12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/07/2019
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பெரும்பாலான தாவரங்களில் மகரந்தத்துகள் வெளியேறும் நிலை ____.
1 செல்நிலை
2 செல்நிலை
3 செல்நிலை
4 செல்நிலை
2.
3.
தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்.
ஸ்போரோபொலினின் - மகரந்தத்துகளின் எக்சைன்
டபீட்டம் - நுண்வித்துகளின் வளர்ச்சிக்கான ஊட்டத்திசு
சூல் திசு - வளரும் கருவிற்கான ஊட்டத்திசு
வழிநடத்தி - சூல்துளை நோக்கி மகரந்தக் குழாய் வழி நடத்துதல்
4.
மகரந்தக்குழாயை கண்டுபிடித்தவர் _____.
J.G. கோல்ரூட்டர்
G.B. அமிசி
E. ஸ்டிராஸ்பர்கர்
E. ஹேன்னிங்
5.
சரியாக பொருந்திய இணையைத் தேர்வு செய்க.
கிழங்கு - அல்லியம் சீப்பா
தரைகீழ் உந்துதண்டு - பிஸ்டியா
மட்டநிலத்தண்டு - மியூசா
வேர்விடும் ஓடுதண்டு - ஜிஞ்ஜிஃபெர்
6.
மண்முட்டு பதியம் மற்றும் காற்று பதியம் வேறுபடுத்துக.
7.
உயர் தாவரங்களில் தழைவழி இனப்பெருக்கத்திற்கு கையாளப்படும் பாரம்பரிய முறைகளை விவரி.
8.
தகுந்த எடுத்துக்காட்டுடன் இரண்டு தரைஒட்டிய தண்டின் மாற்றுருக்களைப் பட்டியலிடுக.
9.
கருவியலுக்கு ஹாப்மீஸ்டரின் பங்களிப்பை குறிப்பிடுக.
10.
இனப்பெருக்கம் என்றால் என்ன?
11.
டபீட்டத்தின் பணிகளை பட்டியலிடுக.
12.
‘எண்டோதீசியம் மகரந்தப்பை வெடித்தலுடன் தொடர்புடையது’. இக்கூற்றை நியாயப்படுத்துக.
13.
பல்கருநிலை என்றால் என்ன ? வணிகரீதியில் இது எவ்வாறு பயன்படுகிறது?
14.
எண்டோதீலியம் என்றால் என்ன ?
15.
கேன்தரோஃபில்லி என்றால் என்ன?
16.
கருவூண்திசு என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
17.
நுண்வித்துருவாக்கத்திலுள்ள படிநிலைகளை விவாதி.
18.
மாற்று சூலகத்தண்டு நீளம் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
19.
1.
(b)
2 செல்நிலை
2.
(b)
3.
(c)
சூல் திசு - வளரும் கருவிற்கான ஊட்டத்திசு
4.
(b)
G.B. அமிசி
5.
(c)
மட்டநிலத்தண்டு - மியூசா
6.
| மண்முட்டு பதியம்(Mound Layering) | காற்றுப் பதியம் (Air Layering) | |
| 1 | அடிக்கிளை வளைத்து தரையில் புதைக்கப்படும் | தண்டின் கணுப்பகுதி செதுக்கப்படும். |
| 2 | வேர் தோன்றிய பின் பெற்றோர் தாவரத்தினின்று வெட்டப்பட்டு தனித்தாவரமாக வளர்கிறது. | சேர்க்கப்படும் வளர்ச்சி ஹார்மோன் வேரை உருவாக்கும். |
| ஈரமான மண், பாலிதீன் பையால் மூடப்படும். | ||
| 2-4 மாதத்திற்கு பின் வேர் தோன்றிய கிளைகள் தனியாக வளர்க்கப்படும். | ||
7.
அ) போத்துகள் (Cutting)
பெற்றோர் தாவரத்தின் வேர், தண்டு, இலைகளை போத்துக்களாகப் பயன்படுத்தலாம். தகுந்த ஊடகத்தில் வேர்களை உருவாக்கி புதிய தாவரமாகிறது.
i) வேர் போதுகள் (மாலஸ்)
ii) தண்டு போதுகள் (ஹைபிஸ்கஸ்)
iii) இலை போதுகள் (பிகோனியா)
ஆ) ஒட்டுதல்
இரண்டு வெவ்வேறு தாவரங்களின் பாகங்கள் இணைக்கப்பட்டு ஒரே தாவரமாக வளர்கின்றன. தரையுடன் தொடர்புடைய தாவரம் வேர்கட்டை எனப்படும். ஒட்டுதலுக்கு பயன்படுத்தப்படுவது ஒட்டுத்தண்டு எனப்படும்.
i) மொட்டு ஒட்டுதல் (Bud Grafting)
வேர்க்கட்டையில் T கீறல் ஏற்படுத்தப்படும், மரப்பட்டை தூக்கப்படும், ஒட்டுத்தண்டு கீறலில் பட்டைக்கு கீழே வைக்கப்படும்.
ii) அணுகு ஒட்டுதல் (Approach Grafting)
வேர்க்கட்டை, ஒட்டுத்தண்டுமே இரண்டுமே வேர் கொண்டுள்ளன. இரண்டிலும் சிறிய சீவல் வெட்டப்பட்டு, வெட்டப்பட்ட பரப்புகள் நெருக்கமாக டேப்பினால் சுற்றப்படும். 4 வாரங்களுக்கு பின், ஒட்டுத்தண்டின் அடியும், வேர்க்கட்டையின் நுனியும் நீக்கப்படும்.
iii) நா ஒட்டுதல் (Tongue Grafting)
ஒட்டுத்தண்டு, வேர்க்கட்டையை சாய்வாக வெட்டி, டேப் பயன்படுத்தி இரண்டையும் ஒட்ட வேண்டும்.
iv) நுனி ஒட்டுதல் (Crown Grafting)
வேர்க்கட்டை பிளவில், ஆப்பு வடிவ ஒட்டுத்தண்டுகள் செருகப்பட்டு மெழுகு கொண்டு ஒட்டப்படும்.
v) ஆப்பு ஒட்டுதல் (Wedge Grafting)
வேர்க்கட்டை துளையில் ஒட்டுத்தண்டின் குச்சிகளை சொருகப்பட்டு, இரண்டின் கேம்பியமும் இணைக்கப்படும்.
இ) பதியம் போடுதல் (Layering)
பெற்றோர் தாவரத் தண்டில் வேர்கள் தோன்றத் தூண்டப்படும். வேர் தோன்றிய பகுதி வெட்டி, புதிய தாவரமாகிறது (எ.கா. ஜாஸ்மினம்)
i) மண்முட்டு பதியம் (Mound Layering)
அடிக்கிளையின் தண்டு மண்ணில் புதைக்கப்படும். புதைந்த தண்டிலிருந்த வேர்கள் தோன்றிய பின் பெற்றோர் தாவரத்திலிருந்து வெட்டப்படும்.
ii) காற்றுப் பதியம்(Air Layering)
தண்டின் கணு செதுக்கப்பட்டு, ஹார்மோன் சேர்க்கப்படும். வேர் உருவாகிறது, இப்பகுதி ஈரமண்ணால் மூடப்பட்டு பாலீதீன் உரையிடப்படும் 2-4 மாதத்தில் இதிலிருந்து வேர்கள் தோன்றும். பின்பு தரையில் வளர்க்கப்படும்.
8.
1. மட்டநிலத்தண்டு (மியூசா பாரடிசியாக்கா)
2. தரையடிக்கிழங்கு (கொலகேஸியா)
3. கிழங்கு (சொலானம் டியூபராசம் )
4. குமிழ்த்தண்டு (அல்லியம் சீப்பா)
5. ஓடு தண்டு (சென்டெல்லா ஏசியாட்டிகா)
6. வேர் விடும் ஓடுதண்டு (மென்தா)
7. நீர் ஓடு தண்டு (ஐக்கார்னியா)
8. தரை கீழ் தண்டு (கிரைசான்திமம்)
9. சிறு குமிழ் மொட்டு (அகேவ்)
9.
1. நான்மய மகரந்தத்தூள் அமைப்பை விளக்கினான்
2. தலைமுறை மாற்றத்தை தாவரங்களில் கண்டறிந்தார்.
3. பூக்கும் தாவரங்களின் கருவியிலைக் கண்டறிந்தார்.
10.
1. உயிரிகளின் அத்தியாவசியப் பண்பு இனப்பெருக்கம்.
2. உலகில் சிற்றினங்கள் நிலைத்திருக்க, வேறுபாட்டின் மூலம் தகுந்த மாற்றங்களுடன் சந்ததிகள் தொடர்ந்து வாழ உதவும்.
3. தாவர இனப்பெருக்கம், நேரடியாகவோ மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்து வாழும் உயிரினங்களுக்கு முக்கியமானது.
11.
1. வளரும் நுண்வித்தகத்திற்கு ஊட்டமளிக்கிறது.
2. உபிஷ் உருவுகள் மூலம், ஸ்போரோபொலினின் உற்பத்திக்கு உதவுவதால், மகரந்தச் சுவர் உருவாக்கத்தில் உதவும்.
3. போலன்கிட்டிற்குத் தேவையான வேதிபொருட்களைத் தந்து, மகரந்தத்துகளின் பரப்புக்கு கடத்தும்.
4. சூலக முடியின் ஒதுக்குதல் வினைக்கான, எக்சைன் புரதங்கள் டபீட்ட செல்களினின்று பெறப்படுகின்றன.
12.
1. இது மகரந்தப்பைச் சுவரின் ஒரு அடுக்கு.
2. இவற்றில் செல்லுலோஸ், லிக்னினால் ஆன பட்டைகள் உள்ளன.
3. இச்செல்கள் நீர் உறிஞ்சும் தன்மை கொண்டவை.
4. எண்டோதீசியத்தின் நீர் உறிஞ்சும் தன்மை வெடிப்பிற்கு உதவும்
13.
ஒரு விதையில் ஒன்றுக்கு மேற்பட்ட கரு காணப்பட்டால் அது பல்கருநிலை எனப்படும்.
1. சிட்ரஸ் தாவர சூல்திசுவிலிருந்து பெறப்படும் நாற்றுக்கள் பழப்பண்ணைக்கு நல்ல நகல்களாக உள்ளன.
2. பல்கருநிலை வழி தோன்றும் கருக்கள் வைரஸ் தொற்று இல்லாமல் உள்ளன.
14.
ஒரு சில சிற்றினங்களில் (ஒரு சூலறையுடைய மென் சூல்திசு கொண்ட) சூலுறையின் உள்ளடுக்கு சிறப்பு பெற்று, கருப்பையின் ஊட்டத்திற்கு உதவுகின்றது. இந்த அடுக்கு எண்டோதீசியம் அல்லது சூலுறை டபீட்டம் (Integumentary tapetum) எனப்படும். (எ.கா) ஆஸ்டரேசி
15.
வண்டுகளினால் நடைபெறும் அயல் மகரந்தச் சேர்க்கை. பூக்களின் மகரந்தம், ஈரச்சத்து மிக்கத் திசுக்களை உண்கிறது.
(எ.கா) நிம்பேயா சிற்றினத் தாவரம் - ரினோரஸ் வண்டு
ராட்சத நீர் அல்லி - காரப் (scarab) வண்டு
16.
கருவுறுதலுக்கு பின், கரு பகுப்படைவதற்கு முன் முதல் நிலை கருவூண் உட்கரு பகுப்படைந்து உருவாக்கும் திசு கருவூண் திசு.
1. உட்கருசார் கருவூண் திசு
முதல் நிலை கருவூண் உட்கரு (PEN) குன்றலில்லா பகுப்படையும். சுவர் உருவாகாமல் தனித்த உட்கருக்களைக் கொண்டுள்ளன. (எ.க) அராக்கிஸ்
2. செல்சார் கருவூண் திசு
முதல்நிலை கருவூண் உட்கரு பகுப்படையும். இரண்டு உட்கருக்கள் உருவாகும். சுவர் உருவாக்கம் நடைபெறும். (எ.டு) ஹீலியான்தஸ்
3. ஹெலோபிய கருவூண் உட்கரு பகுப்படையும், இரண்டு உட்கருக்கள் உருவாகும். உட்கருக்களுக்கிடையே சுவர் உருவாகும். பெரிய சூல்துளை அறை, சிறிய சலாசா அறை உருவாகும். (எ.டு) ஹைட்ரில்லா.
17.
1. முதல் நிலை வித்து செல்கள் பகுப்புக்கு உட்பட்டு வித்துருவாக்கத் திசுவைத் தோற்றுவிக்கின்றன.
2. வித்துருவாக்க திசுவின் கடைசி செல்கள் நுண் வித்து தாய் செல்களாகச் செயல்படும்.
3. நுண் வித்து தாய் செல்கள், குன்றல் பகுப்பால் நான்கு இருமடிய நுண்வித்துக்களைத் தோற்றுவிக்கும்.
4. நுண் வித்துக்கள் விரைவில், ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்து, தனித்தனியாக மகரந்தப்பை அறையில் காணப்படும்.
5. சில தாவரங்களில் நுண் வித்துக்கள் இணைந்து பாலினியம் (Pollinium) என்ற அமைப்பாகும்.
18.
i) சில தாவரங்கள், 2 அல்லது 3 வெவ்வேறு வகையான மலர்களைத் தோற்றுவிக்கும்
ii) இவற்றின் மகரந்தத்தாள்களும், சூலகத்தண்டும் வேறுபட்ட நீளத்தைப் பெற்றுள்ளன.
iii) மகரந்தச் சேர்க்கை சமநீளத்தை உடைய இன உறுப்புகளுக்கு இடையே நடைபெறும்.
அ) இரு சூலகத்தண்டுத்தன்மை (Heterostyly)
2 வகை மலர்கள் உள்ளன. ஊசி மலர் நீண்ட சூலகத்தண்டு, குட்டையான மகரந்தத் தாள்கள் கொண்டவை. ஊசிக்கண் மலர்களில் குட்டை சூலகத்தண்டு, நீண்ட மகரந்தத் தாள்கள் உள்ளன. ஊசிக்கண் மலரின் சூலக முடியும், ஊசி மலரின் மகரந்தப்பையும் ஒரே மட்டத்தில் உள்ளதால், மகரந்தச் சேர்க்கை நடைபெறும்.
ஆ) மூன்று சூலகத்தண்டுத்தன்மை (Tristyly)
சூலகத்தண்டு. மகரந்தத்தாள்களின் நீளத்தைப் பொறுத்து இத்தாவரம், 3 வகை மலர்களைத் தோற்றுவிக்கிறது. ஒரு வகை மலரின் மகரந்தத்துகள், மற்ற இரண்டு வகை மலர்களில் மட்டுமே மகரந்தச் சேர்க்கை நிகழ்த்தும். அதே வகை மலர்களில் மகரந்தச் சேர்க்கை நிகழ்த்தாது.
(எ.டு) லைத்ரம்
19.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards