6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 23/09/2019
Term 2 அளவைகள்
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
சீதா முற்பகல் 5.20 மணிக்குத் துயில் எழுந்து 35 நிமிடங்கள் தன்னைத் தயார் செய்து கொண்டு, 15 நிமிடத்தில் தொடர் வண்டி நிலையத்தை அடைந்தாள். தொடர் வண்டி சரியாக முற்ப்கல் 6 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது எனில் பூங்கோதை அந்த தொடர் வண்டியில் பயணம் செய்திருப்பாரா ?
2.
ஓர் அணில் தானியங்கள் உள்ள இடத்தை விரைவாக அடைய விரும்புகிறது. அது செல்ல வேண்டிய குறைந்த தொலைவுள்ள பாதையைக் கண்டுபிடிக்க உதவுங்கள். (அளவுகோளைப் பயன்படுத்திக் கோட்டுத் துண்டுகளை அளக்குவும் )

3.
சரவணன் என்பவர் 5 கி.மீ தொலைவுள்ள சாலையின் ஒரு புறத்தில் 2 மீ 50 செ.மீ இடைவெளியில் மரக்கன்றுகளை நடுகிறார். அவரிடம் 2560 மரக்கன்றுகள் இருந்தால் எத்தனை மரக் கன்றுகளை நட்டிருப்பார்? மீதமுள்ள மரக்கன்றுகள் எத்தனை ?
4.
2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமை எனில் அதே ஆண்டு சூலை 20 ஆம் தேதி என்ன கிழமை ?
5.
2020 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசு தினத்திற்கும், கல்வி வளர்ச்சி நாளுக்கும் இடையில் உள்ள நாள்களைக் கணக்கிடுக.
6.
மாணிக்கம் 20.02.2017 அன்று சதுரங்க வகுப்பில் சேர்ந்தார். தேர்வின் காரணமாக 20 நாட்களுக்குப் பிறகு பயிற்சி வகுப்புக்குச் செல்லவில்லை. மீண்டும் அவர் 10.07.2017 முதல் 31.03.2018 வரை சதுரங்கப் பயிற்சி வகுப்புக்குச் சென்றார் .எத்தனை நாள்கள் அவர் பயிற்சி வகுப்பிற்குச் சென்றார் எனக் கணக்கிடுக.
7.
சென்னை எழும்பூரிலிருந்து மதுரை வரைச் செல்லும் வைகை அதிவிரைவு தொடர்வண்டி (எண் 12635)-இன் புறப்படும் நேரம் மற்றும் வந்து சேரும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட தகவல்களைப் படித்துப் பதிலளிக்கவும்.
| நிலையம் | வந்து சேரும் நேரம் | புறப்படும் நேரம் |
| சென்னை எழும்பூர் | - | 13:40 |
| தாம்பரம் | 14:08 | 14:10 |
| செங்கல்பட்டு | 14:38 | 14:40 |
| விழுப்புரம் | 15:50 | 15:55 |
| விருத்தாசலம் | 16:28 | 16:30 |
| அரியலூர் | 17 :04 | 17 :05 |
| திருச்சி | 18:30 | 18:35 |
| திண்டுக்கல் | 20:03 | 20:05 |
| சோழவந்தான் | 20:34 | 20:35 |
| மதுரை | 21:20 | - |
i) வைகை அதிவிரைவு வண்டி எத்தனை மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து சேருகிறது ?
ii) சென்னை மற்றும் மதுரைக்கு இடையில் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன ?
iii) விழுப்புரம் நிலையத்தில் எவ்வளவு நேரம் நிற்கிறது ?
iv) சோழவந்தனுக்கு வந்து சேரும் நேரம் என்ன ?
v) சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வந்து சேர ஆகும் மொத்த பயண நேரத்தைக் காண்க.
8.
கீழ்க்கண்ட நேரங்களுக்கு இடைப்படட கால இடைவெளியைக் காண்க
(i) 5.30 மு.ப. முதல் 12.40 பி.ப வரை
(ii) 1.30 பி.ப முதல் 10.25 பி.ப வரை
(iii) 20 மணி முதல் 4 மணி வரை
(iv) 17 மணி முதல் 5.15 மணி வரை
9.
12 மணி 18 நிமிடங்கள் 40 வினாடிகளில் இருந்து 10 மணி 20 நிமிடங்கள் 35 வினாடிகளைக் கழிக்க.
10.
ஒரு முட்டையில் 81 கி.கி.சர்க்கரை உள்ளது. கடைக்காரர் இதனை 750 கி எடையில் சிறிய பைகளில் நிரப்புகிறார் எனில், 81 கிலோ கிராம் சர்க்கரையை எத்தனை சிறிய பைகளில் நிரப்பலாம்?
11.
ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 கிராம் காய்கறி தேவைப்டுகிறது.90 குழந்தைகள் உள்ள பள்ளிக்கு எத்தனை கிலோகிராம் காய்கறி தேவைப்படும் ?
12.
மலர்கொடி 650 மி.கி அளவுள்ள ஒரு மாத்திரையை வாங்கினார். அதன் எடையைக் கிராமில் குறிப்பிடுக.
13.
முரளியிடம் உள்ள ஒரு பையின் எடை 3 கி.கி 450 கி.இந்த எடையைக் கிராமில் குறிப்பிடுக.
14.
தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 998 மி.மீ இதனைச் சென்டி மீட்டரில் மாற்றுக.
15.
மாரத்தான் ஓட்டத்தில் ஓடும் தொலைவு 42.195 கி.மீ. ஆகும் இந்தத் தொலைவினை மீட்டரில் கூறுக.
1.
சீதா துயில் எழுந்த நேரம் = 5.20 முப
தயார் செய்துகொள்ள எடுத்துக்கொண்ட நேரம் = 35 நிமிடங்கள்
தொடர்வண்டி நிலையத்தை அடைய எடுத்துக் கொண்ட நேரம் = 15 நிமிபங்கள்
தொடர்வண்டி புறப்பட்ட நேரம் = 6.00 மு.ப
சீதா தொடர்வண்டி நிலையத்தை அடைந்த நேரம்
= 5.20 மணி + 35 நிமிடங்கள் + 15 நிமிடங்கள்
= 6.10 மு.ப
சீதா தொடர்வண்டி நிலையத்தை 10 நிமிடம் நாமதமாக அடைந்ததால், அவரால் தொடர் வண்டியில் பயணம் செய்திருக்க முடியாது.
2.

AB + BC + CD + DE = 2 + 2.5 + 2.5 + 2 = 9 செ.மீ
AG + GF + FE = 2.5 + 1.5 + 1.5 + 2.5 = 8 செ.மீ
AH + HI + IJ + JE = 3 + 2 + 1 + 3 = 9 செ.மீ
குறைந்த தொலைவுள்ள பாதை = A G F E
3.
சாலையின் நீளம் = 5 கி.மீ = 5 x 100000 செ.மீ
= 500000 செ.மீ
மரக் கன்றுகளுக்கு இடையேயுள்ள இடைவெளி
= 2 மீ 50 செ.மீ
= (2 x 100) + 50 = 250 செ.மீ
மரக் கன்றுகளின் மொத்த எண்ணிக்கை
= 2560
நடப்பட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கை
= 500000/250 = 2000
மீதமுள்ள மரக்கன்றுகளின் எண்ணிக்கை
= 2560 - 2000 = 560
4.
| மாதங்கள் | நாட்கள் |
| ஜனவரி (31 - 10) | 21(31 - 10) |
| பிப்ரவரி | 28 (2018 சாதாரண ஆண்டு) |
| மார்ச் | 31 |
| ஏப்ரல் | 30 |
| மே | 31 |
| ஜுன் | 30 |
| ஜுலை | 19 |
| மொத்த நாட்கள் | 190 |
190 நாள்கள் = 27 வாரங்கள் + 1 நாள் தேவையான கிழமை வியாழக்கிழமைக்குப் பிறத முதல் நாள்.
2018 ஆம் ஆண்டு ஜுலை 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை.
5.
குடியரசு தினம் = ஜனவரி 26
கல்வி வளர்ச்சி நாள் = ஜுலை 5
| மாதங்கள் | நாட்கள் |
| ஜனவரி (31 - 25) | 6(31 - 25) |
| பிப்ரவரி | 29 (2020 லீப் ஆண்டு) |
| மார்ச் | 31 |
| ஏப்ரல் | 30 |
| மே | 31 |
| ஜுன் | 30 |
| ஜுலை | 15 |
| மொத்த நாட்கள் | 172 |
இந்திய குடியரசு தினத்திற்கும் கல்வி வளர்ச்சி நாளுக்கும் இடையில் உள்ள நாள்கள் = 172.
6.
| மாதம் | நாட்கள் |
| ஜுலை (31 - 9) | 22(31- 9 = 22) |
| ஆகஸ்ட் | 31 |
| செப்டம்பர் | 30 |
| அக்டோபர் | 31 |
| நவம்பர் | 31 |
| டிசம்பர் | 31 |
| ஜனவரி | 31 |
| பிப்ரவரி | 28 (2018 சாதாரண ஆண்டு) |
| மார்ச் | 31 |
| மொத்தம் | 265 |
மாணிக்கம் சதுரங்கப் பயிற்சி வகுப்புக்குச் சென்ற நாள்கள் = 20 + 265 = 285 நாள்கள்.
7.
(i) சென்னையிலிருந்து தொடர்வண்டி புறப்படும் நேரம் = 13.40 மணி
மதுரைக்கு தொடர்வண்டி வந்து சேரும் நேரம் = 21.20 மணி
(ii) சென்னை மற்றும் மதுரைக்கு இடையில் 8 நிறுத்தங்கள் உள்ளன.
(iii) விழுப்புரம் நிலையத்தில் தொடர்வண்டி 5 நிமிடங்கள் நிற்கிறது.
(iv) தொடர்வண்டி சோழவந்தானுக்கு வந்து சேரும் நேரம் 20.34 மணி
(v) மதுரைக்கு வந்து சேரும் நேரம் = 21.20 மணி
சென்னையிலிருந்து புறப்படும் நேரம் = 13.40 மணி
மொத்த பயண நேரம் = 07.40 மணி
8.
i) 12.40 பி.ப இன் இரயில்வே நேரம் = 12:40 மணி
5:30 மு.ப இன் இரயில்வே நேரம் = 05 : 30 மணி
இடைவெளி நேரம் = 07 : 10 மணி
ii) 10.25 பி.ப இன் இரயில்வே நேரம் = 22 : 25 மணி
1:30 பி.ப இன் இரயில்வே நேரம் = 13 : 30 மணி
இடைவெளி நேரம் = 08 : 55 மணி
iii) 20.00 முதல் 24.00 மணி வரை நேரம் = 04 : 00 மணி
24.00 முதல் 04.00 மணி வரை நேரம் = 04 : 00 மணி
இடைவெளி நேரம் = 08 : 00 மணி
iv) 17 மணி முதல் 24.00 மணி வரை நேரம் = 07 : 00 மணி
24.00 மணி முதல் 05.15 மணி வரை நேரம் = 05 : 15 மணி
இடைவெளி நேரம் = 12 : 15 மணி
9.

10.
ஒரு முட்டையில் சர்க்கரையின் அளவு = 81 கி.கி.
சிறிய பைகளில் நிரப்பப்பட்ட சர்க்கரையின் அளவு = 750 கி.
தேவைப்படும் சிறிய பைகளின் எண்ணிக்கை = 81 கி.கி \(\div \) 750 கி.
= (81 x 1000) கி \(\div \) 750 கி
= 81000 கி \(\div \) 750 கி
= 108


11.
பள்ளியில் உள்ள மொத்த குழந்தைகள் = 90
ஒவ்வொரு குழந்தைக்கும் தேவைப்படும் காய்கறி = 100 கிராம்
ஒரு நாளைக்கு 90 குழந்தைகளுக்கு தேவையான மொத்த காய்கறியின் அளவு = 90 x 100 கிைாம்
= 9000 கிராம் = 9 கி.கி.
12.
மலர்கொடி வாங்கிய மாத்திரையின் அளவு = 650 மி.கி

|
1 கி = 1000 மி.கி |
13.
முரளியிடம் உள்ள பையின் எடை= 3 கி.கி மற்றும் 450 கி,
= (3 x 1000 கி) + 450 கி
= 3000 கி + 450 கி
= 3450 கி
| 1 கி.கி = 1000கி |
14.
தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு = 998 மி.மீ

15.
மாரத்தான் ஓட்டத்தில் ஓடும் தொலைவு = 42.195 கி.மீ.

6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards