6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 28/02/2020
6 ஆம் வகுப்பு கணிதம் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 (6th Standard Mathematics Tamil Medium Book Back and Creative Important Questions 2020)
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
இராகு ஒரு நாற்காலியை ரூ.3000 க்கு வாங்கினார்.அந்நாற்காலியின் விலையில் ரூ.300 தள்ளுபடி செய்த பின் ரூ.500 இலாபம் பெறுகிறார் எனில் அந்நாற்காலியின் குறித்த விலை என்ன ?

2.
கீதா 2 லி 250 மி.லி கொள்ளவு கொண்ட தண்ணீர்க் குடுவையைக் கொண்டு வந்தாள். அதிலிருந்து அவளுடைய நண்பர்கள் 300 மி.லி தண்ணீர் குடித்து விட்டனர். குடுவையில் உள்ள மீதித் தண்ணீரின் அளவு எவ்வளவு ?
3.
குறிப்பிடப்படட அலகிற்கு மாற்றுக
(i) 10 லி 5 மி.லி - லிருந்து மி.லி
(ii) 4 கி.மீ 300 மீ - லிருந்து மீ
(iii) 300 மி.கி - லிருந்து கி
4.
இரு சார்பகா எண்களின் மீ.சி.ம 5005. ஓர எண் 65 எனில், மற்சறார எண் என்ன?
5.
கொடுக்கப்பட்ட ஒவ்வொரு சோடி கோடுகளும் இடையேயான தொலைவை இரு வேறு புள்ளிகளில் மூலைமட்டத்தைப் பயன்படுத்தி கண்டறிக. அவை இணைகோடுகளா ? என்பதைச் சோதித்தறிக.
6.
வகுத்தல் முறையில் 40 மற்றும் 56 ஆகிய எண்களுக்கு மீ.பெ.கா. காண்க.
7.
பின்வரும் கோணங்களைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 180°
8.
சித்ரா லட்டுகள் வாங்கிக் கீழ்கக் கண்டவாறு வகுப்பு வாரியாகத் தன் நண்பர்களுக்கு வழங்குகிறாள்.
| வகுப்பு | VI | VII | VIII | IX | X |
| இனிப்புகளின் எண்ணிக்கை | 70 | 60 | 45 | 80 | 55 |
இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரை படம் வரைக.
9.
பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

10.
சில விலங்குகளின் அதிகளவு வேகம் கொடுக்கப்பட்டுள்ளது.
யானை = 20 கிமீ/மணி, சிங்கம் = 80 கிமீ/மணி, சிறுத்தை = 100 கிமீ/மணி.
(i) யானை மற்றும் சிங்கம்
(ii) சிங்கம் மற்றும் சிறுத்தை
(iii) யானை மற்றும் சிறுத்தை
ஆகியவற்றின் விகிதங்களை எளிய வடிவில் காண்க. மேலும், எந்த விகிதம் மிகச் சிறியது எனக் காண்க.
11.
காற்புள்ளியைப் ப யன்படுத்திப் பின்வரும் எண்களைப் பன்னாட்டு முறையில் எழுதுக.
7345671
12.
அடுத்த இரண்டு அமைப்புகளை வரையவும் மற்றும் அட்டவணையை நிரப்பவும்.

| வடிவங்கள் | முதலாம் அமைப்பு | இரண்டாம் அமைப்பு | மூன்றாம் அமைப்பு | நான்காம் அமைப்பு | ஐந்தாம் அமைப்பு |
|---|---|---|---|---|---|
| சதுரங்கள் | 1 | 2 |
3 |
||
| வட்டங்கள் | 1 | 2 | 3 | ||
| முக்கோணங்கள் | 2 | 4 | 6 |
13.
'கூடுதல் செலவுகள்' எப்போதும் __________ல் அடங்கியுள்ளது.
விற்பனை விலை
அடக்க விலை
இலாபம்
நட்டம்
14.
எது பெரியது ? 0.007 கி, 70 மி.கி, 0.07 செ.கி.
0.07 செ.கி
0.007 கி
70 மி.கி
அனைத்தும் சமம்
15.
கொடுக்கப்பட்ட முக்கோணம் எவ்வகையைச் சார்ந்தது?
இருசமபக்கச் செங்கோண முக்கோணம்
இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்
இருசமபக்கக் விரிகோண முக்கோணம்
அசமபக்க விரிகோண முக்கோணம்
16.
87846 என்ற எண்ணானது ________ வகுபடும்
2 ஆல் மட்டும்
3 ஆல் மட்டும்
11 ஆல் மட்டும்
இவை அனைத்தாலும்
17.
இல் உள்ள கோட்டுத் துண்டுகளின் எண்ணிக்கை.
1
2
3
4
18.
டேட்டம் (Datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை __________.
டேட்டம்
டேட்டம்ஸ்
டேட்டா
டேட்டாஸ்
19.
அரபிக் கடலின் பரப்பளவு 1491000 சதுர மைல்கள் இது எந்த இரு எண்களுக்கு இடையில் அமைந்துள்ளது?
1489000 மற்றும் 1492540
1489000 மற்றும் 1490540
1490000 மற்றும் 1490100
1480000 மற்றும் 1490000
20.
2 : 3 மற்றும் 4 : ___ ஆகியவை சமான விகிதங்கள் எனில் விடுபட்ட உறுப்பு
6
2
4
3
21.
'w' வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை
30 + w
30 w
7 + w
7w
22.
இரம்யா சில ஒப்பனைப் பொருள்களை வாங்கிக் கொண்டு பின்வரும் பட்டியலைப் பெறுகிறார்.
| ரொக்கப் பட்டியல் சாந்தி அலங்காரப் பொருள்கள் அங்காடி, தஞ்சாவூர் |
||||
| பட்டியல் எண்:100 நாள் : 15.05.2018 | ||||
| வ.எண் | பொருள்கள் | விலை(ரூ.இல்) | அளவு | தொகை(ரூ.இல்) |
| 1. 2. 3. 4. |
தலைமுடிக் கவ்வி (Hair clip) தலைமுடிச் செருகி(Hair pin) நாடா(Ribbon) கைக்குட்டை(Hand kerchief) |
15 /ஒன்று 10 /ஒன்று 12 /மீட்டர் 25 /ஒன்று |
6 4 3 2 |
90 40 36 50 |
| மொத்தம் | 216 | |||
பட்டியலைக் கவனித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
(i) பட்டியல் எண் என்ன ?
(ii) பொருள்கள் வாங்கப்பட்ட தேதியைக் குறிப்பிடுக.
(iii) வாங்கப்பட்ட வெவ்வேறு பொருள்கள் எத்தனை ?
(iv) ஒரு தலைமுடிக் கவ்வியின் விலை என்ன ?
(v) நாடாவின் மொத்த விலை என்ன ?
23.
முற்பகல் 7 மணிக்குப் சரியான நேரத்த்தில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரமானது, மணிக்கு 2 நிமிடங்கள் வீதம் தாமதமாக இயங்கினால் பிற்பகல் 6 மணிக்கு அக்கடிகாரம் காட்டும் நேரத்தைக் காண்க.
24.
அட்டவணையை நிறைவு செய்க:
| முக்கோணத்தின் வகைகள்/கோணங்கள் | குறுங்கோண முக்கோணம் | செங்கோண முக்கோணம் | விரிகோண முக்கோணம் |
| எவையேனும் இரு கோணங்கள் | எப்பொழுதும் குறுங்கோணங்கள் | i) | எப்பொழுதும் குறுங்கோணங்கள் |
| மூன்றாவது கோணம் | ii) | செங்கோணம் | iii) |
25.
18,24 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பெ.கா.காண்க.
26.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள இணைக்கோடுகள் மற்றும் வெட்டும் கோடுகளைக் காண்க.
27.
40 குழந்தைகளின் உயரங்கள் (செ .மீ.இல்) பின்வருமாறு
110 112 112 116 119 111 113 115 118 120
110 113 114 111 114 113 110 120 118 115
112 110 116 111 115 120 113 111 113 120
115 111 116 112 110 111 120 111 120 111
நேர்கோட்டு குறி அட்டவணை அமைக்கவும்.
28.
1 இலிருந்து 7 வரை எண்களைப் பயன்படுத்தி வட்டங்களை நிரப்பி, ஒவ்வொரு நேர்க்கோட்டிலும் கூடுதல் ஓரே எண்ணாக வருமாறு அமைக்க.

29.
ஓர் குடும்பத்தில் மாதச் செலவுகளில் மளிகைக்கும் காய்கறிகளுக்கும் ஆகும் செலவுகளின் விகிதம் 3 : 2. இவை இரண்டிற்கும் ஒரு மாதத்திற்கு ரூ. 4000, ஒதுக்கப்பட்டால் (i) மளிகை (ii) காய்கறி ஆகியவற்றிற்காகும் செலவுகளைக் காண்க.
30.
ஒரு தட்டில் சில முட்டைகள் உள்ளன. தட்டிலிருந்து 6 முட்டைகளை எடுத்து விட்டால் மீதம் 10 முட்டைகள் உள்ளன எனில் மொத்தம் எத்தனை முட்டைகள் தட்டில் இருந்திருக்கும்?
31.
எண் பெயர்களை எண்ணுருக்களால் எழுதுக
இரண்டு கோடியே முப்பது இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து தொள்ளாயிரத்து எண்பது
32.
ஒரு வியாபாரி ஒரு டசன் ரூ. 20 வீதம் 2 டசன் வாழைப்பழங்கள் வாங்கினார்.ஒரு வாழைப்பழம் ரூ. 3 வீதம் அவற்றை விற்பனை செய்தார். எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
33.
நாதன் ஒரு கிராமத்து விற்பனையாளரிடமிருந்து ரூ.800 க்கு 10 குடுவைகள் தேன் வாங்கினார்.அவற்றை ஒரு நகரத்தில் ஒரு குடுவை ரூ.100 வீதம் விற்பனை செய்தார். அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
34.
ஒரு பல்பொருள் அங்காடி விற்பனையாளர் ரூ.750 க்கு ஒரு கணிப்பானை வாங்கினார்.அதனுள் ரூ.100 மதிப்புள்ள மின்கலம் பொருத்தினார். அதன் வெளி உறைக்காக ரூ.50 செலவிட்டார். அதை ரூ.850 க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
35.
முதல் நாள் 6 மணி நேரத்திற்கு ஒரு முறையும், இரண்டு மற்றும் மூன்றாம் நாளில் 8 மணி நேரத்திற்கு ஒரு முறையும் மருந்து எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர் வைரவனுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.அவர் முதல் நாள் முற்பகல் 9.30 மணிக்கு முதல் வேலைக்கான மாத்திரை எடுத்துக் கொண்டால், அவர் எடுத்துக் கொள்ளும் மாத்திரைக்கான கால அட்டவணையை தொடர் வண்டி நேர முறையில் தயார் செய்க.
36.
மலர்கொடி 650 மி.கி அளவுள்ள ஒரு மாத்திரையை வாங்கினார். அதன் எடையைக் கிராமில் குறிப்பிடுக.
37.
மூன்று தொடர்ச்சியான எண்களின் பெருக்கற்பலன் ஏப்போதும் 6 ஆல் வகுபடும் என்பதை ஓர் எடுத்துக்காட்டுடன் மெய்ப்பிக்க.
38.
10 முதல் 20 வரையுள்ள அனைத்துப் பகா எண்களின் கூடுதலானது அனைத்து ஓரிலக்க எண்களால் வகுபடுமா என ஆராய்க.
39.
ஓர் இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் 70o எனில் மற்ற இரு கோணங்கள் அளவுகள் என்னென்னவாக இருக்கலாம் ?
40.
பின்வரும் முக்கோணங்களைப் பக்கங்கள் மற்றும் கோணங்களின் அடிப்படையில் வகைப்படுத்துக.
41.
பகு எண்கள் ஒவ்வொன்றும் குறைந்தது மூன்று காரணிகளைப் பெற்றிருக்கும் என்பதை ஓர் எடுத்துக்காட்டுடன் மெய்ப்பிக்க.
42.
கோணமானியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட படத்திலுள்ள கோணங்களை அளக்க. அவற்றைக் குறுங்கோணம், விரிகோணம், செங்கோணம் அல்லது நேர்க்கோணம் என வகைப்படுத்துக.

43.
பின்வரும் படத்தில் 10 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.

44.
தாமரை நூல்களை ப் படிப்பதில் ஆர்வமுடையவள். 40 நாட்கள் விடுமுறையில் ஒவ்வொரு நாளும் அவளால் படிக்கப்ப ட்ட நூல்களின் பக்கங்களின் எண்ணிக்கை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. இத்தரவிற்கு நேர்க்கோட்டுக்குறி அட்டவணை அமைக்கவும்.
1 3 5 6 6 3 5 4 1 6 2 5 3 4 1 6 6 5 5 1
1 2 3 2 5 2 4 1 6 2 5 5 6 5 5 3 5 2 5 1
45.
ஓர் ஆண்டில், ஒரு மொத்த -காகித விற்பனை நிறுவனம் (Whole-sale) 7,50,000 குறிப்பேடுகளில் 6,25,600 குறிப்பேடுகளை விற்பனை செய்துள்ளது. விற்பனை ஆகாத குறிப்பேடுகளின் எண்ணிக்கையைக் காண்க.
46.
பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக.'y' இன் 9 மடங்கிலிருந்து 4 ஐக் குறைக்க.
47.
கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.
(i) 15 : 20
1.
அடக்க விலை = ரூ.3000
இலாபம் = ரூ.500
தள்ளுபடி = ரூ.300
விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
= குறித்த விலை – ரூ.300
இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
ரூ.500 = குறித்த விலை – ரூ.300 – ரூ.3000
குறித்த விலை = ரூ.500 + ரூ.300 + ரூ.3000
= ரூ.3800
2.

3.
(i) 1 லி = 1000 மி.லி
10 லி 5 மி.லி. = (10 x 1000) + 5 = 10005 மி.லி
(ii) 1 கி.மீ = 1000 மீ
4 கி.மீ 300 மீ = (4 x 1000) + 300 = 4300 மீ
(iii) 1 மி.கி = 1000 கி
800 மி.கி = 300 x 1 \(\div\) 1000 கி = 300 \(\div\) 1000 = 0.3 கி
4.
இரு எண்களின் பெருக்கற்பலன் = அவற்றின் மீ.பெ.கா x மீ.சி.ம
மேலும், எண்கள் சார்பகா என்பதால் அவற்றின் மீ.பெ.கா. 1 ஆகும்.
65 x மற்றோர் எண் = 5005 x 1
ஆகவே, மற்றோர் எண் = 5005 \(\div \) 65 = 77
5.
(i) AC = BD = 0.9 செ.மீ
AB மற்றும் BD இணைகோடுகள்.
(ii) EG = FH = 1 செ.மீ
EF மற்றும் GH இணைகோடுகள்.
6.


40 மற்றும் 56 ஆகிய எண்களின் பொதுக் காரணிகளின் பெருக்கற்பலன் = 2 x 2 x 2 = 8. ஆகவே, மீ.பெ.கா. (40, 56) = 8.
7.

'C' ஆனது 'B' இக்கு மிகச் சரியாகவே எதிர்த்திசையில் அமைந்துள்ளது. உச்சிப்புள்ளி 'A' ஆனது நடுவில் உள்ளது. எனவே கோணமானது 180° இது நேர்க்கோணம் \(\angle \)A = \(\angle \)CAB = \(\angle \)BAC = 180°
8.
9.
32 முக்கோணங்கள்.
10.
யானை = 20 கி.மீ / மணி
சிங்கம் = 80 கி.மீ / மணி
சிறுத்தை = 100 கி.மீ /மணி
i) யானை, சிங்கம் விகிதம் = 20 : 80 = \(\frac{20}{80}=1: 4
\)
ii) சிங்கம், சிறுத்தை விகிதம் = 80 :100 = \(\frac{80}{100}=4: 5 \)
iii) யானை, சிறுத்தை விகிதம் = 20 : 100
\(\frac{20}{100}=1: 5
\)
யானை, சிறுத்தையின் விகிதம் மிகச் சிறியது.
11.
7,345,671 = ஏழு மில்லியன் முன்னூற்று நாற்பத்து ஐந்து ஆயிரத்து அறுநூற்று எழுபத்து ஒன்று.
12.

| வடிவங்கள் | முதலாம் அமைப்பு | இரண்டாம் அமைப்பு | மூன்றாம் அமைப்பு | நான்காம் அமைப்பு | ஐந்தாம் அமைப்பு |
|---|---|---|---|---|---|
| சதுரங்கள் | 1 | 2 |
3 |
4 | 5 |
| வட்டங்கள் | 1 | 2 | 3 | 4 | 5 |
| முக்கோணங்கள் | 2 | 4 | 6 | 8 | 10 |
13.
(b)
அடக்க விலை
14.
(c)
70 மி.கி
15.
(c)
இருசமபக்கக் விரிகோண முக்கோணம்
16.
(d)
இவை அனைத்தாலும்
17.
(c)
3
18.
(c)
டேட்டா
19.
(a)
1489000 மற்றும் 1492540
20.
(a)
6
21.
(d)
7w
22.
(i) பட்டியலின் எண் 100.
(ii) பொருள்கள் 15.05. 2018 அன்று வாங்கப்பட்டன.
(iii) நான்கு வெவ்வேறு பொருள்கள் வாங்கப்பட்டன.
(iv) ஒரு தலைமுடிக்கவ்வியின் விலைரூ 15.
(v) நாடாவின் மொத்த விலை ரூ 36.
23.
| 12 மணி நேரம் | தொடர்வண்டி நேரம் |
| 6.00 பி.ப | 18:00 மணி |
| 7 .00 மு.ப | 07 :00 மணி |
| இடைப்பட்ட கால அளவு | 11:00 மணி |
படி1 : 1 மணி நேரத்தில் கடிகாரம் தாமதமாக இயங்கும் நேரம் = 2 நிமிடங்கள்.
படி 2 :11 மணி நேரத்தில் கடிகாரம் தாமதமாக இயங்கும் நேரம் = 11 x 2 = 22 நிமிடங்கள்
எனவே பிற்பகல் 6 மணிக்குச் சரியான நேரத்தை விட 22 நிமிடங்கள் தாமதமாக நேரத்தைக் காட்டும். அதாவது பிற்பகல் 6 மணிக்குக் கடிகாரம் காட்டும் நேரம் பிற்பகல் 5 மணி 38 நிமிடங்கள்.
24.
| முக்கோணத்தின் வகைகள்/கோணங்கள் | குறுங்கோண முக்கோணம் | செங்கோண முக்கோணம் | விரிகோண முக்கோணம் |
| எவையேனும் இரு கோணங்கள் | எப்பொழுதும் குறுங்கோணங்கள் | ii) எப்பொழுதும் குறுங்கோணங்கள் | எப்பொழுதும் குறுங்கோணங்கள் |
| மூன்றாவது கோணம் | ii)குறுங்கோணம் | செங்கோணம் | iii) விரிகோணம் |
25.

26.
இணைகோடுகள்
\(\overline { YX }\)மற்றும் \(\overline { DC }\)
\(\overline { YD }\)மற்றும் \(\overline { ZE }\)
\(\overline { XC }\)மற்றும் \(\overline { YD }\)
\(\overline { YZ }\)மற்றும் \(\overline { DE }\)
\(\overline { XW }\)மற்றும் \(\overline { WB }\)
\(\overline { XC }\)மற்றும் \(\overline { WB }\)
\(\overline { WB }\)மற்றும் \(\overline { BA }\)
\(\overline { ZV }\)மற்றும் \(\overline { EA }\)
\(\overline { VA }\)மற்றும் \(\overline { WB }\)
\(\overline { ZE }\)மற்றும் \(\overline { VA }\)
வெட்டும் கோடுகள்
\(\overline { AB }\),\(\overline { AE }\),\(\overline { AV }\)
\(\overline { BA }\),\(\overline { BC }\),\(\overline { BW }\)
\(\overline { CB }\),\(\overline { CX }\),\(\overline { CD }\)
\(\overline { DC }\),\(\overline { DE }\),\(\overline { DY }\)
\(\overline { EA }\),\(\overline { EZ }\),\(\overline { ED }\)
\(\overline { XC }\),\(\overline { XY }\),\(\overline { XW }\)
\(\overline { YX }\),\(\overline { YZ }\),\(\overline { YD }\)
\(\overline { ZY }\),\(\overline { ZE }\),\(\overline { ZV }\)
\(\overline { VA }\),\(\overline { VW }\),\(\overline { VZ }\)
\(\overline { WV }\),\(\overline { WB }\),\(\overline { WX }\)
27.
| உயரங்கள்(செ.மீ) | நேர்க்கோட்டுக் குறிகள் | நிகழ்வெண் |
| 110 | 5 | |
| 111 | 8 | |
| 112 | 4 | |
| 113 | 5 | |
| 114 | 2 | |
| 115 | 4 | |
| 116 | 3 | |
| 117 | - | |
| 118 | 2 | |
| 119 | 1 | |
| 120 | 6 | |
| 40 |
28.

29.
மொத்த விகிதம் = 3 : 2
= 3 + 2 = 5
மொத்த தொகை = Rs 4,000
மளிகை : காய்கறி = 3 : 2
மளிகை செலவு = \(\frac{3}{5} \times 4000=3 \times 80(0)\)
= Rs 2400
காய்கறி செலவு = \(\frac{2}{5} \times 4000=2 \times 800\)
= Rs 1600
30.
கொடுக்கப்பட்ட கூற்றிலிருந்து,

இதனை, 'x - 6 ' என எழுதலாம். இங்கு 'x' என்பது தெரியாத எண் ஆகும்.
அடுத்ததாக, x இல் எம்மதிப்பை பிரதியிட்டால், 'x - 6' ஆனது 10 ஐத் தரும் எனக் கண்டறிவோம்.
| 'x' ன் மதிப்பு | x-6 | முடிவு | முடிவு 10 ஆக உள்ளதா ? ஆம்/இல்லை |
| 7 | 7 - 6 | 1 | இல்லை |
| 10 | 10 - 6 | 4 | இல்லை |
| 12 | 12 - 6 | 6 | இல்லை |
| 15 | 15 - 6 | 9 | இல்லை |
| 16 | 16 - 6 | 10 | ஆம் |
| 18 | 18 - 6 | 12 | இல்லை |
எனவே, 'x' இன் தெரியாத எண் (மாறி) 16 ஆகும்.
31.
2,30,51,980
32.
1 டசன் வாழைப்பழங்களின் அடக்க விலை = ரூ.20
2 டசன் வாழைப்பழங்களின் அடக்க விலை
= ரூ.20 x 2 = ரூ.40
1 வாழைப்பழத்தின் விற்பனை விலை = ரூ.3
2 டசன் வாழைப்பழங்களின் விற்பனை விலை
= ரூ.3 x 24 = ரூ.72
இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை
= ரூ.72 - ரூ.40 = ரூ.32.
வியாபாரிக்கு ஏற்பட்ட இலாபம் = ரூ 32
33.
10 தேன் குடுவைகளின் அடக்க விலை = ரூ.800
10 தேன் குடுவைகளின் விற்பனை விலை = 10 x ரூ 100 = ரூ 1000
விற்பனை விலை < அடக்க விலை
இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை
= ரூ.1,000 - ரூ.800
= ரூ.200
நாதனுக்கு ஏற்பட்ட இலாபம் = ரூ 200
34.
கணிப்பானின் அடக்க விலை = ரூ.750
மின்கலத்தின் விலை = ரூ.100
வெளி உரையின் விலை = ரூ.50
மொத்த அடக்க விலை = ரூ 750 + ரூ 100 + ரூ 50
= ரூ 900
கணிப்பானின் விற்பனை விலை = ரூ 850
அடக்க விலை > விற்பனை விலை
நட்டம் = அடக்க விலை - விற்பனை விலை
= ரூ.900 - ரூ.850
= ரூ.50.
விற்பனையாளருக்கு ஏற்பட்ட நட்டம் = ரூ 50
35.
வைஹவன் எடுத்துக் கொள்ளும் மாத்திரைக்கான கால அளவு
| நாள் | வேளை | காலம் | இரயில்வே நேரம் |
| முதல் நாள் | முதல் வேளை 2 ஆம் வேளை 3 ஆம் வேளை 4 ஆம் வேளை |
9.30 மணி 9.30 + 6.00 15.30 + 6.00 21.30 + 6.00 |
9.30 மணி 15.30 மணி 21.30 மணி 03.30 மணி |
| 2 ஆம் நாள் | 5ஆம் வேளை 6 ஆம் வேளை 7 ஆம் வேளை |
3.30 + 8.00 11.30 + 8.00 19.30 + 8.00 |
11.30 மணி 19.30 மணி 3.30 மணி |
| 3 ஆம் நாள் | 8 ஆம் வேளை 9 ஆம் வேளை 10ஆம் வேளை |
3.30 + 8.00 11.30 + 8.00 19.30 + 8.00 |
11.30 மணி 19.30 மணி 3.30 மணி |
36.
மலர்கொடி வாங்கிய மாத்திரையின் அளவு = 650 மி.கி

|
1 கி = 1000 மி.கி |
37.
மூன்று தொடர்ச்சியான எண்கள் = 2, 3, 4
பெருக்கற்பலன் = 2 x 3 x 4 = 24
24 என்ற எண் 6 ஆல் வகுபடும்
''மூன்று தொடர்ச்சியான எண்களின் பொருக்கற்பலன் எப்போதும் 6 ஆல் வகுபடும்'' என்பது சரி.
38.
10 முதல் 20 வரையுள்ள பகா எண்கள்
= 11, 13, 17, 19
கூடுதல் = 11 + 13 + 17 + 19 = 60
\(\frac{60}{1}=60, \frac{60}{2}=30, \frac{60}{3}=20
\)
\(\frac{60}{4}=15, \frac{60}{5}=12, \frac{60}{6}=10
\)
60 என்ற எண் 1, 2, 3, 4, 5, 6 ஆகிய எண்களால் வகுபடும்.
39.
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் = 180o
ஓர் இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் = 70o
மற்ற இரு கோணங்களின் கூடுதல் = 180o - 70o = 110o
மற்ற இரு கோணங்களின் அளவு = 70o, 40o அல்லது 55o, 55o
40.
i) இருசமபக்க குறுங்கோண முக்கோணம்
ii) அசமபக்கச் செங்கோண முக்கோணம்
iii) இருசமபக்க விரிகோண முக்கோணம்
iv) இருசமபக்கச் செங்கோண முக்கோணம்
v) சமபக்கக் குறுங்கோண முக்கோணம்
vi) அசமபக்க விரிகோண முக்கோணம்
41.
4 இன் காரணிகள் = 1, 2, 4
''பகு எண்கள் ஒவ்வொன்றும் மூன்று காரணிகளைப் பெற்றிருக்கும்'' என்ற கூற்று சரி.
42.
செங்கோணம்
43.
100
44.
நேர்க்கோட்டுக் குறி அட்டவணை பின்வருமாறு.

45.
மொத்தக் குறிப்பேடுகளின் எண்ணிக்கை = 7,50,000
விற்ற குறிப்பேடுகளின் எண்ணிக்கை = 6,25,600
விற்பனை ஆகாத குறிப்பேடுகளின் எண்ணிக்கை = 1,24,400
46.
9y - 4
47.
விகிதம் = 15 : 20
பின்னம் = \(\frac{15}{20} \div \frac{5}{5}=\frac{3}{4}\)
எளிய வடிவம் = 3 : 4
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards