12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
விலங்கியல் - இனப்பெருக்க நலன்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
தமிழக மக்கள் நலவாழ்வுத்துறையின், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டத்தின் பணிகள் கூறுக.
2.
சர்வதேச நோய்கள் யாவை?
3.
வைட்டமின் E-ன் சிறப்பு என்ன?
4.
மேயர் ரோகிடான்ஸ்கி நோய்க் குறைபாடு என்றால் என்ன?
5.
GIFT, ZIFT வேறுபடுத்துக.
6.
வைரஸ் பால்வினை நோய்கள் யாவை?
7.
பாக்டீரிய பால்வினை நோய்களுக்கு எடுத்துக்காட்டு தருக.
8.
விந்துக்குழல் தடை, கருக்குழல் தடை வேறுபடுத்துக.
9.
வேதிப்பொருள் கருத்தடை முறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் எவை?
10.
இயற்கையான சீரியக்க, கால இடைவெளி முறை குடும்பக்கட்டுப்பாடு - விளக்குக.
11.
மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கான தமிழக அரசின் சுவரொட்டி விளம்பரங்கள் எவை?
12.
குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?
13.
கீழ்வரும் கூற்றுகளின் பிழைகளைத் திருத்துக
அ) கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட அண்டத்தை கருப்பை நாளத்திற்கு இடமாற்றம் செய்யும் முறை ZIFT ஆகும்.
ஆ) 8 கருக்கோளச் செல்களுக்கு மேல் உள்ள கருவை கருப்பைக்குள் பொருத்தும் முறை GIFT எனப்படும்.
இ) மல்டிலோட் 375 என்பது ஒரு ஹார்மோன் வெளிவிடும் IUD ஆகும்.
14.
அடைப்புக்குள் இருந்து சரியான பதங்களை தேர்வு செய்து கிளைத்த மரத்திலுள்ள வெற்றிடங்களை நிரப்புக

(தடுப்புகள், பாலூட்டும் கால மாதவிடாயின்மை, CuT. கருக்குழல் தடை)
15.
பனிக்குடத் துளைப்பு என்பது யாது? இத்தொழில் நுட்பத்திற்கு சட்டப்படியான தடை விதிப்பது ஏன்?
1.
1. கருப்பை வாய் புற்றுநோய்
2. மார்பகப் புற்றுநோய் இலவசப் பரிசோதனைகள்
2.
கிரந்தி, வெட்டைநோய்.
3.
வைட்டமின் E இனப்பெருக்க உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டுக்கு உதவும், எனவே இது மலட்டுத்தன்மைக்கெதிர் வைட்டமின் எனப்படும்.
4.
அனைத்து பெண்களும் அண்டகங்களுடன் பிறக்கின்றனர், ஆனால் கருப்பை இல்லாத நிலையை இது குறிக்கிறது.
5.
| GIFT | ZIFT | ||
|---|---|---|---|
| 1. | அண்ட நாளத்தினுள் இனச் செல் இடமாற்றம் | 1. | கருமுட்டையை அண்டநாளத்தினுள் செலுத்தல். |
| 2. | B பிளாஸ்டோமியர் கொண்ட கருமுட்டை, லேப்ராஸ்கோப் முறையில், அண்டநாளத்தில் வைக்கப்படும். | 2. | அண்டக்கலத்திலிருந்து முட்டைகள் விந்து செல்களுடன் சேர்க்கப்பட்டு அண்ட நாளத்தினுள் செலுத்தப்படும். |
| 3. | கருமுட்டை கருப்பையை நோக்கிச் சென்று பதிகிறது. | 3. | கருக்கோளம் கருப்பை நோக்கி நகர்ந்து பதிகின்றது. |
6.
1. பிறப்புறுப்பு அக்கி
2. பிறப்புறுப்பு மருக்கள்
3. ஹெபடைடிஸ் B வைரஸ்
4. AIDS
7.
1. கோனேரியா (வெட்டை நோய் )
2. கிரந்தி (மேகப் புண்)
3. கிளாமிடியாசிஸ்
4. லிம்போகிரானுலோமா வெனிரியம்
8.
| கருக்குழல் | விந்துக்குழல் தடை | ||
| 1. | அறுவைச்சிகிச்சையால் பெண்களில் கருத்தரித்தலைத் தடுப்பது | 1. | அறுவைச்சிகிச்சையால் ஆண் இனப்பெருக்கத் திறனைத் தடுப்பது |
| 2. | வயிற்றுப்பகுதி வெட்டு மூலமாகவோ, கலவிக் கால்வாய் வழியாகவோ அண்ட நாளங்கள் வெட்டப்படுகின்றன. வெட்டு முனைகள் முடிச்சிடப்படும். | 2. | விதைப்பைத் துளைவழி, விந்து நாளங்கள் வெட்டப்படும், வெட்டப்பட்ட பகுதிகள் முடிச்சுடப்படும். |
| 3. | கருவுறுதல் நிகழாது, கருவுற்ற முட்டை கருப்பையை அடையாது | 3. | சிறுநீர் வடிகுழாயில் விந்தணுக்கள் நுழையாது. |
9.
1. நுரைக்கும் மாத்திரைகள்
2. உட்கரையும் மாத்திரைகள்
3. ஜெல்லிகள்
4. களிம்புகள்
இவை கலவிக் காலத்தில் விந்தணுக்களைச் செயல் இழக்கச் செய்யும்.
10.
1. மாதவிடாயின் 14 ஆம் நாளில் அண்ட செல் வெளியேறும்.
2. வெளியேறிய அண்ட செல் 2 நாட்கள் உயிருடன் இருக்கும்.
3. விந்தணுக்கள்,பெண் இனப்பெருக்கப்பாதையில் 12 மணிநேரம் உயிருடன் இருக்கும்.
4. இக்காலத்தில், கலவியை தவிர்த்தல், கருத்தரிப்பதைத் தவிர்க்கலாம்.
11.
1. நாம் இருவர், நமக்கு இருவர்
2. நாம் இருவர், நமக்கு ஒருவர்
12.
(i) கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்தும் முறை (IUI) பயன்படுத்தப்படும்.
(ii) கணவர், உடல்நலம் மிக்க விந்து கொடையாளிடம் இருந்து விந்துத்திரவம் சேகரிக்கப்படுகிறது.
(iii) அண்டகத்தைத் தூண்டி, அதிக அண்ட செல்கள் உற்பத்தி செய்யப்படும்.
(iv) சேகரிக்கப்பட்ட விந்து செல்கள், நுண்குழல் மூலம் கல்விக் கலவிக்கால்வாய் வழியாகக் கருப்பையினுள் செலுத்தப்படும்.
(v) விந்து செல்கள் அண்டநாளம் நோக்கி நீந்திச் சென்று, இயல்பான கர்ப்பம் ஏற்படும்.
13.
அ) கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட அண்டத்தை கருப்பை நாளத்திற்கு இடமாற்றும் முறை -GIFT
ஆ) 8 கருக் கோளச் செல்களுக்கு மேல் உள்ள கருவை கருப்பைக்குள் பொருத்தும் முறை ZIFT
இ) மல்டிலோட் 375 என்பது தாமிரம் வெளிவிடும் உள் கருப்பைச் சாதனம்.
14.
A. தடுப்பு முறை
B. பாலூட்டும் கால மாதவிடாயின்மை
C. கருக்குழல் தடை
D. CuT
15.
(i) கர்ப்ப காலத் தொடக்கத்திலேயே கண்டறியும் தொழில்நுட்பம்.
(ii) வளர்க்கருவைச் சூழ்ந்துள்ள, பனிக்குடத் திரவ மாதிரியைக் கொண்டு குரோமோசோம் பிறழ்ச்சிகளைக் கண்டறியலாம்.
(iii) 15 முதல் 20 வாரக் கருவளர்ச்சி கொண்ட பெண்களில் செய்யப்படுகிறது.
(iv) பனிக்குடத் திரவத்தில் உள்ள கருவின் உதிர்ந்த செல்கள் மெல்லிய ஊசி மூலம் சேகரிக்கப்படும்.
ஏன் சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது:
(i) வளர்கருவின் பால்தன்மை கண்டறியப்படும்.
(ii) பின்பு பெண்கரு சிசுக்கொலை செய்யப்பட வாய்ப்புள்ளது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards