6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 03/01/2020
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
தாவரங்கள் தான் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் என்பது அபிக்குத் தெரியும். அவன் ஒரு தாவரத்தின் பின்வரும் பண்புகளைக் கவனிக்கிறான்.
(i) அதில் அதிக கிளைகளும், இலைகளும் உள்ளன.
(ii) கோடை வெப்பத்தைத் தாங்கக் கூடியதாக உள்ளது.
(iii) இலையுதிர் காலத்தில் தன் இலைகளை உதிர்த்தது.
ஆனால் அவன் எவ்வகையான தாவரம் என்பதை அறிவதில் குழுப்பம் அடைந்தான். உன்னால் அவனுக்கு உதவு முடியுமா?
அவை நிலத்தில் வாழக் கூடிய தாவரம்
மலைப் பகுதியில் காணப்படும் தாவரம்
நீருக்கடியில் வாழும் தாவரம்
சதுப்பு நிலத்தில் வாழக்கூடிய தாவரம்
2.
எந்த வாய்பாடு சரியானது?
திசைவேகம் = 
வேகம் = 
வேகம் = நீளம் x அகலம்
முடுக்கம் = .png)
3.
LINUX என்பது.
கட்டண மென்பொருள்
தனி உரிமை மென்பொருள்
கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
4.
நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.
குளம்
ஏரி
நதி
இவை அனைத்தும்.
5.
பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?
ஆவியாதல்
ஆவி சுருங்குதல்
மழை பொழிதல்
காய்ச்சி வடித்தல்
6.
காந்த ஊசிபெட்டியைப் பயன்படுத்தி _______ அறிந்து கொள்ள முடியும்.
வேகத்தை
கடந்த தொலைவை
திசையை
இயக்கத்தை
7.
யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்
செல்சுவர்
சைட்டோபிளாசம்
உட்கரு(நியூக்ளியஸ்)
நுண்குமிழ்கள்
8.
கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
மார்ட்டீன் லூதர் கிங்
கிரகாம்பெல்
சார்லி சாப்ளின்
சார்லஸ் பாபேஜ்
9.
தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை _________ முறையில் நீக்கலாம்
கைகளால் தெரிந்தெடுத்தல்
வடிகட்டுதல்
காந்தப் பிரிப்பு
தெளிய வைத்து இறுத்தல்
10.
7 மீ என்பதை சென்டி மீட்டரில் மாற்றினால் கிடைப்பது
70 செ.மீ
7 செ.மீ
700 செ.மீ
7000 செ.மீ
11.
பின்வரும் அலகினை ஏறு வரிசையில் எழுதுக.
1 மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லிமீட்டர்.
12.
ஒரு செல் உயிரி எது? எ.கா. தருக?
13.
நாம் ஆற்றலை பெற நமது உணவில் காணப்பட்ட வேண்டிய உணவுப் பொருள்கள் யாவை?
14.
நீங்கள் தென்னை மரங்களின் அருகில் நடந்து செல்லும் போது சில நேரங்களின் முதிர்ந்த தேங்காயானது கீழே விழுகிறது. எது தேங்காயைத் தரையில் விழ வைக்கிறது?
15.
தாவரத்தின் படம் வரைந்து பின்வரும் பாகங்களை குறிக்கவும்.
16.
நீளம் - வரையறு
17.
நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.
18.
மறுமலர்ச்சி அடையக்கூடிய பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.
19.
பீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.
20.
நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?
21.
கணினியின் கூறுகள் யாவை?
22.
மூவகையான இரத்தக் குழாய்களின் பெயர்களை எழுதுக.
23.
நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?
24.
நீங்கள் வாய் வழியாக சுவாசித்தால், என்ன நிகழும்?
25.
உங்களிடம் சிறிது மெழுகு தரப்பட்டால் அதை வைத்து உங்களால் மெழுகு பொம்மை செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முடியுமெனில் எவ்வகை மாற்றம் எனக் குறிப்பிடுக.
26.
டார்ச் விளக்கில் எவ்வகையான மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது?
27.
வெப்பநிலை என்றால் என்ன?
28.
கணினியின் முன்னோடிகள் யாவர்?
29.
கீழ்க்கண்டவற்றிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
அ) கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்கள்
ஆ) வைட்டமின் குறைபாட்டு நோய்கள்
30.
படியவைத்தல் - வரையறு.
31.
பறவைகளின் தகவமைப்பை விளக்குக.
32.
விலங்கு-தாவர இடைவினையின் முக்கியத்துவத்தை பற்றி எழுதுக.
33.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக.
34.
உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?
35.
பூமியில் உயிரினங்கள் வாழ வளிமண்டலம் ஏன் தேவைப்படுகிறது?
36.
உன்னைச் சுற்றி நடக்கும் மாற்றங்களிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாற்றத்திற்கும் தகுந்த எடுத்துக்காட்டு தருக்க.
அ. மெதுவான/வேகமான மாற்றம்
ஆ. மீள்/மீளா மாற்றம்
இ. இயற்பியல்/வேதியல் மாற்றம்
ஈ. இயற்கையான/செயற்கையான அல்லது மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்.
உ. விரும்பத்தக்க/விரும்பத்தகாத மாற்றம்.
37.
மின்சுற்றுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் பட்டியலிடுக.
38.
சுண்ணாம்புத் தூள், கடுகு எண்ணெய். நீர் மற்றும் நாணயங்கள் கொண்ட கலவையை உனது ஆய்வகத்தில் உள்ள தகுந்த உபகரணங்களைப் பயன்படுத்தி எவ்வாறு பிரிப்பாய்?
1.
(a)
அவை நிலத்தில் வாழக் கூடிய தாவரம்
2.
(d)
முடுக்கம் = .png)
3.
(d)
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
4.
(d)
இவை அனைத்தும்.
5.
(d)
காய்ச்சி வடித்தல்
6.
(c)
திசையை
7.
(b)
சைட்டோபிளாசம்
8.
(d)
சார்லஸ் பாபேஜ்
9.
(a)
கைகளால் தெரிந்தெடுத்தல்
10.
(c)
700 செ.மீ
11.
1 மில்லிமீட்டர், 1 சென்டி மீட்டர், 1 மீட்டர் மற்றும் 1 கிலோ மீட்டர்
12.
ஒரே செல்லால் ஆன உயிரினங்கள் ஒரு செல் உயிரினங்கள் ஆகும் (எ.கா.) அமீபா, பாரமீசியம் மாற்றும் யூக்ளினா.
13.
கார்போஹைட்ரேட்டுகள், மற்றும் கொழுப்புகள்.
14.
புவிஈர்ப்பு விசை தேங்காயை மரத்திலிருந்து கீழே விழ வைக்கிறது.
15.
அ) இலை
ஆ) வேர்
இ) தண்டு
ஈ) பூ
உ) கணு
ஊ) கணுவிடைப் பகுதி

16.
ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு நீளம் எனப்படும்.
17.
வேம்பு, துளசி, நெல்லி
18.
பழைய துணிகள் மற்றும் சிலவகை நெகிழிகள் மறு சுழற்சி அடையக்கூடிய பொருள்களாகும்.
19.
i. வீரியம் குறைந்த அமிலம்
ii. ஆவியாகும் தன்மையுடைய, வெண்ணிறப் படிகம்
iii. நிறமற்றது. ஆனால், மாசு காரணமாக இளஞ்சிவப்பு நிறமாக மாற்றமடையும்.
20.
துருவப் பகுதிகளில் உள்ள பனியாறுகள், பனிப்படிவுகள் பனிப்பாறைகளில் நீர் பனிக்கட்டியாகக் காணப்படுகிறது.
21.
1. உள்ளீட்டகம் (Input Unit)
2. மையச் செயலகம் (CPU)
3. வெளியீட்டகம் (Output Unit)
22.
தமனிகள், சிரைகள் மற்றும் தந்துகிகள் ஆகியன இரத்தக் குழாய்களாகும்.
23.
சைட்டோபிளாசம் செல்லின் நகரும் பகுதி எனப்படுகிறது.
24.
i) தசைப் பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் விரைவாகச் சென்றடைகிறது.
ii) குழந்தைகளுக்கு வளைந்த பற்கள் உருவாகலாம்.
iii) பெரியவர்களுக்கு பல் ஈறுகளில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
iv) இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
25.
ஆம், மெழுகு பொம்மை செய்யமுடியும். ஏனெனில் இது ஒரு இயற்பியல் மாற்றம்.
26.
டார்ச் விளக்கில் எளிய மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது.
27.
ஒரு பொருள் எந்த அளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதனை அளவிடும் அளவுக்கு வெப்பநிலை என்று பெயர். வெப்பநிலையின் SI அலகு கெல்வின் ஆகும்.
28.
1. சார்லஸ் பாபேஜ்
2. அகஸ்டா அடா லவ்லேஸ்
29.
அ) கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்கள்
வெண்ணெய், நெய்
ஆ) வைட்டமின் குறைபாட்டு நோய்கள்
மாலைக்கண் நோய், பெரி பெரி
30.
ஒரு கலவையில் கனமான பொருட்கள் இருப்பின் அவற்றைச் சிறிது நேரம் அசையாமல் வைக்கும் பொழுது எடை அதிகமான பொருட்கள் வண்டலாகத் தங்கி, மேலடுக்கில் தெளிந்த நீர்மம் கிடைக்கும். இம்முறைக்கு படியவைத்தல் என்று பெயர்.
31.
1. பறவைகள் இறகுகளால் மூடப்பட்ட, படகு போன்ற உடல் அமைப்பைப் பெற்றிருக்கின்றன. படகு போன்ற உடல் அமைப்பு குறைந்த பட்ச எடையுடன் காற்றில் பறக்க பயன்படுகின்றது.
2. பறவைகளுக்கு வாய்க்கு பதிலாக அலகுகள் உள்ளன.
3.அவை நுரையீரல்கள் சுவாசிக்கின்றன.
4. பறவையின் முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறுபாடு அடைந்துள்ளன.
5. உள்ளீடற்ற அல்லது வெற்றிடத்தினால் ஆன இலகுவான எலும்புகளைப் பெற்று இருக்கின்றன்.
6. பறவைகள் பறக்கும் தன்மை பெற்றிருப்பினும் அவற்றால் நிலத்தில் நடக்கவும், ஓடவும், குதிக்கவும் முடியும். பறவைகளின் கால்கள் உள்ள கூர்நகங்கள் மரங்களின் கிளைகளை நன்கு பற்றிக் கொண்டு அமர உதவுகின்றன.
7. பறவையின் வால் பறக்கும் திசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பறத்தலின் போது ஏற்படும் அழுத்தத்தினைத் தங்குவதற்கு வலிமை மிக்க மார்புத் தசையினைத் தாங்குவதற்கு வலிமை மிக்க மார்புத் தசையினைப் பெற்றுள்ளன.
8. ஒரே சமயத்தில் இரு கண்கள் மூலம் இரு வெவ்வேறு பொருட்களை பறவைகளால் காண முடியும். இதற்கு பார்வை என்று பெயர்.
32.
1. மனிதர்கள் தங்களின் தேவைக்காக தாவரங்களைச் சார்ந்திருப்பது போல விலங்குகளும் தாவரங்களைச் சார்ந்துள்ளன.
2. பட்டுப் புழுக்கள் மல்பெரி இலைகளை உணவாக எடுத்துக்கொண்டு பட்டு உற்பத்திக்கு உதவுகிறது, தாவரங்களின் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு விலங்குகள், பூச்சிகள் மற்றும் பறவைகளின் பங்கு மிக அவசியமாகும்.
3. மலர்களிலிருந்து தேனீக்கள் தேனை எடுக்க செல்லும்போது மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதோடு தேனை சேகரிக்கிறது. இதனால் விளைச்சல் அதிகரிக்கிறது.
4. வன்கட்டைகள் உயர்தர மரச்சாமான்கள் மற்றும் பல பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
5. மென்கட்டைகள் நடுத்தரமான அடர்த்தி கொண்ட பலகைகள் மற்றும் தாள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
6. கடலில் பவளப்பாறைகளில் வாழும் பாசிகளும் தாவரங்களும் பெரும்பான்மையான மீன்களின் உணவாக இருப்பதால் அப்பகுதிகளில் மீன்பிடித்தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.
7. பல்வேறு தாவரங்களின் விதைகள் பரவவும், முளைக்கவும் விலங்குகளும், பறவைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
33.
| உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் | உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் |
| இயற்கை காரணிகளான நீர் ஆக்ஸிஜன்,சூரியனின் புற ஊதாக்கதீர்கள் மற்றும் நுண்ணுயிரிகளால் சிதைவுறும் கழிவுகள் உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் எனப்படும். | நுண்ணுயிரிகள் மற்றும் இயற்கைக் காரணிகளால் எளிய மூலக்கூறுகளாக சிதைவுற முடியாத பொருள்கள் உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் எனப்படும். |
| இக்கழிவுகள் மண்ணிற்கு வளமளிக்கின்றன. (எ.கா) காய்கறி மற்றும் பழக்கழிவுகள்,தோட்டக்கழிவுகள்,உணவுக் கழிவுகள் |
இக்கழிவுகளால் மண்ணின் வளம் கெடுகிறது. (எ.கா) நெகிழிப் பொருள்கள், உலோகங்கள்,அலுமினியக் கேன்கள் மற்றும் கண்ணாடிப் பாட்டில்கள் |
34.
1. ஒரு சட்டக காந்தத்தை எடுத்து அதன் ஒரு முனையை இரும்பு ஊசியின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை தேய்க்க வேண்டும்.
2. காந்த முனையை மாற்றக் கூடாது.
3. இரும்பு ஊசியின் எந்த முனையில் இருந்து ஆரம்பித்தோமோ அதே முனையில் இருந்தே மீண்டும் மீண்டும் தேய்க்க வேண்டும்.
4. இதே போல் 30- 40 முறை தேய்க்க வேண்டும்.
5. இப்போது இரும்பு ஊசி காந்தத்தன்மையை பெற்றுள்ளதா என பார்க்க குண்டூசி அல்லது இரும்பு துகள்களை ஈர்க்கிறதா என பார்க்க வேண்டும். அது ஈர்க்கும்
6. இல்லையெனில் இதே முறையை பின்பற்றி மீண்டும் சில முறை தேய்த்தால் இரும்பு ஊசி காந்தத் தன்மையை பெறும்.
35.
1. பூமியைச் சுற்றிலும் காற்றினால் மூடப்பட்டுள்ள ஒரு பெரிய மேலுறையே வளிமண்டலம் எனப்படுகிறது.
2. இம்மேலுறையானது புவிக்கு அருகில் மிக அதிகமாகக் காணப்படுகிறது.
3. உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தியும், அளவும் குறைகிறது.
4. காற்றின் இயக்கமும், மேகங்களை உருவாக்கும் நீராவியும் அடிவளிமண்டலத்தில் உள்ளன.
5. இந்த அடி வளிமண்டலமே, நாம் அனுபவிக்கும் வானிலைக்குக் காரணமாக உள்ளது.
6. இவ்வடுக்கிற்கு மேலே வளிமண்டலத்தில் காணப்படும் ஓசோன் படலம், சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களை (UV) தடுத்து உயிர்களை பாதுகாக்கிறது.
36.
அ) மெதுவான மாற்றம் - பருவநிலை மாற்றம்
வேகமான மாற்றம் - பட்டாசு வெடித்தல்
ஆ) மீள் மாற்றம் - இரப்பர் வளையம் நீளுதல்
மீளா மாற்றம் - உணவு செரித்தல்
இ) இயற்பியல் மாற்றம் - பனிக்கட்டி உருகுதல்
வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்
ஈ) இயற்கையான மாற்றம் - புவியின் சுழற்சி
செயற்கையான மாற்றம் - சமைத்தல்
உ) விரும்பத்தக்க மாற்றம் - பால் தயிராதல்
விரும்பத்தகாத மாற்றம் - காடுகள் அழிதல்
37.
| வ.எண் | மின்சாதனம் | படம் | குறியீடு | குறிப்பு |
| 1. | மின்கலன் | |
பெரிய செங்குத்துக் கோடு நேர்முனையாகவும். சிறிய செங்குத்துக்கோடு எதிர்முனையாகவும் குறிப்பிடப்படுகின்றன. | |
| 2. | தொடர் மின்கலன் (மின்கலஅடுக்கு) |
![]() |
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்கள் தொடராக இணைக்கப்பட்ட அமைப்பு |
|
| 3. | தொடு சாவி திறந்தது | ![]() |
தொடுசாவி செயல்படா நிலை (OFF) (சுற்றில் மின்னோட்டம் செல்லாது) | |
| 4. | தொடு சாவி மூடியது | தொடுசாவி செயல்படும் நிலை (ON) (சுற்றில் மின்னோட்டம் பாயும்) |
||
| 5. | மின்விளக்கு | ![]() |
மின்விளக்கு ஒளிர்கிறது | |
![]() |
மின்விளக்கு ஒளிரவில்லை | |||
| 6. | இணைப்புக் கம்பி | ![]() |
மின் சாதனங்களை இணைக்கப் பயன்படும். |
38.
1. கொடுக்கப்பட்ட கலவையில் கடுகு எண்ணெயின் அடர்த்தி நீரின் அடர்த்தியைவிட குறைவாக இருப்பதால் கலவையின் மேற்பகுதியில் கடுகு எண்ணெய் நீரின் மேல் மிதக்கும். இதை மற்றொரு முகவையில் கவனமாக மாற்றவேண்டும்.
2. எஞ்சி இருக்கும் கலவையில் சுண்ணாம்புத் தூளும் நாணயங்களும் நீரில் கரையாமல் இருக்கும்.
3. இக்கரைசலை வடிதாள் மற்றும் புனல் வழியே வடிகட்ட வேண்டும். தெளிந்த நீர் புனல் வழியே கீழேயுள்ள கலனில் சேகரிக்கப்படும்.
4. வடிதாளில் தங்கியிருந்த சுண்ணாம்புத் தூள், நாணயங்கள் கலவையிலிருந்து கைகளால் தெரிந்தெடுத்தல் முறையில் நாணயங்கள் பிரித்தெடுக்கப்படுகிறது.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards