6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 04/02/2020
6ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினாவிடைகள் ( 6th Standard maths important questions )
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
188 மற்றும் 230 இன் மீ.பொ.கா வை யூக்ளின் விளையாட்டு மூலம் காண்க.
2.
செல்சியஸ் தெர்மோமீட்டரைப் பார்த்து, பின்வரும் வினாக்களுக்கு விடியளிக்கவும் .
i) வெப்பமானி காட்டும் வெப்ப நிலை அளவு என்ன ?
ii) வெப்பமானியில் 0oC இக்குக் கீழே 5oC ஐ எங்கு குறிப்பாய் ?
iii) வெப்பமானியில் உள்ள வெப்பநிலையை 10oC குறைத்தல் வெப்பமானி காட்டும் வெப்பநிலை என்ன ?
iv) வெப்பமானியில் 15oC இக்கு எதிரெண்ணைக் குறிக்கவும்.

3.
முழுக்கள் தொகுப்பில் மிகச்சிறிய எண் மற்றும் மிகப்பெரிய எண் உள்ளதா ? காரணம் கூறுக.
4.
சம அளவுள்ள 6 சதுரங்களைக் கொண்டு குறைந்தது ஒரு பக்கத்தை மற்றொரு சதுரத்தின் பக்கத்துடன் சரியாகப் பொருந்துமாறும் மற்றும் சுழல் சமச்சீர்த் தன்மை உள்ளவாறும் பொருத்துக.(ஏதேனும் 3 வழிகளில்).
5.
விடுபட்ட இடங்களை நிரப்புக
i) 5 செ.மீ2 = ________ மி.மீ2
ii) 26 மீ2 =________ செ.மீ2
iii) 8 கி.மீ2 =________ மீ2
6.
5\(\frac {3}{7}\) ஐத் தகா பின்னமாக மாற்றுக.
7.
சுருக்குக : \(\frac { 3 }{ 7 } +\frac { 2 }{ 3 }\)
8.
குணா தனது பொருளை ரூ.325 எனக் குறித்து ரூ.30 தள்ளுபடியில் விற்பனை செய்தார் எனில், விற்பனை விலையைக் காண்க.
9.
3a + b ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக.
10.
(10 x 9) - (8 x 2) + 3 ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக.
11.
மலரின் பிறந்த நாள் 20.11.1999 ஆகும். 05.10.2018 அன்று உள்ளபடி அவளுடைய வயதைக் கணக்கிடுக.
12.
ஒரு செயற்கைக்கோள் 7 மணி 16 நிமிடங்கள் 20 வினாடிகள் தன்னுடைய சுற்று வட்டப் பாதையை அடைகிறது. இதனை வினாடிகளில் கணக்கீடுக.
13.
எவையேனும் இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் கூடுதலானது 4 ஆல் வகுபடும். இந்தக் கூற்றை ஓர் எடுத்துக்காட்டுடன் மெய்ப்பிக்க.
14.
7.8 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 5 செ.மீ தூரத்தில் B என்ற புள்ளியைக் குறிக்க. B வழியே கோட்டுத்துண்டிற்கு இணைகொடு வரைக.
15.
62, 78 மற்றும் 109- ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4-ஐ மீதிகளாக் கொடுக்கும் மீப்பெரு பொதுக்காரணி என்ன?
16.
வகுப்பு வாரியாக மாணவர்கள் விரும்பும் பழ வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
| பழங்கள் | வாழைப்பழம் | திராட்சை | ஆப்பிள் | மாம்பழம் | கொய்யா | பப்பாளி | இவை எதுவும் இல்லை |
| மாணவர்களின் எண்ணிக்கை | 8 | 10 | 8 | 7 | 12 | 3 | 2 |
இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரை படம் வரைக .
17.
படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

18.
முல்லைக்கொடி, ஒவ்வொரு பையிலும் 9 ஆப்பிள்கள் கொண்ட 25 பைகள் வைத்திருந்தாள். அவளுடைய 6 நண்பர்களுக்கு அவற்றைச் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தாள் எனில், ஒவ்வொரு நண்பரும் எத்தனை ஆப்பிள்களைப் பெற்றிருப்பர் ? ஆப்பிள்கள் மீதமிருக்க வாய்ப்புண்டா ? உண்டெனில் எத்தனை ?
19.
அளவுகோல் மற்றம் கவராயத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கோட்டுத் துண்டுகளை வரைக. \(\bar { QR } \) = 10 செ.மீ.
20.
அளவுகோல் மற்றம் கவராயத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கோட்டுத் துண்டுகளை வரைக.
(i) \(\bar { AB } \) = 7.5 செ.மீ.
(ii) \(\bar { CD } \) = 3.6 செ.மீ.
(iii) \(\bar { QR } \) = 10 செ.மீ.
21.
விகிதசம விதியைப் பயன்படுத்தி, 3 : 2 மற்றும் 30 : 20 ஆகியன விகிதச் சமமா என ஆராய்க.
22.
கீழ்க்காணும் விகிதங்களில் எது பெரிய விகிதம்?
3 : 4 அல்லது 7 : 8
23.
'u' என்பது இரட்டை எண் எனில் பின்வருவனவற்றை எவ்வாறு குறிப்பிடுவாய்?
(i) 'u' இன் அடுத்த பெரிய இரட்டை எண் எது?
(ii) 'u' இன் முந்தைய சிறிய இரட்டை எண் எது?
24.
ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவர்களை ஒரு குழுவிற்கு ஐந்து மாணவர்கள் வீதம் அமைத்தால் p குழுக்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாது?
25.
காற்புள்ளியைப் ப யன்படுத்திப் பின்வரும் எண்களைப் பன்னாட்டு முறையில் எழுதுக.
1234567890
26.
26 மற்றும் 54 இன் மீ.பொ.கா. 2 எனில் 54 மற்றும் 28 இன் மீ.பொ.கா...
26
2
54
1
27.
1, 3, 4, 7...என்ற லூக்காஸ் தொடரின் 11 வது உறுப்பு
199
76
123
47
28.
நிலைக்குத்துக்கோட்டை சமச்சீர்க் கோடாகப் பெற்ற சொல் எது ?
DAD
NUN
MAM
EVE
29.
பின்வருவனவற்றுள் சமச்சீர்த் தன்மை பெற்ற படம் எது ?




30.
பின்வருவனவற்றுள் எந்த எழுத்திற்குச் சமச்சீர்க்கோடு கிடையாது ?
A
P
T
U
31.
1 இன் இடதுபுறம் 3 அலகு தொலைவில் உள்ள எண்
-4
-3
-2
3
32.
பூஜ்யத்திற்கு இடது புறம் 20 அலகுகள் தொலைவில் உள்ள எண்ணின் எதிரெண்
20
0
-20
40
33.
-5 முதல் 6 வரையிலான எண்களில் _______ மிகை முழுக்கள் உள்ளன.
5
6
7
11
34.
\(3\over7\) மற்றும் \(2\over9\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு.
\(\frac {13}{63}\)
\(\frac{1}{9}\)
\(\frac{1}{7}\)
\(\frac {9}{16}\)
35.
பின்வரும் கூற்றில் எது தவறானது ?
\({1\over2}>{1\over3}\)
\({7\over8}>{6\over7}\)
\({8\over9}>{9\over10}\)
\({10\over11}>{9\over10}\)
36.
ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது, சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும்?
2 மடங்கு
4 மடங்கு
6 மடங்கு
3 மடங்கு
37.
பின்வரும் வடிவங்கள் சம பரப்பளவுடையவை எனில் எந்த வடிவம் மிகக் குறைந்த சுற்றளவைப் பெற்றுள்ளது?




38.
தள்ளுபடி = குறித்த விலை-_______________.
இலாபம்
விற்பனை விலை
நட்டம்
அடக்க விலை
39.
இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில்
அடக்க விலை = விற்பனை விலை
அடக்க விலை > விற்பனை விலை
அடக்க விலை < விற்பனை விலை
குறித்த விலை = தள்ளுபடி
40.
3 வாரங்கள் = ________ நாள்கள்
21
7
14
28
41.
எது பெரியது ? 0.007 கி, 70 மி.கி, 0.07 செ.கி.
0.07 செ.கி
0.007 கி
70 மி.கி
அனைத்தும் சமம்
42.
1006 கிராமுக்குச் சமமானது
1 கி.கி 6 கி
10 கி.கி 6 கி
100 கி.கி 6 கி
1 கி.கி 600 கி
43.
120- ஐ மீ.சி.ம- ஆகக் கொண்ட எங்களுக்குப் பின்வரும் எந்த எண்ணானது அவற்றின் மீ.பெ.கா-ஆக இருக்க இயலாது?
60
40
80
30
44.
பின்வருவனவற்றில் எவை இருசமபக்க முக்கோணத்தின் பக்கங்களாக அமையும்?
6 செ.மீ, 3 செ.மீ, 3 செ.மீ
5 செ.மீ, 2 செ.மீ, 2 செ.மீ
6 செ.மீ, 3 செ.மீ, 7 செ.மீ
4 செ.மீ, 4 செ.மீ, 8 செ.மீ
45.
பின்வருவனவற்றில் பொருத்தமில்லாதது எது ?
இருசமபக்க விரிகோண முக்கோணம்
இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்
சமபக்க விரிகோண முக்கோணம்
சமபக்கக் குறுங்கோண முக்கோணம்
46.
கொடுக்கப்பட்ட முக்கோணம் எவ்வகையைச் சார்ந்தது?
இருசமபக்கச் செங்கோண முக்கோணம்
இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்
இருசமபக்கக் விரிகோண முக்கோணம்
அசமபக்க விரிகோண முக்கோணம்
47.
6354 x 97ஆனது 9 ஆல் வகுபடும் எனில், * இன் மதிப்பு
2
4
6
7
48.
படத்தில் உள்ள ஒரு கோடமைப் புள்ளிகள் _______________

A, B, C
A, F, C
B, C, D
A, C, D
49.
படத்தில், \(\angle AYZ =45°\)கதிரின் மீது அமைந்த புள்ளி A-ஆனது B-க்கு நகர்கிறது எனில் கோண அளவு \(\angle BYZ \) ____________.

> 45°
45°
< 45°
90°
50.
பட்டை வரைபடத்தில் உள்ள பட்டைகளின் இடைவெளியானது __________.
வெவ்வேறாக இருக்கும்
சமமாக இருக்கும்
சமமாக இருக்காது
இவை அனைத்தும்
51.
பட விளக்கப்படத்தில் ஒரு படத்தின் வழியாகப் பலபொருட்களைக் குறித்தல் ______ எனப்படும்.
நேர்கோட்டுக் குறிகள்
பிக்டோ வேர்டு
அளவிடுதல்
நிகழ்வெண்
52.
பின்வரும் கோவைகளில் எது பூச்சியமல்ல?
0 \(\times\) 0
0 + 0
2 / 0
0 / 2
53.
(53 + 49) \(\times\) 0 என்பது
102
0
1
53 + 49 \(\times\) 0
54.
திட்ட வடிவில் 7 என்ற எண் மதிப்பிற்கான நேர்க்கோட்டுக்குறிகள் __________ எனக் குறிக்கப்படுகின்றன.
7



55.
ஒரு நபர் 15 கி.மீ நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர் ___________ நடப்பார்.
10 கி.மீ
8 கி.மீ
6 கி.மீ
12 கி.மீ
56.
பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும் ?
3 : 5 , 6 : 11
2 : 3, 9 : 6
2 : 5, 10 : 25
3 : 1, 1 : 3
57.
பட்டியலில் எந்த எண் வரிசை சிறியதிலிருந்து பெரியதாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது?
1468, 1486, 1484
2345, 2435, 2235
134205, 134208, 154203
383553, 383548, 383642
58.
\(\frac { 3c }{ 4 } \) என்பது 18 எனில் 'c' இன் மதிப்பு
c = 15
c = 21
c = 24
c = 27
59.
4 : 7 இன் சமான விகிதமானது.
1 : 3
8 : 15
14 : 8
12 : 21
60.
மாறி என்பதன் பொருள்
சில மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது
நிலையான மதிப்பைக் கொண்டது
வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது
8 மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது
61.
கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி உன்னுடைய பெயரை OMR தாளில் நிரப்புக
இடமிருந்து வலமாக உன்னுடைய பெயரை ஆங்கில பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும்.
ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே ஒரு எழுத்து மட்டும் இருக்க வேண்டும்.
கடைசியில் உள்ள நிரப்பப்படாத கட்டங்களை விட்டு விட வேண்டும்
பந்துமுனைப் பேனாவைப் பயன்படுத்தி ஆங்கில எழுத்துக்களுக்கு நேராகக் கீழே உள்ள வட்டங்களை நிழலிட வேண்டும்
62.
பின்வருவனவற்றிற்குப் படம் வரைக.
i) எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் சுழல் சமச்சீர்த் தன்மை இல்லை.
ii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை இல்லை.
iii) எதிரொளிப்பு மற்றும் சுழல் சமச்சீர்த் தன்மை இரண்டும் பெற்றது.
63.
கீழேயுள்ள எண்கோட்டிலிருந்து, பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

i) எது பெரிய முழு : G அல்லது K ? ஏன் ?
ii) C ஐக் குறிக்கும் முழு எது ?
iii) G மற்றும் H இக்கு இடையே எத்தனை முழுக்கள் உள்ளன ?
iv) எதிரெண் முழுக்களுடைய சோடி எழுத்துக்களைக் காண்க.
v) D இன் இடதுபுறம் 6 அலகுகளில் உள்ள எண் -6. சரியா ? தவறா ?
64.
வண்ணம் பூசுபவர் சுவற்றின் \(3\over 8\) பகுதியை வண்ணம் பூசினார். அதில் மூன்றில் ஒரு பங்கு மஞ்சள் நிற வண்ணம் பூசினார் எனில், மொத்த சுவற்றில் மஞ்சள் நிறம் பூசப்பட்ட பகுதியின் பின்னம் என்ன ?

65.
ஒரு செவ்வகத்தின் நீளமானது அதன் அகலத்தைப் போல் மூன்று மடங்காகும். அதன் சுற்றளவு 64 செ.மீ எனில் செவ்வகத்தின் பக்கங்களைக் காண்க.
66.
கோயம்பத்தூரிலுள்ள ஆவின் விற்பனை நிலையத்தில் 25.06.2018 அன்று வாங்கப்பட்ட பின்வரும் பொருள்களுக்கு 160 எண்ணுள்ள பட்டியல் தயார் செய்க.
(i) ஒன்று ரூ.40 விதம் 100 கி பால்கோவா பாக்கெட்டுகள் 5
(ii) ஒன்று ரூ.8 விதம் மோர் பாக்கெட்டுகள் 5
(iii) ஒன்று ரூ.25 விதம் 500 மி.லி பால் பாக்கெட்டுகள் 6
(iv) ஒன்று ரூ.40 விதம் 100 கி நெய் பாக்கெட்டுகள் 5
67.
சென்னை-திருச்சி விரைவு வண்டியின் வந்து சேரும் நேரமும், புறப்படும் நேரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| நிலையம் | வந்து சேரும் நேரம் | புறப்படும் நேரம் |
| சென்னை எழும்பூர் | - | 20.30 |
| செங்கல்பட்டு | 21.30 | 21.32 |
| விழுப்புரம் சந்திப்பு | 23.15 | 23.25 |
| விருத்த்தச்சலம் சந்திப்பு | 00.07 | 00.10 |
| திருச்சி | 04.30 | - |

68.
பின்வரும் மரவுரு வரைபடத்தை இயற்கணித கோவையாக மாற்றி எழுதுக.
69.
18,24 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பெ.கா.காண்க.
70.
பின்வரும் கோண அளவுகளைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா? ஆம் எனில், அம்முக்கோணத்தின் வகையைக் குறிப்பிடுக.
(i) 60°, 60°, 60°
(ii) 90°, 55°, 35°
(iii) 60°, 40°, 42°
(iv) 60°, 90°, 90°
(v) 70°, 60°, 50°
(vi) 100°, 50°, 30°
71.
30 மாணவர்களிடம் அவர்களின் எதிர்கால விருப்பம் அறிய நேர்காணல் நடத்தப்பட்டது.அவர்களுடைய விருப்பங்கள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன
| தொழில் | நேர்கோட்டுகுறிகள் |
| ஆசிரியர் | |
| விமானி | |
| வங்கி மேலாளர் | |
| மருத்துவர் | |
| பொறியாளர் | |
| மற்ற தொழில்கள் |
இத்தரவுகளுக்கு பட விளக்கப்படம் வரைக
72.
கோணமானியைப் பயன்படுத்திக் கோணம் 90° வரைதல்.
73.
மாய முக்கோணத்தில் 1 லிருந்து 6 வரை எண்களைப் பயன்படுத்தி எத்தனை விடைகளைக் கொண்டு வரலாம்? ஆனால் அனைத்துப் பக்கங்களிலும் ஒரே கூடுதல் வரவேண்டும்.

74.
கடந்த ஐந்து மாதங்களில் ஒரு குறிப்பிட்ட பொது நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை முறையே 1200, 2000, 2450, 3060 மற்றும் 3200. ஐந்து மாதங்களில் அந்த நூலகத்திற்கு வருகை புரிந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர்?
75.
உன் நண்பன் 5 ஆப்பிள்களை ரூ.70 இக்கும், நீ 6 ஆப்பிள்களை ரூ.90 இக்கும் வாங்கினால். யார் வாங்கியது சிறப்பு ?
76.
ஒரு தட்டில் சில முட்டைகள் உள்ளன. தட்டிலிருந்து 6 முட்டைகளை எடுத்து விட்டால் மீதம் 10 முட்டைகள் உள்ளன எனில் மொத்தம் எத்தனை முட்டைகள் தட்டில் இருந்திருக்கும்?
77.
ஒரு சதுரத்தின் பக்கம் பாதியாக்கப்பட்டால் கிடைக்கப்பெற்ற சதுரத்தின் சுற்றளவு என்ன ?
78.
பின்வரும் சூழல்களை முழுக்களாக குறிப்பிடுக.
i) ரூ 2000 நட்டம் ,
ii) கி.பி (பொ . ஆ.பி ) 2018
iii) மீன்கள் கடல் மட்டத்திலிருந்து 60 மீ கீழே காணப்படுவது.
iv) 00 C இக்குக் கீழ் 180 C
v) 13 புள்ளிகள் இலாபம் அடைதல்
vi) ஒரு விசைப்பிறி (jet ) விமானம் 2500 மீ உயரத்தில் இருப்பது
79.
எண் கோட்டில் -4 ஐ அடைய 3 இன் இடதுபுறம் நீ எத்தனை அலகுகள் நகர வேண்டும் ?
80.
ஒவ்வொரு படத்திலும் குறிக்கப்பட்டுள்ள புள்ளிக்கோடு அதற்குச் சமச்சீர்க்கோடு ஆகுமா ? ஆம் எனில் '✔️' குறிப்பிடுக, இல்லையெனில் x குறியிடுக. உனது விடையை நியாயப்படுத்துக.

81.
18 ல் எத்தனை 6 கள் உள்ளன?
82.
சுருக்குக : 35 x \(\frac { 5 }{ 7 } \)
83.
பின்வரும் சமான பின்னங்களில் விடுபட்ட எண்களைக் காண்க.
i) \(\frac { 3 }{ 5 } =\frac { 9 }{ } \)
ii) \(\frac { }{ 7 } =\frac { 16 }{ 28 } \)
iii) \(\frac { }{ 3 } =\frac { 10 }{ 15 } \)
iv) \(\frac { 42 }{ 48 } =\frac { }{ 8 } \)
84.
48 மற்றும் 28 இன் மீ.பொ.கா-வைக் காண்க. மேலும் இந்த இரு எண்களின் வேறுபாட்டிற்கும் 48 இக்கும் மீ.பொ.கா காண்க.
85.
பின்வருவனவற்றின் சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடிக்க.

86.
எந்தக் கோணம் அதன் மிகை நிரப்புக் கோணத்தின் மூன்றில் இரு மடங்கிற்குச் சமமாக இருக்கும்?
87.
மலர்க்கொடியிடம் 10 ஆரஞ்சுகள் உள்ளன. அவள் 4 ஆரஞ்சுப் பழங்களை உண்டுவிட்டால், உண்ணாத பழங்களின் பின்னம் என்ன?
88.
மங்கை ஓர் அலைபேசியை ரூ.12585 க்கு வாங்கினார். அது கீழே விழுந்து பழுதாகி விட்டது. அதை சரி செய்ய ரூ.500 செலவு செய்து அவர் ரூ.7500 க்கு விற்பனை செய்தார். அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
89.
மணிமேகலை ரூ.25,52,500க்கு ஒரு வீட்டை வாங்கி அதைச் சீரமைக்க ரூ.2,28,350 செலவு செய்தார். அவர் அவ்வீட்டை ரூ.30,52,000க்கு விற்றார் எனில் அவரது இலாபம் அல்லது நாட்டம் காண்க.
90.
பாரி ஓர் உந்து வண்டியை ரூ. 55,000 க்கு வாங்கி ரூ. 55,00 இலாபத்திற்கு விற்பனை செய்தார். எனில் உந்து வண்டியின் விற்பனை விலை என்ன ?
91.
சரவணன் என்பவர் 5 கி.மீ தொலைவுள்ள சாலையின் ஒரு புறத்தில் 2 மீ 50 செ.மீ இடைவெளியில் மரக்கன்றுகளை நடுகிறார். அவரிடம் 2560 மரக்கன்றுகள் இருந்தால் எத்தனை மரக் கன்றுகளை நட்டிருப்பார்? மீதமுள்ள மரக்கன்றுகள் எத்தனை ?
92.
கீழ்க்கண்ட நேரங்களுக்கு இடைப்படட கால இடைவெளியைக் காண்க
(i) 5.30 மு.ப. முதல் 12.40 பி.ப வரை
(ii) 1.30 பி.ப முதல் 10.25 பி.ப வரை
(iii) 20 மணி முதல் 4 மணி வரை
(iv) 17 மணி முதல் 5.15 மணி வரை
93.
10 முதல் 20 வரையுள்ள அனைத்துப் பகா எண்களின் கூடுதலானது அனைத்து ஓரிலக்க எண்களால் வகுபடுமா என ஆராய்க.
94.
n = 2 முதல் 8 வரை உள்ள எந்த எண்களுக்கு, 2n - 1 ஆனது, ஒரு பகா எண் ஆகும்?
95.
ஓர் இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் 70o எனில் மற்ற இரு கோணங்கள் அளவுகள் என்னென்னவாக இருக்கலாம் ?
96.
ஒவ்வோர் எண்ணையும் காரணிச்செடி முறை மற்றும் வகுத்தல் முறை மூலம் பகாக் காரணிப்படுத்துக.
(i) 60
(ii) 128
(iii) 144
(iv) 198
(v) 420
(vi) 999
97.
பின்வரும் முக்கோணங்களைப் பக்கங்கள் மற்றும் கோணங்களின் அடிப்படையில் வகைப்படுத்துக.
98.
தடித்து வரையப்பட்ட கோடுகளை (இணை , வெட்டு அல்லது செங்குத்துக் கோடுகள்) என வகைப்படுத்தி எழுதுக.
99.
ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் விதம் பற்றிய தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இத்தரவுக்குப்பட விளக்கப்படம் வரைக .
| பள்ளிக்கு வரும் விதம் | நடைப் பயணம் | மிதிவண்டி | ஈருளி | பேருந்து | மகிழுந்து |
| மாணவர்கள் எண்ணிக்கை | 350 | 300 | 150 | 100 | 100 |
100.
ஏழு இலக்க எண் 29,75,842 ஐ இலட்சம் மற்றும் பத்து இலட்சத்துக்கு முழுமையாக்குக. அம்மதிப்புகள் சமமாக இருக்குமா?
101.
கீழ்காணும் வினாக்களில் பெறும் பண்பு யாது?
75 + 34 = 34 + 75
102.
பின்வரும் எண்களைக் கொடுக்கப்பட்ட இட மதிப்பிற்கு முழுமைப்படுத்துக.
33,75,98,482; பத்துக் கோடி
103.
உன்னிடம் இரண்டு சிவப்பு மற்றும் இரண்டு நீல வண்ணங்களில் கட்டைகள் உள்ளன. அக்கட்டைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி எத்தனை நான்கு தளக் கட்டடம் அமைக்கலாம்? அவற்றை வரிசைப்படுத்துக.
104.
கீழ்க்காணும் விகிதங்களுக்கு இரண்டு சமான விகிதங்களை எழுதுக.
5 : 4
105.
பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 8 இலிருந்து 'y' ஐக் குறைக்க.
106.
பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 100 உடன் 't' ஐக் கூட்டுக.
107.
அட்டவணையை நிறைவு செய்க.
| நாட்க ள் | 28 | 21 | ? | 63 |
| வாரங்கள் | 4 | 3 | 2 | ? |
1.
i) (188,230) இன்
மீ.பொ.கா = (230, 188) இன் மீ.பொ.கா
= (230 - 188,188) இன் மீ.பொ.கா
= (42,188) இன் மீ.பொ.கா
= (42, 188 – 42) இன் மீ.பொ.கா
= (42,146) இன் மீ.பொ.கா
= (42, 146 - 42) இன் மீ.பொ.கா
= (42, 104) இன் மீ.பொ.கா
= (42,104 - 42) இன் மீ.பொ.கா
= (42, 62) இன் மீ.பொ.கா
= (42,62 - 42) இன் மீ.பொ.கா
= (42, 20) இன் மீ.பொ.கா
= (42 - 20,20) இன் மீ.பொ.கா
= (22, 20) இன் மீ.பொ.கா
= (22 - 20,20) இன் மீ.பொ.கா
= (2, 20) இன் மீ.பொ.கா
= 2
188 மற்றும் 230 இன் மீ.பொ.கா = 2.
2.
i) வெப்பமானி. காட்டும் வெப்பநிலை அளவு -10°.
ii) வெப்பமானியில் 0°C இக்குக் கீழே 5°C ஐ −5°C என குறிக்கலாம்.
iii) வெப்பமானியில் உள்ள வெப்பநிலையை 10°C குறைத்தால் வெப்பநிலை -20°C ஆக இருக்கும்.
iv) வெப்பமானியில் 15°C இக்கு எதிரெண் -15°C.
3.
இல்லை, எண் கோட்டினை இருபுறம் முடிவின்றி விரிவாக்கம் செய்யலாம். எனவே மிகச்சிறிய எண்ணையும் மிகப் பெரிய எண்ணையும் காண இயலாது.
4.

5.
i) 5 செ.மீ2 = 5 x 100 = 500 மி.மீ2
ii) 26 மீ2 = 26 x 10000 = 2,60,000 செ.மீ2
iii) 8 கி.மீ2 = 8 x 1000000 = 80,00,000 மீ2
6.

5\(\frac {3}{7}\) = \(\frac { (5\times 7)+3 }{ 7 } \)
\(=\frac { 35+3 }{ 7 } =\frac { 38 }{ 7 } \)
7.
குறுக்குப் பெருக்கல் முறையில் செய்க \(\frac { 3 }{ 7 } +\frac { 2 }{ 3 } =\frac { (3\times 3)+(2\times 7) }{ 7\times 3 } =\frac { 9+14 }{ 21 } =\frac { 23 }{ 21 } \)
8.
பொருளின் குறித்த விலை = ரூ.325
தள்ளுபடி = ரூ.30
விற்பனை விலை = குறித்த விலை - தள்ளுபடி
= ரூ.325 - ரூ.30
= ரூ 295
பொருளின் விற்பனை விலை = ரூ 295.
9.
இயற்கணித கோவை 3a + b
10.
11.

12.
செயற்கைக்கோள் தன்னுடைய சுற்று வட்டப் பாதையை அடைய எடுத்துக்கொண்ட நேரம்
= 7 மணி 16 நிமிடங்கள் 20 வினாடி்கள்
= (7 x 60 x 60) வினாடிகள் +(16 x 60) வினாடிகள் + 20 வினாடிகள்
= 25200 வினாடிகள் + 960 வினாடிகள்+ 20 வினாடிகள்
= 26,180 வினாடி்கள்
செயற்கைக்கோள் எடுத்துக்கொண்ட நேரம் 26,180 வினாடிகள்
13.
இரு அடுத்தடுத்த ஒற்றை எண்கள் 17, 19 என்க. 17 + 19 = 36, 4 ஆல் வகுபடும்.
எனவே எவையேனும் இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் கூடுதலானது 4 ஆல் வகுபடும் என்ற கூற்று சரி.
14.

படி 1: xy = 7.8 செ.மீ அளவுள்ள ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டின் மேல் A என்ற புள்ளியைக் குறிக்க.
படி 2 : XY க்கு மேல் முலைமட்டத்தைப் பொருத்துக. XY க்கு மேலே 5 செ.மீ தூரத்தில் B என்ற புள்ளியைக் குறிக்க.
படி 3 : அளவுகோல் மற்றும் முலைமட்டத்தைப் பயன்படுத்தி B வழியாக BC என்ற கோடு வரைக.
படி 4 : BC ஆனது XY க்கு இணைகோடாகும். அதாவது BC || XY.
15.
கொடுக்கப்பட்ட எண்களில் மீதியைக் கழிக்க. 62 - 2, 78 - 3 மற்றும் 109 - 4, அதாவது 60, 75 மற்றும் 105-ஐ வகுக்கும் பொதுக் காரணிகளைக் காணவும். 60, 75 மற்றும் 105 -ஐ வகுக்கும் மி்கப்பெரிய எண்ணானது அவற்றின் மீ.பெ.கா. ஆகும்.
60 = 2 x 2 x 3 x 5
75 = 3 x 5 x 5
105 = 3 x 5 x 7
ஆகவே மீ.பெ.கா. = 3 x 5 = 15 ஆனது 62, 78, 109-ஐ வகுத்து முறையே 2, 3 ,4-ஐ மீதியாகக் கொடுக்கும் மி்கப் சபரிய எண் ஆகும்.
16.
17.
தீர்வு:

A, B, C, D மற்றும் E என்பன 5 முக்கோணங்கள்.
இவற்றில் எந்த இரு முக்கோணங்களும் இணைந்து புதிய முக்கோணத்தை அமைக்காது.
A, F & C; A, F & D; B, F & E; B, F & D மற்றும் C, F & E என்பன முக்கோணத்தை அமைக்கும்.
அதாவது, 1 + 1 + 1 + 1 + 1=5 முக்கோணங்கள்
\(\therefore\)மொத்த முக்கோணங்க ள் = 5 + 5 =10
18.
முல்லைக்கொடி வைத்திருந்த பைகள் = 25
ஒவ்வொரு பையிலும் உள்ள ஆப்பிள்கள் = 9
மொத்த ஆப்பிள்களின் எண்ணிக்கை = 25 x 9
= 225 = 6
நண்பர்களின் எண்ணிக்கை = 6
ஒவ்வொரு நண்பரும் பெற்ற ஆப்பிள்கள்
\(=\frac{225}{6}\) = 37, மீதம் = 3
ஆறு நண்பர்களில் ஒவ்வொருவரும் 37 ஆப்பிள்கள் பெற்றிருப்பர். 3 ஆப்பிள்கள் மீதமிருக்கும்.
19.

வரையும் முறை:
1. 'l' என்ற கோடு வரைக. அதில் 'Q' என்ற புள்ளியைக் குறிக்க.
2. கவராயத்தைப் பயன்படுத்தி 10 செ.மீ. நீளத்தை அளக்க; கவராயத்தின் உலோக முனையை '0' விலும் மற்றும் எழுதுகோல் முனையை 3.6 செ.மீட்டரிலும் அளவுகோலின் மேல் வைக்கவும்.
3.கவராயத்தின் உலோக முனையை Q யில் வைத்து, 'l' இன் மீது ஒரு சிறிய வில் வரைக.
4. இது l ஐ ஒரு புள்ளியில் வெட்டுகிறது.
5. வெட்டும் புள்ளிக்கு 'R' எனப் பெயரிடுக.
6. இங்கு, \(\overline { QR } \) = 10 செ.மீ. என்பது தேவையான கோட்டுத்துண்டு ஆகும்.
20.
21.
கோ டி உறுப்புகளின் பெருக்கற்பலன், ad = 3 x 20 = 60.
நடு உறுப்புகளின் பெருக்கற்பலன், bc = 2 x 30 = 60.
இங்கு, ad = bc. எனவே , கொடுக்கப்ப ட்ட விகிதங்கள் விகிதச் சமத்தில் உள்ளன.
22.
3 : 4 ன் சமான விகிதம்
\(=\frac{3}{4} \times \frac{2}{2}=\frac{6}{8}=6: 8
\)
\(=\frac{6}{8}<\frac{7}{8}
\)
\(=\frac{3}{4}<\frac{7}{8}
\)
7 : 8 பெரியது.
23.
இரட்டை எண்கள் = 2, 4, 6,.......
இரட்டை எண் = ''u''
(i) அடுத்த இரட்டை எண் = u + 2
(ii) முந்தைய இரட்டை எண் = u - 2
24.
ஒரு ழுழுவிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை = 58
'p' குழுக்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை = 5 \(\times\) p = 5p
25.
1,234,567,890 = ஒரு பில்லியன் இருநூற்று முப்பத்து நான்கு மில்லியன் ஐநூற்று அறுபத்து ஏழாயிரத்து எண்ணூற்று தொண்ணூறு.
26.
(b)
2
27.
(a)
199
28.
(c)
MAM
29.
(c)

30.
(b)
P
31.
(c)
-2
32.
(a)
20
33.
(c)
7
34.
(a)
\(\frac {13}{63}\)
35.
(d)
\({10\over11}>{9\over10}\)
36.
(d)
3 மடங்கு
37.
(b)

38.
(b)
விற்பனை விலை
39.
(a)
அடக்க விலை = விற்பனை விலை
40.
(a)
21
41.
(c)
70 மி.கி
42.
(a)
1 கி.கி 6 கி
43.
(c)
80
44.
(c)
6 செ.மீ, 3 செ.மீ, 7 செ.மீ
45.
(c)
சமபக்க விரிகோண முக்கோணம்
46.
(c)
இருசமபக்கக் விரிகோண முக்கோணம்
47.
(a)
2
48.
(b)
A, F, C
49.
45°
50.
(b)
சமமாக இருக்கும்
51.
(c)
அளவிடுதல்
52.
(c)
2 / 0
53.
(b)
0
54.
(b)

55.
(c)
6 கி.மீ
56.
(c)
2 : 5, 10 : 25
57.
(c)
134205, 134208, 154203
58.
(c)
c = 24
59.
(d)
12 : 21
60.
(c)
வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது
61.

62.

63.
i) G யின் மதிப்பு = -3, K யின் மதிப்பு = -1 எண்கோட்டில் K என்ற எண் G க்கு வலதுபுறம் உள்ளது. எனவே G பெரியது.
ii) C ஐக் குறிக்கும் முழு -4.
iii) G க்கும் H க்கும் இடையில் 6 முழுக்கள் உள்ளன. அவை -2, -1, 0, 1, 2, 3
iv) எதிரெண் முழுக்களுடைய 2 சோடி எழுத்துக்கள் C, H மற்றும் E, J.
v) D இன் இடதுபுறம் 6 அலகுகளில் உள்ள எண் -6 என்பது தவறு. சரியான எண் 0.
64.
வண்ணம் பூசப்படும் பகுதியின் பின்னம் = \(\frac { 3 }{ 8 } \)
மஞ்சள் நிற வண்ணப் பகுதியின் பின்னம் = \(\frac { 3 }{ 8 } \) இல் மூன்றில் ஒரு பங்கு
\(=\frac{1}{3} \times \frac{3}{8}=\frac{1}{8}\)
மஞ்சள் நிறம் பூசப்பட்ட பகுதியின் பின்னம் = \(\frac { 1 }{ 8 } \)
65.
செவ்வகத்தின் சுற்றளவு = 64 செ.மீ
செவ்வகத்தின் நீளம் l = 3 x அகலம் = 3 x b
2(l + b) = 64
2(3b + b ) = 64
2 x 4b = 64
\(4 b=\frac{64}{2}\)
4b = 32
\(b=\frac{32}{4}=8\) செ.மீ
= 3b
l = 3 x 8 = 24 செ.மீ
செவ்வகத்தின் நீளம் = 24 செ.மீ
செவ்வகத்தின் அகலம் = 8 செ.மீ.
66.
1. பால்கோவா \(\Rightarrow \) 5 x ரூ.40 = ரூ.200
2. மோர் \(\Rightarrow \) 5 x ரூ. 8 = ரூ. 40
3. பால் \(\Rightarrow \) 6 x ரூ.25 = ரூ.150
4. நெய் \(\Rightarrow \) 5 x ரூ.40 = ரூ.200
________
மொத்தம் ரூ.590
________
| ரொக்கப் பட்டியல் ஆவின் விற்பனை நிலையம் , கோயம்பத்தூர் |
||||
| பட்டியல் எண்:160 நாள் : 25.06.2018 | ||||
| வ.எண் | பொருள்கள் | விலை(ரூ.இல்) | அளவு | தொகை(ரூ.இல்) |
| 1. 2. 3. 4. |
பால்கோவா மோர் பால் நெய் |
40 /பாக்கெட்டு 8/பாக்கெட்டு 25/பாக்கெட்டு 40 /பாக்கெட்டு |
5 5 6 5 |
200 40 150 200 |
| மொத்தம் | 590 | |||
67.
1.இந்தத் தொடர்வண்டி எத்தனை மணிக்குச் சென்னை எழும்பூரில் புறப்படடு எத்தனை மணிக்குத் திருச்சி வந்தளடகிறது?
இந்தத தொடர்வண்டி எழும்பூரில் 20:30 மணிக்குப் புறப்படடுத் திருச்சியை 4:30 மணிக்கு வந்தடைகிறது.
2. விழுப்புரத்தில் எவ்வளவு நேரம் நிற்கிறது?
விழுப்புரத்தில் 10 நிமிட நேரம் நிற்கிறது (23:25 - 23:15 = 10 நிமிடங்கள்)
3. சென்னையில் இருந்து திருச்சி வராய் ஏத்தனை நிறுத்தங்கள் உள்ளன?
3 நிறுத்தங்கள்: 1. செங்கல்பட்டு : 2. விழுப்புரம் சந்திப்பு: 3.விருத்த்தச்சலம் சந்திப்பு
4. சென்னையில் இருந்து திருச்சிக்குச் செசல்லும் இத்தொடர் வண்டியின் பயண நேரத்தைக் கணக்கிடுக.
68.
1.P + q
2. l - m
3.(ab) - c
4. (a + b) - (c + d)
5. 8/a + (b/4 + 3)
69.

70.
(i) 60°, 60°, 60°
மூன்று கோணங்களின் கூடுதல் = 60°, 60°, 60° = 1800
எனவே, கொடுக்கப்பட்ட கோண அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலும்.
இது குறுங்கோண முக்கோணம்.
(ii) 90°, 55°, 35°
மூன்று கோணங்களின் கூடுதல் = 90°, 55°, 35° = 180o
எனவே, கொடுகப்பட்ட கோண அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலும். இது செங்கோண முக்கோணம்.
(iii) 60°, 40°, 42°
மூன்று கோணங்களின் கூடுதல் = 60°, 40°, 42°\(\neq \) 180o
எனவே, கொடுக்கப்பட்ட கோண அளவுகளைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலாது.
(iv) 60°, 90°, 90°
மூன்று கோணங்களின் கூடுதல் = 60°, 40°, 42°\(\neq \) 180o
எனவே, கொடுக்கப்பட்ட கோண அளவுகளைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலாது.
(v) 70°, 60°, 50°
மூன்று கோணங்களின் கூடுதல் = 60°, 40°, 42° = 180o
எனவே, கொடுக்கப்பட்ட கோண அளவுகளைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலும். இது குறுங்கோண முக்கோணம்.
(vi) 100°, 50°, 30°
மூன்று கோணங்களின் கூடுதல் = 60°, 40°, 42° = 180o
எனவே, கொடுக்கப்பட்ட கோண அளவுகளைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலும். இது விரிகோண முக்கோணம்.
71.
| தொழில் | மாணவர்கள் எண்ணிக்கை |
| ஆசிரியர் | |
| விமானி | |
| வங்கி மேலாளர் | |
| மருத்துவர் | |
| பொறியாளர் | |
| மற்ற தொழல்கள் |
72.
அடிப்பக்கக் கதிர் வரைதல்![]() |
அடிப்பக்கக் கதிர் வரைதல் ![]() |
![]() கோணமோனியின் நடுப் புள்ளிகை உச்சிப் புள்ளி P இல் வைக்கவும். 0° கோட்டோடு \(\overrightarrow { PQ } \) கதிரை சேருமாறு வைக்கவும். உள் அளவுகோலில் 90 இல் ஒரு புள்ளியைக் குறித்து R எனப் பெயரிடுக (கடிகார எதிர்த்திசையில்) ![]() கோணமானியை எடுத்துவிட்டு கோணத்தை அமைக்கக் கதிர் \(\overrightarrow { PQ } \) வரைக. இங்கு, \(\angle \)P =\(\angle \)QPR =\(\angle \)RPQ = 90° |
![]() கோணமோனியின் நடுப்புள்ளியை உச்சிப்புள்ளி P இல் வைக்கவும். 0° கோட்டோடு \(\overrightarrow { PQ } \) கதிரை சேருமாறு வைக்கவும். உள் அளவுகோலில் 90 இல் ஒரு புள்ளியைக் குறித்து R எனப் பெயரிடுக (கடிகாரத் திசையில்) ![]() கோணமானியை எடுத்துவிட்டு கோணத்தை அமைக்கக் கதிர் \(\overrightarrow { PQ } \) வரைக. இங்கு, \(\angle \)P = \(\angle \)QPR =\(\angle \)RPQ = 90° |
73.
இதன் ஒரு விடை

74.
முதல் மாதம் நூலகத்திற்கு வருகைபுரிந்தவர்களின் எண்ணிக்கை = 1200
2வது மாதம் நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை = 2000
3வது மாதம் நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை = 2450
4வது மாதம் நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை = 3060
5வது மாதம் நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை = 3200
மொத்தம் வருகை புரிந்தவர்கள் = 11,910
நூலகத்திற்கு 5 மாதங்களில் மொத்தம் வருகை புரிந்தவர்கள் = 11,910
75.
நண்பன் வாங்கியது 5 ஆப்பிள்கள் = ரூ. 70
நீ வாங்கியது 6 ஆப்பிள்கள் = ரூ. 90
விகிதம் = விலை ÷ ஆப்பிள்
நண்பன் விகிதம் = 14 : 1
உன்னுடைய விகிதம் = 15 : 1
நண்பன் வாங்கியது சிறப்பு.
76.
கொடுக்கப்பட்ட கூற்றிலிருந்து,

இதனை, 'x - 6 ' என எழுதலாம். இங்கு 'x' என்பது தெரியாத எண் ஆகும்.
அடுத்ததாக, x இல் எம்மதிப்பை பிரதியிட்டால், 'x - 6' ஆனது 10 ஐத் தரும் எனக் கண்டறிவோம்.
| 'x' ன் மதிப்பு | x-6 | முடிவு | முடிவு 10 ஆக உள்ளதா ? ஆம்/இல்லை |
| 7 | 7 - 6 | 1 | இல்லை |
| 10 | 10 - 6 | 4 | இல்லை |
| 12 | 12 - 6 | 6 | இல்லை |
| 15 | 15 - 6 | 9 | இல்லை |
| 16 | 16 - 6 | 10 | ஆம் |
| 18 | 18 - 6 | 12 | இல்லை |
எனவே, 'x' இன் தெரியாத எண் (மாறி) 16 ஆகும்.
77.
சதுரத்தின் பக்கம் = S
பாதியாக்கப்பட்டால் கிடைக்கும் பக்கம் = \( \frac{s}{2}\)
சதுரத்தின் சுற்றளவு = (4 x பக்கம்) அலகுகள்
\(=4 \times \frac{s}{2}\)
= 2 s அலகுகள்
சதுரத்தின் சுற்றளவு = 2 s அலகுகள்.
78.
i) ரூ 2000 நட்டம் என்பது குறை என்பதால் -2000 எனக் குறிப்பிடலாம்.
ii) கி.பி (பொ.ஆ.பி) 2018 என்பதை + 2018 எனக் குறிப்பிடலாம்.
iii) மீன்கள் கடல் மட்டத்திலிருந்து 60 மீ கீழே காணப்படுவதை -60 எனக் குறிப்பிடலாம்.
iv) 0°C இக்குக் கீழ் 18°C என்பதை - 18 எனக் குறிப்பிடலாம்.
v) 13 புள்ளிகள் இலாபம் அடைதல் என்பதை +13 எனக் குறிப்பிடலாம்.
79.
எண் கோட்டில் -4 ஐ அடைய 3 இன் இடதுபுறம் 7 அலகுகள் நகர வேண்டும்.
80.

81.
18 ல் மூன்று 6 கள் உள்ளது.
82.
83.
(i) \(\frac{3}{5}=\frac{3 \times 3}{5 \times 3}=\frac{9}{15}
\)
\(\frac{3}{5}=\frac{9}{15}
\)
(ii) \(\frac{16}{28} \div \frac{4}{4}=\frac{4}{7}
\)
\(\frac{4}{7}=\frac{16}{28}
\)
(iii) \(\frac{10}{15} \div \frac{5}{5}=\frac{2}{3}
\)
\(\frac{2}{3}=\frac{10}{15}
\)
(iv) \(\frac{42 \div 6}{48 \div 6}=\frac{7}{8}
\)
\(\frac{42}{48}=\frac{7}{8}
\)
84.
48 மற்றும் 28 இன் மீ.பொ.கா
48 = 2 x 2 x 2 x 2 x 3
28 = 2 x 2 x 7
(48, 28) இன் மீ.பொ.கா = 2 x 2 = 4
48 மற்றும் 28 இன் வித்தியாசம் = 48 - 28 = 20
48 = 2 x 2 x 2 x 2 x 3
20 = 2 x 2 x 5
(48, 20) இன் மீ.பொ.கா = 2 x 2 = 4
85.
(i) சுழல் சமச்சீர் வரிசை = 2
(ii) சுழல் சமச்சீர் வரிசை = 2
(iii) சுழல் சமச்சீர் வரிசை = 4
(iv) சுழல் சமச்சீர் வரிசை = 8
(v) சுழல் சமச்சீர் வரிசை = 2
86.
ஒரு கோண அளவு x0 என்க.
மிகை நிரப்புக் கோணம் = 180° - x0
2/3 இன் மிகை நிரப்புக் கோணம் =x0
\(\frac { 2 }{ 3 } \times { (180-x })^{ 0 }={ x }^{ 0 }\)
\(180°-x=\frac { 3 }{ 2 } x\)
\(\frac { 3 }{ 2 } x+x=180°\)
\(\frac { 5x }{ 2 } =180°\)
\(x=\frac { 180 }{ 5 } \times 2=72°\)
தேவையான கோண அளவு =72°
87.
மலர்கொடியிடம் உள்ள ஆரஞ்சுகள் = 10
அவள் உண்ட ஆரஞ்சுகள் = 4
உண்ணாத பழங்கள் = 10 - 4 = 6
உண்ணாத பழங்களின் பின்னம் = \(\frac { 6 }{ 10 } =\frac { 3 }{ 5 } \)
88.
மங்கை வாங்கிய அலைபேசியின் அடக்க விலை
= ரூ 12, 585
சரிசெய்ய ஆன செலவு = ரூ 500
89.
அடக்க விலை = ரூ.25,52,500 + ரூ.2,28,350
= ரூ.27 ,80,850
விற்பனை விலை = ரூ.30,52,000
அடக்க விலை < விற்பனை விலை
இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
= ரூ.30,52,000 – ரூ.27 ,80,850
= ரூ.2,71,150
90.
அடக்க விலை = ரூ.55,000
இலாபம் = ரூ.5,500
இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
ரூ.5,500 = விற்பனை விலை – ரூ.55,000
விற்பனை விலை = ரூ.5,500 + ரூ.55,000
= ரூ.60,500
91.
சாலையின் நீளம் = 5 கி.மீ = 5 x 100000 செ.மீ
= 500000 செ.மீ
மரக் கன்றுகளுக்கு இடையேயுள்ள இடைவெளி
= 2 மீ 50 செ.மீ
= (2 x 100) + 50 = 250 செ.மீ
மரக் கன்றுகளின் மொத்த எண்ணிக்கை
= 2560
நடப்பட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கை
= 500000/250 = 2000
மீதமுள்ள மரக்கன்றுகளின் எண்ணிக்கை
= 2560 - 2000 = 560
92.
i) 12.40 பி.ப இன் இரயில்வே நேரம் = 12:40 மணி
5:30 மு.ப இன் இரயில்வே நேரம் = 05 : 30 மணி
இடைவெளி நேரம் = 07 : 10 மணி
ii) 10.25 பி.ப இன் இரயில்வே நேரம் = 22 : 25 மணி
1:30 பி.ப இன் இரயில்வே நேரம் = 13 : 30 மணி
இடைவெளி நேரம் = 08 : 55 மணி
iii) 20.00 முதல் 24.00 மணி வரை நேரம் = 04 : 00 மணி
24.00 முதல் 04.00 மணி வரை நேரம் = 04 : 00 மணி
இடைவெளி நேரம் = 08 : 00 மணி
iv) 17 மணி முதல் 24.00 மணி வரை நேரம் = 07 : 00 மணி
24.00 மணி முதல் 05.15 மணி வரை நேரம் = 05 : 15 மணி
இடைவெளி நேரம் = 12 : 15 மணி
93.
10 முதல் 20 வரையுள்ள பகா எண்கள்
= 11, 13, 17, 19
கூடுதல் = 11 + 13 + 17 + 19 = 60
\(\frac{60}{1}=60, \frac{60}{2}=30, \frac{60}{3}=20
\)
\(\frac{60}{4}=15, \frac{60}{5}=12, \frac{60}{6}=10
\)
60 என்ற எண் 1, 2, 3, 4, 5, 6 ஆகிய எண்களால் வகுபடும்.
94.
n = 2, 3, 4, 5, 6, 7, 8
n = 2, எனில்
2n -1 = (2 x 2) - 1 = 4 - 1 = 3, பாக எண்
n = 3, எனில்
2n -1 = (2 x 3) - 1 = 6 - 1 = 5, பாக எண்
n = 4, எனில்
2n -1 = (2 x 4) - 1 = 8 - 1 = 7, பாக எண்
n = 5, எனில்
2n -1 = (2 x 5) - 1 = 10 - 1 = 9 பாக எண் அல்ல
n = 6, எனில்
2n -1 = (2 x 6) - 1 = 12 - 1 = 11 பாக எண்
n = 7, எனில்
2n -1 = (2 x 7) - 1 = 14 - 1 = 13 பாக எண்
n = 8,
2n -1 = (2 x 8) - 1 = 16 - 1 = 15 பகு எண் அல்ல
n = 2, 3, 4, 6 , 7 ஆகிய எண்களுக்கு
2n -1 பகா எண்.
95.
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் = 180o
ஓர் இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் = 70o
மற்ற இரு கோணங்களின் கூடுதல் = 180o - 70o = 110o
மற்ற இரு கோணங்களின் அளவு = 70o, 40o அல்லது 55o, 55o
96.
(i) 60
வகுத்தல் முறை

60 = 2 x 2 x 3 x 5

60 = 2 x 2 x 3 x 5
(ii) 128

128 = 2 x 2 x 2 x 2 x 2 x 2 x 2

128 = 2 x 2 x 2 x 2 x 2 x 2 x 2
(iii) 144

144 = 2 x 2 x 2 x 2 x 3 x 3

144 = 2 x 2 x 2 x 2 x 3 x 3
(iv) 198

198 = 2 x 3 x 3 x 11

198 = 2 x 3 x 3 x 11
(v) 420

420 = 2 x 2 x 3 x 5 x 7

420 = 2 x 2 x 3 x 5 x 7
(vi) 999

999 = 3 x 3 x 3 x 37

999 = 3 x 3 x 3 x 37
97.
i) இருசமபக்க குறுங்கோண முக்கோணம்
ii) அசமபக்கச் செங்கோண முக்கோணம்
iii) இருசமபக்க விரிகோண முக்கோணம்
iv) இருசமபக்கச் செங்கோண முக்கோணம்
v) சமபக்கக் குறுங்கோண முக்கோணம்
vi) அசமபக்க விரிகோண முக்கோணம்
98.
இணை கோடுகள்
99.
| பள்ளிக்கு வரும் விதம் | மாணவர்களின் எண்ணிக்கை |
| நடைப்பயணம் | |
| மிதிவண்டி | |
| ஈருளி | |
| பேருந்து | |
| மகிழுந்து |
ஒரு 100 மாணவர்களைக் குறிக்கும்.
ஓரு 50 மாணவர்களைக் குறிக்கும்.
100.
29,75,842 ஐ இலட்சத்துக்கு முழுமையாக்கினால் மதிப்பு = 30,00,000
29,75,842 ஐ பத்து இலட்சத்துக்கு முழுமையாக்கினால் மதிப்பு = 30,00,000
இரண்டும் சமமானது.
101.
கூட்டலின் பரிமாற்றுப் பண்பு
102.
33,75,98,482 ஐ பத்துக் கோடிகளுக்கு முழுமைப்படுத்திய மதிப்பு = 30,00,00,000
103.
கட்டைகளின் எண்ணிக்கை= 4(2 சிவப்பு, 2 நீலம்)
சிவப்பு - நீலம் - சிவப்பு - நீலம்
நீலம் - சிவப்பு - நீலம் - சிவப்பு
சிவப்பு - சிவப்பு - நீலம் - நீலம்
நீலம் - நீலம் -சிவப்பு - சிவப்பு
சிவப்பு - நீலம் -நீலம் -சிவப்பு
நீலம் - சிவப்பு - சிவப்பு - நீலம்
\(\therefore\)ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி 6 வழிகளில் நான்கு தளக் கட்டடம் அமைக்கலாம்.
104.
விகிதம் 5 : 4
சமான விகிதங்கள் \(=\frac { 5 }{ 4 } \times \frac { 2 }{ 2 } =\frac { 10 }{ 8 } =10:8\)
\(=\frac { 5 }{ 4 } \times \frac { 3 }{ 3 } =\frac { 15 }{ 12 } =15:12\)
105.
8 - y
106.
t + 100
107.
| நாட்க ள் | 28 | 21 | 14 | 63 |
| வார ங்கள் | 4 | 3 | 2 | 9 |
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards