6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/07/2019
விசையும் இயக்கமும்
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
கால ஒழுங்கு இயக்கத்திற்கு எடுத்துக் காட்டு,
வளைவு பாதையில் செல்லும் மகிழந்தின் இயக்கம்
வீரர்களின் அணி நடை இயக்கம்
காற்றில் பறக்கும் பறவையின் இயக்கம்
கீழே இறங்கும் மின் தூக்கியின் இயக்கம்
2.
'கேரம் போர்ட்'ல் உள்ள காய்களின் இயக்கம்
வளைவுப்பாதை இயக்கம்
வட்ட இயக்கம்
கால ஒழுங்கு இயக்கம்
தற்சுழற்சி இயக்கம்
3.
ஒரு பொருளின் எல்லா பாகங்களும் சமகால அளவில் ஒரே தொலைவு செல்லுமானால் அப்பொருளின் இயக்கம்
நேர்மாறான இயக்கம்
சுழற்சி இயக்கம்
வட்ட இயக்கம்
மாறுபடும் இயக்கம்
4.
1 மில்லேனியம் என்பது
10 வருடங்கள்
100 வருடங்கள்
1000 வருடங்கள்
2000 வருடங்கள்
5.
கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு
வேகம் = தொலைவு x காலம்
வேகம் = தொலைவு / காலம்
வேகம் = காலம் / தொலைவு
வேகம் = 1/(தொலைவு x காலம்)
6.
வேகத்தின் அலகு _______________
மீ
விநாடி
கிலோகிராம்
மீ/வி
7.
வருங்காலத்தில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோட்டுகள் செயல்படும்.
8.
மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனங்கள் சீரான இயக்கத்தில் உள்ளன.
9.
மையப் புள்ளியைப் பொறுத்து முன்னும் பின்னும் இயங்கும் இயக்கம் அலைவு இயக்கம் ஆகும்.
10.
சராசரி வேகத்தின் அலகு _____ .
11.
வேகமான அலைவுகள் ________ எனப்படும்.
12.
ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்குமானால் அப்பொருளின் இயக்கம் _________
13.
புவிஈர்ப்புவிசை ______________ விசையாகும்..
14.
சாலையில் நேராகச் செல்லும் ஒரு வண்டியின் இயக்கம் ______________
15.
சுழற்சி இயக்கம் : பம்பரம் சுற்றுதல் :: அலைவு இயக்கம்: _________?
16.
தொலைவு : மீட்டர் :: வேகம் : _________?
17.
பந்தை உதைத்தல் : தொடு விசை :: இலை கீழே விழுதல் : ____________?
18.
சம கால இடைவெளியில், சமதொலைவைக் கடக்கும் பொருளின் இயக்கம் _________
19.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழும் இயக்கம் _________.
20.
தொடுதல் நிகழ்வின்றி ஒரு பொருள் மீது செயல்படும் விசை______
21.
ரோபாட் - சிறு குறிப்பு வரைக.
22.
சராசரி வேகம் - வரையறு.
23.
தொடா விசை என்றால் என்ன?
24.
ஒய்வு மற்றும் இயக்கம் வரையறு.
25.
சுழற்சி இயக்கம், வளைவுப்பாதை இயக்கம் - வேறுபடுத்துக.
26.
விசை - வரையறு
27.
பல்வேறு இயக்கங்களை உதாரணத்துடன் வகைப்படுத்துக.
28.

29.

30.

31.

32.

33.
ஒரு வண்டியானது 5 மணி நேரத்தில் 400 கி.மீ தூரத்தைக் கடந்தால் வண்டியின் வேகம் என்ன?
1.
(b)
வீரர்களின் அணி நடை இயக்கம்
2.
(a)
வளைவுப்பாதை இயக்கம்
3.
(d)
மாறுபடும் இயக்கம்
4.
(c)
1000 வருடங்கள்
5.
(b)
வேகம் = தொலைவு / காலம்
6.
(d)
மீ/வி
7.
(a)
8.
(b)
9.
(a)
10.
( )
கிலோமீட்டர் / மணி
11.
( )
அதிர்வுகள்
12.
( )
சீரான இயக்கம்
13.
( )
தொடா விடை
14.
( )
நேர்கோட்டு இயக்கம்
15.
தனிஊஞ்சலின் இயக்கம்
16.
மீட்டர் / வினாடி
17.
தொடா விசை
18.
( )
சீரான இயக்கம்
19.
( )
அலைவு இயக்கம்
20.
( )
தொடா விசை
21.
ரோபாட்டுகள் என்பது தானியங்கி இயந்திரமாகும். சில ரோபாட்டுகள் இயந்திர வேலைகளையும், பணிகளையும் மனிதனை விடச் சிறப்பாகவும், துல்லியமாகவும் செய்ய வல்லவை. ரோபாட்டுகள் ஆபத்தான பொருள்களைக் கையாளவும், மிகத் தொலைவில் உள்ள கோள்களின் இயல்புகளைக் கண்டறியவும் பயன்படுகின்றன. 'ரோபாட்டா' என்ற செக்கோஸ்லோவியா வார்த்தையிலிருந்து 'ரோபாட்' என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது. இதன் பொருள் 'உத்திரவுக்கு படிந்த ஊழியர்' என்பதாகும். 'ரோபாட்டிக்ஸ்' என்பது ரோபாட்டுகளைப் பற்றி அறியும் அறிவியல் ஆகும்.
22.
ஓரலகு காலத்தில் ஒரு பொருள் எவ்வளது தூரம் கடந்தது என்று கூறுவதே சராசரி வேகமாகும்.
சராசரி வேகம் = 
23.
விசையானது பொருளினைத் தொடாமல் செயல்படுத்தப்பட்டால் அத்தகைய விசை தொடா விசை எனப்படும்.
24.
காலத்தைப் பொறுத்து ஒரு பொருள் தனது நிலையை மாற்றிக் கொள்வதை இயக்கம் எனவும், தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் ஒரே இடத்தில் இருப்பதை ஒய்வு நிலை எனவும் நாம் கூறலாம்.
25.
| சுழற்சி இயக்கம் | வளைவுப்பாதை இயக்கம் |
| ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்கும் இயக்கம் சுழற்சி இயக்கமாகும். | பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையை தொடர்ந்து மாற்றிக் கொண்டால் அது வளைவுப்பாதை இயக்கமாகும். |
| பொருளின் நிலையில் மாற்றம் இருக்காது. | பொருளின் நிலை இயக்கத்தைப் பொருத்து மாறுபடும். |
| எ.கா - பானை வனையும் சக்கரத்தின் இயக்கம். | எ.கா - வளைவுப்பாதையில் செல்லும் காரின் இயக்கம் |
26.
பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தல் செயல்களே விசை எனப்படும்.
27.
இயக்கங்களின் வகைகள்:
அ) இயங்கும் பாதையின் அடிப்படையில்:
1. நேர்க்கோட்டு இயக்கம் - நேர்க்கோட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதன்
2. வளைவுப்பாதை இயக்கம் - வீசி ஏறியப்பட்ட பந்து
3. வட்டப்பாதை இயக்கம் - கயிற்றின் ஒரு முனையில் கல்லினைக் கட்டி சுற்றுதல்
4. தற்சுழற்சி இயக்கம் - பம்பரத்தின் இயக்கம்
5. அலைவு இயக்கம் - ஊசல் கடிகாரம்
6. ஒழுங்கற்ற இயக்கம் - அறையில் இயங்கும் 'ஈ' யின் இயக்கம்
ஆ) கால இடைவெளி அடிப்படையில்:
1. கால ஒழுங்கு இயக்கம் - கடிகார முட்களின் இயக்கம்
2. கால ஒழுங்கற்ற இயக்கம் - காற்றில் ஆடும் கொடியின் இயக்கம்
இ) சீரான வேகத்தின் அடிப்படையில்:
1. சீரான இயக்கம் - சீரான வேகத்தில் செல்லும் தொடர்வண்டி
2. சீரற்ற இயக்கம் - மாறுபட்ட வேகத்தில் செல்லும் வாகனம்
28.
நேர்கோட்டு இயக்கமும், சுழற்சி இயக்கமும்
29.
வட்ட இயக்கம்
30.
அலைவு இயக்கம்
31.
சுழற்சி இயக்கம்
32.
நேர்கோட்டு இயக்கம்
33.
வண்டி கடந்த தூரம் (d) = 400 கி.மீ
எடுத்துக்கொண்ட காலம் (t) = 5 மணி
வேகம் (s) = d/t
= 400/5
= 80
வண்டியின் வேகம் = 80 கி.மீ / மணி
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards