7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 26/11/2019
சமூக அறிவியல்
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கீழ்க்கண்டவற்றில் அச்சு ஊடகத்தின் கீழ் வருவது எது?
வானொலி
தொலைக்காட்சி
செய்தித்தாள்
இணையதளம்
2.
இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை
26
27
28
29
3.
எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?
தருமபுரி
திருநெல்வேலி
நாமக்கல்
தேனி
4.
எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?
இராஜஸ்தான்
மேற்கு வங்காளம்
அசாம்
குஜராத்
5.
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் _______
தங்கம்
இரும்பு
பெட்ரோல்
சூரிய ஆற்றல்
6.
குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்
பாலாஜி விஸ்வநாத்
பாஜிராவ்
பாலாஜி பாஜிராவ்
ஷாகு
7.
சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது
பீரங்கிப்படை
குதிரைப்படை
காலட்படை
யானைப்படை
8.
அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?
பீர்பால்
ராஜா பகவன்தாஸ்
இராஜ தோடர்மால்
இராஜா மான்சிங்
9.
மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
சாளுவ நரசிம்மர்
இரண்டாம் தேவராயர்
குமார கம்பண்ணா
திருமலைதேவராயர்
10.
சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?
ராமராயர்
திருமலதேவராயா
இரண்யம் தேவராயர்
இரண்டாம் விருபாக்சராயர்
11.
உலகத்தினை சிறியதாகவும், மிக அருகாமையிலும் கொண்டு வந்தது _____________
12.
மாநில அரசின் உச்சபட்ச நீதி அமைப்பு ____________.
13.
TAAI என்பதன் விரிவாக்கம் __________________
14.
மின்சார பேட்டரிகள் தயாரிக்க _________ பயன்படுகிறது.
15.
அஷ்டபிரதானில் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் _________________
16.
ஜப்தி என்னும் முறை _______________ ஆட்சிகாலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப் பெற்றது.
17.
விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை _____________ கவனித்தார்.
18.
ஒலிபரப்பு ஊடகம்
19.
அகுதா கடற்கரை
20.
உலோக வளம்
21.
ஜீஜாபாய்
22.
தெனாலிராமகிருஷ்ணா
23.
அ) செய்தித்தாள்கள்
ஆ) நாளிதழ்கள்
இ) அறிக்கைகள்
ஈ) கீச்சகம்
உ) சுவரொட்டிகள்
24.
அ) ஹரிஹரர் –II
ஆ) மகமுது –I
இ) கிருஷ்ண தேவராயர்
ஈ) தேவராயா – I
25.
அரசு செயல்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடையவர்கள் ஆவார்கள்
26.
பக்தி இயக்கத்தின் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது, அனைத்து சமூகத்தினராலும் பக்தி இயக்கப் பாடல்கள் பாடப்பட்டன.
27.
ஹிமாயூன் 1565இல் டெல்லியைக் கைப்பற்றினார்
28.
பாமினி அரசைத் தோற்றுவித்தவர்கள் ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆவார்கள்
29.
உள்ளூர் ஊடகத்தின் முக்கியத்துவம் யாவை?
30.
சட்டமன்ற தொகுதி என்றால் என்ன?
31.
லோக் அதாலத் பற்றி எழுதுக.
32.
சாம்பாஜிக்கு எதிராக முகலாய இராணுவத்தின் தாக்குதல்.
33.
சௌத் மற்றும் சர்தேஷ்முகி.
34.
ஹிமாயூன் 1555இல் டெ ல்லியை மீண்டும் கைப்பற்றியதைப் பற்றிக் குறிப்பிடுக.
35.
தலைக்கோட்டைப் போரைப் பற்றி எழுதுக.
36.
வளங்கள் - வரையறு
37.
விஜயநகர் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பாமினி சுல்தான்களின் பங்களிப்பை ஆராய்க.
38.
அட்டவணைப்படுத்துக
ஆளுநர், முதலமைச்சர் , மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதிகள், நியமனமுறை மற்றும் ஏதாவது இரண்டு அதிகாரங்கள்.
39.
பேஷ்வா மற்றும் சிவாஜியின் வருவாய் நிர்வாக முறையை ஒப்பிடுக.
40.
முகலாயர் ஆட்சியில் ஷாஜகானின் காலத்தை மற்ற முகலாய ஆட்சியாளர்களோடு ஒப்பிடுக.
41.
முகலாயப் பேரரசில் அக்பர் மற்றும் ஔரங்கசீப்பின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளைக் குறிக்கவும், முகலாயர்களின் முக்கிய போர்களைக் குறிக்கவும்
42.
கூற்று: அச்சு ஊடகம் மக்களின் பல்கலைக்கழகம் என கருதப்படுகிறது.
காரணம்: பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதிலும், கல்வியறிவு ஊட்டுவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது மற்றும் பொதுமக்களின் பாதுகாவலனாகவும் செயல்படுகிறது.
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல .
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
43.
கூற்று: மராத்தியப் போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.
காரணம்: மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அ) கூற்றிற்கான காரணம் சரி
ஆ) கூற்றிற்கான காரணம் தவறு
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு
1.
(c)
செய்தித்தாள்
2.
(d)
29
3.
(b)
திருநெல்வேலி
4.
(c)
அசாம்
5.
(d)
சூரிய ஆற்றல்
6.
(b)
பாஜிராவ்
7.
(c)
காலட்படை
8.
(c)
இராஜ தோடர்மால்
9.
(c)
குமார கம்பண்ணா
10.
(d)
இரண்டாம் விருபாக்சராயர்
11.
( )
ஊடகம்
12.
( )
உயர் நீதி மன்றம்
13.
( )
Travel Agent Association of India (இந்திய பயண முகவர்கள் சங்கம்).
14.
( )
மாங்கனீசு
15.
( )
சுமந்த் (அ) துபிர்
16.
( )
ஷாஜகான்
17.
( )
கௌடா
18.
திரைப்படங்கள்
19.
கோவா
20.
இரும்பு
21.
சிவாஜியின் தாய்
22.
பாண்டுரங்க மகாமத்தியம்
23.
ஈ) கீச்சகம்
24.
மகமுது –I
25.
(a)
26.
(b)
27.
(b)
28.
(b)
29.
உள்ளூர் ஊடகம் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மக்களின் நலனுக்காக செயல்படுவதாகும்.
30.
1. தேர்தலுக்காக நாடு மக்கள் தொகை அடிப்படையில் பல தொகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன.
2. மாநில அளவில் மக்கள் தங்கள் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிக்கான தொகுதி சட்டமன்ற தொகுதி எனப்படும்.
31.
திருமணம் அல்லது குடும்பம் தொடர்பாக எழும் சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைக்கும் குடும்ப நல நீதிமன்றங்கள் 'லோக் அதாலத்' என அழைக்கப்படுகின்றன.
32.
1. 1687 இல் பீஜப்பூர், கோல்கொண்டா ஆகிய இரு சுல்தானியங்களும் ஔரங்கசீப்பிடம் வீழ்ந்தன.
2. முகலாயப் படைகள் சாம்பாஜியைக் கைது செய்த போது கவிகலேஷீம் உடனிருந்தார்.
3. ஆகவே இருவரும் ஔரங்கசீப்பின் கட்டளையின் படி அனைத்து வகைப்பட்ட சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
33.
1. சௌத் - மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு, பாதுகாப்புக் கட்டணமாக வரி செலுத்த வேண்டும்.
2. சர்தேஷ்முகி பத்தில் ஒரு பங்கு, அரசருக்கான கட்டணமாக வரி செலுத்த வேண்டும்.
34.
பாரசீக அரசர், சபாவிட் வம்சத்தைச் சேர்ந்த ஷா - தாமஸ்ப் என்பவரின் உதவியால் 1555-ல் டெல்லியை மீண்டும் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார்.
35.
1. விஜய நகருக்கு எதிராகப் போர் புரிவதற்காகத் தக்காண சுல்தான்கள் ஓர் அணியில் திரண்டனர்.
2. எதிரிகளின் கூட்டுப் படைகள் 1565இல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகரப் படைகளை எதிர்கொண்டன.
3. ராக்சச தங்கடி என்றறியப்பட்ட இப்போரில் விஜய நகரம் தோற்கடிக்கப்பட்டது.
36.
மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவை வளங்கள் என அழைக்கப்படுகின்றன.
37.
விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள்:
1. 1565 -ல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போர் விஜயநகர அரசின் வீழ்ச்சிக்கு முழு காரணமாகும்.
2. தக்காண சுல்தான்களின் கூட்டுப்படை விஜயநகரப் படைகளைத் தோற்கடித்தன.
3. விஜய நகரம் கொள்ளையிடப்பட்டு அனைத்து கட்டடங்கள். அரண்மனைகள், கோவில்கள், சிற்பங்கள் அழிக்கப்பட்டன. மேலும் பயங்கரமான மனிதப் படுகொலைகளும் நடந்தன.
4. இறுதியாக விஜயநகரப் பேரரசு அழிக்கப்பட்டது.
பாமினி சுல்தான்களின் பங்களிப்பு:
1. கட்டடக் கலைக்கு பாமினி சுல்தான்களின் பங்களிப்பை குல்பர்காவில் காணலாம்.
2. குல்பர்கா, பீடார், தௌலதாபாத் மற்றும் காண்டகார் ஆகிய இடங்களில் கல்விக் கூடங்களை நிறுவி கல்வி கற்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தினர்.
38.
ஆளுநர்,முதலமைச்சர்,மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதிகள்,நியாயமானமுறை மற்றும் ஏதாவது இரண்டு அதிகாரங்கள்.
| உறுப்பினர்கள் | தகுதிகள் | நியமன முறை | அதிகாரங்கள் |
| ஆளுநர் | இந்தியக் குடிமகன் 35 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும். |
குடியரசு தலைவர் ஆளுநரை நியமனம் செய்கிறார். |
மாநில அரசாங்கத்தின் அனைத்து நிருவாகத்துறை நடவடிக்கைகள் ஆளுநரின் பெயரில் நடைபெறுகின்றன. மாநில அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளை நியமனம் செய்கிறார். |
| முதலமைச்சர் | 25 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். |
இவரை ஆளுநர் நியமனம் செய்கிறார். | மாநில நிருவாகத் துறையின் தலைவராக உண்மையான முதலமைச்சர் செயல்படுகிறார். அவர் தனது அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்கிறார். |
| சட்டமன்ற உறுப்பினர் | 25 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும். | இவர்களை ஆளுநர் நியமனம் செய்கிறார். | சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டமன்ற கூடுகையில் வரவு, செலவுத் திட்டங்களை வகுக்கின்றனர். |
39.
சிவாஜியின் வருவாய் நிர்வாக முறை:
1. சிவாஜி, கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களைக் காப்பாற்றினார்.
2. அதற்காக அம்மக்கள் சௌத் - மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு பாதுகாப்புக் கட்டணமாக, சர்தேஷ்முகி - பத்தில் ஒரு பங்கு அரசருக்கு கட்டணமாக வரிகளைச் செலுத்த வேண்டும்.
3. மூன்றாவது வட்டத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக இருந்தது.
4. முகலாயரின் நிர்வாக முறை சிவாஜியின் மீது செல்வாக்குச் செலுத்தியிருந்தது.
5. நிலவரியானது உண்மையான விளைச்சலின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு, ஐந்தில் மூன்று பங்கு விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டு ஐந்தில் இரண்டு பங்கு அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பேஷ்வாக்களின் வருவாய் நிர்வாக முறை:
1. வருவாய் வசூலுக்கான ஒப்பந்தங்கள் வருடமொரு முறை ஏலம் விடப்பட்டன. குறிப்பிட்ட ஒரு பகுதியிலிருந்து கடந்த ஆண்டு பெறப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் இந்த ஆண்டும் வசூல் செய்யப்பட வேண்டிய தொகை பேஷ்வாவின் அதிகாரிகளால் நிர்ணயம் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ஏலம் நடத்தப்பட்டது.
2. ஏலத்தில் வெற்றி பெற்று எதிர்கால வாய்ப்பினைப் பயன்படுத்த நினைக்கும் வரி அல்லது வருவாய் வசூலிப்பாளர் சொத்துக்கள் உடையவராகவும் நேர்மையானவராகவும் இருத்தல் வேண்டும்.
3. எதிர்பார்க்கப்படும் மொத்த வசூல் தொகையில் மூன்றில் ஒரு பகுதி முதல் சரிபாதி வரை அவர் முதலில் செலுத்திட வேண்டும். தமது சொந்தப் பணத்திலிருந்து அவர் அதைச் செலுத்தலாம் அல்லது வட்டிக்குக் கடன் தருவோரிடமிருந்து பெற்றுக் கட்ட வேண்டும்.
4. செய்திப் பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்துள்ளனர் என்பது தெரிகிறது.
40.
1. முகலாயப் பேரரசும் அதன் புகழும் ஷாஜகான் காலத்தில் உச்சத்தை எட்டியது.
2. பேரரசர் அமர்வதற்காக விலையுயர்ந்த நவரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட மயிலாசனம் தயாரிக்கப்பட்டது.
3. யமுனை நதிக்கரையில் உலகப்புகழ்பெற்ற தாஜ்மகால் எழுப்பப்பட்டது.
4. மேலும் ஆக்ராவில் உள்ள முத்து மசூதி, டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதி, செங்கோட்டை ஆகியவை ஷாஜகானால் கட்டப்பட்டது.
5. திவான் -இ-காஸ், திவான் -இ- ஆம், பஞ்ச்மஹால், ரங்மஹால், புலந்தர்வாசா, போன்றவை அக்பர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டவையாகும்.
6. ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் கட்டடக்கலை பெரிய அளவிலான ஆதரவைப் பெறவில்லை.
41.
42.
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
43.
அ) கூற்றிற்கான காரணம் சரி
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards