12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 11/07/2019
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
இலாப நோக்கற்ற அமைப்பின் இறுதி கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன?
(அ) விளையாட்டுப் பொருள்கள் விற்பனை
(ஆ) ஆயுள் உறுப்பினர் கட்டணம்
(இ) தொடர் விளையாட்டுப் போட்டி நிதி
2.
இலாப நோக்கற்ற அமைப்பின் இறுதிக் கணக்குகளில் ஆண்டுச் சந்தா எவ்வாறு கையாளப்படுகிறது?
3.
பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் சந்தா எவ்வாறு தோன்றும் என்பதைக் காட்டவும்.
2018-ல் பெற்ற சந்தா ரூ16,000-ல் 2017 ஆம் ஆண்டுக்கான ரூ.3,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான ரூ.5,000 அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 4,000. 2017 ஆம் ஆண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது ரூ.2,000.
4.
திருச்சி கல்வியியல் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்க இருப்பு (1.1.2018) | 20,000 | பாதுகாப்பு பெட்டக வாடகை பெற்றது | 12,000 |
| முதலீடுகள் செய்தது | 80,000 | அறைகலன் விற்றது | 5,000 |
| மதிப்பூதியம் செலுத்தியது | 3,000 | பொதுச்செலவுகள் | 7,000 |
| நன்கொடை பெற்றது | 80,000 | அஞ்சல் செலவுகள் | 1,000 |
| தணிக்கைக் கட்டணம் செலுத்தியது | 2,000 | சந்தா பெற்றது | 10,000 |
5.
கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|---|
| வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) | 6,000 | மதிப்பூதியம் செலுத்தியது | 2,800 | |
| கைரொக்கம் | 1,000 | நீர் மற்றும் மின்சாரக் கட்டணம் | 700 | |
| மைதான பராமரிப்பிற்காக | விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 2,600 | ||
| கூலி செலுத்தியது | 2,000 | விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது | 1,900 | |
| சந்தா பெற்றது: முந்தைய ஆண்டு | 500 | விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள் | 5,200 | |
| நடப்பு ஆண்டு | 9,600 | உயில்கொடைப் பெற்றது | 2,000 | |
| எதிர்வரும் ஆண்டு | 400 | 10,500 | ரொக்க இருப்பு (31.3.2019) | 300 |
| கூலி கொடுபட வேண்டியது | 2,200 | அரங்கம் அமைப்பதற்காக பெற்ற நன்கொடை | 2,000 | |
| கடன்மீதான வட்டி செலுத்தியது | 2,000 | |||
6.
கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2016, மார்ச் 31-ல் முடிவடையும் ஆண்டிற்கான பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து, 2016, மார்ச் 31-ல் முடிவடையும் ஆண்டிற்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
| பெறுதல்கள் | ரூ | செலுத்தல்கள் | ரூ |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | பராமரிப்புச் செலவுகள் | 5,000 | |
| வங்கி ரொக்கம் | 8,000 | அறைகலன் | 15,000 |
| சந்தா | 11,000 | தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 1,400 |
| பழைய மட்டைகள் மற்றும் பந்துகள் | செயலாளர் மதிப்பூதியம் | 4,500 | |
| விற்றது | 100 | மட்டை கள் மற்றும் பந்துகள் | 7,400 |
| தொடர் விளையாட்டுப் போட்டிக்கான சந்தா | 2,000 | இருப்பு கீ/இ | |
| உயில்கொடை | 20,000 | வங்கி ரொக்கம் | 7,800 |
| 41,100 | 41,100 |
கூடுதல் தகவல்கள்:
2015, ஏப்ரல் 1 அன்று மன்றத்தில் பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு ரூ3,000; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.500. தொடர் விளையாட்டுப் போட்டியின் உபரித்தொகைத் நிரந்தர அரங்கத்திற்கான ஒதுக்காக உருவாக்கப்பட வேண்டும். 31.3.2016 அன்று பெறவேண்டிய சந்தாரூ 2,000. 31.3.2016-ல் மட்டைகள் மற்றும் பந்துகள் இருப்பு ரூ1,000.
7.
கரூர் சமூக மன்றத்தின் 2018 மார்ச் 31 ஆம் நாளைய முதல் நிதியினைக் கணக்கிடவும்.
| விவரம் (31.03.2018) | ரூ |
|---|---|
| அறைகலன் | 50,000 |
| கட்டடம் | 40,000 |
| 2017-18 ஆம் ஆண்டிற்கான சந்தா பெற வேண்டியது | 10,000 |
| 2018-19 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது | 5,000 |
| கடன் வாங்கியது | 10,000 |
| முதலீடுகள் | 20,000 |
| கைரொக்கம் | 4,000 |
| வங்கி ரொக்கம் | 6,000 |
8.
வேலூர் பொழுதுபோக்கு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்க இருப்பு (1.4.2016) | 3,000 | கேளிக்கை வரவுகள் | 20,000 |
| தொடக்க வங்கி இருப்பு (1.4.2016) | 12,000 | சேர்க்கைக் கட்டணம் பெற்றது | 1,000 |
| அறைகலன் வாங்கியது | 11,000 | நகராட்சி வரி | 22,000 |
| விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது | 11,000 | அறக்கொடை நாடகக்காட்சி செலவு | 2,000 |
| விளையாட்டு அரங்கத்திற்காக பெற்ற நன்கொடை | 8,000 | பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது | 15,000 |
| பழைய டென்னிஸ் பந்துகள் விற்றது | 1,500 | புதிய டென்னிஸ் மைதானம் கட்டியது | 18,000 |
| செய்தித்தாள்கள் வாங்கியது | 500 | அறக்கொடை நாடகக்காட்சி வரவுகள் | 2,500 |
| பயணச் செலவுகள் | 4,500 | இறுதி கைரொக்க இருப்பு | 8,000 |
9.
பின்வரும் விவரங்கள் 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
2018 ஆம் ஆண்டில் சந்தா பெற்றது ரூ50,000. இதில் 2017 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ 5,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ 7,000 உள்ளடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 6,000. 2017 ஆம் ஆண்டில் முன்கூட்டிப்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.4,000
10.
இலாப நோக்கற்ற அமைப்பின் வருவாயின வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்.
11.
ஆயுள் உறுப்பினர் கட்டணம் – சிறு குறிப்பு தரவும்
12.
இலாப நோக்கற்ற அமைப்பின் பொருள் தரவும்.
13.
பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டிய அச்சு மற்றும் எழுதுபொருள் செலவைக் கணக்கிட்டு அவை 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் என்பதையும் குறிப்பிடவும்.
எழுதுபொருள்களுக்காக கொடுத்த தொகை (2017-2018) = ரூ1,500
எழுதுபொருள்கள் இருப்பு (ஏப்ரல் 1, 2017) = ரூ 300
எழுதுபொருள்கள் இருப்பு (மார்ச் 31, 2018) = ரூ 200
14.
பின்வரும் விவரங்கள் ஒரு சங்கத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?
| பெறுதல்கள் | ரூ | ரூ | செலுத்தல்கள் | ரூ |
|---|---|---|---|---|
| சந்தா | ||||
| 2017-2018 | 5,000 | |||
| 2018-2019 | 48,000 | |||
| 2019-2020 | 3,000 | 56,000 | ||
இச்சங்கத்தில் 300 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ஆண்டுச் சந்தாவாக ரூ. 200 செலுத்துகின்றனர். இன்னும் பெறவேண்டிய 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.1,000.
15.
16.
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை_____.
வருவாயின வரவு
முதலின வரவு
வருவாயினச் செலவு
முதலினச் செலவு
17.
நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது_____.
ஒரு சொத்து
ஒரு பொறுப்பு
ஒரு செலவு
தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று
18.
19.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது______.
அந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டம்
அந்த ஆண்டின் செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம்
அந்த ஆண்டின் மொத்த ரொக்கச் செலுத்தல்கள்
அந்நாளைய ரொக்க மற்றும் வங்கி இருப்பு
1.
(அ) விளையாட்டுப் பொருள்கள் விற்பனை :
1) நடப்பாண்டில் பயன்படுத்தப்பட்ட விளையாட்டுச் சாதனங்கள் வருவாய் மற்றும் செலவினக் கணக்கின் பற்றுப் பக்கத்தில் காட்டப்பட வேண்டும்.
2) பயன்படுத்தப்பட்டவை = தொடக்க இருப்பு+நடப்பு ஆண்டில் வாங்கியது - இறுதி இருப்பு
3) இறுதி சரக்கிருப்பு அவ்வாண்டின் இறுதியில் இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கத்தில் தோன்றும்.
4) பழைய விளையாட்டுச் சாதனங்கள் ஏதேனும் விற்பனைச் செய்யப்பட்டிருந்தால் அவை வருவாய் மற்றும் செலவினக் கணக்கின் வரவுப்பக்கத்தில் காட்டப்பட வேண்டும் அல்லது வருவாய் மற்றும் செலவினக் கணக்கின் பற்றுப்பக்கத்தில் குறிப்பிட்ட பயன்படுத்தப்பட்ட பொருள்களில் கழித்துக் காட்டப்பட வேண்டும்.
(ஆ) ஆயுள் உறுப்பினர் கட்டணம் :
உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும் ஆயுள் உறுப்பினர் கட்டணம் ஒரு முதலின வரவாகும்.
(இ) தொடர் விளையாட்டுப் போட்டி நிதி :
தொடர் விளையாட்டுப் போட்டி நிதி இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம் தனியாக காண்பிக்கப்பட்ட வேண்டும். நிதிக்கான வருமானம் ஏதாவது இருந்தால் அவை நிதிக் கணக்குடன் கூட்டப்பட வேண்டும் மற்றும் நிதிக் கணக்கிலிருந்து கழிக்கப்பட வேண்டும்.
2.
இலாப நோக்கற்ற அமைப்புகளின் இறுதி கணக்குகளில் சந்தாவிற்கான செயல்முறைகள்:
அ) வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் செயல்முறைகள்:
நடப்பு ஆண்டு, முந்தைய ஆண்டு, அடுத்த ஆண்டிற்கான சந்தா பெற்றது தனித்தனியாக கொடுக்கப்பட்டிருந்தால், நடப்பு ஆண்டிற்குரிய சந்தா கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களை செய்த பின்பு வருவாய் மற்றும் செலவினக் கணக்கின் வரவுப் பக்கத்தில் காண்பிக்கப்பெறும்.
1) நடப்பாண்டில் பெற வேண்டிய சந்தா கூட்டப்படவேண்டும்.
2) முந்தைய ஆண்டில் முன்கூட்டிப்பெற்ற நடப்பாண்டிற்குரிய சந்தா கூட்டப்பட வேண்டும்.
நடப்பாண்டில் பெற்ற மொத்த சந்தா கொடுக்கப்பட்டிருந்தால், நடப்பாண்டில் பெற்ற மொத்த சந்தா பின்வரும் சரிக்கட்டுதல்களை செய்த பின்னர் வருவாய் மற்றும் செலவினக் கணக்கின் வரவுப் பக்கத்தில் காட்டப்பெறும்.
1) முந்தைய ஆண்டுக்குரிய பெற வேண்டிய சந்தா நடப்பு ஆண்டில் பெறப்பட்டிருந்தால் கழிக்கப்பட வேண்டும். நடப்பாண்டிற்குரிய பெறவேண்டிய சந்தா கூட்டப்பட வேண்டும்.
2) முந்தைய ஆண்டில் முன்கூட்டிப்பெற்ற சந்தாவில் நடப்பாண்டிற்கு உரியது கூட்டப்பட வேண்டும். நடப்பாண்டில் முன்கூட்டிப் பெற்ற சந்தாவில் எதிர்வரும் ஆண்டிற்குரியது கழிக்கப்பட வேண்டும்.
ஆ) இருப்புநிலைக் குறிப்பில் செயல்முறைகள்:
1) நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா மற்றும் இன்னும் பெறவேண்டிய முந்தைய ஆண்டிற்குரிய சந்தா போன்றவை அவ்வாண்டின் இறுதியில் இருப்புநிலைக் குறிப்பில் சொத்துகள் பக்கத்தில் காண்பிக்கப்படும்.
2) நடப்பு ஆண்டில் முன்கூட்டிப் பெற்ற சந்தா அவ்வாண்டின் இருப்புநிலைக் குறிப்பில் பொறுப்புகள் பக்கத்தில் காண்பிக்கப்படும்.
3.
| செலவுகள் | ரூ | வருமானம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|
| நடப்பாண்டில் பெற்ற சந்தா | 16,000 | |||
| கழிக்க: 2017 ஆம் ஆண்டுக்கான சந்தா பெற்றது | 3,000 | |||
| 13,000 | ||||
| கழிக்க: 2019 ஆம் ஆண்டுக்கான சந்தா பெற்றது | 5,000 | |||
| 8,000 | ||||
| கூட்டுக: 2018 ஆம் ஆண்டு பெற வேண்டிய சந்தா | 4,000 | |||
| 12,000 | ||||
| கூட்டுக: 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா 2017-ஆம் ஆண்டில் முன்கூட்டிப் பெற்றது | 2,000 | 14,000 | ||
4.
| பெறுதல்கள் | ரூ | செலுத்தல்கள் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | முதலீடுகள் செய்தது | 80,000 | |
| கைரொக்கம் | 20,000 | மதிப்பூதியம் செலுத்தியது | 3,000 |
| நன்கொடைப் பெற்றது | 80,000 | தணிக்கைக் கட்டணம் | 2,000 |
| பாதுகாப்பு பெட்டக வாடகைப் பெற்றது | 12,000 | பொதுச் செலவுகள் | 7,000 |
| அறைகலன் விற்றது | 5,000 | ||
| சந்தா | 10,000 | அஞ்சல் செலவுகள் | 1,000 |
| இருப்பு கீ/இ | |||
| கைரொக்கம் | 34,000 | ||
| 1,27,000 | 1,27,000 |
5.
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | செலுத்தல்கள் | ரூ. |
|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | இருப்பு கீ/கொ | |||
| கைரொக்கம் | 1,000 | வங்கி மேல்வரைப்பற்று | 6,000 | |
| சந்தா பெற்றது: | கூலி செலுத்தியது | 2,000 | ||
| முந்தைய ஆண்டு | 500 | கடன் மீது வட்டி செலுத்தியது | 2,000 | |
| நடப்பு ஆண்டு | 9,600 | மதிப்பூதியம் செலுத்தியது | 2,800 | |
| எதிர்வரும் ஆண்டு | 400 | 10,500 | நீர் மற்றும் மின்சாரக் கட்டணம் | 700 |
| விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள் | 5,200 | விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 2,600 | |
| உயில் கொடைப் பெற்றது | 2,000 | விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது | 1,900 | |
| அரங்கம் அமைப்பதற்காக பெற்ற நன்கொடை | 2,000 | இருப்பு கீ/இ | ||
| ரொக்க இருப்பு | 300 | |||
| வங்கி இருப்பு | 2,400 | |||
| 20,700 | 20,700 |
6.
மாணவர் குறிப்பு
தொடக்க முதல் நிதியினைக் கண்டறியதொடக்க இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்ய வேண்டும்.
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|
| முதல்நிதி | 10,500 | பந்து மற்றும் மட்டைகள் இருப்பு | 3,000 |
| (இருப்புக் கட்டும் தொகை) | வங்கி ரொக்கம் | 8,000 | |
| முன்கூட்டிப் பெற்ற சந்தா | 500 | ||
| 11,000 | 11,000 |
| செலவுகள் | ரூ | ரூ | வருமானம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| பராமரிப்புச் செலவுகள் | 5,000 | சந்தா | 11,000 | ||
| செயலாளர் மதிப்பூதியம் | 4,500 | கூட்டுக: 2015 -16 ஆம் ஆண்டிற்குரிய | |||
| மட்டை கள் மற்றும் பந்துகள் | 7,400 | சந்தா 2014-15 ல் முன்கூட்டிப் பெற்றது | 500 | ||
| கூட்டுக: தொடக்க இருப்பு | 3,000 | 11,500 | |||
| 10,400 | கூட்டுக: நிலுவையில் உள்ள சந்தா (2015-16) | 2,000 | 13,500 | ||
| கழிக்க: இறுதி இருப்பு | 1,000 | 9,400 | பழைய மட்டைகள், பந்துகள் விற்றது | 100 | |
| வருமானத்தைக் காட்டிலும் மிகுதியானச் செலவுகள் (பற்றாக்குறை) | 5,300 | ||||
| 18,900 | 18,900 |
| பொ றுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|---|
| முதல்நிதி | 10,500 | அறைகலன் | 15,000 | |
| கழிக்க: வருமானத்தைக் காட்டிலும் | பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு | 1,000 | ||
| மிகுதியானச் செலவுகள் (பற்றாக்குறை) | 5,300 | 5,200 | பெறவேண்டிய சந்தா | 2,000 |
| விளையாட்டு அரங்க நிதிக்கான ஒதுக்கு | வங்கி ரொக்கம் | 7,800 | ||
| தொடர் விளையாட்டுப் போட்டிக்கான சந்தா | 2,000 | |||
| கழிக்க:தொ டர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் |
1,400 | 600 | ||
| உயில்கொடை | 20,000 | |||
| 25,800 | 25,800 |
7.
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|
| முதல் நிதி | 1,15,000 | கட்டடம் | 40,000 |
| (இருப்புக் கட்டும் தொகை | அறைகலன் | 50,000 | |
| கடன் வாங்கியது | 10,000 | முதலீடுகள் | 20,000 |
| சந்தா முன்கூட்டிப் பெற்றது | 5,000 | சந்தா பெறவேண்டியது | 10,000 |
| வங்கி ரொக்கம் | 6,000 | ||
| கைரொக்கம் | 4,000 |
8.
| பெறுதல்கள் | ரூ | ரூ | பெறுதல்கள் | ரூ |
|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | அறைகலன் வாங்கியது | 11,000 | ||
| கைரொக்கம் | 3,000 | விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது | 11,000 | |
| வங்கி ரொக்கம் | 12,000 | 15,000 | செய்தித் தாள்கள் வாங்கியது | 500 |
| விளையாட்டு அரங்கத்திற்காக பெற்ற நன்கொடை | 8,000 | பயணச் செலவுகள் | 4,500 | |
| பழைய டென்னிஸ் பந்துகள் விற்றது | 1,500 | நகராட்சி வரி | 22,000 | |
| கேளிக்கை வரவுகள் | 20,000 | செலவுகள் | 2,000 | |
| சேர்க்கைக் கட்டணம் | 1,000 | பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது | 15,000 | |
| அறக்கொடை நாடகக்காட்சி வரவுகள் | 2,500 | புதிய டென்னிஸ் மைதானம் கட்டியது | 18,000 | |
| இருப்பு கீ/இ | இருப்பு கீ/இ | |||
| வங்கி மேல்வரைப்பற்று | 44,000 | கைரொக்கம் | 8,000 | |
| 92,000 | 92,000 |
9.
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| நடப்பாண்டில் பெற்ற சந்தா | 50,000 | |||
| கழிக்க:2017 ஆம் ஆண்டுக்கான சந்தா பெற்றது | 5,000 | |||
| 45,000 | ||||
| கழிக்க:2019 ஆம் ஆண்டுக்கான சந்தா பெற்றது | 7,000 | |||
| 38,000 | ||||
| கூட்டுக: 2018 ஆம் ஆண்டு பெற வேண்டிய சந்தா: | 6,000 | |||
| 44,000 | ||||
| கூட்டுக: 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா 2017 ஆம் ஆண்டில் முன்கூட்டிப் பெற்றது | 4,000 | 48,000 |
10.
1) நுழைவுக்கட்டணம்
2) பொது நன்கொடைகள்
3) பங்காதாயம்
4) வாடகை பெற்றது.
11.
உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும் ஆயுள் உறுப்பினர் கட்டணம் ஒரு முதலின வரவாகும். ஏனெனில், இது திரும்பத் திரும்ப நிகழாத் தன்மை கொண்டது.
12.
1) சில அமைப்புகள் இலாபம் ஈட்டும் நோக்கத்திற்காக அல்லாமல் பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்திற்காகவும் தொடங்கப்படுகின்றன. அவை கலை, பண்பாடு, கல்வி மற்றும் விளையாட்டு போன்றவற்றை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்படுகின்றன. இந்த அமைப்புகள் இலாப நோக்கற்ற அமைப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
2) அறக்கொடை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பண்பாட்டு மன்றங்கள், விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்றங்கள், மருத்துவமனைகள், நூலகங்கள் மற்றும் இலக்கிய அமைப்புகள் போன்றவை இலாப நோக்கற்ற அமைப்புகளுக்கு உதாரணங்கள் ஆகும்.
13.
| செலவுகள் | ரூ | ரூ | வருமானம் | ரூ | ரூ - |
|---|---|---|---|---|---|
| எழுதுபொருள்கள் பயன்படுத்தியது | |||||
| தொடக்க இருப்பு | 300 | ||||
| கூட்டுக: கொள்முதல் | 1,500 | ||||
| 1,800 | |||||
| கழிக்க: இறுதி இருப்பு | 200 | 1,600 |
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|
| எழுதுபொருள்கள் இருப்பு | 200 |
14.
| செலவுகள் | ரூ | வருமானம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|
| சந்தா | 48,000 | |||
| கூட்டுக: பெறவேண்டிய சந்தா (2018-2019) | 12,000 | 60,000 | ||
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|
| முன்கூட்டிப் பெற்ற 2019-20 ஆம் ஆண்டிற்கான சந்தா | 3,000 | பெறவேண்டிய சந்தா | ||
| 2017 – 2018 | 1,000 | |||
| 2018 – 2019 | 12,000 | 13,000 |
மாணவர் குறிப்பு

15.
(a)
16.
(b)
முதலின வரவு
17.
(a)
ஒரு சொத்து
18.
(a)
19.
(d)
அந்நாளைய ரொக்க மற்றும் வங்கி இருப்பு
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards