12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 11/07/2019
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
கூற்று: தாதாபாய் நெளரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
காரணம்: 1905ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் அரசமைப்புவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது.
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று தவறு ஆனால் காரணம் சரி
2.
3.
“வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும்” (Poverty and Un-British Rule in India) என்ற நூலை எழுதியவர் யார்?
பாலகங்காதர திலகர்
கோபால கிருஷ்ண கோகலே
தாதாபாய் நெளரோஜி
எம்.ஜி. ரானடே
4.
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
ஆங்கிலக் கல்விச் சட்டம் - 1843
அடிமைமுறை ஒழிப்பு - 1859
சென்னைவாசிகள் சங்கம் - 1852
இண்டிகோ கலகம் - 1835
5.
இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1825
1835
1845
1855
6.
தொடக்க கால முக்கிய தேசியவாதிகளைக் கண்டறிக.
7.
இந்திய தேசிய காங்கிரசுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அமைப்புகளின் பட்டியலைத் தயார் செய்க.
8.
ஆங்கிலப் பாராளுமன்றத்திற்குச் சென்னைவாசிகள் சங்கத்தினர் அளித்த கோரிக்கைகள் என்ன?
9.
இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதி.
10.
தேசியம் என்றால் என்ன?
11.
12.
மே 1884இல் நடைபெற்ற சென்னை மகாஜன சங்கத்தின் தொடக்கவிழாவில் பங்கேற்ற முக்கியத் தலைவர்களின் பெயர்களை எழுதுக.
13.
பிரிட்டிஷ் இந்தியாவில் ஒப்பந்தக் கூலித் தொழிலாளர் முறை எவ்வழியில் ஏற்படுத்தப்பட்டது?
14.
1853 இல் இந்தியச் சீர்திருத்தக் கழக தலைவரின் சென்னை வருகையைக் குறித்து நீ அறிந்தது என்ன?
15.
மெக்காலேயின் ‘இந்தியக் கல்வி குறித்த குறிப்புகளை’ ஆய்க.
16.
இந்தியாவில் தேசிய விழிப்புணர்வுக்குப் பிரிட்டிஷாரின் அடக்குமுறை மற்றும் இனவெறிக் கொள்கைகள், எந்த அளவிற்குக் காரணமாக இருந்தன?
17.
இந்திய நடுத்தர வர்க்கத்தில் மேற்கத்தியக் கல்வியின் தாக்கத்தையும் பின்னர் அது இந்தியச் சமூகத்தைச் சீர்த்திருத்தவும் மற்றும் மீட்டுருவாக்கம் செய்திட ஆற்றிய பங்கினை விவாதிக்கவும்.
18.
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற பின்வரும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1. பம்பாய்
2. கல்கத்தா
3. சென்னை
4. அகமதாபாத்
5. லக்னோ
6. கான்பூர்
7. சூரத்
8. லாகூர்
9. பூனா
10. அலகாபாத்
1.
(c)
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
2.
(c)
3.
(c)
தாதாபாய் நெளரோஜி
4.
(c)
சென்னைவாசிகள் சங்கம் - 1852
5.
(b)
1835
6.
பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஜி. சுப்பிரமணியம், விஜயராகவாச்சாரி, அனந்தா சார்லு, ரங்கையா, பாலாஜிராவ், சேலம் ராமசாமி ஆகியவர்கள் தொடக்ககால முக்கிய தேசியவாதிகள் ஆவார்கள்.
7.
| அமைப்பு | வருடம் / இடம் | தோற்றுவித்தவர் |
| 1. நிலக்கிழார்கள் அமைப்பு ஜமீன்தார் அமைப்பு. |
1838 / கல்கத்தா | துவாரகாநாத் தாகூர். |
| 2. பிரிட்டிஷ் இந்திய சமூகம் | 1839 / லண்டன் | வில்லியம் ஆடம்ஸ் |
| 3. மெட்ராஸ் பூர்விக அமைப்பு | 1852 / சென்னை | லஷ்மண சரசு செட்டி |
| 4. பம்பாய் கழகம் | 1852 / பம்பாய் | தாதாபாய் நௌரோஜி, தீன்ஷா வாச்சா |
| 5. இந்திய லீக் | 1875 / கல்கத்தா | சி. சிர்குமார் கோஷ் |
| 6. மெட்ராஸ் மகாஜன சபா | 1884 / மெட்ராஸ் | வீரராகவாச்சார்யா, ஜி. சுப்பிரமணிய ஐயர், பி. அனந்த்தாச்சார்லு |
8.
1. சென்னைவாசிகள் சங்கம் 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் ரயத்துவாரி, ஜமீன்தாரி முறைகள் வேளாண்மை வர்க்கத்தினரைக் கடும் துன்பங்களுக்கு உள்ளாக்கியதைச் சுட்டிக்காட்டியது
2. ஜமீன்தார்கள், கம்பெனியின் அதிகாரிகள் ஆகியோரின் அடக்குமுறை சார்ந்த தலையீட்டிலிருந்து விவசாயிகளை விடுவிக்கப் பண்டைய கிராமமுறையை மீட்டெடுக்க வலியுறுத்தியது.
9.
1. ரிப்பன் வைஸ்ராயாக இருந்தபோது இல்பர்ட் மசோதா கொண்டுவரப்பட்டது.
2. இந்திய நீதிபதிகள் ஐரோப்பியர்களை விசாரிக்க அதிகாரம் பெற்றனர்.
3. இதை ஐரோப்பியர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.
4. பின்னர் இது திருத்தம் செய்யப்பட்டது.
10.
தேசியம்: விரிவான தளத்தில் தேசியமென்பது ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியோடும் இருத்தல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. அது தனது நாட்டை ஏனைய நாடுகளைக் காட்டிலும் உயர்வான இடத்தில் வைத்துப் பார்த்து அல்லது ஏனைய நாடுகளுக்குப் போட்டியாக தனது நாட்டின் பண்பாடும் மற்றும் விருப்பங்களின் வளர்ச்சியில் சிறப்புக் கவனம் செலுத்தும் ஒரு தேசிய உணர்வு அல்லது மனப்போக்காகும்.
11.
12.
1. ஓர் அரசியல் சார்ந்த அமைப்பின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவாக மே 16,1884-இல் சென்னை மகாஜன சங்கம் நிறுவப்பட்டது.
2. தொடக்கவிழாவில் பங்குபெற்ற முக்கிய தலைவர்கள் ஜி. சுப்பிரமணியம், விஜயராகவாச்சாரி, அனந்தா சார்லு, ரங்கையா, பாலாஜிராவ், சேலம் ராமசாமி ஆகியவர்கள் ஆவார்கள்.
13.
1. 1815 - இல் சிலோன் ஆளுநர் சென்னை மாகாண ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் பெருந்தோட்டங்களில் வேலை செய்யக் கூலிகளை அனுப்பிவைக்கக் கேட்டுக்கொண்டார்.
2. 1833, 1843 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்கள், அரசாங்கத்தின் தூண்டுதல் இல்லாமலேயே மக்கள் புலம் பெயர்ந்து செல்லக்கட்டாயப்படுத்தின.
3. ஒப்பந்தக் கூலித் தொழிலாளர் முறையின் கீழ் இலங்கையில் காபி, தேயிலைத் தோட்டங்களில் இந்தியர்கள் கூலிகளாக வேலை செய்யச் சென்றார்கள்.
14.
1. சென்னைவாசிகளின் சங்கத்தின் மனு 1853 மார்ச்சில் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
2. இந்திய சீர்திருத்த தலைவரான H.D. செய்மோர் 1853 அக்டோபரில் சென்னை வந்தார்.
3. குண்டூர், கடலூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களைப் பார்வையிட்டார்.
4. 1853 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் கிழக்கு இந்திய கம்பெனி தொடர அனுமதி வழங்கியது.
5. இந்தியாவிலுள்ள ஆங்கிலேயருக்கு சொந்தமான பகுதிகள் மகாராணியாரின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று கூறியது.
15.
1. T.B. மெக்காலே 1834 - 1838 வரை கவர்னர் ஜெனரலின் குழுவின் முதல் சட்ட உறுப்பினராக அங்கம் வகித்தவர்.
2. 1823-இல் பொதுக் கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்டது.
3. 1835- இல் தனது புகழ்பெற்ற இந்திய கல்வி குறித்த குறிப்புகள் எனும் குறிப்புகளை வெளியிட்டார்.
4. இக்குறிப்புகளில் ஆங்கிலக்கல்வி முறையில் மேற்கத்தியக்கல்வி கற்பதற்கு ஆதரவாக வாதிட்டார்.
5. இந்தியாவில் ஆங்கிலம் வளர்வதற்கு முக்கிய காரணமாகியது, மேலும் கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் இந்தியாவில் தொடங்கியது.
6. 1857 இல் பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன.
16.
1. ஆங்கிலேயர்கள் இனப்பாகுபாட்டுக் கொள்கையை பின்பற்றினார்கள்.
2. அரசு உயர் பதவிகளில் இந்தியர்களைப் பணியமர்த்தாமல் திட்டமிட்டு விலக்கி வைக்கப்பட்டதை மக்கள் இந்திய எதிர்ப்புக் கொள்கையின் நடவடிக்கையாகக் கருதினர்.
3. இந்தியாவின் கற்றறிந்த நடுத்தர வர்க்கம் வைத்த வேண்டுகோளை ஆங்கில அரசு ஏற்றுக் கொள்ள மறுத்தது.
4. அரசுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் முயற்சிகளை மேற்கொள்வோரை தண்டனைக்குள்ளாக்கும் இந்திய தண்டனைச் சட்டம் - 1870 பிரிவு 124A அடக்குமுறைச் சட்டத்தை இயற்றியது.
5. பத்திரிகைகள் அரசியலை விமர்சனம் செய்யத் தொடங்கின.
6. சம்வத் கௌமுகி 1821 பாரசீக மொழியில் எழுதப்பட்டது.
17.
1. ஆங்கிலேயர்கள் தங்களின் நலனுக்காக கற்றறிந்த இந்திய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கினார்கள்.
2. அதை "பாபு வர்க்கமென" ஏளனப்படுத்தினார்கள்.
3. பின்னர் அந்த வர்க்கத்தினரே இந்தியாவின் புரட்சிகர முற்போக்கான படித்த வர்க்கமாக மாறி விடுதலைக்கு மக்களைத் திரட்டினர்.
4. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்நவீன சமூக வர்க்கம் இந்தியாவில் வணிக வர்த்தகச் சமூகங்கள், நிலப்பிரபுக்கள், லேவாதேவி செய்வோர் ஆங்கிலம் பயின்ற ஏகாதிபத்திய அரசின் துணை நிர்வாகப் பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டோர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாய் இருந்தது.
5. மேற்சொல்லப்பட்ட வர்க்கங்களை சேர்ந்த மக்கள் ஏனைய மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்த்தெடுப்பதில் சிறப்பான பங்காற்றினர்.
6. நவீன இந்தியக் கற்றறிந்தோர் பிரிவைச் சேர்ந்த ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், சுவாமி விவேகானந்தர் போன்றவர்கள் இந்திய அரசியல், சமுதாய, மத, இயக்கங்களுக்குத் தலைமையேற்றனர்.
7. மேலை நாட்டு அறிஞர்களான ரூஸோ, கரிபால்டி, மார்க்ஸ் ஆகியோர்களால் சோசலிசம் போன்ற தத்துவக் கருத்துக்களைக் கற்றறிந்த இந்தியர்கள் அறிந்து கொண்டனர்.
18.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards