6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/01/2019
6-Std Science Water Full Material
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
வீட்டில நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் _________.
வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.
அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.
வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.
அதில் அதி்கமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
2.
நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?
பனி ஆறுகள்
நிலத்தடி நீர்
மற்ற நீர் ஆதாரங்கள்
மேற்பரப்பு நீர்
3.
பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?
i) நீராவிப்போக்கு
ii) மழைபொழிதல்
iii) ஆவி சுருங்குதல்
iv) ஆவியாதல்
II மற்றும் III
II மற்றும் IV
I மற்றும் IV
I மற்றும் II
4.
பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?
ஆவியாதல்
ஆவி சுருங்குதல்
மழை பொழிதல்
காய்ச்சி வடித்தல்
5.
உலகில் உள்ள மொத்த நீரில் 97% _________ ஆகும்.
நன்னீர்
தூயநீர்
உப்பு நீர்
மாசடைந்த நீர்
6.
நீர் சுழற்சியினை _________ என்றும் அழைக்கலாம்.
7.
ஆறுகளில் பாயும் நீரின் அளவு _________ காலங்களில் பெருமளவு அதிகமாக இருக்கும்.
8.
நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே _________ கட்டப்படுகிறது.
9.
நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.
10.
இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ________ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.
11.
கடல் நீரினை நேரடியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்.
12.
குளிர்வித்தலால் புற்களின் மீது பனி உருவாகும்.
13.
சூரிய வெப்பத்தால் மட்டுமே ஆவியாதல் நிகழும்.
14.
நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் கடல் ஆகும்.
15.
ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக இல்லை.
16.
மழைநீர் சேகரிப்பின் வகைகள் யாவை?
17.
ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதியில் உள்ள நீர்வாழ் விலங்குகல் எவ்வாறு உயிர் வாழ்கின்றன?
18.
நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?
19.
அன்றாடம் நாம் மேகங்களைக் காண்கிறோம். ஆனால், மழை பொழிவு அன்றாடம் நிகழ்வதில்லை.ஏன்?
20.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட ஒரு முகவை நீரினை வெளியே எடுத்து ஒரு மேசையில் வைக்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த பாட்டிலைச் சுற்றி குளம்போல் நீர் தேங்கியிருக்கும் ஏன்?
21.
நாகரிகங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களின் பல்வேறு தேவைகளுக்கான நீர் எவ்வாறு பெறப்படுகிறது.
22.
ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.
23.
புவியில் 3% மட்டுமே நன்நீர் உள்ளது. அதனை அதிகப்படுத்த முடியாது. இந்தச் சூழ்நிலையில் இருக்கும் நன்னீரினை தக்க வைத்துக் கொள்ளலாம்?
24.
ஒரு நிலப்பகுதியில் ஏரியோ, குளமோ காணப்படவில்லை. அப்பகுதியில் மேகங்கள் உருவாதல் நிகழுமா?
25.
இந்தியாவில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்களை தெளிவுபடுத்தவும்.
26.
கழிவு நீரை ஆறுகளிலோ, கடலிலோ சமன்படுத்ததால் வெளியேற்றக் கூடாது. இக்கூற்றிக்குத் தகுந்த விளக்கம் அளிக்கவும்.
27.
புவியின் பரப்பில் சுமார் 71% நீர் நிறைந்துள்ளது எனில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமா? காரணம் கூறுக.
28.
'நீர் சேமிப்பு' என்ற தலைப்பில் சில வாசகங்களை உமது நடையில் எழுதவும்.
29.
மேற்பரப்பு நீரினை நிலத்தடி நீரிலிருந்து வேறுபடுத்தவும்.
30.
மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.
31.
இந்தியாவின் நீர் மனிதன் யார்? இணையத்தின் உதவியுடன் அவர் உருவாக்கிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் பற்றியும், அவர் பெற்ற விருதுகள் பற்றியும் ஒரு குறிப்பினை எழுதவும்.
32.
குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும்.
1.
(b)
அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.
2.
(b)
நிலத்தடி நீர்
3.
(c)
I மற்றும் IV
4.
(d)
காய்ச்சி வடித்தல்
5.
(c)
உப்பு நீர்
6.
( )
ஹைட்ராலஜிக்கல் சுழற்சி
7.
( )
மழைக்
8.
( )
நீரேற்று நிலையம்
9.
( )
ஆவியாதல்
10.
( )
0.3%
11.
(b)
12.
(a)
13.
(b)
14.
(a)
15.
(b)
16.
மழைநீர் சேகரிப்பில் இரண்டு வகைகள் உள்ளன. அவை
1. மழை எங்கு பொழிகிறதோ அவ்விடத்திலே சேகரித்தல்.
2. ஓடும் மழை நீரினை சேகரித்தல்.
17.
ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதிகளில் பனிப்படலத்திற்கு கீழ் வசிக்கும் நீர்வாழ் விலங்குகள் இறப்பதில்லை ஏனெனில் மிதக்கும் பனிப்படலமானது ஒரு பாதுகாப்புப் படலமாக செயல்பட்டு நீரிலிருந்து வெப்பம் வெளியேறுவதனை அனுமதிப்பதில்லை. இக்காரணங்கள் நீர்வாழ் விலங்களுக்கு சாதகமாக அமைந்து அவை உயிர்வாழ உதவுகின்றன.
18.
துருவப் பகுதிகளில் உள்ள பனியாறுகள், பனிப்படிவுகள் பனிப்பாறைகளில் நீர் பனிக்கட்டியாகக் காணப்படுகிறது.
19.
1. மேகங்கள் குளிர்ச்சியடைய குளிர்ந்த காற்று தேவை.
2. மேகங்கள் குளிர்ச்சியடைந்து சுருங்கினால் மட்டுமே மழைப்பொழிவு நிகழும்.
3. குளிர்ச்சியடையாத மேகங்கள் மழை தராது.
இதுவே அன்றாடம் மழைப்பொழிவு நிகழாததிற்கான காரணமாகும்.
20.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட முகவையை மேசையில் வைக்கும் போது காற்றிலுள்ள நீராவி முகவையின் மீது பட்டு குளிர்ந்து நீராக மாறி பாட்டிலைச் சுற்றி குளம்போல் நீர் தேங்கியிருக்கும்.
21.
நகரங்களிலும், கிராமங்களிலும் பல்வேறு தேவைகளுக்கு கால்வாய்கள், குளங்கள், ஆறுகள், கிணறுகள், நீர்த்தேக்கங்கள், ஆழ்துணைக் கிணறுகள், நீர்த் தொட்டிகளிலிருந்து நீர் பெறப்படுகிறது.
22.
1. கடல்
2. ஆறு
3. ஏரி
4. கிணறு
23.
1. புவியில் 3% நன்னீரை அதிகப்படுத்த முடியாது. எனவே நீரை சிக்கனமாக பயன்படுத்தி தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
2. நீரினைத் தூய்மைப்படுத்தி மறுசுழற்சிக்கு உட்படுத்துதல்.
3. விவசாயத்தில் அதிகப்படியான உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளின் பயன்பாட்டினைக் குறைப்பதன் மூலம் நிலத்தடி நீர் மாசுப்பாட்டினைக் குறைத்தல்.
4. காடுகளைப் பாதுகாத்தல்
5. கடல் நீரை குடிநீராக்குதல் போன்றவற்றின் மூலம் நன்னீரைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
24.
நிலப்பகுதியில் ஏரியோ, குளமோ இல்லையென்றாலும் அங்கே மேகங்கள் உருவாகும். அங்கு உள்ள தாவரங்களின் இலைகளில் நடைபெறும் நீராவிப்போக்கு மூலம் நீராவி வளிமண்டலத்திற்கு சென்று மேகங்களை உருவாக்கும்.
25.
இந்தியாவில் நீர் பற்றாக்குறை ஏற்படக் காரணங்கள்.
1. மக்கள் தொகைப் பெருக்கம்
2. சீரான மழைப் பொழிவின்மை
3. நிலத்தடி நீர் மட்டம் குறைதல்
4. நீர் மாசுபாடு
5. நீரினை கவனக் குறைவாக கையாளுதல்
26.
கழிவு நீரை ஆறுகளிலோ, கடலிலோ சமன்படுத்தாமல் வெளியேற்றினால் ஆறுகளும், கடலும் மாசடைந்து அந்நீரில் வாழும் உயிர்கள் இறக்க நேரிடும். ஆற்று நீரை குடிக்கும் மக்களுக்கு நோய்கள் தொற்றும் ஆபத்து அதிகம். எனவே கழிவுநீரை மறுசுழற்சி செய்து கழிவுகளை நீக்கிய பின் நீர் நிலைகளில் வெளியேற்ற வேண்டும்.
27.
புவிப் பரப்பில் 71% நீர் நிறைந்திருந்தாலும் நன்னீர் அளவு 3% மட்டுமே. ஆனால் அந்நீரை உபயோகிக்கும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
28.
1) மழை நீர் உயிர் நீர்
2) மழைநீரை சேமிப்போம் நிலத்தடி நீரை பெருக்குவோம்
3) நீரின்றி அமையாது உலகம்
29.
| மேற்பரப்பு நீர் | நிலத்தடி நீர் |
| புவியின் மேற்பரப்பில் காணப்படுகிறது. | புவிப்பரப்பிற்கு கீழ் மண்ணில் நிறைந்திருக்கும். |
| ஆறு, ஏரி, சதுப்பு நிலநீர், குளம் போன்றவை மேற்பரப்பு நீர் ஆதாரங்களாகும். |
நீருற்று. கிணறு, ஆழ்துளைக்கிணறு போன்ற வை நிலத்தடி நீர் ஆதாரங்கள் |
| மொத்த தண்ணீரில் 0.3% மேற்பரப்பு நீராகும். | மொத்த நன்னீரில் 30% நிலத்தடி நீராகும். |
30.
1. மழை நீரை நேரடியாகச் சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதலே மழைநீர் சேகரிப்பு எனப்படும்.
2. கட்டிடங்களில் மேல்தளத்திலிருந்து விழும் மழை நீரை சேகரித்து குழாய் வழியாக மழைநீர் சேகரிப்பு தொட்டிகளில் விடுதல்.
3. இத்தொட்டிகளில் கருங்கல், கரி, மணல் போன்றவை இடப்பட்டிருக்கும்.
4. மேலும் இத்தொட்டியிலிருந்து நேரடியாக நிலத்திற்குள் விட்டு நிலத்தடி நீர் மட்டம் உயரச் செய்யலாம்.
5. இத்தொட்டிகளில் சுத்திகரிக்கப்பட்ட மழைநீரை கிணற்றில் விட்டும் பயன்படுத்தலாம்.
31.
1. இந்தியாவின் நீர் மனிதர் இராஜேந்திர சிங் ஆவார்.
2. இவர் மழைநீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் 850 கிராமங்களில் 4500 தடுப்பணைகளையும், குளங்களையும் கட்டினார்.
3. இத்திட்டத்தின் மூலம் இறந்து கொண்டிருந்த பல ஆறுகளுக்கு புத்துயிர் தந்தவர்.
4. 2001 ம் ஆண்டு ராமன் மகசேசே விருதையும். 2005ம் ஆண்டு ஜம்னா லால் பஜாஜ் விருதையும் பெற்றார்.
5. இவர் இந்தியாவின் 'ஜல் புருஷ்' (தண்ணீர் மனிதர்) என அழைக்கப்படுகிறார்.
32.
1. குடிநீர் என்பது மனிதன் குடிப்பதற்கும் உணவு சமைப்பதற்கும் பாதுகாப்பான நீராகும்.
2. உணவு செரிக்கவும், கழிவுப் பொருளை வெளியேற்றவும் நீர் அவசியம்.
3. மனித உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கும் தினமும் சராசரியாக 2 - 3 லிட்டர் குடிநீர் தேவை.
4. குடிநீரில் இயற்கையான கனிமங்கள் உள்ளதாக இருக்க வேண்டும்.
5. குடிநீர் என்பது சுத்தமானதாகவும் அபாயகரமான மாசுக்கள் மற்றும் கிருமிகள் இல்லாததாக இருக்க வேண்டும்.
6. தூய்மையான குடிநீரில் அமிலத்தன்மை இல்லாமல் pH அளவு சரியாக இருக்க வேண்டும்.
7. குடிநீர் இயற்கையான சுவையுடன் இருக்க வேண்டும்.
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards