6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 28/02/2020
6 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 6th Standard Science Tamil Medium Book Back and Creative Important Questions All Chapter 2019-2020 )
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
பாதையை தவறவிட்ட ஜிக்கிக்கு உதவுங்கள் , ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு செல்லும்
தொலைவு : மீட்டர் ; வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் தொலைவு : ?
சென்டி மீட்டர்
மீட்டர்
மில்லிமீட்டர்
கிலோ மீட்டர்
2.
கீழ்வருவனவற்றுள் எது சரியானது?
இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
3.
தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.
வாத்து
கிளி
ஓசனிச்சிட்டு
புறா
4.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு.
நெகிழி
தேங்காய் ஒடு
கண்ணாடி
அலுமினியம்
5.
பீனால் என்பது ________
கார்பாலிக் அமிலம்
அசிட்டிக் அமிலம்
பென்சோயிக் அமிலம்
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
6.
செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு
சென்டி மீட்டர்
மில்லி மீட்டர்
மைக்ரோ மீட்டர்
மீட்டர்
7.
தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் _________ ஆகும்.
இலைத்துளை
பச்சையம்
இலைகள்
மலர்கள்
8.
பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம் ___________ ஆகும்.
இடமாற்றம்
நிற மாற்றம்
நிலை மாற்றம்
இயைபு மாற்றம்
9.
கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?
வெள்ளி
மரம்
அழிப்பான்
நெகிழி
10.
500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,
இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்
இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.
நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்
இரண்டின் வெப்பநிலையும் உயரும்
11.
பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.
கணிப்பான்
அபாகஸ்
மின் அட்டை
மடிக்கணினி
12.
அளவிடப்படக்கூடிய அளவிற்கு _________ என்று பெயர்
இயல் அளவீடு
அளவீடு
அலகு
இயக்கம்
13.
மரக்கட்டை தரும் தாவரங்கள் பற்றி குறிப்பு வரைக.
14.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக.
15.
வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.
16.
எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக்க.
17.
தாவரங்களும், விலங்குகளும் ஆக்சிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு இவற்றின் இடையே உள்ள சமநிலையை எவ்வாறு பாதுகாக்கின்றன?
18.
ராகுல் ஒரு மின்சுற்றை அமைக்க விரும்பினான். அவனிடம் ஒரு மின்விளக்கு, குண்டூசி, ஒரு இணைப்புக்கு கம்பிகள் மற்றும் ஒரு தாமிரக் கம்பி ஆகியவை மட்டுமே உள்ளன. அவனிடம் மின்கலனோ, மின்கல அடுக்கோ இல்லை.எனினும் திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.எலும்மிச்சம்பழத்தைப் பயன்படுத்தி மீன்களை அடுக்கினை உருவாக்கினால் என்ன என்று ஒரு யோசனை தோன்றியது.அந்த மின்விளக்கு ஒளிருமா?
19.
துளையுள்ள வட்டத்தகட்டினை வெப்பப்படுத்தும் பொழுது, தகட்டின் துளையின் விட்டத்தில் என்ன மாற்றம் எதிர்பார்க்கிறாய்? வெப்பத்தின் விளைவால் துகள்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்க.
20.
ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்க்காணும் மாற்றங்களைக் காண முடியும்.
அ) மெழுகு உருகுதல்.
ஆ) மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்
இ) மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்
ஈ) உருகிய மெழுக தீண்மமாக மாறுதல்
மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்? உமது பதிலை நியாயப்படுத்துக.
21.
கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.
22.
கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.
| பண்புகள் | வரையறை | அடிப்படை அலகு | அளக்கப் பயன்படும் கருவி |
|---|---|---|---|
| நீளம் | |||
| நிறை | |||
| பருமன் | |||
| காலம் |
23.
மரக்கட்டைகளின் பயன்பாடுகள் யாவை?
24.
நீர் வாழ் உணவுச்சங்கிலிக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
25.
சோப்பில் அடங்கியுள்ள மூலப்பொருள்கள் யாவை?
26.
சிவா “சிறிய வெங்காயத்தை பெரிய வெங்காயத்தோடு ஒப்பிடும் போது பெரிய வெங்காயம் பெரிய செல்களைக் கொண்டுள்ளன" என்கிறான். இதை நீ ஏற்றுக்கொள்கிறாயா? மறுக்கிறாயா? ஏன்?
27.
கரைசல் என்றால் என்ன?
28.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து மின்கடத்தியைக் கண்டுபிடித்து எழுதுக.

29.
வீட்டில் எந்தெந்த மின்சார சாதனங்களிலிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம் எனப் பட்டியலிடுக.
30.
மென்பொருள் மற்றும் வன்பொருள் இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக.
31.
வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.
32.
பாலைவனத்தில் குறைவான நீரே காணப்படுகிறது? இதற்கு காரணம் யாது?
33.
நீர் மாசுபாட்டை நாம் எவ்வாறு குறைக்கலாம்?
34.
ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.
35.
புரோகேரியாட்டிக், யூகேரியாட்டிக் செல்கள் -வேறுபடுத்துக்க.
36.
பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிவதேன்?
37.
விதையிலிருந்து செடி முளைத்தல் என்ன வகையான மாற்றம்? விவரிக்கவும்.
38.
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின்அதிர்வு ஏற்படுமா? விளக்கம் தருக.
39.
வெப்பத்தினால் திடப் பொருட்களின் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை விவரி.
40.
மீன் காட்சியகத்தில் உள்ள மீன்களை நாம் நீக்கிய பின், தாவரங்களுடன் அதனை ஓர் இருண்ட அறையினுள் வைத்தால் என்னவாகும்?
1.
(d)
கிலோ மீட்டர்
2.
(a)
இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
3.
(c)
ஓசனிச்சிட்டு
4.
(b)
தேங்காய் ஒடு
5.
(a)
கார்பாலிக் அமிலம்
6.
(c)
மைக்ரோ மீட்டர்
7.
(a)
இலைத்துளை
8.
(c)
நிலை மாற்றம்
9.
(a)
வெள்ளி
10.
(b)
இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.
11.
(c)
மின் அட்டை
12.
(b)
அளவீடு
13.
1. வீடுகட்டுவதற்கும் மரப்பொருள்கள் தயாரிப்பதற்குமான மரக்கட்டைகள் தாவரங்களில் இருந்து பெறப்படுகின்றன.
2. மரக்கட்டைகளின் நீடித்தத் தன்மை, அழகு மற்றும் வெப்பத்தினைத் தாங்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு பயன்பாடுகளுக்கு நாம் மரக்கட்டைகளைப் பயன்படுத்துகிறோம்.
3. வணிகரீதியாகப் பயன்படும் மரக்கட்டைகள் அதன் வலிமை மற்றும் அடர்த்தியின் அடிப்படையில் வன்கட்டைகள் மற்றும் மென்கட்டைகள் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
14.
| உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் | உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் |
| இயற்கை காரணிகளான நீர் ஆக்ஸிஜன்,சூரியனின் புற ஊதாக்கதீர்கள் மற்றும் நுண்ணுயிரிகளால் சிதைவுறும் கழிவுகள் உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் எனப்படும். | நுண்ணுயிரிகள் மற்றும் இயற்கைக் காரணிகளால் எளிய மூலக்கூறுகளாக சிதைவுற முடியாத பொருள்கள் உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் எனப்படும். |
| இக்கழிவுகள் மண்ணிற்கு வளமளிக்கின்றன. (எ.கா) காய்கறி மற்றும் பழக்கழிவுகள்,தோட்டக்கழிவுகள்,உணவுக் கழிவுகள் |
இக்கழிவுகளால் மண்ணின் வளம் கெடுகிறது. (எ.கா) நெகிழிப் பொருள்கள், உலோகங்கள்,அலுமினியக் கேன்கள் மற்றும் கண்ணாடிப் பாட்டில்கள் |
15.
இரும்புக்கம்பிகள் (அல்லது) எஃகு வலைகளை கற்காரையுடன் சேர்த்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட காரை' எனப்படும்.
1. இது வலுவானது மற்றும் உறுதியானது.
2. அணைக்கட்டுகள், பாலங்கள், வீட்டின் மேல் தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்கும் குடிநீர்த் தொட்டிகள், குழாய்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைப்பதற்கும். இது பயன்படுகிறது.
16.
| வ.எண் | செல்லின் பாகம் | முக்கிய பணிகள் |
| 1. | செல்சுவர் | செல்லைச் சுற்றியுள்ளதோடு பாதுகாப்பளிக்கிறது. செல்லிற்கு உறுதி மற்றும் வலிமையைத் தருகிறது. |
| 2. | செல்சவ்வு | செல்லிற்குப் பாதுகாப்பு தருகிறது.செல்லின் போக்குவரத்திற்கு உதவுகிறது. |
| 3. | சைட்டோபிளாசம் | நீர் அல்லது ஜெல்லி போன்ற, செல்லில் உள்ள நகரும் பொருள் |
| 4. | மைட்டோகாண்டிரியா | செல்லிற்குத் தேவையான சக்தியை உருவாக்கித் தருகிறது. |
| 5. | பசுங்கணிகம் | இதிலுள்ள பச்சையத்தை பயன்படுத்தி சூரிய ஒளியை ஈர்த்து ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்கிறது. |
17.
ஒளிச்சேர்க்கை:
1. தாவரங்கள் அவற்றின் உணவை ஒளிச்சேர்க்கை மூலம் உற்பத்தி செய்கின்றன.
2. ஒளிச்சேர்க்கையின் போது, காற்றிலுள்ள CO2 ம் மண்ணிலுள்ள நீரும், சூரிய ஒளி துணையுடன் வினைபுரிந்து உணவைத் தயாரிக்கின்றன.
3.
விலங்குகளின் சுவாசம்:
1. சுவாசத்தின் போது காற்றிலுள்ள ஆக்ஸிஜன், செரிக்கப்பட்ட உணவுப் பொருளுடன் வேதிவினை புரிந்து நீராவி மற்றும் ஆற்றலைத் தருகிறது.
2. சுவாசத்தின்போது உருவாகும் CO₂ இரத்தத்தில் கலந்து, நுரையீரல்கள் மூலம் வெளியேற்றப்படுகிறது. இதேபோன்று தாவரங்கள் தங்கள் சுவாசத்திற்கு எடுத்துக்கொண்ட ஆக்ஸிஜனை விட அதிகளவு ஆக்ஸிஜனை ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடுகின்றன.
3. இவ்வாறு O2 மற்றும் CO₂ ன் சமநிலை அளவு, காற்றில் பாதுகாக்கப்படுகிறது.
18.
மின்விளக்கு ஒளிரும்:
எலுமிச்சைப் பழச்சாறு மின்பகுபொருளாகவும், தாமிரக்கம்பி, குண்டூசி மின்வாய்களாகவும் செயல்பட்டு மிகக் குறைவான மின்னோட்டத்தை உருவாக்கும். இதேபோல் மூன்று அல்லது நான்கு மின்கலங்களை ஒன்றாக இணைத்து சிறிய மின்விளக்கை (LED) ஒளிரச் செய்யலாம்.
19.
வட்டத்தகட்டின் விட்டம் விரிவடையும் அதனால் வட்டத்தகட்டின் துளை பெரிதாகும்.
20.
அ) மெழுகுவர்த்தி உருகுதல்
ஆ) உருகிய மெழுகை மீண்டும் திண்மமாக மாற்றுதல் மெழுகுவர்த்தியில் எரிதல் என்பது ஒரு இயற்பியல்/ மீளக்கூடிய செயல்முறை ஆகும்.
21.
1. கணினி பலதுறைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
2. துணிக்கடையில் பில் போட பயன்படுகிறது.
3. பெரிய மற்றும் சிறிய இயந்திரங்களை மனிதர் துணையின்றி கட்டுப்படுத்த பயன்படுகிறது.
4. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கல்விப்பெறுவதற்கு பெருமளவு கணினியைப் பயன்படுத்துகிறார்கள்.
5. ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு எடுப்பதற்கும் பிற விவரங்களுக்கும் கணினி பயன்படுத்தப்படுகிறது.
6. வங்கி, எ.டி.எம், அஞ்சலகம் ஆகியவற்றிலும் கணினி பல செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது.
7. கணினியில் நமக்குத் தேவையான தரவுகளை சேமித்து வைக்கலாம். இத்தரவுகளை நாம் தேவைக்கு ஏற்றவாறு தகவல்களாக மாற்றி எடுத்துக்கொள்ளலாம்.
22.
| பண்புகள் | வரையறை | அடிப்படை அலகு | அளக்கப் பயன்படும் கருவி |
|---|---|---|---|
| நீளம் | ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு | மீட்டர் | அளவு நாடா , அளவுகோல். |
| நிறை | ஒரு பொருளின் உள்ள பருப்பொருளின் அளவு | கிலோ - கிராம் | பொதுத்தராசு , மின்னனு தராசு |
| பருமன் | ஒரு பருப்பொருள் அடைத்துக் கொள்ளும் இடத்தின் அளவு | லிட்டர் (அல்லது) கனமீட்டர் | அளவு சாடி, பீக்கர் , பிப்பெட் , பியூரெட் |
| காலம் | இரண்டு நிகழ்வுகளுக்கிடையேயான கால இடைவெளி | வினாடி | கடிகாரங்கள் |
23.
மரக்கட்டைகள் வீடு கட்டவும், மரச்சாமான்கள் செய்யவும் பயன்படுகின்றன.
24.
நீர்வாழ்த் தாவரம் ⟶ நீர்வாழ்ப் பூச்சி ⟶ லார்வா ⟶ மீன்
25.
நீர், சோடியம் ஹைட்ராக்ஸைடு மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியன.
26.
அவனுடைய கூற்றை நான் மறுக்கிறேன். ஏனெனில் செல்லின் அளவிற்கும் உயிரினத்தின் அளவிற்கும் யாதொரு தொடர்புமில்லை.
27.
ஒரு கரைப்பானில், கரைபொருள் கரைந்து உருவாகும் கலவையே கரைசல் எனப்படும்.
28.
இரும்புச்சங்கிலி ஒரு மின்கடத்தியாகும்.
29.
1) மின் இஸ்திரிப்பெட்டி
2) மின்வெப்பக்கலன்
3) மின்நீர் சூடேற்றி போன்றவை
30.
| வ.எண் | மென் பொருள் | வன் பொருள் |
| 1 | கணினியில் நாம் செய்யக் கூடிய வேலைகளுக்கு உதவுக்கூடிய கட்டளைகள் அல்லது நிரல்களின் தொகுப்பு தான் மென் பொருள். | கணினியில் இருக்கக் கூடிய மென் பொருட்கள் செயல்படுவதற்கு உதவுக்கூடிய கணினியின் பாகங்களே வன் பொருட்கள் எனப்படும். |
| 2 | மென்பொருளை இரண்டாகப் பிரிக்கலாம். அவை, i) இயக்க மென்பொருள் ii) பயன்பாட்டு மென்பொருள் |
வன்பொருள்களை உள்ளீட்டுக் கருவிகள், வெளியீட்டுக் கருவிகள் என இருவகையாகப் பிரிக்கலாம். |
31.
வன்பொருள்;
கணினியில் நம்மால் பார்த்து தொட்டு உணரக்கூடிய அனைத்து பாகங்களும் வன்பொருள்களே.
எ.கா : Keyboard, Monitor, CPU
மென்பொருள்:
மென்பொருள்கள் என்பது வன்பொருள் இயங்குவதற்கு தேவையான தரவுகளை உள்ளடக்கிய கணினியால் மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய குறியீட்டு மொழியைக் கொண்ட அமைப்பு ஆகும்.
எ.கா : Windows, Linux, MS Office, Corel Draw
32.
பாலைவனத்தில் மரங்கள் குறைவாக இருப்பதால் மழைப்பொழிவு குறைவாக உள்ளது. எனவே பாலைவனத்தில் குறைவான நீர் காணப்படுகிறது.
33.
அ) மீதமுள்ள எண்ணெய், பழைய மருந்துகளை நீருடன் காலத்தலைத் தவிர்க்க வேண்டும்.
ஆ) வயலில் பயிர்கள் வளர்வதற்காகப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மற்றும் செயற்கை உரங்கள் அளவைக் குறைக்க வேண்டும்.
இ) வீட்டின் கழிவுநீரை வீட்டுத் தோட்டம் அமைத்துப் பயன்படுத்தலாம்.
ஈ) குளங்கள், ஏரிகள், ஆறுகளில் கழிவுகளை கலப்பதையும், கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும். எப்பொழுதும் குப்பை தொட்டியைப் பயன்படுத்த வேண்டும்.
34.
1. உரமாகப் பயன்படுகிறது.
2. சிமெண்ட் தயாரிப்பில் பயன்படுகிறது
3. பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படுகிறது.
35.
| புரோகேரியாட்டிக் செல்கள் | யூகேரியாட்டிக் செல்கள் |
| ஒன்று முதல் இரண்டு மைக்ரான் விட்டம் கொண்டவை | பத்து முதல் நூறு மைக்ரான் விட்டம் கொண்டவை. |
| செல் நுண் உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுவதில்லை | செல் நுண் உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுகின்றது. |
| தெளிவற்ற உட்கரு கொண்டவை | தெளிவான உட்கரு கொண்டவை |
| நியூக்லியோலஸ் காணப்படுவதில்லை | நியூக்லியோலஸ் காணப்படும். |
36.
கடுமையான தட்பவெப்பநிலைகள், தூசுகள், மாசுபாடு, வெப்பம் மற்றும் குளிர்ச்சி போன்ற சூழல்களில் காவலர்கள் பணிபுரிகின்றனர். இதனால் அவர்கள் கடுமையான உடல்நலம் சார்ந்த விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, பணியிலுள்ள போது முகமூடி அணிகின்றனர்.
37.
1. விதை முளைக்க சில நாட்கள் ஆகின்றன. ஏனெனில், இது ஒரு மெதுவான மாற்றம் ஆகும்.
2. "அதிக நேரத்தை எடுத்துக் கொண்டு நிகழும் மாற்றங்கள் மெதுவான மாற்றங்கள்" எனப்படுகின்றன.
38.
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின்அதிர்வு ஏற்படாது. ஏனென்றால் மின்கலனின் மின்னழுத்தம் மிக மிக குறைவு.
39.
வெப்பத்தினால் திடப் பொருட்களின் மூலக்கூறுகளின் அதிர்வு அல்லது இயக்கம் அதிகரிப்பதால் அவற்றிற்கிடையே இடைவெளி அதிகரிக்கிறது. இதனால் பொருட்கள் விரிவடைகின்றன.
40.
i) சூரிய ஒளி கிடைப்பதில்லை.
ii) மீன்கள் சுவாசிக்கும் போது வெளியாகும் CO2 ம் நீரில் இல்லை.
iii) சுருங்கக் கூறின், நீர்வாழ்த்தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலம் தங்கள் உணவைத் தயாரித்துக் கொள்ள வாய்ப்பில்லை. எனவே அத்தாவரங்கள் அழிய நேரிடுகிறது.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards