6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
240 நிமிடங்கள் = _____________ மணி
2.
150 கி.கி 200 கி + 55 கி.கி 750 கி =_______ கி.கி_______ கி
3.
57 உடன் _______ என்ற சிறிய எண்ணைக் கூட்டினால், அது 2, 3, 4 மற்றும் 5 ஆல் சரியாக வகுபடும்.
4.
11 மற்றும் 60 ஆகிய எண்களுக்கு இடையே உள்ள பகா எண்களின் எண்ணிக்கை_______ஆகும்.
5.
ஒவ்வொரு முக்கோணத்திலும் குறைந்த பட்சம் ______________ குறுங்கோணங்கள் இருக்கும்.
6.
மூன்று பக்கங்களும் சமம்
7.
எவையேனும் இரு பக்கங்கள் சமம்
8.
ஏதேனும் ஒரு கோணம் விரிகோணம்
9.
ஏதேனும் ஒரு கோணம் செங்கோணம்
10.
அனைத்துப் பக்கங்களும் வெவ்வேறானவை.
11.
| அக்டோபர் 2018 | ||||||
| திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி | ஞாயிறு |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
i) அக்டோபர் மாத நாள்காட்டியில் உள்ள நாள்களுள் பகா மற்றும் பத எண்களைப் பட்டியலிடுக.
ii) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இயல் எண்களின் பெருக்கலைப் பயன்படுத்தி சில பல எண்களை உருவாக்குக.
iii) பின்வரும் எண்களைப் பகா அல்லது பகு எண்கள் என வகைப்படுத்துக.
34, 57, 71, 93, 101, 111, 291.
12.
பின்வரும் அட்டவணையை பொருத்தமான விவரங்களைக் கொண்டு நிரப்புக.
| வ.எண் | அடக்க விலை (ரூ.இல்) |
குறித்த விலை (ரூ.இல்) |
விற்பனை விலை (ரூ.இல்) | தள்ளுபடி (ரூ.இல்) |
இலாபம் (ரூ.இல்) |
நட்டம் (ரூ.இல்) |
| i | 110 | 130 | 5 | |||
| ii | 110 | 130 | 20 | |||
| iii | 130 | 15 | 30 | |||
| iv | 130 | இல்லை | 25 | |||
| v | 125 | இல்லை | இல்லை | இல்லை | ||
| vi | 350 | 50 | 100 | இல்லை |
13.
6 மு.ப. மற்றும் 4 பி.ப -இக்கு இடைப்பட்ட கால இடைவெளியைக் காண்க.
14.
AB = 6.5 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைந்து கோட்டுத்துண்டிற்கு மேலே M என்ற புள்ளியைக் குறிக்க. M வழியே AB கோட்டுத்துண்டிற்கு இணைகோடு வரைக.
15.
பின்வரும் மரவுரு வரைபடத்தை இயற்கணித கோவையாக மாற்றி எழுதுக.
16.
ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன் பின், முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும் ?
17.
பின்வரும் கோண அளவுகளைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா? ஆம் எனில், அம்முக்கோணத்தின் வகையைக் குறிப்பிடுக.
(i) 60°, 60°, 60°
(ii) 90°, 55°, 35°
(iii) 60°, 40°, 42°
(iv) 60°, 90°, 90°
(v) 70°, 60°, 50°
(vi) 100°, 50°, 30°
18.
'கூடுதல் செலவுகள்' எப்போதும் __________ல் அடங்கியுள்ளது.
விற்பனை விலை
அடக்க விலை
இலாபம்
நட்டம்
19.
3 வாரங்கள் = ________ நாள்கள்
21
7
14
28
20.
இரு எண்களின் மீ.பெ.கா 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம 154. அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில், அவற்றின் கூடுதல்_____
26
36
46
56
21.
8, 9 மற்றும் 12 ஆகிய எண்களால் வகுபடும் மிக பெரிய 4 இலக்க எண் என்ன?
9999
9996
9696
9936
22.
பின்வருவனவற்றில் பொருத்தமில்லாதது எது ?
இருசமபக்க விரிகோண முக்கோணம்
இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்
சமபக்க விரிகோண முக்கோணம்
சமபக்கக் குறுங்கோண முக்கோணம்
23.
லீப் ஆண்டுகள் 2 ஆல் வகுபடுமா ?
24.
பின்வரும் கூற்றுகளைத் தகாத எடுத்துக்காட்டுகளுடன் மெய்ப்பிக்க.
ஓர் ஒற்றை எண்ணையும் ஓர் இரட்டை எண்ணையும் பெருக்கினால் எப்போதும் ஓர் இரட்டை எண்ணே கிடைக்கும்.
25.
ஒரு பல்பொருள் அங்காடி விற்பனையாளர் ரூ.750 க்கு ஒரு கணிப்பானை வாங்கினார்.அதனுள் ரூ.100 மதிப்புள்ள மின்கலம் பொருத்தினார். அதன் வெளி உறைக்காக ரூ.50 செலவிட்டார். அதை ரூ.850 க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
26.
முற்பகல் 5 மணிக்குப் சரியான நேரத்தில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரமானது, மணிக்கு 3 நிமிடங்கள் வீதம் வேகமாக இயங்கினால் பிற்பகல் 7 மணிக்கு அக்கடைகாரம் காட்டும் நேரத்தைக் காண்க.
27.
மாணிக்கம் 20.02.2017 அன்று சதுரங்க வகுப்பில் சேர்ந்தார். தேர்வின் காரணமாக 20 நாட்களுக்குப் பிறகு பயிற்சி வகுப்புக்குச் செல்லவில்லை. மீண்டும் அவர் 10.07.2017 முதல் 31.03.2018 வரை சதுரங்கப் பயிற்சி வகுப்புக்குச் சென்றார் .எத்தனை நாள்கள் அவர் பயிற்சி வகுப்பிற்குச் சென்றார் எனக் கணக்கிடுக.
28.
கீழக்காணும் எண்களுக்குப் பகாக் காரணிப்படுத்துதல் முறையில் மீ.பெ.கா காண்க.
(i) 18,24
(ii) 51,85
(iii) 61,76
(iv) 84,120
(v) 27,45,81
(vi) 45,55,95
29.
இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் 124o எனில் மற்ற இரு கோணங்களைக் கண்டுபிடி.
30.
12345 + 5063 என்பது ஓர் ஒற்றை எண் ஆகும்.
31.
மிகச் சிறிய ஒற்றை இயல் எண் 1 ஆகும்.
32.
கார்குழலியின் பையின் எடை 1 கி.கி 250 கி, பூங்கொடியின் பையின் எடை 2 கி.கி 750 கி. அந்தப் பைகளின் ,மொத்த எடை 4 கி.கி.
33.
புகழேந்தி 100கி வேர்க்கடலை சாப்பிட்டான். அது 0.1 கி.கி-க்குச் சமம்.
34.
17 மற்றும் 18 ஆகிய எண்களின் மீ.பெ.கா 1 ஆகும்.
1.
( )
4
2.
( )
205 கி.கி 950 கி
3.
( )
3
4.
( )
12
5.
( )
இரண்டு
6.
சமபக்க முக்கோணம்
7.
இரு சமபக்க முக்கோணம்
8.
விரிகோண முக்கோணம்
9.
செங்கோண முக்கோணம்
10.
அசமபக்க முக்கோணம்
11.
i) பகா எண்கள் = 2,3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31
பது எண்கள் = 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16, 18, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 30
ii) இயல் எண்களின் பெறுக்கலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பகு எண்கள்.
2 x 3 = 6
6 x 5 = 30
2 x 3 x 4 = 24
iii) பகு எண்கள் = 34, 57, 93, 111, 291
பகா எண்கள் = 71,101
12.
(i) அடக்க விலை = ரூ.110
குறித்த விலை = ரூ.130
தள்ளுபடி= ரூ.5
விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
= ரூ.130 – ரூ.5
= ரூ.125
இலாபம்= விற்பனை விலை – அடக்க விலை
= ரூ.125 – ரூ.110
= ரூ.15
(ii) அடக்க விலை = ரூ.110
குறித்த விலை = ரூ.130
தள்ளுபடி = ரூ.20
விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
= ரூ.130 – ரூ.20
= ரூ.110
அடக்க விலை = விற்பனை விலை
இலாபம் இல்லை / நட்டம் இல்லை .
(iii) குறித்த விலை = ரூ.130
தள்ளுபடி = ரூ.15
விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
= ரூ.130 – ரூ.15
= ரூ.115
இலாபம்= ரூ.30
இலாபம்= விற்பனை விலை – அடக்க விலை
ரூ. 30 = ரூ.115 – அடக்க விலை
அடக்க விலை = ரூ.115 – ரூ.30
= ரூ.85
(iv) குறித்த விலை = ரூ.130
நட்டம் = ரூ.25
விற்பனை விலை = குறித்த விலை –தள்ளுபடி
= ரூ.130 – ரூ.0
= ரூ.130
நட்டம் = அடக்க விலை – விற்பனை விலை
ரூ.25 = அடக்க விலை – ரூ.130
அடக்க விலை = ரூ.25 + ரூ.130
= ரூ.155
(v) குறித்த விலை = ரூ.125
தள்ளுபடி = ரூ.0
விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
= ரூ.125 – ரூ.0
= ரூ.125
இலாபம் இல்லை / நட்டம் இல்லை
அடக்க விலை = விற்பனை விலை
அடக்க விலை = ரூ.125
(vi) விற்பனை விலை = ரூ.350
தள்ளுபடி = ரூ.50
இலாபம்= ரூ.100
குறித்த விலை = விற்பனை விலை + தள்ளுபடி
= ரூ.350 + ரூ.50
= ரூ.400
இலாபம்= விற்பனை விலை – அடக்க விலை
ரூ.100 = ரூ.350 – அடக்க விலை
அடக்க விலை = ரூ.350 – ரூ.100
13.
| வழிமுறை 1 | வழிமுறை 2 |
| 6 மு.ப மணியை தொடர்வண்டி நேரமாக மாற்ற = 06:00 மணி 4 பி.ப. மணியை தொடர்வண்டி நேரமாக மாற்ற = (4 + 12) மணி = 16:00 மணி 6 மு.ப. மணிக்கும் 4 பி.ப. மணிக்கும் இடைப்பட்ட நேர இடைவெளி = 16 மணிக்கும் 6 மணிக்கும் உள்ள வேறுபாடு = 16:00 மணி - 6:00 மணி = 10 மணி |
![]() |
14.
| படி 1: AB = 6.5 செ.மீ அளவுள்ள ஒரு கோட்டுத்துண்டு வரைந்து \(\bar { AB } \) க்கு மேலே M என்ற புள்ளியைக் குறிக்க. |
|
| படி 2: கோட்டுத்துண்டு AB இன் கீழாக, மூலைமட்டத்தைப் படத்தில் காட்டியவாறு பொருத்துக. மூலைமட்டத்தின் மற்றொரு விளிம்பை ஒட்டி அளவுகோலைப் பொருத்துக. | |
| படி 3: அளவுகோலை நகர்த்தாமல் மூலைமட்டத்தை M என்ற புள்ளி வரை நகர்த்துக. மூலைமட்டத்தின் விளிம்பை ஒட்டி M வழியாக MN என்ற கோடு வரைக. |
|
| படி 4: கோடு MN ஆனது AB க்கு இணைகோடாகும். அதாவது மண் || AB. |
15.
1.P + q
2. l - m
3.(ab) - c
4. (a + b) - (c + d)
5. 8/a + (b/4 + 3)
16.
இது மீ.சி.ம தொடர்பான கணக்கு ஆகும். ஆகவே, நாம் 15, 20, 25 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.சி.ம-வைக் காண வேண்டும்.
15, 20, 25 மற்றும் 30 இன் மீ.சி.ம = 2 x 2 x 3 x 5 x 5
= 300 நிமிடங்கள்
= 5 x 60 நிமிடங்கள்
= 5 x 1 மணி நேரம்
= 5 மணி நேரம்
எனவே, நான்கு அலைபேசிகளும் மீண்டும் காலை 10 மணிக்கு ஒன்றாக ஒலிக்கும்.
17.
(i) 60°, 60°, 60°
மூன்று கோணங்களின் கூடுதல் = 60°, 60°, 60° = 1800
எனவே, கொடுக்கப்பட்ட கோண அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலும்.
இது குறுங்கோண முக்கோணம்.
(ii) 90°, 55°, 35°
மூன்று கோணங்களின் கூடுதல் = 90°, 55°, 35° = 180o
எனவே, கொடுகப்பட்ட கோண அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலும். இது செங்கோண முக்கோணம்.
(iii) 60°, 40°, 42°
மூன்று கோணங்களின் கூடுதல் = 60°, 40°, 42°\(\neq \) 180o
எனவே, கொடுக்கப்பட்ட கோண அளவுகளைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலாது.
(iv) 60°, 90°, 90°
மூன்று கோணங்களின் கூடுதல் = 60°, 40°, 42°\(\neq \) 180o
எனவே, கொடுக்கப்பட்ட கோண அளவுகளைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலாது.
(v) 70°, 60°, 50°
மூன்று கோணங்களின் கூடுதல் = 60°, 40°, 42° = 180o
எனவே, கொடுக்கப்பட்ட கோண அளவுகளைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலும். இது குறுங்கோண முக்கோணம்.
(vi) 100°, 50°, 30°
மூன்று கோணங்களின் கூடுதல் = 60°, 40°, 42° = 180o
எனவே, கொடுக்கப்பட்ட கோண அளவுகளைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலும். இது விரிகோண முக்கோணம்.
18.
(b)
அடக்க விலை
19.
(a)
21
20.
(b)
36
21.
(d)
9936
22.
(c)
சமபக்க விரிகோண முக்கோணம்
23.
லீப் ஆண்டுகள் 4 ஆல் வகுபடும். ஆகவே லீப் ஆண்டுகள் 2 ஆல் வகுபடும்.
24.
ஒற்றை எண் = 9, ஓர் இரட்டை எண் = 6
கூடுதல் = 9 x 6.
= 54, ஓர் இரட்டை எண்
ஓர் ஒற்றை எண்ணையும், ஓர் இரட்டை எண்ணையும் பெருக்கினால் எப்போதும் ஓர் இரட்டை எண்ணே கிடைக்கும்.
25.
கணிப்பானின் அடக்க விலை = ரூ.750
மின்கலத்தின் விலை = ரூ.100
வெளி உரையின் விலை = ரூ.50
மொத்த அடக்க விலை = ரூ 750 + ரூ 100 + ரூ 50
= ரூ 900
கணிப்பானின் விற்பனை விலை = ரூ 850
அடக்க விலை > விற்பனை விலை
நட்டம் = அடக்க விலை - விற்பனை விலை
= ரூ.900 - ரூ.850
= ரூ.50.
விற்பனையாளருக்கு ஏற்பட்ட நட்டம் = ரூ 50
26.
கடிகாரம் 1 மணிக்கு வேகமாக இயங்கிய நேரம் = 3 நிமிடங்கள்
5 மு.ப.க்கும் 7 பி.ப.க்கும் இடைப்பட்ட நேரம் = 14 மணி
14 மணிக்கு வேகமாக இயங்கிய நேரம் = 14 x 3 = 42 நிமிடங்கள்
7 மணிக்கு கடிகாரம் காட்டும் நேரம் = 7 மணி 42 நிமிடங்கள்.
27.
| மாதம் | நாட்கள் |
| ஜுலை (31 - 9) | 22(31- 9 = 22) |
| ஆகஸ்ட் | 31 |
| செப்டம்பர் | 30 |
| அக்டோபர் | 31 |
| நவம்பர் | 31 |
| டிசம்பர் | 31 |
| ஜனவரி | 31 |
| பிப்ரவரி | 28 (2018 சாதாரண ஆண்டு) |
| மார்ச் | 31 |
| மொத்தம் | 265 |
மாணிக்கம் சதுரங்கப் பயிற்சி வகுப்புக்குச் சென்ற நாள்கள் = 20 + 265 = 285 நாள்கள்.
28.
(i) 18,24


மீ.பெ.கா = 2 x 3 x = 6
(ii) 51, 85


மீ.பெ.கா = 17
(iii) 61, 76
61, 76 சார்பாக எண்கள்
மீ.பெ.கா = 1
(iv) 84, 120


மீ.பெ.கா = 2 x 2 x 3 = 12
(v) 27, 45, 81


மீ.பெ.கா = 3 x 3 = 9
(vi) 45, 55, 95


மீ.பெ.கா = 5.
29.
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் = 180o
இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் = 124o
மற்ற இரு கோணங்களின் கூடுதல் = 180o - 124o = 56o
ஒரு கோணத்தின் அளவு = \(\frac{56^{\circ}}{2}=28^{\circ}\)
மற்ற இரு கோணங்கள் = 28o, 28o
30.
(b)
31.
(a)
32.
(a)
33.
(a)
34.
(a)
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards