12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
விலங்கியல் - உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
சில இயற்பியல் செயல்பாடுகள் மூலம் தன்நிலை பேணும் விலங்குகள் ______.
ஒத்தமைவான்கள்
ஒழுங்கமைவான்கள்
வலசைபோகின்றன
செயலற்ற நிலையில் உள்ளன
2.
நன்னீரிலிருந்து கடல் நீருக்கு நகரும் விலங்கினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
ஸ்டீனோதெர்மல்
யூரிதெர்மல்
கட்டாட்ராமஸ்
அனாட்ராமஸ்
3.
கீழ்கண்ட வயது கூம்பில் எவ்வகை மனித மக்கள் தொகை குறிக்கப்படுகிறது?
அழிந்துவரும் மக்கள் தொகை
நிலைத்த மக்கள் தொகை
குறையும் மக்கள் தொகை
அதிகரிக்கும் மக்கள் தொகை
4.
உறிஞ்சுமீனுக்கும் சுறாமீனுக்கும் உள்ள தொடர்பு _______.
போட்டி
உதவி பெறும் வாழ்க்கை
வேட்டையாடும் வாழ்க்கை
ஒட்டுண்ணி வாழ்க்கை
5.
வெப்பநிலையில் ஏற்படும் மறுபாடுகளைத் தாங்கி வாழும் விலங்குகள் ______ என அழைக்கப்படும்.
எக்டோதெர்ம்கள்
மிகைவெப்ப வேறுபாட்டு உயிரிகள்
எண்டோதெர்ம்கள்
ஸ்டீனோதெர்ம்கள்
6.
வேறுபடுத்துக: கொன்றுண்ணி மற்றும் இரை
7.
மண்ணின் ஊடுருவும் திறன் என்றால் என்ன?
8.
அழுத்தமற்ற நிலை என்றால் என்ன?
9.
மண்ணின் தோற்றம் என்றால் என்ன?
10.
இனக்கூட்ட வயதுப் பரவலை விளக்குக.
11.
உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்கள் எந்தெந்த வழிகளில் எதிர்வினை புரிகின்றன என்பதை விளக்கு.
12.
J-வடிவ மற்றும் S வடிவ வளைவுகளை வேறுபடுத்துக.
13.
உயிரினங்களில் காணப்படும் தகவமைப்புப் பண்புகளை வகைப்படுத்துக.
1.
(b)
ஒழுங்கமைவான்கள்
2.
(c)
கட்டாட்ராமஸ்
3.
(b)
நிலைத்த மக்கள் தொகை
4.
(b)
உதவி பெறும் வாழ்க்கை
5.
(b)
மிகைவெப்ப வேறுபாட்டு உயிரிகள்
6.
| கொன்றுண்ணி | இரை |
| ஒரு விலங்கு மற்றொரு விலங்கை உணவுக்காக வேட்டையாடுவது கொன்றுண்ணி எனப்படும். | விலங்கிற்கு உணவாகப் பயன்படும் விலங்கு இரை எனப்படும். |
| எ.டு: சிங்கம், கரடி | எ.டு: மான், ஆடு, மாடு |
7.
மண்ணின் ஊடுருவ விடும் தன்மை:
(i) புரைவெளி ஊடாக நீர் மூலக்கூறுகள் நகர்வதை தீர்மானிக்கும் மண்ணின் தன்மை, மண்ணின் ஊடுருவ விடும் தன்மை எனப்படும்.
(ii) மண்ணின் ஊடுருவ விடும் தன்மை புரைவெளியின் அளவினை நேரடியாகச் சார்ந்துள்ளது.
(iii) மண்ணின் நீரைப் பிடித்து வைக்கும் திறன் மண்ணின் ஊடுருவ விடும் தன்மைக்கு எதிர் விகிதத்தில் உள்ளது.
8.
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை மண்டலத்தில் உள்ள தாவர இனங்கள் சுற்றுச் சூழல் காரணிகளின் தாக்கத்தினால், காடுகளின் (அ) தாவர உற்பத்தி பாதிப்படையாமலும் அல்லது குறையாமலும் இருப்பின் அது அழுத்தமற்ற நிலை எனப்படும்.
9.
மண்ணின் தாய்பொருளான பாறைகளிலிருந்து மண் உருவாகிறது. பாறைகள், காலநிலைக் காரணிகளால் சிதைவுற்று மண்ணாக மாறுகிறது. இவை மூல மண் எனப்படும்.
10.
(i) இனக்கூட்டத்தில் உள்ள உயிரினங்களின் வெவ்வேறு குழுவின் வயது விகிதம் (இனப்பெருக்கத்திற்கு முந்தைய வயது, இனப்பெருக்க வயது மற்றும் இனப்பெருக்கத்திற்கு பிந்தைய வயது) அதன் வயதுப் பரவலைக் குறிக்கிறது.
(ii) இது ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு இனக்கூட்டத்தின் இனப்பெருக்க நிலையை நிர்ணயிக்கிறது. இது எதிர்கால இனக்கூட்ட அளவைத் தீர்மானிக்கும் காரணியும் ஆகும்.
(iii) பொதுவாக வேகமாக வளரும் இனக்கூட்டத்தில் இளம் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.
(iv) ஒரு நிலைத்த இனக்கூட்டத்தில் வெவ்வேறு வயதுடைய குழுக்களின் பரவல் சீராக இருக்கும்.
(v) இனக்கூட்டத்தின் அளவு குறையும் நிலையில் முதிர்ந்த உயிரினங்கள் அதிகமாகக் காணப்படும்.
11.
ஒவ்வொரு உயிரினமும் அதன் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப வினைபுரிகின்றன. உயிரினங்கள் பல்வேறு வகைகளில் உயிரற்ற காரணிகளுக்கேற்ப துலங்கல்களை வெளிப்படுத்துகின்றன. சில உயிரினங்கள் மாறாத உடல் செயலியில் மற்றும் புறத்தோற்ற நிலைகளைப் பராமரிக்கின்றன. சில உயிரினங்கள் சுற்றுச்சூழல் மாற்றங்களைத் தாங்கிக் கொள்வதற்கான செயல்களைச் செய்கின்றன. இதுவும் ஒரு துலங்கல் வினையாகக் கருதப்படும்.
விலங்குகளில் உள்ள துலங்கல்களின் வகைகள்:
i) ஒழுங்கமைவு:
சில விலங்கினங்கள் உடற்செயலியல் செயல்கள் மூலம் சீரான தன்நிலை காத்தலைப் பராமரிக்கின்றன அச்செயல்பாடுகள் வழியாக உடலின் வெப்பநிலை, அயனிகள், ஊடுகலப்பு சமன் ஆகியவை உறுதி செய்யப்படுகின்றன.
எ.கா: பறவைகள், பாலூட்டிகள் மற்றும் சில எளிய முதுகுநாணிகள், மற்றும் முதுகு நாணற்ற சிற்றினங்கள்.
ii) ஒத்தமைவு:
பெரும்பாலான விலங்குகளால் உள்சூழ்நிலைகளை நிலையாகப் பராமரிக்க முடிவதில்லை. அவற்றின் உடல் வெப்பநிலை சுற்றுசூழல் வெப்பநிலைக்கேற்ப மாறுகிறது. மீன்கள் போன்ற நீர்வாழ் உயிரிகளில், உடல் திரவத்தின் ஊடுகலப்புச் செறிவு சுற்றுச்சூழலில் உள்ள நீரின் ஊடுகலப்புச் செறிவிற்கேற்ப மாற்றமடைகிறது.
இத்தகைய விலங்குகள் ஒத்தமைவான்கள் எனப்படும். அதீத சூழல்களில் விலங்கினங்கள் வலசை போவதன் மூலம் தங்களின் வாழிடங்களை இடம் மாற்றிக் கொள்கின்றன.
iii) வலசை போதல்:
ஒரு வாழிடத்தில் வாழும் விலங்குகள் அங்கு வாழும் அதிக சூழல் அழுத்தத்திலிருந்து தப்பிக்க, இடம்பெயர்ந்து அதன் வாழிடத்தில் சூழல் அழுத்தம் நீங்கும்போது அவை மீண்டும் தனது பழைய இடத்திற்கு வருகின்றன.
சைபீரியாவில் வாழும் பறவைகள் கடுங்குளிர் பருவத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வலசை போதல் முறையில் இடம்பெயர்ந்து தமிழ்நாட்டின் வேடந்தாங்கல் பகுதிக்கு வருகின்றன.
iv) செயலற்ற நிலை:
சில சமயம், விலங்கினங்கள் இடம்பெயர்ந்து செல்ல இயலாத சூழலில் சூழல் அழுத்தத்திலிருந்து விடுபட செயலற்ற நிலைத்தன்மையை மேற்கொள்கின்றன. சில கரடிகள் குளிர்காலங்களில் குளிர் உறக்கத்தையும், சில நத்தைகள் மற்றும் மீன்கள் போன்றவை வெப்பம் மற்றும் வறட்சி போன்ற வெப்பம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுபட கோடைகால உறக்கத்தையும். மேற்கொள்கின்றன. சில எளிய வகை உயிரினங்கள் அதன் வாழ்க்கை சுழற்சியின் சில நிலைகளை இடைநிறுத்தம் செய்து கொள்கின்றன. இது "வளர்ச்சித் தடை நிலை" எனப்படும்.
12.
| J வடிவ வளைவு | S வடிவ வளைவு | ||
|---|---|---|---|
| 1 | ஒரு இனக்கூட்டத்தின் அளவு விரைந்து பெருகிக்கொண்டிருக்கும் போது சுற்றுச்சூழல் தடை அல்லது திடீரெனத் தோன்றும் கட்டுப்படுத்தும் காரணிகள் ஆகியவற்றால் வளர்ச்சி விகிதம் உடனடியாகத் தடை செய்யப்படுகிறது. | 1 | சில இனக்கூட்டங்களில் தொடக்கத்தில் உயிரினங்களின் எண்ணிக்கை மிக மெதுவாகவும் பின் வேகமாகவும் உயர்ந்து, பின்பு சுற்றுச்சூழல் தடைகளின் அதிகரிப்பால் மெதுவாகக் குறைந்து வளர்ச்சி வேகம் சமநிலையை எட்டி தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. |
| 2 | வளர்ச்சி விகிதம் வேகமாக காணப்படும். | 2 | சீரான வளர்ச்சியை கொண்டுள்ளது. |
| 3 | இவை பொதுவாக பூச்சிகளால் காணப்படுகிறது. | 3 | இவை பொதுவாக சிறிய பாலூட்டிகளில் காணப்படுகிறது. |
13.
தகவமைப்புப் பண்புகளின் வகைகள் மூன்று வகைப்படும்.
(i) உடல் அமைப்பு சார்ந்தவை.
(ii) நடத்தை சார்ந்தவை
(iii) உடற்செயலியல் சார்ந்தவை.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards