7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 03/09/2019
தென்னிந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?
சோழமண்டலம்
பாண்டிய நாடு
கொங்குப்பகுதி
மலைநாடு
2.
விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?
வீர ராஜேந்திரன்
ராஜாதிராஜா
அதி ராஜேந்திரன்
இரண்டாம் ராஜாதிராஜா
3.
கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?
மண்டலம்
நாடு
கூற்றம்
ஊர்
4.
பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?
விஜயாலயன்
முதலாம் ராஜராஜன்
முதலாம் ராஜேந்திரன்
அதிராஜேந்திரன்
5.
பாண்டியப் பேரரசின் அரசுச் செயலகம் ____________என அறியப்பட்டது
6.
_________ வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.
7.
______ வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவினார்.
8.
மணி - கிராமத்தார்
9.
அஞ்சு வண்ணத்தார்
10.
மதுரை
11.
சோழ அரசரின் மூத்த மகன் யுவராஜன் என அழைக்கப்பட்டார்.
12.
முதலாம் குலோத்துங்கன் சாளுக்கிய – சோழ அரச வம்சத்தைச் சேர்ந்தவர்.
13.
சோழ அரசு வைகையின் கழிமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
14.
கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவுகளை இறங்குவரிசையில் வரிசைப்படுத்தவும்.
1. நாடு
2. மண்டலம்
3. ஊர்
4. கூற்றம்
15.
கீழ்க்காணும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி எழுதவும்.
i) மாறவர்மன், வீரபாண்டியனை க் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார் .
ii) உள்நாட்டுப்போர் தொடங்கியது.
iii) மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது.
iv) மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு, மகன்கள். ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் சுந்தரபாண்டியன்.
v) சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார்.
vi) மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார்.
16.
‘காணிக்கடன்’ பற்றி எழுதுக.
17.
சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?
18.
சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.
19.
’சோழ அரசர்கள் பெரும் கல்விப் புரவலர்கள்’ - இக்கூற்றை உறுதிசெய்க.
20.
| 1சோழர்கால இலக்கியங்கள் இரண்டின் பெயர்களைக் எழுதுக விடை: |
2.முத்துக்குளித்தலோடு தொடர்புடைய துறைமுகம் எது?. விடை: |
| 3.காசு, களஞ்சு, பொன் என்பவை எதைக் குறிக்கின்றன? விடை: |
4.காயல்பட்டினம் எந்த மாவட்டத்தில் உள்ளது? விடை: |
| 5.முதலாம் பராந்தகனால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய அரசன் யார்? விடை: |
6.புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் எங்குள்ளது? விடை: |
1.
(b)
பாண்டிய நாடு
2.
(c)
அதி ராஜேந்திரன்
3.
(d)
ஊர்
4.
(a)
விஜயாலயன்
5.
( )
எழுத்து மண்டபம்
6.
( )
முதலாம் வரகுணபாண்டியன்
7.
( )
முதலாம் ராஜேந்திர சோழன்
8.
உள்நாட்டு வணிகர்
9.
கடல்சார் வணிகர்
10.
பாண்டியர்களின் தலைநகர்
11.
(a)
12.
(a)
13.
(b)
14.
1) மண்டலம்
2) நாடு
3) ஊர்
4) கூற்றம்
15.
i) மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு, மகன்கள். ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் சுந்தரபாண்டியன்.
ii) மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார்.
iii) உள்நாட்டுப்போர் தொடங்கியது.
iv) சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார்.
v) மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார்.
vi) மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது.
16.
அ) சோழ அரசின் பொது வருவாய் முக்கியமாக நிலவரி மூலம் பெறப்பட்டது.
ஆ) நிலவரியானது காணிக்கடன் என அழைக்கப்பட்டது.
இ) மகசூலில் மூன்றில் ஒரு பகுதி நிலவரியாக வசூலிக்கப்பட்டது.
ஈ) இவற்றில் பெரும்பாலும் தானியமாகவே வசூல் செய்யப்பட்டது.
17.
சந்தனம், கருங்காலிக்கட்டை, சுவையூட்டும் பொருட்கள், விலையுயர்ந்த ஆபர்ணக் கற்கள், மிளகு, நெல், தானியங்கள், உப்பு.
18.
உள்ளாட்சி நிர்வாகம்:
1. சோழ ஆட்சி காலத்தில் உள்ளாட்சி நிர்வாகம் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டனர்.
2. இக்குழுக்கள் நீர்பாசனம், சாலைகள், கோவில்கள், தோட்டங்கள், வரிவசூல், மதவிழாக்கள் போன்ற பணிகளை மேற்கொண்டன.
நீர்ப்பாசனம்:
1. சோழர்கள் நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் வழங்கினர்.
2. கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட பதினாறு மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கலை மற்றும் ஒலியம்:
சோழர்கள் காலத்தில் பிரமாண்டமான கோவில்கள் சுட்டப்பட்டன. தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களில் உள்ள கோவில்கள் சோழர்களின் கலைகளான கட்டடங்கள், சிற்பங்கள் செப்புச்சிலைகள். ஓவியங்கள். படிமவியல் ஆகியவற்றின் களஞ்சியமாக உள்ளன.
இலக்கியப்பணி:
உன்னதமான இலக்கியங்களான பெரியபுராணமும், கம்பராமாயணமும் இக்காலப் பகுதியைச் சேர்ந்தவையாகும்.
குடவோலை முறை:
சோழர்கள் ஆட்சிக் காலத்தில், உள்ளாட்சியில் உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை பின்வருமாறு. ஒவ்வொரு குடும்பிலிருந்தும் தகுதியுடைய வேட்பாளர்கள் பெயர்கள் பனையோலைத் துண்டுகளில் எழுதப்படும். அவை மட்பாண்டம் ஒன்றில் போடப்படும். மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஒரு ஓலைத்துண்டுகளை எடுக்கச் சொல்லி அதில் எழுதப்பட்டுள்ள பெயரை அறிவிப்பார். இந்த தேர்ந்தெடுக்கும் முறைக்கு குடவோலை முறை என அழைக்கப்பட்டது.
19.
(i) சோழ அரசர்கள் கல்விப் பணிகளுக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர்.
(ii) முதலாம் இராஜேந்திரன் எண்ணாயிரம் எனும் கிராமத்தில் வேதக்கல்லூரி ஒன்றை நிறுவினார். அங்கு 14 ஆசிரியர்கள் மற்றும் 340 மாணவர்கள் இருந்தனர்.
(iii) அங்கு வேதங்கள், இலக்கணம், உபநிடதங்கள் ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டன.
(iv) திருபுவனை, திருமுக்கூடல் ஆகிய இடங்களிலும் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
(v) பெரிய புராணம் மற்றும் கம்பராமாயணமும் சோழர் காலத்தவையேயாகும்.
20.
| 1. சோழர்கால இலக்கியங்கள் இரண்டின் பெயர்களைக் எழுதுக விடை: பெரிய புராணம், கம்பராமாயணம் |
2. முத்துக்குளித்தலோடு தொடர்புடைய துறைமுகம் எது?. விடை: காயல்பட்டினம் ( தூத்துக்குடி மாவட்டம்) |
| 3. காசு, களஞ்சு, பொன் என்பவை எதைக் குறிக்கின்றன? விடை: தங்க நாணயங்கள் |
4. காயல்பட்டினம் எந்த மாவட்டத்தில் உள்ளது? விடை: தூத்துக்குடி |
| 5. முதலாம் பராந்தகனால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய அரசன் யார்? விடை: இரண்டாம் ராஜ சிம்மன் |
6. புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் எங்குள்ளது? விடை: மதுரை |
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards