6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/07/2019
மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.
காரணம்: தட்பவெப்ப நிலை மாற்றமே
அ. கூற்று சரி
ஆ. கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது.
இ. கூற்றும் காரணமும் சரி ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.
ஈ. கூற்றும் காரணமும் தவறானவை.
2.
| அ. ஆஸ்ட்ரலோபிதிகஸ் | இரு கால்களால் நடப்பது |
| ஆ. ஹோமோ ஹபிலிஸ் | நிமிர்ந்து நின்ற மனிதன் |
| இ.ஹோமோ எரக்டஸ் | சிந்திக்கும் மனிதன் |
| ஈ. ஹோமோ சேப்பியன்ஸ் | முகத்தின் முன்பக்க நீட்சி குறைந்து காணப்படுவது. |
3.
பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள _____ என்னுமிடத்தில் காணப்படுகின்றன.
4.
_______ கண்டுபிடிக்கப்பட்ட .நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.
5.
பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் _______ மற்றும் _______ ஆகும்.
6.
தான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை _______ உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தார்கள்.
7.
மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.
8.
மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.
9.
ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.
10.
நாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும்.
11.
மனிதர்கள் எப்போது ஒரே இடத்தில் குடியேறி வாழ ஆரம்பித்தார்கள்?
12.
தொடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள்?
13.
தொடக்க கால மனிதர்கள் எதை அணிந்தார்கள்?
14.
அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் காலத்தை அறிய என்ன முறை பயன்படுகிறது?
15.
பழங்காலம் முதல் நவீன காலம் வரை சக்கரம் வகித்து வரும் முக்கியத்துவம்.
16.
தொல்லியல் என்பதை எவ்வாறு வரையறுப்பாய் ?
17.
கோடரிகள் ஏன் உருவாக்கப்பட்டன?
18.
பழங்கால வேட்டை முறைகளை விளக்கிக் கூறவும்.
19.
பரிணாமம் என்றால் என்ன?
1.
கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது.
2.
இ
3.
( )
கரிக்கையூர்
4.
( )
கலப்பை
5.
( )
வேட்டையாடுதல், உணவு சேகரித்தல்
6.
( )
மானிடயியலாளர்கள்
7.
(b)
8.
(a)
9.
(a)
10.
(b)
11.
மனிதர்கள் விவசாயம் செய்ய தொடங்கிய பின் ஒரே இடத்தில் குடியேறி வாழ ஆரம்பித்தார்கள்.
12.
குகைகள்
13.
(i) பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல்கள்
(ii) மரப்பட்டைகள்
(iii) இலைகள்
14.
கதிரியக்கக் கார்பன் பகுப்பாய்வு முறை
15.
(i) சக்கர உருவாக்கம் மனித வரலாற்றில் ஒரு முதல் தரமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.
(ii) மனிதர்கள் களிமண்ணில் பானை செய்யக் கற்றுக் கொண்டார்கள். சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பானை செய்வதை எளிதாக்கியது.
(iii) மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர சக்கரம் உதவியது.
(iv) வாணிபம் பொருள்களை ஏற்றிச் செல்வதற்கு பயன்பட்டது.
(v) நவீன காலத்தில் அனைத்து வகையான போக்குவரத்திலும் சக்கரம் முக்கிய பங்காற்றுகிறது
(vi) மேலும் தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்குவதிலும் பெரும்பங்காற்றுகிறது.
16.
வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பற்றிப் படிப்பது தொல்லியல் ஆகும்.
17.
கோடரிகள்
(i) மரம் வெட்டவும்
(ii) மரக்கிளைகளை நீக்கவும்
(iii) குழிதோண்டவும்
(iv) விலங்குகளை வேட்டையாடவும்
(v) விலங்குகளின் தோலை உரிக்கவும் உருவாக்கப்பட்டன.
18.
(i) குழுவாகச் சென்று வேட்டையாடுதல்.
(ii) கழி தோண்டி, அதில் விலங்குகளைச் சிக்க வைத்து வேட்டையாடுதல்.
19.
மனித இனம் மாறுதல் அடைந்து, ஒரு மேம்பட்ட கட்டத்தை நோக்கி வளர்ச்சி அடைவதே பரிணாமம் ஆகும்.
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards