6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 16/03/2020
6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (6th Standard Science All Chapter Two Marks Important Questions 2020 )
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
தகவமைத்தல் என்றால் என்ன?
2.
உயிரினங்களின் பல்லுயிர் தன்மை வரையறுக.
3.
நுண்ணுயிரிகள் யாவை?
4.
கொழுப்பின் ஆதாரங்கள் யாவை?
5.
தொடுவிசை என்றால் என்ன?
6.
' ஓடோ மீட்டர் ' சிறு குறிப்பு வரைக
7.
பூவாத் தாவரங்களுக்கு எடுத்துக்காட்டுடன் தருக?
8.
இலை பச்சை நிறத்தில் காணப்பட காரணம் என்ன?
9.
உனக்குத் தெரியாத அளவிட்டுக் கருவிகள் சிலவற்றைக் கூறுக.
10.
RO - சிறுகுறிப்பு வரைக.
11.
பிரித்தெடுத்தலை முழுமைப்படுத்துவதற்கான முறைகள் யானை?
12.
நறுமணப் பொருள்கள் என்றால் என்ன?
13.
மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?
14.
மாசுபாட்டின் வகைகளைக் குறிப்பிடுக.
15.
சூழ்நிலை மண்டலத்தின் இரு வகைகள் யாவை?
16.
சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது?
17.
சிமெண்டில் கலந்துள்ள மூலப்பொருள்கள் யாவை?
18.
நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?
19.
அன்றாடம் நாம் மேகங்களைக் காண்கிறோம். ஆனால், மழை பொழிவு அன்றாடம் நிகழ்வதில்லை.ஏன்?
20.
கணினியின் கூறுகள் யாவை?
21.
முக்கியமான ஐந்து உணர் உறுப்புகளின் பெயர்களை எழுதுக.
22.
மூவகையான இரத்தக் குழாய்களின் பெயர்களை எழுதுக.
23.
சிவா “சிறிய வெங்காயத்தை பெரிய வெங்காயத்தோடு ஒப்பிடும் போது பெரிய வெங்காயம் பெரிய செல்களைக் கொண்டுள்ளன" என்கிறான். இதை நீ ஏற்றுக்கொள்கிறாயா? மறுக்கிறாயா? ஏன்?
24.
நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?
25.
ஒருவரின் ஆடையில் ஏதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?
26.
வளிமண்டலம் என்றால் என்ன? வளிமண்டலத்தில் ஐந்து அடுக்குகளின் பெயர்களைத் தருக?
27.
மெதுவான மாற்றத்தை வரையறு.
28.
உங்களிடம் சிறிது மெழுகு தரப்பட்டால் அதை வைத்து உங்களால் மெழுகு பொம்மை செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முடியுமெனில் எவ்வகை மாற்றம் எனக் குறிப்பிடுக.
29.
டார்ச் விளக்கில் எவ்வகையான மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது?
30.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் மின்விளக்கு A மட்டும் ஒளிர வேண்டும் எனில் எந்தெந்த சாவி(கள்) மூடப்பட வேண்டும்.
31.
வெப்பச்சமநிலை பற்றி நீ அறிந்தவற்றைக் கூறுக.
32.
வெப்பநிலை என்றால் என்ன?
33.
மென்பொருள் மற்றும் வன்பொருள் இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக.
34.
தரவு பற்றி சிறு குறிப்பு வரைக.
35.
வாழிடம் என்பதை வரையறு.
36.
பாலைவனத் தாவரங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
37.
பழங்களையும் காய்கறிகளையும் வெட்டியபின் நீரில் கழுவக் கூடாது. ஏன்?
38.
கீழ்க்கண்டவற்றிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
அ) கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்கள்
ஆ) வைட்டமின் குறைபாட்டு நோய்கள்
39.
கலவைக்கு ஒரு எடுத்துக்காட்டினைக் கூறி அது கலவையே என்பதை நியாயப்படுத்தவும்.
40.
சமைக்கும் முன் அரிசியில் உள்ள உமி. தூசு போன்ற நுண்ணிய மாசு பொருட்கள் எவ்வாறு நீக்கப்படுகின்றன?
41.
பாம்புகளின் உடல் பகுதிகள் யாவை?
42.
பறவைகள் தங்கள் இரைகளை எவ்வாறு பிடிக்கின்றன?
43.
பின்வரும் அலகினை ஏறு வரிசையில் எழுதுக.
1 மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லிமீட்டர்.
44.
பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி, எவையேனும் மூன்றினை விளக்குக.
1.
தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழ்வதற்குகேற்பத் தங்கள் உடலில் பெற்றுள்ள சிறப்பு அமைப்புகள் தகவமைப்புகள் என்ற அழைக்கப்படுகிறது.
2.
பல்வகைத் தன்மை என்பது, உயிரினங்கள் வாழும் பல்வேறு வாழிடங்கள் மற்றும் அவை பெற்றுள்ள பல்வேறு மாறுபாடுகளையும் குறிப்பிடுவதாகும்.
3.
பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவா மற்றும் பூஞ்சைகள்.
4.
வெண்ணெய், நெய், பால்,சீஸ், பன்னீர், கொட்டைகள், இறைச்சி, மீன், முட்டை மஞ்சள் கரு போன்றவை சில முக்கியமான கொழுப்புகள் ஆகும்.
5.
ஒரு பொருளினைத் தொடுவதன் மூலம் விசை செயல்படுத்தப்பட்டால் அத்தகைய விசையைத் தொடுவிசை என்கிறோம்.
6.
ஓடோ மீட்டர் என்பது தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவைக் கணக்கிடப் பயன்படும் ஒரு கருவியாகும்.
7.
பெரணிகள், ரிக்சியா, பாசிகள், ஃபுனேரியா
8.
இலை பச்சை நிறத்தில் காணப்படுவதற்கு காரணம் அவற்றில் காணப்படும் குளோரோஃபில் (பச்சையம்) என்ற பச்சை நிற நிறமி.
9.
அளவுகோல் , அளவு நாடா,அளவுசாடி, கடிகாரம் மற்றும் தராசு
10.
எதிர் சவ்வூடு பரவல் (RO) என்ற முறையில் குடிப்பதற்கென நீரில் உள்ள மாசுக்கள் நீக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.
11.
பாடியவைத்தல், தெளியவைத்து இறுத்தல், வடிகட்டுதல், ஆவியாதல் மற்றும் குளிர்வித்தல்.
12.
சில தாவரங்களிலிருந்து பெறப்படக்கூடிய பொருள்கள் உணவிற்கு நறுமணமூட்ட பயன்படுகிறது இத்தகைய பொருள்கள் நறுமணப் பொருள்கள் எனப்படும்.
13.
நம்மைச் சுற்றி காணப்படும் தாவரங்களில் சில தாவரங்கள் நமது நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன. இவை மருத்துவத் தாவரங்கள் எனப்படுகின்றன.
14.
அ) காற்று மாசுபாடு
ஆ) நீர் மாசுபாடு
இ) நில மாசுபாடு
ஈ) ஒலி மாசுபாடு என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
15.
1. இயற்கை சூழ்நிலை மண்டலம்
2. செயற்கை சூழ்நிலை மண்டலம்
16.
1. சிமெண்டுடன் நீர் சேர்க்கும் போது சில நிமிடங்களில் அது கெட்டிப்படுகிறது.
2. எனவே, சிமெண்டின் கெட்டிபடும் நேரத்தைத் தாமதமாக்குவது அவசியமாகிறது
3. இதற்காகவே சிமெண்டுடன் ஜிப்சம் சிறிதளவு சேர்க்கப்படுகிறது.
17.
சுண்ணாம்புக் கல், களிமண் மற்றும் ஜிப்சம் ஆகியன சிமெண்டின் மூலப்பொருள்களாகும்.
18.
துருவப் பகுதிகளில் உள்ள பனியாறுகள், பனிப்படிவுகள் பனிப்பாறைகளில் நீர் பனிக்கட்டியாகக் காணப்படுகிறது.
19.
1. மேகங்கள் குளிர்ச்சியடைய குளிர்ந்த காற்று தேவை.
2. மேகங்கள் குளிர்ச்சியடைந்து சுருங்கினால் மட்டுமே மழைப்பொழிவு நிகழும்.
3. குளிர்ச்சியடையாத மேகங்கள் மழை தராது.
இதுவே அன்றாடம் மழைப்பொழிவு நிகழாததிற்கான காரணமாகும்.
20.
1. உள்ளீட்டகம் (Input Unit)
2. மையச் செயலகம் (CPU)
3. வெளியீட்டகம் (Output Unit)
21.
கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியன ஐந்து உணர் உறுப்புகளாகும்.
22.
தமனிகள், சிரைகள் மற்றும் தந்துகிகள் ஆகியன இரத்தக் குழாய்களாகும்.
23.
அவனுடைய கூற்றை நான் மறுக்கிறேன். ஏனெனில் செல்லின் அளவிற்கும் உயிரினத்தின் அளவிற்கும் யாதொரு தொடர்புமில்லை.
24.
சைட்டோபிளாசம் செல்லின் நகரும் பகுதி எனப்படுகிறது.
25.
i) அவரை அந்த இடத்திலேயே நிறுத்த வேண்டும்.
ii) நின்று கொண்டிருந்தால் அவரை அந்த இடத்திலேயே படுக்க செய்ய வேண்டும்.
iii) பின்பு, தரைத் தளத்திலேயே உருளச் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் தீ மேலும் பரவாமல் தடுப்பதுடன், பெரிய பாதிப்பின்றி அவரைக் காப்பாற்றலாம்.
26.
நமது பூமியைச் சுற்றி ஒரு பெரிய உறை போலக் காணப்படும் காற்று, வளி மண்டலம் எனப்படுகிறது.
வளி மண்டலத்தின் ஐந்து அடுக்குகளாவன.
i) அடிவளி மண்டலம்
ii) அடுக்கு வளி மண்டலம்
iii) இடைவெளி மண்டலம்
iv) அயனி மண்டலம்
v) புற வளி மண்டலம்
27.
அதிக நேரத்தை எடுத்துக் கொண்டு நிகழும் மாற்றங்கள் மெதுவான மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன.
28.
ஆம், மெழுகு பொம்மை செய்யமுடியும். ஏனெனில் இது ஒரு இயற்பியல் மாற்றம்.
29.
டார்ச் விளக்கில் எளிய மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது.
30.
K1 & K2 மூடப்பட வேண்டும்.
31.
வெப்பத் தொடர்பில் உள்ள இருபொருட்களின் வெப்பநிலையும் சமமாக இருந்தால் அவை வெப்பச்சமநிலையில் உள்ளன எனப்படுகிறது. இருபொருட்கள் வெப்பச்சமநிலையில் உள்ள போது ஒன்றின் வெப்பநிலை மற்றொன்றை பாதிப்பதில்லை.
32.
ஒரு பொருள் எந்த அளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதனை அளவிடும் அளவுக்கு வெப்பநிலை என்று பெயர். வெப்பநிலையின் SI அலகு கெல்வின் ஆகும்.
33.
| வ.எண் | மென் பொருள் | வன் பொருள் |
| 1 | கணினியில் நாம் செய்யக் கூடிய வேலைகளுக்கு உதவுக்கூடிய கட்டளைகள் அல்லது நிரல்களின் தொகுப்பு தான் மென் பொருள். | கணினியில் இருக்கக் கூடிய மென் பொருட்கள் செயல்படுவதற்கு உதவுக்கூடிய கணினியின் பாகங்களே வன் பொருட்கள் எனப்படும். |
| 2 | மென்பொருளை இரண்டாகப் பிரிக்கலாம். அவை, i) இயக்க மென்பொருள் ii) பயன்பாட்டு மென்பொருள் |
வன்பொருள்களை உள்ளீட்டுக் கருவிகள், வெளியீட்டுக் கருவிகள் என இருவகையாகப் பிரிக்கலாம். |
34.
1. தரவு என்பது முறைப்படுத்தப்பட வேண்டிய விவரங்கள்.
2. இவை பொதுவான எண், எழுத்து. படக் குறியீடுகளாக இருக்கும்.
35.
வாழிடம் என்பது ஒரு குறிப்பிட்ட உயிரினம் வாழும் இடம் ஆகும்.
36.
சப்பாத்திக்கள்ளி, அகேவ், சோற்றுக் கற்றாழை, பிரையோ ஃபில்லம்
37.
பழங்களையும் காய்கறிகயையும் வெட்டியபின் நீரில் கழுவக் கூடாது. ஏனெனில் அவற்றில் அடங்கியுள்ள சத்துப்பொருட்கள் நீரில் கரைந்து வெளியேறக் கூடும், இதனால் உணவில் உள்ள சத்துப்பொருட்களின் அளவு குறைந்துவிடும்.
38.
அ) கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்கள்
வெண்ணெய், நெய்
ஆ) வைட்டமின் குறைபாட்டு நோய்கள்
மாலைக்கண் நோய், பெரி பெரி
39.
1. நாம் பருகும் எலுமிச்சை சாறு ஒரு கலவையாகும். ஏனெனில் இது எலுமிச்சை சாறு. நீர் மற்றும் சர்க்கரை ஆகிய பகுதிப்பொருள்களைக் கொண்டது.
2. இதில் சேர்க்கப்படும் நீரின் அளவோ அல்லது சர்க்கரையின் அளவோ மாறினாலும் அது கலவையாகவே இருக்கும்.
3. ஏனென்றால் கலவையில் அடங்கியுள்ள பகுதிப் பொருள்களின் அளவு நிலையான விகிதத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
40.
சமைக்கும் முன் அரிசியில் உள்ள உமி, தூசு போன்ற நுண்ணிய மாசு பொருட்களை தூற்றுதல் மூலம் நீக்கலாம்.
41.
1. பாம்பின் தலைப் பகுதியில் கண்கள், நாசித்துளைகள், வாய், மூளை மற்றும் சிறப்புவகை உணர் உறுப்புகள் உள்ளன.
2. பாம்பின் உடல் முழுவதும் செதில்களால் மூடப்பட்டிருக்கும்.
42.
பறவைகள் தங்கள் இரைகளை, அவற்றின் அலகு மற்றும் கூர் நகங்கள் கொண்ட கால்கள் மூலம் பிடிக்கின்றன.
43.
1 மில்லிமீட்டர், 1 சென்டி மீட்டர், 1 மீட்டர் மற்றும் 1 கிலோ மீட்டர்
44.
1. விஜிஏ
2. எச்டிஎம்ஐ
3. யுஎஸ்பி
4. தரவுக்கம்பி
5. ஒலிவடம்
6. மின் இணைப்புக் கம்பி
7. ஒலி வாங்கி இணைப்புக் கம்பி
8. ஈதர் நெட் இணைப்புக் கம்பி
விஜிஏ: (Video Graphics Array)
கணினியின் மையச்செயலகத்தைத் திரையுடன் இணைக்கப் பயன்படுகிறது.
யுஎஸ்பி: (Universal Serial Bus)
அச்சுப்பொறி, வருடி, விரலி, சுட்டி, விசைப்பலகை, இணையப்படக்கருவி, திறன் பேசி போன்றவற்றைக் கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது.
தரவுக்கம்பி: (Data Cable)
கணினியின் மையச் செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி ஆகியவற்றை இணைக்கப் பயன்படுகிறது.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards