6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 27/02/2020
6 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 ( 6th Standard Science Tamil Medium Important Question 2019-2020 )
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
திருமதி .ராணி தன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு 10.30 a .m க்கு புறப்பட்டுப் போனாள்.மாலை வீட் டிற்கு 4.30P.m க்கு திரும்பி வந்தாள்.இந்த காலத்தில் அவளின் இடப்பெயர்ச்சி என்ன? (இராணியின் வீட்டிலிருந்து அலுவலகம் உள்ளத் தொலைவு 1 கி.மீ )?
0
1/6 கி.மீ
1 கி.மீ
கூற இயலவில்லை
2.
மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது ஏது?
தாய்ப்பலகை
SMPS
RAM
MOUSE
3.
பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?
உருளைக்கிழங்கு
கேரட்
முள்ளங்கி
டர்னிப்
4.
களைக்கொல்லிகளின் பயன்பாடு _________ மாசுபாட்டை உருவாக்கும்.
காற்று மாசுபாடு
நீர் மாசுபாடு
இரைச்சல் மாசுபாடு
இவற்றில் எதுவும் இல்லை
5.
சோப்புக்களின் முதன்மை மூலம் _________ ஆகும்.
புரதங்கள்
விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
மண்
நுரை உருவாக்கி
6.
யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்
செல்சுவர்
சைட்டோபிளாசம்
உட்கரு(நியூக்ளியஸ்)
நுண்குமிழ்கள்
7.
காற்றில் நைட்ரஜனின் சதவீதம் _________
78%
21%
0.03%
1%
8.
கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?
துருப்பிடித்தல்
பருவநிலை மாற்றம்
நில அதிர்வு
வெள்ளப்பெருக்கு
9.
கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?
வெள்ளி
மரம்
அழிப்பான்
நெகிழி
10.
வெப்பத்தின் அலகு
நியூட்டன்
ஜூல்
வோல்ட்
செல்சியஸ்
11.
கீழ்க்காண்பவற்றுள் கணினியின் மறுவடிவம் எது?
கரும்பலகை
கைப்பேசி
வானொலி
புத்தகம்
12.
அளவிடப்படக்கூடிய அளவிற்கு _________ என்று பெயர்
இயல் அளவீடு
அளவீடு
அலகு
இயக்கம்
13.
விலங்கு-தாவர இடைவினையின் முக்கியத்துவத்தை பற்றி எழுதுக.
14.
ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.
15.
வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.
16.
புரோகேரியாட்டிக் செல்லின் படம் வரைந்து பாகங்களைக் குறி
17.
தீயணைப்பானிலிருந்து தீயை அணைப்பதற்கு ஏன் நார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்படுகிறது என உங்களால் யூகிக்க முடிகிறதா?
18.
துளையுள்ள வட்டத்தகட்டினை வெப்பப்படுத்தும் பொழுது, தகட்டின் துளையின் விட்டத்தில் என்ன மாற்றம் எதிர்பார்க்கிறாய்? வெப்பத்தின் விளைவால் துகள்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்க.
19.
ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்க்காணும் மாற்றங்களைக் காண முடியும்.
அ) மெழுகு உருகுதல்.
ஆ) மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்
இ) மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்
ஈ) உருகிய மெழுக தீண்மமாக மாறுதல்
மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்? உமது பதிலை நியாயப்படுத்துக.
20.
மின்மூலங்கள் என்றால் என்ன? இந்தியாவில் உள்ள பல்வேறு மின் நிலையங்கள் பற்றி விளக்குக.
21.
கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.
22.
வளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.
23.
நீளம் - வரையறு
24.
நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.
25.
மறுமலர்ச்சி அடையக்கூடிய பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.
26.
பாரிஸ் சாந்தின் பயன்களை விவரிக்கவும்.
27.
நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?
28.
ஒருவரின் ஆடையில் ஏதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?
29.
மெதுவான மாற்றத்தை வரையறு.
30.
வீட்டில் எந்தெந்த மின்சார சாதனங்களிலிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம் எனப் பட்டியலிடுக.
31.
தரவு பற்றி சிறு குறிப்பு வரைக.
32.
இயங்குதளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக?
33.
பாலைவனத்தில் குறைவான நீரே காணப்படுகிறது? இதற்கு காரணம் யாது?
34.
கழிவுகளுக்கும், டெங்கு மற்றும் மலேரியா போன்ற ஆபத்தான நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்குக.
35.
ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.
36.
நுண்ணோக்கியில் நீ கண்ட தாவர செல் மற்றும் விலங்கு செல்லின் படம் வரைக.
37.
பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிவதேன்?
38.
காகிதத்தை எரிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் யாவை? விவரிக்கவும்.
39.
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின்அதிர்வு ஏற்படுமா? விளக்கம் தருக.
40.
வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக.
41.
கூற்று (A) : நமது உடலானது மின்அதிர்வை வெகு எளிதில் ஏற்றுக்கொள்கிறது.
காரணம்(R) : மனி்த உடலானது ஒரு நல்ல மின்கடத்தியாக்கும்.
அ. A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
ஆ. A சரி, ஆனால் R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
இ. A தவறு ஆனால் R சரி.
ஈ. A மற்றும் R இரண்டும் சரி R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
1.
(a)
0
2.
(d)
MOUSE
3.
(a)
உருளைக்கிழங்கு
4.
(b)
நீர் மாசுபாடு
5.
(b)
விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
6.
(b)
சைட்டோபிளாசம்
7.
(a)
78%
8.
(b)
பருவநிலை மாற்றம்
9.
(a)
வெள்ளி
10.
(b)
ஜூல்
11.
(b)
கைப்பேசி
12.
(b)
அளவீடு
13.
1. மனிதர்கள் தங்களின் தேவைக்காக தாவரங்களைச் சார்ந்திருப்பது போல விலங்குகளும் தாவரங்களைச் சார்ந்துள்ளன.
2. பட்டுப் புழுக்கள் மல்பெரி இலைகளை உணவாக எடுத்துக்கொண்டு பட்டு உற்பத்திக்கு உதவுகிறது, தாவரங்களின் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு விலங்குகள், பூச்சிகள் மற்றும் பறவைகளின் பங்கு மிக அவசியமாகும்.
3. மலர்களிலிருந்து தேனீக்கள் தேனை எடுக்க செல்லும்போது மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதோடு தேனை சேகரிக்கிறது. இதனால் விளைச்சல் அதிகரிக்கிறது.
4. வன்கட்டைகள் உயர்தர மரச்சாமான்கள் மற்றும் பல பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
5. மென்கட்டைகள் நடுத்தரமான அடர்த்தி கொண்ட பலகைகள் மற்றும் தாள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
6. கடலில் பவளப்பாறைகளில் வாழும் பாசிகளும் தாவரங்களும் பெரும்பான்மையான மீன்களின் உணவாக இருப்பதால் அப்பகுதிகளில் மீன்பிடித்தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.
7. பல்வேறு தாவரங்களின் விதைகள் பரவவும், முளைக்கவும் விலங்குகளும், பறவைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
14.
1. அதிகமான ஒலி அல்லது சத்தமான ஒலி இரைச்சலை ஏற்படுத்துகின்றது. இத்தகைய இரைச்சலையே ஒலி மாசுபாடு என்கிறோம்.
2. சத்தமான இசை, மோட்டார் வாகனங்களில் வெளிவரும் இரைச்சல், பட்டாசு வெடிக்கும் போது உருவாகும் இரைச்சல், இயந்திரங்களின் ஓசை போன்றவை இரைச்சலை உருவாக்குகின்றன.
3. இதனால் தூக்கம் கெடுகிறது. படிக்க முடிவதில்லை மன அழுத்தம் ஏற்படுவதோடு செவிகள் பாதிப்படைகிறது
4. நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளும், பறவைகளும், கடலுக்கடியில் திமிங்கலங்களும் பாதிக்கப்படுகின்றன.
குறைக்கும் வழிமுறைகள்
1. தொலைக்காட்சி மற்றும் மின்னணுக் கருவிகளின் ஒலி அளவைக் குறைத்து வைத்து கேட்கலாம்.
2. ஓட்டுநர்கள் வாகனங்களின் ஒலிப்பான்களைத் தேவை ஏற்படும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. பட்டாசு வெடிப்பதையும், சத்தமாக பேசுவதையும் தவிர்க்கவும்.
15.
இரும்புக்கம்பிகள் (அல்லது) எஃகு வலைகளை கற்காரையுடன் சேர்த்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட காரை' எனப்படும்.
1. இது வலுவானது மற்றும் உறுதியானது.
2. அணைக்கட்டுகள், பாலங்கள், வீட்டின் மேல் தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்கும் குடிநீர்த் தொட்டிகள், குழாய்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைப்பதற்கும். இது பயன்படுகிறது.
16.

17.
1. CO2 வாயு தீயை அணைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
2. அவ்வாறு பயன்படுத்தும்போது இவ்வாறு எரிதலுக்கு தேவையான ஆக்ஸிஜன் வழங்கப்படுவதை முழுமையாகத் தடுக்கிறது.
3. இதனால் நெருப்பு அணைந்து கட்டுப்படுத்தப்படுகிறது.
18.
வட்டத்தகட்டின் விட்டம் விரிவடையும் அதனால் வட்டத்தகட்டின் துளை பெரிதாகும்.
19.
அ) மெழுகுவர்த்தி உருகுதல்
ஆ) உருகிய மெழுகை மீண்டும் திண்மமாக மாற்றுதல் மெழுகுவர்த்தியில் எரிதல் என்பது ஒரு இயற்பியல்/ மீளக்கூடிய செயல்முறை ஆகும்.
20.
மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் மின் மூலங்கள் எனப்படும். பலவகையான மின் மூலங்களிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது.
அ) அனல்மின் நிலையங்கள்:
அனல்மின் நிலையங்களில் நிலக்கரி, டீசல் அல்லது வாயுக்களை எரிப்பதன் மூலம் கிடைக்கும் வெப்ப ஆற்றலால் டர்பைன் இயங்குகிறது. டர்பைன் இயங்கும் பொழுது இரு மின்காந்தங்களுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ள கம்பிச்சுருள் சுழல்வதால் உருவாகும் மின்காந்தத் தூண்டலால் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு வெப்ப ஆற்றலானது மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
ஆ) நீர்மின் நிலையங்கள்:
நீர்மின் நிலையங்களில் அணைக்கட்டிலிருந்து பாயும் நீரால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது. நீர்மின் நிலையங்கள் அதிக காலம் இயங்கக் கூடியவை மற்றும் சிக்கனமானவை.
இ) அணுமின் நிலையங்கள் :
அணுமின் நிலையங்களில் அணுக்கரு ஆற்றலைக் கொண்டு டர்பைன் இயக்கப்படுகிறது. டர்பைன் இயக்கத்தால் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு அணுக்கரு ஆற்றலானது இயக்க ஆற்றலாகவும் பின் மின்னாற்றலாகவும் மாற்றப்படுகிறது.
ஈ) காற்றாலை:
காற்றாலைகளில் காற்றின் ஆற்றலால் டர்பைன் சுழற்றப்படுகிறது. இதன் மூலம் மின்சாரம் உருவாகிறது. இங்கு இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
21.
1. கணினி பலதுறைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
2. துணிக்கடையில் பில் போட பயன்படுகிறது.
3. பெரிய மற்றும் சிறிய இயந்திரங்களை மனிதர் துணையின்றி கட்டுப்படுத்த பயன்படுகிறது.
4. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கல்விப்பெறுவதற்கு பெருமளவு கணினியைப் பயன்படுத்துகிறார்கள்.
5. ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு எடுப்பதற்கும் பிற விவரங்களுக்கும் கணினி பயன்படுத்தப்படுகிறது.
6. வங்கி, எ.டி.எம், அஞ்சலகம் ஆகியவற்றிலும் கணினி பல செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது.
7. கணினியில் நமக்குத் தேவையான தரவுகளை சேமித்து வைக்கலாம். இத்தரவுகளை நாம் தேவைக்கு ஏற்றவாறு தகவல்களாக மாற்றி எடுத்துக்கொள்ளலாம்.
22.
முறை 1:
1. ஒரு தாளில் AB என்ற ஒரு வளைகோடு வரைய வேண்டும்.
2. அந்த வளைகோட்டின் மீது ஒரு கம்பியை வைக்க வேண்டும்.
3. கம்பியானது வளைகோட்டின் எல்லாப் பகுதியையும் தொடுவதை உறுதி செய்ய வேண்டும்.
4. வளைகோட்டின் தொடக்கப் புள்ளியையும், முடிவுப் புள்ளியையும் கம்பியின் மீது குறிக்கவேண்டும்.
5. இப்பொழுது கம்பியை நேராக நீட்டி குறிக்கப்பட்ட தொடக்கப் புள்ளிக்கும் முடிவுப் புள்ளிக்கும் இடையிலான தொலைவை அளவுகோல் கொண்டு அளவிட வேண்டும்.
6. இதுவே வளைகோட்டின் நீளமாகும்.
முறை 2:
1. ஒரு தாளின் மீது AB என்ற வளைகோட்டினை வரைய வேண்டும்.
2. கவையின் இரு முனைகளை 0.5 செ.மீ அல்லது 1 செ.மீ இடைவெளி உள்ளவாறு பிரிக்க வேண்டும்.
3. வளைகோட்டின் ஒரு முனையிலிருந்து கவையை வைத்து மறுமுனை வரை அளந்து குறிக்கவேண்டும்.
4. வளைகோட்டின் மேல் சமஅளவு பாகங்களாகப் பிரிக்க வேண்டும்.
5. குறைவாக உள்ள கடைசிப் பாகத்தை அளவுகோல் கொண்டு அளவிட வேண்டும்.
6. வளைகோட்டின் நீளம் (பாகங்களின் எண்ணிக்கை × ஒரு பாகத்தின் நீளம்) + மீதம் உள்ள கடைசி பாகத்தின் நீளம்.
23.
ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு நீளம் எனப்படும்.
24.
வேம்பு, துளசி, நெல்லி
25.
பழைய துணிகள் மற்றும் சிலவகை நெகிழிகள் மறு சுழற்சி அடையக்கூடிய பொருள்களாகும்.
26.
1. கரும்பலகையில் எழுதும் பொருளாகப் பயன்படுகிறது
2. எலும்பு முறிவுகளைச் சரிசெய்யப் பயன்படுகிறது
3. சிலைகள் செய்வதற்கான வார்ப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது
4. கட்டுமானத் துறையிலும் பயன்படுகிறது.
27.
சைட்டோபிளாசம் செல்லின் நகரும் பகுதி எனப்படுகிறது.
28.
i) அவரை அந்த இடத்திலேயே நிறுத்த வேண்டும்.
ii) நின்று கொண்டிருந்தால் அவரை அந்த இடத்திலேயே படுக்க செய்ய வேண்டும்.
iii) பின்பு, தரைத் தளத்திலேயே உருளச் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் தீ மேலும் பரவாமல் தடுப்பதுடன், பெரிய பாதிப்பின்றி அவரைக் காப்பாற்றலாம்.
29.
அதிக நேரத்தை எடுத்துக் கொண்டு நிகழும் மாற்றங்கள் மெதுவான மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன.
30.
1) மின் இஸ்திரிப்பெட்டி
2) மின்வெப்பக்கலன்
3) மின்நீர் சூடேற்றி போன்றவை
31.
1. தரவு என்பது முறைப்படுத்தப்பட வேண்டிய விவரங்கள்.
2. இவை பொதுவான எண், எழுத்து. படக் குறியீடுகளாக இருக்கும்.
32.
கணினி இயங்குவதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளை கொண்ட மென்பொருளை இயக்க மென்பொருள் அல்லது இயங்குதளம் என்கிறோம். இயக்க மென்பொருள் இன்றி கணினியைப் பயன்படுத்த இயலாது.
எ.கா : Windows, Linux, Android, Mac
33.
பாலைவனத்தில் மரங்கள் குறைவாக இருப்பதால் மழைப்பொழிவு குறைவாக உள்ளது. எனவே பாலைவனத்தில் குறைவான நீர் காணப்படுகிறது.
34.
1. டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் கொசுவினால் பரவுகிறது.
2. கழிவுகள் அதிகமானால் நீர் தேங்கும் வாய்ப்புள்ளதால் கொசு பெருக வாய்ப்புள்ளது. இதில் கொசு உற்பத்தியாகி நோய்கள் பரவ காரணமாகிறது.
35.
1. உரமாகப் பயன்படுகிறது.
2. சிமெண்ட் தயாரிப்பில் பயன்படுகிறது
3. பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படுகிறது.
36.
37.
கடுமையான தட்பவெப்பநிலைகள், தூசுகள், மாசுபாடு, வெப்பம் மற்றும் குளிர்ச்சி போன்ற சூழல்களில் காவலர்கள் பணிபுரிகின்றனர். இதனால் அவர்கள் கடுமையான உடல்நலம் சார்ந்த விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, பணியிலுள்ள போது முகமூடி அணிகின்றனர்.
38.
காகிதம் எரிதல் வினை நிகழ குறைந்த அளவு நேரத்தையே எடுத்துக் கொள்கிறது. எனவே இது ஒரு வேகமான மாற்றம் ஆகும். இம்மாற்றத்தின் போது கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் நீருடன் வெப்பமும், ஆற்றலும் உருவாகின்றன.
39.
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின்அதிர்வு ஏற்படாது. ஏனென்றால் மின்கலனின் மின்னழுத்தம் மிக மிக குறைவு.
40.
| வெப்பம் | வெப்பநிலை |
| 1. வெப்பமானது வெப்பநிலையை மட்டுமல்ல ஒரு பொருளில் எவ்வளவு மூலக்கூறுகள் உள்ளன என்பதையும் பொருத்தது. | வெப்பநிலையானது ஒரு பொருளிலுள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் எவ்வளவு வேகத்தில் இயங்குகின்றன அல்லது அதிர்கின்றன என்பதைப் பொருத்தது. |
| 2. வெப்பமானது அப்பொருளின் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்ற லைக் குறிப்பிடும் ஓர் அளவீடு |
வெப்பநிலையானது மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலைக் குறிப்பிடும் ஓர் அளவீடு |
| 3. வெப்பத்தின் SI அலகு ஜூல் | வெப்பநிலையின் SI அலகு கெல்வின் |
41.
அ. A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards