6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/01/2019
Term 3- History Full Material
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?
அய்கோல்
சாரநாத்
சாஞ்சி
ஜுனாகத்
2.
கீழ்க்காண்பனவனுற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்கள் யாவை?
மத்தவிலாசன்
விசித்திரசித்தன்
குணபாரன்
இவை மூன்றும்
3.
கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?
இரண்டாம் நரசிம்மவர்மன்
இரண்டாம் நந்திவர்மன்
தந்திவர்மன்
பரமேஸ்வரவர்மன்
4.
சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.
சிர்கப்
தட்சசீலம்
மதுரா
புருஷபுரம்
5.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.
தக்காணம்
வடமேற்கு இந்தியா
பஞ்சாப்
கங்கைப் பள்ளத்தாக்கு சமவெளி
6.
குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______
கனிஷ்கர்
முதலாம் கட்பிசஸ்
இரண்டாம் கட்பிசஸ்
பன்-சியாங்
7.
சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்____
சிமுகா
சதகர்ணி
கன்கர்
சிவாஸ்வதி
8.
கடைசி மெளரிய அரசரைக் கொன்றவர் ________
புஷ்யமித்ரர்
அக்னிமித்ரர்
வாசுதேவர்
நாராயணர்
9.
குறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?
கொள்ளையடித்தல்
ஆநிரை மேய்த்தல்
வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
வேளாண்மை
10.
சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.
மண்டலம்
நாடு
ஊர்
பட்டினம்
11.
பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்குப் வந்தோர் ________________ ஆவர்.
சாதவாகனர்கள்
சோழர்கள்
களப்பிரர்கள்
பல்லவர்கள்
12.
கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை
பாண்டியர்
சோழர்
பல்லவர்
சேரர்
13.
தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________________
பாண்டியன் நெடுஞ்செழியன்
சேரன் செங்குட்டுவன்
இளங்கோ அடிகள்
முடத்திருமாறன்
14.
பழைமையும் புகழும்மிக்க அஜந்தாவிலுள்ளள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?
குகைச் சுவர்களில்
கோவில்களின் விதானங்களில்
பாறைகளில்
பாப்பிரஸ் இலைகளில்
15.
குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது -
நாட்டில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததை
தங்க வேலை செய்யும் திறனை மக்கள் பெற்றிருந்ததை
அரசாட்சி செழிப்பாக இருந்ததை
மன்னர்களின் ஆடம்பர இயல்பை
16.
அ. மிகிரகுலா - 1. வானியல்
ஆ. ஆரிய பட்டர் - 2. குமாரகுப்தர்
இ. ஓவியம் - 3. ஸ்கந்தகுப்தர்
ஈ. நாளந்தா பல்கலைக்கழகம் - 4. இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்கள்
உ. சார்த்தவாகர்கள் - 5. பாக்
1, 2, 4, 3, 5
2, 4, 1, 3, 5
3, 1, 5, 2, 4
3, 2, 1, 4, 5
17.
வங்காளத்தின் கெளட அரசர் _______
சசாங்கர்
மைத்திரகர்
ராஜ வர்த்தனர்
இரண்டாம் புலிகேசி
18.
அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் ____
சரகர்
கஸ்ருதர்
தன்வந்திரி
அக்னிவாசர்
19.
பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ________ ஆவார்
காளிதாசர்
அமரசிம்மர்
ஹரிசேனர்
தன்வந்திரி
20.
குப்த வம்சத்தை நிறுவியவர் ________ ஆவார்.
முதலாம் சந்திரகுப்தர்
ஸ்ரீ குப்தர்
விஷ்ணு கோபர்
விஷ்ணுகுப்தர்
21.
_______, _______ ஆகிய இடங்களில் உள்ள இசைக் கல்வெட்டுக்கள் பல்லவர்களின் இசையார்வத்தை உணர்த்துகின்றன.
22.
______ முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதியாவார்.
23.
அய்கோல் கல்வெட்டின் ஆசிரியர் ________ஆவார்.
24.
_______ வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக்கொண்டார்
25.
_______ ஹர்ஷவர்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார்.
26.
குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் ________ ஆகும்.
27.
________ கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.
28.
ஹாலா எழுதிய, நூலின் பெயர் ________
29.
இந்தோ-பார்த்திய அரசை நிறுவியவர் ________
30.
நில வரி ____________ என அழைக்கப்பட்டப்பட்டது.
31.
காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ____________ கட்டினார்.
32.
சங்க காலத்து மிகப்பழமைகப்பழமையான தமிழ் இலக்கண நூல் ____________.
33.
வெண்ணி போரில் வெற்றி பெற்றது ____________.
34.
ஹர்ஷர் தலைநகரை _______லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
35.
வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ______ஆவார்.
36.
பல்லவ அரசர் _______ சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.
37.
குப்தர்களின் அலுவலக மொழி _______.
38.
______ அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது.
39.
_______ படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிககோலியது.
40.
இலங்கை அரசர் ______ சமுத்திர குப்தரின் சமகாலத்தவர் ஆவார்.
41.
கல்யாணி மேலைச் சாளுக்கியர் குறித்து எழுதுக.
42.
எலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறுகுறிப்பு வரைக.
43.
கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க.
44.
மெளரியருக்குப் பின்வந்த காலத்தில் தென்னிந்தியாவில் வணிக-வர்த்தக நிலை குறித்து எழுதவும்.
45.
காந்தாரக் கலைப்பள்ளியின் முக்கியத்துவத்தை எழுதவும்.
46.
கனிஷ்கருடைய மதக் கொள்கை பற்றி எழுதுக.
47.
சாகர்கள் யார்?
48.
இந்தோ-கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர் யார்? ஏன்?
49.
கோண்டோபரித் அரச வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?
50.
கெளதமிபுத்திர சதகர்ணியைப் பற்றிக் குறிப்பெப்பெழுதுக.
51.
புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.
52.
மெளரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்?
53.
களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக
54.
கரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்பப்படுகிறான்: நிறுவுக
55.
சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்
1.
(a)
அய்கோல்
2.
(d)
இவை மூன்றும்
3.
(b)
இரண்டாம் நந்திவர்மன்
4.
(a)
சிர்கப்
5.
(a)
தக்காணம்
6.
(a)
கனிஷ்கர்
7.
(a)
சிமுகா
8.
(a)
புஷ்யமித்ரர்
9.
(c)
வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
10.
(c)
ஊர்
11.
(c)
களப்பிரர்கள்
12.
(c)
பல்லவர்
13.
(b)
சேரன் செங்குட்டுவன்
14.
(a)
குகைச் சுவர்களில்
15.
(c)
அரசாட்சி செழிப்பாக இருந்ததை
16.
(b)
2, 4, 1, 3, 5
17.
(a)
சசாங்கர்
18.
(b)
கஸ்ருதர்
19.
(c)
ஹரிசேனர்
20.
(b)
ஸ்ரீ குப்தர்
21.
( )
குடுமியான்மலை, திருமயம்
22.
( )
பரஞ்ஜோதி
23.
( )
ரவிகீர்த்தி
24.
( )
முதலாம் நரசிம்மவர்மன்
25.
( )
இரண்டாம் புலிகேசி
26.
( )
பெஷாவர் (புருஷபுரம்)
27.
( )
சுசர்மன்
28.
( )
சட்டசாய் (சப்தசதி)
29.
( )
கோண்டோ பெர்னஸ்
30.
( )
இறை
31.
( )
கரிகாலன்
32.
( )
தொல்காப்பியம்
33.
( )
கரிகாலன்
34.
( )
தானேஸ்வரி
35.
( )
ஹர்ஷர்
36.
( )
விஷ்ணுகோபன்
37.
( )
சமஸ்கிருதம்
38.
( )
நிலவரி
39.
( )
ஹுனர்கள்
40.
( )
ஸ்ரீமேகவர்மன்
41.
கல்யாணி மேலைச் சாளுக்கியர்கள் வாதாபிச் சாளுக்கியரின் வழித்தோன்றல்கள் ஆவர். கல்யாணியைத் (தற்போதைய பசவ கல்யாண்) தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இரண்டாம் தைலப்பர் என்பவர் ராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக பிஜப்பூர் பகுதியை ஆண்டு வந்தார் இவர் கி.பி. 973இல் மாளவ அரசர் பராமரரைத் தோற்கடித்து கல்யாணியைக் கைப்பற்றினார். இவருடைய வம்சம் முதலாம் சோமேஸ்வரனின் ஆட்சியின் போது பேரரசாக வேகமாக வளர்ச்சி பெற்றது. முதலாம் சோமேஸ்வரர் தலைநகரை மன்யகேட்டாவிலிருந்து கல்யாணிக்கு மாற்றினார்.
42.
எல்லோரா: எல்லோராவின் குன்றுப்பகுதியில் அமைந்துள்ள முப்பது குடைவரைக் கோவில்களில் கைலாசநாதர் கோவிலும் ஒன்று. முதலாம் கிருஷ்ணருடைய ஆட்சிக் காலத்தில் இக்கோவில் உருவாக்கப்பட்டது. இக்கோவில் அதன் கட்டடக்கலை பிரமாண்டத்திற்கும் சிற்பங்களின் அற்புதங்களுக்கும் பெயர் பெற்றதாகும். இக்கோவில் 60,000 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதனுடைய விமானத்தின் (கோபுரம்) உயரம் 90 அடிகளாகும். இக்கோவில் மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலின் சாயலைப் பெற்றுள்ளது. கைலாசநாதர் கோவில் திராவிடக் கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்டுள்ளது.
எலிபெண்டா தீவு: இத்தீவின் இயற்பெயர் ஸ்ரீபுரி. உள்ளூர் மக்களால் காரபூரி என்று அழைக்கப்படுகிறது. எலிபெண்டா மும்பைக்கு அருகிலுள்ள ஒரு தீவு ஆகும். இத்தீவிலுள்ள பெரிய யானையின் உருவத்தைக் கண்ணுற்ற போர்த்துக்கீசியர்கள். இத்தீவுக்கு எலிபெண்டா தீவு எனப் பெயரிட்டனர். எலிபெண்டா குகையிலுள்ள திரிமூர்த்தி (மூன்று முகங்கள் கொண்ட) சிவன் சிலையின் வனப்பு ஈடு இணையற்றதாகும். கோவிலின் நுழைவாயிலில் காணப்படும் துவாரபாலகர்களின் சிலைகள் நமது கண்ணையும் கருத்தையும் கவர்பவை.
43.
பல்லவர் காலம் கட்டடக்கலைச் சிறப்புகளுக்குப் பெயர் பெற்ற காலமாகும். மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட கடற்கரைக் கோவிலும், ஏனைய கோவில்களும், வராகர் குகையும் (ஏழாம் நூற்றாண்டு) பல்லவக் கட்டடக்கலையின் ஈடு இணையற்ற அழகிற்கு எடுத்துக்காட்டுகளாகும். 1984ஆம் ஆண்டு யூனஸ்கோவின் உலகப் பாரம்பரியம்ச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது. பல்லவர் கட்டடக் கலையை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்.
அ) பாறைக் குடைவரைக் கோவில்கள் -மகேந்திரவர்மன் பாணி
ஆ) ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் - மாமல்லன் பாணி
இ) கட்டுமானக் கோவில்கள் - ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி
44.
i) சாதவாகனர்கள் ஆட்சிக்காலத்தில் வாணிகமும், தொழிலும் வளர்ச்சியடைந்தன.
ii) வணிகர்கள் தங்களது வாணிபத்தைப் பெருக்குவதற்காக வணிகக் குழுக்களை அமைத்துக் கொண்டனர்.
iii) குயவர்கள், நெசவுத் தொழில் செய்வோர், எண்ணெய் உற்பத்தியாளர்கள் போன்ற கைவினைஞர்களும் கழகங்களை ஏற்படுத்திக் கொண்டனர்.
iv) கர்ஷபணம் என்றழைக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட்டன.
v) சாதவாகனர்கள் காலத்தில் அயல்நாட்டு வர்த்தகமும் நன்கு செழித்தது.
vi) தக்காணத்திலிருந்து பல்வேறு துறைமுகங்கள் பற்றி டாலமி குறிப்பிட்டுள்ளார்.
vii) மேற்கு தக்காணத்திலிருந்த கல்யாண் சாதவானர்களின் மிகப்பெரிய துறைமுகமாகும்.
viii) கிழக்குக் கடற்கரையிலிருந்த கண்டகசேலா, கஞ்சம் என்ற துறைமுகங்களும் சிறப்பு வாய்ந்தவை.
45.
இந்தியாவின் காந்தாரக் கலைப்பள்ளி கிரேக்கர்களின் சிற்பக் கலைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள். மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர். அதன் மூலம் குடைவரைச் சிறிய கட்டடக்கலையில் சிறப்புத்திறன் பெற்றவராயினர்.
கனிஷ்கருடைய காலத்தில் காந்தாரக் கலைப்பள்ளி செழித்தோங்கியது. புத்தரின் சிலைகளைச் செதுக்குவது காந்தாரக் கலைஞர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.
46.
கனிஷ்கர் ஒரு தீவிர பௌத்தராவார். கனிஷ்கரின் பேரரசு ஒரு பௌத்தப் பேரரசு. பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த பௌத்தகத் துறவியான அஸ்வகோஷர் என்பவரின் போதனைகளால் அவர் பௌத்தத்தைத் தழுவினார். கனிஷ்கர் மாபெரும் வீரராகவும் பேரரசை உருவாக்கியவராகவும் இருந்த போதிலும் அதே அளவிற்கு மகாயான பௌத்தத்தை ஆதிரிப்பவராகவும் அதை தீவிரமாக முன்னெடுத்துச் செல்பவருமாக விளங்கினார். கனிஷ்கர் பௌத்தத்தை அரச மதமாக்கினார். மேலும் பல ஸ்தூபிகளையும் மடாலயங்களையும் மதுரா, தட்ச சீலம் மற்றும் மத்திய ஆசியாவின் பலநாடுகளுக்கும் அனுப்பி வைத்தார். பௌத்தமதப் பிரிவுகளிடையே நிலவிய கருத்துவேற்பாடுகளைக் களைவதற்காக நான்காவது பௌத்தப் பேரவையை ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள குந்தல வனத்தில் கூட்டினார். இப்பேரவையில் தான் மகாயானம் எனப் பௌத்தம் பிளவுற்றது.
47.
இந்தியாவில் இந்தோ -கிரேக்கரின் ஆட்சிக்கு சாகர் முற்றுப்புள்ளி வைத்தனர். நாடோடி இனத்தவரான இவர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர். இவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினருக்கு எதிரானவர்கள். சாகர்கள் பண்டைய நாடோடி இன ஈரானிய சித்தியார் ஆவர். சம்ஸ்கிருத மொழியில் இவர்கள் சாகர்கள் என அறியப்பட்டனர்.
48.
மினான்டர்: இவர் நன்கறியப்பட்ட இந்தோ - கிரேக்க அரசர்களில் ஒருவராவார். வடமேற்குப் பகுதியில் பெரியதொரு அரசை இவர் ஆண்டதாகக் கூறப்படுகிறது. இவர் வெளியிடப்பட்ட நாணயங்கள் பறந்து விரிந்து பகுதியில் கிடைக்கின்றன. காபூல் பள்ளத்தாக்கில் தொடங்கி சிந்து நதி கடந்து மேற்கு உத்திரப் பிரதேசம் வரையிலான பகுதிகளில் கிடைக்கின்றன.
49.
இந்தோ -பார்த்திய அரசு அல்லது கோண்டோபரித் வம்சம் கோண்டோ பெர்னஸால் நிறுவப்பட்டது. இந்தோ -பார்த்தியார் ஆட்சி செய்த பகுதி காபூல், காந்தாரா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கோண்டோ பெர்னெஸ் எனும் பெயர் கிருஸ்துவ உபதேசியார் புனித தாமஸிடம் தொடர்புடையதாகும். கிருஸ்துவ மரபின்படி, புனித தாமஸ், கோண்டோ பெர்னெஸின் அரசவைக்கு வந்து கிருத்துவத்திற்கு அவரை மதம் மாற்றினார்.
50.
சாதவாகன அரச குடும்பத்தன் மாபெரும் மன்னர் கௌதமிபுத்திர சதகர்னியாவார். இவரது அன்னை கௌதமி பாலஸ்ரீயால் வெளியிடப்பட்ட நாசிக் மெய்க்கீர்த்தியில் (பிரசஸ்தியில்) இவர் சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்து ஒழித்தார் எனக் கூறப்பட்டுள்ளது. பேரரசின் எல்லைகளும் இம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்களின் பேரரசு மஹாராஷ்டிரா, வடக்கு கொங்கன், பெரார், குஜராத், கத்தியவார், மாளவம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. கப்பலின் வடிவம் பொறிக்கப்பட்ட இவருடைய நாணயங்கள் ஆந்திரர்கள் கடல்சார் நடவடிக்கைகளில் பெற்றிருந்த திறன்களையும், அவர்களது கப்பற்படை வலிமையையும் உணர்த்துகின்றன.
51.
பாக்டீரியாவின் அரசன் மினான்டரின் படையைப் புஷ்யமித்ரர் வெற்றிகரமாக முறியடித்தார். மேலும் விதர்பாவையும் அவர் கைப்பற்றினார்.
52.
வடமேற்கிலிருந்து சாகர்கள், சித்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ - கிரேக்கர்கள் அல்லது பாக்டீரியா - கிரேக்கர்கள், குஷாணார்கள் போன்றோர் இந்தியாவின் மீது படையெடுத்தனர்.
53.
களப்பிரர்கள் தமிழகத்தைக் கைப்பற்றி இரண்டரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். களப்பிரர்களைப் பற்றி அறிய நமக்கு குறைவான குறிப்புகளே கிடைத்து உள்ளன. அவர்கள் விட்டுச் சென்ற நினைவுச் சின்னங்கள், தொல்கலைப் பொருட்கள் என எதுவுமில்லை. ஆனால் அவர்களின் ஆட்சி குறித்து இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. இலக்கியச் சான்றுகள், தமிழ் நாவலர் சரிதை, யாப்பெருங்கலம், பெரியபுராணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். சீவக சிந்தாமணி, குண்டலகேசி ஆகிய இரண்டும் இக்காலத்தில் எழுதப்பட்டவைகளாகும். தமிழகத்தில் பௌத்தமும், சமணமும் முக்கியத்துவம் பெற்ற காலம் அது. சமஸ்கிரதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் வட்டெழுத்து என்னும் புதிய எழுத்துமுறை உருவானது. பதினெண்கீழ்கணக்கைச் சேர்ந்த பல நூல்கள் இயற்றப்பட்டன. இக்காலத்தில் வணிகமும் வர்த்தகமும் தொடர்ந்து செழித்தோங்கின. எனவே களப்பிரர் காலமானது பொதுவாகச் சித்திரிக்கப்பட்டதைப் போன்று இருந்த காலம் அல்ல.
54.
சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் கரிகால வளவன் அல்லது கரிகாலன் ஆவார். அவர் தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த பதினொன்று வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையைத் தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றுரில் தோற்கடித்தார். அவர் காடுகளை விளைநிலங்களாக மாற்றினார். வேளாண்மையை மேம்படுத்துவதற்காகக் காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டினார். பட்டினப்பாலை எனும் பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல், கரிகாலனின் ஆட்சியில் போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்குகிறது.
55.
சமூக வாழ்வில் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. கற்றறிந்த, அறிவுக் கூர்மையுடைய பெண்கள் இருந்தனர். நாற்பது பெண் புலவர்கள் வாழ்வது அறிய நூல்களை கொடுத்துச் சென்றுள்ளனர். திருமணம் சொந்த விருப்பத்தை சார்ந்து அமைந்திருந்தது. இருந்தபோதிலும் 'கற்பு' பெண்களின் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்பட்டது. பெற்றோரின் சொத்துக்களில் மகனும், மகளும் சமமான பங்கைப் பெற்றுத்தனர்.
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards