12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/07/2019
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
ஸ்பெர்மாடிட் \(\overset { A }{ \longrightarrow } \) முதிர்ந்த விந்துசெல். இதில் 'A' என்பது எதைக் குறிக்கும்.
விந்துசெல் உருவாக்கம்
ஸ்பெர்மியேஷன்
ஸ்பெர்மியோ ஜெனிசின்
இனச்செல் உருவாக்கம்
2.
தவறான இணையைக் கண்டுபிடி
இரத்தப்போக்கு நிலை - ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் குறைதல்
நுண்பை செல்கள் ஃபாலிகுலார் நிலை – ஈஸ்ட்ரோஜன் அதிகரித்தல்
லூட்டியல் நிலை – FSH அளவு அதிகரிப்பு
அண்டம் விடுபடு நிலை – LH எழுச்சி
3.
வலிமிகுந்த மாதவிடாய் இவ்விதம் அழைக்கப்படும்
டிஸ்மெனோரியா
மெனோரேஜியா
அமெனோரியா
ஆலிகோமெனோரியா
4.
5.
முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம் _____.
விந்தக நுண் குழல்கள்
விந்து நாளம்
விந்தகமேல் சுருள்குழல்
விந்துப்பை
6.
பொய்யான பிரசவ வலி ஏற்படக் காரணம் யாது.
7.
விந்து நுண்குழலில் காணும் அடுக்கு எபிதீலியத்தில் உள்ள செல்களை பற்றி குறிப்பிடுக.
8.
தாய்சேய் இணைப்புத்திசு ஒரு நாளமில்லாச் சுரப்பித் திசு – நியாயப்படுத்து
9.
மனிதரில் பல விந்து செல் கருவுறுதல் எவ்விதம் தடுக்கப்படுகிறது?
10.
புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது?
11.
மூல இனச்செல் அடுக்குகள் யாவை? அவற்றிலிருந்து உருவாகும் உறுப்புகள் யாவை?
12.
மனித விந்து செல் உருவாக்கம் மற்றும் அண்ட செல் உருவாக்கம் நிகழ்வுகளை வரைபடம் மூலம் விளக்குக.
13.
இனச்செல் உருவாக்கம் – வரையறு?
14.
விந்தக அமைவிடத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடு.
15.
16.
கீழேயுள்ள படத்தில் பெண்ணின் அண்டகத்தில் ஏற்படும் தொடர் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.

அ) அண்டசெல் விடுபடும் படத்தை அடையாளம் கண்டு, அண்டசெல் உருவாக்கத்தில் அது எந்த நிலையைக் குறிக்கிறது என்பதையும் கண்டறிக.
ஆ) மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமான அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
இ) அதே நேரத்தில், எதிர் பார்க்கப்படும் கருப்பை மாற்றங்களை விளக்குக.
ஈ) C மற்றும் H நிலைகளுக்கிடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.
17.
மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளை விளக்குக.
1.
(a)
விந்துசெல் உருவாக்கம்
2.
(c)
லூட்டியல் நிலை – FSH அளவு அதிகரிப்பு
3.
(a)
டிஸ்மெனோரியா
4.
(c)
5.
(c)
விந்தகமேல் சுருள்குழல்
6.
7.
8.
கர்ப்ப காலத்தில், தாய்சேய் இணைப்புத்திசு, தற்காலிக நாளமில்லாச் சுரப்பியாக செயல்பட்டு கீழ்கண்ட ஹார்மோன்களைச் சுரக்கிறது.
(i) hCG - மனித கோரியானிக் கொனடோடிராபின்
(ii) hcL - மனித கோரியானிக் சோமட்டோமாமோட்ரோபின்
(iii) hPL - மனித பிளாசன்டல் லாக்டோஜன்
(iv) ஈஸ்ட்ரோஜன்
(v) புரோஜெஸ்டிரான்
(vi) ரிலாக்ஸின் ஹார்மோன் இடுப்பு எலும்பிணைப்பு நார்களைத் தளர்வடையச் செய்து, குழந்தை பிறத்தலை எளிதாக்குகிறது.
hCG , hPL ,ரிலாக்ஸின் போன்றவற்றை கர்ப்ப காலத்தில் மட்டுமே உற்பத்தியாகின்றன.
9.
(i) கருவுறுதல் நிகழ்ந்தவுடன், அண்டத்தின் சைட்டோபிளாசத்தில் காணப்படும். கார்டிகல் துகள்கள் அண்டத்தைச் சுற்றி, கருவுறுதல் சவ்வு(Fertilization) என்ற தடையை ஏற்படுத்தும்.
(ii) இதனால் மேலும் விந்து செல்கள் உள் நுழைவது தடுக்கப்படும். இதனால் பல விந்து செல்களால் கருவுறுதல் (polyspermy) தடுக்கப்படும்.
10.
ஆண் குழந்தைகளில் இனச்செல் உருவாக்கம் :
பூப்பெய்தும் வயதில், ஹைபோதலாமஸ் சுரக்கும் கொனடோடிராபின் வெளிவிடு ஹார்மோனின் (GnRH) அளவு அதிகரிக்கும்போது விந்து செல் உருவாக்க நிகழ்ச்சி தொடங்குகிறது.
பெண் குழந்தைகளில் இனச்செல் உருவாக்கம் :
சிசுவின் அண்டகங்களில் இனச்செல் எபிதீலியம் உள்ளது. இது கருவளர்ச்சியின்போது, மறைமுகப் பிரிவினால் ஊகோனியா எனும் அண்ட தாய் செல்களை உற்பத்தி செய்யும். அண்ட தாய் செல்கள், குன்றல் பிரிவு 1 ன் முதற்பிரிவு நிலையில் முதல் நிலை அண்ட செல்களைத் தோற்றுவிக்கின்றன. இந்நிலையில் இச்செல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். பூப்பெய்தலின் போது,முதல்நிலை அண்ட செல்கள் குன்றல் பகுப்பு 1 ஐ நிறைவு செய்து இரண்டாம் நிலை அண்ட செல்லை உருவாக்கும். கருவுறுதலின் போது இரண்டாம் நிலை அண்ட செல் குன்றல் பகுப்பு-II க்கு உட்பட்டு, அண்ட செல்லை உருவாக்கும்.
11.
12.
13.
பாலினப்பெருக்க உயிரிகளில் முதல்நிலை பாலுறுப்புகளிலிருந்து விந்துக்களும் அண்ட செல்களும் உருவாகும் நிகழ்ச்சி இனச்செல் உருவாக்கம் எனப்படும். இச்செயல்பாட்டில் குன்றல் பகுப்பு முக்கியப்பங்கு வகிக்கிறது.
14.
(i) இயல்பான மனித உடல் வெப்பத்தில், வீரியமான விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியாது.
(ii) வயிற்றின் வெளிப்புறமாக அமைந்துள்ள தோலால் ஆன பை போன்ற அமைப்பு விதைப்பை ஆகும்.
(iii) இதனால் இயல்பான உடல் வெப்பநிலையை விட 2 முதல் 3o C குறைவான வெப்பநிலை அடைகிறது.
(iv) இவ்வாறாக, விதைப்பையானது ஒரு வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு, விந்தணுக்களை உருவாக்கிறது.
15.
16.
அ) அண்ட செல் விடுபடுநிலை - புரோஜெஸ்டிரான்,ஈஸ்ட்ரோஜன்
ஆ) அண்டக ஹார்மோன்கள் - FSH நுண்பை செல்களை தூண்டும் ஹார்மோன்கள்
பிட்யூட்டரி ஹார்மோன்கள் - LH -லூட்டினைசிங் ஹார்மோன்
இ) i) எண்டோ மெட்ரியம் புதுப்பிக்கப்படுதல்
ii) கருமுட்டை பதிவதற்கு ஏற்ற சூழலை கருவுறுதல் உண்டாக்கும்.
iii) கருப்பையின் உட்சுவர் ஊட்டச்சத்து நிறைந்த திரவத்தை உற்பத்தி செய்கிறது.இது 'சுரப்பு நிலையில்' நடக்கிறது.
ஈ) C -இரண்டாம் நிலை நுண்பை செல்கள்
H - கார்பஸ் லூட்டியம்
| இரண்டாம் நிலை நுண்பை செல்கள் | கார்பஸ் லூட்டியம் | |
|---|---|---|
| 1. | நுண்பை நிலையில் காணப்படும். | இவை லூட்டியல் நிலையில் உருவாகும். |
| 2. | இவற்றைச் சுற்றி கிரானுலேசா செல்களும் தீகா அடுக்கும் காணப்படும். | இந்த இடைக்கால நாளமில்லாச் சுரப்பி, புரோஜெஸ்டிரானைச் சுரக்கின்றது. |
| 3. | இவை மூன்றாம் நிலை நுண்பை செல்களாகி பின்னர் முதிர்ந்த கிராபியன் ஃபாலிகிளாகின்றன. | கருவுறுதல் நிகழாவிடில், இது கார்பஸ் அல்பிகன்ஸ் என்ற வடுத்திசுவடு உருவாக்கும். |
17.
மாதவிடாய் சுழற்சி :
பூப்படைதல் முதல் மாதவிடாய் நிறைவு வரை கர்ப்ப காலம் தவிர, சுமார் 28/29 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி(அண்டகச் சுழற்சி) நிகழும்.
1. மாதவிடாய் நிலை (3-5 நாட்கள்) (Menstrual Phase) :
(i) புரோஜெஸ்டிரான்,ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு குறைகிறது.
(ii) கருப்பைச் சுவர் எண்டோமெட்ரியம், அதன் இரத்தக் குழல்கள் சிதைந்து,மாதவிடாய் ஒழுக்கு வெளியாகும்.
(iii) அண்டம் கருவுறாவிட்டால் மாதவிடாய் ஏற்படும்.
(iv) மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது,கருவுற்று இருப்பதன் அறிகுறி.
(v) மன அழுத்தம், ஹார்மோன் கோளாறுகள், இரத்த சோகை போன்றவற்றால் மாதவிடாய் ஏற்படாது.
2. நுண்பை நிலை(பெருகு நிலை): (Follicular Phase,Proliferative Phase)
(i) மாதவிடாயின் 5 ஆம் நாளிலிருந்து, அண்டம் விடுபடும் வரை உள்ள காலகட்டம்.
(ii) FSH,LH ஹார்மோன்களின் சுரப்பு சீராக அதிகரிக்கிறது.
(iii) முதல்நிலை நுண்பை செல்கள், முதிர்ந்த கிராபியன் நுண்பை செல்களாக மாறுகின்றன.
(iv) எண்டோமெட்ரியம் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.
(v) நுண்பை செல்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது. அவற்றினிலிருந்து சுரக்கும் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கின்றது.
3. அண்ட செல் விடுபடும் நிலை (Ovulatory Phase)
(i) LH,FSH ஹார்மோன்கள் உச்ச நிலையை அடைகின்றன.
(ii) LH எழுச்சியினால் முதிர்ந்த கிராபியன் நுண்பை உடைகிறது.
(iii) இரண்டாம் நிலை அண்ட செல், அண்டகச் சுவர் வழியாக வயிற்றுக்குழியை அடைகிறது. இது அண்டம் விடுபடுதல் எனப்படும்.
4. லூட்டியல் அல்லது சுரப்பு நிலை(Luteal (or) Secretory Phase)
(i) எஞ்சியுள்ள கிராபியன் ஃபாலிக்கிள்,கார்ப்பஸ் லூட்டியம் எனும் இடைக்கால நாளமில்லா சுரப்பியாகும்.
(ii) கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்டிரானைச் சுரக்கிறது. இது கருமுட்டை புதிய ஏற்ற சூழலை உருவாக்கும்.
(iii) கருப்பை உட்சுவர் ஊட்டச்சத்து நிறைந்த, திரவத்தை கருவிற்கு உற்பத்தி செய்கிறது. இது சுரப்பு நிலை.
(iv) கருவுறுதல் நிகழாவிடில், கார்பஸ் லூட்டியம் சிதைந்து, கார்பஸ் அல்பிகன்ஸ் எனும் வடுவாகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards