6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 28/02/2020
6 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 (6th Standard Mathematics Tamil Medium Book Back and Creative Important Question All Chapter 2019-2020)
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒருவர் 400 மீட்டர் நீளமுள்ள துணியை ரூ.60,000க்கு வோங்கி, ஒரு மீட்டர் ரூ.400 வீதம் விற்பனை செய்தார் எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
2.
ஒரு பழ வணிகர் ஒரு கூடைப் பழங்களை ரூ.500க்கு வாங்கினார். எடுத்து வரும்போது சில பழங்ள் நசுங்கிவிட்டன. மீதம் உள்ள பழங்களை ரூ.480க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
3.
ஒருவர் ஒரு நாற்காலியை ரூ.1500 க்கு வாங்கினார். தள்ளுபடி ரூ.100 அளித்த பின் ரூ.250 இலாபம் பெறுமாறு விற்பனை செய்ய விரும்பினார் எனில் நாற்காலியின் குறித்த விலை எவ்வளவு ?
4.
ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 கிராம் காய்கறி தேவைப்டுகிறது.90 குழந்தைகள் உள்ள பள்ளிக்கு எத்தனை கிலோகிராம் காய்கறி தேவைப்படும் ?
5.
தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 998 மி.மீ இதனைச் சென்டி மீட்டரில் மாற்றுக.
6.
இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா-வின் 6 மடங்காகும். மீ.பெ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றோர் எண்ணைக் காண்க.
7.
இரு எண்களின் மீ.சி.ம 210 மற்றும் மீ.பெ.கா 14 என்றுள்ளவாறு எத்தனை எண்சோடிகள் சாத்தியமாகும் ?
8.
143 கணித நுல்களை எல்லா அடுக்குகளிலும் சம எண்ணிக்கையில் அடுக்கி வைத்தால், ஒவ்வோர் அடுக்கிலும் உள்ள நூல்களின் எண்ணிக்கை மற்றும் அடுக்குகளின் எண்ணிக்கையைக் காண்க.
9.
கோணங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட முக்கோணங்களைக் குறுங்கோண அல்லது செங்கோண அல்லது விரிகோண முக்கோணம் என வகைப்படுத்துக.
10.
பக்கங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட முக்கோணங்களை அசமபக்க அல்லது இருசமபக்க அல்லது சமபக்க முக்கோணம் என வகைப்படுத்துக.
11.
பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?
(i)

(ii)

(iii)

(iv)

12.
ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் விதம் பற்றிய தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இத்தரவுக்குப்பட விளக்கப்படம் வரைக .
| பள்ளிக்கு வரும் விதம் | நடைப் பயணம் | மிதிவண்டி | ஈருளி | பேருந்து | மகிழுந்து |
| மாணவர்கள் எண்ணிக்கை | 350 | 300 | 150 | 100 | 100 |
13.
செய்தித்தாள் மற்றும் இதழ்களிலிருந்து 5 அல்லது 6 அல்லது 7 இலக்க எண்களைக் கண்டுபிடித்துப் பத்தாயிரத்துக்கு முழுமையாக்குக
14.
படத்திலிருந்து, பின்வருவனவற்றைக் கண்டறிக.

(i) அனைத்துச் சோடி இணைகோடுகள்
(ii) அனைத்துச் சோடி வெட்டும் கோடுகள்.
(iii) V-ஐ வெட்டும் புள்ளியாகக் கொண்ட கோடுகள்
(iv) கோடுகள் 'I2' மற்றும் 'I3' இன் வெட்டும் புள்ளி
(v) கோடுகள் 'I1' மற்றும் 'I5' இன் வெட்டும் புள்ளி
15.
ஒரு மகிழுந்து 5 கிகி எரிபொருள் (LPG) வாயுவைப் பயன்படுத்தி 125 கிமீ தொலைவு கடக்கிறது. 3 கிகி எரிபொருள் பயன்படுத்தினால் எவ்வளவு தொலைவு கடக்கும்?
16.
பின்வரும் உருவங்களை அமைக்க எத்தனை பனி இனிப்புக் குச்சிகள் தேவைப்படும்? மாறியின் விதியை எழுதுக.
அ) C இன் அமைப்பு 
ஆ) M இன் அமைப்பு
17.
குணா தனது பொருளை ரூ.325 எனக் குறித்து ரூ.30 தள்ளுபடியில் விற்பனை செய்தார் எனில், விற்பனை விலையைக் காண்க.
18.
மாறன் ஒவ்வொரு நாளும் 1.5கி.மீ தொலைவு நடந்து பள்ளியை அடைகிறார்.அதே நேரம் மகிழன் 1400 மீ தொலைவு நடந்து பள்ளியை அடைகிறார். இவர்களுள் யார் கூடுதல் தொலைவு நடக்கிறார்?எவ்வளவு தொலைவு கூடுதலாக நடக்கிறார் ?
19.
கீழின அலகாக மாற்றுக:
(i) 15 கி.மீ (மீ, செ.மீ, மி.மீ)
(ii) 12 கி.கி (கி, மி.கி)
20.
8 செ.மீ, 3 செ.மீ மற்றும் 4 செ.மீ ஆகிய பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ?
21.
1 மீ 20 செ.மீ, 3 மீ 60 செ.மீ மற்றும் 4 மீ அைளவுகளைக் கொண்ட கயிறுகளின் நிலங்களைச் சரியாக அளக்கப் பயன்படும் கயிற்றின் அதிகபட்ச நீளம் என்ன?
22.
இரு சார்பகா எண்களின் மீ.சி.ம 5005. ஓர எண் 65 எனில், மற்சறார எண் என்ன?
23.
பின்வரும் கோணங்களைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 90°
24.
கொடுக்கப்பட்ட தரவுகளுக்குப் பட விளக்கப்படம் வரைக.
உனக்கு ஏற்றாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக்கொள்க.
| மாதம் | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் |
| விற்பனையான கணினிகளின் எண்ணிக்கை | 300 | 450 | 600 | 550 |
25.
பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

26.
முழு எண்களின் பண்புகளைப் பயன்படுத்திச் சுருக்குக
4 \(\times\) 132 \(\times\) 25
27.
அகிலன் 1 மணி நேரத்தில் 10 கிமீ நடக்கிறான். செல்வி 1 மணி நேரத்தில் 6 கிமீ நடக்கிறாள். எனில், அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு உள்ள விகிதத்தைச் சுருக்கிய வடிவில் காண்க.
28.
அறிவழகன் அவரது தந்தையைவிட 30 வயது இளையவன். அறிவழகனின் வயதை அவரது தந்தையின் வயதைக் கொண்டு எழுதவும்.
29.
தள்ளுபடி = குறித்த விலை-_______________.
இலாபம்
விற்பனை விலை
நட்டம்
அடக்க விலை
30.
எது பெரியது ? 0.007 கி, 70 மி.கி, 0.07 செ.கி.
0.07 செ.கி
0.007 கி
70 மி.கி
அனைத்தும் சமம்
31.
ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணங்கள்_____________.
குறுங்கோணம், குறுங்கோணம், விரிகோணம்
குறுங்கோணம், செங்கோணம், செங்கோணம்
செங்கோணம், விரிகோணம், குறுங்கோணம்
குறுங்கோணம், குறுங்கோணம், செங்கோணம்
32.
இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் வேறுபாடு
1
2
3
0
33.
படத்தில் எது ஒருங்கமைப் புள்ளி?

E
F
G
H
34.
ஒரு பட்டை வரை படமானது பின்வருவனவற்றுள் எதனைக் கொண்டிருக்காது?
கிடைமட்டப் பட்டைகள் மட்டும் உடையது
செங்குத்துப் பட்டைகள் மட்டும் உடையது
கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் எனும் இரண்டையும் உடையது
கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் இரண்டில் ஏதேனும் ஒன்றை உடையது
35.
24 ÷ {8 − (3 x 2)} இன் மதிப்பு
0
12
3
4
36.
4 : 7 இன் சமான விகிதமானது.
1 : 3
8 : 15
14 : 8
12 : 21
37.
'w' வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை
30 + w
30 w
7 + w
7w
38.
இரம்யா சில ஒப்பனைப் பொருள்களை வாங்கிக் கொண்டு பின்வரும் பட்டியலைப் பெறுகிறார்.
| ரொக்கப் பட்டியல் சாந்தி அலங்காரப் பொருள்கள் அங்காடி, தஞ்சாவூர் |
||||
| பட்டியல் எண்:100 நாள் : 15.05.2018 | ||||
| வ.எண் | பொருள்கள் | விலை(ரூ.இல்) | அளவு | தொகை(ரூ.இல்) |
| 1. 2. 3. 4. |
தலைமுடிக் கவ்வி (Hair clip) தலைமுடிச் செருகி(Hair pin) நாடா(Ribbon) கைக்குட்டை(Hand kerchief) |
15 /ஒன்று 10 /ஒன்று 12 /மீட்டர் 25 /ஒன்று |
6 4 3 2 |
90 40 36 50 |
| மொத்தம் | 216 | |||
பட்டியலைக் கவனித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
(i) பட்டியல் எண் என்ன ?
(ii) பொருள்கள் வாங்கப்பட்ட தேதியைக் குறிப்பிடுக.
(iii) வாங்கப்பட்ட வெவ்வேறு பொருள்கள் எத்தனை ?
(iv) ஒரு தலைமுடிக் கவ்வியின் விலை என்ன ?
(v) நாடாவின் மொத்த விலை என்ன ?
39.
சென்னை-திருச்சி விரைவு வண்டியின் வந்து சேரும் நேரமும், புறப்படும் நேரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| நிலையம் | வந்து சேரும் நேரம் | புறப்படும் நேரம் |
| சென்னை எழும்பூர் | - | 20.30 |
| செங்கல்பட்டு | 21.30 | 21.32 |
| விழுப்புரம் சந்திப்பு | 23.15 | 23.25 |
| விருத்த்தச்சலம் சந்திப்பு | 00.07 | 00.10 |
| திருச்சி | 04.30 | - |

40.
கொடுக்கப்பட்டுள்ள கோட்டின் மீதுள்ள ஒரு புள்ளியில் இருந்து அக்கோட்டிற்குச் செங்குத்துக்கோடு வரைக.
41.
ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன் பின், முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும் ?
42.
பிருந்தா வெவ்வே று பாடங்களின் அடைவுத்தே ர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் விழுக்காடு பட்டை வரைபடமாகத் தரப்பட்டுள்ளது.

பட்டை வரைபடத்தை உற்றுநோக்கிப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
(i) செங்குத்துக்கோட்டில் 1 அலகு = __________ % மதிப்பெண்கள்.
(ii) பிருந்தா __________ பாடத்தில் மிகவும் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாள் .
(iii) பிருந்தா __________ பாடத்தில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளாள் .
(iv) அறிவியல் பாடத்தில் பிருந்தா பெற்ற மதிப்பெண் விழுக்காடு __________.
(v) __________ பாடத்தில் பிருந்தா 60% மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
(vi) பிருந்தா __________ பாடத்தை விட __________ பாடத்தில் 20% அதிக மதிப்பெண் பெற்றுள்ளாள்.
43.
கொடுக்கப்பட்டுள்ள படங்களில் குறுங்கோணங்களைக் கண்டறிக.

44.
பின்வரும் படத்தில் எத்தனை சதுரங்கள் உள்ளன?
(i)

(ii)

45.
ஒரு நகை வியபாரி தனது வங்கிக் கணக்கில் ஜனவரி மாதம் ரூ 17,53,740 உம் பிப்ரவரி மாதம் ரூ 15,34,300 உம் செலுத்துகிறார். அவர் இரு மாதங்களில் செலுத்திய தொகையின் கூடுதலையும் வித்தியாசத்தையும் ஆயிரத்தில் முழுமைப்படுத்தி உத்தேச மதிப்பைக் காண்க
46.
பின்வரும் எண் அமைப்பினை நிரப்புக.
9 − 1 =
98 − 21 =
987 − 321 =
9876 − 4321 =
98765 − 54321 =
அடுத்து வரும் எண் அமைப்பை எழுதுக.
47.
அமெரிக்காவின் பிரபலமான தங்க நுழைவு வாயில் பாலம் 6480 அடி நீளமும் 756 அடி உயரமும் கொண்ட கோபுரங்களைக் கொண்டது. ஒரு கண்காட்சியில் பயன்படுத்தப்ப ட்ட அதன் மாதிரிப் பாலத்தின் நீளம் 60 அடி மற்றும் உயரம் 7 அடியாகும். பயன்படுத்தப்பட்ட பாலத்தின் மாதிரி ஆனது உண்மைப் பாலத்திற்கு விகித சமமாக உள்ளதா ?

1.
400 மீ துணியின் அடக்க விலை = ரூ.60,000
1 மீ துணியின் விற்பனை விலை = ரூ.400
400 மீ துணியின் விற்பனை விலை = ரூ.400 x 400
= ரூ.1,60,000
இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை
= ரூ.1,60,000 - ரூ.60,000
= ரூ.1,00,000
இலாபம் = ரூ 1,00,000
2.
அடக்க விலை = ரூ. 500
விற்பனை விலை = ரூ.480
இங்கு, அடக்க விலை > விற்பனை விலை
நட்டம்= அடக்க விலை - விற்பனை விலை
= ரூ.500 – ரூ.480
= ரூ. 20
3.
நாற்காலியின் அடக்க விலை = ரூ.1500
தள்ளுபடி = ரூ.100
இலாபம் = ரூ.250
குறித்த விலை = அடக்க விலை + தள்ளுபடி + இலாபம்
= ரூ 1500 + ரூ 100 + ரூ 250
= ரூ 1850
நாற்காலியின் குறித்த விலை = ரூ 1850
4.
பள்ளியில் உள்ள மொத்த குழந்தைகள் = 90
ஒவ்வொரு குழந்தைக்கும் தேவைப்படும் காய்கறி = 100 கிராம்
ஒரு நாளைக்கு 90 குழந்தைகளுக்கு தேவையான மொத்த காய்கறியின் அளவு = 90 x 100 கிைாம்
= 9000 கிராம் = 9 கி.கி.
5.
தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு = 998 மி.மீ

6.
இரு எண்களின் மீ.பெ.கா = 12
இரு எண்களின் மீ.சி.ம = 6 x மீ.பெ.கா = 6 x 12 = 72
ஓர் எண் = 36
மற்றொரு எண் = மீ.சி.ம x மீ.பெ.கா / ஓர் எண்
\(=\frac{72 \times 12}{36}=24\)
மற்றோர் எண் = 24
7.
இரு எண்களின் மீ.சி.ம = 210
இரு எண்களின் மீ.பெ.கா = 14
தேவையான எண்கள் = (14, 210), (42, 70)
இரண்டு எண் சோடிகள் சாத்தியமாகும்.
8.
கணித நூல்களின் மொத்த எண்ணிக்கை = 143
143 இன் பகாக் காரணிகள் = 11 x 13
நூல்களின் எண்ணிக்கை மற்றும் அடுக்குகளின் எண்ணிக்கை
= (11, 13) அல்லது (13, 11)
9.
i) குறுங்கோண முக்கோணம்
ii) செங்கோண முக்கோணம்
iii) விரிகோண முக்கோணம்
iv) குறுங்கோண முக்கோணம்
10.
i) சமபக்க முக்கோணம்
ii) அசமபக்க முக்கோணம்
iii) இருசமபக்க முக்கோணம்
iv) அசமபக்க முக்கோணம்
11.
(i) 12 முக்கோணங்கள்.
(ii) 16 முக்கோணங்கள்.
(iii) 32 முக்கோணங்கள்.
(iv) 35 முக்கோணங்கள்.
12.
| பள்ளிக்கு வரும் விதம் | மாணவர்களின் எண்ணிக்கை |
| நடைப்பயணம் | |
| மிதிவண்டி | |
| ஈருளி | |
| பேருந்து | |
| மகிழுந்து |
ஒரு 100 மாணவர்களைக் குறிக்கும்.
ஓரு 50 மாணவர்களைக் குறிக்கும்.
13.
தகுந்த விடைகள் உன்னுடையது.
14.
(i) I3 மற்றும் I4, I4 மற்றும் I5, I3 மற்றும் I5
(ii) l1 மற்றும் l2, l1 மற்றும் l3 , l1 மற்றும் l4 , l1 மற்றும் l5 ,l2 மற்றும் l3 , l2 மற்றும் l4 , l2 மற்றும் l5
(iii) I1 மற்றும் I2
(iv) Q
(v) U
15.
1 கிகி எரிபொருள் பயன்படுத்தி
கடக்கும் தொலைவு = 125 \(\div \) 5 = \(\frac { 125 }{ 5 } \) = 25 கி.மீ.
3 கிகி எரிபொருள் பயன்படுத்தி கடக்கும் தொலைவு = 25 \(\times\) 3 = 75 கி.மீ.
16.
(a) C இன் அமைப்பு 
இன் அமைப்பு அமைக்க தேவைப்படும் பனி இனிப்புக் குச்சிகளின் எண்ணிக்கை = 3n [n - மாறி]
(b) M இன் அமைப்பு 
இன் அமைப்பு அமைக்க தேவைப்படும் பனி இனிப்புக் குச்சிகளின் எண்ணிக்கை = 4n [n - மாறி]
17.
பொருளின் குறித்த விலை = ரூ.325
தள்ளுபடி = ரூ.30
விற்பனை விலை = குறித்த விலை - தள்ளுபடி
= ரூ.325 - ரூ.30
= ரூ 295
பொருளின் விற்பனை விலை = ரூ 295.
18.
மாறன் நடந்த தொலைவு = 1.5 கி.மீ = 1.5 x 1000 மீ
= 1500 மீ
மகிழன் நடந்த தொலைவு = 1400 மீ
வித்தியாசம் = 100 மீ
மாறன், மவிழனை விட 100 மீ கூடுதலாக நடந்தார்.
19.
(i) 1 கி.மீ = 1000 மீ
15 கி.மீ = 15 x 1000 = 15000 மீ
1 கி.மீ = 100000 செ.மீ
15 கி.மீ = 15 x 100000 செ.மீ = 1500000 செ.மீ
1 கி.மீ = 1000000 மி.மீ
15 கி.மீ = 15 x 1000000 மி.மீ = 15000000 மி.மீ
(ii) 1 கி.கி = 1000 கி
12 கி.கி = 12 x 1000 கி = 12000 கி
1 கி.கி = 1000000 மி.கி
12 கி.கி = 12 x 1000000 மி.கி = 12000000 மி.கி
20.
இரு சிறிய பக்கங்களின் கூடுதல் = 3 + 4 = 7 செ.மீ < 8 செ.மீ, மூன்றாவது பக்கம்.
இரு சிறிய பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தைவிடக் குறைவாக உள்ளது.
எனவே, கொடுக்கப்பட்ட பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலாது.
21.
முதல் கயிற்றின் நீளம் = 1 மீ 20 செ.மீ = 120 செ.மீ
இரண்டாம் கயிறின் நீளம் = 3 மீ 60 செ.மீ
= 360 செ.மீ
மூன்றாம் கயிற்றின் நீளம் = 4மீ = 400 செ.மீ
சரியாக அளக்கப்படும் கயிற்றின் அதிகபட்ச நீளம்
= 120, 360, 400 இன் மீ.சி.ம.

மீ.சி.ம = 2 x 2 x 2 x 5 = 40
கயிற்றின் அதிகபட்ச நீளம் = 40 செ.மீ.
22.
இரு எண்களின் பெருக்கற்பலன் = அவற்றின் மீ.பெ.கா x மீ.சி.ம
மேலும், எண்கள் சார்பகா என்பதால் அவற்றின் மீ.பெ.கா. 1 ஆகும்.
65 x மற்றோர் எண் = 5005 x 1
ஆகவே, மற்றோர் எண் = 5005 \(\div \) 65 = 77
23.

வரையும் முறை :
1. அடிப்பக்கக் கதிர் \(\overrightarrow { PQ } \) வரைக.
2. கோணமானியின் நடுப்புள்ளியை உச்சிப் புள்ளி P இல் வைக்கவும்.
3. 0° கோட்டோடு \(\overrightarrow { PQ } \) கதிரைச் சேருமாறு சேர்க்கவும்.
4. உள் அளவுகோலில் 90° இல் ஒரு புள்ளியைக் குறித்து R எனப் பெயரிடுக. (கடிகார எதிர்த்திசையில்)
5. கோணமானியை எடுத்துவிட்டு கோணத்தை அமைக்க கதிர் \(\overrightarrow { PR } \) வரைக.
6. இங்கு \(\angle \)P = \(\angle \)QPR = \(\angle \)RPQ = 90°
24.
| மாதம் | விற்பனையான கணினிகளின் எண்ணிக்கை |
| ஜீன் | |
| ஜூலை | |
| ஆக்ஸ்டு | |
| செப்டம்பர் |
ஒரு கணினி 100 கணினிகளைக் குறிக்கும்.
ஒரு 50 கணினிகளைக் குறிக்கும்.
25.
32 முக்கோணங்கள்.
26.
4 x 132 x 25 = 132 x (25 x 4)
= 132 x 100
= 13200
27.
அகிலன் நடந்த தொலைவு = 10 கிமீ
செல்வி நடந்த தொலைவு = 6 கிமீ
விகிதம் = 10 : 6
பின்னம் = \(\frac{10}{6} \div \frac{2}{2}=\frac{5}{3}\)
எளிய வடிவம் = 5 : 3
அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு உள்ள விகிதம் = 5 : 3
28.
அறிவழகனின் தந்தையின் வயது = n
\(\Rightarrow\) அறிவழகனின் வயது = n - 30
29.
(b)
விற்பனை விலை
30.
(c)
70 மி.கி
31.
(d)
குறுங்கோணம், குறுங்கோணம், செங்கோணம்
32.
(b)
2
33.
(b)
F
34.
(d)
கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் இரண்டில் ஏதேனும் ஒன்றை உடையது
35.
(b)
12
36.
(d)
12 : 21
37.
(d)
7w
38.
(i) பட்டியலின் எண் 100.
(ii) பொருள்கள் 15.05. 2018 அன்று வாங்கப்பட்டன.
(iii) நான்கு வெவ்வேறு பொருள்கள் வாங்கப்பட்டன.
(iv) ஒரு தலைமுடிக்கவ்வியின் விலைரூ 15.
(v) நாடாவின் மொத்த விலை ரூ 36.
39.
1.இந்தத் தொடர்வண்டி எத்தனை மணிக்குச் சென்னை எழும்பூரில் புறப்படடு எத்தனை மணிக்குத் திருச்சி வந்தளடகிறது?
இந்தத தொடர்வண்டி எழும்பூரில் 20:30 மணிக்குப் புறப்படடுத் திருச்சியை 4:30 மணிக்கு வந்தடைகிறது.
2. விழுப்புரத்தில் எவ்வளவு நேரம் நிற்கிறது?
விழுப்புரத்தில் 10 நிமிட நேரம் நிற்கிறது (23:25 - 23:15 = 10 நிமிடங்கள்)
3. சென்னையில் இருந்து திருச்சி வராய் ஏத்தனை நிறுத்தங்கள் உள்ளன?
3 நிறுத்தங்கள்: 1. செங்கல்பட்டு : 2. விழுப்புரம் சந்திப்பு: 3.விருத்த்தச்சலம் சந்திப்பு
4. சென்னையில் இருந்து திருச்சிக்குச் செசல்லும் இத்தொடர் வண்டியின் பயண நேரத்தைக் கணக்கிடுக.
40.
| படி 1: AB என்ற கொடு வரைந்து, கோட்டின் மீது p என்ற புள்ளியைக் குறிக்க. | |
| படி 2: மூலைமட்டத்தின் செங்கோணம் உருவாக்கும் முறையானது P என்ற புள்ளியிலும் மற்றும் செங்கோணத்தை உருவாக்கும் ஒரு பக்கம் AB என்ற கோட்டின் மீதும் படத்தில் காட்டியவாறு பொருத்துக. |
|
| படி 3:மூலைமட்டத்தின் செங்கோணத்தை உருவாக்கும் மற்றொரு பக்கத்தின் விளிம்பை ஒட்டி P என்ற புள்ளியிலிருந்து PQ என்ற கோடு வரைக. |
|
| படி 4: கோடு PQ ஆனது AB க்குச் செங்குத்துக் கோடாகும். அதாவது PQ \(\bot \) AB மற்றும் \(\angle APQ =\angle BPQ \)=90o . |
41.
இது மீ.சி.ம தொடர்பான கணக்கு ஆகும். ஆகவே, நாம் 15, 20, 25 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.சி.ம-வைக் காண வேண்டும்.
15, 20, 25 மற்றும் 30 இன் மீ.சி.ம = 2 x 2 x 3 x 5 x 5
= 300 நிமிடங்கள்
= 5 x 60 நிமிடங்கள்
= 5 x 1 மணி நேரம்
= 5 மணி நேரம்
எனவே, நான்கு அலைபேசிகளும் மீண்டும் காலை 10 மணிக்கு ஒன்றாக ஒலிக்கும்.
42.
(i) 10
(ii) கணக்கு
(iii) மொழிப்பாடம்
(iv) 65%
(v) ஆங்கிலம்
(vi) கணக்கு; அறிவியல்
43.
(i),(ii) மற்றும் (iii) ஆகியவை குறுங்கோணங்கள்.
44.
(i) 20 சதுரங்கள்.
(ii) 10 சதுரங்கள்.
45.
கீழ்க்கண்டவாறு ஆயிரங்களில் முழுமைப்படுத்த வேண்டும்.
| உண்மையான தொகை | உத்தேச தொகை | |
| சனவரி மாதத்தில் செலுத்திய தொகை | ரூ 17,53,740 | ரூ 17,54,000 |
| பிப்ரவரி மாதத்தில் செலுத்திய தொகை | ரூ 15,34,400 | ரூ 15,34,000 |
| மொத்தம் செலுத்திய தொகை | ரூ 32,88,140 | ரூ 32,88,000 |
| செலுத்திய தொகைகளின் வித்தியாசம் | ரூ 2,19,340 | ரூ 2,20,000 |
46.
9 − 1 = 8
98 − 21 = 77
987 − 321 = 666
9876 − 4321 = 5555
98765 − 54321 = 44444
அடுத்து வரும் எண் அமைப்பு
987654 - 654321 = 333333
47.
கொடுக்கப்பட்ட விகிதங்கள் 6480 : 756 மற்றும் 60 : 7.
நடு மதிப்புகளின் பெருக்கற்பலன்
bc = 756 x 60 = 45360
கோடி மதிப்புகளின் பெருக்கற்பலன்
ad = 6480 x 7 = 45360
இங்கு ad = bc. எனவே, பயன்படுத்தப்பட்ட பாலத்தின் மாதிரி ஆனது உண்மைப் பாலத்திற்கு விகித சமமாக உள்ளது.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards