6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 28/02/2020
6 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 (6th Standard Mathematics Tamil Medium Important Question 2019-2020)
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வரும் அட்டவணையில் பொருத்தமானவற்றைக் கொண்டு நிரப்புக.
| வ.எண் | அடக்க விலை (ரூ.இல்) |
குறித்த விலை (ரூ.இல்) |
விற்பனை விலை (ரூ.இல்) | தள்ளுபடி (ரூ.இல்) |
இலாபம் (ரூ.இல்) |
நட்டம் (ரூ.இல்) |
| i | 110 | 130 | இல்லை | |||
| ii | 110 | 130 | 10 | |||
| iii | 110 | 130 | 30 | |||
| iv | 100 | 120 | இல்லை | 10 | ||
| v | 120 | 10 | 20 | இல்லை |
2.
மேலின அலகாக மாற்றுக:
(i) 13000 மி.மீ (கி.மீ, மீ, செ.மீ)
(ii) 8257 மி.லி (கி.லி, லி)
3.
குறிப்பிடப்படட அலகிற்கு மாற்றுக
(i) 10 லி 5 மி.லி - லிருந்து மி.லி
(ii) 4 கி.மீ 300 மீ - லிருந்து மீ
(iii) 300 மி.கி - லிருந்து கி
4.
வில்சன், மதன் மற்றும் குணசேகரன் ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஓடுபாதையின் ஒரு சுற்றை முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்கப் புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாகச் சுற்றத் தொடங்கினாள், அவர்கள் மீண்டும் எப்பபோது தொடக்கப் புள்ளியில் ஒன்றாகச் சந்திப்பார்கள் ?
5.
AB = 7 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைந்து கோட்டுத்துண்டின் மீது P என்ற புள்ளியைக் குறிக்கவும். P வழியே AB கோட்டுத்துண்டிற்குச் செங்குத்துக்கோடு வரைக.
6.
வகுத்தல் முறையில் 40 மற்றும் 56 ஆகிய எண்களுக்கு மீ.பெ.கா. காண்க.
7.
பின்வரும் கோணங்களைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 180°
8.
வகுப்பு வாரியாக மாணவர்கள் விரும்பும் பழ வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
| பழங்கள் | வாழைப்பழம் | திராட்சை | ஆப்பிள் | மாம்பழம் | கொய்யா | பப்பாளி | இவை எதுவும் இல்லை |
| மாணவர்களின் எண்ணிக்கை | 8 | 10 | 8 | 7 | 12 | 3 | 2 |
இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரை படம் வரைக .
9.
கருப்பு மற்றும் நீல வண்ணத்தில் தலா ஒரு கால் சட்டையும், வெள்ளை , நீலம், சிவப்பு வண்ணங்களில் தலா ஒரு மேல் சட்டையும் உன்னிடம் உள்ளன. ஒரே வண்ணத்தில் உள்ள ஆடைகளைத் தவிர்த்து எத்தனை வழிகளில் ஆடைகளை மாற்றி அணியலாம்?
10.
ஆசிரியர் இரண்டு மாணவர்களிடம் "ஓர் எண்ணை விட 8 அதிகம்" என்ற வாய்மொழிக் கூற்றை இயற்கணிதக் கூற்றாக எழுதுமாறு கூறுகிறார். வெற்றி '8 + x' எனவும், மாறன் '8x' எனவும் எழுதினர். யாருடைய விடை சரியானது?
11.
கீழ்க்காணும் விகிதங்களில் எது பெரிய விகிதம்?
1 : 2 அல்லது 2 : 1
12.
பின்வரும் எண்ணுருக்களை பன்னாட்டு முறையில் எழுதுக.
345,678
13.
இரண்டு கோணங்கள் மிகை நிரப்புக் கோணங்களாகவும், அதில் ஒரு கோணம் மற்றொரு கோணத்தை விட 20° அதிகமாக உள்ளது எனில், அக்கோணங்களைக் காண்க.
14.
ஒரு பல்பொருள் அங்காடி விற்பனையாளர் ரூ.750 க்கு ஒரு கணிப்பானை வாங்கினார்.அதனுள் ரூ.100 மதிப்புள்ள மின்கலம் பொருத்தினார். அதன் வெளி உறைக்காக ரூ.50 செலவிட்டார். அதை ரூ.850 க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
15.
அமுதா அவரது வீட்டில் தயார் செய்த ஊறுகாயை ஒரு பொட்டலம் ஒன்றுக்கு ரூ.300 என விலை குறித்தார். ஆனால் ஒரு பொட்டலம் ரூ.275 க்கு விற்பனை செய்தார் எனில் ஒரு பொட்டலத்திற்கு அவரால் அளிக்கப்பட தள்ளுபடி எவ்வளவு ?
16.
ஒருவர் ஒரு நாற்காலியை ரூ.1500 க்கு வாங்கினார். தள்ளுபடி ரூ.100 அளித்த பின் ரூ.250 இலாபம் பெறுமாறு விற்பனை செய்ய விரும்பினார் எனில் நாற்காலியின் குறித்த விலை எவ்வளவு ?
17.
ஓர் அஞ்சல் அலுவலகம் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5.45 மணி வரை இயங்குகிறது. மதியம் 1 மணி நேரம் உணவு இடைவேளை ஆகும்.அஞ்சல் அலுவலகம் வாரத்தில் 6 நாட்கள் இயங்கினால், ஒரு வாரத்தின் மொத்த வேலை நேரத்தைக் கணக்கீடுக.
18.
ஒரு விவசாயி தன்னுடைய மின்சார மோட்டாருகாகத் திங்கள் மட்டும் செவ்வாய் கிழமைகளில் மின்சாரத்தை பயன்படுத்திய நேரம் முறையே 7 மணி 20 நிமிடம் 35 வினாடி மற்றும் 3 மணி 44 நிமிட 50 வினாடி எனில் அவர் மின்சாரத்தை பயன்படுத்திய மொத்த நேரத்தைக் கணக்கீடுக.
19.
மூன்று பகா எண்களின் கூடுதல் 80. அவற்றுள் இரு எண்களின் வேறுபாடு 4 எனில், அந்த எண்களைக் காண்க.
20.
n = 2 முதல் 8 வரை உள்ள எந்த எண்களுக்கு, 2n - 1 ஆனது, ஒரு பகா எண் ஆகும்?
21.
நான், மூன்று கோணங்களும் 60o ஆகக் கொண்ட ஒரு மூடிய உருவம் ஆவேன். நான் யார் ?
22.
ஒவ்வோர் எண்ணையும் காரணிச்செடி முறை மற்றும் வகுத்தல் முறை மூலம் பகாக் காரணிப்படுத்துக.
(i) 60
(ii) 128
(iii) 144
(iv) 198
(v) 420
(vi) 999
23.
கோணங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட முக்கோணங்களைக் குறுங்கோண அல்லது செங்கோண அல்லது விரிகோண முக்கோணம் என வகைப்படுத்துக.
24.
பின்வரும் படத்தில் 10 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.

25.
கீழ்காணும் வினாக்களில் பெறும் பண்பு யாது?
50 \(\times\) 42 = 50 \(\times\) 40 + 50 \(\times\) 2
26.
விஜி ஒரு பகடையை 30 முறைகள் உருட்டும் போது கிடைக்கும் விளைவுகளை ப் பின்வருமாறு குறித்துள்ளார். அதற்கு நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.
1 4 3 5 5 6 6 4 3 5 4 5 6 5 2
4 2 6 5 5 6 6 4 5 6 6 5 4 1 1
27.
கோபால், கர்ணனை விட 8 வயது இளையவன். அவர்களின் வயதுகளின் கூடுதல் 30 எனில், கர்ணனின் வயது என்ன ?
28.
கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.
75 : 100
29.
'கூடுதல் செலவுகள்' எப்போதும் __________ல் அடங்கியுள்ளது.
விற்பனை விலை
அடக்க விலை
இலாபம்
நட்டம்
30.
2 நாள்கள் = ________ மணி
38
48
28
40
31.
பின்வரும் இணைகளில், எவை சார்பகா எண்கள் ஆகும் ?
51, 63
52, 91
71, 81
81, 99
32.
ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணங்கள்_____________.
குறுங்கோணம், குறுங்கோணம், விரிகோணம்
குறுங்கோணம், செங்கோணம், செங்கோணம்
செங்கோணம், விரிகோணம், குறுங்கோணம்
குறுங்கோணம், குறுங்கோணம், செங்கோணம்
33.
படத்தில் உள்ள ஒரு கோடமைப் புள்ளிகள் _______________

A, B, C
A, F, C
B, C, D
A, C, D
34.
பட விளக்கப்படத்தை ஆங்கிலத்தில்..................................எனவும் அழைக்கலாம்.
பிக்டோ வேர்டு
பிக்டோ கிராம்
பிக்டோ ப்ரேஸ்
பிக்டோ கிராப்ட்
35.
2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், ‘x’ = ?
50
4
10
8
36.
'y + 7 = 13' எனில் 'y' இன் மதிப்பு
y = 5
y = 6
y = 7
y = 8
37.
10 மில்லியனின் தொடரி
1000001
10000001
9999999
100001
38.
25 கி.கி எடையுள்ள கோதுமைப்பை ஒன்று ரூ.1550 க்கு விற்பனை செய்யப்பட்டு ரூ.150 இலாபம் பெறப்படுகிறது எனில் கோதுமையின் அடக்க விலையைக் காண்க.
39.
6 மு.ப. மற்றும் 4 பி.ப -இக்கு இடைப்பட்ட கால இடைவெளியைக் காண்க.
40.
PQ = 12 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 5 செ.மீ தூரத்தில் M மற்றும் N என இரு புள்ளிகளைக் குறிக்க. M மற்றும் N வழியே PQ கோட்டுத்துண்டிற்கும் ஓர் இணைகோடு வரைக.
41.
ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன் பின், முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும் ?
42.
செப்டம்பர் மாதத்தில் கணிக்கப்பட்ட வெப்பநிலை அட்டவணை பின்வருமாறு.
(i) நாட்காட்டியை கவனித்து வானிலை வகைகளின் நிகழ்வெண் அட்டவணை அமைக்க
(ii) எத்தனை நாட்கள் மேக மூட்டமாகவோ அல்லது பகுதி மேக மூட்டமாகவோ இருக்கும்?
(iii) எத்தனை நாட்களில் மழை இருக்காது?இரு வழிகளில் விடையைக் காண வழியை கூறுக
(iv) சூரிய ஒளிமிக்க நாட்களுக்கும் மழை நாட்களுக்கும் உள்ள விகிதம் என்ன?
43.
கொடுக்கப்பட்ட படங்களில் விரிகோணங்களைக் கண்டறிக.

44.
அன்பு, அறிவுச்செல்வி ஓர் ஐந்து இலக்க ஒற்றைப்படை எண்ணை நினைவில் கொள்ளக் கூறினான். மேலும் பின்வரும் குறிப்புகளைக் கூறுகிறான்.
(i)1000 ஆவது இட மதிப்பில் உள்ள இலக்கம் 5 ஐ விடக் குறைவு.
(ii)100 ஆவது இடமதிப்பில் உள்ள இலக்கம் 6 ஐ விடக் குறைவு.
(iii)10 ஆவது இடமதிப்பில் உள்ள இலக்கம் 8.
அறிவுச்செல்வி விடை என்னவாக இருக்கும்? அவள் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளைக் கூறுவாளா?
45.
மாய முக்கோணத்தில் 1 லிருந்து 6 வரை எண்களைப் பயன்படுத்தி எத்தனை விடைகளைக் கொண்டு வரலாம்? ஆனால் அனைத்துப் பக்கங்களிலும் ஒரே கூடுதல் வரவேண்டும்.

46.
ஒரு கணினியைப் பயன்படுத்தி ஒரு படத்தின் அளவு பின்வருமாறு மாற்றம் செய்யப்படுகிறது.

படத்தில் வடிவம் மற்றும் அளவில் மாற்றம் உள்ளதை உங்களால் கவனிக்க முடிகிறதா? குறுக்குப் பெருக்கல் முறையைப் பயன்படுத்தி இரு படங்களின் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதங்கள், விகித சமத்தில் உள்ளதா என ஆராய்க.
47.
பின்வரும் அட்டவணையை நிரப்புக. மேலும் '\(\frac { k }{ 3 } \)' இன் மதிப்பு 5 எனில் 'k' இன் மதிப்பைக் காண்க.
| k | 3 | 6 | 9 | 12 | 15 | 18 |
| \(\frac { k }{ 3 } \) | 1 | 2 |
1.
i) விற்பனை விலை = ரூ 130, இலாபம் = ரூ 20
ii) விற்பனை விலை = ரூ 120, இலாபம் = ரூ 10
iii) விற்பனை விலை = ரூ 100, இலாபம் = ரூ 10
iv) விற்பனை விலை = ரூ 90, தள்ளுபடி = ரூ 30
v) விற்பனை விலை = ரூ 90, விற்பனை விலை = ரூ 110
2.
(i) 1 மி.மீ = 1 / 1000000 கி.மீ
13000 மி.மீ = \(=13000 \times \frac{1}{1000000}
\) கி.மீ
\(=\frac{13000}{1000000}=0.013
\) மீ
1 மி.மீ = 1 / 1000 மீ
13000 மி.மீ = 13000 x 1/1000 மீ = 13 மீ
1 மி.மீ = 1 / 10 செ.மீ
13000 மி.மீ = 13000 x 1/10 செ.மீ = 1300 செ.மீ
(ii) 1 மி.லி = 1 / 1000000 கி.லி
8257 மி.லி = 8257 x 1/1000000 = 0.008257 கி.லி
1 மி.லி = 1 / 1000 லி
8257 மி.லி = 8257 x 1/1000 லி = 8.257 லி
3.
(i) 1 லி = 1000 மி.லி
10 லி 5 மி.லி. = (10 x 1000) + 5 = 10005 மி.லி
(ii) 1 கி.மீ = 1000 மீ
4 கி.மீ 300 மீ = (4 x 1000) + 300 = 4300 மீ
(iii) 1 மி.கி = 1000 கி
800 மி.கி = 300 x 1 \(\div\) 1000 கி = 300 \(\div\) 1000 = 0.3 கி
4.
வில்சன். மதன், குணசேகரன் எடுத்துக் கொண்ட நேரம் = 10, 15, 20 நிமிடங்கள்.
ஒன்றாக சந்திக்கும் நேரம் = 10,15, 20 இன்
மீ.சி.ம.

மீ.சி.ம = 5 x 2 x 2 x 3 = 60
மூவரும் 60 நிமிடங்கள் கழித்து காலை 8 மணிக்கு ஒன்றாக சந்திப்பார்கள்.
5.

படி 1 : AB = 7 செ.மீ அளவுள்ள ஒரு கோட்டுத்துண்டு வரைந்து, AB க்கு மேலே P என்ற புள்ளியைக் குறிக்க.
படி 2 : கோட்டுத்துண்டு ABக்கு மேல் முலைமட்டத்தைப் பொருத்துக.
படி3 : P வழியாக PQ என்ற கோடு வரைக.
படி 4 : கோடு PQ ஆனது AB க்கு செங்குத்துக்கோடாகும். அதாவது PQ \(\bot \) AB.
6.


40 மற்றும் 56 ஆகிய எண்களின் பொதுக் காரணிகளின் பெருக்கற்பலன் = 2 x 2 x 2 = 8. ஆகவே, மீ.பெ.கா. (40, 56) = 8.
7.

'C' ஆனது 'B' இக்கு மிகச் சரியாகவே எதிர்த்திசையில் அமைந்துள்ளது. உச்சிப்புள்ளி 'A' ஆனது நடுவில் உள்ளது. எனவே கோணமானது 180° இது நேர்க்கோணம் \(\angle \)A = \(\angle \)CAB = \(\angle \)BAC = 180°
8.
9.
கால் சட்டைகளின் எண்ணிக்கை = 2(1 கருப்பு, 1நீலம்)
மேல் சட்டைகளின் எண்ணிக்கை = 3(1 வெள்ளை, 1 நீலம், 1 சிவப்பு)
கால் சட்டைகள்-மேல் சட்டைகள்
கருப்பு வெள்ளை கருப்பு-நீலம், கருப்பு-சிவப்பு
நீலம்-வெள்ளை நீலம்-நீலம் நீலம்-சிவப்பு
\(\therefore\) 6 வழிகளில் ஆடைகளை மாற்றி அணியலாம்.
10.
ஆசிரியரின் வாய்மொழிக் கூற்று = ஓர் எண்ணை விட 8 அதிகம்
வெற்றியின் இயற்கணிதக் கூற்று = 8 + x
மாறனின் இயற்கணிதக் கூற்று = 8x
அதிகம் என்பதன் இயற்கணித செயல்பாடு '+' எனவே வெற்றியின் விடை சரியானது
11.
2 : 1 ன் சமான விகிதம்
\(=\frac{2}{1} \times \frac{2}{2}=\frac{4}{2}=4: 2
\)
\(=\frac{1}{2}<\frac{4}{2}
\)
\(=\frac{1}{2}<\frac{2}{1}
\)
2 : 1 பெரியது.
12.
345,678 - முன்னூற்று நாற்பத்து ஐந்தாயிரத்து அறுநூற்று எழுபத்து எட்டு
13.
ஒரு கோண அளவு = x0 என்க.
அடுத்த கோண அளவு = x + 20°
இரு கோணங்களில் கூடுதல் = x + x + 20° = 180°
2x + 20° = 180°
2x = 180° - 20° = 160°
\(x=\frac { 160 }{ 2 } =80°\)
அடுத்த கோண அளவு = 80° + 20° = 100°
இரு கோண அளவுகள் 80°, 100°
14.
கணிப்பானின் அடக்க விலை = ரூ.750
மின்கலத்தின் விலை = ரூ.100
வெளி உரையின் விலை = ரூ.50
மொத்த அடக்க விலை = ரூ 750 + ரூ 100 + ரூ 50
= ரூ 900
கணிப்பானின் விற்பனை விலை = ரூ 850
அடக்க விலை > விற்பனை விலை
நட்டம் = அடக்க விலை - விற்பனை விலை
= ரூ.900 - ரூ.850
= ரூ.50.
விற்பனையாளருக்கு ஏற்பட்ட நட்டம் = ரூ 50
15.
ஊறுகாயின் குறித்த விலை = ரூ.300
ஊறுகாயின் விற்பனை விலை = ரூ.275
தள்ளுபடி = குறித்த விலை - விற்பனை விலை
= ரூ 300 - ரூ 275 = ரூ 25
அமுதா ஊறுகாய்க்கு அளித்த தள்ளுபடி = ரூ 25.
16.
நாற்காலியின் அடக்க விலை = ரூ.1500
தள்ளுபடி = ரூ.100
இலாபம் = ரூ.250
குறித்த விலை = அடக்க விலை + தள்ளுபடி + இலாபம்
= ரூ 1500 + ரூ 100 + ரூ 250
= ரூ 1850
நாற்காலியின் குறித்த விலை = ரூ 1850
17.
10 முப முதல் 5.45 பி.ப வரை கால அளவு = 7.45 மணி
உணவு இடைவேளை = 1 மணி
1 நாளின் வேலை நேரம் 6.45 மணி
6 நாட்களின் வேலை நேரம் = 6 x 6.45
= 36 மணி 270 நிமிடங்கள்
= 40 மணி 30 நிமிடங்கள்
அஞ்சல் அனுவலகத்தின் ஒரு வாரத்தின் மொத்த வேலை நேரம் = 40 மணி 30 நிமிடங்கள்.
18.
| மணி | நிமிடங்கள் | வினாடிகள் | |
| திங்கள் கிழமை பயன்படுத்திய மின்சாரம் | 7 | 20 | 35 |
| செவ்வாய் கிழமை பயன்படுத்திய மின்சாரம் | 3 | 44 | 50 |
| மின்சாரத்தைப் பயன்படுத்திய மொத்த நேரம் | 11மணி | 5 நிமிடங்கள் | 25 வினாடி |
19.
மூன்று பகா எண்களின் கூடுதல் = 80
இரு எண்களின் வேறுபாடு = 4
தேவையான எண்கள் = 2, 37, 41
20.
n = 2, 3, 4, 5, 6, 7, 8
n = 2, எனில்
2n -1 = (2 x 2) - 1 = 4 - 1 = 3, பாக எண்
n = 3, எனில்
2n -1 = (2 x 3) - 1 = 6 - 1 = 5, பாக எண்
n = 4, எனில்
2n -1 = (2 x 4) - 1 = 8 - 1 = 7, பாக எண்
n = 5, எனில்
2n -1 = (2 x 5) - 1 = 10 - 1 = 9 பாக எண் அல்ல
n = 6, எனில்
2n -1 = (2 x 6) - 1 = 12 - 1 = 11 பாக எண்
n = 7, எனில்
2n -1 = (2 x 7) - 1 = 14 - 1 = 13 பாக எண்
n = 8,
2n -1 = (2 x 8) - 1 = 16 - 1 = 15 பகு எண் அல்ல
n = 2, 3, 4, 6 , 7 ஆகிய எண்களுக்கு
2n -1 பகா எண்.
21.
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் 60o , 60o, 60o . இது ஒரு குறுங்கோண முக்கோணம்
22.
(i) 60
வகுத்தல் முறை

60 = 2 x 2 x 3 x 5

60 = 2 x 2 x 3 x 5
(ii) 128

128 = 2 x 2 x 2 x 2 x 2 x 2 x 2

128 = 2 x 2 x 2 x 2 x 2 x 2 x 2
(iii) 144

144 = 2 x 2 x 2 x 2 x 3 x 3

144 = 2 x 2 x 2 x 2 x 3 x 3
(iv) 198

198 = 2 x 3 x 3 x 11

198 = 2 x 3 x 3 x 11
(v) 420

420 = 2 x 2 x 3 x 5 x 7

420 = 2 x 2 x 3 x 5 x 7
(vi) 999

999 = 3 x 3 x 3 x 37

999 = 3 x 3 x 3 x 37
23.
i) குறுங்கோண முக்கோணம்
ii) செங்கோண முக்கோணம்
iii) விரிகோண முக்கோணம்
iv) குறுங்கோண முக்கோணம்
24.
100
25.
கூட்டல் மீதான பெருக்கலின் பங்கீட்டுப் பண்பு
26.

27.
கர்ணனின் வயது = x .
கோபாலின் வயது = கர்ணனின் வயது - 8
= x - 8
இருவர் வயதுகளின் கூடுதல் = 30
x + x - 8 = 30
2x - 8 = 30
2x = 30 + 8 = 38
\(x=\frac { 38 }{ 2 } =19\)
x = 19
கர்ணனின் வயது = 19
28.
விகிதம் = 7 : 100
பின்னம் = \(\frac{75}{100} \div \frac{25}{25}=\frac{3}{4}\)
எளிய வடிவம் = 3 : 4
29.
(b)
அடக்க விலை
30.
(b)
48
31.
(c)
71, 81
32.
(d)
குறுங்கோணம், குறுங்கோணம், செங்கோணம்
33.
(b)
A, F, C
34.
(b)
பிக்டோ கிராம்
35.
(d)
8
36.
(b)
y = 6
37.
(b)
10000001
38.
விற்பனை விலை = ரூ.1550
இலாபம் = ரூ.150
இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
ரூ.150 = ரூ.1550 – அடக்க விலை
அடக்க விலை = ரூ.1550 – ரூ.150
= ரூ.1400
39.
| வழிமுறை 1 | வழிமுறை 2 |
| 6 மு.ப மணியை தொடர்வண்டி நேரமாக மாற்ற = 06:00 மணி 4 பி.ப. மணியை தொடர்வண்டி நேரமாக மாற்ற = (4 + 12) மணி = 16:00 மணி 6 மு.ப. மணிக்கும் 4 பி.ப. மணிக்கும் இடைப்பட்ட நேர இடைவெளி = 16 மணிக்கும் 6 மணிக்கும் உள்ள வேறுபாடு = 16:00 மணி - 6:00 மணி = 10 மணி |
![]() |
40.
| படி 1: அளவுகோலைப் பயன்படுத்தி PQ = 12 செ.மீ. அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைந்து, அதன் மேல் A மற்றும் B என இரு புள்ளிகளைக் குறிக்க. | |
| படி 2: மூலைமட்டத்தைப் பயன்படுத்திக் கோட்டிற்கு மேலே AM = BN = 5 செ.மீ என்றவாறு M மற்றும் N என்ற இரு புள்ளிகளைக் குறிக்க. | |
| படி 3: அளவுகோலைக் கொண்டு M மற்றும் N வழியே ஒரு கோடு வரைக. MN ஆனது PQ க்கு இணைகோடாகும். அதாவது MN || PQ. |
41.
இது மீ.சி.ம தொடர்பான கணக்கு ஆகும். ஆகவே, நாம் 15, 20, 25 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.சி.ம-வைக் காண வேண்டும்.
15, 20, 25 மற்றும் 30 இன் மீ.சி.ம = 2 x 2 x 3 x 5 x 5
= 300 நிமிடங்கள்
= 5 x 60 நிமிடங்கள்
= 5 x 1 மணி நேரம்
= 5 மணி நேரம்
எனவே, நான்கு அலைபேசிகளும் மீண்டும் காலை 10 மணிக்கு ஒன்றாக ஒலிக்கும்.
42.
(i)
| வானிலை | நேர்க்கோட்டுக் குறிகள் | நிகழ்வெண் |
| வெயில் | 10 | |
| பகுதி மேகம் | 6 | |
| மேகம் | 8 | |
| மழை | 6 | |
| 30 |
(ii) 14 நாட்கள் மேகமூட்டமாகவோ அல்லது பகுதி மேகமூட்டமாகவோ இருக்கும்.
(iii) மழை உள்ள நாட்கள் = 6
மழை இல்லாத நாட்கள் = 30 - 6 = 24
= 10 + 6 + 8 = 24
24 நாட்கள் மழை இருக்காது.
(iv) சூரிய ஒளிமிக்க நாட்களுக்கும் மழை நாட்களுக்கும் உள்ள விகிதம் =10 : 6= 5 : 3
43.
(i) மற்றும் (iii) விரிகோணங்கள்
44.
அறிவுச் செல்வியின் ஐந்து இலக்க ஒற்றைப்படை எண்
43581, 72485, 91383, 23487,......
(பல விடைகள் உண்டு )
45.
இதன் ஒரு விடை

46.
கொடுக்கப்பட்ட படங்களின் விகிதங்கள் முறையே 2 : 5 மற்றும் 4 : 3 ஆகும்.
கோடி உறுப்புகளின் பெருக்கற்பலன், ad = 2 x 3 = 6.
நடு உறுப்புகளின் பெருக்கற்பலன், bc = 5 x 4 = 20.
இங்கு, ad ≠ bc எனவே , 2 : 5 மற்றும் 4 : 3 விகிதங்கள் விகித சமத்தில் இல்லை.
47.
| k | 3 | 6 | 9 | 12 | 15 | 18 |
| \(\frac { k }{ 3 } \) | 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
\(\frac { k }{ 3 } \) = 5 எனில் மதிப்பு k = 15.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards