12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 03/10/2020
12 ஆம் வகுப்பு இயற்பியல் பயிற்சி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Tamil Medium Model 3 Mark Creative Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அதிர்வடையும் 'q' மின்னூட்டம் எவ்வாறு மின்காந்த அலையினை தோற்றுவிக்கும்?
2.
சில அறிஞர்கள் யூகப்படி புவி அனுப்வோர் பூமியில் உருவானால் பூமி அனுகுளிர்காலம் என்ற விளைவினால் பாதிப்படையும், இந்த யூகத்திற்கான காரணத்தை கூறு
3.
TV ஏற்றத்தின் பொது செயற்கை ஒன்றினை தொலை தொடர்பிற்கு பயன்படுத்துவது ஏன்?
4.
மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பிற்கான கோவையை பெறுக.
5.
பாரடே கூண்டு ஆய்வு விவரி
6.
மின்துகள் ஒன்றின் மின்னழுத்தத்திற்கான கோவையின் முக்கிய கருத்துக்களை எழுதுக.
7.
மின் உருகிக்கம்பிகள் [Fuse carrier] குறிப்பு வரைக.
8.
எவ்வாறு மின்கலத் தொகுப்பு (Battery) உருவாக்கப்படுகிறது?
9.
வோல்ட் மீட்டரின் மின்தடை அதிகமாக இருக்க வேண்டும் ஏன்?
10.
அட்டவணைப்படுத்துக
திசைவேகத்தின் அடிப்படையில் ஏற்படும் விலக்கம்-திசைவேகத் தேர்ந்தெடுப்பான்
1.
குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அதிர்வடையும் 'q' மின்னூட்டம் மாற்றமடையும் மின்புலம் மற்றும் மாற்றமடையும் காந்தப்புலங்களை உருவாக்கும் அவை 'v' அதிர்வெண் கொண்ட மின்காந்த அலையினை தோற்றுவிக்கும் z - அச்சில் உருவாகும் மின்காந்த அலையினை கீழே படத்தில் காணலாம்
\(\vec { E } \) மற்றும் \(\vec { B } \) ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும். அலை மின்காந்த அலை பரவலுக்கு செங்குத்தாக அமையும்
2.
புவி அணுப்போரில் உருவாகும் மேகங்கள் புவியின் அருகாமையில் உள்ள பகுதிகளை மூடி சூரிய ஒளி பூமியில் படாதபடி தடுக்கும். இதன் காரணமாக அனுகுளிர்காலம் உருவாகும்
3.
(i) அதிக அதிர்வெண் கொண்ட TV அலைகள்
(ii) அயனியாக்க படலத்தின் எதிரொலிப்பு அடைவதில்லை
(iii) மேலும் தரை பரவலின் நெருக்கம் மிக குறைவானது
4.
மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பு என்பது ஒரு நேர் அரைச்சுற்று (அ) எதிர் அரைச் சுற்றில் உள்ள மின்னோட்டத்தின் அனைத்து மதிப்புகளின் சராசரி ஆகும்.
i = Im sin ωt = Im sin θ
சிறுபட்டையின் பரப்பு = i d θ
நேர் அரை சுற்றின் பரப்பு = \(\int _{ o }^{ \pi }{ id\theta } =\int _{ o }^{ \pi }{ { I }_{ m } } sin\theta d\theta \)
\(={ I }_{ m }{ \left[ -cos\theta \right] }_{ o }^{ \pi }=-{ I }_{ m }[cos\pi -cos\theta ]\)
= 2 Im
மாறுதிசை மின்னோட்ட சராசரி மதிப்பு Iav = \(\frac { 2{ I }_{ m } }{ \pi } \)
Iav = -0.637 Im
5.
உலோகத்தண்டுகளால் செய்யப்பட்ட கூண்டு அமைக்கப்பட்டுள்ளது
(i) வெளியே உருவாக்கப்படும் செயற்கை மின்னலால் தாக்கப்படும் போதும் கூண்டிற்குள் உள்ள மனிதர் எந்த பாதிப்புக்கும் உள்ளாவதில்லை
(ii) கடத்தி ஒன்றின் உட்புறமுள்ள குழிவுப்பகுதி (cavity) ஒன்றைக் கருதுவோம்
(iii) கடத்தியின் புறப்பரப்பிலுள்ள மின்துகள்கள் எதுவாக இருந்தாலும் கடத்திக்கு வெளியே ஏற்படும் மின்னியல் மாறுபாடுகள் எதுவாயினும் அக்குழிவுப் பகுதியின் உட்புறம் மின்புலம் சுழியாகவே இருக்கும்
(iv) புறத்தே ஏற்படும் மின்னியல் மாறுபாடுகளிலிருந்து நுட்பமான மின் கருவி ஒன்றைப் பாதுகாக்க வேண்டுமெனில் இத்தகைய குழிவுப் பகுதிக்குள் வைக்க வேண்டும். இதையே நிலைமின் தடுப்புரை என்பர்
(v) உலோகத்தண்டு நிலைமின் தடுப்புரையாக செயல்படுகிறது
(vi) உட்புறத்தில் மின்புல மதிப்பு சுழியாகும்
(vii) மின்துகள் தண்டு வழியே தரைக்கு சென்று கூண்டின் உள்ளே மனிதரை பாதிக்காத வண்ணம் செயல்படும்
6.
முக்கியக் கருத்துக்கள்:
i) மூல மின்துகள் q நேர்க்குறி உடையது எனில், V > 0 மூல மின்துகள் q எதிர்க்குறி கொண்டது எனில் V யும் எதிர்க்குறியைக் கொண்டிருக்கும்
\(V=-\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { q }{ r } \)
ii) தொலைவு அதிகரிக்கும்போது நேர் மின்துகளினால் உருவாகும் மின்னழுத்தம் குறைகிறது என்பதை சமன்பாடு (1.33) மூலம் அறியலாம். அதே சமயம், எதிர் மின்துகளைப் பொறுத்தவரை, தொலைவு அதிகரிக்கும்போது மின்னழுத்தமும் அதிகரிக்கிறது. முடிவிலாத் தொலைவில் (r = ∞) நிலை மின்னழுத்தம் சுழி (V = 0) ஆகும்.
iii) q1, q2, q3 ···· qn ன் ஆகிய பல மின்துகள்கள் அடங்கிய அமைப்பினால் ஒரு புள்ளியில் (P) உருவாகும் மின்னழுத்தமானது தனித்தனி மின்துகளால் ஏற்படும் மின்னழுத்தங்களின் கூடுதலுக்குச் சமமாகும்.
\(V=\frac { k{ q }_{ 1 } }{ { r }_{ 1 } } +\frac { k{ q }_{ 2 } }{ { r }_{ 2 } } +\frac { { kq }_{ 3 } }{ { r }_{ 3 } } +.....\frac { { kq }_{ n } }{ r_{ n } } \)
= \(\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \sum _{ i=1 }^{ n }{ \frac { { q }_{ 1 } }{ { r }_{ 1 } } } \)
இங்கு r1, r2, r3 .... r4 ஆகியவை புள்ளி P யிலிருந்து மின்துகள் q1, q2, q3 ···· qn ஆகியவற்றின் தொலைவுகள்.
7.
1. அதிகமான அளவு மின்னோட்டம் மின்சாதனங்கள் வழியாக பாயும்போது தோன்றும் வெப்பத்தினால் அவை பாதிக்கப்படாமல் இருக்க தொடரிணைப்பில் மின் உருகிகள் இணைக்கப்படுகின்றன.
2. மின் உருகிக் கம்பிகள் என்பது மிக்க குறைந்த நீளமுள்ள குறைவான உருகுநிலை கொண்ட பொருளாலானவை.
3. மின்னோட்டத்தின் அளவு குறிப்பிட்ட மதிப்பைவிட அதிகரிக்கும் போது இவை உருகி மின்சுற்றை திறந்த சுற்றாக்கும்.
குறைபாடு:
1. மின்னோட்டம் குறிப்பிட்ட அளவை விட அதிகரிக்கும் போது உருகி எரிந்து விடுவதால் அதனை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
2. தற்போது நமது வீடுகளில் மின்உருகிகளுக்கு பதிலாக மின்சுற்று துண்டிப்பான்கள் (Trippers) பயன்படுகின்றன.
8.
1. மின்கலம் என்பது வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி மின்னோட்டத்தை ஏற்படுத்தும் சாதனம் ஆகும்.
2. இதில் இரு மின்தண்டுகள் மின்பகுதியில் (electrolyte) மூழ்க வைக்கப்பட்டுள்ளது.
3. மின்கலத்தொகுப்பு (Battery) என்பது பல மின்கலங்கள் (cells) இணைக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
4. ஒரு மின்கலம் அல்லது மின்கலத்தொகுப்பை இணைக்கும் போது, எலக்ட்ரான்களை எதிர் மின்முனையிலிருந்து நேர்மின் முனைக்கு மின்சுற்று வழியே பாயும்.
5. வேதி வினைகளின் மூலம், மின்கலத்தொகுப்பு அல்லது மின்கலம் மின்முனைகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாட்டை உருவாக்கும்.
6. இந்த மின்னழுத்த வேறுபாடே எலக்ட்ரான்களை மின்சுற்றில் நகர்த்தத் தேவைப்படும் ஆற்றலை அளிக்கும்.
9.
1. மின்னழுத்தம் அளக்க வேண்டிய புள்ளிகளுக்கிடையே உள்ள மின்தடையினைக் காட்டிலும் வோல்ட் மீட்டரின் மின்தடை மிக அதிகமாக இருக்க வேண்டும்.
2. இல்லையெனில், மின்னோட்ட மதிப்பை குறைத்துக் காட்டுவதுடன் மின்னழுத்த வேறுபாடு மதிப்பையும் குறைவாகவே காட்டும்.
3. வோல்ட் மீட்டர் அதிக மின்தடை கொண்டதாக இருந்தால் மட்டும் இந்தப் பிழையினைத் தவிர்க்கலாம்.
4. மின்தடை ஈறிலா மதிப்பாக இருப்பின், அக்கருவி ஒரு சிறந்த வோல்ட் மீட்டராகும்.
10.
| திசைவேகம் | விலக்கம் |
| V>Vo | லாரன்ஸ் விசையின் திசையில் மின்துகள் விலகலடையும் |
| V |
கூலூம் விசையின் திசையில் மின்துகள் விலகலடையும் |
| V = Vo | விலக்கம், ஏதுமில்லாமல் மின்துகள் நேராகச் செல்லும். |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards