12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 11/07/2019
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
மிக அதிக அளவிலான நாட்டு வருமானம் _______ லிருந்து வருகிறது.
தனியார் துறை
உள்துறை
பொதுத் துறை
எதுவும் இல்லை
2.
பணவீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட நாட்டு வருவாயின் மதிப்பு ______ என அழைக்கப்படுகிறது.
பணவீக்க வீதம்
செலவிடக்கூடிய வருமானம்
GNP
உண்மை நாட்டு வருமானம்
3.
NNP யிலிருந்து வெளிநாட்டு காரணிகளின் நிகர வருமானம் கழிக்கப்பட்டால் கிடைக்கும் நிகர மதிப்பு _________
மொத்த தேசிய உற்பத்தி
செலவிடக்கூடிய வருமானம்
நிகர உள்நாட்டு உற்பத்தி
தனிநபர் வருமானம்
4.
________ ஆல் நாட்டு வருமானத்தை வகுத்தால் தலைவீத வருமானம் கண்டறியலாம்
உற்பத்தி
நாட்டின் மக்கள் தொகை
செலவு
GNP
5.
உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP
நாட்டு வருமானம்
உள்நாட்டு வருமானம்
தலை வீத வருமானம்
சம்பளம்
6.
GDP குறைப்பான் இலக்கணம் தருக
7.
NNP க்கும் NDP க்கும் உள்ள வேறுபாடு யாது?
8.
நாட்டு வருமானம் இலக்கணம் கூறுக.
9.
நாட்டு வருமானத்தைக் கணக்கிடுதலின் பயன்களைப் பட்டியலிடுக.
10.
செலவுமுறை பற்றி ஒரு சிறு குறிப்பு தருக.
11.
12.
பொருளாதார ஆய்வில், சமூகக் கணக்கிடுதலின் அவசியத்தை விவாதி.
13.
நாட்டு வருமானத்தின் முக்கியத்துவத்தை விவரி.
1.
(a)
தனியார் துறை
2.
(d)
உண்மை நாட்டு வருமானம்
3.
(c)
நிகர உள்நாட்டு உற்பத்தி
4.
(b)
நாட்டின் மக்கள் தொகை
5.
(a)
நாட்டு வருமானம்
6.
GDP குறைப்பான் என்பது GDP யில் காணப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் விலைமாற்ற குறியீட்டெண் ஆகும்.
7.
| NNP நிகர நாட்டு உற்பத்தி | NDP நிகர உள்நாட்டு உற்பத்தி |
| நிகர நாட்டு உற்பத்தி என்பது ஒரு ஆண்டின், பொருளாதாரத்தின் நிகர உற்பத்தியின் மதிப்பு ஆகும். | நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் ஏற்படும் தேய்மானத்தைக் கழித்த பிறகு கிடைக்கும் நிகர உற்பத்தி ஆகும். |
| NNP = GNP - தேய்மான கழிவு | நிகர உள்நாட்டு உற்பத்தி = GDP - தேய்மானம். |
8.
"ஒரு நாட்டில் உள்ள உழைப்பும் முதலும் சேர்ந்து அங்குள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்தி பண்டங்கள், பணிகளை உற்பத்தி செய்கின்றன. இதுவே அந்நாட்டின் நிகர ஆண்டு வருமானம், நாட்டு வருமானம் அல்லது நாட்டு ஈவுத் தொகை ஆகும்." என்று ஆல்ஃபிரட் மார்ஷல் கூறுகிறார்.
9.
நாட்டு வருமானத்தைக் கணக்கிடுதலின் பயன்கள் :
1. ஒரு நாட்டின் பொருளாதார செயல்திறன் அல்லது உற்பத்தி செயல்திறனை நாட்டு வருமானம் விளக்குகிறது. பொருளாதார வல்லுநர்கள், திட்டமிடுபவர்கள், அரசு, வணிகர்கள், IMF, உலகவங்கி முதலான பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டு வருமானம் பற்றிய புள்ளி விவரத்தைப் பயன்படுத்துகின்றன.
2. நாட்டின் பல்வேறு நோக்கங்களுக்காக இந்தப் புள்ளி விவரங்களைப் பகுத்தாய்வு செய்கின்றன.
3. மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகரித்துள்ளதா என்பதைக் கண்டறிய நாட்டு வருமானம் உதவுகிறது.
4. மேலும் பிற நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கவும் நாட்டு வருமானம் பற்றிய புள்ளி விவரம் பயன்படுகிறது.
5. ஒரு நாட்டின் வளர்ச்சியின் அளவைக் கணக்கிட நாட்டு வருமானம் பயன்படுத்தப்படுகின்றது.
10.
செலவுமுறை என்பது நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து செலவுகளின் கூட்டுத்தொகை ஆகும். ஓர் ஆண்டு காலத்தில் சமுதாயத்தில் மேற்கொள்ளப்படும் மொத்த செலவுகள் அனைத்தையும் கூட்டி தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது. இதில் தனிநபர் செலவு, நிகர உள்நாட்டு முதலீடு, அரசின் கொள்முதல் செலவு, முதலீட்டு பொருட்கள் வாங்குவதற்கான செலவு மற்றும் நிகர ஏற்றுமதி செலவு இவை அனைத்தையும் கூட்டினால் கிடைக்கும் மொத்த செலவு தேசிய வருவாயாக கணக்கிடப்படுகிறது.
GNP = C+I+G+(X-M)
C = தனியார் நுகர்வு செலவு
I = தனியார் முதலீட்டு செலவு
G = அரசின் கொள்முதல் செலவு
(X-M) = நிகர ஏற்றுமதி இறக்குமதி
11.

12.
சமூக கணக்கிடுதல் மற்றும் துறைகள் :
இம்முறையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்படுகிறது. தனிமனிதர்கள்உள்ளடக்கிய ஒரு குழு அல்லது பல நிறுவனங்கள் சேர்ந்த ஒரு குழு முதலானவற்றுக்கு இடையே நடைபெறும் பொருளாதாரப் பரிமாற்றங்களை ஒரு துறை என்கிறோம். ஒரு நாட்டின் பொருளாதாரம் கீழ்க்காணும் துறைகளாகப் பிரிக்கப்படுகிறது. நிறுவனங்கள், குடும்பங்கள், அரசு, வெளிநாட்டு வணிகம், மூலதனத் துறை.
நிறுவனங்கள் :
நிறுவனங்கள் உற்பத்திக் காரணிகளைப் பணியில் அமர்த்தி பண்டங்கள், பணிகளை செய்கின்றன. உற்பத்தி
குடும்பங்கள் :
குடும்பங்கள் தங்கள் உழைப்பினை அளித்து கூலியைப் பெற்று, அதன் மூலம் பண்டங்கள், பணிகளை வாங்குகின்றன. அதாவது ஊதியத்தினைப் பெற்று பண்டங்களை வாங்குகின்றது. நிறுவனங்கள் குடும்பங்களின் பணியைப் பெற்று கூலியைத் தருகின்றன.
அரசு :
அரசுத் துறையில் பல நிலைகள் உள்ளன. கிராமம், வட்டம், மாவட்டம், மாநிலம், மத்திய அரசு என பல நிலைகள் உள்ளன. எடி மற்றும் பீகாக் கூற்றுப்படி, அரசு என்பது "ஒன்று சேர்க்கப்பட்ட மனிதர்கள்" எனக் குறிப்பிடுகின்றனர். வரி, தண்டனை, கட்டணம் மற்றும் கடன் ஆகியவை மூலமாக அரசு நிதியைத் திரட்டி பண்டங்களையும் பணிகளையும் வாங்குகிறது.
வெளிநாட்டு வணிகம் :
ஏற்றுமதி, இறக்குமதிகள் மூலம் கிடைக்கும் வருமானம், வெளிநாட்டுக் கடன்கள், வெளிநாட்டு மூலதன வருமானம், செலுத்துதல்கள் ஆகியவை வெளிநாட்டுத் துறையாகக் கருதப்படுகின்றன.
மூலதனத்துறை :
மூலதனத்துறை சேமிப்பையும் முதலீட்டையும் உள்ளடக்கியது. காப்பீட்டு நிறுவனம், வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் பரிமாற்றங்கள் இதில் அடங்கும். GDPயில் துறைகளின் பங்கை மதிப்பிடுவதற்கு ஒரு நாட்டின் பொருளாதாரமானது முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் துறை எனப் பிரிக்கப்படுகிறது.
13.
நாட்டு வருமானத்தின் முக்கியத்துவம் :
1. நாட்டு வருமானம் கணக்கீட்டின் மூலம், பொருளாதாரத்தில் இருக்கும் பல்வேறு துறைகளின் முக்கியத்துவம் பற்றியும் நாட்டு வருமானத்தில் அத்துறைகளின் பங்களிப்பு பற்றியும் அறிய முடிகின்றது.
2. நாட்டளவிலான பணவியல் கொள்கைகள், பொது நிதிக் கொள்கைகள் ஆகியவற்றை உருவாக்கவும், பொருளாதாரத்தைச் சரியான பாதையில் இட்டுச் செல்லவும் கடைப்பிடிக்க வேண்டிய சரியான வழிமுறைகளைக் கையாளவும் நாட்டு வருமானம் ஆய்வு உதவுகிறது.
3. திட்டமிடுதலுக்கும், திட்டங்களின் விளைவுகளை மதிப்பிடுவதற்கும் நாட்டின் மொத்த வருமானம், உற்பத்தி, சேமிப்பு மற்றும் நுகர்ச்சியின் அளவு ஆகிய புள்ளி விவரங்களை நாட்டு வருமானம் கணக்கீடு அளிக்கின்றது.
4. குறுகிய கால, நீண்ட கால பொருளாதார மாதிரிகளை உருவாக்க நாட்டு வருமானம் கணக்கீடு பயன்படுகிறது.
5. துறைவாரியான பொருளாதார விவரங்களையும், ஒரு நாட்டில் வட்டாரங்களின் வருமானத்தை ஒப்பிடவும், மற்ற நாடுகளின் வருமானத்தோடு ஒப்பிடவும், நாட்டு வருமானம் விவரங்கள் பயன்படுகின்றன.
6. நாட்டு வருமானம் மூலம் தலா வருமானம் கணக்கிடப்படுகிறது.
7. ஒரு நாட்டில் இருக்கும் பல்வேறு உற்பத்தி காரணிகளுக்கான வருமானப் பகிர்வை தெரிந்துகொள்ள நாட்டு வருமானம் பயன்படுகிறது.
8. பேரியல் பொருளாதாரக் காரணிகளான வரி - GDP விகிதம், நடப்புக் கணக்கு பற்றாக்குறை GDP விகிதம், நிதிப்பற்றாக்குறை - GDP விகிதம், கடன் - GDP விகிதம் ஆகியவற்றைக் கண்டறிய உதவுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards