12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/07/2019
மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மாதிரி வினாத்தாள்
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஒரு செமீ நீளத்தில் 400 சுற்றுகள் கொண்ட நீண்ட வரிச்சுருள் 2A மின்னோட்டத்தைக் கொண்டுள்ளது. 4 cm2 குறுக்குவெட்டுப் பரப்பு மற்றும் 100 சுற்றுகள் கொண்ட கம்பிச்சுருள் ஒன்று வரிச்சுருளின் உள்ளே பொது அச்சுள்ள (co-axial) வகையில் வைக்கப்படுகிறது. வரிச்சுருளின் காந்தப்புலத்தில் கம்பிச்சுருள் உள்ளவாறு வைக்கப்படுகிறது. 0.04 விநாடியில் வரிச்சுருளில் செல்லும் மின்னோட்டத்தின் திசை திருப்பப்பட்டால், கம்பிச்சுருளில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையைக் காண்க.
2.
ஒரு கம்பிச்சுருளின் தன் மின்தூண்டல் எண் குறித்து நீ புரிந்து கொண்டது யாது? அதன் இயற்பியல் முக்கியத்துவம் யாது?
3.
LC அலைவுகள் என்றால் என்ன?
4.
ஏற்று மற்றும் இறக்கு மின்மாற்றிகள் என்றால் என்ன?
5.
ஒரு மின்தூண்டி எதற்குப் பயன்படுகிறது? சில உதாரணங்களைத் தருக.
6.
ஒரு மின்தூண்டிச் சுற்றில் உள்ள மின்னோட்டம் 0.3 sin (200t – 40°) A ஆகும். மின்தூண்டல் எண் 40mH எனில், அதன் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கான சமன்பாட்டை எழுதுக.
7.
600 சுற்றுகள் மற்றும் 70 cm2 பரப்பு கொண்ட செவ்வக கம்பிச்சுருள் ஒன்று 0.4 T என்ற காந்தப்புலத்திற்கு செங்குத்தான அச்சைப் பொருத்து சுழலுகிறது. கம்பிச்சுருள் நிமிடத்திற்கு 500 சுழற்சிகள் நிறைவு செய்தால், கம்பிச்சுருளின் தளமானது
(i) புலத்திற்கு குத்தாக
(ii) புலத்திற்கு இணையாக மற்றும்
(iii) புலத்துடன் 60° கோணம் சாய்வாக உள்ளபோது தூண்டப்படும் மின்னியக்கு விசையைக் கணக்கிடுக
8.
சென்னையில் புவி காந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறு 4.04 x 10-5 T கொண்ட ஒரு இடத்தில் 7.2 m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேற்புறத்தில் இருந்து 0.5 m நீளமுள்ள கடத்தும் தண்டு தடையின்றி விழுகிறது. தண்டின் நீளம் புவிகாந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறுக்கு செங்குத்தாக இருப்பின், தண்டானது தரையை தொடும்போது தண்டில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையைக் காண்க (g = 10 m s-2 s–2 என்ற சீரான முடுக்கத்துடன் விழுவதாகக் கொள்க)
9.
ஒரு நேரான கடத்தக்கூடிய கம்பியானது ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து அதன் நீளம் கிழக்கு – மேற்கு திசையில் உள்ளவாறு கிடைமட்டமாக விழச் செய்யப்படுகிறது. அதில் ஒரு மின்னியக்கு விசை தூண்டப்படுமா? உனது விடையை நியாயப்படுத்துக.
10.
3 m2 பரப்பு கொண்ட வட்ட விண்ணலைக்கம்பி (Circular Antenna) ஒன்று மதுரையில் உள்ள ஒரு இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. விண்ணலைக் கம்பியின் பரப்பின் தளம் புவிகாந்தப்புலத் திசைக்கு 47° சாய்வாக உள்ளது. அந்த இடத்தில் புவிகாந்தப்புலத்தின் மதிப்பு 4.1 x 10-5T எனில், விண்ணலைக் கம்பியுடன் தொடர்புடைய காந்தப்பாயத்தை கணக்கிடுக.
11.
திறன் காரணியின் ஒரு வரையறையைத் தருக.
12.
Q – காரணி – வரையறு
13.
ஒரு மாறுதிசை மின்னோட்டத்தின் சமன்பாடு i = 77 sin314 t ஆகும். அதன் பெரும மதிப்பு அதிர்வெண், அலைவுநேரம் மற்றும் t = 2 ms - இல் கணநேர மதிப்பு ஆகியவற்றைக் காண்க.
14.
ஒரு மூடிய சுற்றில் கம்பிச்சுருள் மற்றும் காந்தம் இடையே உள்ள சார்பு இயக்கம், கம்பிச்சுருளில் மின்னியக்கு விசையைத் தூண்டுகிறது என்ற உண்மையை நிறுவுக.
15.
\(\frac {20}{ \pi^ 2 }\) H மின்தூண்டியானது மின்தேக்குத்திறன் C கொண்ட மின்தேக்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 50 Hz இல் பெருமத் திறனை செலுத்தத் தேவையான C இன் மதிப்பானது_____ .
50 μF
0.5 μF
500 μF
5 μF
16.
ஒரு அலைவுறும் LC சுற்றில் மின்தேக்கியில் உள்ள பெரும மின்னூட்டம் Q ஆகும். ஆற்றலானது மின் மற்றும் காந்தப்புலங்களில் சமமாக சேமிக்கப்படும் போது. மின்னூட்டத்தின் மதிப்பு_____ .
\(\frac Q 2\)
\(\frac Q {\sqrt 3}\)
\(\frac Q {\sqrt 2}\)
Q
17.
ஒரு மின்சுற்றில் R, L, C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருந்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு π/3 ஆகும். மாறாக, C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வேறுபாடானது மீண்டும் π/3 என உள்ளது. சுற்றின் திறன் காரணி_______ .
1/2
1/\(\sqrt2\)
1
\(\sqrt3\)/2
18.
மின்னோட்டமானது 0.05 s நேரத்தில் +2A லிருந்து -2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருளின் தன் மின் தூண்டல் எண் _______.
0.2 H
0.4 H
0.8 H
0.1 H
19.
படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு எலக்ட்ரான் நேர்கோட்டுப்பாதை XY – இல் இயங்குகிறது. கம்பிச்சுற்று abcd எலக்ட்ரானின் பாதைக்கு அருகில் உள்ளது. கம்பிச்சுற்றில் ஏதேனும் மின்னோட்டம் தூண்டப்பட்டால் அதன் திசை யாது?
எலக்ட்ரான் கம்பிச்சுருளைக் கடக்கும்போது, மின்னோட்டம் அதன் திசையை திருப்புகிறது.
மின்னோட்டம் தூண்டப்படுகிறது
abcd
adcb
1.
\(N_1 =4 \times 10^4, \mathrm{~N}_2=100, \mathrm{I}=2 \mathrm{~A}, \mathrm{~A}=4 \times 10^{-4} \mathrm{~m}^2 \)
\(\mathrm{t} =0.04 \mathrm{~s}, \mathrm{e}=? \)
\(\mathrm{~B} =\mu_0 \mathrm{n}_1 \mathrm{I}=\frac{\mu_0 \mathrm{~N}_1 \mathrm{I}}{l}=\frac{4 \pi \times 10^{-7} \times 4 \times 10^4 \times 2}{1} \)
\(\mathrm{~B} =100.48 \times 10^{-3} \mathrm{~T} \)
\(\phi =\mathrm{BA}=100.48 \times 10^{-3} \times 4 \times 10^{-4} \)
\(\therefore \phi_1 =\phi_2=\phi=401.92 \times 10^{-7} \mathrm{wb} \)
\(\mathrm{d} \phi =\phi_1-\left(-\phi_2\right)=2 \phi=2 \times 401.92 \times 10^{-7} \)
\(\therefore \mathrm{d} \phi =803.84 \times 10^{-7} \mathrm{wb}\)
கம்பிச்சுருளின் தூண்டப்பட்ட மின்னியக்கு விசை
\(e=-N_2 \frac{d \phi}{d t} \)
\(e=\frac{-100 \times 803.84 \times 10^{-7}}{0.04}=-200.96 \times 10^{-3} \mathrm{~V}\)
\(e=-0.2 \mathrm{~V}\)
2.
(i) இயந்திரவியல் இயக்கத்தில் நிறை மற்றும் நிலைம திருப்புத் திறன் செய்வதை ஒரு மின்சுற்றில் மின்தூண்டல் எண் செய்கிறது.
(ii) ஒரு மின்சுற்று மூடப்பட்டால் அதிகரிக்கும் மின்னோட்டம் ஒரு மின்னியக்கு விசையைத் தூண்டுகிறது. இந்த மின்னியக்கு விசை சுற்றில் ஏற்படும் மின்னோட்ட அதிகரிப்பை எதிர்க்கிறது.
(iii) ஒரு சுற்று திறக்கப்பட்டால் குறையும் மின்னோட்டம் எதிர்த்திசையில் ஒரு மின்னியக்கு விசையை தூண்டுகிறது. இது மின்னோட்டம் குறைவதை எதிர்க்கிறது.
(iv) கம்பிச்சுருளின் மின்தூண்டல் எண் மின்னோட்டத்தில் ஏற்படும் எந்த மாற்றத்தையும் எதிர்த்து அதன் தொடக்க நிலையிலேயே பராமரிக்க முயல்கிறது. இது மின் நிலைமம் ஆகும்.
3.
ஒரு சுற்றுக்கு ஆற்றல் அளிக்கப்படும் போதெல்லாம், ஆற்றலானது மின்தூண்டியின் காந்தப்புலம் மற்றும் மின்தேக்கியின் மின்புலம் இடையே முன்னும் பின்னுமாக அலைவுறுகிறது. இதனால் வரையறுக்கப்பட்ட அதிர்வெண் கொண்ட மின் அலைவுகள் உருவாக்கப்படுகின்றன. இந்த அலைவுகள் LC அலைவுகள் எனப்படுகிறது.
4.
\(\frac{V_s}{V_p}=\frac{N_s}{N_p}=\frac{I_p}{I_s}=k\)
(i) Ns > Np (அ) K > 1, \(\therefore\) Vs > Vp மற்றும் Is < Ip. \(\frac{V_s}{V_p}=\frac{N_s}{N_p}=\frac{I_p}{I_s}=k\) இந்த நேர்வு ஏற்று மின்மாற்றி ஆகும். இதில் மின்னழுத்த வேறுபாடு அதிகரிக்கிறது மற்றும் தொடர்புடைய மின்னோட்டம் குறைகிறது.
(ii) Ns < Np (அ) K < 1, ∴ Vs < Vp மற்றும் Is > Ip. இது இறக்கு மின்மாற்றி ஆகும். இதில் மின்னழுத்த வேறுபாடு குறைகிறது மற்றும் தொடர்புடைய மின்னோட்டம் அதிகரிக்கிறது.
5.
மின்தூண்டியில் மின்னாற்றல் சேமிக்கப்பட்டு வருகிறது. இது குழல் விளக்குகளில் சோக் ஆக பயன்படுகிறது
உதாரணங்கள்:
கம்பிச்சுருள், வரிச்சுருள் மற்றும் வட்ட வரிச்சுருள்
6.
L = 40 × 10-3 H; i = 0.3 sin (200t – 40o)
XL = ωL = 200 × 40 × 10-3 = 8 Ω
Vm = Im XL = 0.3 × 8 = 2.4 V
ஒரு மின்தூண்டிச்சுற்றின் மின்னழுத்த வேறுபாடு மின்னோட்டத்தை விட 90° முந்தி உள்ளது. எனவே ,
\(v={ V }_{ m }\sin\left( \omega t+{ 90 }^{ 0 } \right) \)
v = 2.4sin(200 t − 40o + 90o )
v = 2.4sin(200 t + 50o )volt
7.
A = 70 x 10-4m2; N = 600 சுற்றுகள்
B = 0.4 T; f = 500 சுழற்சிகள் / நிமிடம்
\({ \varepsilon }={ \varepsilon }_{ m }\sin\omega t\)
ஏனெனில் \({ \varepsilon }_{ m }=N\Phi _{ m }\omega =N(BA)(2\pi f)\)
\(\varepsilon =NBA\times 2\pi f\times \sin\omega t\)
(i) \(\omega t={ 0 }^{ 0 },\) எனில்
\(\varepsilon ={ \varepsilon }_{ m }\sin0=0\)
(ii) \(\omega t={ 90 }^{ 0 }\), எனில்
\(\varepsilon ={ { \varepsilon }_{ m }\sin{ 90 }^{ 0 }=NBA\times 2\pi f\times 1 }\)
= \(600\times 0.4\times 70\times { 10 }^{ -4 }\times 2\times \cfrac { 22 }{ 7 } \left( \cfrac { 500 }{ 60 } \right) \)
= 88V
(iii) \(\omega t=90^{ 0 }-{ 60 }^{ 0 }={ 30 }^{ 0 }\) எனில்
\(\varepsilon ={ \varepsilon }_{ m }\sin{ 30 }^{ 0 }=88\times \cfrac { 1 }{ 2 } =44V\)
8.
l = 0.5 m; h = 7.2 m; u = 0 m s-1;
g = 10 m s-2; BH = 4.04 x 10-5 T
தண்டின் இறுதி திசைவேகம்
v2 = u2 + 2gh
= 0 + (2 x 10 x 7.2)
v2 = 144
v = 12 m s-1
தண்டானது தரையைத் தொடும்போது தூண்டப்பட்ட மின்னியக்கு விசை ε = BHlv
= 4.04 x 10-5 x 0.5 x 12
= 242.4 μV
9.
ஆம்! கம்பியில் ஒரு மின்னியக்கு விசை தூண்டப்படும். ஏனெனில் அது புவிகாந்தப்புலத்தின் கிடைத்தளக் கூறுக்கு செங்குத்தாக இயங்குகிறது. அப்பொழுது புவிகாந்தப்புலத்தின் காந்தப்புலக் கோடுகளை வெட்டுகிறது.
10.
B = 4.1 x 10-5T ; θ = 90o – 47o = 43o;
A = 3m2
நாம் அறிந்த வகையில் ΦB = BA cos θ
ΦB = 4.1 x 10-5T x 3 x cos 43o
= 41 x 10-5 x 3 x 0.7314
ΦB = 89.96 μWb
11.
திறன் காரணி = cosф = முந்தி அல்லது பின்தங்கி உள்ள கட்டக் கோணத்தின் கொசைன் மதிப்பு ஆகும்.
12.
Q – காரணி என்பது ஒத்ததிர்வின் போது L அல்லது C க்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கும், செலுத்தப்படும் மின்னழுத்த வேறுபாட்டிற்கும் இடையே உள்ள தகவு என வரையறுக்கப்படுகிறது.
Q காரணி = ஒத்ததிர்வின் போது L அல்லது C க்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு/ செலுத்தப்படும் மின்னழுத்த வேறுபாடு
Q காரணி = \(\frac { 1 }{ R } \sqrt { \frac { L }{ C } } \)
13.
i = 77 sin 314t ; t = 2 m s = 2×10-3 s
மாறுதிசை மின்னோட்டத்தின் பொதுவான சமன்பாடு i = \({ I }_{ m }\sin\omega t\) உடன் ஒப்பிடும்போது
(i) பெரும மதிப்பு Im = 77A
(ii) அதிர்வெண்,\(f=\cfrac { \omega }{ 2\pi } =\cfrac { 314 }{ 2\times 3.14 } =50Hz\)
(iii) அலைவுநேரம், \(T=\cfrac { 1 }{ f } =\cfrac { 1 }{ 50 } =0.02s\)
(iv) t = 2 m s இல் கண மதிப்பு
i = 77sin(314 \(\times\) 2 \(\times\) 10-3)
i = 77sin(314 \(\times\) 2 \(\times\) 10-3\(\times \frac{180^o}{3.14}\))
= 77sin 36o = 77 x 0.5878
i = 45.26 A
14.
முதல் சோதனை:
காப்பிடப்பட்ட கம்பிச்சுருள் C மற்றும் கால்வனோமீட்டர் G ஆகியவற்றைக் கொண்டுள்ள மூடிய சுற்று ஒன்றைக் கருதுக (படம் 4.2 (அ)). சுற்றில் மின்னோட்டம் இல்லாததால் கால்வனோமீட்டர் விலகல் அடையாது.
நிலையான கம்பிச்சுருளினுள் சட்ட காந்தமானது அதன் வடமுனைகம்பிச்சுருளை நோக்கி இருக்குமாறு நுழைக்கப்படும்போது கால்வனோமீட்டரில் ஒரு விலகல் ஏற்படுகிறது. இது கம்பிச்சுருளில் ஒரு மின்னோட்டம் பாய்வதைக் குறிக்கிறது. கம்பிச்சுருளினுள் காந்தத்தை நிலையாக வைக்கும் பொழுது கால்வனோமீட்டர் விலகலைக் காட்டாது
சட்டகாந்தமானது தற்போது கம்பிச்சுருளினுள் இருந்து வெளியே எடுக்கப்படும் பொழுது கால்வனோமீட்டரில் மீண்டும் ஒரு கணநேர விலகல் எதிர்த்திசையில் ஏற்படுகிறது. எனவே மின்னோட்டமானது எதிர்த்திசையில் பாய்கிறது. காந்தம் வேகமாக நகர்த்தப்பட்டால் சுற்றில் அதிக மின்னோட்டம் உருவாகி, அதிக விலகலை ஏற்படுத்துகிறது.
தற்போது சட்ட காந்தம் திருப்பப்பட்டு, தென்முனை கம்பிச்சுருளை நோக்கி இருக்குமாறு வைக்கப்படுகிறது. மேற்கண்ட சோதனையை மீண்டும் செய்தால், வடமுனைக்கு தோன்றிய விலகல்களுக்கு எதிர்த்திசையில் விலகல்கள் ஏற்படுகின்றன.
காந்தத்தை நிலையாக வைத்து கம்பிச்சுருளை காந்தத்தை நோக்கி அல்லது வெளிப்புறமாக நகர்த்தினால் அதே முடிவுகள் கிடைக்கின்றன. முடிவாக, காந்தம் மற்றும் கம்பிச்சுருளுக்கு இடையே ஒரு சார்பு இயக்கம் உள்ளபோதெல்லாம் கம்பிச்சுருளில் மின்னோட்டம் உருவாவதைக் குறிக்கும் வகையில் கால்வனோமீட்டரில் விலகல் தோன்றுகிறது.
15.
\(L=\frac{20}{\pi^2} \mathrm{H}, \mathrm{f}=50 \mathrm{~Hz} \)
\(f=\frac{1}{2 \pi \sqrt{L C}} \)
\(50=\frac{1}{2 \pi \sqrt{\frac{20}{\pi^2} \times C}} \)
\(50=\frac{1}{2 \times \sqrt{20 C}} \)
\(\therefore(50)^2=\frac{1}{4 \times 20 C} \)
\(\therefore C=\frac{2500}{80}=5 \mu \mathrm{F}\)
16.
Qமையம் = \(\frac{Q}{\sqrt{1^2+1^2}}=\frac{Q}{\sqrt2}\)
17.
\(\Phi = \frac{\pi}{3}-\frac{\pi}{3}=0 \)
திறன் காரணி = cosФ = cos 0 = 1
18.
\(\text {emf } ε =8 \mathrm{~V} \)
\(d I=I_1-I_0=2-(-2)=4 \mathrm{~A} \)
\(\text {dt }=0.05 \mathrm{~s} \)
\(L=\frac{-ε}{d I / d t}=\frac{-8}{4 / 0.05} \)
\(=\frac{-8 \times 0.05}{4}=\frac{-0.40}{4} \)
=-0.1 H
19.
மரபு மின்னோட்டம் எலக்ட்ரான் செல்லும் திசைக்கு எதிராக உள்ளது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards