6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/02/2020
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 6th Standard Social Science Tamil Medium Model Questions Full Chapter 2020 )
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இரண்டு நீர்ப் பகுதிகளை இணைக்கும் குறுகிய நீர்ப் பகுதி
நீர் சந்தி
சிறுகடல்
தீவு
தீபகற்பம்
2.
செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________
டாலமி
கௌடில்யர்
ஜெர்சக்ஸ்
மெகஸ்தனிஸ்
3.
சந்திரகுப்த மௌரியர் அறியணையைத் துறந்து _________ என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.
பத்ரபாகு
ஸ்துலபாகு
பார்ஸவநாதா
ரிஷபநாதா
4.
நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?
அங்கம்
மகதம்
கோசலம்
வஜ்ஜி
5.
மூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது?
ராஜகிரகம்
வைசாலி
பாடலிபுத்திரம்
காஷ்மீர்
6.
சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?
23
24
25
26
7.
பௌத்த நூல்களின் பெயர் என்ன?
அங்கங்கள்
திரிபிடகங்கள்
திருக்குறள்
நாலடியார்
8.
ஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.
சீனா
வடக்கு ஆசியா
மத்திய ஆசியா
ஐரோப்பா
9.
சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?
செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்
செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி
செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்
10.
தான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.
ஆசியா
ஆப்பிரிக்கா
அமெரிக்கா
ஐரோப்பா
11.
பரிணாமத்தின் வழிமுறை ________
நேரடியானது
மறைமுகமானது
படிப்படியானது
விரைவானது
12.
பிஆர்.அம்பேத்கார் ஒபார்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட ஆண்டு
1990
1989
1988
1987
13.
பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது
பாலின பாகுபாடு
சாதி பாகுபாடு
மத பாகுபாடு
சமத்துவமின்மை
14.
பின்வருவனவற்றில் எது பரபட்சத்திற்கான காரணம் அல்ல ?
சமூகமயமாக்கல்
பொருளாதார நண்மைகள்
அதிகாரத்துவ ஆளுமை
புவியியல்
15.
'டிஸ்கவரி ஆஃப் இந்தியா ' என்ற நூலினை எழுதியவர் _________
இராஜாஜி
வ.உ.சி
நேதாஜி
ஜவஹர்லால் நேரு
16.
_________ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கேரளா
தமிழ்நாடு
பஞ்சாப்
கர்நாடகா
17.
கீழ்க்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை?
சீக்கிய மதம்
இஸ்லாமிய மதம்
ஜொராஸ்ட்ரிய மதம்
கன்ஃபூசிய மதம்
18.
இந்தியாவில் _________ மாநிலங்களும், _________ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
27.9
29.7
28.7
28.9
19.
பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
வணிகம்
வேட்டையாடுதல்
ஓவியம் வரைதல்
விலங்குகளை வளர்த்தல்
20.
தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது.
அ) கல்லணை
ஆ) காஞ்சிபுர ஏரிகள்
இ) பராக்கிரம பாண்டியன் ஏரி
ஈ) காவிரி ஆறு - இவற்றில்
அ) மட்டும் சரி
ஆ) மட்டும் சரி
இ) மட்டும் சரி
அ மற்றும் ஆ சரி
21.
இவற்றுள் எது தமிழக நகரம்?
ஈராக்
ஹரப்பா
மொகஞ்சதாரோ
காஞ்சிபுரம்
22.
அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியப்பெருங்கடல்
ஆர்க்டிக் பெருங்கடல்
23.
மலாக்கா நீர்ச்சத்தியை இணைப்பது
பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்
பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்
பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்
24.
சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்
ஆண்டி ரோமெடா
மெகலனிக்கிளவுட்
பால்வெளி
ஸ்டார்பர்ஸ்ட்
25.
புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்
சுற்றுதல்
பருவகாலங்கள்
சுழல்தல்
ஓட்டம்
26.
மதுரையைப் பற்றிய தகவல்களைக் குறிப்புகளில் எழுதியுள்ளவர் யார்?
27.
பூம்புகார் வணிகர்களை மதிப்பிடுக.
28.
சிந்து வெளி மக்களின் சமயம் பற்றி குறிப்பிடுக.
29.
சிந்து வெளி மக்கள் பயன்படுத்திய ஆபரணங்கள் யாவை?
30.
வரலாற்றுக்கு ஆதாரங்களாக அமைந்துள்ள முக்கிய கட்டடங்களை குறிப்பிடுக.
31.
நம் நாட்டில் கொண்டாடப்படும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் விழாக்களை வரிசைப்படுத்துக.
32.
கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?
33.
வளங்கள் என்றால் என்ன?
34.
புதுப்பிக்க கூடிய வளங்கள்
35.
காஞ்சியில் பிறந்த சான்றோர்கள் யார்? யார்?
36.
மதுரையை ஆண்ட தமிழ் மன்னர்கள் பற்றி குறிப்பிடுக
37.
வேளாண்மை சிந்துவெளி மக்களின் தொழிகளுள் ஒன்று - எவ்வாறு நிரூபிப்பாய்? (கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை வைத்து)
38.
சிந்து வெளி மக்கள் வெளிநாட்டினருடன் வேணிகத்தில் ஈடுபட்டனர் என்பதை நீ எவ்வாறு அறிந்து கொள்கிறாய்?
39.
சிந்து வெளி நாகரிகம் வெண்கல கால நாகரிகம் என ஏன் அழைக்கப்படுகிறது?
40.
இந்தியாவில் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் எவையேனும் மூன்றை பற்றி எழுதுக.
41.
பன்முகத் தன்மையினை வரையறு.
42.
இந்திய அரசியலமைப்பின்படி எந்த பிரிவுகள் சமத்துவத்தை பற்றிக் கூறுகிறது?
43.
பாரபட்சம் என்றால் என்ன?
44.
கோடரிகள் ஏன் உருவாக்கப்பட்டன?
45.
மனிதர்கள் ஏன் இடம் விட்டு இடம் நகர்ந்தார்கள்?
46.
வட, தென் அமெரிக்காவைச் சூழ்ந்துள்ள பெருங்கடல்கள் எவை?
47.
பரப்பளவின் அடிப்படையில் கண்டங்களின் பெயர்களை வரிசைப்படுத்தி எழுதுக ?
48.
பழையகற்கால மனிதனின் வாழ்க்கை முறையைத் தற்கால வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்.
49.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மக்களுக்கு நாய் எவ்வாறு பயனுள்ளதாக இருந்தது?
50.
பழங்கால மனிதன் வேட்டையாடப் பயன்படுத்திய கருவிகள் சிலவற்றைக் கூறு.
51.
படத்தை பார்த்து விடையளிக்கவும்
i) சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது?
ii) பெரியதான கோள் எது?
iii) சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது?
iv) செந்நிறக் கோள் எது?
52.
வளப்பாதுகாப்பைப் பற்றி காந்தியடிகளின் சிந்தனை என்ன?
53.
நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.
54.
சங்ககாலத்தில் பெளத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.
55.
பெளத்தத்தின் பிரிவுகளான ஹீனயான, மகாயான பிரிவுகளிடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபடுகளை எழுதவும்.
56.
வேதகாலப் பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.
57.
கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.
58.
காஞ்சிபுரம் கல்வியில் தலை சிறந்து விளங்கியதுஎன்பதை நிரூபி.
59.
ஈராக் - குறிப்பு தருக.
60.
இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுளோம் - கலந்துரையாடுக.
61.
பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.
62.
பசிபிக் பெருங்கடலின் சிறப்பம்சங்களை விளக்குக.
63.
நிலத்தோற்றத்தின் வகைகளை விளக்கி எழுதுக.
64.
பெருங்கடல் மற்றும் கடல்
65.
புவியின் சுழலுதல் மற்றும் சுற்றுதல் நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகள் யாவை?
66.
இந்திய அரசியல் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
டெல்லி
சென்னை
தமிழ்நாடு
ஆந்திர பிரதேசம்
கேரளா
கர்நாடகா
1.
(a)
நீர் சந்தி
2.
(d)
மெகஸ்தனிஸ்
3.
(a)
பத்ரபாகு
4.
(b)
மகதம்
5.
(c)
பாடலிபுத்திரம்
6.
(b)
24
7.
(b)
திரிபிடகங்கள்
8.
(c)
மத்திய ஆசியா
9.
(a)
செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
10.
(b)
ஆப்பிரிக்கா
11.
(c)
படிப்படியானது
12.
(a)
1990
13.
(a)
பாலின பாகுபாடு
14.
(d)
புவியியல்
15.
(d)
ஜவஹர்லால் நேரு
16.
(a)
கேரளா
17.
(d)
கன்ஃபூசிய மதம்
18.
(d)
28.9
19.
(b)
வேட்டையாடுதல்
20.
(d)
அ மற்றும் ஆ சரி
21.
(d)
காஞ்சிபுரம்
22.
(b)
அட்லாண்டிக் பெருங்கடல்
23.
(c)
பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
24.
(c)
பால்வெளி
25.
(c)
சுழல்தல்
26.
கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிஸ் மதுரையைப் பற்றி எழுதியுள்ளார். சாணக்கியர் தனது அர்த்த சாஸ்த்திரத்தில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
27.
பூம்புகார் வணிகர்கள் நேர்மைக்கும் மாண்புக்கும் உரியவர்களாகத் திகழ்ந்தார்கள்.
28.
சிந்து வெளி மக்களின் சமயம் பற்றிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை இருப்பினும் கிடைக்கப் பெற்ற பெண் சிலைகளைப் பார்க்கும் போது தாய் தெய்வ வழிபாடு இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
29.
சிந்து வெளி நாகரிக ஆண்களும் பெண்களும் ஆபரணங்களை அணிந்தனர். அவர்கள் அணிந்த ஆபரணங்களாவன: கழுத்தணிகள், ஒட்டியானம், வளையல்கள், மோதிரங்கள், காதணிகள். இவை தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் விலையுயர்ந்த கற்களை கொண்டு உருவாக்கப் பெற்றன.
30.
திருமலை நாயக்கர் மஹால், வேலூர் கோட்டை, தஞ்சை பெரிய கோயில், சாஞ்சி ஸ்தூபி மாறும் மடாலயம்.
31.
(i) தமிழ்நாடு - பொங்கல்விழா
(ii) கேரளா - ஓணம்
(iii) மகாராஷ்டிரா - விநாயகர் சதுர்த்தி
(iv) கர்நாடகா - தசரா
(v) கல்கத்தா - துர்கா பூஜை
(vi) அஸ்ஸாம் - பீஹீ
32.
கண்டறியப்பட்ட வளங்கள் தற்போறு பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவும் அறியப்பட்டிருக்கிறது.
எ.கா நெய்வேலி பழப்பு நிலக்கரிச் சுரங்கம்,
33.
மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும்.
34.
ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள், புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: காற்று, நீர், சூரிய ஒளி.
35.
தர்ம பாலர்,
ஜோதி பாலர்,
சுமதி
போதி தர்மர்.
36.
(i) பண்டைய காலத்தில் மதுரையை முறையே பாண்டியர்களும், சோழர்களும், களப்பிரர்களும் ஆட்சி செய்தனர்
(ii) இடைக்காலத்தில் பிற்காலக் சோழர்களும், பிற்கால பாண்டியர்களும், அவர்களைத் தொடர்ந்து நாயக்கர்களும் ஆட்சி புரிந்தனர்
37.
சிந்து சமவெளி மக்களின் தொழில்களில் வேளாண்மை இருந்தது என்பதனை தானியக் களஞ்சியத்தின் தள வெடிப்புகளில் கோதுமை, பார்லி, தினை வகைகள் மற்றும் பருப்பு வகைகளின் மிச்சங்கள் சிதறி காணப்பட்டன. இதன் மூலம் அவர்கள் வேளாண்மையில் ஈடுபட்டனர் என்பதை உறுதி செய்யலாம்.
38.
ஹரப்பா மக்கள் பெரும் வணிகர்களாக இருந்தனர். தரப்படுத்தப்பட்ட எடைக் கற்களை பயன்படுத்தினர். மெசபெரடோமியாவுடன் கடல் வணிகம் நடைபெற்றிருக்கிறது. சிந்து முத்திரைகள் ஈராக், குவைத் சிரியா பகுதிகளில் கிடைத்துள்ளதால் அவர்களோடு இருந்த வர்த்தகத் தொடர்பு உறுதியாடுகிறது.
39.
சிந்து வெளி நாகரிகம் வெண்கல பயன்பாட்டை நன்கு அறிந்திருந்தது. மக்கள் பயன்படுத்திய பொருட்கள் வெண்கலத்தாலே உருவாக்கப்பட்டிருந்தால் இதனை வெண்கல காலம் (Bronze Age) என அழைக்கிறோம்.
40.
(i) தீபாவளி
(ii) ஹோலி
(iii) தசரா
41.
நாம் ஒவ்வொருவரும் பல்வேறு விதமான மொழிகள், உணவு, பழக்க வழக்கங்கள், விழாக்கள். பண்பாடுகள், வழிபாட்டு முறைகளைச் சார்ந்து இருப்பினும் ஒற்றுமையாக வாழ்கிறோம். இதுவே பன்முகத்தன்மை என்று அறியப்படும்.
42.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 15 (1)
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 17 (1)
43.
(i) பாரபட்சம் என்பது மற்றவர்களைப் பற்றி எதிர் மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
(ii) அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே தவறாக முன்முடிவு எடுப்பதாகும்.
44.
கோடரிகள்
(i) மரம் வெட்டவும்
(ii) மரக்கிளைகளை நீக்கவும்
(iii) குழிதோண்டவும்
(iv) விலங்குகளை வேட்டையாடவும்
(v) விலங்குகளின் தோலை உரிக்கவும் உருவாக்கப்பட்டன.
45.
மனிதர்கள் உணவைத் தேடி இடம் விட்டு இடம் நகர்ந்தார்கள்.
46.
அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல்.
47.
ஆசியா,
ஆப்ரிக்கா,
வட அமெரிக்கா,
தென் அமெரிக்கா,
அண்டார்டிகா
ஐரோப்பா
ஆஸ்திரேலியா.
48.
| பழைய கற்கால வாழ்க்கை முறை | தற்கால வாழ்க்கை முறை |
| பழைய கற்கால மனிதன் உணவைத் தேடி நாடோடி வாழ்க்கை வாழதந்தான் | தற்கால மனிதன் குடியிருப்புகளை அமைத்து நிலையாக தங்கி வாழ்கிறான் |
| இலை, மரப்பட்டைகள், விலங்குகளின் தோல்களை ஆடையாக உடுத்தினான் | பருத்தி, பட்டு, கம்பளி, மற்றும் செயற்கை இழை துணிகளை ஆடையாக உடுத்துகிறான் |
| காய்கள், கனிகள், கிழங்குகள் மற்றும் இறைச்சியை உண்டான் | காய்கள், கனிகள், கிழங்குகள் இவைகளை வேக வைத்து உண்கிறான் |
| குறைகளில் வாழ்ந்தான் | வீடுகள் கட்டி வாழ்கிறான் |
| இயற்கையை அண்டி வாழ்ந்தான் | நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்கிறான் |
49.
(i) பழங்கால மனிதர்கள் குகைகளில் வாழ்ந்தனர்
(ii) வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்தனர்
(iii) குகைகள் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலில் அமையவில்லை
(iv) கொடிய விலங்குகள் தீடீரென குகைகளுக்குள் நுழைந்து விடும்
(v) அதனை மனிதர்களால் அறிய முடியாமல் போவதுண்டு
(vi) ஆனால், நாய்கள் தமது கூரிய மோப்ப உணர்வினால் விலங்குகளின் வகையை அறிந்து குறைத்தன
(vii) இதனைக் கண்ட மனிதர்கள் நாய்களை பழக்க தங்கள் பாதுகாப்பிற்கும், வேட்டையாடுவதற்காகவும் பயன்படுத்தினர்
50.
விலங்குகளின் எலும்புகள் மற்றும் கொம்புகள்
கரடு முரடான கூர்மையாக்கப்பட்ட கற்கருவிகள்
கூர்மையாக்கப்பட்ட மரக்கிளைகள்
51.
i) புதன்
ii) வியாழன்
iii) நெப்டியூன்
iv) செவ்வாய்
52.
(i) வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைக்கு மட்டுமே என்று மகாத்மாகாந்தி அவர்கள் கூறுகிறார். (ii) உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம் எனவும் கூறுகிறார்.
53.
நான் அசோகரப் போல் ஒரு அரசராக இருந்தால் மருத்துவமனைகளை அமைத்து ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளிப்பேன். கால்நடைகள், விலங்குகளுக்கு தனி மருத்துவமனை அமைப்பேன். பின்தங்கிய மக்களுக்கு இலவச உணவு, உடை வழங்குவேன். ஆதரவற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும் காப்பகம் அமைப்பேன். கால்வாய்கள், கண்மாய்களைச் சீர்திருத்தி விவசாயத்திற்கு உதவி செய்வேன்.
54.
(i) மதுரைக்கருகில் 15 கி.மீ தொலைவில் கீழக்குயில்குடி கிராமத்தில் சமணர் மலை என்ற பெயரில் ஒரு குன்று உள்ளது. சமணத்துறவிகளால் உருவாக்கப்பட்ட தீர்ந்தங்கரர்களின் உருவங்கள் இம்மலையில் காணப்படுகின்றன. இது தொல்லியல் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்படும் நினைவு சின்னமாக உள்ளது.
(ii) அறவோர் பள்ளி என்பது சமணத் துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலையில் குறிப்பு உள்ளது.
தமிழகத்தின் பௌணத்தத்தின் செல்வாக்குக்கான சான்று
(i) சங்க காலத்திற்குப் பின்னர் இயற்றப்பட்ட இராடைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பௌத்த இலக்கியமாகும்.
(ii) காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஒரு பொௗத்த மையமாகும். பேௗத்த தாக்கவியல் அறிஞரான தினைகர் மற்றும் நாளந்தா பல்கலைக் கழகத்தின் மிகப்பெரும் அறிஞர் தாமபாலர் போன்றோர் இங்கு வாழ்ந்தார்கள்.
55.
| ஹூனயானம் | மகாயானம் |
| புத்தரின் சிலைகளையோ உருவப் படங்களையோ வணங்க மாட்டார்கள். | புத்தரின் உருவங்களை வணங்கினர். |
| மிக எளிமையாக இருப்பர். | விரிவான சடங்குகளைப் பின்பற்றினர். |
| தனிமனிதர்கள் முக்தி அடைவதே தங்களின் நோக்கம் என்று நம்பினர். | அனைத்து உயிரினங்களும் முக்தி பெறுவதே தங்களது நோக்கம் என நம்பினர். |
| பிராகிருத மொழியைப் பயன்படுத்தினர் |
சமஸ்கிரத மொழியைப் பயன்படுத்தினர். |
56.
வேதகால பெண்களின் நிலை :
(i) ரிக்வேதகால சமூகத்தில் பெண்கள் ஓரளவிற்கு சுதந்திரம் பெற்றிருந்தனர் ஆனால் பிற்கால வேதகாலத்தில் இது குறைந்துபோனது.
(ii) ரிக் வேதகாலத்தில் பெண்கள் தமது வீட்டில் சடங்குகளை நடத்தினர். ஆனால் பிற்கால வேதகாலத்தில்
சடங்குகளை நடத்தமுடியாத நிலை உருவானது.
(iii) ரிக்வேதகாலத்தில் கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்ளத் தடைகள் இல்லை. ஆனால் பிற்கால வேதகாலத்தில் கைம்பெண் மறுமணத்திற்கு ஊக்கம் அளிக்கப்படவில்லை.
(iv) சொத்துரிமை மற்றும் கல்வி பெண்களுக்கு மறுக்கப்பட்டது.
(v) பொது நிகழ்வுகளில் பெண்கள் எந்தப்பங்கும் வகிக்கவில்லை.
57.
தொல்லியல் ஆய்மிடம் கொடுமணல் :
(i) பதிற்றுப்பத்து என்னும் சங்ககால இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கொடுமணல் என்ற ஊர் இதுவென அடையாளப் படுத்தப்படுகிறது.
(ii) இங்கு தமிழ்பிராமி எழுத்துகளைக்கொண்ட முன்னூற்றுக்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
(iii) மேலும், நூல் சுற்றிவைக்கப்பயன்படும் சுழல் அச்சுகள், சுருள்கள். துணிகளின் சிறிய நுண்டுகள். கருவிகள், ஆயுதங்கள். அணிகலன்கள். மணிகள் முக்கியமாக சிவப்புநிற மணிக்கற்கள் ஆகியவற்றையும் தொல்லியல் ஆய்வு அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
(iv) புதைஞழி மேட்டிற்கு அருகே காணப்பட்ட நினைவுகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.
58.
(i) கல்வி கற்பதற்கான இடத்தினை பள்ளி என்றழைக்கிறோம்
(ii) இப்பள்ளிகள் காஞ்சி நகரில் தான் முதன் முதலில் ஏராளமாக அமைக்கப்பட்டன
(iii) சமணர் அமைத்த பள்ளிகளில் சமண மாணவர்களும், புத்த விகாரங்களில் புத்த மாணவர்களும் பயின்றனர்
(iv) நாளந்தப் பல்கலைக் கழகத்தில் பயின்ற சீன வரலாற்ற்றாசிரியர் யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காக காஞ்சியிலிருந்த கடிகைக்கு வந்திருக்கிறார்
(v) ''நகரங்களில் சிறந்தது காஞ்சி '' என்று கவிஞர் காளிதாசர் கூறுகிறார்
(vi) ''கல்வியில் கரையிலாத காஞ்சி'' என்று நாயன்மார்களுள் முதன்மையானவரான திருநாவுக்கரசர் காஞ்சி நகரைப் புகழ்ந்துள்ளார்.
(vii) மேலே கூறியுள்ளவற்றிலிருந்து காஞ்சிபுரம் கல்வியில் தலைசிறந்து விளங்கிய தென்பதை நிரூபிக்கலாம்
59.
(i) உலகின் மிகத்தொன்மையான நாகரிகம் மெசபடோமியா நாகரிகம்
(ii) இது 6500 ஆண்டுகளுக்கு முற்பட்டது
(iii) மெசபடோமியா நகரம் என்பதே தற்போதைய ஈராக் ஆகும்
60.
(i) இந்தியாவில் நில அமைப்பு. காலநிலை, இயற்கைத் தாவரம் மற்றும் மண் வகைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
(ii) மேலும் மொழி, இனம், மதம், சாதி, கலாச்சாரம் ஆகியவற்றிலும் இடத்திற்கு இடம் வேறுபாடுகள்
காணப்படுகின்றன.
(iii) நம்முடைய கலாச்சாரங்கள், கலை மற்றும் கட்டிடக்கலைகள், விழாக்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களிலும் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகிறது.
(iv) ஆனாலும் இந்திய மக்கள் யாவரும் பல்வேறு வேறுபாடுகளை உடையவர்களாக இருந்தாலும் தங்களை முதலில் இந்தியர்கள் என்று கூறுவதில் பெருமிதம் அடைகிறார்கள்.
(v) இத்தகைய உணர்வு எல்லா வேற்றுமைகளையும் களைந்து ஒற்றுமையுடன் வாழ வழி செய்கின்றது. இந்த சிறப்பம்சமே இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" காணும் நாடு என அழைக்கப்பட காரணமாகிறது.
61.
சாதி பாகுபாடு
பாலினப் பாகுபாடும்
மத பாகுபாடு
சாதி பாறுபாது:
(i) இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம் சாறிமுறை ஆகும்.
(ii) இந்தியாவில் சாதி ஒடுக்கு முறைக்கெதிராக பலரும் போராடி வருகின்றனர்.
(iii) இவர்களுக்குமுன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் ஆனார்.
(iv) இவர் இந்திய மக்களிடையே சமத்துவம் நிலவ பெரிதும் பாடுபட்டார்.
பாலினப் பாதயாறும் :
(i) பாலினப் பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல் நலம்.
கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றைக் குறிக்கிறது.
(ii) எடுத்துக்காட்டாக ஒரு பெண் பள்ளிப் படிப்பை முத்தடியின் கல்லூரிக்கு செல்ல அனுமதி இல்லை.
(iii) இன்னும் ஒரு சில குடும்பங்களில் பெண் பிள்ளைகள் நவீன ஆடைகளை அணிந்தி. அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால் அக்குடும்பத்தின் ஆண்பிள்ளையன் நவீன ஆடைகளை அணித்தி அனுமதிக்கப்படுகின்றனர். இதுவே பாகுபாடு ஆகும்.
62.
பசிபிக் பெருங்கடலின் சிறப்பம்சங்கள் :
(i) புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் ஆகும்.
(ii) இது புவியின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது.
(iii) இதன் பரப்பளவு சுமார் 168.72 மில்லியன் சதுர கிலோ மீட்டர் ஆகும்.
(iv) இப்பெருங்கடல் முக்கோண வடிவத்தில் காணப்படுகிறது.
(v) பேரிங் கடல், சீனக் கடல், ஜப்பான் கடல், தாஸ்மானியா கடல், பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவை பசிபிக் பெருங்கடலிலுள்ள எல்லையோரக் கடல்களாகும்.
(vi) இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஹவாய், நியூசிலாந்து உள்ளிட்ட பல தீவுகள் உள்ளன.
(vii) புவியின் ஆழமான பகுதியான மரியானா அகழி 10,994 மீ பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.
(viii) பசிபிக் பெருங்கடலைச் சுற்றி எரிமலைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளதால் பசிபிக் "நெருப்பு வளையம்” என அழைக்கப்படுகிறது.
63.
நிலத்தோற்றத்தின் வகைகள் :
முதல் நிலை ;
கண்டங்கள் - மிகப்பெரும் நிலப்பரப்பு ஆகும்.
பெருங்கடல்கள் - பெரும் நீர்ப்பரப்பு ஆகும்.
இரண்டாம் நிலை :
(i) மலைகள் - சுற்றுப் புற நிலப் பகுதியை விட 600 மீக்கு மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் மலைகளாகும்
(ii) பீப்பூமிகள் - சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீடபூமி ஆகும்.
(iii) சமவெளிகள் - சமமான மற்றும் தாழ்நிலத் தோற்றம் சமவெளி ஆகும்.
மூன்றாம் நிலை :
(i) ஆறுகள், பனியாறுகள், காற்று மற்றும் கடல் அலைகள் போன்றவற்றின் முக்கியச் செயல்கள் அரித்தல் மற்றும் படியவைத்தல் ஆகும்.
(ii) இச்செயல்களால் மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகளில் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள் மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.
64.
| பெருங்கடல் | கடல் |
|
பெரும் நீர்ப்பரப்பு, பெருங்கடல் எனப்படும். |
முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிலத்தால் சூழப்பட்ட பெரிய நீர்ப்பரப்பு கடல் எனப்படும். |
65.
புலியின் சுழலுதல் :
(i) புவி தன் அச்சில் தன்னைத் தானே சுற்றுவதைச் சுழலுதல் என்று கூறுகிறோம்.
(ii) புவி சுழலுவதன் காரணமாக இரவு, பகல் ஏற்படுகிறது.
(iii) புவி கோள வடிவமாக உள்ளதால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சூரிய வெளிச்சம் புவியின் ஒரு பகுதியில் மட்டுமே படுகிறது.
(iv) அப்பகுதிக்கு அது பகல் பொழுது ஆகும்,
(v) புவியின் ஒளி படாத பகுதி இரவாக இருக்கும்.
புவியின் சுற்றாதவ் :
(i) புவி தன் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வரும் நகர்வையே சுற்றுதல் என்று கூறுகிறோம்.
(ii) புவி சூரியனைச் சுற்றி வருவதால் பருவ காலங்கள் தோன்றுகின்றன.
66.
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards