12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/11/2020
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வரும் வட்டங்களுக்கு மையத்தையும் ஆரத்தையும் காண்க
2x2 + 2y2 - 6x + 4y + 2 = 0
2.
பின்வரும் வட்டங்களுக்கு மையத்தையும் ஆரத்தையும் காண்க
x2+ y2+ 6x - 4y + 4 = 0
3.
பின்வரும் சமன்பாடுகளிலிருந்து அவற்றின் கூம்பு வளைவு வகையை கண்டறிக.
y2 + 4x + 3y + 4 = 0
4.
பின்வரும் சமன்பாடுகளிலிருந்து அவற்றின் கூம்பு வளைவு வகையை கண்டறிக.
3x2+3y2−4x+3y+10 = 0
5.
குவியங்கள் (±2, 0), மற்றும் முனைகள் (±3, 0) உடைய நீள்வட்டத்தின் சமன்பாடு காண்க.
6.
பரவளையம் y2 = 4ax-ன் செவ்வகல நீளம் காண்க.
7.
பின்வரும் வட்டங்களுக்கு மையத்தையும் ஆரத்தையும் காண்க.
x2+(y+2)2 = 0
8.
(3, 4) மற்றும் (2, -7) என்ற புள்ளிகளை விட்டத்தின் முனைப்புள்ளிகளாகக் கொண்ட வட்டத்தின் சமன்பாட்டைப் பெறுக.
9.
(2,-1) என்ற புள்ளியை மையமாகவும், (3, 6) என்ற புள்ளி வழிச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு காண்க.
10.
11.
ஒரு வட்டத்தின் சமன்பாடு 3x2 + (a +1) y2 + 6x − 9y + a + 4 = 0 எனில் அதன் மையம், ஆரம் காண்க.
12.
(-4,-2) மற்றும் (1,1) என்ற புள்ளிகளை விட்டத்தின் முனைகளாகக் கொண்ட வட்டத்தின் பொதுச் சமன்பாடு காண்க.
13.
பின்வரும் சமன்பாடுகளின் கூம்பு வளைவின் வகையைக் கண்டறிந்து அவற்றின் மையம், குவியங்கள், முனைகள் மற்றும் இயக்குவரைகளைக் காண்க :
9x2-y2-36x+6y+18 = 0
14.
பின்வரும் சமன்பாடுகளின் கூம்பு வளைவின் வகையைக் கண்டறிந்து அவற்றின் மையம், குவியங்கள், முனைகள் மற்றும் இயக்குவரைகளைக் காண்க :
\(\frac { { (x+3) }^{ 2 } }{ 225 } -\frac { { (y-4) }^{ 2 } }{ 64 } =1\)
15.
பின்வரும் சமன்பாடுகளின் கூம்பு வளைவின் வகையைக் கண்டறிந்து அவற்றின் மையம், குவியங்கள், முனைகள் மற்றும் இயக்குவரைகளைக் காண்க :
\(\frac { { (x+1) }^{ 2 } }{ 100 } +\frac { { (y-2) }^{ 2 } }{ 64 } =1\)
16.
பின்வருவனவற்றிற்கான முனை, குவியம், இயக்குவரையின் சமன்பாடு மற்றும் செவ்வகல நீளம் காண்க:
y2-4y-8x+12 = 0
17.
ஒரு ராக்கெட் வெடியானது கொளுத்தும்போது அது ஒரு பரவளையப் பாதையில் செல்கிறது. அதன் உச்ச உயரம் 4மீ-ஐ எட்டும்போது அது கொளுத்தப்பட்ட இடத்திலிருந்து கிடைமட்டத் தூரம் 6மீ தொலைவிலுள்ளது. இறுதியாக கிடைமட்டமாக 12மீ தொலைவில் தரையை வந்தடைகிறது. எனில் புறப்பட்ட இடத்தில் தரையுடன் ஏற்படுத்தப்படும் எறிகோணம் காண்க.
18.
தரைமட்டத்திலிருந்து 7.5மீ உயரத்தில் தரைக்கு இணையாகப் பொருத்தப்பட்ட ஒரு குழாயிலிருந்து வெளியேறும் நீர் தரையைத் தொடும் பாதை ஒரு பரவளையத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இந்தப் பரவளையப் பாதையின் முனை குழாயின் வாயில் அமைகிறது. குழாய் மட்டத்திற்கு 2.5மீ கீழே நீரின் பாய்வானது குழாயின் முனை வழியாகச் செல்லும் நிலை குத்துக் கோட்டிற்கு 3மீ தூரத்தில் உள்ளது. எனில் குத்துக் கோட்டிலிருந்து எவ்வளவு தூரத்திற்கு அப்பால் நீரானது தரையில் விழும் என்பதைக் காண்க.
19.
ஒரு அணு உலை குளிரூட்டும் தூணின் குறுக்கு வெட்டு அதிபரவளைய வடிவில் உள்ளது. மேலும் அதன் சமன்பாடு \(\frac { { x }^{ 2 } }{ { 30 }^{ 2 } } -\frac { { y }^{ 2 } }{ { 44 }^{ 2 } } =\)1. தூண் 150மீ உயரமுடையது. மேலும் அதிபரவளையத்தின் மையத்திலிருந்து தூணின் மேல்பகுதிக்கான தூரம் மையத்திலிருந்து அடிப்பகுதிக்கு உள்ள தூரத்தில் பாதியாக உள்ளது. தூணின் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதியின் விட்டங்களைக் காண்க.

20.
ஒரு தொங்கு பாலத்தின் 60மீ சாலைப்பகுதிக்கு பரவளைய கம்பி வடம் படத்தில் உள்ளவாறு பொறுத்தப்பட்டுள்ளது. செங்குத்துக் கம்பி வடங்கள் சாலைப்பகுதியில் ஒவ்வொன்றுக்கும் 6மீ இடைவெளி இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. முனையிலிருந்து முதல் இரண்டு செங்குத்து கம்பி வடங்களுக்கான நீளத்தைக் காண்க.

21.
ஒரு நான்கு வழிச்சாலைக்கான மலை வழியே செல்லும் சுரங்கப்பாதையின் முகப்பு ஒரு நீள்வட்ட வடிவமாக உள்ளது. நெடுஞ்சாலையின் மொத்த அகலம் (முகப்பு அல்ல) 16மீ. சாலையின் விளிம்பில் சுரங்கப்பாதையின் உயரம், 4மீ உயரமுள்ள சரக்கு வாகனம் செல்வதற்குத் தேவையான அளவிற்கும் முகப்பின் அதிகபட்ச உயரம் 5மீ ஆகவும் இருக்க வேண்டுமெனில் சுரங்கப்பாதையின் திறப்பின் அகலம் என்னவாக இருக்க வேண்டும்?
22.
சூரியனிலிருந்து பூமியின் அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச தூரங்கள் முறையே 152 × 106கி.மீ மற்றும் 94.5 × 106 கி.மீ. நீள்வட்டப் பாதையின் ஒரு குவியத்தில் சூரியன் உள்ளது. சூரியனுக்கும் மற்றொரு குவியத்திற்குமான தூரம் காண்க.
23.
ஒருவழிப்பாதையில் உள்ள அரை நீள்வட்ட வளைவின் உயரம் 3 மீ மற்றும் அகலம் 12 மீ. ஒரு சரக்கு வாகனத்தின் அகலம் 3 மீ மற்றும் உயரம் 2.7 மீ எனில் இந்த வாகனம் வளைவின் வழி செல்ல முடியுமா?
24.
y2 = 4ax என்ற பரவளையத்திற்கு ‘ t1 ’ மற்றும் ‘ t2 ’ ஆகிய புள்ளிகளில் அமையும் தொடுகோடுகள் \(\left[ at_{ 1 }t_{ 2 },a({ t }_{ 1 }+{ t }_{ 2 }) \right] .\) என்ற புள்ளியில் சந்திக்கின்றன என நிறுவுக.
25.
(5, 2) என்ற புள்ளியிலிருந்து 2x2+7y2 = 14 என்ற நீள்வட்டத்திற்கு வரையப்படும் தொடுகோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.
26.
\(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) என்ற அதிபரவளையத்தின் செவ்வகல நீளம் \(\frac { 2{ b }^{ 2 } }{ a } \) என நிறுவுக.
27.
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் பரவளையத்தின் சமன்பாடு காண்க:
(i) குவியம் (4, 0) மற்றும் இயக்குவரை x = −4.
(ii) y-அச்சுக்கு சமச்சீரானது மற்றும் (2, -3) வழிச்செல்வது.
(iii) முனை (1, - 2) மற்றும் குவியம் (4, -2).
(iv) செவ்வகலத்தின் முனைகள் (4, -8) மற்றும் (4, 8).
28.
11x2 − 25y2 − 44x + 50y − 256 = 0 என்ற அதிபரவளையத்தின் மையம், குவியங்கள் மற்றும் மையத் தொலைத்தகவு காண்க.
29.
4x2 + 36y2 + 40x − 288y + 532 = 0 என்ற கூம்பு வளைவின் குவியங்கள், முனைகள் மற்றும் அதன் நெட்டச்சு, குற்றச்சு நீளங்களைக் காண்க.
30.
மையத்தொலைத்தகவு \(\frac{1}{2}\), குவியங்களில் ஒன்று (2, 3) மற்றும் ஒரு இயக்குவரை x = 7 உடைய நீள் வட்டத்தின் சமன்பாடு காண்க. மேலும் நெட்டச்சு, குற்றச்சு நீளங்களைக் காண்க.
31.
(1, 0), (-1, 0), மற்றும் (0, 1) என்ற புள்ளிகள் வழிச்செல்லும் வட்டத்தின் சமன்பாடு காண்க.
32.
பாசன வாய்க்கால் மீது அமைந்த சாலையில் 20மீ அகலமுடைய இரண்டு அரைவட்ட வளைவு நீர்வழிகள் அமைக்கப்பட்டன. அவற்றின் துணைத்தூண்களின் அகலம் 2 மீ. படம் -ஐப் பயன்படுத்தி அந்த வளைவுகளின் மாதிரிக்கான சமன்பாடுகளைக் காண்க.

33.
12x2−9y2 = 108 என்ற அதிபரவளையத்திற்கு \(\theta =\frac { \pi }{ 3 } \)-இல் தொடுகோடு மற்றும் செங்கோட்டுச் சமன்பாடுகளைக் காண்க. (குறிப்பு : துணையலகு வடிவத்தைப் பயன்படுத்துக)
34.
(-2, 1), (0, 0) மற்றும் (-4, -3) என்ற புள்ளிகள் x2 + y2 − 5x + 2y − 5 = 0 என்ற வட்டத்திற்கு வெளியே, வட்டத்தின் மீது அல்லது உள்ளே இவற்றில் எங்கே உள்ளன எனத் தீர்மானிக்கவும்.
35.
x2 − (a + b)x − 4 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் மதிப்புகள் m-ன் மதிப்புகளாக இருக்கும்போது y = mx + \(2\sqrt { 5 } \) என்ற நேர்க்கோடு 16x2 − 9y2 = 144 என்ற அதிபரவளையத்தைத் தொட்டுச் செல்கின்றது எனில் (a + b)-ன் மதிப்பு _______.
2
4
0
-2
36.
(-2, 0) - இலிருந்து ஒரு நகரும் புள்ளிக்கான தூரம் அந்தப் புள்ளிக்கும் நேர்க்கோடு x = \(\frac { -9 }{ 2 } \) - க்கும் இடையேயான தூரத்தைப் போல் \(\frac { 2 }{ 3 } \) மடங்கு உள்ளது எனில் அந்தப் புள்ளியின் நியமப்பாதை _______.
பரவளையம்
அதிபரவளையம்
நீள்வட்டம்
வட்டம்
37.
P என்ற புள்ளியிலிருந்து y2 = 4x என்ற பரவளையத்திற்கு வரையப்படும் இரு தொடுகோடுகளுக்கிடையேயான கோணம் செங்கோணம் எனில் P-ன் நியமப்பாதை _______.
2x + 1 = 0
x = −1
2x − 1 = 0
x = 1
38.
(x−3)2 + (y−4)2 = \(\frac { { y }^{ 2 } }{ 9 } \) என்ற நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு _______.
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(\frac { 1 }{ 3 } \)
\(\frac { 1 }{ 3\sqrt { 2 } } \)
\(\frac { 1 }{ \sqrt { 3 } } \)
39.
40.
\(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1 \) என்ற நீள்வட்டத்தினுள் வரையப்படும் மிகப்பெரிய செவ்வகத்தின் பரப்பு _______.
2ab
ab
\( \sqrt{ ab}\)
\(\frac { a }{ b } \)
41.
மையம் ஆதிப்புள்ளியாகவும் நெட்டச்சு x-அச்சாகவும் உள்ள நீள்வட்டத்தைக் கருத்தில் கொள்க. அதன் மையத்தொலைத் தகவு \(\frac {3}{5}\) மற்றும் குவியங்களுக்கிடையே உள்ள தூரம் 6 எனில் அந்த நீள்வட்டத்தின் உள்ளே நெட்டச்சு மற்றும் குற்றச்சுகளை மூலைவிட்டங்களாகக் கொண்டு வரையப்படும் நாற்கரத்தின் பரப்பு _______.
8
32
80
40
42.
C என்ற வட்டத்தின் மையம் (1, 1) மற்றும் ஆரம் 1 அலகு என்க. T என்ற வட்டத்தின் மையம் (0, y) ஆகவும் ஆதிப்புள்ளி வழியாகவும் உள்ளது. மேலும் C என்ற வட்டத்தை வெளிப்புறமாகத் தொட்டுச் செல்கிறது எனில் வட்டம் T -ன் ஆரம் _______.
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(\frac { \sqrt { 3 } }{ \sqrt { 2 } } \)
\(\frac { 1 }{ 2 } \)
\(\frac { 1 }{ 4 } \)
43.
\(\frac { { x }^{ 2 } }{ 16 } +\frac { { y }^{ 2 } }{ 9 } =1\) என்ற நீள்வட்டத்தின் குவியங்கள் வழியாகவும் (0, 3) என்ற புள்ளியை மையமாகவும் கொண்ட நீள்வட்டத்தின் சமன்பாடு _______.
x2 + y2 − 6y − 7 = 0
x2 + y2 − 6y + 7 = 0
x2 + y2 − 6y − 5 = 0
x2 + y2 − 6y + 5 = 0
44.
2x − y = 1 என்ற கோட்டிற்கு இணையாக \(\frac { { x }^{ 2 } }{ 9 } +\frac { { y }^{ 2 } }{ 4 } =1\) என்ற நீள்வட்டத்திற்கு தொடுகோடுகள் வரையப்பட்டால் தொடுபுள்ளிகளில் ஒன்று _______.
(\(\frac { 9 }{ 2\sqrt { 2 } } ,\frac { -1 }{ \sqrt { 2 } } \))
(\(\frac { -9 }{ 2\sqrt { 2 } } ,\frac { 1 }{ \sqrt { 2 } } \))
(\(\frac { 9 }{ 2\sqrt { 2 } } ,\frac { 1 }{ \sqrt { 2 } } \))
\(\left( 3\sqrt { 3 } ,-2\sqrt { 2 } \right) \)
45.
நீள்வட்டம் E1: \(\frac { { x }^{ 2 } }{ 9 } +\frac { { y }^{ 2 } }{ 4 } =1\) செவ்வகம் R-க்குள் செவ்வகத்தின் பக்கங்கள் நீள்வட்டத்தின் அச்சுகளுக்கு இணையாக இருக்குமாறு அமைந்துள்ளன. அந்த செவ்வகத்தின் சுற்றுவட்டமாக அமைந்த மற்றொரு நீள்வட்டம் E2, (0, 4) என்ற புள்ளி வழியாகச் செல்கிறது எனில் அந்த நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு _______.
\(\frac { \sqrt { 2 } }{ 2 } \)
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(\frac { 1 }{ 2 } \)
\(\frac { 3 }{ 4 } \)
46.
x + y = k என்ற நேர்க்கோடு பரவளையம் y2 = 12x -இன் செங்கோட்டுச் சமன்பாடாக உள்ளது எனில் k-ன் மதிப்பு _______.
3
-1
1
9
47.
y2 = 4x என்ற பரவளையத்தின் செவ்வகல முனைகளில் வரையப்பட்ட செங்குத்துக் கோடுகள் (x−3)2+(y+2)2 = r2 என்ற வட்டத்தின் தொடுகோடுகள் எனில் r2 -ன் மதிப்பு _______.
2
3
1
4
48.
\(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) மற்றும் \(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =-1\) என்ற அதிபரவளையங்களின் குவியங்கள் ஒரு நாற்கரத்தின் முனைகள் எனில் அந்த நாற்கரத்தின் பரப்பு _______.
4(a2+b2)
2(a2+b2)
a2 +b2
\(\frac { 1 }{ 2 } \)(a2+b2)
49.
P(x, y) என்ற புள்ளி குவியங்கள் F1 (3, 0) மற்றும் F2 (-3, 0) கொண்ட கூம்பு வளைவு 16x2 + 25y2 = 400-ன் மீதுள்ள புள்ளி எனில் PF1 + PF2 -ன் மதிப்பு _______.
8
6
10
12
50.
நேர்க்கோடு 2x + 4y = 3-க்கு இணையாக x2 + y2 − 2x − 2y + 1 = 0 என்ற வட்டத்தின் செங்கோட்டுச் சமன்பாடு _______.
x + 2y = 3
x + 2y + 3 = 0
2x + 4y + 3 = 0
x − 2y + 3 = 0
51.
3x2 + by2 + 4bx − 6by + b2 = 0 என்ற வட்டத்தின் ஆரம் _______.
1
3
\(\sqrt{10}\)
\(\sqrt{11}\)
52.
x-அச்சை (1, 0) என்ற புள்ளியில் தொட்டுச் செல்வதும் (2, 3) என்ற புள்ளிவழிச் செல்வதுமான வட்டத்தின் விட்டம் _______.
\(\frac { 6 }{ 5 } \)
\(\frac { 5 }{ 3 } \)
\(\frac { 10 }{ 3 } \)
\(\frac { 3 }{ 5 } \)
53.
செவ்வகல நீளம் 8 அலகுகள் மற்றும் துணையச்சின் நீளம் குவியங்களுக்கிடையே உள்ள தூரத்தில் பாதி உள்ள அதிபரவளையத்தின் மையத்தொலைத் தகவு _______.
\(\frac { 4 }{ 3 } \)
\(\frac { 4 }{ \sqrt { 3 } } \)
\(\frac { 2 }{ \sqrt { 3 } } \)
\(\frac { 3 }{ 2 } \)
54.
(1, 5) மற்றும் (4, 1) என்ற புள்ளிகள் வழிச் செல்வதும் y-அச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு x2 + y2 − 5x − 6y + 9 + λ(4x + 3y − 19) = 0 எனில் λ-ன் மதிப்பு _______.
\(0,-\frac { 40 }{ 9 } \)
0
\(\frac { 40 }{ 9 } \)
\(\frac { -40 }{ 9 } \)
1.
வட்டத்தின் சமன்பாடு
2x2 + 2y2 - 6x + 4y + 2 = 0
2 ஆல் வகுக்க கிடைப்பது
x2 + y2 - 3x + 2y + 1 = 0
இங்கு \(2g=-3\Rightarrow g=\cfrac { -3 }{ 2 } \)
\(2f=2\Rightarrow f=1\)
மற்றும் c = 1
\(\therefore\) மையம் \(\left( -g,-f \right) =\left( \cfrac { 3 }{ 2 } ,-1 \right) \)
மற்றும் \(r=\sqrt { { g }^{ 2 }+{ f }^{ 2 }-c } =\sqrt { \left( \cfrac { 3 }{ 2 } \right) ^{ 2 }+{ 1 }^{ 2 }-1 } \)
= \(\sqrt { \cfrac { 9 }{ 4 } } =\sqrt { \cfrac { 3 }{ 2 } } \) அலகுகள்
2.
வட்டத்தின் சமன்பாடு
x2+y2+6x-4y+4 = 0
இங்கு 2g = 6 \(\Rightarrow\) g = 3
2f = -4
\(\Rightarrow\) f = -2 மற்றும் c = 4
மற்றும் (-g, -f) \(\Rightarrow\) (-3, 2)
\(r=\sqrt { { g }^{ 2 }+{ f }^{ 2 }-c } =\sqrt { { 3 }^{ 2 }+{ \left( -2 \right) }^{ 2 }-4 } \)
= \(\sqrt { 9+4-4 } \)
= \(\sqrt { 9 } \)
= 3 அலகுகள்
3.
இங்கு A = 0, C = 1, D = 4, E = 3, F = 4
B = 0 மற்றும் A அல்லது C ஆனது 0 ஆகும்.
ஆகையால் கொடுக்கப்பட்ட சமன்பாடு பரவளையத்தை குறிக்கிறது.
4.
இங்கு A = 3, C = 3, D = -4, E = 3 மற்றும் F = 10
இங்கு A = C மற்றும் xy உறுப்பு இல்லை ஆகையால் கொடுக்கப்பட்ட சமன்பாடு வட்டத்தை குறிக்கிறது.
5.

SS' = 2c மற்றும் 2c = 4; A'A = 2a = 6
\(\Rightarrow \) c = 2 மற்றும் a = 3,
\(\Rightarrow \) b2 = a2 - c2 = 9 - 4 = 5.
நெட்டச்சு x-அச்சு, a > b
மையம் (0, 0) மற்றும் குவியம் (±2, 0).
எனவே நீள் வட்டத்தின் சமன்பாடு \(\frac { { x }^{ 2 } }{ 9 } +\frac { { y }^{ 2 } }{ 5 } =1.\)
6.
பரவளையத்தின் சமன்பாடு y2 = 4ax
செவ்வகலம் LL' குவியம் (a, 0) வழிச் செல்கின்றது.
எனவே L என்பது (a, y1)ஆகும்.
அதனால் y12 = 4a2.
எனவே y1 = ±2a
செவ்வகலத்தின் முனைப்புள்ளிகள் (a, 2a) மற்றும் (a, -2a) ஆகும்.
எனவே செவ்வகலத்தின் நீளம் LL' = 4a.
7.
வட்டத்தின் சமன்பாடு x2+(y+2)2 = 0
(x-h)2+(y-k)2 = r2
h = 0, k = -2, r2 = 0
மையம்(0, -2) மற்றும் ஆரம் 0
8.
கொடுக்கப்பட்ட விட்டத்தின் முனைகள் (3, 4) (2, -7)
\(\therefore\) வட்டத்தின் சமன்பாடு
\(\Rightarrow\) (x-x1)(x-x2)+(y-y1)(y-y2) = 0
\(\Rightarrow\) (x-3)(x-2)+(y+4)(y+7) = 0
\(\Rightarrow\) x2-2x-3x+6+y2+7y-4y-28 = 0
\(\Rightarrow\) x2+y2-5x+3y-22 = 0
9.

கொடுக்கப்பட்ட (2, -1) மையம் மற்றும்(3,6) புள்ளி வழிச் செல்கிறது.
\(\therefore\) r = இடைப்பட்ட தோற்றம் (2, -1) மற்றும் (3, 6) புள்ளி வழிச் செல்கிறது
= \(\sqrt { \left( 2-3 \right) ^{ 2 }+\left( -1-6 \right) ^{ 2 } } \)
= \(\sqrt { \left( -1 \right) ^{ 2 }+\left( -7 \right) ^{ 2 } } \)
= \(\sqrt { 1+49 } =\sqrt { 50 } \)
\(\therefore\) வட்டத்தின் சமன்பாடு
(x - h)2 + (y - k)2 = r2
\(\left( x-2 \right) ^{ 2 }+\left( y+1 \right) ^{ 2 }=\left( \sqrt { 50 } \right) ^{ 2 }\)
\(\Rightarrow\) (x - 2)2 + (y + 1)2 = 50
10.
11.
x2-ன் கெழு = y2-ன் கெழு (இருபடிச் சமன்பாட்டின் பண்பு (ii)-ன் படி) ஆதலால் 3 = a+1, a = 2 எனக்கிடைக்கின்றது. எனவே வட்டத்தின் சமன்பாடு
3x2 + 3y2 + 6x − 9y + 6 = 0
x2 + y2 + 2x − 3y + 2 = 0
மையம் \(\left( -1,\frac { 3 }{ 2 } \right) \) மற்றும் ஆரம் \(r=\sqrt { 1+\frac { 9 }{ 4 } -2 } =\frac { \sqrt { 5 } }{ 2 } .\)
12.
தேற்றம் - ன் படி : ஒரு வட்டத்தின் விட்டத்தின் முனைப்புள்ளிகள் (x1, y1) மற்றும் (x2, y2) எனில் அந்த வட்டத்தின் சமன்பாடு (x − x1 )(x − x2 ) + ( y − y1 )( y − y2 ) = 0 ஆகும்
(x1, y1) மற்றும் (x2, y2) என்ற புள்ளிகளை விட்டத்தின் முனைகளாகக் கொண்ட வட்டத்தின் சமன்பாடு (x − x1) (x − x2) + (y − y1) (y − y2) = 0
\(\Rightarrow \) (x + 4)(x −1) + ( y + 2)( y −1) = 0
எனவே தேவையான வட்டத்தின் சமன்பாடு x2 + y2 + 3x + y − 6 = 0
13.
9x2-y2-36x-6y+18 = 0
\(\Rightarrow\) 9x2-36x(y2-6y) = -18
\(\Rightarrow\) 9(x2-4x)(y2+6y) = -18
\(\Rightarrow\) 9(x2-4x+4-4)-(y2+6y+9-9) = -18
\(\Rightarrow\) 9(x-2)2-36-(y+3)2+9 = -18
\(\Rightarrow\) 9(x-2)2-(y+3)2 = -18+36-9
\(\Rightarrow\) 9(x-2)2-(y+3)2 = 9
9 ஆல் வகுக்க கிடைப்பது
துணை அச்சு x-அச்சுக்கு இணையான அதிபரவளையத்தின் சமன்பாடு
a2 = 1, b2 = 9
\(\therefore { c }^{ 2 }={ a }^{ 2 }+{ b }^{ 2 }=1+9=10\Rightarrow c=\sqrt { 10 } \)
\(e=\sqrt { 1+\cfrac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } } =\sqrt { 1+\cfrac { 9 }{ 1 } } =\sqrt { 10 } \)
(a) மையம் (2, -3)
\(\Rightarrow h=2,k=-3\)
(b) குவியங்கள் (h+c, k), (h-c, k)
\(\Rightarrow \left( 2+\sqrt { 10 } ,-3 \right) ,\left( 2-\sqrt { 10 } ,-3 \right) \)
(c) முனைகள் (h+a, k) (h-a, k)
\(\Rightarrow \left( 2+1,-3 \right) ,\left( 2-1,3 \right) \)
\(\Rightarrow \left( 3,3 \right) \left( 1,-3 \right) \)
(d) இயக்குவரையின் சமன்பாடுகள் \(x-2=\pm \cfrac { a }{ e } \)
\(\Rightarrow x-2=\pm \cfrac { 1 }{ \sqrt { 10 } } \)
\(x=2\pm \cfrac { 1 }{ \sqrt { 10 } } \)
\(\Rightarrow x=2+\cfrac { 1 }{ \sqrt { 10 } } \)
\(x=2-{ \cfrac { 1 }{ \sqrt { 10 } } }\)
14.
கொடுக்கப்பட்ட சமன்பாடு \(\frac { { (x+3) }^{ 2 } }{ 225 } -\frac { { (y-4) }^{ 2 } }{ 64 } =1\)
இது அதிபரவளையத்தின் சமன்பாடு
\(\therefore\) a2 = 225, b2 = 64
\(\Rightarrow\) c2 = a2 + b2 = 225 + 64 = 289
\(\Rightarrow\) c = 17
\(e\sqrt { 1+\cfrac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } } =\sqrt { 1+\cfrac { 64 }{ 225 } } =\sqrt { \cfrac { 225+64 }{ 225 } } \)
= \(\sqrt { \cfrac { 289 }{ 225 } } =\cfrac { 17 }{ 15 } \)
(a) மையம் (-3, 4)
\(\Rightarrow\) h = -3, k = 4
(b) குவியங்கள் (h+c, k), (h-c, k)
\(\Rightarrow (-3+17),\left( -3,-17,4 \right) \)
\(\Rightarrow ((14,4),(-20,4)\)
(c) முனைகள் (h+a, k)
\(\Rightarrow (-3+15,4),\left( -3,-15,4 \right) \)
\(\Rightarrow (12,4)(-18,4)\)
(d) இயக்குவரைகளின் சமன்பாடுகள்
\(x+3=\pm \cfrac { a }{ e } \)
\(\Rightarrow x+3=\pm \cfrac { 15 }{ \frac { 17 }{ 15 } } \Rightarrow x+3=\cfrac { \pm 225 }{ 17 } \)
\(\Rightarrow x+3=\cfrac { 225 }{ 17 } \) மற்றும் \(x+3\cfrac { -225 }{ 17 } \)
\(\)\(\Rightarrow x=\cfrac { 225-51 }{ 17 } \) மற்றும் \(x=\cfrac { -276 }{ 17 } \)
15.
\(\therefore\) a2 = 100, b2 = 64
\(\Rightarrow\) c2 = a2 - b2
\(\Rightarrow\) c2 = 100 - 64 = 36
\(\therefore\) c = 6
\(e=\sqrt { 1-\cfrac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } } =\sqrt { 1-\cfrac { 64 }{ 100 } } =\sqrt { \cfrac { 100-64 }{ 100 } } \)

\(\therefore c=\cfrac { 3 }{ 5 } \)
(a) மையம் (1, -2) \(\Rightarrow\) h = -1, k = 2
(b) குவியங்கள் (h-c, k), (h+c, k)
\(\Rightarrow \left( -1-6 \right) ,\left( -1+6,-2 \right) \Rightarrow (-7,2),(5,2)\)
(c) முனைகள் (h-a,k) மற்றும் (h+a,k)
\(\Rightarrow (-1-10),\left( -1+10,2 \right) \Rightarrow \left( -11,2 \right) \left( 9,2 \right) \)
(d) இயக்குவரைகளின் சமன்பாடுகள்
\(x+1=\pm \cfrac { a }{ e } \)
\(\Rightarrow x+1=\pm \cfrac { 10 }{ 3 } \Rightarrow x+1=-\cfrac { 50 }{ 3 } \)
\(\Rightarrow x=\cfrac { 50 }{ 3 } -1\) மற்றும் \(x+1=-\cfrac { 50 }{ 3 } \)
\(\Rightarrow x=\cfrac { 50 }{ 3 } -1\) மற்றும் \(x=-\cfrac { 50 }{ 3 } -1\)
\(\Rightarrow x=\cfrac { 47 }{ 3 } \) மற்றும் \(x=\cfrac { -53 }{ 3 } \)
16.
y2 - 4y - 8x + 12 = 0
y2-4y = 8x-12
இருபுறமும் 4ஐ கூட்ட கிடைப்பது
y - 4y + 4 = 8x - 12 + 4 = 8x - 8
⇒ (y - 2)2 = 8(x - 1)
இது கீழ்நோக்கி திறப்புடைய பரவளையம்,
செவ்வகலம் 4a = 8 ⇒ a = 2.
(a) முனை (1, 2) ⇒ h = 1, k = 2
(b) குவியம் (h + a, 0 + k)
⇒ (1 + 2, 0 + 2)
⇒ (3, 2)
(c) இயக்குவரையின் சமன்பாடு x = h - a
⇒ x = 1-2
⇒ x = -1
(d) செவ்வகலத்தின் நீளம் 4a = 8 அலகுகள்.
முனை (1, 2)
குவியம் (3, 2)
இயக்குவரையின் சமன்பாடு x = -1
செவ்வகலத்தின் நீளம் = 8
17.
ஆதியில் முனையை கொண்டால் பரவளையம் கீழ் நோக்கிய திறப்புடையது.

அதனுடைய சமன்பாடு x2 = -4ay
இது(6, -4) வழிச் செல்கிறது
\(\therefore 36=-4a\left( -4 \right) \Rightarrow 4a=\cfrac { 36 }{ 4 } =9\)
\(\therefore\) (1) லிருந்து x2 = -9y
(-6, -4) ல் சாய்வைக் காண
(1) ஐ 'x' பொறுத்து வகையிட கிடைப்பது
\(2x=-9\cfrac { dy }{ dx } \)
\(\Rightarrow \cfrac { dy }{ dx } =\cfrac { -2x }{ 9 } \)
(-6, -4) ல் \(\cfrac { dy }{ dx } =\cfrac { 2(-6) }{ -9 } =\cfrac { 12 }{ 9 } =\cfrac { 4 }{ 3 } \)
\(\therefore \tan\theta =\cfrac { 4 }{ 3 } \Rightarrow \theta= { \tan }^{ -1 }\left( \cfrac { 4 }{ 3 } \right) \)
\(\therefore\) தரையுடன் ஏற்படுத்தும் எறிகோணம்
=\(\tan^{ -1 }\left( \cfrac { 4 }{ 3 } \right) \)
18.
கொடுக்கப்பட்ட தகவலை கொண்டு பரவளையம் கீழ் நோக்கி திறப்புடையது என எடுத்துக் கொள்ளலாம்

\(\therefore\) அதனுடைய சமன்பாடு x2 = 4ay ..(1)

பரவளையத்தின் சமன்பாடு x2 = 4ay
P(3, -2.5) என்பது பரவளையத்தின் மீது அமைகிறது என்க.
\( 3^2 =-4(a)(-2.5) \\ 9 =10 a \Rightarrow a=\frac{9}{10} \\ \therefore x^2 =-4\left(\frac{9}{10}\right) y\)
மேலும் Q(x1, -7.5) என்பதும் பரவளையத்தின் மீது அமைகிறது என்க.
\( x_1^2 =-4\left(\frac{9}{10}\right)(-7.5)\)
\(x_1^2=4 \times \frac{9}{10} \times 7.5 =27 \Rightarrow x_1=3 \sqrt{3} \) மீ
நீரானது \(3 \sqrt{3} \) மீட்டருக்கு அப்பால் தரையில் விழும்.
19.
அணு உலை குளிரூட்டும் தூணின் குறுக்கு வெட்டு அதிபரவளைய வடிவில் உள்ளது.

கொடுக்கப்பட்ட \(OC=\cfrac { 1 }{ 2 } OD\) மற்றும் CD = 150மீ அதனுடைய சமன்பாடு OC = 50மீ மற்றும் OD = 100 மீ \(\cfrac { { x }^{ 2 } }{ { 30 }^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ { 44 }^{ 2 } } =1\)
OC = 50 மீ மற்றும் OD = 100 மீ அணு உலையின் மேற்புற ஆரம் x1 எனவும், கீழ்புற ஆரம் x2 எனவும் கொள்க.
ஃபுள்ளிகள் A(x1, 50) மற்றும் B(x₂, -100) அதிபரவளையம் A(x1, 50) புள்ளி வழிச் செல்கிறது.
\( \therefore \frac{x_1^2}{30^2}-\frac{50^2}{44^2} =1+\frac{2500}{1936}=\frac{1936+2500}{1936} \\ x_1^2 =\frac{30^2}{44^2}(4436) \\ \Rightarrow x_1 =\frac{30}{44} \times \sqrt{4436}
\)
\(\\ \Rightarrow x_1 =\frac{30}{44} \times(66.6)=45.41 \ \)மீ
மேற்புற ஆரம் = 45.41 மீ
மேற்புற விட்டம் = 90.82 மீ
மேலும், அதிபரவளையம் B(x2, -100) வழிச் செல்கிறது.
\( \frac{x_2^2}{30^2}-\frac{100^2}{44^2} =1 \\ \frac{x_2^2}{30^2} =1+\frac{100^2}{44^2}=\frac{44^2+100^2}{44^2} \\ x_2^2 =\frac{30^2}{44^2}(11936) \\ x_2 =\frac{30}{44} \times \sqrt{11936} \\ =\frac{30}{44}(109.25)=74.48 \)
கீழ்ப்புற ஆரம் = 74.48 மீ
கீழ்ப்புற விட்டம் = 148.96 மீ
ஃ தூணின் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதியின் விட்டங்கள் முறையே 90.82 மீ மற்றும் 148.96 மீ.
20.
பரவளையத்தின் சமன்பாடு x2 = 4ay என்க

படத்திலிருந்து சமன்பாடு x2 = 4ay என்றும் அது C(30, 13) வழிச் செல்கிறது எனவும் அறியலாம்.
\( \therefore 30^2 =4 a \times 13 \\ 4 a =\frac{30^2}{13} \)
ஃ பரவளையத்தின் சமன்பாடு \(x^2=\frac{30^2}{13} y\)
(i) VG = 6 மற்றும் GE = y என்க.
ஃ E(6, y) பரவளையத்தின் மீதுள்ளது.
\(36=\frac{30^2}{13} y \Rightarrow y=0.52\)
சாலையிலிருந்து கம்பி வடத்தின் நீளம் 3 + 0.52 = 3.52 மீ
(ii) VH = 12 மற்றும் HF = y
ஃ F(12, y) பரவளையத்தின் மீதுள்ளது.
\(12^2=\frac{30^2}{13} y \Rightarrow y=\frac{144 \times 13}{900}=\frac{208}{100}=2.08\)
சாலையிலிருந்து கம்பி தம்பி வடத்தின் நீளம் = 3 + 2.08 = 5.08 மீ
முனையிலிருந்து முதலில் உள்ள இரு கம்பி வடங்களின் உயரங்கள் 3.52 மீ மற்றும் 5.08 மீ
21.
சுரங்க பாதையின் குறுக்கு வெட்டு நீள்வட்ட வடிவில் உள்ளது என்க.

கொடுக்கப்பட்ட AA' = 16மீ \(\Rightarrow\) OA = 8 மீ மற்றும் OB = 5மீ
\(\therefore\) \(\cfrac { { x }^{ 2 } }{ { 5 }^{ 2 } } +\cfrac { { y }^{ 2 } }{ { 8 }^{ 2 } } =1\)
சாலையின் அகலம் BB' மற்றும் AA' சுரங்கப் பாதை திறப்பின் முனைகள் என்க.
CB = 8 மற்றும் BD = 4
D(8, 4) என்ற புள்ளி நீள்வட்டத்தில் உள்ளது.
\( \frac{8^2}{a^2}+\frac{4^2}{5^2} =1 \\ \Rightarrow a^2 =\frac{25}{9} \times 64 \\ \Rightarrow a =\frac{40}{3} \)
\( \mathrm{AA}^{\prime} =2 a=\frac{80}{3} \\ =26.66 \)
சுரங்கப்பாதையின் திறப்பின் அகலம் = 26.66 மீ
22.

AS = 94.5 × 106 கி.மீ, SA' = 152 × 106 கி.மீ
a+c = 152 × 106
a-c = 94.5 × 106
கழிக்க 2c = 57.5 × 106 = 575 × 105 கி.மீ
மற்றொரு குவியத்திலிருந்து சூரியனுக்கு உள்ள தூரம் SS' = 575 × 105 கி.மீ.
23.

சரக்கு வாகனத்தின் அகலம் 3மீ என்பதால் அது வளைவு வழிச் செல்ல சாலையின் மையத்திலிருந்து 1.5மீ தூரத்தில் வளைவின் உயரம் கணக்கிட வேண்டும். இந்த உயரம் 2.7மீ அல்லது குறைவாக இருந்தால் சரக்கு வாகனம் வளைவு வழிச் செல்லாது.
படத்திலிருந்து a = 6 மற்றும் b = 3 என்பது \(\frac { { x }^{ 2 } }{ { 6 }^{ 2 } } +\frac { { y }^{ 2 } }{ { 3 }^{ 2 } } =1\) என்ற நீள்வட்டச் சமன்பாட்டை அளிக்கின்றது.
3மீ அகல வாகனத்தின் விளிம்பு மையத்திலிருந்து x = 1.5மீ-இல் இருக்கும். மையத்திலிருந்து 1.5மீ தூரத்தில் வளைவின் உயரம் காண x = 1.5 எனச் சமன்பாட்டில் பிரதியிட்டு y-இன் தீர்வு காண
\(\frac { { \left( \frac { 3 }{ 2 } \right) }^{ 2 } }{ 36 } \frac { { y }^{ 2 } }{ 9 } =1\)
\({ y }^{ 2 }=9\left( 1-\frac { 9 }{ 144 } \right) \)
\(\frac { 9\left( 135 \right) }{ 144 } =\frac { 135 }{ 16 } \)
\(y=\frac { \sqrt { 135 } }{ 4 } \)
= 11.62/4
= 2.90
இதனால் வளைவின் மையத்திலிருந்து 1.5மீ தூரத்தில் வளைவின் உயரம் 2.90மீ, சரக்கு வாகனத்தின் உயரம் 2.7மீ என்பதால் அது நீள்வட்ட வளைவு வழியேச் செல்லும்.
24.
y2 = 4ax என்ற பரவளையத்திற்கு 't1' ல் தொடுகோட்டிற்கான துணையலகுச் சமன்பாடு
\({ yt }_{ 1 }=x+{ at }_{ 1 }^{ 2 }\)
மேலும் y2 = 4ax என்ற பரவளையத்திற்கு 't2' ல் தொடுகோட்டிற்கான துணையலகுச் சமன்பாடு
\({ yt }_{ 2 }=x+{ at }_{ 2 }^{ 2 }\)

\((1)-\left( 2 \right) y\left( { t }_{ 1 }-{ t }_{ 2 } \right) =a\left( { t }_{ 1 }^{ 2 }-{ t }_{ 2 }^{ 2 } \right) \)

\(\Rightarrow y=a\left( { t }_{ 1 }-{ t }_{ 2 } \right) \)
y = a(t1 + t2) என (1) ல் பிரதியிட கிடைப்பது
\(a\left( { t }_{ 1 }+{ t }_{ 2 } \right) =x+{ at }_{ 1 }^{ 2 }\)

இரண்டு நீளங்களின் வெட்டும் புள்ளி
[at1, t2, a(t1 + t2)]
25.
நீள்வட்டத்தின் சமன்பாடு 2x2 + 7y2 = 14
\(\div \) 14 நமக்கு கிடைப்பது \(\cfrac { { x }^{ 2 } }{ 7 } +\cfrac { { y }^{ 2 } }{ 2 } =1\)
y = mx + c என்ற நேர்கோடு நீள்வட்டத்தின் தொடுகோடாக இருக்க கட்டுப்பாடு
\(y=mx\pm \sqrt { { a }^{ 2 }{ m }^{ 2 }+{ b }^{ 2 } } \)
(5, 2), (1)-ன் மீதுள்ள a2 = 7, b2 = 2
\(\therefore 2=m(5)\pm \sqrt { { 7m }^{ 2 }+2 } \)
\(\therefore 2-5m=\pm \sqrt { 7{ m }^{ 2 }+2 } \)
இருபுறமும் வர்க்கப்படுத்த கிடைப்பது
(2, -5m)2 = 7m2+2
4+25m2-20m = 7m2+2
18m2-2m+2 = 0
9m2-10m+1 = 0(\(\div \)2)
காரணிப்படுத்த கிடைப்பது
(m-1)(9m-1)=0
\(\therefore\) m-1 = 0 (அ)

9m-1 = 0
\(\Rightarrow m=1\) (அ) \(\cfrac { 1 }{ 9 } \)
m = 1 எனில் (1) லிருந்து
\(y=1(x)\pm \sqrt { { 7m }^{ 2 }+2 } \)
\(\Rightarrow y=x\pm \sqrt { 7+2 } \Rightarrow y=x\pm 3\)
\(y=x+3\Rightarrow x-y+3=0\)
\(m=\cfrac { 1 }{ 9 } \) எனில் (1) லிருந்து
\(y=\cfrac { 1 }{ 9 } \left( x \right) \pm \sqrt { 7\left( \cfrac { 1 }{ 81 } \right) } +2\)
\(\Rightarrow y=\cfrac { x }{ 9 } +\sqrt { \cfrac { 7+162 }{ 81 } } \)
\(y=\cfrac { x }{ 9 } +\cfrac { 13 }{ 9 } \)
\(\Rightarrow 9y=x+13\Rightarrow x-9y+13=0\)
ஆகையால் தொடுகோட்டின் சமன்பாடுகள்
x-y-3 = 0 மற்றும் x - 9y + 13 = 0
26.
அதிபரவளையத்தின் செவ்வகலம் LL'S (ae, 0) வழிச் செல்கிறது.

\(\therefore L=\left( ae,y_1 \right) \)
L ஐ \(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) ல் பிரதியிட கிடைப்பது
\(\cfrac { { a }^{ 2 }{ e }^{ 2 } }{ { a }^{ 2 } } -\cfrac { { y }_{ 1 }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\Rightarrow { e }^{ 2 }-\cfrac { { y }_{ 1 }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
\(\Rightarrow { e }^{ 2 }-1=\cfrac { { y }_{ 1 }^{ 2 } }{ { b }^{ 2 } } \) \([{ b }^{ 2 }\Rightarrow { a }^{ 2 }\left( { e }^{ 2 }-1 \right) \cfrac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } ={ e }^{ 2 }-1]\)
\(\Rightarrow { { y }_{ 1 }^{ 2 } }={ b }^{ 2 }\left( { e }^{ 2 }-1 \right) \ \)
\({ y }_{ 1 }^{ 2 }={ b }^{ 2 }\left( \cfrac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } \right) \Rightarrow { y }_{ 1 }^{ 2 }=\cfrac { { b }^{ 4 } }{ { a }^{ 2 } } \)
\(\Rightarrow { y }_{ 1 }=\pm \cfrac { { b }^{ 2 } }{ a } \)
\(\therefore\) செவ்வகலத்தின் முடிவுப் புள்ளிகள் L மற்றும்
\({ L }^{ ' }\left( ae,\cfrac { { b }^{ 2 } }{ a } \right) \) மற்றும் \(\left( ae,\cfrac { { b }^{ 2 } }{ a } \right) \)
ஆகையால் செவ்வகலத்தின் நீளம் \({ LL }^{ ' }=\cfrac { b^{ 2 } }{ a } +\cfrac { { b }^{ 2 } }{ a } \)
= \(\cfrac { { 2b }^{ 2 } }{ a } \) அலகுகள்
27.
(i) கொடுக்கப்பட்ட குவியம் (4, 0) மற்றும் இயக்குவரை x = -4 (4, 0) குவியம் மற்றும் இயக்குநரை இயக்குவரை x = -4, ஆதலால் பரவளையத்தின் வடிவம் y2 = 4ax

மேலும் a = 4
\(\therefore\) பரவளையத்தின் சமன்பாடு y2 = 4(4)x
\(\therefore\) y2 = 16x
(ii) பரவளையம் (2, -3) வழி செல்கிறது மற்றும் சமச்சீர் அச்சு y-அச்சு ஆகும்.

பரவளையம் (2, -3) வழிச் செல்வதன் காரணமாக அது கீழ்நோக்கி திறப்புடையது.
\(\therefore\) அதனுடைய சமன்பாடு x2 = -4ay
(2,-3) என்ற புள்ளியை பிரதியிட கிடைப்பது
22= -4z(-3)
\(\Rightarrow\) 4 = -12a

(1) லிருந்து
\(\therefore { x }^{ 2 }=-4\left( \cfrac { 1 }{ 3 } \right) y\)
\(\Rightarrow\) 3x2 = -4y
(iii) முனை (1, -2) மற்றும் குவியம் (4, -2) பரவளையம் வலது புறம் திறப்புடையது.

a =(1, -2) மற்றும் (4, 2) க்கு இடைப்பட்ட தூரம்
\(a=\sqrt { \left( 1-4 \right) ^{ 2 }+\left( -2+2 \right) ^{ 2 } } \)
\(\Rightarrow a=\sqrt { \left( -3 \right) ^{ 2 }+\left( -2+2 \right) ^{ 2 } } \)
பரவளையத்தின் சமன்பாடு
(y-k)2 = 4a(x-h)
(y+2)2 = 4(3)(x-1)
[\(\therefore\) (h, k)(1, -2)]
\(\therefore\) (y+2)2 = 12(x-1)
(iv) செவ்வகலத்தின் முனை புள்ளிகள் (4, -8) மற்றும் (4, 8)
குவியம்(4, -8) மற்றும் (4, 8)ன் மையப்புள்ளி

\(\therefore\) குவியம் = \(\left( \cfrac { 4+4 }{ 2 } ,\cfrac { -8+8 }{ 2 } \right) =(4,0)\)
\(\therefore\) a = 4 மற்றும் உச்சிப்புள்ளி (0, 0)
பரவளையத்தின் சமன்பாடு y2 = 4ax
\(\therefore\) y2 = 4(4)x
\(\therefore\) y2 = 16x
28.
சமன்பாட்டின் உறுப்புகளை வரிசைப்படுத்தி அதிபரவளையத்தின் திட்டவடிவமாக மாற்ற
11(x2 - 4x) - 25( y2 - 2y) - 256 = 0
11(x-2)2-25(y-1)2 = 256 - 44 + 25
11(x-2)2-25y(-1)2 = 275
\(\frac { { (x-2) }^{ 2 } }{ 25 } -\frac { { (y-1) }^{ 2 } }{ 11 } =1\)
மையம் (2,1), a2 = 25, b2 = 11
c2 = a2 + b2
= 25 + 11 = 36
எனவே c = ±6
\(e=\frac { c }{ a } =\frac { 6 }{ 5 } \) மற்றும் குவியங்கள் (8, 1) மற்றும் (-4, 1)

29.
x மற்றும் y மதிப்புகளை முழுவர்க்கமாக்க 4x2 + 36y2 + 40x − 288y + 532 = 0,
4(x2+10x+25-25) + 36(y2-8y+16-16)+532 = 0 இலிருந்து
4(x2+10x-25) + 36(y2-8y-16) = -532 + 100 + 576
4(x+5)2 + 36(y-4)2 = 144.
இருபுறமும் 144-ஆல் வகுக்கச் சமன்பாடு
\(\frac { { (x+5) }^{ 2 } }{ 36 } +\frac { { (y-4) }^{ 2 } }{ 4 } =1\)
இது மையம் (-5,4), மற்றும் நெட்டச்சு x-அச்சுக்கு இணையான நீள்வட்டம். இதன் அரை நெட்டச்சின் நீளம் 12 மற்றும் குற்றச்சின் நீளம் 4. முனைகள் (1, 4) மற்றும் (-11, 4).
தற்போது, c2 = a2 - b2 = 36 - 4 = 32
மற்றும் c = ±4\(\sqrt 2\).
எனில் குவியங்கள் (-5 - 4\(\sqrt 2\), 4) மற்றும் (−5 + 4\(\sqrt 2\),4)
நெட்டச்சின் நீளம் = 2a = 12 அலகுகள் மற்றும்
குற்றச்சின் நீளம் = 2b = 4 அலகுகள்.
30.
கூம்பு வளைவின் வரையறைப்படி \(\frac{SP}{PM}=e \) அல்லது SP2 = e2PM2.
இதனால், (x-2)2 + (y-3)2 = \(\frac {1}{4}\)(x-7)2
\(\Rightarrow \) 3x2 + 4y2 − 2x − 24y + 3 = 0, இதை பின்வருமாறு எழுதலாம்
\(\Rightarrow 3{ \left( x-\frac { 1 }{ 3 } \right) }^{ 2 }+4{ (y-3) }^{ 2 }=3\left( \frac { 1 }{ 9 } \right) +4\times 9-3=\frac { 100 }{ 3 } \)
\(\Rightarrow \frac { { \left( x-\frac { 1 }{ 3 } \right) }^{ 2 } }{ \frac { 100 }{ 9 } } +\frac { { (y-3) }^{ 2 } }{ \frac { 100 }{ 12 } } =1\) இது திட்ட வடிவம் ஆகும்.
எனவே நெட்டச்சின் நீளம் = 2a = 2\(\\ \sqrt { \frac { 100 }{ 9 } } =\frac { 20 }{ 3 } \) மற்றும்
குற்றச்சின் நீளம் = 2b = 2\(\\ \sqrt { \frac { 100 }{ 12 } } =\frac { 10 }{ \sqrt { 3 } } \)
31.
வட்டத்தின் சமன்பாடானது
x2+y2+2gx+2fy+c = 0
(1, 0) வழி (1) செல்கிறது
\(\Rightarrow\) 1+0+2g(1) + 2f(0) +c = 0
2g + c = -1 ... (2)
(-1, 0) வழி (1) செல்கிறது
\(\Rightarrow\) (-1)2 + 0 +2g(-1) + 2f(0) + c = 0
\(\Rightarrow\)-2g + c = -1 ...(3)
மேலும்(0, 1) வழி (1) செல்கிறது
\(\Rightarrow\) 0 + 12 + 2g(0) + 2f(1) + c = 0
\(\Rightarrow\) 2f + c = -1..(4)
\(\Rightarrow\) (2) + (3) 2c = -2
c = -1
c-1 என (2)-ல் பிரதியிட கிடைப்பது
2g-1 = -1
\(\Rightarrow\) 2g = 0
\(\Rightarrow\) g = 0
c = -1 என (2) ல் பிரதியிட கிடைப்பது
\(\Rightarrow\) 2g = 0
\(\Rightarrow\) g = 0
c = -1 என(4) ல் பிரதியிட கிடைப்பது
2f-1 = -1
\(\Rightarrow\) 2f = 0
\(\Rightarrow\) f = 0
\(\therefore\) (1) லிருந்து
x2 + y2 + 0 + 0 - 1 = 0
\(\Rightarrow\) x2 + y2 = 1
32.
அரைவட்ட வளைவு வழிகளின் மையப்புள்ளிகள் O1 மற்றும் O2 என்க.
முதல் வளைவு வழியின் மையம் O1(12, 0) மற்றும் r =10. இதிலிருந்து அந்த அரைவட்டத்தைக் குறிக்கும் சமன்பாடு
(x −12)2 + ( y − 0)2 = 102
\(\Rightarrow \) x2 + y2 − 24x + 44 = 0 , y > 0 .
இரண்டாம் வளைவு வழியின் மையம் O2 (34, 0) மற்றும் ஆரம் r = 10. முதல் வளைவு போல இரண்டாம் வளைவு வழியின் சமன்பாடு
(x − 34)2 + y2 = 102
\(\Rightarrow \) x2 + y2 − 68x +1056 = 0, y > 0 .
33.
அதிபரவளையத்தின் சமன்பாடு 12x2-9y2 = 108
\(\div 18\) கிடைப்பது \(\cfrac { { 12x }^{ 2 } }{ 108 } -\cfrac { { 9y }^{ 2 } }{ 108 } =1\)
\(\Rightarrow \cfrac { { x }^{ 2 } }{ 9 } -\cfrac { { y }^{ 2 } }{ 12 } =1\)
\(\therefore\) a2 = 9, b2 = 12
அதிபரவளையத்திற்கான தொடுகோட்டின் துணையலகு \(\cfrac { xsec\theta }{ a } -\cfrac { ytan\theta }{ b } =1\)
\(\theta =\cfrac { \pi }{ 3 } \) எனில், சமன்பாடு
\(\cfrac { xsec\cfrac { \pi }{ 3 } }{ 3 } -\cfrac { ytan\frac { \pi }{ 3 } }{ 2\sqrt { 3 } } =1\)

\(\Rightarrow \cfrac { 4x-3y }{ 6 } =1\Rightarrow 4x-3y-6=0\) தேவையான தொடுகோட்டின் சமன்பாடு
பரவளையத்திற்கான செங்கோட்டின் துணையலகுச் சமன்பாடு
\(\cfrac { ax }{ sec\theta } +\cfrac { by }{ tan\theta } ={ a }^{ 2 }+{ b }^{ 2 }\)
\(\theta =\cfrac { \pi }{ 3 } \quad \cfrac { 3x }{ sec\cfrac { \pi }{ 3 } } +\cfrac { 2\sqrt { 3 } y }{ tan\cfrac { \pi }{ 3 } } =9+12\)

\(\Rightarrow \cfrac { 3x }{ 2 } +2y=21\Rightarrow 3x+4y=42\)
\(\Rightarrow 3x+4y-42=0\) தேவையான செங்கோட்டின் சமன்பாடாகும்.
34.
கொடுக்கப்பட்ட வட்டத்தின் சமன்பாடு
x2 + y2 − 5x + 2y − 5 = 0
(-2, 1) (1) ஆனது
(-2)2+12+5(-2)+2(1)-5
= 4+1+10+2+2-5
= 17 - 5 = 12 > 0
\(\therefore\) (-2, 1) வட்டத்திற்கு வெளியே உள்ளது
(0, 0)- (1) ஆனது -5 < 0
\(\therefore\) (0, 0)
(-4, -3)
(-4)2+(-3)2-5(-4)+2(-3)-5
= 16+9+20-6-5
= 45-11 = 34 > 0
\(\therefore\) (-4, -3) வட்டத்தின் வெளியே அமைந்துள்ளது
35.
கொடுக்கப்பட்ட கோடு \(y=\mathrm{m} x+2 \sqrt{5}\)
இங்கு
\( m=m ; c=2 \sqrt{5} \\
a^2=9 \quad b^2=16 \\
a=3 \quad b=4 \\
c^2=a^2 m^2-b^2 \\
(2 \sqrt{5})^2=9 m^2-16 \\
20+16=9 m^2 \Rightarrow m^2=\frac{36}{9}=4 \)
\(\therefore m= \pm 2 \) என்பது \(x^2-(a+b) x-4=0\)
\(2^2-(a+b) 2-4=0 \Rightarrow a+b=0\)
36.
\( P(h, k) \\ x=-\frac{9}{2} \Rightarrow 2 x+9=0 \\ P Q=\frac{2}{3} \mathrm{PM} \\ \sqrt{(h+2)^2+k^2}=\frac{2}{3}\left|\frac{2 h+9}{2}\right| \\ (h+2)^2+k^2=\frac{1}{9}(2 h+9)^2 \\ h^2+4+4 h+k^2=\frac{1}{9}\left(4 h^2+36 h+81\right) \\ 9 h^2+36+36 h+9 k^2=4 h^2+36 h+81 \\ 5 h^2+9 k^2=45 \\ \frac{h^2}{9}+\frac{k^2}{5}=1\\ \frac{x^2}{9}+\frac{y^2}{5}=1 \)
நீள்வட்டமாகும்.
37.
P-ன் நியமப்பாதை = y2-ன் இயக்குவரை = 4x
4a = 4
a = 1
இயக்குவரையின் சமன்பாடு x = -a = -1
x = -1
38.
கொடுக்கப்பட்ட சமன்பாடானது SP² = e²PM²என்ற வடிவில் இல்லை. ........ (1)
ஏனெனில் SP என்பது P(x, y) என்ற நீள்வட்டத்தின் மீதுள்ள புள்ளிக்கும் S(ae, 0) என்ற குவியத்திற்கும் இடையேயுள்ள தூரம்.
\(\therefore \text { (1) } \Rightarrow(x-a e)^2+(y-0)^2=\left(x-\frac{y^2}{9}\right)^2\)
கொடுக்கப்பட்ட சமன்பாடு
\((x-3)^2+(y-4)^2=\frac{y^2}{9}\)
\( \Rightarrow \quad(x-3)^2+y^2-8 y+16-\frac{y^2}{9}=0 \\
9(x-3)^2+8 y^2-72 y+144=0 \\
9(x-3)^2+8\left(y^2-9 y\right)=-144 \\
9(x-3)^2+8\left[y^2-9 y+\left(\frac{9}{2}\right)^2-\left(\frac{9}{2}\right)^2\right]=-144 \\
9(x-3)^2+8\left(y-\frac{9}{2}\right)^2=8 \times \frac{81}{4}-144=18 \\
\frac{(x-3)^2}{2}+\frac{(y-9 / 2)^2}{(9 / 4)}=1
\)
இது நீள்வட்டத்தின் சமன்பாட்டின் திட்ட நிலை
\(\because a^2>\mathrm{b}^2, a^2=\frac{9}{4}, \mathrm{~b}^2=2\\
\therefore b^2 =a^2\left(1-e^2\right) \\
\therefore e =\sqrt{1-\frac{b^2}{a^2}}=\sqrt{1-\frac{2}{(9 / 4)}}=\sqrt{1-\frac{8}{9}}=\sqrt{\frac{1}{9}} \\
\therefore e =\frac{1}{3}\)
39.
(a)
40.

x = a cos \(\theta\); y = b sin \(\theta\)
நீளம் = 2acos\(\theta\); அகலம் = 2bsin\(\theta\)
பரப்பு A = l \(\times\) b = 4absin\(\theta\)cos\(\theta\)
A = 2ab sin 2\(\theta\)
\(\frac{dA}{d \theta}\)= 2ab cos2\(\theta\) (2) = 4ab cos2\(\theta\)
மீப்பெரும பரப்பிற்கு
\(\frac{dA}{d \theta}\) = 0 \(\Rightarrow\) cos2\(\theta\) = 0
\(\begin{aligned}
2 \theta & =\frac{\pi}{2} \Rightarrow \theta=\frac{\pi}{4}
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore A = 2 a b \sin 2\left(\frac{\pi}{4}\right)=2 a b \sin \frac{\pi}{2}
\end{aligned}\)
A = 2ab
41.

\( e =\frac{3}{5} \\ 2 a e =6 \Rightarrow 2 a\left(\frac{3}{5}\right)=6 \Rightarrow a=5 \\ b^2 =a^2-a^2 e^2 \\ b^2 =25-19=16 \Rightarrow \mathrm{b}=4 \\ =4 \times \frac{1}{2} \times a b=2 a b \\ =2 \times 5 \times 4=40 \)
42.

\(\triangle O O^{\prime} A ,\\
(1+y)^2 =(1-y)^2+1 \\
1+y^2+2 y =1+y^2-2 y+1 \\
4 y =1 \Rightarrow y=\frac{1}{4}
\)
43.
\( a^2=16 b^2 =9 \\ (h, k) =(0,3) \\ e =\sqrt{1-\frac{b^2}{a^2}}=\sqrt{1-\frac{9}{16}}=\sqrt{\frac{7}{16}}=\frac{\sqrt{7}}{4} \)
\(a e=4 \frac{\sqrt{7}}{4}=\sqrt{7} (x-h)^2+(y-k)^2 =r^2 \\ (\sqrt{7}-0)^2+(0-3)^2 =r^2 \Rightarrow \sqrt{7}^2+3^2=r^2 \\ 7+9 =r^2 \Rightarrow r^2=16 \\ \therefore(x-0)^2+(y-3)^2 =16 \\ x^2+y^2-6 y+9 =16 \\ x^2+y^2-6 y-7 =0\)
44.
\(a^2=9, \quad b^2=4 \\ 2 x-y=1 \Rightarrow y=2 x-1 \\ m=2 \\ c=\sqrt{a^2 m^2-b^2}=\sqrt{9(4)-4} \\ =\sqrt{36-4}=\sqrt{32} \\ c= \pm 4 \sqrt{2} \\ =\left(\frac{-a^2 m}{c}, \frac{-b^2}{c}\right) \\ =\left(\frac{-9 \times 2}{-4 \sqrt{2}}, \frac{-4}{-4 \sqrt{2}}\right) \text { (or) }\left(\frac{-9 \times 2}{4 \sqrt{2}}, \frac{-4}{4 \sqrt{2}}\right) \\ =\left(\frac{9}{2 \sqrt{2}}, \frac{1}{\sqrt{2}}\right) \text { (or) }\left(\frac{-9}{2 \sqrt{2}}, \frac{-1}{\sqrt{2}}\right) \\ \)
45.
E2 என்ற நீள்வட்டத்தின் சமன்பாடு \(\frac{x^2}{b^2}+\frac{y^2}{a^2}=1\)
இது (0, 4) என்ற புள்ளி வழிச் செல்கிறது.
a² = 16
மேலும் இது (3, 2) வழிச் செல்கிறது.
\(\frac{9}{b^2}+\frac{4}{16}=1 \Rightarrow \frac{9}{b^2}=1-\frac{1}{4}=\frac{3}{4}\)
\( b^2=12 \\
e=\sqrt{1-\frac{b^2}{a^2}}=\sqrt{1-\frac{12}{16}}=\frac{1}{2} \)
46.
\( y^2=12 x \quad \Rightarrow 4 a =12 \Rightarrow a=3 \\ x+y =k \Rightarrow y=-x+k \\ \therefore m =-1, c=k \\ c=-2 a m-a m^2 \Rightarrow k =-2 a(-1)-a(-1)^3 \\ k =-6(-1)-3(-1)=6+3=9 \)
47.
y2 = 4x
4a = 4
a = 1
செவ்வகலத்தின் முனைப்புள்ளிகள்
\( =(a, \pm 2 a) \\ =(1, \pm 2) \)
செங்கோட்டின் சமன்பாடு
\(x y_1+2 a y=x_1 y_1+2 a y_1\)
(1, \(\pm2\)) புள்ளியில் செங்கோட்டின் சமன்பாடு
y = - x + 3
x + y - 3 = 0
y = x + 3
x - y + 3 = 0
\( \left|\frac{a x_1+b y_1+c}{\sqrt{a^2+b^2}}\right|=\left|\frac{3-2-3}{\sqrt{1+1}}\right| =r \Rightarrow\left|\frac{-2}{\sqrt{2}}\right|=r \\ \Rightarrow \frac{2}{\sqrt{2}} =r \\ r =\sqrt{2} \Rightarrow r^2=2 \)
48.
\(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1\\
(\pm a e, 0 )\\
e=\sqrt{1+\frac{b^2}{a^2}}\)
\(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=-1\\
(\pm b e, 0 )\\
e=\sqrt{1+\frac{a^2}{b^2}}\)
நாற்கரத்தின் பரப்பு \( =\frac{1}{2} A C \times B D \)
\(
=\frac{1}{2} 2 a e \times 2 b e \\
=a \sqrt{1+\frac{b^2}{a^2}} \times 2 b \sqrt{1+\frac{a^2}{b^2}} \\
=a \frac{\sqrt{a^2+b^2}}{a} \times 2 b \frac{\sqrt{b^2+a^2}}{b} \\
=2\left(a^2+b^2\right)
\)
49.
\( 16 x^2+25 y^2 =400 \\ \frac{x^2}{25}+\frac{y^2}{16} =1 \\ a^2 =25 \Rightarrow a= \pm 5 \\ P F_1+P F_2 = 2 a \\ =2 \times 5=10 \)
50.
\(x ^ 2 + y ^ 2 - 2x - 2y + 1 = 0
\)
2g = - 2
g = - 1
2f = - 2
f = - 1
இணையான கோடு 2x + 4y + \(\lambda\) = 0 என்க. மையம் (-g, -f) = (1, 1) என்பது இக்கோட்டின் மேல் அமைவதால்,
2 + 4 + 2 = 0 ⇒\(\lambda\) = -6
2x + 4y - 6 = 0
x + 2y = 3
51.
\(
3 x^2+b \mathrm{y}^2+4 b x-6 b \mathrm{y}+b^2 =0 \\
a=\mathrm{b} \ \Rightarrow \ b =3=\mathrm{a}
\)
\(
3 x^2+3 y^2+12 x-18 y+9=0 \\
\Rightarrow x^2+y^2+4 x-6 y+3=0 \\
2 g=4 ; 2 f=-6 ; c=3 \\
g=2 ; f=-3 \\
r=\sqrt{g^2+f^2-c} \\
=\sqrt{4+9-3}=\sqrt{10} \)
52.

\( C A =C B \Rightarrow C A^2=C B^2 \\ (1-1)^2+(0-h)^2 =(2-1)^2+(3-h)^2 \\ h^2 =1+h^2+9-6 h \\ 6 h =10 \Rightarrow h=\frac{10}{6}=\frac{5}{3} \\ =2 h =2\left(\frac{5}{3}\right)=\frac{10}{3} \)
53.
செவ்வகல நீளம்
\(
\frac{2 b^2}{a} =8 \\
b^2 =4 a ........ (1)
\)
துணையச்சின் நீளம்
\(
2 b =\frac{1}{2}(2 a e) \\
b =\frac{a e}{2} \\
b^2 =\frac{a^2 e^2}{4} \)
\(
\frac{a^2 e^2}{4} =a^2\left(e^2-1\right) \\
\mathrm{e}^2\left(e^2-1\right) =4 \mathrm{e}^2-4 \\
3 \mathrm{e}^2 =4 \Rightarrow \mathrm{e}^2=\frac{4}{3} \\
\therefore \mathrm{e} =\frac{2}{\sqrt{3}}\)
54.
x = 0 என்ற கோட்டிற்கும் மையம் (- g, - f) -க்கும் உள்ள தூரம் வட்டத்தின் ஆரம் ஆகும்.
\(\pm\left(\frac{-g}{1^2}\right)=\sqrt{g^2+f^2-c} \Rightarrow f^2=c\) ............ (1)
கொடுக்கப்பட்ட வட்டத்தின் சமன்பாட்டிலிருந்து,
\( 2 f =-6+3 \lambda, c=9-19 \lambda \\ \left(\frac{-6+3 \lambda}{2}\right)^2 =9-19 \lambda \Rightarrow \lambda=0, \frac{-40}{9} \)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards