12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/07/2019
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
முகப்பு மற்றும் நெடுவரை (facial and mer) மாற்றியங்களைப் பெற்றிருப்பது எது?
[Co(en)3]3+
[Co(NH3)4(cl)2]+
[Co(NH3)3(Cl)3]
[Co(NH3)5Cl]SO4
2.
டிரிஸ் (ஈத்தேன் – 1,2 டை அமீன்) இரும்பு (II) பாஸ்பேட்டின் மூலக்கூறு வாய்பாடு ____________
[Fe(CH3-CH(NH2)2)3](PO4)3
[Fe(H2N-CH2-CH2-NH2)3](PO4)
[Fe(H2N-CH2-CH2-NH2)3](PO4)2
[Fe(H2N-CH2-CH2-NH2)3]3(PO4)2
3.
[Pt(NH3)2Cl2] என்ற அணைவுச் சேர்மம் பெற்றுள்ள மாற்றியம் __________
அணைவு மாற்றியம்
இணைப்பு மாற்றியம்
ஒளிசுழற்சி மாற்றியம்
வடிவ மாற்றியம்
4.
K3[Al(C2O4)3] என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர் ____________
பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினியம் (III)
பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினேட் (II)
பொட்டாசியம் ட்ரிஸ் ஆக்சலேட்டோ அலுமினேட் (III)
பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினேட் (III)
5.
[Fe(H2O)5NO]SO4 அணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே __________
முறையே +2 மற்றும் 0
முறையே +3 மற்றும் 0
முறையே +3 மற்றும் -1
முறையே +1 மற்றும் +1
6.
காப்பர் சல்பேட்டின் நீர்க்கரைசலுடன், திரவ அம்மோனியாவைச் சேர்ப்பதால் உருவாகும் அணைவு அயனி யாது?
7.
நான்முகி அணைவுகள் வடிவ மாற்றியங்களைப் பெற்றிருப்பதில்ல ஏன்?
8.
இணைப்பு மாற்றியம் என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
9.
[Co(NH3)5Cl]SO4 மற்றும் [Co(NH3)5SO4]Cl ஆகிய அணைவுச் சேர்மங்களை வேறுபடுத்தி அறிய உதவும் ஒரு சோதனையைக் கூறுக.
10.
மருத்துவத்துறையில் பயன்படும் அணைவுச் சேர்மத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. மேலும் உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த அணைவுச் சேர்மங்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
11.
[CuCI4]2- சாத்தியமானது ஆனால் [Cul4]2- சாத்தியமற்றது ஏன்?
12.
13.
[Cr(NH3)6]3+ ஆனது ஏன் பாராகாந்தத் தன்மையுடையது எனவும்,[Ni(CN)4]2- ஆனது ஏன் டையாகாந்தத் தன்மையுடையது எனவும் VB கொள்கையின் அடிப்படியில் விளக்குக.
14.
VB கொள்கையின் வரம்புகள் யாவை?
15.
[Ni(H2O)6]2+ ன் நீர்க்கரைசல் பச்சை நிறமுடையது ஆனால் [Ni(CN)4]2-ன் கரைசல் நிறமற்றது விளக்குக.
16.
17.
பின்வரும் ஈனிகளை அவற்றில் உள்ள வழங்கி அணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
அ) NH3
ஆ) en
இ) OX2-
ஈ) பிரிடின் (pyridine)
18.
[Ti(H2O)6]3+ நிறமுடையது ஆனால் [Sc(H2O)6]3+ நிறமற்றது விளக்குக.
19.
[Co(en)2Cl2]+ என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான அனைத்து வடிவ மாற்றியங்களையும் வரைக. அவற்றுள் ஒளி சுழற்றும் தன்மையுடைய மாற்றியங்களைக் கண்டறிக.
1.
(c)
[Co(NH3)3(Cl)3]
2.
\(\left[\mathrm{Fe}(\mathrm{en})_3\right]^{2+}\left(\mathrm{PO}_4^{3-}\right)\)
3.

வடிவ மாற்றியம்
4.
(d)
பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினேட் (III)
5.
\(\left[\mathrm{Fe}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_5^{+} \mathrm{NO}\right]^{2+} \mathrm{SO}_4{ }^{2-}\)
முறையே +1 மற்றும் +1
6.
1) அதிகளவு திரவ அம்மோனியாவை, காப்பர் சல்பேட் நீர்கரைசலுடன் சேர்ப்பதால் \(\left[\mathrm{Cu}\left(\mathrm{NH}_3\right)_4\right] \mathrm{SO}_4\) ஆகும்.
CuSO4 + 4NH3 ⟶ [Cu(NH3)4]SO4
2) இதிலுள்ள அணைவு அயனி [Cu(NH3)4]2+ ஆகும்.
\(\mathrm{CuSO}_4+4 \mathrm{NH}_3 \longrightarrow\left[\mathrm{Cu}\left(\mathrm{NH}_3\right)_4\right] \mathrm{SO}_4\)
7.
மைய உலோகத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு முனை ஈனிகள் (வழங்கி அணுக்கள்) முப்பரிமாண புறவெளியில் வெவ்வேறு வகைகளில் அமையாமல் ஒரே வகையில் அமைவதால் நான்முகி அணைவுகள் வடிவ மாற்றியங்களை பெற்றிருப்பதில்லை.
8.
1. இரு வழி பிணைப்புறு ஈனி தன்னிடம் உள்ள வெவ்வேறு வழங்கி அணுக்களின் மூலம் மைய உலோக அயனியுடன் பிணைப்பினை ஏற்படுத்தும் போது இத்தகைய மாற்றியங்கள் ஏற்படுகின்றன.
2. எடுத்துக்காட்டில், நைட்ரைட் அயனியானது, 2+ மைய உலோக அயனியான Co²+ உடன் நைட்ரஜன் அணு வழியே பிணைப்பினை ஏற்படுத்துவதால் ஒரு அணைவுச் சேர்மமும், ஆக்ஸிஜன் அணு வழியே பிணைப்பினை ஏற்படுத்துவதால் மற்றொரு அணைவுச் சேர்மமும் உருவாகின்றன.
(எ.கா) [Co(NH3)5 NO2]2+
இரு வழி பிணைப்புறு ஈனிகள்:
\(\mathrm{NO}_2^{-}, \mathrm{CN}^{-}, \mathrm{CO} \& \mathrm{SCN}^{-}\)
எடுத்துக்காட்டு:
\(\left[\mathrm{Co}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{NO}_2\right] \mathrm{Cl}_2-\) மஞ்சள் ; \(\text { [ } \left.\mathrm{Co}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{ONO}\right] \mathrm{Cl}_2 \) - சிவப்பு
3. இடம் மாற்றியம், உப்பு மாற்றியம் என்றும் அழைக்கப்படும்
9.
இவை இரண்டும் அயனியாதல் மாற்றுகளாகும்.
(i) Co(NH3)5Cl]SO4 ஆனது BaCl2 கரைசலுடன் வெண்ணிற வீழ்படிவை தருகிறது. ஆனால் AgNO3 உடன் இல்லை.
(ii) [Co (NH3)5 SO4] Cl ஆனது AgNO3 கரைசலுடன் தயிர் போன்ற வெண்ணிற வீழ்படிவை தருகிறது, ஆனால் BaCl2 உடன் அல்ல.
10.
மருத்துவப் பயன்:
1. Ca - EDTA அணைவானது காரீயம் மற்றும் கதிர்வீச்சு நச்சினை உடலிலிருந்து நீக்கி குணப்படுத்த பயன்படுகிறது.
2. சிஸ் - பிளாட்டின் - புற்றுநோய்க்கட்டி எதிர் மருந்து புற்றுநோய் மருத்துவத்தில்.
உயிரியல் முக்கியத்துவம்:
1. ஹீமோகுளோபின் (RBC) நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை திசுக்களுக்கும், CO₂ நுரையீரலுக்கும் பரிமாற்றம் செய்கிறது.
2. குளோரோபில் - தாவரங்களின் ஒளிச்சேர்க்கை வினையில் முக்கிய பங்காற்றுகிறது.
11.
(i) குளோரின் அணுவின் உருவளவு சிறியது. எனவே [CuCI4]2- சாத்தியமானது. ஆனால் அயோடின் அணுவின் உருவளவு பெரியது. எனவே [CuI4]2- சாத்தியமற்றது.
(ii) I- அயனி cu2+ அயனியை ஒடுக்குவதால் குப்ரிக் அயோடைடு, குப்ரஸ் அயோடைடாக மாறுகிறது. எனவே [Cul4]2- சாத்தியமற்றது. ஆனால் Cl- ஆல் இவ்வாறு ஒடுக்கம் நடைபெறவில்லை. எனவே [CuCl4]2- சாத்தியமானது.
12.

13.
a) \(
{\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right)_6\right]^{3+}} \)
\( { }_{24} \mathrm{Cr}-\quad{ }_{18}[\mathrm{Ar}] 4 s^1 3 \mathrm{~d}^5 \\
{ }_{21} \mathrm{Cr}^{3+}-\quad{ }_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^3
\)

\(d ^ 2sp ^ 3\) இனக்கலப்பு (எண்முகி)
n = 3
பாராகாந்தத் தன்மையுடையது
\(\begin{aligned}
\mu_{\mathrm{s}} & =\sqrt{\mathrm{n}(\mathrm{n}+2)} \mathrm{BM} \\
& =\sqrt{3(3+2)}=\sqrt{15}=3.87 \mathrm{BM}
\end{aligned}\)
b) \(\left[\mathrm{Ni}(\mathrm{CN})_4\right]^{2-}\)
\( { }_{28} \mathrm{Ni}-{ }_{18}[\mathrm{Ar}] 4 \mathrm{~s}^2 3 \mathrm{~d}^8 \\
{ }_{26} \mathrm{Ni}^{2+}-{ }_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^8
\)

CN- ஒரு வலிமை மிகு ஈனியாகும். எனவே 3d எலக்ட்ரான்களை இரட்டையாக்குகிறது
[Ni (CN) 4 ]2-

dsp² இனக்கலப்பு (தளசதுரம்)
n = 0
டையாகாந்தத் தன்மையுடையது
\(mu_{s} = 0\)
14.
VB கொள்கையின் வரம்புகள்:
1. அணைவுச் சேர்மங்களின் நிறங்களை இக்கொள்கை விளக்கவில்லை.
2. இது சுழற்சியால் ஏற்படும் காந்தத் திருப்புத் திறனை மட்டுமே கருத்திற்கொண்டது. காந்தத் திருப்புத் திறனின் பிற கூறுகளை கருத்திற்கொள்ளவில்லை.
3. ஒரே உலோகத்தின் அணைவுச் சேர்மங்களில் சில, உள் ஆர்பிட்டால் அணைவுகளாகவும் மற்ற சில சேர்மங்கள், ஆர்பிட்டால் அணைவுகளாகவும் காணப்படுகின்றன. ஏன் இவ்வாறு மாறுபட்ட அணைவுகள் உருவாகின்றன என்பதற்கு உரிய விளக்கத்தினை இக்கொள்கை தரவில்லை.
4. எடுத்துக்காட்டு:
\(\left[\mathrm{Fe}(\mathrm{CN})_6\right]^{4-}\)ஆனது டையாகாந்தப்பண்புடையது (குறை சுழற்சி அணைவு) ஆனால் \(\left[\mathrm{FeF}_6\right]^{4-}\) ஆனது பாரா காந்தத்தன்மையுடையது (உயர் சுழற்சி அணைவு).
15.
(i) [Ni(H2O)6]2+,

H₂O ஒரு வலிமை குறைந்த ஈனி எனவே எலக்ட்ரான்கள் இணையாவதில்லை. இரு இணையாகாத எலக்ட்ரான்கள் உள்ளன. இதனால் d-d இடப்பெயர்ச்சி நடைபெறும் சேர்மம் நிறத்தை (பச்சை) பெறுகிறது.
(ii) [Ni(CN)4]2-
[Ni(CN)4]2- இதில் CN- வலிமை மிகு ஈனி. இதனால் 3d- எலக்ட்ரான்கள் இணையாக்கப்படுகின்றன. எனவே தனித்த இணையாகாத எலக்ட்ரான்கள் இல்லை. இதனால் d-d இடப்பெயர்ச்சி நடைபெறாது. எனவே நிறமற்றதாக உள்ளது.

16.
17.
| ஈனி | வழங்கி அணுக்களின் எண்ணிக்கை | ஈனியின் வகை | |
|---|---|---|---|
| அ | NH3 | 1 | ஒரு முனை ஈனி |
| ஆ | en | 2 | இரு முனை ஈனி |
| இ | OX2- | 2 | இரு முனை ஈனி |
| உ | பிரிடின் (pyridine) | 1 | ஒரு முனை ஈனி |
18.
\(\begin{array}{l|l}
{ }_{22} \mathrm{Ti}-{ }_{18}[\mathrm{Ar}] 4 \mathrm{~s}^2 3 \mathrm{~d}^2 & { }_{21} \mathrm{Sc}-{ }_{18}[\mathrm{Ar}] 4 \mathrm{~s}^2 3 \mathrm{~d}^1 \\
{ }_{19} \mathrm{Ti^{3+}}-{ }_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^1 & { }_{18} \mathrm{Sc}^{3+}{ -}_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^0
\end{array}\)
(i) [Ti(H2O)6]3+, அணைவுச் சேர்மத்தில் மைய உலோக அயனி Ti3+ ஆனது d1 எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றுள்ளது. இது ஈனி புலத்தில் t2g ஆர்பிட்டால் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
(ii) இந்த அணைவுச் சேர்மத்தின் மீது வெண்மைநிற ஒளி விழும் போது d எலக்ட்ரான் ஒளியினை உட்கவர்ந்து உயர் ஆற்றல் மட்டத்திற்கு கிளர்வுறுகிறது. நிறமாலைத் தரவுகளிலிருந்து உட்கவர் பெருமம் மதிப்பு eg ஆகும்.
(iii) இது படிக புலப் பிளப்பு ஆற்றல் (\(\Delta^o\)) 239.7 KJ mol-1 20000-1 cm இணையானதாகும். இந்த உட்கவர்தலால், பிரதிபலிக்கப்படும் நிறம் ஊதாநிறம்.
(iv) இவ்வாறு \(\left[\mathrm{Ti}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_6\right]^{3+}\) ல் d-d இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.
(v) ஆனால், \(\left(\mathrm{Sc}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_6\right]^{3+}\) Sc3+ ன் எலக்ட்ரான் அமைப்பு 3d° ஆகும். இதில் d-d இடப்பெயர்ச்சி நடைபெறாது. எனவே நிறமற்றதாக உள்ளது.
19.

12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards