6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
ஒரு எலக்ட்ரீசியன் பயன்படுத்ப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றையும், குளிர்சாதனப் பெட்டி ஒன்றையும் முறையே ரூ.12,000 க்கும், ரூ.11000 க்கும் வாங்கினார். தொலைக்காட்சிப் பெட்டியைச் சரி செய்ய ரூ.1000 உம்,குளிர்சாதனப் பெட்டிக்கு வண்ணம் செய்ய ரூ.1500 உம் செலவு செய்த பின் தொலைக்காட்சிப் பெட்டிக்கு ரூ.15000 மற்றும் குளிர்சாதனப் பெட்டிக்கு ரூ.15500 என விலை நிர்ணயம் செய்தார். இவை ஒவ்வொன்றுக்கும் ரூ.1000 தள்ளுபடி செய்தார் எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
2.
ஒருவர் 400 மீட்டர் நீளமுள்ள துணியை ரூ.60,000க்கு வோங்கி, ஒரு மீட்டர் ரூ.400 வீதம் விற்பனை செய்தார் எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
3.
நாதன் ஒரு கிராமத்து விற்பனையாளரிடமிருந்து ரூ.800 க்கு 10 குடுவைகள் தேன் வாங்கினார்.அவற்றை ஒரு நகரத்தில் ஒரு குடுவை ரூ.100 வீதம் விற்பனை செய்தார். அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
4.
கீழ்க்கண்ட செயல்களை 1 நிமிடத்திற்கு உற்று நோக்கித் தகவல்களைச் சேகரிக்க.
| i. | மூச்சுகளின் எண்ணிக்கை | ii. | தோப்புக்கரணங்களின் எண்ணிக்கை |
| ii. | இதயத் துடிப்புகளின் எண்ணிக்கை | iv | கைதட்டுகளின் எண்ணிக்கை |
| iii. | கண்சிமிட்டும்எண்ணிக்கை | vi. | எழுதும் வரி்களின் எண்ணிக்கை |
| iv. | நடக்கும் எண்ணிக்கை | viii. | படிக்கும் வரிகளின் எண்ணிக்கை |
| v. | ஓடும் எண்ணிக்கை | x. | கூறும் தமிழ் வினைச் சொற்களின் எண்ணிக்கை |
5.
12 மணி 18 நிமிடங்கள் 40 வினாடிகளில் இருந்து 10 மணி 20 நிமிடங்கள் 35 வினாடிகளைக் கழிக்க.
6.
526 மில்லி லிட்டரை, லிட்டராக மாற்றுக
7.
தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 998 மி.மீ இதனைச் சென்டி மீட்டரில் மாற்றுக.
8.
மாரத்தான் ஓட்டத்தில் ஓடும் தொலைவு 42.195 கி.மீ. ஆகும் இந்தத் தொலைவினை மீட்டரில் கூறுக.
9.
108 தளங்களைக் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்பில் A மற்றும் B என இரண்டு மின் தூக்கி்கள் உள்ளன. இரண்டு மின் தூக்கி்களும் தரை தளத்திலிருந்து தொடங்கி, முறையே ஒவ்வொரு 3வது மற்றும் 5 வது தளத்தில் நின்று செல்கின்றன. எந்தெந்தத் தளங்களில், இந்த இரண்டு மின்தூக்கி்களும் ஒன்றாக நின்று செல்லும்?
10.
முழுவதுமாக நிரப்பட்டுள்ள 80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன்களில் பாலினைச் சரியாக அளக்கக் கூடிய பாத்திரத்தின் அதிகபட்ச கொள்ளளவு என்ன?
11.
கீழக்காணும் எண்களுக்குப் பகாக் காரணிப்படுத்துதல் முறையில் மீ.பெ.கா காண்க.
(i) 18,24
(ii) 51,85
(iii) 61,76
(iv) 84,120
(v) 27,45,81
(vi) 45,55,95
12.
90°, 90°, 0° ஆகிய கோணங்களைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ? ஏன் ?
13.
143 கணித நுல்களை எல்லா அடுக்குகளிலும் சம எண்ணிக்கையில் அடுக்கி வைத்தால், ஒவ்வோர் அடுக்கிலும் உள்ள நூல்களின் எண்ணிக்கை மற்றும் அடுக்குகளின் எண்ணிக்கையைக் காண்க.
14.
பின்வரும் முக்கோணங்களைப் பக்கங்கள் மற்றும் கோணங்களின் அடிப்படையில் வகைப்படுத்துக.
15.
42 மற்றும் 100 ஆகிய எண்களை அடுத்தடுத்த இரு பகா எண்களின் கூடுதலாக எழுதுக.
16.
ஒரு செங்கோண முக்கோணத்தில் இரு பக்கங்கள் சமம் எனில் அது _______
17.
450 மி.லி x 5 =_____ லி _____ மி.லி
18.
26, 39 மற்றும் 52 ஆகிய எண்களின் மீ.சி.ம ______ ஆகும்
19.
45 மற்றும் 75 இன் மீ.பெ.கா _______ ஆகும்.
20.
மி்கச்சிறிய 4 இலக்க எண்ணின் மாறுபட்ட பகாக் காரணிகளின் எண்ணிக்கை
21.
02.20
22.
04.15
23.
11.50
24.
மூன்று பக்கங்களும் சமம்
25.
எவையேனும் இரு பக்கங்கள் சமம்
26.
இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில்
அடக்க விலை = விற்பனை விலை
அடக்க விலை > விற்பனை விலை
அடக்க விலை < விற்பனை விலை
குறித்த விலை = தள்ளுபடி
27.
22 : 35 மணியில் இருந்து 5 மணி நேரம் கடந்த பிறகு காட்டும் நேரம் ______
2: 30 மணி
3: 35 மணி
4: 35 மணி
5: 35 மணி
28.
அடுத்தடுத்த இரண்டு லீப் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சாதாரண ஆண்டுகளின் எண்ணிக்கை
4 ஆண்டுகள்
2 ஆண்டுகள்
1 ஆண்டு
3 ஆண்டுகள்
29.
2 நாள்கள் = ________ மணி
38
48
28
40
30.
இரு எண்களின் மீ.பெ.கா 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம 154. அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில், அவற்றின் கூடுதல்_____
26
36
46
56
31.
8, 9 மற்றும் 12 ஆகிய எண்களால் வகுபடும் மிக பெரிய 4 இலக்க எண் என்ன?
9999
9996
9696
9936
32.
பின்வரும் இணைகளில், எவை சார்பகா எண்கள் ஆகும் ?
51, 63
52, 91
71, 81
81, 99
33.
ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணங்கள்_____________.
குறுங்கோணம், குறுங்கோணம், விரிகோணம்
குறுங்கோணம், செங்கோணம், செங்கோணம்
செங்கோணம், விரிகோணம், குறுங்கோணம்
குறுங்கோணம், குறுங்கோணம், செங்கோணம்
34.
கொடுக்கப்பட்ட முக்கோணம் ஒரு_________________.
செங்கோண முக்கோணம்
சமபக்க முக்கோணம்
அசமபக்க முக்கோணம்
விரிகோண முக்கோணம்
35.
பின்வரும் எண்களில் எது பகா எண் அல்ல?
53
92
97
71
36.
இராகு ஒரு நாற்காலியை ரூ.3000 க்கு வாங்கினார்.அந்நாற்காலியின் விலையில் ரூ.300 தள்ளுபடி செய்த பின் ரூ.500 இலாபம் பெறுகிறார் எனில் அந்நாற்காலியின் குறித்த விலை என்ன ?

37.
கீழே கொடுக்கப்பட்ட மரவுரு வரைபடத்தை இயற்கணிதக் கோவையாக மாற்றுக.
38.
[8 + (5 x 2)] − [(2 x 3) + 5] ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக.
39.
2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி புதன்கிழமை எனில் 2018ஆம் ஆண்டு சூன் மாதம் 8ஆம் தேதி என்ன கிழமை?
40.
மாறன் ஒவ்வொரு நாளும் 1.5கி.மீ தொலைவு நடந்து பள்ளியை அடைகிறார்.அதே நேரம் மகிழன் 1400 மீ தொலைவு நடந்து பள்ளியை அடைகிறார். இவர்களுள் யார் கூடுதல் தொலைவு நடக்கிறார்?எவ்வளவு தொலைவு கூடுதலாக நடக்கிறார் ?
41.
வில்சன், மதன் மற்றும் குணசேகரன் ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஓடுபாதையின் ஒரு சுற்றை முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்கப் புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாகச் சுற்றத் தொடங்கினாள், அவர்கள் மீண்டும் எப்பபோது தொடக்கப் புள்ளியில் ஒன்றாகச் சந்திப்பார்கள் ?
42.
4 மற்றும் 6 ஆல் வகுபடும் எண்கள் 24 ஆல் வகுபடும். இந்தக் கூற்றை ஓர் எடுத்ததுக்காட்டுடன் சரிபார்க்க.
43.
LM = 6.5 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டின் மீது அமையாதவாறு (மேலே/கீழே) P என்ற புள்ளியைக் குறிக்க. மூலைமட்டத்தைப் பயன்படுத்தி P வழியே LM கோட்டுத்துண்டிற்குச் செங்குத்துக்கோடு வரைக.
44.
ஒரு கோடு வரைக. அக்கோட்டிற்கு மேலே 4.8 செ.மீ தூரத்தில் R என்ற புள்ளியைக் குறிக்க. R வழியே அக்கோட்டிற்கு இணைகோடு வரைக.
45.
கொடுக்கப்பட்டுள்ள கோட்டின் மீதுள்ள ஒரு புள்ளியில் இருந்து அக்கோட்டிற்குச் செங்குத்துக்கோடு வரைக.
1.
தொலைக்காட்சிப் பெட்டியின் அடக்கவிலை = ரூ 12,000
சரி செய்ய செலவிடப்பட்ட தொகை = ரூ 1000
மொத்த அடக்க விலை = ரூ 13000
தொலைக்காட்சிப் பெட்டியின் குறித்தவிலை = ரூ 15,000
தள்ளுபடி = ரூ 1000
விற்றவிலை = குறித்தவிலை - தள்ளுபடி
= ரூ 15,000 - ரூ 1000 = ரூ 14,000
விற்றவிலை > அடக்க விலை
இலாபம் = விற்றவிலை - அடக்கவிலை
= ரூ 14,000 - ரூ 13,000 = ரூ 1,000
தொலைக்காட்சிப் பெட்டியின் இலாபம் = ரூ 1000
குளிர் சாதனப் பெட்டியின் அடக்கவிலை = ரூ 11,000
வண்ணம் செய்ய செலவிடப்பட்ட தொகை = ரூ 1500
மொத்த அடக்கவிலை = ரூ 11,000 + ரூ 1,500
= ரூ 12,500
குறித்தவிலை = ரூ 15,500
தள்ளுபடி = ரூ 1,000
விற்றவிலை = குறித்தவிலை - தள்ளுபடி
= ரூ 15,500 - ரூ 1000 = ரூ 14,500
விற்பனை விலை > அடக்க விலை
இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை
= ரூ 14,500 - ரூ 12,500 = ரூ 2000
குளிர் சாதனப் பெட்டியின் இலாபம் = ரூ 2,000
எலக்ட்ரீசியனுடைய மொத்த இலாபம்
= ரூ 1000 + ரூ 2000 = ரூ 3000
2.
400 மீ துணியின் அடக்க விலை = ரூ.60,000
1 மீ துணியின் விற்பனை விலை = ரூ.400
400 மீ துணியின் விற்பனை விலை = ரூ.400 x 400
= ரூ.1,60,000
இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை
= ரூ.1,60,000 - ரூ.60,000
= ரூ.1,00,000
இலாபம் = ரூ 1,00,000
3.
10 தேன் குடுவைகளின் அடக்க விலை = ரூ.800
10 தேன் குடுவைகளின் விற்பனை விலை = 10 x ரூ 100 = ரூ 1000
விற்பனை விலை < அடக்க விலை
இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை
= ரூ.1,000 - ரூ.800
= ரூ.200
நாதனுக்கு ஏற்பட்ட இலாபம் = ரூ 200
4.
| i | மூச்சுகளின் எண்ணிக்கை | 15 | ii | தோப்புக்கரணங்களின் எண்ணிக்கை |
30 |
| iii | இதயத் துடிப்புகளின் எண்ணிக்கை | 72 | iv | கைதட்டுகளின் எண்ணிக்கை | 80 |
| v | கண் சிமிட்டும் எண்ணிக்கை | 62 | vi | எழுதும் வரிகளின் எண்ணிக்கை | 4 |
| vii | நடக்கும் தொலைவு | 100 மீ | viii | படிக்கும் வரிகளின் எண்ணிக்கை | 12 |
| ix | ஓடும் தொலைவு | 200 மீ | x | கூறும் தமிழ் வினைச் சொற்களின் எண்ணிக்கை |
35 |
5.

6.

|
1 லி = 1000 மி.லி |
7.
தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு = 998 மி.மீ

8.
மாரத்தான் ஓட்டத்தில் ஓடும் தொலைவு = 42.195 கி.மீ.

9.
ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள மொத்த தளங்கள் = 108
மின்தூக்கிகள் A,B நின்று செல்லும் தளங்கள் = 3, 5
இரண்டு மின்தூக்கிகளும் ஒன்றாக நின்று செல்லும் தளங்களைக் காண அவற்றின் மீ.சி.ம காண வேண்டும்.

மீ.சி.ம = 3 x 5 = 15
எனவே, மின்தூக்கிகள் A மற்றும் B 15, 30, 45, 60, 75, 90, 105 ஆசிய தளங்களில் ஒன்றாக நின்று செல்லும்.
10.
மூன்று கலன்களில் உள்ள பாலின் அளவு = 80 லி, 100 லி , 120 லி
பாத்திரத்தின் அதிகபட்ச
கொள்ளளவு = 80,100,120 இன் மீ.பெ.கா

மீ.பெ.கா = 2 x 2 x 5 = 20
பாத்திரத்தின் அதிகபட்சக் கொள்ளளவு = 20 லி
11.
(i) 18,24


மீ.பெ.கா = 2 x 3 x = 6
(ii) 51, 85


மீ.பெ.கா = 17
(iii) 61, 76
61, 76 சார்பாக எண்கள்
மீ.பெ.கா = 1
(iv) 84, 120


மீ.பெ.கா = 2 x 2 x 3 = 12
(v) 27, 45, 81


மீ.பெ.கா = 3 x 3 = 9
(vi) 45, 55, 95


மீ.பெ.கா = 5.
12.
90°, 90°, 0° ஆகிய கோணங்களைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலாது.
ஏனெனில் ஒரு முக்கோணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செங்கோணங்கள் இருக்க இயலாது.
13.
கணித நூல்களின் மொத்த எண்ணிக்கை = 143
143 இன் பகாக் காரணிகள் = 11 x 13
நூல்களின் எண்ணிக்கை மற்றும் அடுக்குகளின் எண்ணிக்கை
= (11, 13) அல்லது (13, 11)
14.
i) இருசமபக்க குறுங்கோண முக்கோணம்
ii) அசமபக்கச் செங்கோண முக்கோணம்
iii) இருசமபக்க விரிகோண முக்கோணம்
iv) இருசமபக்கச் செங்கோண முக்கோணம்
v) சமபக்கக் குறுங்கோண முக்கோணம்
vi) அசமபக்க விரிகோண முக்கோணம்
15.
42 = 19 + 23
100 = 47 + 53
16.
( )
இருசமபக்க செங்கோண முக்கோணம்
17.
( )
2 லி 250 மி.லி
18.
( )
156
19.
( )
15
20.
( )
2
21.
2 மணி கடந்து 20 நிமிடங்கள்
22.
4 மணி கடந்து 15 நிமிடங்கள்
23.
12 மணிக்கு 10 நிமிடங்கள்
24.
சமபக்க முக்கோணம்
25.
இரு சமபக்க முக்கோணம்
26.
(a)
அடக்க விலை = விற்பனை விலை
27.
(b)
3: 35 மணி
28.
(d)
3 ஆண்டுகள்
29.
(b)
48
30.
(b)
36
31.
(d)
9936
32.
(c)
71, 81
33.
(d)
குறுங்கோணம், குறுங்கோணம், செங்கோணம்
34.
(b)
சமபக்க முக்கோணம்
35.
(b)
92
36.
அடக்க விலை = ரூ.3000
இலாபம் = ரூ.500
தள்ளுபடி = ரூ.300
விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
= குறித்த விலை – ரூ.300
இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
ரூ.500 = குறித்த விலை – ரூ.300 – ரூ.3000
குறித்த விலை = ரூ.500 + ரூ.300 + ரூ.3000
= ரூ.3800
37.
இயற்கணிதக் கோவை 8 b ÷ 6
38.
39.
| மாதம் | நாள்கள் எண்ணிக்கை |
| டிசம்பர் | 12(31-19) |
| சனவரி | 31 |
| பிப்ரவரி | 28(2018 சாதாரண ஆண்டு) |
| மாரச் | 31 |
| ஏப்ரல் | 30 |
| மே | 31 |
| சூன் | 07 |
| மொத்தம் | 170 நாள்கள் |

17 0 நாள்கள் ÷ 7 (ஏன்? )
17 0 நாள்கள் = 24 வாரங்கள் + 2 நாள்கள்
தேவையான கிழமை புதன்கிழமைக்கு 2வது நாள். எனவே,சூன் மாதம் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை.
40.
மாறன் நடந்த தொலைவு = 1.5 கி.மீ = 1.5 x 1000 மீ
= 1500 மீ
மகிழன் நடந்த தொலைவு = 1400 மீ
வித்தியாசம் = 100 மீ
மாறன், மவிழனை விட 100 மீ கூடுதலாக நடந்தார்.
41.
வில்சன். மதன், குணசேகரன் எடுத்துக் கொண்ட நேரம் = 10, 15, 20 நிமிடங்கள்.
ஒன்றாக சந்திக்கும் நேரம் = 10,15, 20 இன்
மீ.சி.ம.

மீ.சி.ம = 5 x 2 x 2 x 3 = 60
மூவரும் 60 நிமிடங்கள் கழித்து காலை 8 மணிக்கு ஒன்றாக சந்திப்பார்கள்.
42.
12 என்ற எண் 4 மற்றும் 6 ஆல் வகுபடும். ஆனால் 24 ஆல் வகுபடாது. எனவே 4 மற்றும் 6 ஆல் வகுபடும் எண்கள் 24 ஆல் வகுபடும் என்ற கூற்று தவறானது.
43.

படி 1 : LM = 0.5 செ.மீ அளவுள்ள ஒரு கோட்டுத்துண்டு வரைக. LMக்கு மேலே P என்ற புள்ளியைக் குறிக்க.
படி 2 : கோட்டுத்துண்டு LMக்கு மேலே மூலைமட்டத்தைப் பொதுத்துக
படி3 : P வழியாக LM ஐ Q இல் சந்திக்குமாறு ஒரு கோடு வரைக.
படி 4 : கோடு PQ ஆனது LMக்குச் செங்குத்துக் கோடாகும். அதாவது PQ \(\bot \) LM.
44.
| படி 1: அளவுகோலைப் பயன்படுத்தி AB என்ற கோடு வரைக. கோட்டின் மீது Q என்ற புள்ளியைக் குறிக்க. | |
| படி 2: மூலைமட்டத்தின் செங்கோணத்தை உருவாக்கும் ஒரு பக்கம் AB என்ற கோட்டின் மீதும், செங்கோணத்தை உருவாக்கும் முனை Q என்ற புள்ளியிலும் படத்தில் காட்டியுள்ளவாறு அமைக்க. Q விலிருந்து 4.8 செ.மீ தூரத்தில் R என்ற புள்ளியைக் குறிக்க. |
|
| படி 3: அளவுகோல் மற்றும் மூலைமட்டத்தைப் படத்தில் காட்டியவாறு பொருத்துக. | |
|
படி 4: அளவுகோலை நகர்த்தாமல் மூலைமட்டத்தை R என்ற புள்ளி வரை நகர்த்துக. மூலைமட்டத்தின் விளிம்பை ஒட்டி R வழியே RS என்ற கோடு வரைக. |
|
| படி 5: RS ஆனது AB என்ற கோட்டிற்கு இணைகோடாகும். RS || AB. |
45.
| படி 1: AB என்ற கொடு வரைந்து, கோட்டின் மீது p என்ற புள்ளியைக் குறிக்க. | |
| படி 2: மூலைமட்டத்தின் செங்கோணம் உருவாக்கும் முறையானது P என்ற புள்ளியிலும் மற்றும் செங்கோணத்தை உருவாக்கும் ஒரு பக்கம் AB என்ற கோட்டின் மீதும் படத்தில் காட்டியவாறு பொருத்துக. |
|
| படி 3:மூலைமட்டத்தின் செங்கோணத்தை உருவாக்கும் மற்றொரு பக்கத்தின் விளிம்பை ஒட்டி P என்ற புள்ளியிலிருந்து PQ என்ற கோடு வரைக. |
|
| படி 4: கோடு PQ ஆனது AB க்குச் செங்குத்துக் கோடாகும். அதாவது PQ \(\bot \) AB மற்றும் \(\angle APQ =\angle BPQ \)=90o . |
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards