6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
ஒரு செவ்வக வடிவப் பூங்காவின் நீளம் அகலத்தைவிட 14 மீ அதிகமாக உள்ளது. அப்பூங்காவின் சுற்றளவு 200 மீ எனில் அதன் நீளம் மற்றும் பரப்பளவு காண்க.
2.
40 செ.மீ பக்க அளவுள்ள ஒரு சமபக்க முக்கோணத்தின் ஒரு முனையிலிருந்து 6 செ.மீ பக்கமுள்ள ஒரு சமபக்க முக்கோணம் நீக்கப்படுகிறது எனில் மீதியுள்ள பகுதியின் சுற்றளவு என்ன ?
3.
15 செ.மீ பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பளவு காண்க.
4.
12 மீ பக்க அளவுடைய ஒரு சதுர வடிவிலான வீட்டு மனைக்கு வேலி அமைக்க மீட்டருக்கு ரூ.15/- வீதம் ஆகும் செலவைக் காண்க.
5.
ஒரு சதுர வடிவமான தபால் வில்ளலயின் சுற்றளவு 8 செ.மீ எனில் அதன் பக்க அளவைக் காண்க.
6.
ஒரு சதுரத்தின் பக்கம் 5 செ.மீ எனில், அதன் சுற்றளவு காண்க.
7.
16 செ.மீ2 பரப்பளவு கொண்ட இரு வெவ்வேறு செவ்வகங்கள்.
8.
ஒரு செவ்வகத்தின் சுற்றளவு 14 மீ .அதன் நீளம் 4 மீ எனில் அதன் அகலம் காண்க.
9.
ஒரு முக்கோணத்தின் அனைத்துப் பக்கங்களும் சம நீளமுடையவை எனில் அதன் சுற்றளவு என்ன ?
10.
ஒரு சதுர வடிவ பூங்காவின் சுற்றளவு 40 மீ எனில் பூங்காவின் ஒரு பக்கத்தின் அளவு என்ன ? மேலும் பூங்காவின் பரப்பளவு காண்க.
11.
6 அடி, 8 அடி மற்றும் 10 அடி பக்க அளவுகளுள்ள செங்கோண முக்கோணத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.
12.
6 மீ நீளமும் 4 மீ அகலமும் கொண்ட செவ்வகத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.
13.
ஒரு செவ்வக வடிவத் தாளின் நீளம் மற்றும் அகலம் முறையே 15 செ.மீ மற்றும் 12 செ.மீ தாளின் ஒரு மூலையிலிருந்து ஒரு செவ்வக வடிவத் துண்டு வெட்டப்படுகிறது. மீதியுள்ள தாள் பற்றிய கருத்தில் பின்வருவனவற்றுள் எது சரியானது ?
சுற்றளவு மாறாது ஆனால் பரப்பளவு மாறும்
பரப்பளவு மாறாது ஆனால் சுற்றளவு மாறும்
பரப்பளவு மற்றும் சுற்றளவு இரண்டுமே மாறும்
பரப்பளவு மற்றும் சுற்றளவு இரண்டுமே மாறாது
14.
ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது, சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும்?
2 மடங்கு
4 மடங்கு
6 மடங்கு
3 மடங்கு
15.
ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது, அதனுடைய பரப்பளவு _________ மடங்காகும்.
2
3
4
6
16.
ஒரே அளவிலான 30 செ.மீ சுற்றளவுள்ள இரண்டு செவ்வகங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன எனில் புதிய வடிவத்தின் சுற்றளவு
60 செ.மீ இக்குச் சமம்
60 செ.மீ-ஐ விடக் குறைவு
60 செ.மீ-ஐ விட அதிகம்
45 செ.மீ இக்குச் சமம்
17.
பின்வரும் வடிவங்கள் சம பரப்பளவுடையவை எனில் எந்த வடிவம் மிகக் குறைந்த சுற்றளவைப் பெற்றுள்ளது?




18.
கொடுக்கப்பட்ட வீட்டின் படத்தை உற்றுநோக்கி நிழலிடப்பட்ட பகுதியின் மொத்தப் பரப்பளவைக் காண்க.

19.
ஒரு சதுரத்தின் பக்கத்தை நான்கில் ஒரு பங்காகக் குறைந்தால் உருவாகும் புதிய சதுரத்தின் பரப்பளவில் என்ன மாற்றம் ஏற்படும் ?
20.
ஒரு செவ்வகத்தின் நீளம் 40 செ.மீ மற்றும் அகலம் 20 செ.மீ எனில் அச்செவ்வகத்திலிருந்து எத்தனை 10 செ.மீ பக்க அளவுள்ள சதுரங்களை உருவாக்க முடியும் ?
1.
செவ்வக வடிவப் பூங்காவின் நீளம் = அகலம் + 14
l = b + 14
பூங்காவின் சுற்றளவு = 200 மீ
செவ்வகத்தின் சுற்றளவு = 2(l + b) அலகுகள்
2 (l + b ) = 200
l = b + 14 எனப் பிரதியிட
2(b + 14 + b) = 200
\(2 b+14=\frac{200}{2}\)
2b = 100 - 14
2b = 86
b = 86/2
b = 43
நீளம் l = b + 14
= 43 + 14
= 57 மீ
பூங்காவின் நீளம் = 57 மீ
அகலம் = 43 மீ
செவ்வகத்தின் பரப்பளவு = l x b ச.அலகுகள்
= 57 x 43
= 2451 மீ2
பூங்காவின் பரப்பளவு = 2451 மீ2.
2.


மீதியுள்ள பகுதியின் சுற்றளவு = 40 + 34 + 6 + 34
= 114 செ.மீ.
3.
சதுரத்தின் பக்கம், s = 15 செ.மீ
சதுரத்தின் பரப்பளவு, A = s x s சதுர அலகுகள்
= 15 x 15
= 225 சதுர செ.மீ (அல்லது) 225 செ.மீ2
4.
சதுர வடிவிலான வீட்டு மனையின் ஒரு பக்கம் = 12 மீ
சதுர வடிவிலான வீட்டு மனையின் சுற்றளவு = (4 x s)அலகுகள்
= 4 x 12 = 48 மீ
மீட்டருக்கு ரூ.15/- வீதம் மனைக்கு வேலி அமைக்க ஆகும் தொகை = 48 x 15 = ரூ.720
5.
சதுரத்தின் சுற்றளவு, P = 8 செ.மீ
4 x s = 8
s =\(\frac {8}{4}\)
தபால் வில்லையின் பக்க அளவு 2 செ.மீ ஆகும்.
6.
S = 5 செ.மீ
சதுரத்தின் சுற்றளவு, P = (4 x s) அலகுகள்
= 4 x 5
= 20 செ.மீ
சதுரத்தின் சுற்றளவு 20 செ.மீ ஆகும்.
7.
பரப்பளவு = 8 x 2 = 16 செ.மீ
8.
செவ்வகத்தின் சுற்றளவு P = 14 மீ
நீளம் l = 4 மீ
அகலம் b = ?
செவ்வகத்தின் சுற்றளவு = 2 (l + b ) ச.அலகுகள்
2(l + b) = 14
2(4 + b) = 14
4 + b = \(\frac{14}{2}\)
4 + b = 7
b = 7 - 4 = 3
= 3 மீ
செவ்வகத்தின் அகலம் = 3 மீ.
9.
முக்கோணத்தின் பக்கம் = a
சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு = a + a + a
= 3a அலகுகள்.
10.
சதுர வடிவ பூங்காவின் சுற்றளவு = 40 மீ
4 x S = 40
\(\mathrm{s}=\frac{40}{4}=10\)
பூங்காவின் பக்கம் = 10 மீ
சதுரத்தின் பரப்பளவு = S x S சதுர அலகுகள்
= 10 x 10 = 100 ச.மீ
பூங்காவின் பரப்பளவு = 100 ச.மீ.
11.
(i) செங்கோண முக்கோணத்தின் பக்கங்கள்
a = 6 அடி , b = 8 அடி மற்றும் c = 10 அடி
சுற்றளவு = (6 + 8 + 10)
= 24 அடி
(ii) செங்கோண முக்கோணத்தின்
அடிப்பக்கம் b = 6 அடி
உயரம் h = 8 அடி
பரப்பளவு = 1/2 (b x h) ச.அலகுகள்
பரப்பளவு = 1/2 (6 x 8) = 24 சதுர அடி.
12.
செவ்வகத்தின் நீளம் l = 6 மீ
அகலம் b = 4 மீ
செவ்வகத்தின் சுற்றளவு = 2 (l + b )
= 2 (6 + 4)
= 2 x 10 = 20 மீ
செவ்வகத்தின் பரப்பளவு = l x b ச.அலகுகள்
= 6 x 4 = 24 மீ2
13.
(c)
பரப்பளவு மற்றும் சுற்றளவு இரண்டுமே மாறும்
14.
(d)
3 மடங்கு
15.
(c)
4
16.
(b)
60 செ.மீ-ஐ விடக் குறைவு
17.
(b)

18.
| சதுரம் | செவ்வகம் | முக்கோணம் |
| S = 6 செ.மீ | l = 9 செ.மீ | b = 3 செ.மீ |
| b = 6 செ.மீ | h = 4 செ.மீ |
நிழலிட்ட பகுதியின் மொத்தப் பரப்பளவு = சதுரத்தின் பரப்பளவு + செவ்வகத்தின் பரப்பளவு + 2 முக்கோணங்களின் பரப்பளவு
\(=(s \times s)+(l \times b)+2\left(\frac{1}{2} b h\right)\) சதுர அலகுகள்
\(=(6 \times 6)+(9 \times 6)+2\left(\frac{1}{2} \times 3 \times 4\right)\) செ.மீ
= 36 + 54 + 12 செ.மீ
நிழலிட்ட பகுதியின் மொத்தப் பரப்பளவு = 102 செ.மீ.
19.
சதுரத்தின் பக்கம் அளவு = S அலகுகள்
புதிய சதுரத்தின் பக்கம் = 1/4 x S = s/4 அலகுகள்
சதுரத்தின் பரப்பளவு = s x s சதுர அலகுகள்
\(=\frac{s}{4} \times \frac{s}{4}\) ச.அலகுகள்
\(=\frac{s \times s}{16} \times \frac{1}{16}(s \times s)\) ச.அலகுகள்
புதிய சதுரத்தின் பரப்பளவானது அசல் பரபலவிலிருந்து. 1/16 முறை குறைக்கப்பட்டது.
20.
செவ்வகத்தின் நீளம் l = 40 செ.மீ
அகலம் b = 20 செ.மீ
செவ்வகத்தின் பரப்பளவு = l x b ச.அலகுகள்
= 40 x 20
= 800 ச.செ.மீ
சதுரத்தின் பக்கம் S = 10 செ.மீ
சதுரத்தின் பரப்பளவு = S x S
= 10 x 10 = 100 செ.மீ2
= \(\frac { 800 }{ 100 } =8\)
ஒரு செவ்வகத்தின் 8 சதுரங்களை உருவாக்க முடியும்.
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards