6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 21/02/2019
3rd Term Full Study Material
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கீழ்க்காணும் கூற்றுகளை சிந்திக்கவும். அவற்றில் எது / எவை சரியானது/ சரியானவை என்பதைக் கண்டறியவும்.
1. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.
2. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி
1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு
2.
தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை
370
380
360
390
3.
ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?
1240 நிமிடங்கள்
1340 நிமிடங்கள்
1440 நிமிடங்கள்
1140 நிமிடங்கள்
4.
ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்தித்து அவற்றில் எவை சரியான கூற்றென்று கண்டறியவும்.
1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்திதுர்கா.
2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.
3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.
1 மட்டும் சரி
2, 3 சரி
1, 3 சரி
மூன்றும் சரி
5.
குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______
கனிஷ்கர்
முதலாம் கட்பிசஸ்
இரண்டாம் கட்பிசஸ்
பன்-சியாங்
6.
ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?
ஐஸ்லா ந்து
நெதர்லாந்து
போலந்து
சுவிட்சர்லா ந்து
7.
நிலநடுக்கோட்டுக் காலநிலை என்ப து
i) ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும்.
ii) சராசரி மழை யளவு 200மி.மீ ஆகும்.
iii) சராசரி வெ ப்பநிலை 10°C ஆகும்.
மேற்கண்ட கூற்றுகளில்
i மட்டும் சரி
ii மற்றும் iii சரி
i மற்றும் iii சரி
i மற்றும் ii சரி
8.
குறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?
கொள்ளையடித்தல்
ஆநிரை மேய்த்தல்
வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
வேளாண்மை
9.
பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ____________ அமைக்கப்படுகிறது.
ஊராட்சி ஒன்றியம்
மாவட்ட ஊராட்சி
வட்டம்
வருவாய் கிராமம்
10.
உலக மக்களாட்சி தினம்______ ஆகும்
செபப்டம்பர் 15
அக்டோபர் 15
நவம்பர் 15
டிசம்பர் 15
11.
புவியில் காணப்படும் நான்கு அரைக் கோளங்களின் பெயர்களைக் கூறுக.
12.
ஒரு நாளில் ஒரு தீர்க்க கோட்டுக்கு நேர், உச்சியில் சூரியன் எத்தனை முறை வரும்?
13.
சென்னை, கடலூர் மற்றும் காவிரி வடிநிலப் பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. காரணம் கூறு.
14.
இடி, மின்னல் - குறிப்பு வரைக
15.
காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.
16.
சிரெஸ்தி, சார்த்தவாகா வணிகர்களைக் குறித்து எழுதுக.
17.
மாநகராட்சியின் பணிகள் சிலவற்றைக் பட்டியலிடுக
18.
கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்ப டும் பிரதிநிதிகள் யாவர்?
19.
ஊரக உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
20.
நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகளாக நீ புரிந்து கொள்வன யாவை ?
21.
மக்களாட்சியின் வகைகள் யாவை?
22.
| பிரிகஸ்த்கதா எனும் நூலை இயற்றியவர் யார்? விடை: _______ |
இரண்டு அஸ்வமேத யாகங்கள் நடத்திய சாதவாகன அரசரின் பெயர் என்ன? விடை: _________ |
| சாதவாகனர்கள் எத்தனை ஆண்டுகள் தக்காணத்தை ஆண்டனர்? விடை: _________ |
சாகர் சகாப்தத்தை நிறுவியவர் யார்? விடை: _________ |
| காந்தாரக் கலைஞர்களின் விருப்பமான கலைப் பாணி எது? விடை: _________ |
கனிஷ்கர் நான்காவது பௌத்தப் பேரவையை கூட்டிய இடம் எது? விடை: ________ |
23.
| பழந்தமிழ்க் காப்பியங்கள் இரண்டினைக் குறிப்பிடுக விடை:______ |
அரசருக்கு உதவிய இரண்டு குழுக்களின் பெயர்களைக் குறிப்பிடுக . விடை: _______ |
சங்க காலத்து பெண்பாற் புலவர்கள் இருவரின் பெயர்களைக் கூறு. விடை:_______ |
| சங்க காலத்து மூன்று முக்கியத் துறைமுகங்களின் பெயர்களை எழுதுக . விடை: _______ |
முத்தமிழில் எவை எல்லாம் அடங்கும் ? விடை: _______ |
சிலப்பதிகாரம் ________ ஆல் எழுதப்பட்டது |
| எந்தப் பாண்டிய அரசனோடு தலையாலங்கானம் தொடர்புடையது? விடை : _________ |
எந்தத்தினை மென்புலம் என்றழைக்கப்பட்டது? விடை: ________ |
துறைமுகங்களில் இருந்த ஒளிவிளக்குக் கோபுரங்கள் _______ என அழைக்கப்பட்டன. |
24.
இந்தியாவின் திட்டநேரத்தைப் பற்றி விளக்குக
25.
முக்கிய அட்சக் கோடுகள் யாவை? அவற்றின் இடையே காணப்படும் மண்டலங்கள் பற்றி விளக்குக?
26.
வெள்ளம் என்றால் என்ன? வெள்ளத்தின் போது செய்யக்கூடியவை எவை?, செய்யக்கூடாதவை எவை?
27.
கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க.
28.
கோண்டோபரித் அரச வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?
29.
நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி – ஒப்பீடு செய்து, வேறுபாடுகளை அறியவும்
30.
ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் நிலவும் காலநிலை________
31.
குப்தர்களின் அலுவலக மொழி _______.
32.
பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு________
33.
கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்:
அ. கொற்கை ஆ. காவிரிப்பூம்பட்டினம் இ. முசிறி ஈ. உறையூர் உ. மதுரை
34.
0° தீர்க்கக்கோடு, கிரீன்விச் தீர்க்கக்கோடு என்று அழைக்கப்படுகிறது.
1.
(a)
1 மட்டும் சரி
2.
(c)
360
3.
(c)
1440 நிமிடங்கள்
4.
(d)
மூன்றும் சரி
5.
(a)
கனிஷ்கர்
6.
(a)
ஐஸ்லா ந்து
7.
(a)
i மட்டும் சரி
8.
(c)
வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
9.
(a)
ஊராட்சி ஒன்றியம்
10.
(a)
செபப்டம்பர் 15
11.
வடக்கு அரைக்கோளம், தென் அரைக்கோளம், கிழக்கு அரைக்கோளம், மேற்கு அரைக்கோளம்.
12.
ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கு நேராக ஒரு நாளில் ஒருமுறைதான் சூரியன் நேர் உச்சிக்கு வரமுடியும்.
13.
இவை புயல் உருவாகக் கூடிய வங்கக் கடல்பகுதியில் அமைந்துள்ளது.
வடகிழக்குப் பருவக்காற்றும் சுற்றவாளியும் இணைந்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்தல்.
i) அடைமழை
ii) ஆற்றின் கறைகளை மீறி ஆறு பாய்ந்து செல்லுதல்.
iii) ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிகமான மழைப்பொழிவு
iv) போதுமான பொறியியல் தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்படாத கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் தடுப்பணைகள்.
14.
வளிமண்டல காலநிலையினால் திடீரென்று தொடர்ச்சியாக மின்சாரம் வெளிப்படும் நிகழ்வு இடி ஆகும். இதனால் திடீர் ஒளியும், அதிரும் ஒளி அலைகளும் ஏற்படுகின்றது. இது மின்னல் என்றும் இடி என்றும் அழைக்கப்படுகிறது.
15.
காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள், சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசியும் என்பனவாகும். அவருடைய ஏனைய சிறப்புமிக்க நூல்கள் மேகதூதம், ரகுவம்சம், குமாரசம்பவம், ரிதுசம்காரம் ஆகியனவாகும்.
16.
சிரெஸ்தி: சிரெஸ்தி பிரிவைச் சார்ந்த வணிகர்களை ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள் ஆவர்.
சார்த்தவாகா: சார்த்தவாகா வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள்.
17.
1. குடிநீர் வசதி
2. தெருவிளக்கு அமைத்தல்
3. தூய்மைப் பணி
4. மருத்துவச் சேவை
5. சாலைகள் அமைத்தல்
6. மேம்பாலங்கள் அமைத்தல்.
18.
1. ஊராட்சி மன்றத் தலைவர்
2. பகுதி உறுப்பினர்கள்
3. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்.
4. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்.
19.
(i) ஊராட்சி,
(ii) ஊராட்சி ஒன்றியம்,
(iii) மாவட்ட ஊராட்சி.
20.
(i) அரசு நிறுவனங்களின் வடிவமைப்பு. அவை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், அவற்றின் அதிகாரம்நிறுவனங்களின் வடிவமைப்பு, அவை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், அவற்றின் அதிகாரம் மற்றும் கடமைகளை விளக்குகிறது.
(ii) மேலும், குடிமக்களுக்கான உரிமைகள், கடமைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளையும் நிர்ணயம் செய்துள்ளது.
21.
நேரடி மக்களாட்சி,
பிரதிநிதித்துவ மக்களாட்சி.
22.
| பிரிகஸ்த்கதா எனும் நூலை இயற்றியவர் யார்? விடை: குணாதியா |
இரண்டு அஸ்வமேத யாகங்கள் நடத்திய சாதவாகன அரசரின் பெயர் என்ன? விடை: சதகர்னி |
| சாதவாகனர்கள் எத்தனை ஆண்டுகள் தக்காணத்தை ஆண்டனர்? விடை: 450 ஆண்டுகள் |
சாகர் சகாப்தத்தை நிறுவியவர் யார்? விடை: கனிஷ்கர் |
| காந்தாரக் கலைஞர்களின் விருப்பமான கலைப் பாணி எது? விடை: புத்தரின் சிலைகளை செதுக்குவது |
கனிஷ்கர் நான்காவது பௌத்தப் பேரவையைக் கூட்டிய இடம் எது? விடை: ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள குந்தலவனம். |
23.
| சிலப்பதிகாரம் & மணிமேகலை |
ஐம்பெருங்குழு , எண்பேராயம் |
அவ்வையார், பொன்முடியார் |
| தொண்டி, முசிறி, புகார், கொற்கை |
இயல், இசை, நாடகம் |
இளங்கோவடிகள் |
| நெடுஞ்செழியன் | மருத நிலம் | கலங்கரை இலங்குசுடர் |
24.
இந்தியாவின் தீர்க்கக் கோடுகளின் பரவல் 680 7' கிழக்கு முதல் 970 25' கிழக்கு வரை உள்ளது. இதனடிப்படையில், சுமார் 29 தீர்க்கக்கோடுகள் இந்தியாவின் வழியே செல்கின்றன. ஆகவே, இந்தியாவிற்கு 29 திட்டநேரங்கள் கணக்கிடுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது. எனவே, இந்தியாவின் மையத்தில் செல்லும் 82 \(\frac { 1 }{ 2 }\)0 கிழக்கு தீர்க்கக்கோட்டினை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்டநேரம் IST (Indian standard time) கணக்கிடப்படுகிறது.

25.
புவி தனது அச்சில் 23 \(\frac { 1 }{ 2 }\)0 சாய்ந்து நிலையில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகின்றது. அவ்வாறு சுற்றி வரும்போது சூரியக்கதிர்கள் புவியில் விழுகின்ற கோணத்தின் அடிப்படையில், கீழ்க்கண்ட அட்சக்கோடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவைகள்,

00 அட்ச கோட்டிலிருந்து 23 \(\frac { 1 }{ 2 }\)0 வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் 'தாழ் அட்சக்கோடுகள் - லோ Latitudes எனவும்.
23 \(\frac { 1 }{ 2 }\)0 வடக்கு முதல் 66 \(\frac { 1 }{ 2 }\)0 வடக்கு வரையிலும், 23 \(\frac { 1 }{ 2 }\)0 தெற்கு முதல் 66 \(\frac { 1 }{ 2 }\)0 தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் 'மத்திய அட்சக் கோடுகள்' Middle Lattitudes எனவும்.
66 \(\frac { 1 }{ 2 }\)0 வடக்கு முதல் 900 வடக்கு வரியிலும், 66 \(\frac { 1 }{ 2 }\)0 தெற்கு முதல் 900 தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக் கோடுகள் 'உயர் அட்சக்கோடுகள்' High Lattitudes, எனவும் அழைக்கப்படுகின்றன.
புவி சூரியனிடமிருந்து பெறுகின்ற வெப்பத்தின் அடிப்படையில் பல மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. இஃது அட்சக்கோடுகளின் அடிப்படையில் பல காலநிலை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வெப்பமண்டலம் (Torrid Zone)
நிலநடுக்கோட்டிலிருந்து (00) வடக்கில் கடகரேகை (23 \(\frac { 1 }{ 2 }\)0 வ) வரை மற்றும் தெற்கில் மகரரேகை (23 \(\frac { 1 }{ 2 }\)0 தெ) வரை சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழுவதால் இப்பகுதி அதிக வெப்பமடைகிறது. இதனால் புவியின் மற்ற பகுதிகளை விட இங்கு அதிக வெப்பநிலை நிலவுகிறது. எனவே, இப்பகுதி 'வெப்பமண்டலம், என அழைக்கப்படுகிறது.
மித வெப்பமண்டலம் (Temperate Zone)
வட அரைக்கோளம் கடகரேகை (23 \(\frac { 1 }{ 2 }\)0 வ) முதல் ஆர்க்டிக் வட்டம் (66 \(\frac { 1 }{ 2 }\)0 வ) வரையிலும், தென் அரைக்கோளம் (23 \(\frac { 1 }{ 2 }\)0 தெ) மகரரேகை முதல் (66 \(\frac { 1 }{ 2 }\)0 தெ) அண்டார்டிக் வட்டம் வரைந்துள்ள பகுதிகளில் சூரியக்கதிர்கள் சாய்வாக விழுவதால் இங்கு மிதமான வெப்பநிலை நிலவுகிறது. எனவே இப்பகுதி 'மித வெப்பமண்டலம்' என்று அழைக்கப்படுகிறது.
குளிர் மண்டலம் (Frigid Zone)
வட அரைக்கோளம் ஆர்க்டிக் வட்டம் (66 \(\frac { 1 }{ 2 }\)0 வ) முதல் வடதுருவம் (900 வ) வரியிலும், தென் அரைக்கோளம் அண்டார்டிக் வட்டம் (66 \(\frac { 1 }{ 2 }\)0 தெ) முதல் தென்துருவம் (900 தெ) வரையுள்ள பகுதிகளில் சூரியக் கதிர்கள் ஆண்டு முழுவதும் மிகவும் சாய்ந்து நிலையில் விழுவதால், இங்கு மிக மிக குறைவான வெப்பநிலை நிலவுகிறது. எனவே இப்பகுதி "குளிர்மண்டலம்" என அழைக்கப்படுகிறது.
26.
அளவுக்கு அதிகாமாக வழிந்தோடும் நீரையே வெள்ளப்பெருக்கு என்கிறோம். இஃது அவற்றின் கறைகளை அல்லது சிற்றாறுகளின் கறைகளைக் கடந்து வழிந்தோடிப் பள்ளமான பகுதிகளை மூழ்கடிக்கின்றது.
வெள்ளத்தின் போது செய்யக் கூடாதவை
1. துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை உடனே இணைத்தல்க் கூடாது.
2. வண்டிகளை இயக்குதல் கூடாது.
3. வெள்ளத்தில் நீந்த முயற்சித்தல் கூடாது.
4. வெள்ளப் பெருக்கு காலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.
5. வெள்ளப் பெருக்கு எச்சரிக்கையை அலட்சியப்படுத்துதல் கூடாது.
வெள்ளப் பெருக்கின் போது செய்ய வேண்டியவை
1. மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பினைத் துண்டிக்க வேண்டும்.
2. கழிப்பிடத் துளை மீதும், கழிவுநீர் வெளியேறும் துளை மீதும் மணல் மூட்டைகளை வைக்க வேண்டும்.
3. பரிந்துரைக்கப்பட்ட அல்லது நன்கு தெரிந்த பாதையில் உடனடியாக வெளியேற வேண்டும்.
4. குடிநீரைக் காய்ச்சிக் குடித்தல் வேண்டும்.
5. பிளிச்சீங் பவுடர் கொண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
6. எரிவாயுக் கசிவு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே, தீக்குச்சி மற்றும் மெழுகுவர்த்தியைப் பயன்படுத்த வேண்டும்.
7. வயிற்றுப் போக்கு இருந்தால் அதிக அளவில் உணவு உண்ணக் கூடாது.
27.
பல்லவர் காலம் கட்டடக்கலைச் சிறப்புகளுக்குப் பெயர் பெற்ற காலமாகும். மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட கடற்கரைக் கோவிலும், ஏனைய கோவில்களும், வராகர் குகையும் (ஏழாம் நூற்றாண்டு) பல்லவக் கட்டடக்கலையின் ஈடு இணையற்ற அழகிற்கு எடுத்துக்காட்டுகளாகும். 1984ஆம் ஆண்டு யூனஸ்கோவின் உலகப் பாரம்பரியம்ச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது. பல்லவர் கட்டடக் கலையை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்.
அ) பாறைக் குடைவரைக் கோவில்கள் -மகேந்திரவர்மன் பாணி
ஆ) ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் - மாமல்லன் பாணி
இ) கட்டுமானக் கோவில்கள் - ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி
28.
இந்தோ -பார்த்திய அரசு அல்லது கோண்டோபரித் வம்சம் கோண்டோ பெர்னஸால் நிறுவப்பட்டது. இந்தோ -பார்த்தியார் ஆட்சி செய்த பகுதி காபூல், காந்தாரா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கோண்டோ பெர்னெஸ் எனும் பெயர் கிருஸ்துவ உபதேசியார் புனித தாமஸிடம் தொடர்புடையதாகும். கிருஸ்துவ மரபின்படி, புனித தாமஸ், கோண்டோ பெர்னெஸின் அரசவைக்கு வந்து கிருத்துவத்திற்கு அவரை மதம் மாற்றினார்.
29.
| நேரடி மக்களாட்சி | பிரதிநிதித்துவ மக்களாட்சி |
|
நேரடி மக்களாட்சியில் மக்களே சட்டங்களை |
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டங்களை |
|
அனைத்து சட்டதிருத்தங்களையும் மக்களே |
பிரதிநிதிகள் அடங்கிய மன்றங்கள் கூடி சட்டதிருத்தங்களை ஏற்படுத்துவர். |
|
நாடாளுமன்ற செயல் முறைகளின் படி ஆட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள் மூலம் ஆட்சி நடைபெறும். |
30.
( )
கண்ட காலநிலை
31.
( )
சமஸ்கிருதம்
32.
( )
1992
33.

34.
00 தீர்க்கக்கோடு கிரீன்விச் வழியே செல்வதால் 'கிரீன்விச் தீர்க்கக்கோடு' (Greenwich Meridian) எனவும் அழைக்கப்படுகிறது.
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards