6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/02/2020
6 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 (6th Standard Mathematics Tamil Medium Model Questions For All Chapter 2020)
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில்
அடக்க விலை = விற்பனை விலை
அடக்க விலை > விற்பனை விலை
அடக்க விலை < விற்பனை விலை
குறித்த விலை = தள்ளுபடி
2.
1006 கிராமுக்குச் சமமானது
1 கி.கி 6 கி
10 கி.கி 6 கி
100 கி.கி 6 கி
1 கி.கி 600 கி
3.
பின்வருவனவற்றில் பொருத்தமில்லாதது எது ?
இருசமபக்க விரிகோண முக்கோணம்
இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்
சமபக்க விரிகோண முக்கோணம்
சமபக்கக் குறுங்கோண முக்கோணம்
4.
27 என்ற எண்ணின் காரணிகளின் கூடுதல்.
28
37
40
31
5.
படத்தில் எது ஒருங்கமைப் புள்ளி?

E
F
G
H
6.
ஒரு பட்டை வரை படமானது பின்வருவனவற்றுள் எதனைக் கொண்டிருக்காது?
கிடைமட்டப் பட்டைகள் மட்டும் உடையது
செங்குத்துப் பட்டைகள் மட்டும் உடையது
கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் எனும் இரண்டையும் உடையது
கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் இரண்டில் ஏதேனும் ஒன்றை உடையது
7.
3 + 5 − 7 x 1 இன் மதிப்பு ________.
5
7
8
1
8.
ரூ. 1 இக்கும் ரூ. 20 பைசாவுக்கும் உள்ள விகிதம் ______________
1 : 5
1 : 2
2 : 1
5 : 1
9.
மாறி என்பதன் பொருள்
சில மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது
நிலையான மதிப்பைக் கொண்டது
வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது
8 மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது
10.
ஒரு காய்கறி விற்பனையாளர் ஒரு வாரத்தின் முதல் மூன்று நாட்களில் ஒரு நாளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.10 வீதம் 10 கி.கி தக்காளி வாங்கினார். இந்த 3 நாட்களில் நாள் ஒன்றுக்கு 1 கி.கி தக்காளி நசுங்கிவிட்டது. வாரத்தின் மீதமுள்ள 4 நாட்களில் தினமும் கிலோ ஒன்றுக்கு ரூ.8 வீதம் 15 கி.கி தக்காளிவாங்கினார்.வாரம் முழுவதிலுமே ஒரு கி.கி தக்காளிரூ.20 வீதம் விற்பனை செய்கிறார். எனில் அந்த வாரத்தின் அவரது இலாபம் அல்லது நட்டம் காண்க.
11.
ஒரு வியாபாரி ஒரு டசன் ரூ. 20 வீதம் 2 டசன் வாழைப்பழங்கள் வாங்கினார்.ஒரு வாழைப்பழம் ரூ. 3 வீதம் அவற்றை விற்பனை செய்தார். எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
12.
மங்கை ஓர் அலைபேசியை ரூ.12585 க்கு வாங்கினார். அது கீழே விழுந்து பழுதாகி விட்டது. அதை சரி செய்ய ரூ.500 செலவு செய்து அவர் ரூ.7500 க்கு விற்பனை செய்தார். அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
13.
உன்னுடைய வயதை 01.06.2018 அன்றுள்ளபடி கணக்கிடுக.
14.
ஒரு முட்டையில் 81 கி.கி.சர்க்கரை உள்ளது. கடைக்காரர் இதனை 750 கி எடையில் சிறிய பைகளில் நிரப்புகிறார் எனில், 81 கிலோ கிராம் சர்க்கரையை எத்தனை சிறிய பைகளில் நிரப்பலாம்?
15.
மூன்று தொடர்ச்சியான எண்களின் பெருக்கற்பலன் ஏப்போதும் 6 ஆல் வகுபடும் என்பதை ஓர் எடுத்துக்காட்டுடன் மெய்ப்பிக்க.
16.
மூன்று பகா எண்களின் கூடுதல் 80. அவற்றுள் இரு எண்களின் வேறுபாடு 4 எனில், அந்த எண்களைக் காண்க.
17.
பின்வருவனவற்றில் எது சரியான கூற்று? ஏன்?
அ) ஒவ்வொரு சமபக்க முக்கோணமும் ஒர் இருசமபக்க முக்கோணம் ஆகும்.
ஆ) ஒவ்வொரு இருசமபக்க முக்கோணமும் ஒரு சமபக்க முக்கோணம் ஆகும்.
18.
இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் 124o எனில் மற்ற இரு கோணங்களைக் கண்டுபிடி.
19.
எவையேனும் மூன்று ஒற்றை இயல் எண்களின் கூடுதலானது ஓர் ஒற்றை எண்ணாகும். இந்தக் கூற்றை ஓர் எடுத்துக்காட்டுடன் உறுதிப்படுத்துக்க.
20.
கோணமானியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட படத்திலுள்ள கோணங்களை அளக்க. அவற்றைக் குறுங்கோணம், விரிகோணம், செங்கோணம் அல்லது நேர்க்கோணம் என வகைப்படுத்துக.

21.
பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?
(i)

(ii)

(iii)

(iv)

22.
கீழ்காணும் வினாக்களில் பெறும் பண்பு யாது?
50 \(\times\) 42 = 50 \(\times\) 40 + 50 \(\times\) 2
23.
விஜி ஒரு பகடையை 30 முறைகள் உருட்டும் போது கிடைக்கும் விளைவுகளை ப் பின்வருமாறு குறித்துள்ளார். அதற்கு நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.
1 4 3 5 5 6 6 4 3 5 4 5 6 5 2
4 2 6 5 5 6 6 4 5 6 6 5 4 1 1
24.
பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 'q' இன் 4 மடங்கு.
25.
கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.
7 : 15
26.
பின்வரும் அட்டவணையில் பொருத்தமானவற்றைக் கொண்டு நிரப்புக.
| வ.எண் | அடக்க விலை (ரூ.இல்) |
குறித்த விலை (ரூ.இல்) |
விற்பனை விலை (ரூ.இல்) | தள்ளுபடி (ரூ.இல்) |
இலாபம் (ரூ.இல்) |
நட்டம் (ரூ.இல்) |
| i | 110 | 130 | இல்லை | |||
| ii | 110 | 130 | 10 | |||
| iii | 110 | 130 | 30 | |||
| iv | 100 | 120 | இல்லை | 10 | ||
| v | 120 | 10 | 20 | இல்லை |
27.
2லி கொள்ளவுள்ள சாடியில் தண்ணீர் நிரப்பக் கீழ்கண்ட கொள்ளவுகளில் உள்ள குவளையில் எத்தனை முறை தண்ணீர் உற்ற வேண்டும்?
(i) 100 மி.லி
(ii) 50 மி.லி
(iii) 500 மி.லி
(iv) 1 லி
(v) 250 மி.லி
28.
இளஞ்செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒரு நாள் முகாமில், ஒரு மாணவருக்கு 150 கி அரிசி மற்றும் 15 மி.லி எண்ணெயும் தேவைப்படுகின்றன.அந்த முகாமில் 40 மாணவர்கள் பங்கேற்றனர் எனில், அவர்களுக்கு எத்தனை கி.கி அரிசியும், எத்தனை லிட்டர் எண்ணெயும் தேவைப்படும் ?
29.
8 செ.மீ, 3 செ.மீ மற்றும் 4 செ.மீ ஆகிய பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ?
30.
எவையேனும் இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் கூடுதலானது 4 ஆல் வகுபடும். இந்தக் கூற்றை ஓர் எடுத்துக்காட்டுடன் மெய்ப்பிக்க.
31.
நூல் விற்பனையாளர் 175 ஆங்கில நூல்களையும் 245 அறிவியல் நூல்களையும் 385 கணித நூல்களையும் வைத்துள்ளார். ஒவ்வொரு பெட்டியிலும் பாட வாரியாகச் சம எண்ணிக்கையில் மூன்று பாட நூல்களையும் வைத்து விற்க விரும்புகிறார். அதி்கபட்சமாக எத்தனைப் பெட்டிகள் தேவைப்படும். ஒரு பெட்டியில் உள்ள ஒவ்வொரு பாட நூல்களின் எண்ணிக்கையைக் காண்க.
32.
பின்வரும் கோணங்களைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 90°
33.
படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

34.
மே மாதத்தில், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட இடங்கள் குறித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதற்குப் பட விளக்கப்படம் ஒன்று வரைக.(உனக்குத் தகுந்தாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக்கொள்க).
| இடம் | மகாபலிபுரம் | வேடந்தாங்கல் | ஓகேனக்கல் | ஊட்டி |
| பயணிகளின் எண்ணிக்கை | 20,000 | 15,000 | 40,000 | 35,000 |
35.
5598 ÷ 689 இன் உத்தேச மதிப்பைக் காண்க
36.
பின்வரும் இயற்கணிதக் கூற்றுகளை வாய்மொழிக் கூற்றுகளாக மாற்றுக. 70s
37.
கீழ்க்காணும் விகிதங்களில் எது பெரிய விகிதம்?
(i) 4 : 5 அல்லது 8 : 15
38.
பின்வரும் அட்டவணையை பொருத்தமான விவரங்களைக் கொண்டு நிரப்புக.
| வ.எண் | அடக்க விலை (ரூ.இல்) |
குறித்த விலை (ரூ.இல்) |
விற்பனை விலை (ரூ.இல்) | தள்ளுபடி (ரூ.இல்) |
இலாபம் (ரூ.இல்) |
நட்டம் (ரூ.இல்) |
| i | 110 | 130 | 5 | |||
| ii | 110 | 130 | 20 | |||
| iii | 130 | 15 | 30 | |||
| iv | 130 | இல்லை | 25 | |||
| v | 125 | இல்லை | இல்லை | இல்லை | ||
| vi | 350 | 50 | 100 | இல்லை |
39.
முற்பகல் 7 மணிக்குப் சரியான நேரத்த்தில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரமானது, மணிக்கு 2 நிமிடங்கள் வீதம் தாமதமாக இயங்கினால் பிற்பகல் 6 மணிக்கு அக்கடிகாரம் காட்டும் நேரத்தைக் காண்க.
40.
ஒரு கோடு வரைக. அக்கோட்டிற்கு மேலே 4.8 செ.மீ தூரத்தில் R என்ற புள்ளியைக் குறிக்க. R வழியே அக்கோட்டிற்கு இணைகோடு வரைக.
41.
ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன் பின், முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும் ?
42.
கோணமானியைப் பயன்படுத்திக் கோணம் 90° வரைதல்.
43.
மாய முக்கோணத்தில் 1 லிருந்து 6 வரை எண்களைப் பயன்படுத்தி எத்தனை விடைகளைக் கொண்டு வரலாம்? ஆனால் அனைத்துப் பக்கங்களிலும் ஒரே கூடுதல் வரவேண்டும்.

44.
பின்வரும் வண்ணங்கள் 25 மாணவர்களால் விரும்பப்படுகின்றன. அத்தரவுக்கு நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.
| சிவப்பு | நீலம் | வெள்ளை | சாம்பல் | வெள்ளை |
| பச்சை | சாம்பல் | நீலம் | பச்சை | சாம்பல் |
| நீலம் | சாம்பல் | சிவப்பு | பச்சை | சிவப்பு |
| நீலம் | நீலம் | பச்சை | நீலம் | பச்சை |
| சாம்பல் | சாம்பல் | பச்சை | சாம்பல் | சிவப்பு |
45.
பின்வரும் அட்டவணையில் உள்ள வடிவங்கள் மற்றும் உருவங்களின் மதிப்பைக் காண்க. மேலும் அவற்றின் கிடைமட்ட மற்றும் செங்குத்து வரிசைகளின் கூடுதலைச் சரிபார்க்க.

46.
என்னுடைய பணம்பெறும் அட்டையின் (ATM அட்டை) கடவுச் சொல் 9, 4, 6 மற்றும் 8 ஆகிய இலக்கங்களைக் கொண்டது. இது மிகச் சிறிய 4 இலக்க இரட்டை எண் ஆகும். எனது பணம்பெறும் அட்டையின் (ATM அட்டை) கடவுச் சொல் காண்க
47.
1 : 2 என்ற விகிதத்தில் 63 செமீ நீளமுள்ள ஒரு கோட் டுத்துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க.
1.
(a)
அடக்க விலை = விற்பனை விலை
2.
(a)
1 கி.கி 6 கி
3.
(c)
சமபக்க விரிகோண முக்கோணம்
4.
(c)
40
5.
(b)
F
6.
(d)
கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் இரண்டில் ஏதேனும் ஒன்றை உடையது
7.
(d)
1
8.
(d)
5 : 1
9.
(c)
வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது
10.
மூன்று நாள்களுக்கு 10 கி.கி தக்காளியின் அடக்க விலை 3 x 10 x ரூ 10 = ரூ 300
நான்கு நாள்களுக்கு 15 கி.கி தக்காளியின் அடக்க விலை = 4 x 15 x ரூ 8 = ரூ 480
2.5 கி.கி தக்காளியின் அடக்க விலை = ரூ 300 + ரூ 480 = ரூ 780
7 நாட்களில் வாங்கிய தக்காளியின் மொத்த எடை
= 10 + 10 + 10 + 15 + 15 + 15 = 90கி.கி.
நசுங்கிய தக்காளியின் எடை= 3 கி.கி
விற்கப்பட்ட தக்காளியின் எடை = 90 கி.கி - 3 கி.கி = 87 கி.கி
ஒரு கி.கி தக்காளியின் விற்ற விலை = ரூ 20
87 கி.கி தக்காளியின் விற்ற விலை = 87 x ரூ 20 = ரூ 1740
விற்பனை விலை > அடக்க விலை
இலாபம் = விற்பனை விலை அடக்க விலை
= ரூ 1740 - ரூ 780 = ரூ 960
காய்கறி வியாபாரியின் இலாபம் = ரூ 960
11.
1 டசன் வாழைப்பழங்களின் அடக்க விலை = ரூ.20
2 டசன் வாழைப்பழங்களின் அடக்க விலை
= ரூ.20 x 2 = ரூ.40
1 வாழைப்பழத்தின் விற்பனை விலை = ரூ.3
2 டசன் வாழைப்பழங்களின் விற்பனை விலை
= ரூ.3 x 24 = ரூ.72
இலாபம் = விற்பனை விலை - அடக்க விலை
= ரூ.72 - ரூ.40 = ரூ.32.
வியாபாரிக்கு ஏற்பட்ட இலாபம் = ரூ 32
12.
மங்கை வாங்கிய அலைபேசியின் அடக்க விலை
= ரூ 12, 585
சரிசெய்ய ஆன செலவு = ரூ 500
13.
(எ.கா) என்னுடைய பிறந்தநாள் 15.03.2006

என்னுடைய வயது 12 ஆண்டுகள் 02 மாதங்கள் 16 நாள்கள்.
14.
ஒரு முட்டையில் சர்க்கரையின் அளவு = 81 கி.கி.
சிறிய பைகளில் நிரப்பப்பட்ட சர்க்கரையின் அளவு = 750 கி.
தேவைப்படும் சிறிய பைகளின் எண்ணிக்கை = 81 கி.கி \(\div \) 750 கி.
= (81 x 1000) கி \(\div \) 750 கி
= 81000 கி \(\div \) 750 கி
= 108


15.
மூன்று தொடர்ச்சியான எண்கள் = 2, 3, 4
பெருக்கற்பலன் = 2 x 3 x 4 = 24
24 என்ற எண் 6 ஆல் வகுபடும்
''மூன்று தொடர்ச்சியான எண்களின் பொருக்கற்பலன் எப்போதும் 6 ஆல் வகுபடும்'' என்பது சரி.
16.
மூன்று பகா எண்களின் கூடுதல் = 80
இரு எண்களின் வேறுபாடு = 4
தேவையான எண்கள் = 2, 37, 41
17.
"அ" கூற்று சரியானது,
''ஒவ்வொரு சமபக்க முக்கோணமும் ஓர் இருசமபக்க முக்கோணமாகும்'' என்ற கூற்று சரி. ஏனெனில் இருசமபக்க முக்கோணத்தில் மூன்று பக்கங்கள் சமமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
18.
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் = 180o
இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் = 124o
மற்ற இரு கோணங்களின் கூடுதல் = 180o - 124o = 56o
ஒரு கோணத்தின் அளவு = \(\frac{56^{\circ}}{2}=28^{\circ}\)
மற்ற இரு கோணங்கள் = 28o, 28o
19.
மூன்று ஒன்றை இயல் எண் 3, 7, 9
3 + 7 + 9 = 19, ஒரு ஒன்றை எண்.
மூன்று ஒன்றை இயல் எண்களின் கூடுதல் ஒரு ஒன்றை எண் என்பது சரி.
20.
செங்கோணம்
21.
(i) 12 முக்கோணங்கள்.
(ii) 16 முக்கோணங்கள்.
(iii) 32 முக்கோணங்கள்.
(iv) 35 முக்கோணங்கள்.
22.
கூட்டல் மீதான பெருக்கலின் பங்கீட்டுப் பண்பு
23.

24.
4q
25.
விகிதம் = 7 : 15
பின்னம் = \(\frac{7 \div 1}{15 \div 1}=\frac{7}{15}\)
எளிய வடிவம் = 7 : 15
26.
i) விற்பனை விலை = ரூ 130, இலாபம் = ரூ 20
ii) விற்பனை விலை = ரூ 120, இலாபம் = ரூ 10
iii) விற்பனை விலை = ரூ 100, இலாபம் = ரூ 10
iv) விற்பனை விலை = ரூ 90, தள்ளுபடி = ரூ 30
v) விற்பனை விலை = ரூ 90, விற்பனை விலை = ரூ 110
27.
சாடியின் கொள்ளளவு
= 2 லி = 2 x 1000 மி.லி = 2000 மி.லி
(i) குவளைகளின் எண்ணிக்கை = 2000 மி.லி / 100 மி.லி = 20
(ii) குவளைகளின் எண்ணிக்கை = 2000 மி.லி / 50 மி.லி = 40
(iii) குவளைகளின் எண்ணிக்கை = 2000 மி.லி / 500 மி.லி = 4
(iv) குவளைகளின் எண்ணிக்கை = 2 லி / 1 லி = 2
(v) குவளைகளின் எண்ணிக்கை = 2000 மி.லி / 250 மி.லி = 8
28.
இளஞ்செஞ்சிலுவைச் சங்கத்தில் ஒரு மாணவனுக்கு தேவைப்படும் அரிசி = 150 கி
40 மாணவர்களுக்கு தேவைப்படும் அரிசி
= 40 x 150 கிராம் = 6000 கிராம் = 6 கி.கி
ஒரு மாணவனுக்கு தேவைப்படும் எண்ணெய் = 15 மி.லி
40 மாணவர்களுக்கு தேவைப்படும் எண்ணெய்
= 40 x 15 மி.லி
= 600 மி.லி
= 600/100 லி
= 0.6 லி
29.
இரு சிறிய பக்கங்களின் கூடுதல் = 3 + 4 = 7 செ.மீ < 8 செ.மீ, மூன்றாவது பக்கம்.
இரு சிறிய பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தைவிடக் குறைவாக உள்ளது.
எனவே, கொடுக்கப்பட்ட பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலாது.
30.
இரு அடுத்தடுத்த ஒற்றை எண்கள் 17, 19 என்க. 17 + 19 = 36, 4 ஆல் வகுபடும்.
எனவே எவையேனும் இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் கூடுதலானது 4 ஆல் வகுபடும் என்ற கூற்று சரி.
31.
மீ.பெ.கா-வை பயன்படுத்தி இந்தக் கணக்கைத்தீர்க்கலாம்.

எனசவ, 175, 245 மற்றும் 385 இன் மீ.பெ.கா. காண வேண்டும்.
175 = 5 x 5 x 7 245 = 5 x 7 x 7 385 = 5 x 7 x 11
175, 245 மற்றும் 385இன் மீ.பெ.கா 5 x 7 = 35
ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள சம எண்ணிக்கையில் நுல்கள் உள்ளதால் தேவைப்படும் அதிகபட்ச பெட்டிகளின் எண்ணிக்கை = 35
ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள ஆங்கில நூல்களின் எண்ணிக்கை = 175 \(\div \) 35 = 5
ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள அறிவியல் நூல்களின் எண்ணிக்கை = 245 \(\div \) 35 = 7
ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள கணித நூல்களின் எண்ணிக்கை = 385\(\div \) 35 = 11
ஆகவே பெட்டியிலுள்ள நூல்களின் மொத்த எண்ணிக்கை = 5 + 7 + 11 = 23.
32.

வரையும் முறை :
1. அடிப்பக்கக் கதிர் \(\overrightarrow { PQ } \) வரைக.
2. கோணமானியின் நடுப்புள்ளியை உச்சிப் புள்ளி P இல் வைக்கவும்.
3. 0° கோட்டோடு \(\overrightarrow { PQ } \) கதிரைச் சேருமாறு சேர்க்கவும்.
4. உள் அளவுகோலில் 90° இல் ஒரு புள்ளியைக் குறித்து R எனப் பெயரிடுக. (கடிகார எதிர்த்திசையில்)
5. கோணமானியை எடுத்துவிட்டு கோணத்தை அமைக்க கதிர் \(\overrightarrow { PR } \) வரைக.
6. இங்கு \(\angle \)P = \(\angle \)QPR = \(\angle \)RPQ = 90°
33.
தீர்வு:

A, B, C, D என்பன 4 முக்கோணங்கள்.
A மற்றும் D; B மற்றும் D; D மற்றும் C இன் இணைப்புகள் முக்கோணத்தை அமைக்காது.
AB மற்றும் D; AC மற்றும் D; BD மற்றும் C களின் இணைப்புகளும் முக்கோணத்தை அமைக்காது.
ABC மற்றும் D ஒரு முக்கோணத்தை அமைக்கும்.
\(\therefore\) மொத்த முக்கோணங்க ள் = 4 + 1 = 5
34.
| இடம் | பயணிகளின் எண்ணிக்கை |
| மகாபலிபுரம் | |
| வேடந்தாங்கல் | |
| ஒகேனக்கல் | |
| ஊட்டி |
ஒரு 2500 பயணிகளைக் குறிக்கும்.
35.
ஆகவே , 5598 ÷ 689 இன் உத்தேச மதிப்பு 8 ஆகும்.
36.
70 மற்றும் s ன் பெருக்கல்.
37.
4 : 5 ன் சமான விகிதம்
\(=\frac{4}{5} \times \frac{3}{3}=\frac{12}{15}=12: 15
\)
\(=\frac{12}{15}>\frac{8}{15}
\)
\(=\frac{4}{5}>\frac{8}{15}
\)
4 : 5 பெரியது.
38.
(i) அடக்க விலை = ரூ.110
குறித்த விலை = ரூ.130
தள்ளுபடி= ரூ.5
விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
= ரூ.130 – ரூ.5
= ரூ.125
இலாபம்= விற்பனை விலை – அடக்க விலை
= ரூ.125 – ரூ.110
= ரூ.15
(ii) அடக்க விலை = ரூ.110
குறித்த விலை = ரூ.130
தள்ளுபடி = ரூ.20
விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
= ரூ.130 – ரூ.20
= ரூ.110
அடக்க விலை = விற்பனை விலை
இலாபம் இல்லை / நட்டம் இல்லை .
(iii) குறித்த விலை = ரூ.130
தள்ளுபடி = ரூ.15
விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
= ரூ.130 – ரூ.15
= ரூ.115
இலாபம்= ரூ.30
இலாபம்= விற்பனை விலை – அடக்க விலை
ரூ. 30 = ரூ.115 – அடக்க விலை
அடக்க விலை = ரூ.115 – ரூ.30
= ரூ.85
(iv) குறித்த விலை = ரூ.130
நட்டம் = ரூ.25
விற்பனை விலை = குறித்த விலை –தள்ளுபடி
= ரூ.130 – ரூ.0
= ரூ.130
நட்டம் = அடக்க விலை – விற்பனை விலை
ரூ.25 = அடக்க விலை – ரூ.130
அடக்க விலை = ரூ.25 + ரூ.130
= ரூ.155
(v) குறித்த விலை = ரூ.125
தள்ளுபடி = ரூ.0
விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
= ரூ.125 – ரூ.0
= ரூ.125
இலாபம் இல்லை / நட்டம் இல்லை
அடக்க விலை = விற்பனை விலை
அடக்க விலை = ரூ.125
(vi) விற்பனை விலை = ரூ.350
தள்ளுபடி = ரூ.50
இலாபம்= ரூ.100
குறித்த விலை = விற்பனை விலை + தள்ளுபடி
= ரூ.350 + ரூ.50
= ரூ.400
இலாபம்= விற்பனை விலை – அடக்க விலை
ரூ.100 = ரூ.350 – அடக்க விலை
அடக்க விலை = ரூ.350 – ரூ.100
39.
| 12 மணி நேரம் | தொடர்வண்டி நேரம் |
| 6.00 பி.ப | 18:00 மணி |
| 7 .00 மு.ப | 07 :00 மணி |
| இடைப்பட்ட கால அளவு | 11:00 மணி |
படி1 : 1 மணி நேரத்தில் கடிகாரம் தாமதமாக இயங்கும் நேரம் = 2 நிமிடங்கள்.
படி 2 :11 மணி நேரத்தில் கடிகாரம் தாமதமாக இயங்கும் நேரம் = 11 x 2 = 22 நிமிடங்கள்
எனவே பிற்பகல் 6 மணிக்குச் சரியான நேரத்தை விட 22 நிமிடங்கள் தாமதமாக நேரத்தைக் காட்டும். அதாவது பிற்பகல் 6 மணிக்குக் கடிகாரம் காட்டும் நேரம் பிற்பகல் 5 மணி 38 நிமிடங்கள்.
40.
| படி 1: அளவுகோலைப் பயன்படுத்தி AB என்ற கோடு வரைக. கோட்டின் மீது Q என்ற புள்ளியைக் குறிக்க. | |
| படி 2: மூலைமட்டத்தின் செங்கோணத்தை உருவாக்கும் ஒரு பக்கம் AB என்ற கோட்டின் மீதும், செங்கோணத்தை உருவாக்கும் முனை Q என்ற புள்ளியிலும் படத்தில் காட்டியுள்ளவாறு அமைக்க. Q விலிருந்து 4.8 செ.மீ தூரத்தில் R என்ற புள்ளியைக் குறிக்க. |
|
| படி 3: அளவுகோல் மற்றும் மூலைமட்டத்தைப் படத்தில் காட்டியவாறு பொருத்துக. | |
|
படி 4: அளவுகோலை நகர்த்தாமல் மூலைமட்டத்தை R என்ற புள்ளி வரை நகர்த்துக. மூலைமட்டத்தின் விளிம்பை ஒட்டி R வழியே RS என்ற கோடு வரைக. |
|
| படி 5: RS ஆனது AB என்ற கோட்டிற்கு இணைகோடாகும். RS || AB. |
41.
இது மீ.சி.ம தொடர்பான கணக்கு ஆகும். ஆகவே, நாம் 15, 20, 25 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.சி.ம-வைக் காண வேண்டும்.
15, 20, 25 மற்றும் 30 இன் மீ.சி.ம = 2 x 2 x 3 x 5 x 5
= 300 நிமிடங்கள்
= 5 x 60 நிமிடங்கள்
= 5 x 1 மணி நேரம்
= 5 மணி நேரம்
எனவே, நான்கு அலைபேசிகளும் மீண்டும் காலை 10 மணிக்கு ஒன்றாக ஒலிக்கும்.
42.
அடிப்பக்கக் கதிர் வரைதல்![]() |
அடிப்பக்கக் கதிர் வரைதல் ![]() |
![]() கோணமோனியின் நடுப் புள்ளிகை உச்சிப் புள்ளி P இல் வைக்கவும். 0° கோட்டோடு \(\overrightarrow { PQ } \) கதிரை சேருமாறு வைக்கவும். உள் அளவுகோலில் 90 இல் ஒரு புள்ளியைக் குறித்து R எனப் பெயரிடுக (கடிகார எதிர்த்திசையில்) ![]() கோணமானியை எடுத்துவிட்டு கோணத்தை அமைக்கக் கதிர் \(\overrightarrow { PQ } \) வரைக. இங்கு, \(\angle \)P =\(\angle \)QPR =\(\angle \)RPQ = 90° |
![]() கோணமோனியின் நடுப்புள்ளியை உச்சிப்புள்ளி P இல் வைக்கவும். 0° கோட்டோடு \(\overrightarrow { PQ } \) கதிரை சேருமாறு வைக்கவும். உள் அளவுகோலில் 90 இல் ஒரு புள்ளியைக் குறித்து R எனப் பெயரிடுக (கடிகாரத் திசையில்) ![]() கோணமானியை எடுத்துவிட்டு கோணத்தை அமைக்கக் கதிர் \(\overrightarrow { PQ } \) வரைக. இங்கு, \(\angle \)P = \(\angle \)QPR =\(\angle \)RPQ = 90° |
43.
இதன் ஒரு விடை

44.

45.
| 8 | 7 | 7 | 8 | = 30 |
| 8 | 8 | 10 | 10 | = 36 |
| 8 | 10 | 7 | 7 | = 32 |
| 8 | 7 | 10 | 7 | = 32 |
| = 32 | = 32 | = 34 | = 32 | = 130 |
நட்சத்திரம் = 8, முகம் = 7, முக்கோணம் = 10
46.
பணம் பெறும் அட்டையின் கடவுச் சொல்லின் இலக்கங்கள் = 9, 4, 6, 8
மிகச் சிறிய 4 இலக்க இரட்டை எண் = 4698
47.
கோட்டுத்துண்டின் மொத்த நீளம் = 63 செ.மீ
பிரிக்கப்பட்ட கோட்டுத் துண்டுகளின் விகிதம் = 3 : 4
மொத்த விகிதம் = 3 + 4 = 7
(i) முதல் கோட்டுத்துண்டின் நீளம்
\(=\frac{3}{7} \times 63=27\) செ.மீ
(ii) இரண்டாம் கோட்டுத்துண்டின் நீளம்
\(=\frac{4}{7} \times 63=36\) செ.மீ
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards