6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
முழு எண்களின் பண்புகளைப் பயன்படுத்திச் சுருக்குக
50 \(\times\) 102
2.
சுருக்குக : 24 + 2 x 8 ÷ 2 − 1
3.
ஓர் அரசுத் திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள 500 பெண்களுக்கு ரூ 10,00,000 ஆனது சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்கப்பட்ட தொகையைக் காண்க.
4.
பின்வரும் எண்ணுருக்களை இந்திய முறையில் எழுதுக.
75,32,105
5.
மிகப் பெரிய ஆறிலக்க எண்ணை எழுதி, அதை இந்திய மற்றும் பன்னாட்டு முறைகளில் காற்புள்ளி இடுக.
6.
சேரன் வங்கியில் சேமிப்பாக ரூ 7,50,250 ஐ வைத்திருந்தார்.கல்விச் செலவிற்காக ரூ 5,34,500 ஐத் திரும்ப எடுத்தார்,அவரின் கணக்கிலுள்ள மீதி தொகையை காண்க?
7.
59283746 மற்றும் 59283748 என்ற எண்களை இடமதிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி ஒப்பிடுக.
8.
இந்தியத் தொடர்வண்டிப் போக்குவரத்தில் ஏறத்தாழப் பத்து இலட்சம் ஊழியர்கள் உள்ளனர்.இதைப் பன்னாட்டு எண் முறையில் எழுதுக
9.
தமிழ்நாட்டில், இருபத்து ஆறாயிரத்து முந்நூற்று நாற்பத்து ஐந்து சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவு காடுகள் உள்ளன என்பதை இந்திய எண் முறையில் எழுதுக
10.
பின்வரும் கோவைகளில் எது பூச்சியமல்ல?
0 \(\times\) 0
0 + 0
2 / 0
0 / 2
11.
\(\frac {59}{1}\)
1
0
\(\frac {1}{59}\)
59
12.
BIDMAS ஐப் பயன்படுத்தி சரியான குறியீட்டை கட்டத்தில் நிரப்புக
2 ◻️ 6 − 12 ÷ (4 + 2) = 10
+
-
\(\times\)
÷
13.
99999 இன் தொடரி மற்றும் முன்னியின் வேறுபாடு
90000
1
2
எதுவும் இல்லை
14.
10 மில்லியனின் தொடரி
1000001
10000001
9999999
100001
15.
செய்தித்தாள் மற்றும் இதழ்களிலிருந்து 5 அல்லது 6 அல்லது 7 இலக்க எண்களைக் கண்டுபிடித்துப் பத்தாயிரத்துக்கு முழுமையாக்குக
16.
பின்வரும் எண்களைக் கொடுக்கப்பட்ட இட மதிப்பிற்கு முழுமைப்படுத்துக.
50,81,739; இலட்சம்
17.
பின்வரும் எண்களைக் கொடுக்கப்பட்ட இட மதிப்பிற்கு முழுமைப்படுத்துக.
86,943; பத்தாயிரம்
18.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை இறங்கு வரிசையில் எழுதுக.
128435, 10835, 21354, 6348, 25840
19.
1386787215, 137698890, 86720560 என்ற எண்களில் எந்த எண் மிகப் பெரியது? எந்த எண் மிகச் சிறியது ?
1.
50 \(\times\) 102 = 50 \(\times\) (100 + 2)
= (50 \(\times\) 100) + (50 \(\times\) 2)
= 5000 + 100 = 5100
2.
24 + 2\(\times\) 8 ÷ 2 − 1 (வினா)
= 24 + 2 \(\times\) 4 − 1 (முதலில் ÷ செயல் செய்யப்பட்டது)
= 24 + 8 − 1 (இரண்டாவதாக \(\times\) செயல் செய்யப்பட்டது)
= 32 − 1 (மூன்றாவதாக + செயல் செய்யப்பட்டது)
= 31 (இறுதியாக − செயல் செய்யப்பட்டது)
3.
500 பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட தொகை = ரூ 10,00,000
ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட தொகை = 10,00,000 ÷ 500 = ரூ 2,000
ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்கப்பட்ட தொகை = ரூ 2,000.
4.
75,32,105 = எழுபத்து ஐந்து இலட்சத்து முப்பத்து இரண்டாயிரத்து நூற்று ஐந்து
5.
மிகப்பெரிய ஆறிலக்க எண் = 999999
இந்திய முறை = 9,99,999
(ஒன்பது இலட்சத்து தொண்ணூற்று ஒன்பது ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது)
பன்னாட்டு முறை = 999,999
(தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது)
6.
சேரன் வங்கியில் சேமித்து வைத்திருந்த தொகை
= ரூ 7,50,250
கல்விச் செலவிற்காக எடுத்தது = ரூ 5,34,500
மீதித் தொகை = ரூ 2,15,750
சேரன் கணக்கிலுள்ள மீதித் தொகை
= ரூ 2,15,750
7.
படி 1 : இரண்டு எண்களிலும் இலக்கங்களின் எண்ணிக்கைகள் சமமாக உள்ளன.
படி 2 : இட மதிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி இடமதிப்புகளை ஒப்பிடுதல்
| இட மதிப்பு | கோடி | ப இல | இல | ப ஆ | ஆ | நூ | ப | ஒ |
| முதல் எண் | 5 | 9 | 2 | 8 | 3 | 7 | 4 | 6 |
| இரண்டாம் எண் | 5 | 9 | 2 | 8 | 3 | 7 | 4 | 8 |
கீழே உள்ளவாறு இரு எண்களை உயர் இடமதிப்பிலிருந்து ஒவ்வொரு இலக்கமாக ஒப்பிடுக.
5 = 5, 9 = 9, 2 = 2, 8 = 8, 3 = 3, 7 = 7, 4 = 4, 6 < 8
இங்கு, ஒன்றுகள் இடத்தில் அமைந்த இலக்கங்கள் மட்டும் சமமாக இல்லை 6 < 8.
எனவே , 59283746 < 59283748
8.
இந்தியத் தொடர்வண்டிப் போக்குவரத்தில் உள்ள ஊழியர்கள் = 1,000,000 (ஒரு மில்லியன்)
9.
தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பளவு = 26,345 ச.கி.மீ
10.
(c)
2 / 0
11.
(d)
59
12.
(c)
\(\times\)
13.
(c)
2
14.
(b)
10000001
15.
தகுந்த விடைகள் உன்னுடையது.
16.
50,81,739 ஐ இலட்சங்களுக்கு முழுமைப்படுத்திய மதிப்பு = 51,00,000
17.
86,943 ஐ பத்தாயிரங்களுக்கு முழுமைப்படுத்திய மதிப்பு = 90,000
18.
128435 > 25840 > 21354 > 10835 > 6348
19.
மிகப் பெரிய எண் = 1386787215
மிகச் சிறிய எண் = 86720560
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards