6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/02/2020
6 ஆம் வகுப்பு அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 6th Standard Science Tamil Medium Book Back and Creative Important Questions 2020 )
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
ராஜா சென்டிமீட்டரில் உள்ள பொருள்களின் பட்டியலையும் , மீட்டரில் உள்ள பொருட்களின் பட்டியலையும் தயாரித்தான் .கீழே உள்ளவற்றில் சென்டிமீட்டருக்கு பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
வாழைப்பழத்தின் நீளம்
தண்ணிர் புட்டியின் உயரம்
தொலைகாட்சி பெட்டியின் அகலம்
சல்வாரின் மேற்சட்டையின் நீளம்
2.
கீழ்வருவனவற்றுள் எது சரியானது?
இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
3.
இந்தியாவின் தேசிய மரம் எது?
வேப்பமரம்
பலா மரம்
ஆலமரம்
மாமரம்
4.
காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விருப்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.
மறுசுழற்சி
மீண்டும் பயன்படுத்துதல்
மாசுபாடு
பயன்பாட்டைக் குறைத்தல்
5.
சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.
விரைவாக கெட்டித்தன்மையடைய
கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
கடினமாக்க
கலவையை உருவாக்க
6.
கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?
ஈஸ்ட்
அமீபா
ஸ்பைரோ கைரா
பாக்டீரியா
7.
தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் _________ ஆகும்.
இலைத்துளை
பச்சையம்
இலைகள்
மலர்கள்
8.
பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.
மீள் மாற்றம்
வேகமான மாற்றம்
மீளா மாற்றம்
விரும்பத்தகாத மாற்றம்
9.
வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்
மின் விசிறி
சூரிய மின்கலன்
மின்கலன்
தொலைக்காட்சி
10.
300C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 500C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை
800C
500Cக்கு மேல் 800Cக்குள்
200C
ஏறக்குறைய 400C
11.
பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.
கணிப்பான்
அபாகஸ்
மின் அட்டை
மடிக்கணினி
12.
ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.
மீட்டர் அளவு கோல்
மீட்டர் கம்பி
பிளாஸ்டிக் அளவுகோல்
அளவு நாடா
13.
மரக்கட்டை தரும் தாவரங்கள் பற்றி குறிப்பு வரைக.
14.
ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.
15.
வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.
16.
ரவி ஒரு விவசாயி. அவருடைய பண்ணையில் அதிக கால்நடைகளை அவர் வளர்க்கின்றார். இதனால் அதிகளவில் உயிரிகழிவுகள் கிடைக்கின்றன. இக்கழிவுகளை மண்புழு உரமாக மாற்றுவதற்கு தகுந்த ஆலோசனையை ரவிக்கு வழங்கவும். பண்புழு உரத்தின் நன்மைகளைப்பற்றி எடுத்துக்கூறவும்.
17.
எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக்க.
18.
பூமியில் உயிரினங்கள் வாழ வளிமண்டலம் ஏன் தேவைப்படுகிறது?
19.
துளையுள்ள வட்டத்தகட்டினை வெப்பப்படுத்தும் பொழுது, தகட்டின் துளையின் விட்டத்தில் என்ன மாற்றம் எதிர்பார்க்கிறாய்? வெப்பத்தின் விளைவால் துகள்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்க.
20.
ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்க்காணும் மாற்றங்களைக் காண முடியும்.
அ) மெழுகு உருகுதல்.
ஆ) மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்
இ) மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்
ஈ) உருகிய மெழுக தீண்மமாக மாறுதல்
மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்? உமது பதிலை நியாயப்படுத்துக.
21.
மின்கடத்திகள் மற்றும் அரிதிற்கடத்திகள் குறித்து சிறு குறிப்பு வரைக.
22.
கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.
23.
எடை வரையறு
24.
மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?
25.
மறுமலர்ச்சி அடையக்கூடிய பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.
26.
பீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.
27.
நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?
28.
ஒருவரின் ஆடையில் ஏதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?
29.
தாவரங்கள் மட்குதல் என்ன வகையான மாற்றம்?
30.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து மின்கடத்தியைக் கண்டுபிடித்து எழுதுக.

31.
வெப்பநிலை என்றால் என்ன?
32.
தரவு பற்றி சிறு குறிப்பு வரைக.
33.
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக.
34.
எவையேனும் ஐந்து தாவரங்களையும் அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக.
35.
உணவுச் சங்கிலியில் இருந்து ஓர் உயிரினம் நீக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
36.
நுண்ணோக்கியில் நீ கண்ட தாவர செல் மற்றும் விலங்கு செல்லின் படம் வரைக.
37.
பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிவதேன்?
38.
காடுகளை அழித்தல் என்பது விரும்பத்தக்க மாற்றமா? உங்கள் பதிலுக்கான காரணத்தை விவரிக்கவும்.
39.
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின்அதிர்வு ஏற்படுமா? விளக்கம் தருக.
40.
வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக.
41.
கீழ்க்கண்ட வினாக்களுக்கான விடையை கட்டத்திற்குள் தேடுக.

1. 10-3 என்பது
2. காலத்தின் அலகு
3. சாய்வாக அளவிடுவதால் ஏற்படுவது
4. கடிகாரம் காட்டுவது
5. ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு
6. பல மாணவர்கள் அளவிட்ட ஒரு குறிப்பிட்ட அளவீட்டின் இறுதியான மதிப்பைப் பெறுவதற் கு எடுக்கப்படுவது
7. ஒரு அடிப்படை அளவு
8. வாகனங்களின் கடக்கும் தொலைவைக் காட்டுவது
9. தையல்காரர் துணியை அளவிடப் பயன்படுத்துவது
10. நீர்மங்களை அளவிட உதவும் அளவீடு
1.
(d)
சல்வாரின் மேற்சட்டையின் நீளம்
2.
(a)
இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
3.
(c)
ஆலமரம்
4.
(c)
மாசுபாடு
5.
(b)
கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
6.
(c)
ஸ்பைரோ கைரா
7.
(a)
இலைத்துளை
8.
(c)
மீளா மாற்றம்
9.
(c)
மின்கலன்
10.
(d)
ஏறக்குறைய 400C
11.
(c)
மின் அட்டை
12.
(d)
அளவு நாடா
13.
1. வீடுகட்டுவதற்கும் மரப்பொருள்கள் தயாரிப்பதற்குமான மரக்கட்டைகள் தாவரங்களில் இருந்து பெறப்படுகின்றன.
2. மரக்கட்டைகளின் நீடித்தத் தன்மை, அழகு மற்றும் வெப்பத்தினைத் தாங்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு பயன்பாடுகளுக்கு நாம் மரக்கட்டைகளைப் பயன்படுத்துகிறோம்.
3. வணிகரீதியாகப் பயன்படும் மரக்கட்டைகள் அதன் வலிமை மற்றும் அடர்த்தியின் அடிப்படையில் வன்கட்டைகள் மற்றும் மென்கட்டைகள் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
14.
1. அதிகமான ஒலி அல்லது சத்தமான ஒலி இரைச்சலை ஏற்படுத்துகின்றது. இத்தகைய இரைச்சலையே ஒலி மாசுபாடு என்கிறோம்.
2. சத்தமான இசை, மோட்டார் வாகனங்களில் வெளிவரும் இரைச்சல், பட்டாசு வெடிக்கும் போது உருவாகும் இரைச்சல், இயந்திரங்களின் ஓசை போன்றவை இரைச்சலை உருவாக்குகின்றன.
3. இதனால் தூக்கம் கெடுகிறது. படிக்க முடிவதில்லை மன அழுத்தம் ஏற்படுவதோடு செவிகள் பாதிப்படைகிறது
4. நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளும், பறவைகளும், கடலுக்கடியில் திமிங்கலங்களும் பாதிக்கப்படுகின்றன.
குறைக்கும் வழிமுறைகள்
1. தொலைக்காட்சி மற்றும் மின்னணுக் கருவிகளின் ஒலி அளவைக் குறைத்து வைத்து கேட்கலாம்.
2. ஓட்டுநர்கள் வாகனங்களின் ஒலிப்பான்களைத் தேவை ஏற்படும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. பட்டாசு வெடிப்பதையும், சத்தமாக பேசுவதையும் தவிர்க்கவும்.
15.
இரும்புக்கம்பிகள் (அல்லது) எஃகு வலைகளை கற்காரையுடன் சேர்த்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட காரை' எனப்படும்.
1. இது வலுவானது மற்றும் உறுதியானது.
2. அணைக்கட்டுகள், பாலங்கள், வீட்டின் மேல் தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்கும் குடிநீர்த் தொட்டிகள், குழாய்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைப்பதற்கும். இது பயன்படுகிறது.
16.
உயிரி கழிவிலிருந்து மண்புழு உரம் தயாரித்தல்:
படி 1 : தொட்டி தயார் செய்தல்.
மரப்பெட்டி அல்லது சிறிய குழி அமைத்து தொட்டி போன்று தயார் செய்யவேண்டும்.
படி 2 : படுக்கை தயார் செய்தல்.
மணல் அல்லது பழைய செய்தித்தாள்களை விரித்து படுக்கை தயார் செய்ய வேண்டும்.
படி 3 : மண்புழுக்களை இடுதல்.
ஈரப்பதமான படுக்கை சூழலில், மண்புழுக்களை இட வேண்டும்.
படி 4 : படுக்கைக்குக் கீழ் உணவுத் துணுக்குகளைப் புதைத்தல்.
பழங்கள் மற்றும் காய்கறிக் கழிவுகளை சிறு சிறு துண்டுகளாக்கி படுக்கைக்குக் கீழ் பரப்ப வேண்டும்.
படி 5 : படுக்கைக்கு மேல் உலர்ந்த நிலையில் செய்தித்தாள்கள் அல்லது விரிப்புகளை விரித்தல்.
இந்த விரிப்புகள் சரியான காலஇடைவெளியில் மாற்றப்பட வேண்டும்.
படி 6 : தொட்டியை மூடிப் பாதுகாத்தல்.
தொட்டியை பிளாஸ்டிக் கொண்டு காற்று புகும் இடைவெளியுடன் 3-4 வாரங்கள் மூடிப் பாதுகாக்க வேண்டும்.
மண்புழு உரத்தின் நன்மைகள்:
1. கரிமப் பொருள்களை மண்ணில் சேர்க்கிறது.
2. மண், நீரை உறிஞ்சி தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.
3. களிமண் துகள்களை உடைத்து மண்வளத்தை அதிகரிக்கிறது.
4. விவசாயத்தை காக்கிறது.
17.
| வ.எண் | செல்லின் பாகம் | முக்கிய பணிகள் |
| 1. | செல்சுவர் | செல்லைச் சுற்றியுள்ளதோடு பாதுகாப்பளிக்கிறது. செல்லிற்கு உறுதி மற்றும் வலிமையைத் தருகிறது. |
| 2. | செல்சவ்வு | செல்லிற்குப் பாதுகாப்பு தருகிறது.செல்லின் போக்குவரத்திற்கு உதவுகிறது. |
| 3. | சைட்டோபிளாசம் | நீர் அல்லது ஜெல்லி போன்ற, செல்லில் உள்ள நகரும் பொருள் |
| 4. | மைட்டோகாண்டிரியா | செல்லிற்குத் தேவையான சக்தியை உருவாக்கித் தருகிறது. |
| 5. | பசுங்கணிகம் | இதிலுள்ள பச்சையத்தை பயன்படுத்தி சூரிய ஒளியை ஈர்த்து ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்கிறது. |
18.
1. பூமியைச் சுற்றிலும் காற்றினால் மூடப்பட்டுள்ள ஒரு பெரிய மேலுறையே வளிமண்டலம் எனப்படுகிறது.
2. இம்மேலுறையானது புவிக்கு அருகில் மிக அதிகமாகக் காணப்படுகிறது.
3. உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தியும், அளவும் குறைகிறது.
4. காற்றின் இயக்கமும், மேகங்களை உருவாக்கும் நீராவியும் அடிவளிமண்டலத்தில் உள்ளன.
5. இந்த அடி வளிமண்டலமே, நாம் அனுபவிக்கும் வானிலைக்குக் காரணமாக உள்ளது.
6. இவ்வடுக்கிற்கு மேலே வளிமண்டலத்தில் காணப்படும் ஓசோன் படலம், சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களை (UV) தடுத்து உயிர்களை பாதுகாக்கிறது.
19.
வட்டத்தகட்டின் விட்டம் விரிவடையும் அதனால் வட்டத்தகட்டின் துளை பெரிதாகும்.
20.
அ) மெழுகுவர்த்தி உருகுதல்
ஆ) உருகிய மெழுகை மீண்டும் திண்மமாக மாற்றுதல் மெழுகுவர்த்தியில் எரிதல் என்பது ஒரு இயற்பியல்/ மீளக்கூடிய செயல்முறை ஆகும்.
21.
அ) மின்கடத்திகள் :
கடத்தியில் மின்னூட்டங்கள் பாயும் விதமே மின்னோட்டம் எனப்படும். அவ்வாறு எந்தெந்த பொருள்கள் தன் வழியே மின்னுட்டங்களைச் செல்ல அனுமதிக்கின்றனவோ அவற்றை நாம் மின் கடத்திகள் என்கிறோம்.
எ.கா. உலோகங்களான தாமிரம், இரும்பு. அலுமினியம் மற்றும் மாசுபட்ட நீர், புவி போன்றவை.
ஆ) அரிதிற் கடத்திகள் (மின் கடத்தாப் பொருள்கள்) :
எந்தெந்த பொருள்கள் தன் வழியே மின்னூட்டங்களை செல்ல அனுமதிக்கவில்லையோ அவற்றை நாம் அரிதிற்கடத்திகள் (அ) மின்கடத்தாப் பொருள்கள் என்கிறோம்.
எ.கா. பிளாஸ்டிக், கண்ணாடி, மரம், ரப்பர், பீங்கான், எபோனைட் போன்றவை.
22.
1. கணினி பலதுறைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
2. துணிக்கடையில் பில் போட பயன்படுகிறது.
3. பெரிய மற்றும் சிறிய இயந்திரங்களை மனிதர் துணையின்றி கட்டுப்படுத்த பயன்படுகிறது.
4. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கல்விப்பெறுவதற்கு பெருமளவு கணினியைப் பயன்படுத்துகிறார்கள்.
5. ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு எடுப்பதற்கும் பிற விவரங்களுக்கும் கணினி பயன்படுத்தப்படுகிறது.
6. வங்கி, எ.டி.எம், அஞ்சலகம் ஆகியவற்றிலும் கணினி பல செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது.
7. கணினியில் நமக்குத் தேவையான தரவுகளை சேமித்து வைக்கலாம். இத்தரவுகளை நாம் தேவைக்கு ஏற்றவாறு தகவல்களாக மாற்றி எடுத்துக்கொள்ளலாம்.
23.
எடை என்பது நிறையின் மேல் செயல்படும் புவிஈர் ப்பு விசையே ஆகும்.
24.
நம்மைச் சுற்றி காணப்படும் தாவரங்களில் சில தாவரங்கள் நமது நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன. இவை மருத்துவத் தாவரங்கள் எனப்படுகின்றன.
25.
பழைய துணிகள் மற்றும் சிலவகை நெகிழிகள் மறு சுழற்சி அடையக்கூடிய பொருள்களாகும்.
26.
i. வீரியம் குறைந்த அமிலம்
ii. ஆவியாகும் தன்மையுடைய, வெண்ணிறப் படிகம்
iii. நிறமற்றது. ஆனால், மாசு காரணமாக இளஞ்சிவப்பு நிறமாக மாற்றமடையும்.
27.
சைட்டோபிளாசம் செல்லின் நகரும் பகுதி எனப்படுகிறது.
28.
i) அவரை அந்த இடத்திலேயே நிறுத்த வேண்டும்.
ii) நின்று கொண்டிருந்தால் அவரை அந்த இடத்திலேயே படுக்க செய்ய வேண்டும்.
iii) பின்பு, தரைத் தளத்திலேயே உருளச் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் தீ மேலும் பரவாமல் தடுப்பதுடன், பெரிய பாதிப்பின்றி அவரைக் காப்பாற்றலாம்.
29.
தாவரங்கள் மட்குதல் ஒரு வேதியியல் மாற்றம்.
30.
இரும்புச்சங்கிலி ஒரு மின்கடத்தியாகும்.
31.
ஒரு பொருள் எந்த அளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதனை அளவிடும் அளவுக்கு வெப்பநிலை என்று பெயர். வெப்பநிலையின் SI அலகு கெல்வின் ஆகும்.
32.
1. தரவு என்பது முறைப்படுத்தப்பட வேண்டிய விவரங்கள்.
2. இவை பொதுவான எண், எழுத்து. படக் குறியீடுகளாக இருக்கும்.
33.
1. கட்டற்ற மென்பொருள்களைப் பயனர் இலவசமாகப் பெற்று பயன்படுத்தவும்,பகிரவும் செய்யலாம்.
2. திறந்த மூல மென்பொருள்களில் அவற்றின் நிரல்களைத் திருத்திக் கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது.
எ.கா : லினக்ஸ், ஓபன் ஆபிஸ்
34.
1. கரும்பு-தண்டு
2. அரிசி - விதை
3. கத்தரி - காய்
4. தக்காளி -கனி
5. கேரட்-வேர்
35.
1. உணவுச்சங்கிலியில் இருந்து ஓர் உயிரினம் நீக்கப்பட்டால் அதைவிட உயர்மட்ட உயிரிக்கு ஆற்றல் கடத்தப்படாததால் அவ்வுயிரினம் அழியும் நிலை ஏற்படும்.
2. எனவே ஒட்டுமொத்த சூழ்நிலை மண்டலமும் பாதிக்கப்படும்.
36.
37.
கடுமையான தட்பவெப்பநிலைகள், தூசுகள், மாசுபாடு, வெப்பம் மற்றும் குளிர்ச்சி போன்ற சூழல்களில் காவலர்கள் பணிபுரிகின்றனர். இதனால் அவர்கள் கடுமையான உடல்நலம் சார்ந்த விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, பணியிலுள்ள போது முகமூடி அணிகின்றனர்.
38.
இல்லை, காடுகளை அழித்தல் விரும்பத்தகாத மாற்றம் ஆகும். ஏனெனில், இது சுற்றுச்சூழலுக்குப் பயன் தராத மாற்றம். சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது.
39.
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின்அதிர்வு ஏற்படாது. ஏனென்றால் மின்கலனின் மின்னழுத்தம் மிக மிக குறைவு.
40.
| வெப்பம் | வெப்பநிலை |
| 1. வெப்பமானது வெப்பநிலையை மட்டுமல்ல ஒரு பொருளில் எவ்வளவு மூலக்கூறுகள் உள்ளன என்பதையும் பொருத்தது. | வெப்பநிலையானது ஒரு பொருளிலுள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் எவ்வளவு வேகத்தில் இயங்குகின்றன அல்லது அதிர்கின்றன என்பதைப் பொருத்தது. |
| 2. வெப்பமானது அப்பொருளின் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்ற லைக் குறிப்பிடும் ஓர் அளவீடு |
வெப்பநிலையானது மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலைக் குறிப்பிடும் ஓர் அளவீடு |
| 3. வெப்பத்தின் SI அலகு ஜூல் | வெப்பநிலையின் SI அலகு கெல்வின் |
41.
1. நேரம்,
2. நீளம் ,
3. மில்லி ,
4. நாடா ,
5. ஓடோ மீட்டர்,
6. சராசரி,
7. லிட்டர்
8, விநாடி ,
9. பிழை,
10. நிறை
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards