6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்தித்து அவற்றில் எவை சரியான கூற்றென்று கண்டறியவும்.
1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்திதுர்கா.
2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.
3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.
1 மட்டும் சரி
2, 3 சரி
1, 3 சரி
மூன்றும் சரி
2.
கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?
அய்கோல்
சாரநாத்
சாஞ்சி
ஜுனாகத்
3.
கீழ்க்காண்பனவனுற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்கள் யாவை?
மத்தவிலாசன்
விசித்திரசித்தன்
குணபாரன்
இவை மூன்றும்
4.
கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?
இரண்டாம் நரசிம்மவர்மன்
இரண்டாம் நந்திவர்மன்
தந்திவர்மன்
பரமேஸ்வரவர்மன்
5.
பல்லவ அரசினைப் பற்றிய கூற்றுகளைச் சிந்திக்கவும்
கூற்று i: இவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்ட தேவாரம் முதல் மற்ற தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கின.
கூற்று ii: முதலாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் எனும் நூலின் ஆசிரியர் ஆவார்.
அ) கூற்று i மட்டும் சரி ஆ) கூற்று ii மட்டும் சரி
இ) இரு கூற்றுகளும் சரி ஈ) இரு கூற்றுகளும் தவறு
6.
அ) தந்தின் - தசகுமார சரிதம்
ஆ) வாத்ஸ்யாயர் - ப பாரத வெண்பா
இ) பாரவி - கிரதார்ஜுனியம்
ஈ) அமோகவர்ஷர் - கவிராஜமார்க்கம்
7.
அ) எல்லோரா குகைகள் - ராஷ்டிரகூடர்கள்
ஆ) மாமல்லபுரம் - முதலாம் நரசிம்மவர்மன்
இ) எலிபெண்டா குகைகள் - அசோகர்
ஈ) பட்டடக்கல் - சாளுக்கியர்கள்
8.
_______, _______ ஆகிய இடங்களில் உள்ள இசைக் கல்வெட்டுக்கள் பல்லவர்களின் இசையார்வத்தை உணர்த்துகின்றன.
9.
______ முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதியாவார்.
10.
அய்கோல் கல்வெட்டின் ஆசிரியர் ________ஆவார்.
11.
_______ வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக்கொண்டார்
12.
_______ ஹர்ஷவர்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார்.
13.
ராஷ்டிரகூடர்
14.
மேலைச் சாளுக்கியர்
15.
கீழைச் சாளுக்கியர்
16.
பல்லவர்
17.
விருப்பாக்ஷி கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.
18.
தேவாரம் ஆழ்வார்களால் இயற்றப்பட்டது.
19.
மாமல்லபுரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்.
20.
ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசர் இரண்டாம் புலிகேசி.
21.
புகழ்பெற்ற இசைக் கலைஞர் ருத்ராச்சாரியர் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர்.
22.
தக்கோலம் போர் பற்றிக் குறிப்பெழுதுக.
23.
கடிகை பற்றி நீங்கள் அறிந்ததென்ன?
24.
கன்னட இலக்கியத்தின் மூன்று இரத்தினங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
25.
கல்யாணி மேலைச் சாளுக்கியர் குறித்து எழுதுக.
26.
எலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறுகுறிப்பு வரைக.
1.
(d)
மூன்றும் சரி
2.
(a)
அய்கோல்
3.
(d)
இவை மூன்றும்
4.
(b)
இரண்டாம் நந்திவர்மன்
5.
ஆ) கூற்று ii மட்டும் சரி
6.
ஆ) வாத்ஸ்யாயர் - பாரத வெண்பா
7.
இ) எலிபெண்டா குகைகள் - அசோகர்
8.
( )
குடுமியான்மலை, திருமயம்
9.
( )
பரஞ்ஜோதி
10.
( )
ரவிகீர்த்தி
11.
( )
முதலாம் நரசிம்மவர்மன்
12.
( )
இரண்டாம் புலிகேசி
13.
மான்யகேட்டா
14.
கல்யாணி
15.
வெங்கி
16.
காஞ்சி
17.
(a)
18.
(b)
19.
(a)
20.
(b)
21.
(a)
22.
மூன்றாம் கிருஷ்ணர் ராஷ்டிரகூட வம்சத்தின் திறமை வாய்ந்த கடைசி அரசனாவார். இவர் சோழர்களைத் தக்கோலம் (தற்போதைய வேலூர் மாவட்டத்தில் உள்ளது) போர்க்களத்தில் தோற்கடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார்.
23.
காஞ்சியிலிருந்து கடிகை (மடாலயம் அல்லது கல்வி மையம்) பல்லவர் காலத்தில் புகழ்பெற்று விளங்கியது. அது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்களைத் தன்பால் ஈர்த்தது. நியாய பாஷ்யா எனும் நூலை எழுதிய வாத்ஸ்யாயர் காஞ்சிக் கடுக்காயில் ஆசிரியராக இருந்தார்.
24.
கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்கள் எனக் கருதப்படுபவர்கள் ஆதிகவி பம்பா, ஸ்ரீ பொன்னா, ரன்னா ஆகியோராவர்.
25.
கல்யாணி மேலைச் சாளுக்கியர்கள் வாதாபிச் சாளுக்கியரின் வழித்தோன்றல்கள் ஆவர். கல்யாணியைத் (தற்போதைய பசவ கல்யாண்) தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இரண்டாம் தைலப்பர் என்பவர் ராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக பிஜப்பூர் பகுதியை ஆண்டு வந்தார் இவர் கி.பி. 973இல் மாளவ அரசர் பராமரரைத் தோற்கடித்து கல்யாணியைக் கைப்பற்றினார். இவருடைய வம்சம் முதலாம் சோமேஸ்வரனின் ஆட்சியின் போது பேரரசாக வேகமாக வளர்ச்சி பெற்றது. முதலாம் சோமேஸ்வரர் தலைநகரை மன்யகேட்டாவிலிருந்து கல்யாணிக்கு மாற்றினார்.
26.
எல்லோரா: எல்லோராவின் குன்றுப்பகுதியில் அமைந்துள்ள முப்பது குடைவரைக் கோவில்களில் கைலாசநாதர் கோவிலும் ஒன்று. முதலாம் கிருஷ்ணருடைய ஆட்சிக் காலத்தில் இக்கோவில் உருவாக்கப்பட்டது. இக்கோவில் அதன் கட்டடக்கலை பிரமாண்டத்திற்கும் சிற்பங்களின் அற்புதங்களுக்கும் பெயர் பெற்றதாகும். இக்கோவில் 60,000 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதனுடைய விமானத்தின் (கோபுரம்) உயரம் 90 அடிகளாகும். இக்கோவில் மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலின் சாயலைப் பெற்றுள்ளது. கைலாசநாதர் கோவில் திராவிடக் கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்டுள்ளது.
எலிபெண்டா தீவு: இத்தீவின் இயற்பெயர் ஸ்ரீபுரி. உள்ளூர் மக்களால் காரபூரி என்று அழைக்கப்படுகிறது. எலிபெண்டா மும்பைக்கு அருகிலுள்ள ஒரு தீவு ஆகும். இத்தீவிலுள்ள பெரிய யானையின் உருவத்தைக் கண்ணுற்ற போர்த்துக்கீசியர்கள். இத்தீவுக்கு எலிபெண்டா தீவு எனப் பெயரிட்டனர். எலிபெண்டா குகையிலுள்ள திரிமூர்த்தி (மூன்று முகங்கள் கொண்ட) சிவன் சிலையின் வனப்பு ஈடு இணையற்றதாகும். கோவிலின் நுழைவாயிலில் காணப்படும் துவாரபாலகர்களின் சிலைகள் நமது கண்ணையும் கருத்தையும் கவர்பவை.
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards