6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
உள்ளீட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.
2.
கணினியின் கூறுகள் யாவை?
3.
முக்கியமான ஐந்து உணர் உறுப்புகளின் பெயர்களை எழுதுக.
4.
விளக்குக - மூச்சுக்குழல்,
5.
எபிகிளாட்டிஸ் என்றால் என்ன?
6.
நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?
7.
தாவர செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு எது?
8.
நம் உடலில் உள்ள செல்கள் எந்த வகையைச் சார்ந்தவை?
9.
ஒருவரின் ஆடையில் ஏதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?
10.
வளிமண்டலம் என்றால் என்ன? வளிமண்டலத்தில் ஐந்து அடுக்குகளின் பெயர்களைத் தருக?
11.
கரைசல் என்றால் என்ன?
12.
உங்களிடம் சிறிது மெழுகு தரப்பட்டால் அதை வைத்து உங்களால் மெழுகு பொம்மை செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முடியுமெனில் எவ்வகை மாற்றம் எனக் குறிப்பிடுக.
13.
தாவரங்கள் மட்குதல் என்ன வகையான மாற்றம்?
14.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து மின்கடத்தியைக் கண்டுபிடித்து எழுதுக.

15.
எலும்மிச்சம் பழத்தில் இருந்து மின்னோட்டத்தை உருவாக்க முடியுமா?
16.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் மின்விளக்கு A மட்டும் ஒளிர வேண்டும் எனில் எந்தெந்த சாவி(கள்) மூடப்பட வேண்டும்.
17.
வெப்பச்சமநிலை பற்றி நீ அறிந்தவற்றைக் கூறுக.
18.
வெப்ப விரிவு என்றால் என்ன?
19.
பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி, எவையேனும் மூன்றினை விளக்குக.
20.
விலா எலும்புக்கூடு பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
21.
பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிவதேன்?
22.
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின்அதிர்வு ஏற்படுமா? விளக்கம் தருக.
23.
வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக.
24.
உதரவிதானத்தில் அசைவுகள் இல்லையெனில் என்ன நடக்கும்?
25.
எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக்க.
26.
ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்க்காணும் மாற்றங்களைக் காண முடியும்.
அ) மெழுகு உருகுதல்.
ஆ) மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்
இ) மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்
ஈ) உருகிய மெழுக தீண்மமாக மாறுதல்
மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்? உமது பதிலை நியாயப்படுத்துக.
27.
மின்மூலங்கள் என்றால் என்ன? இந்தியாவில் உள்ள பல்வேறு மின் நிலையங்கள் பற்றி விளக்குக.
28.
மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?
ஈதர்வலை (Ethernet)
வி.ஜி.ஏ.(VGA)
எச்.டி.எம்.ஐ.(HDMI)
யு.எஸ்.பி.(USB)
29.
நமது உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் நிகழ்ச்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது.
தசைச் சுருக்கம்
சுவாசம்
செரிமானம்
கழிவு நீக்கம்
30.
மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு _________
இரைப்பை
மண்ணீரல்
இதயம்
நுரையீரல்கள்
31.
யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது
செல் சுவர்
நியூக்ளியஸ்
நுண்குமிழ்கள்
பசுங்கணிகம்
32.
காற்றில் நைட்ரஜனின் சதவீதம் _________
78%
21%
0.03%
1%
33.
பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.
மீள் மாற்றம்
வேகமான மாற்றம்
மீளா மாற்றம்
விரும்பத்தகாத மாற்றம்
34.
பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம் ___________ ஆகும்.
இடமாற்றம்
நிற மாற்றம்
நிலை மாற்றம்
இயைபு மாற்றம்
35.
கீழ்க்கண்ட மின்சுற்றுகளில் எதில் மின்விளக்கு ஒளிரும்?




36.
500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,
இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்
இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.
நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்
இரண்டின் வெப்பநிலையும் உயரும்
37.
வெப்பத்தின் அலகு
நியூட்டன்
ஜூல்
வோல்ட்
செல்சியஸ்
38.
மீன்காட்சியகத்தில் தொட்டியில் உள்ள தாவரங்களை நீக்கினால் என்னவாகும்?
1.
| வெளியீட்டகம் | உள்ளீட்டகம் |
| தரவுகளையும் நிரல்களையும் கணிப்பொறியின் செயலகத்திற்குக் கொண்டு செல்ல உதவும் சாதனங்கள் “உள்ளீட்டுச் சாதனங்கள்” எனப்படும். | கணிக்கப்பட்ட தகவல்களை வெளிக்கொணர உதவும் சாதனங்கள் "வெளியீட்டுச் சாதனங்கள்" எனப்படும். |
| உள்ளீட்டுச் சாதனமானது தரவுகளை மற்றொரு சாதனத்திற்கு அனுப்பும், ஆனால் மற்றொரு சாதனத்திலிருந்து தரவுகளை ஏற்றுக்கொள்ளாது. எ.கா. விசைப்பலகை. சுட்டி |
வெளியிட்டுச் சாதனமானது மற்றொரு சாதனத்திலிருந்து தரவை ஏற்றுக் கொள்ளும். ஆனால் மற்றொரு சாதனத்திற்கு தரவுகளை அனுப்பாது. எ.கா. திரையகம், அச்சுப்பொறி |
2.
1. உள்ளீட்டகம் (Input Unit)
2. மையச் செயலகம் (CPU)
3. வெளியீட்டகம் (Output Unit)
3.
கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியன ஐந்து உணர் உறுப்புகளாகும்.
4.
மூச்சுக்குழல் பொதுவாக காற்றுக்குழாய் என்று அழைக்கப்படும். இது நுரையீரலுக்கு காற்று செல்வதற்கு ஏதுவாக உள்ளது.
5.
சுவாசப் பாதைக்குள் உணவு செல்வதைத் தடுக்கும் தட்டையான குரல்வளை மூடி எபிகிளாட்டிஸ் எனப்படுகிறது.
6.
சைட்டோபிளாசம் செல்லின் நகரும் பகுதி எனப்படுகிறது.
7.
செல்சுவர் மற்றும் பசுங்கணிகம் தாவர செல்லில் மட்டும் காணப்படுகிறது.
8.
நம்மிடம் உள்ள செல்கள் யூகேரியாட் வகையைச் சார்ந்த செல்கள்.
9.
i) அவரை அந்த இடத்திலேயே நிறுத்த வேண்டும்.
ii) நின்று கொண்டிருந்தால் அவரை அந்த இடத்திலேயே படுக்க செய்ய வேண்டும்.
iii) பின்பு, தரைத் தளத்திலேயே உருளச் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் தீ மேலும் பரவாமல் தடுப்பதுடன், பெரிய பாதிப்பின்றி அவரைக் காப்பாற்றலாம்.
10.
நமது பூமியைச் சுற்றி ஒரு பெரிய உறை போலக் காணப்படும் காற்று, வளி மண்டலம் எனப்படுகிறது.
வளி மண்டலத்தின் ஐந்து அடுக்குகளாவன.
i) அடிவளி மண்டலம்
ii) அடுக்கு வளி மண்டலம்
iii) இடைவெளி மண்டலம்
iv) அயனி மண்டலம்
v) புற வளி மண்டலம்
11.
ஒரு கரைப்பானில், கரைபொருள் கரைந்து உருவாகும் கலவையே கரைசல் எனப்படும்.
12.
ஆம், மெழுகு பொம்மை செய்யமுடியும். ஏனெனில் இது ஒரு இயற்பியல் மாற்றம்.
13.
தாவரங்கள் மட்குதல் ஒரு வேதியியல் மாற்றம்.
14.
இரும்புச்சங்கிலி ஒரு மின்கடத்தியாகும்.
15.
எலுமிச்சம் பழச்சாறு மின்பகுளியாக செயல்பட்டு மின்னோட்டத்தை உருவாக்கும்.
16.
K1 & K2 மூடப்பட வேண்டும்.
17.
வெப்பத் தொடர்பில் உள்ள இருபொருட்களின் வெப்பநிலையும் சமமாக இருந்தால் அவை வெப்பச்சமநிலையில் உள்ளன எனப்படுகிறது. இருபொருட்கள் வெப்பச்சமநிலையில் உள்ள போது ஒன்றின் வெப்பநிலை மற்றொன்றை பாதிப்பதில்லை.
18.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது அது விரிவடைவதை அப்பொருளின் வெப்ப விரிவடைதல் என்கிறோம்.
19.
1. விஜிஏ
2. எச்டிஎம்ஐ
3. யுஎஸ்பி
4. தரவுக்கம்பி
5. ஒலிவடம்
6. மின் இணைப்புக் கம்பி
7. ஒலி வாங்கி இணைப்புக் கம்பி
8. ஈதர் நெட் இணைப்புக் கம்பி
விஜிஏ: (Video Graphics Array)
கணினியின் மையச்செயலகத்தைத் திரையுடன் இணைக்கப் பயன்படுகிறது.
யுஎஸ்பி: (Universal Serial Bus)
அச்சுப்பொறி, வருடி, விரலி, சுட்டி, விசைப்பலகை, இணையப்படக்கருவி, திறன் பேசி போன்றவற்றைக் கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது.
தரவுக்கம்பி: (Data Cable)
கணினியின் மையச் செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி ஆகியவற்றை இணைக்கப் பயன்படுகிறது.
20.
1. விலா எலும்புக் கூடு 12 இணைகள் கொண்ட வளைந்த தட்டையான விலா எலும்புகளைக் கொண்டுள்ளது.
2. அவை மென்மையான இதயம், நுரையீரல் போன்ற இன்றியமையாத உடல் உறுப்புகளைப் பாதுகாக்கின்றன.
21.
கடுமையான தட்பவெப்பநிலைகள், தூசுகள், மாசுபாடு, வெப்பம் மற்றும் குளிர்ச்சி போன்ற சூழல்களில் காவலர்கள் பணிபுரிகின்றனர். இதனால் அவர்கள் கடுமையான உடல்நலம் சார்ந்த விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, பணியிலுள்ள போது முகமூடி அணிகின்றனர்.
22.
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின்அதிர்வு ஏற்படாது. ஏனென்றால் மின்கலனின் மின்னழுத்தம் மிக மிக குறைவு.
23.
| வெப்பம் | வெப்பநிலை |
| 1. வெப்பமானது வெப்பநிலையை மட்டுமல்ல ஒரு பொருளில் எவ்வளவு மூலக்கூறுகள் உள்ளன என்பதையும் பொருத்தது. | வெப்பநிலையானது ஒரு பொருளிலுள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் எவ்வளவு வேகத்தில் இயங்குகின்றன அல்லது அதிர்கின்றன என்பதைப் பொருத்தது. |
| 2. வெப்பமானது அப்பொருளின் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்ற லைக் குறிப்பிடும் ஓர் அளவீடு |
வெப்பநிலையானது மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலைக் குறிப்பிடும் ஓர் அளவீடு |
| 3. வெப்பத்தின் SI அலகு ஜூல் | வெப்பநிலையின் SI அலகு கெல்வின் |
24.
உதரவிதானத்தின் அசைவுகளால் உட்சுவாசம்,வெளிச் சுவாசம் ஆகியவை நடைபெறுகின்றன. இந்த அசைவுகள் இல்லையெனில் வெளிக்காற்று நுரையீரலுக்குள் இழுக்கப்பட்ட முடியாது; அசுத்தக் காற்று நுரையீரலிருந்து வெளியேற்றப்பட இயலாது.
25.
| வ.எண் | செல்லின் பாகம் | முக்கிய பணிகள் |
| 1. | செல்சுவர் | செல்லைச் சுற்றியுள்ளதோடு பாதுகாப்பளிக்கிறது. செல்லிற்கு உறுதி மற்றும் வலிமையைத் தருகிறது. |
| 2. | செல்சவ்வு | செல்லிற்குப் பாதுகாப்பு தருகிறது.செல்லின் போக்குவரத்திற்கு உதவுகிறது. |
| 3. | சைட்டோபிளாசம் | நீர் அல்லது ஜெல்லி போன்ற, செல்லில் உள்ள நகரும் பொருள் |
| 4. | மைட்டோகாண்டிரியா | செல்லிற்குத் தேவையான சக்தியை உருவாக்கித் தருகிறது. |
| 5. | பசுங்கணிகம் | இதிலுள்ள பச்சையத்தை பயன்படுத்தி சூரிய ஒளியை ஈர்த்து ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்கிறது. |
26.
அ) மெழுகுவர்த்தி உருகுதல்
ஆ) உருகிய மெழுகை மீண்டும் திண்மமாக மாற்றுதல் மெழுகுவர்த்தியில் எரிதல் என்பது ஒரு இயற்பியல்/ மீளக்கூடிய செயல்முறை ஆகும்.
27.
மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் மின் மூலங்கள் எனப்படும். பலவகையான மின் மூலங்களிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது.
அ) அனல்மின் நிலையங்கள்:
அனல்மின் நிலையங்களில் நிலக்கரி, டீசல் அல்லது வாயுக்களை எரிப்பதன் மூலம் கிடைக்கும் வெப்ப ஆற்றலால் டர்பைன் இயங்குகிறது. டர்பைன் இயங்கும் பொழுது இரு மின்காந்தங்களுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ள கம்பிச்சுருள் சுழல்வதால் உருவாகும் மின்காந்தத் தூண்டலால் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு வெப்ப ஆற்றலானது மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
ஆ) நீர்மின் நிலையங்கள்:
நீர்மின் நிலையங்களில் அணைக்கட்டிலிருந்து பாயும் நீரால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது. நீர்மின் நிலையங்கள் அதிக காலம் இயங்கக் கூடியவை மற்றும் சிக்கனமானவை.
இ) அணுமின் நிலையங்கள் :
அணுமின் நிலையங்களில் அணுக்கரு ஆற்றலைக் கொண்டு டர்பைன் இயக்கப்படுகிறது. டர்பைன் இயக்கத்தால் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு அணுக்கரு ஆற்றலானது இயக்க ஆற்றலாகவும் பின் மின்னாற்றலாகவும் மாற்றப்படுகிறது.
ஈ) காற்றாலை:
காற்றாலைகளில் காற்றின் ஆற்றலால் டர்பைன் சுழற்றப்படுகிறது. இதன் மூலம் மின்சாரம் உருவாகிறது. இங்கு இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
28.
(c)
எச்.டி.எம்.ஐ.(HDMI)
29.
(c)
செரிமானம்
30.
(d)
நுரையீரல்கள்
31.
(b)
நியூக்ளியஸ்
32.
(a)
78%
33.
(c)
மீளா மாற்றம்
34.
(c)
நிலை மாற்றம்
35.
(d)

36.
(b)
இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.
37.
(b)
ஜூல்
38.
i) நீர்வாழ் உயிரினங்கள் வெளியிடும் எல்லா வகையான கழிவுகள், அதிகப்படியான உணவு மற்றும் சிதைவடையும் பொருள்களின் அளவு நீரில் அதிகரிக்கும்.
ii) நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைகிறது.
iii) அதிக தாதுக்கள் மற்றும் ஒளியினால் பாசிகளின் வளர்ச்சி அதிகரிக்கிறது.
iv) சிலநேரங்களில், இலையின் அடியில் மீன்கள் மறைவதும், முட்டையிடுவதும் நிகழ வாய்ப்பில்லாமற் போய்விடுகிறது.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards