12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 11/07/2019
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
2.
எந்த செயற்குறியை ஒப்பீடு செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?
கணக்கீடு
தொடர்புடைய
தருக்க
மதிப்பிருத்தல்
3.
பின்வருவனவற்றில் எது பைத்தான் சிறப்புச் சொல் கிடையாது?
break
while
continue
operators
4.
பின்வரும் எந்த சாவி சேர்மானம் ஓர் புதிய பைத்தான் நிரலை உருவாக்க பயன்படுகிறது
Ctrl + C
Ctrl + F
Ctrl + B
Ctrl + N
5.
பைத்தானை உருவாக்கியவர் யார்?
ரிட்ஸி
கைடோ வான் ரோஷம்
பில் கேட்ஸ்
சுந்தர் பிச்சை
6.
அடுக்கெண் தரவு பற்றி குறிப்பு வரைக.
7.
வில்லைகள் பற்றி சிறு குறிப்பு வரைக.
8.
பைத்தான் நிரலினை சோதிக்க எத்தனை வகை முறைமைகள் உள்ளன?
9.
விடுபடு வரிசைப்பற்றி குறிப்பு எழுதி எடுத்துக்காட்டு தருக.
10.
மும்ம செயற்குறியை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
11.
கணித செயற்குறிகள் பற்றி குறிப்பு வரைக, எடுத்துக்காட்டு தருக.
12.
பைத்தானில் உள்ள வில்லைகள் பற்றி எழுதுக
13.
ஸ்கிரிப்ட் முறைமை நிரலாக்கம் பற்றி எழுதுக.
1.
(a)
2.
(b)
தொடர்புடைய
3.
(d)
operators
4.
(d)
Ctrl + N
5.
(b)
கைடோ வான் ரோஷம்
6.
மிதப்பு புள்ளி தரவு, தசம புள்ளியை கொண்ட தசம எண்களாக குறிப்பிடப்படுகின்றன. அடுக்கெண் தரவு வகை, தசம எண் பகுதி, தசம புள்ளி, அடுக்கெண் பகுதியை தொடர்ந்து ஒன்று அல்லது பல இலக்கங்களை கொண்டிருக்கும்.
எ.கா.
123.34,456.23, 156.23 # Floating point data
12.E04, 24.e04 # Exponent data
7.
பைத்தான், நிரலில் இடம்பெறும் நிரல் வரிகளை அடிப்படை மொழிக்கூற்றுகளாக பிரிக்கிறது. இந்த கூறுகள் வில்லைகள் எனப்படும். பொதுவாக வில்லைகளின் வகைகளாவன.
(i) குறிப்பெயர்கள்
(ii) சிறப்புச் சொற்கள்
(iii) செயற்குறிகள்
(iv) வரம்புக்குறிகள்
(v) நிலைஉருக்கள்
வில்லைகளை பிரிப்பதற்கு வெற்று இடைவெளி கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.
8.
பைத்தான் நிரலினை சோதிக்க ஊடாடும் முறைமை, ஸ்கிரிப்ட் முறைமை என்று இரு வகை முறைமைகள் உள்ளன
9.
பைத்தானில், பின்சாய்வுகோடு ("\") ஆகிய சிறப்பு குறியீட்டை "விடுபடு" குறியுரு என்று அழைக்கிறோம். இது சில வெற்று இடைவெளியை குறிப்பிட பயன்படுகிறது."\t" என்பது தத்தல், "\n" என்பது புதியவரி மற்றும் "\r" என்பது நகர்த்தி திரும்பலை (carriage return) குறிக்கிறது. எடுத்துக்காட்டு "It's raining", என்ற செய்தியை பின்வரும் பைத்தான் கட்டளை வெளியிடும்
>>> print ("It\'s raining")
It's raining
10.
மும்ம செயற்குறி நிபந்தனை செயற்குறி என்றும் அழைக்கப்படுகிறது. இது சமன்பாடுகளின் நிபந்தனையை சரி அல்லது தவறா என்று சோதித்து செயல்படுத்தும், மும்ம செயற்குறி பல வரி if-else கூற்று போல் அல்லாது நிபந்தனைகளை ஒற்றை வரியில் சோதிக்க அனுமதிக்கிறது.
நிபந்தனைச் செயற்குறியின் தொடரியல்,
Variable Name = [on_true] if [Test expression] else [on_false]
எடுத்துக்காட்டு:
min = 49 if 49 < 50 else 50 # min = 49
min = 50 if 49 > 50 else 49 # min = 49
11.
கணித செயற்குறிகள், இரு செயலேற்பிகள் ஏற்றுக் கொண்டு அதன் மீது கணித செயல்பாடுகளை செய்யும். அவை எளிய முறை கணித செயல்பாடுகளாக பயன்படுகிறது. பெரும்பான்மையாக கணிப்பொறி மொழிகள் இதுபோன்ற செயற்குறிகளை கொண்டிருக்கும். அவை சமன்பாடுகளை பயன்படுத்தி தொடர் கணிப்பீடுகளை செய்யப் பயன்படுகிறது.
பைத்தான் பின்வரும் கணித செயற்குறிகளை கொண்டுள்ளது.
| செயற்குறி - செயல்பாடு | எடுத்துக்காட்டு | தீர்வு |
| a = 100, b = 10 என மதிப்பாக கொண்டு பின்வரும் கோவையை மதிப்பீடுக | ||
| + (கூட்டல்) | > > > a + b | 110 |
| - (கழித்தல்) | > > > a - b | 90 |
| * (பெருக்கல்) | > > > a * b | 1000 |
| / (வகுத்தல்) | > > > a / b | 10.0 |
| % (வகுமீது) | > > > a % 30 | 10 |
| ** (அடுக்கு) | > > > a ** 2 | 10000 |
| // (முழு எண் வகுத்தி) | > > > a / / 30 | 3 |
12.
வில்லைகள்:
பைத்தான், நிரலின் இடம்பெறும் வரிகளை அடிப்படை மொழிக்கூற்றுகளாக பிரிக்கிறது. இந்த கூறுகள் வில்லைகள் எனப்படும் பொதுவாக வில்லைகளின் வகையான,
(i) குறிப்பெயர்கள்
(ii) சிறப்புச் சொற்கள்
(iii) செயற்குறிகள்
(iv) வரம்புக்குறிகள்
(v) நிலைஉருக்கள்
வில்லைகளை பிரிப்பதற்கு வெற்று இடைவெளி கண்டிப்பாக இருத்தல் வேண்டும்
(i) குறிப்பெயர்கள்: மாறி, செயற்கூறு, இனக்குழு, தொகுதி அல்லது பொருள்களை அடையாளம் காணப் பயன்படும் பெயர்கள் குறிப்பெயர் என்று அழைக்கப்படுகிறது
சரியான குறிப்பெயர்களின் எடுத்துக்காட்டு:
Sum, total_marks, regno, num 1
தவறான குறிப்பெயர்களின் எடுத்துக்காட்டுகள்:
12Name, name\(\$\), total - mark, continue
(ii) சிறப்புச் சொற்கள்: நிரலின் அமைப்பை அடையாளம் காண பைத்தான் வரிமொழி மாற்றி சிறப்புச் சொற்களை பயன்படுத்துகிறது. சிறப்பு சொற்கள் மொழிமாற்றியில் குறிப்பிட்ட பொருள் கொண்டுள்ளதால் இவற்றை பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது.
பைத்தான் சிறப்புச் சொற்கள்:
| false | class | finally | is | return |
| None | continue | for | lambda | try |
| True | def | from | nonlocal | while |
| and | del | global | not | with |
| as | elif | if | or | yield |
| assert | else | import | pass | raise |
| break | except | in |
(iii) செயற்குறிகள்: கணிப்பொறி நிரலாக்க மொழியில் செயற்குறிகள் என்ற சிறப்பு குறியீடுகள் கணிப்பீடுகள், நிபந்தனை சோதிப்பு போன்ற செயல்பாடுகளை செய்ய பயன்படுகிறது. செயற்குறிகள் என்பவை குறியீடுகள் இவை செயலேற்பிகளில் உள்ள மதிப்புகளில் செயல்படும். கணித, ஒப்பீடு, தருக்க, மதிப்பிருத்தல் போன்று பல வகை செயற்குறிகள் உள்ளன மதிப்புகள்மற்றும் மாறிகள் செயற்குறியுடன் பயன்படுத்தும் போது செயலேர்பிகள் என்று அழைக்கப்படுகிறது.
(iv) வரம்புக்குறிகள் : சாதாரண உரை அல்லது பிற தரவுத் தொட்டிகளின் தனித்த, சார்பற்ற பகுதிகளின் எல்லைகளை குறிப்பிடப் பயன்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துருக்கள் வரம்புக்குறிகள் ஆகும்.
பைத்தான், குறியீடு அல்லது குறியீடுகளின் தொகுப்பை, கோவை, பட்டியல், அகராதி மற்றும் சரங்களில் பயன்படுத்துகிறது. பின்வருவன பைத்தான் வரம்புக்குறிகளாகும்.
| ( | ) | [ | ] | { | } |
| , | : | . | ' | = | ; |
v) நிலைஉருக்கள் : நிலைஉருக்கள் என்பது மாறிகள் அல்லது மாறிலிகளுக்கு வழங்கப்படும் மூல தரவாகும். பைத்தானில் பல்வேறு வகையான நிலைஉருக்கள் உள்ளன.
எண்கள்
சரம்
பூலியன்
13.
ஒரு ஸ்கிரிப்ட் என்பது பைத்தான் கட்டளைகளை கொண்ட ஒரு உரை ஆவணத்தைக் குறிக்கிறது. பைத்தான் ஸ்கிரிப்ட் குறிமுறையை மறுபயனாக்கம் செய்துக் கொள்ளலாம். ஒரு முறை ஸ்கிரிப்ட் கோப்பை எழுதிவிட்டால் பல முறை இயக்கிக் கொள்ளலாம் மீண்டும் அந்த ஸ்கிரிப்டை உருவாக்க தேவையில்லை. ஸ்கிரிப்ட் பதிப்பாய்வு செய்ய கூடியவை
பைத்தான் ஸ்கிரிப்ட் எழுதுதல்:
(i) பைத்தான் shell சாளரத்தில் File ➝ New File அல்லது Ctrl + N என்பதை அழுத்தவும்
(ii) பெயரிடப்படாத Untitled வெற்று ஸ்கிரிப்ட் Text editor தோன்றும்.
(iii) பின்வரும் கட்டளைகளை ஸ்கிரிப்ட் editorல் உள்ளிடவும்
a = 100
b = 350
c = a + b
print ("The Sum =", c)
பைத்தான் ஸ்கிரிப்ட்யை சேமித்தல்
(i) File ➝ Save கட்டளையை தேர்ந்தெடுக்கவும் அல்லது Ctrl + S அழுத்தவும்
(ii) Save As உரையாடல் பெட்டி திரை தோன்றும்.
(iii) Save As உரையாடல் பெட்டியில், கோப்பு சேமிக்கப்பட வேண்டிய இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் கோப்பின் பெயரை File Name பெட்டியில் உள்ளிட வேண்டும், கொடாநிலையாக பைதான் கோப்புகள் .py என்ற நீட்டிப்புடன் சேமிக்கப்படுகிறது. எனவே, பைத்தான் ஸ்கிரிப்ட் editor-ல் கோப்புகளுக்கு பயனர் நீட்டிப்பை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.
(iv) இறுதியாக Save பொத்தானை தேர்ந்தெடுத்து, பைத்தான் ஸ்கிரிப்ட் கோப்பை சேமிக்கலாம்.
பைத்தான் ஸ்கிரிப்ட்டை இயக்குதல்
(i) Run \(\rightarrow\) Run Module F5 யை தேர்ந்தெடுக்கவும்.
(ii) குறிமுறையில் பிழைகள் இருப்பின் அவை சிகப்பு நிறத்தில் IDLE திரையில் காண்பிக்கப்பட்டு, பைத்தான் பிழைக்கான காரணத்தை விளக்கும். பிழைகளை திருத்துவதற்கு, ஸ்கிரிப்ட் editorக்கு சென்று, பிழைகளைத் திருத்தி, கோப்பை Ctrl + S அல்லது File \(\rightarrow\) Save கட்டளைக் கொண்டு சேமித்தபின் மீண்டும் இயக்க வேண்டும்.
(iii) பிழைகள் இல்லாத பைத்தான் குறிமுறையை இயக்கியவுடன் அதன் வெளியீடு பைத்தான் IDLE திரை தோன்றும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards