்கின்றன.
3. தூது ஆர்.என்.ஏவில் உள்ள UUU எல்லா உயிரினங்களிலும் பினைல் அலனைன் என்னும் அமினோ அமிலத்திற்கானது.
4. விதிவிலக்குகள் (மிகச் சில)
i. எ.கா. புரோகேரியோட்டுகள், மைட்டோகாண்டிரியா, குளோரோபிளாஸ்ட் ஆகியவற்றின் மரபுத் தொகுதி
ii. பொதுவாக வேறுபாடுகள் மிகக் குறைவு ஒற்றுமைகளே அதிகம் உள்ளன.
iii. இது போன்ற மரபணுக்குறியீடுகளின் எல்லா சிறப்புப் பண்புகள் பொதுவாக எல்லா உயிரினங்களிலும் பொதுவானது.
5. எனவே மரபணு குறியீடு உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards