12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 11/07/2019
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
புதிய கூட்டாளி சேர்க்கப்படும் போது, ஏற்கனவே உள்ள நற்பெயரை பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
2.
புதிய கூட்டாளி சேர்க்கையின்போது, பகிர்ந்துதரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் எவ்வாறு கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது?
3.
அசோக் மற்றும் மும்தாஜ் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 5:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் தருண் என்பவரை 2/9 இலாப விகிதத்தில் நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர். சேர்க்கையின் போது நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ரூ.27,000 என்று மதிப்பிடப்படுகிறது. தருணால் தன்னுடைய பங்கிற்கான நற்பெயர் மதிப்பிற்கான தொகையைக் கொண்டுவர முடியவில்லை. நிறுவனம் மாறுபடும் முதல் முறையில் கணக்கினைப் பராமரிக்கிறதெனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
4.
அனில், சுனில் மற்றும் ஹரி என்ற மூன்று கூட்டாளிகள் 4:3:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ராஜா என்பவரை 20% இலாபத்திற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
5.
விமல் மற்றும் ஆதி என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜெயம் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
6.
ரமேஷ் மற்றும் ராஜு என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரஞ்சன் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். ரஞ்சன் அவரது பங்கை பழைய கூட்டாளிகளிடமிருந்து 3:2 என்ற விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
7.
கவிதா மற்றும் இராதா எனும் கூட்டாளிகள் முறையே 4:3 எனும் விகிதத்தில் இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். 1.1.2019 அன்று அவர்கள் தீபா என்பவரை கூட்டாளியாக சேர்த்தனர். அந்நாளில் அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பில் இலாப நட்டக் கணக்கு பற்று இருப்பாக ரூ.70,000 பகிர்ந்து தரா நட்டமாக சொத்துகள் பக்கத்தில் காட்டியது. கூட்டாளி சேர்ப்பின் போது பகிர்ந்து தரா நட்டத்தை மாற்றுவதற்கு குறிப்பேட்டுப் பதிவு தரவும்.
8.
நற்பெயருக்கான கணக்கியல் செயல்முறை குறித்து சிறு குறிப்பு தரவும்.
9.
கூட்டாளி சேர்ப்பின் போது மேற்கொள்ள வேண்டிய சரிகட்டுதல்கள் யாவை?
10.
இராஜேஷ் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3:2 என இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். இராமன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். அவர்களது புதிய இலாப விகிதம் 5:3:2. பின்வரும் மறுமதிப்பீடுகள் செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
(அ) கட்டடத்தின் மதிப்பு ரூ.15,000 உயர்த்தப்பட்டது
(ஆ) இயந்திரத்தின் மதிப்பு ரூ.4,000 குறைக்கப்பட்டது
(இ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.1,000 உருவாக்கப்பட்டது.
11.
இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து கொள்ளும் ஜேம்ஸ் மற்றும் ஜஸ்டினாவின் 1.1.2017 ம் நாளன்றைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 70,000 | ||
| ஜேம்ஸ் | 40,000 | சரக்கிருப்பு | 30,000 | |
| ஜஸ்டினா | 50,000 | 90,000 | கடனாளிகள் | 20,000 |
| கடனீந்தோர் | 35,000 | வங்கி ரொக்கம் | 15,000 | |
| காப்பு நிதி | 15,000 | முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு |
5,000 | |
| 1,40,000 | 1,40,000 |
மேற்கூறிய நாளில் பாலன் என்பவரை எதிர்கால இலாபத்தில் 1/5 பங்கிற்கு பின்வரும் விவரங்கள் அடிப்படையில் கூட்டாளியாக சேர்த்தனர்.
(i) பாலன் ரூ.25,000 முதல் கொண்டுவந்தார்.
(ii) நற்பெயரில் அவருடைய பங்காக ரூ.10,000 ரொக்கமாக கொண்டுவந்தார்.
(iii) சொத்துகள் கீழ்க்கண்டவாறு மதிப்பிடப்பட்டன:
கட்டடம் ரூ.80,000; கடனாளிகள் ரூ.18,000; சரக்கிருப்பு ரூ.33,000.
தேவையான பேரேட்டுக் கணக்குகளை தயார் செய்து கூட்டாளி சேர்ப்பிற்கு பின்வரும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.
12.
அமீர் மற்றும் ராஜா என்ற கூட்டாளிகளின் இலாபப்பகிர்வு விகிதம் 3:2. 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | இயந்திரம் | 60,000 | ||
| அமீர் | 80,000 | அறைகலன் | 40,000 | |
| இராஜா | 70,000 | 1,50,000 | கடனாளிகள் | 30,000 |
| காப்பு நிதி | 15,000 | சரக்கிருப்பு | 10,000 | |
| கடனீந்தோர் | 35,000 | முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு | 40,000 | |
| வங்கி ரொக்கம் | 20,000 | |||
| 2,00,000 | 2,00,000 |
ரோஹித் என்பவர் புதிய கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார். அவர் எதிர்கால இலாபத்தில் தன்னுடைய 1/5 பங்கிற்காக ரூ.30,000 முதலாகக் கொண்டு வந்தார். அவர் நற்பெயரில் தன்னுடைய பங்காக ரூ.10,000 கொண்டு வந்தார்.
மறுமதிபீடுப் பின்வருமாறு செய்யப்பட்டது
(i) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.14,000 ஆக அதிகரிக்கப்பட்டது.
(ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்படவேண்டும்.
(iii) இயந்திரம் மதிப்பு ரூ.80,000 ஆக மறுமதிப்பீடு செய்யப்பட்டது.
தேவையான பேரேட்டு கணக்குகள் தயார் செய்து சேர்ப்பிற்கு பின் உள்ள இருப்புநிலைக்
குறிப்பினைத் தயார் செய்யவும்.
13.
வெற்றி மற்றும் இரஞ்சித் இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களது 31-12-2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | அறைகலன் | 25,000 | ||
| வெற்றி | 30,000 | சரக்கிருப்பு | 20,000 | |
| இரஞ்சித் | 20,000 | 50,000 | கடனாளிகள் | 10,000 |
| காப்பு நிதி | 5,000 | கைரொக்கம் | 35,000 | |
| பற்பல கடனீந்தோர் | 45,000 | இலாப நட்ட க/கு (நட்டம்) | 10,000 | |
| 1,00,000 | 1,00,000 |
பின்வரும் சரிக்கட்டுதல்களுடன் 01.01.2018 அன்று சூரியா என்பவர் நிறுவனத்தின் புதிய கூட்டாளியாக சேர்கிறார்.
(i) சூரியா 1/4 இலாபப் பங்கிற்காக ரூ.10,000 முதல் கொண்டுவருகிறார்.
(ii) சரக்கிருப்பு 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது.
(iii) கடனாளிகள் ரூ.7,500 என மதிப்பிடப்படுகிறது.
(iv) அறைகலன் மதிப்பு ரூ.40,000 என மாற்றி அமைக்கப்படுகிறது.
(v) கொடுபட வேண்டிய கூலி ரூ.4,500 இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் நிறுவனத்தின் மறுமதிப்பீடு கணக்கு, கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.
14.
ஆனந்த் மற்றும் பாலு என்ற கூட்டாளிகள் முறையே 7 : 3 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 31 மார்ச், 2018 ஆம் நாளைய அவர்களது இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | நிலம் | 60,000 | ||
| ஆனந்த் | 50,000 | சரக்கிருப்பு | 40,000 | |
| பாலு | 30,000 | 80,000 | கடனாளிகள் | 20,000 |
| பற்பல கடனீந்தோர் | 20,000 | கைரொக்கம் | 10,000 | |
| இலாப நட்ட க/கு | 30,000 | |||
| 1,30,000 | 1,30,000 |
2018 ஏப்ரல் 1 ஆம் நாளன்று அவர்கள் சந்துரு என்பவரை கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்கு ஒப்புக்கொண்டு 1/4 பங்குக்கு கூட்டான்மையில் சேர்த்துக் கொண்டனர்
(அ) சரக்கிருப்பு மதிப்பை ரூ.3,000 குறைப்பது
(ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.2,000 உருவாக்குவது
(இ) நிலத்தின் மதிப்பை ரூ.10,000 மதிப்பேற்றம் செய்வது
மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் முதல் கணக்கினை கூட்டாளி சேர்ப்பிற்குப் பின் தயாரிக்கவும்.
15.
பாலாஜி மற்றும் கமலேஷ் கூட்டாளிகள். இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாப் பகிர்வு விகிதம் 3:1:1. பாலாஜி மற்றும் கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.
1:3
3:1
2:1
1:2
16.
17.
கூட்டாளி சேர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதல்ல?
பொதுவாக கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகள் மாறும்
முந்தைய ஆண்டுகளின் இலாபம் மற்றும் நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
கூட்டாண்மை நிறுவனமானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் மறு கட்டமைக்கப்படும்
ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது
18.
கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது
முதல் விகிதம்
தியாக விகிதம்
ஆதாய விகிதம்
இவற்றுள் எதுவுமில்லை
19.
மறுமதிப்பீட்டுக் கணக்கு ஒரு_____.
சொத்து க/கு
பெயரளவு க/கு
ஆள்சார் க/கு
ஆள்சாரா க/கு
1.
| நாள் | விவரம் | பே.ப. எண்: |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| கூட்டாளிகள் முதல் / நடப்பு க/கு (பழைய விகிதம்) |
ப | XXX | |||
| நற்பெயர் க/கு (பழைய நற்பெயர் போக்கெழுதியது) |
XXX |
2.
(i) கடந்த ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் நட்டங்கள் கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் இருந்தால் அது பகிர்ந்துதர இலாபம் எனப்படும்
(ii) அவ்வாறான பகிர்ந்து தரா காப்புகள், இலாபங்கள் அல்லது நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு உரியன. எனவே, அவை பழைய கூட்டாளிகளுக்கு பழைய இலாப விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
3.
பழைய கூட்டாளிகளின் தியாகம் குறிப்பிடப்படவில்லை. பழைய கூட்டாளிகளின் இலாப விகிதமான 5:1 தியாக விகிதமாக கருத வேண்டும். எனவே, தியாகவிகிதம் 5:1.
தருணின் நற்பெயர் =27,000 x \(\frac { 2 }{ 9 } \) =ரூ.6,000
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| தருணின் முதல் க/கு | ப | 6,000 | |||
| அசோக் முதல் க/கு (5/6) | 5,000 | ||||
| மும்தாஜ் முதல் க/கு (1/6) | 1,000 | ||||
| (தருணின் நற்பெயர் பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கில் பழைய இலாப விகிதத்தில் சரிக்கட்டப்பட்டது) |
4.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப் பகிர்வு விகிதம் கணக்கிடுதல்
அனில், சுனில் மற்றும் ஹரியின் பழைய இலாப விகிதம் = 4:3:3 அல்லது \(\frac { 4 }{ 10 } :\frac { 3 }{ 10 } :\frac { 3 }{ 10 } \)
இலாபத்தில் ராஜாவின் பங்கு = 20% அல்லது 20/100 அல்லது 1/5
மொத்த பங்கு 1 என எடுத்துக் கொள்ளவும்
மீதப் பங்கு =\(1-\frac { 1 }{ 5 } =\frac { 5-1 }{ 5 } \)
=\(\frac { 4 }{ 5 } \)
பழைய கூட்டாளியின் புதிய பங்கு = மீதப் பங்கு x பழைய பங்கு
அனில் =\(\frac { 4 }{ 5 } \times \frac { 4 }{ 10 } =\frac { 16 }{ 50 } \)
சுனில் =\(\frac { 4 }{ 5 } \times \frac { 3 }{ 10 } =\frac { 12 }{ 50 } \)
ஹரி =\(\frac { 4 }{ 5 } \times \frac { 3 }{ 10 } =\frac { 12 }{ 50 } \)
புதிய கூட்டாளியின் பங்கு
ராஜா = \(\frac { 1 }{ 5 } \)
ராஜா பங்கிற்குரிய பகுதியை சமன் செய்யும் பொருட்டு, 10 ஆல் பெருக்கி மற்றும் வகுக்க வேண்டும்.
ராஜாவின் பங்கு =\(\frac { 1 }{ 5 } \times \frac { 10 }{ 10 } =\frac { 10 }{ 50 } \)
அனில், சுனில், ஹரி மற்றும் ராஜா அவர்களின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்=\(\frac { 16 }{ 50 } :\frac { 12 }{ 50 } :\frac { 12 }{ 50 } :\frac { 10 }{ 50 } \) அதாவது, 8:6:6:5.
தியாக விகிதம் = 4:3:3
5.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப் பகிர்வு விகிதம் கணக்கிடுதல் :
தியாகப் பங்கு மற்றும் தியாகப் பங்கின் விகிதம் மற்றும் புதிய இலாபப் பங்கு விகிதம் குறிப்பிடாத போது, பழைய இலாபப் பகிர்வு விகிதத்தை இருக்கும் கூட்டாளிகளின் தியாகப் பங்காக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, 2:1.
விமல் மற்றும் ஆதியின் தியாக விகிதம் 2:1
மொத்த பங்கு 1 என எடுத்துக் கொள்ளவும்
ஜெயம் பங்கு = \(\frac { 1 }{ 4 } \)
மீதமுள்ள பங்கு =\(1-\frac { 1 }{ 4 } =\frac { 4-1 }{ 4 } \)
=\(\frac { 3 }{ 4 } \)
பழைய கூட்டாளியின் புதிய பங்கு = மீதப் பங்கு x பழைய பங்கு
விமல் =\(\frac { 3 }{ 4 } \times \frac { 2 }{ 3 } =\frac { 6 }{ 12 } \)
ஆதி =\(\frac { 3 }{ 4 } \times \frac { 1 }{ 3 } =\frac { 3 }{ 12 } \)
புதிய கூட்டாளியின் பங்கு
ஜெயம் =\(\frac { 1 }{ 4 } \)
ஜெயம் பங்கிற்குரிய பகுதியை சமன் செய்யும் பொருட்டு, 3 ஆல் பெருக்கி மற்றும் வகுக்க வேண்டும்.
ஜெயம் பங்கு =\(\frac { 1 }{ 4 } \times \frac { 3 }{ 3 } =\frac { 3 }{ 12 } \)
விமல், ஆதி மற்றும் ஜெயம் அவர்களின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் =\(\frac { 6 }{ 12 } :\frac { 3 }{ 12 } :\frac { 3 }{ 12 } \) அதாவது, 2 : 1 : 1.
6.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப் பகிர்வு விகிதம் கணக்கிடுதல்
ரஞ்சன் பங்கு =\(\frac { 1 }{ 4 } \)
பழைய விகிதம் =2:1 அதாவது, \(\frac { 2 }{ 3 } :\frac { 1 }{ 3 } \)
தியாகப் பங்கின் விகிதம் = 3:2 அதாவது, \(\frac { 3 }{ 5 } :\frac { 2 }{ 5 } \)
தியாகப் பங்கு = புதிய கூட்டாளியின் பங்கு x தியாகப் பங்கின் விகிதம்
ரமேஷ் =\(\frac { 1 }{ 4 } \times \frac { 3 }{ 5 } =\frac { 3 }{ 20 } \)
ராஜு =\(\frac { 1 }{ 4 } \times \frac { 2 }{ 5 } =\frac { 2 }{ 20 } \)
ரமேஷ் மற்றும் ராஜு வின் தியாகப் பங்கு \(\frac { 3 }{ 20 } \) மற்றும் \(\frac { 2 }{ 20 } \) அதாவது 3:2
பழைய கூட்டாளியின் புதிய பங்கு = பழைய பங்கு – தியாகப் பங்கு
ரமேஷ் =\(\frac { 2 }{ 3 } -\frac { 3 }{ 20 } =\frac { 40-9 }{ 60 } =\frac { 31 }{ 60 } \)
ராஜு =\(\frac { 1 }{ 3 } -\frac { 2 }{ 20 } =\frac { 20-6 }{ 60 } =\frac { 14 }{ 60 } \)
புதிய கூட்டாளியின் பங்கு ரஞ்சன் =\(\frac { 1 }{ 4 } \)
ரஞ்சனின் பங்கிற்குரிய பகுதியை சமன் செய்யும் பொருட்டு, 15 ஆல் பெருக்கி மற்றும் வகுக்க வேண்டும்.
\(= \frac { 1 }{ 4 } \times \frac { 15 }{15 } =\frac { 15 }{ 60 } \)
எனவே , புதிய இலாபப் பகிர்வு விகிதம்
\(= \frac { 31 }{ 60 } : \frac { 14 }{ 60 } : \frac { 15 }{ 60 } \) = 31:14:15
7.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2019 | கவிதா முதல் க/கு (4/7) | ப | 40,000 | ||
| ஜனவரி 1 | இராதா முதல் க/கு (3/7) | ப | 30,000 | ||
| இலாப நட்ட க/கு | 70,000 | ||||
| (பகிர்ந்து தரா நட்டம் பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குக்கு பழைய இலாபவிகிதத்தில் மாற்றப்பட்டது) |
8.
கூட்டாளி சேர்க்கையின்போது நற்பெயருக்கான கணக்கியல் செயல்முறைகள் கீழே விவாதிக்கப்பட்டுள்ளது
(i) புதிய கூட்டாளி நற்பெயருக்கான ரொக்கம் அல்லது சொத்து கொண்டு வரும் போது
(ii) புதிய கூட்டாளி நற்பெயருக்கான ரொக்கம் அல்லது சொத்து ஏதும் கொண்டு வராத போது
(iii) புதிய கூட்டாளி நற்பெயருக்கான ஒரு பகுதியை மட்டும் ரொக்கம் அல்லது சொத்துக்களாக கொண்டு வரும் போது
(iv) பழைய நற்பெயர்
(i) புதிய கூட்டாளி நற்பெயருக்கான ரொக்கம் அல்லது சொத்து கொண்டு வரும் போது:
புதிய கூட்டாளி முதல் தொகையோடு, கூடுதலாக நற்பெயருக்காகவும் பணம் கொண்டுவரும் போது, அது பழைய கூட்டாளிகளின் தியாக விகிதத்தின்படி அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
(ii) புதிய கூட்டாளி நற்பெயருக்கான ரொக்கம் அல்லது சொத்து ஏதும் கொண்டு வராத போது:
புதிய கூட்டாளி நற்பெயருக்காக பணம் அல்லது சொத்துக்கள் ஏதும் கொண்டு வராத போது, அவருடைய நற்பெயருக்கான பங்கினை கூட்டாளிகளின் முதல் கணக்கில் சரிக்கட்ட வேண்டும்
(iii) புதிய கூட்டாளி நற்பெயருக்கான ஒரு பகுதியை மட்டும் ரொக்கம் அல்லது சொத்துக்களாக கொண்டு வரும் போது:
சில நேரங்களில் புதிய கூட்டாளி நற்பெயருக்கென ஒரு பகுதியை மட்டும் ரொக்கம் அல்லது சொத்துக்களாகக் கொண்டு வருவதுண்டு, அந்நிலைகளில், ரொக்கம் அல்லது சொத்துக்கள் குறிப்பிட்ட கணக்கில் பற்று வைக்கப்படுகிறது. கொண்டு வராத தொகை புதிய கூட்டாளியின் முதல் கணக்கில் பற்று செய்யப்படுகிறது. இத்தொகையானது பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது
(iv) பழைய நற்பெயர்:
நற்பெயர் ஏற்கனவே கணக்கேடுகளில் இருந்தால், கூட்டாளி சேர்க்கையின் போது கூட்டாளிகள் முடிவெடுத்தால் அதனை போக்கெழுத பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கில் அல்லது நடப்புக் கணக்கில் பழைய இலாப விகிதத்தில் மாற்றிட வேண்டும்.
9.
ஒரு புதிய கூட்டாளியை சேர்க்கும் போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்ய வேண்டும்.
(i) பகிர்ந்து தரா இலாபம், காப்பு மற்றும் நட்டம் ஆகியவற்றை பகிர்ந்தளித்தல்
(ii) சொத்துக்களையும் பொறுப்புகளையும் மறுமதிப்பீடு செய்தல்.
(iii) புதிய இலாபவிகிதம் மற்றும் தியாகவிகிதத்தை நிர்ணயித்தல்.
(iv) நற்பெயர் சரிக்கட்டுதல்
(v) முதல் கணக்கை புதிய இலாபவிகிதத்தின் அடிப்படையில் சரிக்கட்டுதல் (ஒப்புக்கொண்டால்)
10.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| கட்டடம் க/கு | ப | 15,000 | |||
| மறுமதிப்பீட்டு க/கு | 15,000 | ||||
| (கட்டடத்தின் மதிப்பு உயர்த்துவது பதிவு செய்யப்பட்டது) | |||||
| மறுமதிப்பீட்டு க/கு | ப | 5,000 | |||
| இயந்திரம் க/கு | 4,000 | ||||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | ||||
| (இயந்திரத்தின் மதிப்பு குறைப்பது மற்றும் ஒதுக்கு பதிவு செய்யப்பட்டது) | |||||
| மறுமதிப்பீட்டு | ப | 10,000 | |||
| இராஜேஷ் முதல் க/கு | 6,000 | ||||
| இரமேஷ் முதல் க/கு | 4,000 | ||||
| (மறுமதிப்பீட்டு இலாபம் பகிர்ந்தளித்தது) |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 4,000 | 15,000 | ||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| இராஜேஷ் முதல் க/கு (3/5) | 6,000 | |||
| இரமேஷ் முதல் க/கு (2/5) | 4,000 | 10,000 | ||
| 15,000 | 15,000 |
11.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| கடனாளிகள் க/கு | 2,000 | கட்டடம் க/கு | 10,000 | |
| மறுமதிப்பீட்டு இலாபம்: | சரக்கிருப்பு க/கு | 3,000 | ||
| ஜேம்ஸ் முதல் க/கு (1/2) | 5,500 | |||
| ஜஸ்டினா முதல் க/கு (1/2) | 5,500 | 11,000 | ||
| 13,000 | 13,000 |
| விவரம் | ஜேம்ஸ் ரூ. |
ஜஸ்டினா ரூ. |
பாலன் ரூ. |
விவரம் | ஜேம்ஸ் ரூ. |
ஜஸ்டினா ரூ. |
பாலன் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/இ | 58,000 | 68,000 | 25,000 | இருப்பு கீ/கொ | 40,000 | 50,000 | - |
| காப்பு நிதி க/கு | 7,500 | 7,500 | - | ||||
| வங்கி க/கு | - | - | 25,000 | ||||
| மறுமதிப்பீட்டு க/கு | 5,500 | 5,500 | - | ||||
| வங்கி க/கு (நற்பெயர் பங்கு) |
5,000 | 5,000 | - | ||||
| 58,000 | 68,000 | 25,000 | 58,000 | 68,000 | 25,000 | ||
| இருப்பு கீ/கொ | 58,000 | 68,000 | 25,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 15,000 | இருப்பு கீ/இ | 50,000 |
| பாலன் முதல் க/கு | 25,000 | ||
| ஜேம்ஸ் முதல் க/கு | 5,000 | ||
| ஜஸ்டினா முதல் க/கு | 5,000 | ||
| 50,000 | 50,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துக்கள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 70,000 | |||
| ஜேம்ஸ் | 58,000 | கூட்டுக: மதிப்பேற்றம் | 10,000 | 80,000 | |
| ஜஸ்டினா | 68,000 | சரக்கிருப்பு | 30,000 | ||
| பாலன் | 25,000 | 1,51,000 | கூட்டுக: மதிப்பேற்றம் | 3,000 | 33,000 |
| கடனீந்தோர் | 35,000 | கடனாளிகள் | 20,000 | ||
| கழிக்க: மதிப்பு குறைவு | 2,000 | 18,000 | |||
| வங்கி ரொக்கம் | 50,000 | ||||
| 1,86,000 | 1,86,000 |
12.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| அறைகலன் க/கு | 2,000 | சரக்கிருப்பு க/கு | 4,000 | |
| மறுமதிப்பீட்டு இலாபம் | இயந்திரம் க/கு | 20,000 | ||
| அமீர் முதல் க/கு (3/5) | 13,200 | |||
| இராஜா முதல் க/கு (2/5) | 8,800 | 22,000 | ||
| 24,000 | 24,000 |
| விவரம் | வெற்றி ரூ. | இரஞ்சித் ரூ. | சூரியா ரூ. | விவரம் | வெற்றி ரூ. | இரஞ்சித் ரூ | சூரியா ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/இ | 1,08,200 | 88,800 | 30,000 | இருப்பு கீ/கொ | 80,000 | 70,000 | - |
| வங்கி க/கு | - | - | 30,000 | ||||
| காப்பு நிதி க/கு | 9,000 | 6,000 | - | ||||
| மறுமதிப்பீட்டு க/கு | 13,200 | 8,800 | - | ||||
| வங்கி க/கு (நற்பெயர் பங்கு) | 6,000 | 4,000 | - | ||||
| 1,08,200 | 88,800 | 30,000 | 1,08,200 | 88,800 | 30,000 | ||
| இருப்பு கீ/கொ | 1,08,200 | 88,800 | 30,000 |
தியாக விகிதம் கொடுக்கப்படாமல் ஆனால், புதிய கூட்டாளியின் இலாபவிகிதம் கொடுக்கப்பட்டிருந்தால், பழைய இலாப விகிதத்தை (3:2) தியாக விகிதமாகக் கொண்டு புதிய கூட்டாளியின் நற்பெயரை பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
| விவரம் | விவரம் | ரூ. | நாள் | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 20,000 | இருப்பு கீ/இ | 60,000 | ||
| ரோஹித் முதல் க/கு | 30,000 | ||||
| அமீர் முதல் க/கு | 6,000 | ||||
| இராஜா முதல் க/கு | 4,000 | ||||
| 60,000 | 60,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | இயந்திரம் | 60,000 | |||
| அமீர் | 1,08,200 | கூட்டுக: மதிப்பேற்றம் | 20,000 | 80,000 | |
| இராஜா | 88,800 | அறைகலன் | 40,000 | ||
| ரோஹித் | 30,000 | 2,27,000 | கழிக்க: தேய்மானம் | 2,000 | 38,000 |
| கடனீதோர் | 35,000 | கடனாளிகள் | 30,000 | ||
| சரக்கிருப்பு | 10,000 | ||||
| கூட்டுக: மதிப்பேற்றம் | 4,000 | 14,000 | |||
| முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு |
40,000 | ||||
| வங்கி ரொக்கம் | 60,000 | ||||
| 2,62,000 | 2,62,000 |
13.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 2,000 | அறைகலன் க/கு | 15,000 | |
| கடனாளிகள் க/கு | 2,500 | |||
| கொடுபட வேண்டிய கூலி க/கு | 4,500 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| வெற்றி முதல் க/கு (3/5) | 3,600 | |||
| இரஞ்சித் முதல் க/கு (2 | 2,400 | 6,000 | ||
| 15,000 | 15,000 |
| விவரம் | வெற்றி ரூ. | இரஞ்சித் ரூ. | சூரியா ரூ. | விவரம் | வெற்றி ரூ. | இரஞ்சித் ரூ | சூரியா ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இலாப நட்ட க/ கு | 6,000 | 4,000 | - | இருப்பு கீ/கொ | 30,000 | 20,000 | - |
| இருப்பு கீ/இ | 30,600 | 20,400 | 10,000 | காப்பு நிதி க/கு | 3,000 | 2,000 | - |
| ரொக்கக் க/கு | - | - | 10,000 | ||||
| மறுமதிப்பீடு க/கு | 3,600 | 2,400 | - | ||||
| 36,600 | 24,400 | 10,000 | 36,600 | 24,400 | 10,000 | ||
| இருப்பு கீ/கொ | 30,600 | 20,400 | 10,000 |
01-01-2018 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் க/கு | அறைகலன் | 25,000 | |||
| வெற்றி | 36,000 | கூட்டுக: மதிப்பேற்றம் | 15,000 | 40,000 | |
| இரஞ்சித் | 20,400 | சரக்கிருப்பு | 20,000 | ||
| சூரியா | 10,000 | 61,000 | கழிக்க: மதிப்பு குறைப்பு | 2,000 | 18,000 |
| கொடுக்கப்பட வேண்டிய கூலி | 4,500 | கடனாளிகள் | 10,000 | ||
| பற்பல கடனாளிகள் | 45,000 | கழிக்க: மதிப்பு குறைப்பு | 2,500 | 7,500 | |
| கை ரொக்கம் | 35,000 | ||||
| கூட்டுக: சூரியாவின் முதல் | 45,000 | ||||
| 1,10,500 | 1,10,500 |
14.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 3,000 | நிலம் க/கு | 10,000 | |
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 2,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| ஆனந்த் முதல் க/கு (7/10) | 3,500 | |||
| பாலு முதல் க/கு (3/10) | 1,500 | 5,000 | ||
| 10,000 | 10,000 |
| விவரம் | ஆனந்த் ரூ. | பாலு ரூ. | சந்துரு ரூ. | விவரம் | ஆனந்த் ரூ. | பாலு ரூ | சந்துரு ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/இ | 74,500 | 40,500 | 20,000 | இருப்பு கீ/கொ | 50,000 | 30,000 | |
| வங்கி க/கு | - | - | 20,000 | ||||
| மறுமதிப்பீட்டு க/கு | 3,500 | 1,500 | - | ||||
| இலாப நட்ட க/கு | 21,000 | 9,000 | - | ||||
| 74,500 | 40,500 | 20,000 | 74,500 | 40,500 | 20,000 | ||
| இருப்பு கீ/கொ | 74,500 | 40,500 | 20,000 |
15.
(d)
1:2
16.
(c)
17.
(d)
ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது
18.
(b)
தியாக விகிதம்
19.
(b)
பெயரளவு க/கு
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards