6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 12/09/2019
பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
குப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது?
கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி
தென்னிந்தியப் படையெழுச்சி
ஹூணர்களின் படையெடுப்பு
மதசகிப்புத்தன்மை
2.
குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது -
நாட்டில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததை
தங்க வேலை செய்யும் திறனை மக்கள் பெற்றிருந்ததை
அரசாட்சி செழிப்பாக இருந்ததை
மன்னர்களின் ஆடம்பர இயல்பை
3.
வங்காளத்தின் கெளட அரசர் _______
சசாங்கர்
மைத்திரகர்
ராஜ வர்த்தனர்
இரண்டாம் புலிகேசி
4.
பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ________ ஆவார்
காளிதாசர்
அமரசிம்மர்
ஹரிசேனர்
தன்வந்திரி
5.
குப்த வம்சத்தை நிறுவியவர் ________ ஆவார்.
முதலாம் சந்திரகுப்தர்
ஸ்ரீ குப்தர்
விஷ்ணு கோபர்
விஷ்ணுகுப்தர்
6.
ஹர்ஷர் எழுதிய நூற்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
7.
ஹூணர்கள் என்போர் யார்?
8.
உலோகவியலில் குப்தர்களின் சாதனைகளை எடுத்துக் கூறுக.
9.
அரசர்களின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை விளக்குக
10.
‘கவிராஜா’ என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது? ஏன்?
11.
குப்தர்கள் காகாலத்தில் கணிதம், வானியல் ஆகிய துறைகளில் இந்திய அறிவியல் அறிஞர்கள் சாதித்ததென்ன?
12.
ஹர்ஷரை ஒரு கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் மதிப்பீடு செய்யவும்.
13.
கட்டடக்கலைக்குக் குப்தர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதுக.
14.
சமுத்திரகுப்தரின் படையெடுப்புகள் குறித்து எழுதுக.
15.
மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.
16.
| தோரமானர் என்பது யார்? | குப்தப் பேரரசின் முக்கிய அரசு |
| அஸ்வமேத யாகம் நடத்திய குப்த அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுக. |
சந்திர, சூரிய கிரகணங்கள் குறித்து விளக்கிய புத்தகத்தின் பெயர் என்ன? |
| நாணயங்களில் இடம் பெற்ற முதல் குப்த அரசரின் பெயர் என்ன? |
சமுத்திரகுப்தரின் ஆட்சி குறித்து அறிந்த கொள்ள உதவும் மிக முக்கியமான சான்று எது? |
| தொடக்கத்தில் ஹர்ஷர் _______ வழிபட்டார். |
ஹர்ஷரின் காலத்தில் _________ பல்கலைக்கழகம் அதனுடைய புகழின் உச்சத்தை எட்டியது. |
1.
(a)
கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி
2.
(c)
அரசாட்சி செழிப்பாக இருந்ததை
3.
(a)
சசாங்கர்
4.
(c)
ஹரிசேனர்
5.
(b)
ஸ்ரீ குப்தர்
6.
ஹர்ஷருடைய புகழ்பெற்ற நூல்கள் நாகநந்தா, ரத்னாவளி, பிரியதர்சிகா ஆகியனவாகும்.
7.
ஹூணர்கள் என்போர் நாடோடிப் பழங்குடியினராவர். தங்கள் மாபெரும் தலைவர் அட்டில்லாவின் தலைமையில் இவர்கள் ரோமாபுரியையும் கான்ஸ்டாண்டிநோபிளையும் பேரச்சத்திற்கு உள்ளாகினர். இவர்களோடு தொடர்புடைய வெள்ளை ஹூணர்கள் மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்தனர். தங்கள் தொடர் படையெடுப்புகளின் மூலமாக எல்லையோர நாடுகளுக்குத் தொந்தரவு கொடுத்து வந்தனர்.
8.
உலோகத் தொழில் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட மெக்ராலி இரும்புத் தூணாகும். டெல்லியிலுள்ள இவ்வொற்றை இரும்புத்தூண் இன்றளவும் துருப்பிடிக்காமல் உள்ளது.
9.
குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர். அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார். எனவே அரசர் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவராவார். மற்றவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியத்தில்லை எனும் கோட்பாடு.
10.
கவிராஜா என்ற பட்டம் சமுத்திரகுப்தருக்கு வழங்கப்பட்டது. சமுத்திரகுப்தர் மிகசிறந்த படையெடுப்பாளர் மட்டுமல்ல; கவிதைப் பிரியரும் இசைப்பிரியருமாவார். அதனால்'கவிராஜா' எனும் பட்டம் பெற்றார்.
11.
பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பும், அதன் பரிணாம வளர்ச்சியாகத் தசம எண் முறையும் குப்தர்கள் நவீன உலகிற்கு விட்டுச்சென்றுள்ள மரபுவழிச் சொத்தாகும். ஆரியபட்டர், வராகமிகிரர், பிரம்மகுப்தா அகியோல் அக்காலப் பகுதியைச் சேர்ந்த மிக முக்கிய கணிதவியல், வானியல் அறிஞ்சர்கள் ஆவர். ஆரியபட்டர் தனது நூலான 'சூரிய சித்தாந்தா' வில் சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியுள்ளார். பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் அவரேயாவார்.
12.
ஹர்ஷரே ஒரு கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். அவர் சிறந்த கவிஞர்களையும் தன்னைச் சூழ்ந்து இருக்கச் செய்தார். அவருடைய புகழ்பெற்ற நூல்கள் ரத்னாவளி, நாகநந்தா, புரியதர்சிகா ஆகியனவாகும். பானபட்டர், மயூரா, ஹர்தத்தா, ஜெயசேனர் ஆகியோர் அவருடைய அவையை அலங்கரித்தனர்.
13.
கட்டுமானக் கோவில்களை முதன்முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே, இது முன்பிருந்த மரபான, பாறைக் குடைவரைக் கோவில்களின் அடித்த கட்டப் பரிணாம வளர்ச்சியாகும். கோபுரங்களோடும் விரிவான செதுக்கு வேலைப்பாடுகளோடும் அனைத்து இந்து தெய்வங்களுக்கும் இக்கோவில்கள் கட்டப்பட்டன. மிகவும் குறிப்பிடத்தக்க பாறைக் குடைவரைக் குகைகள் அஜந்தா, எல்லோரா (மகாராஷ்டிரா), பாக் (மத்திய பிரதேசம்), உதயகிரி (ஒடிசா) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இக்காலப் பகுதிகளில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள், திராவிட பாணிக் கூறுகளை ஒத்திருக்கின்றன.
14.
சமுத்திரகுப்தர் மகத்தான் போர்த்தளபதியாவார். அவர் பேரரசர் ஆனவுடன் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்றார். தென்னிந்தியாவின் மீதும் படையெடுத்தார். தென்னிந்தியாவில் பல்லவநாட்டு அரசர் விஷ்ணுகோபனை சமுத்திரகுப்தர் தோற்கடித்தார். வட இந்தியாவில் சமுத்திரகுப்தர் ஒன்பது அரசுகளைக் கைப்பற்றினார். தென்னிந்தியாவைச் சேர்ந்த 12 அரசர்களை தனுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக்கி அவர்களைக் கப்பம் கட்டச் செய்தார். கிழக்கு வங்காளம், அஸ்ஸாம், நேபாளம், பஞ்சாபின் கிழக்குப் பகுதி ஆகியவற்றின் அரசர்களும், ராஜஸ்தானைச் சேர்ந்த பல்வேறு பழங்குடியினரும் சமுத்திரகுப்தரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.
15.
பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் 'புகழ்வதாகும்'. அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்துபாடி அவர்தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர். இவை பின்னர் மக்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்காகத் தூண்களில் பொறிக்கப்பட்டன.
16.
| ஹூணர்களின் தலைவர். மத்திய இந்தியாவில் அரசராக முடிசூட்டிக் கொண்டவர். |
தண்ட நாயகர், மகா தண்டநாயகர் |
| சமுத்திர குப்தர், முதலாம் சமுத்திர குப்தர். |
சூரிய சித்தாந்தம் |
| முதலாம் சந்திர குப்தர் | அலகாபாத் தூண் கல்வெட்டு |
| சிவபெருமானை | நாளந்தா |
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards