7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 29/07/2019
டெல்லி சுல்தானியம்
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் ______________ ஆவார்.
முகமதுபின் துக்ளக்
பிரோஷ் ஷா துக்ளக்
ஜலாலுதீன்
கியாசுதீன்
2.
_______ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
ரஸ்ஸியா
குத்புதீன் ஐபக்
இல்துமிஷ்
பால்பன்
3.
_______ மாம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
முகமதுகோரி
ஜலாலுதீன்
குத்புதீன் ஐபக்
இல்துமிஷ்
4.
இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் ___________ ஆட்சியின் போது ஏற்பட்டது.
5.
டெல்லியிலுள்ள குவ்வத் உல் இஸ்லாம் மசூதியை ___________ கட்டினார்.
6.
முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து ___________ க்கு மாற்றினார்.
7.
துக்ளக் அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர்______ ஆவார்.
8.
ரஸ்ஸியா
9.
பகலூல் லோடி
10.
அலாவுதீன்
11.
துக்ரில்கான்
12.
தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ் ஷா மறுத்துவிட்டார்
13.
ஐபக்கின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் இல்துமிஷைத் துருக்கியப் பிரபுக்கள் சுல்தானாகத் தேர்வு செய்தனர்.
14.
குத்புதீன் இனங்காண முடியாத காய்ச்சலால் மரணமடைந்தார்.
15.
கூற்று: மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார்.
காரணம்: செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள், என உறுதி கூறியிருந்தார்.
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே .
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்க மல்ல .
இ) காரணமும் கூற்றும் தவறானவை.
ஈ) கூற்று தவறு; காரணம் சரி.
16.
பிரோஷ் ஷா துக்ளக்கின் சாதனைகளைப் பட்டியலிடுக.
17.
‘சகல்கானி’ குறித்து சிறுகுறிப்பு வரைக.
18.
ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?
19.
1398ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி.
20.
முகமதுபின் துக்ளக்கை டெல்லியின் சுல்தானாக நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?
21.
இந்திய ஆறுகள் வரைபடத்தில் துக்ளக் வம்சத்தின் ஆட்சி எல்லையையும் கீழ்க்காணும் பகுதிகளையும் குறிப்பிடுக.
1. டெல்லி
2. தேவகிரி
3. லாகூர்
4. மதுரை
1.
(d)
கியாசுதீன்
2.
(c)
இல்துமிஷ்
3.
(c)
குத்புதீன் ஐபக்
4.
( )
இல்துமிஷ்
5.
( )
குத்புதீன் ஐபக்
6.
( )
தேவகிரி அல்லது தௌலதாபாத்
7.
( )
கியாஸ் - உத் - தின் துக்ளக்
8.
வங்காள ஆளுநர்
9.
காராவின் ஆளுநர்
10.
சிர்கந்தின் ஆளுநர்
11.
ஜலாலுதீன் யாகுத்
12.
(a)
13.
(a)
14.
(b)
15.
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே .
16.
அ). விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தும் பல நீர்ப்பாசன கால்வாய்களை வெட்டியும் வேளாண்மையை மேம்படுத்தினார்.
ஆ). பிரோஷாபாத், ஜான்பூர், ஹிசார், பிரோஷ்புர் ஆகிய புதிய நகரங்களை அவர் நிர்மாணித்தார்.
இ). ஏழை முஸ்லீம்களுக்கு உதவுவதற்கான அறக்கட்டளைகளை நிறுவினார். கல்லூரிகள்,மருத்துவமனைகள், மசூதிகள் ஆகியவற்றை கட்டினார்.
ஈ). மனிதாபமற்ற கொடூரமான தண்டனைகளை ஒழித்தார். இஸ்லாமிய சட்டங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை ரத்து செய்தார்.
17.
1. இல்துமிஷ் ஆட்சி காலத்தில் மங்கோலியர்கள் செங்கிஸ்கானின் தலைமையில் இந்தியாவின் எல்லைப்பகுதிகளை அச்சுறுத்தினர்.
2. செங்கிஸ்கானால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருந்த குவாரிஜம் ஷா ஜலாலூதீன் இல்துமிஷிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் கேட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளை மறுத்தது மூலம் மங்கோலிய ஆபத்தைத் தவிர்த்தார்.
3. மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்ள துருக்கிய பிரபுக்கள் 40 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அதுவே சகல்கானி அல்லது நாற்பதின்மர் என அறியப்பட்டது.
18.
சிக்கந்தர் லோடி ஆக்ரா நகரை நிர்மாணித்தார்.
19.
1. பிரோஷ் ஷா துக்ளக் மரணமுற்று பத்தாண்டுகள் கழிந்த நிலையில் ‘தாமர்லைன்' என்று அழைக்கப்பட்ட தைமூர் டெல்லியைத் தாக்கி சூறையாடி மாபெரும் மனிதப் படுகொலையை அரங்கேற்றினார்.
2. மத்திய ஆசியாவில் சாமர்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த தைமூர் வட இந்தியாவின் மேற்கில் சில இடங்களைக் கைப்பற்றினார்.
3. இந்தியாவின் வலிமையை சாதகமாக்கிக் கொண்டு இந்தியாவிற்குள் படையெடுத்து 1398 டிசம்பரில் டெல்லியைக் கொள்ளையடித்தனர்.
4. தைமூர் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதி பஞ்சாப் ஆகும்.
5. தைமூர் தங்கம், வெள்ளி நகைகள் என பெருஞ்செல்வத்தைக் கொள்ளையடித்தது மட்டுமின்றி சாமகண்டில் நினைவுச் சின்னங்களை கட்டுவதற்காக தச்சு வேலை செய்வோர், கட்டிடக் கலைஞர்கள், போன்ற கைவினைஞர்களையும் உடன் அழைத்துச் சென்றார்.
20.
1. முகமதுபின் துக்ளக் ஒரு மிகவும் கற்றறிந்த மனிதர் ஆனால் குரூரம் நிறைந்தவராவர்.
2. அவர் 25 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்.
3. அவரது தலைநகர் மாற்றம், வசூல் செய்யும் முறை, நாணயமாற்றம் போன்ற கொள்கைகள் நன்றாக இருந்தது.
4. ஆனால் இந்த கொள்கைகளைச் செயல்படுத்துவதில் எல்லாம் தவறான முறைகள் பின்பற்றப்பட்டன.
5. நாடு முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் அவற்றை விரும்பவில்லை.
6. தனது ஆட்சி காலத்தில் அவர் விவசாயிகள், கவர்னர்கள் ஆகியோரின் பல புரட்சிகளை சந்திக்க நேர்ந்தது.
21.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards