8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
நாசாவின் ______ திட்டம் முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது.
அப்போலோ 5
அப்போலோ 8
அப்போலோ 10
அப்போலோ 11
2.
கிரியோஜெனிக் எரிபொருள் எவ்வெப்பநிலையில் சேகரித்து வைக்கப்படுகிறது.
அறை வெப்பநிலை
குறைந்த வெப்பநிலை
மிகக் குறைந்த வெப்பநிலை
மிக அதிக வெப்பநிலை
3.
ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் தத்துவம்
நியூட்டனின் முதல் விதி
நியூட்டன் இரண்டாம் விதி
நியூட்டன் மூன்றாம் விதி
இவை அனைத்தும்
4.
சிவப்பு கோள் என அழைக்கப்படுவது __________ .
புதன்
வெள்ளி
பூமி
செவ்வாய்
5.
சந்திராயன் 1 விண்ணில் செலுத்தப்பட்ட நாள்__________ .
2008 அக்டோபர் 22
2008 நவம்பர் 8
2008 ஜூலை 22
2019 அக்டோபர் 22
6.
மங்கள்யான் _________ க்கு அனுப்பப்பட்டது.
சந்திரன்
செவ்வாய்
வெள்ளி
புதன்
7.
பின்வருவனவற்றுள் எது வான்பொருள்?
சூரியன்
சந்திரன்
விண்மீன்கள்
இவை அனைத்தும்
8.
நிலவின் மேற்பரப்பில் நடந்த முதல் மனிதர் ___________ ஆவார்.
9.
பிற கோள்களுக்கு விண்கலனை அனுப்பிய முதல் இந்திய விண்வெளித் திட்டம் ________ .
10.
செவ்வாய்க்கோள்_______ நாட்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வருகிறது.
11.
சூரியன் ____ விண்மீன் திரளைச் சார்ந்தது.
12.
விண்மீன்களைப் பற்றியும் கோள்களைப்பற்றியும் படிக்கும் அறிவியல் பிரிவு_______
13.
ராக்கெட்டின் இயக்கு பொருள்கள் திண்மநிலையில் மட்டுமே காணப்படும்.
14.
PSLV மற்றும் GSLV என்பவை இந்தியாவின் புகழ்பெற்ற செயற்கைக் கோள்கள் ஆகும்
15.
செவ்வாய்க் கோள் சூரியக் குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள் ஆகும்.
16.
சந்திராயன் - 1ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
17.
சூரியன் மற்றும் இதர வான்பொருள்கள் சேர்ந்து சூரிய குடும்பத்தை உருவாக்குகின்றன.
18.
அப்போலோ 11
19.
அப்போலோ 8
20.
கிரையோஜெனிக்
21.
மங்கள்யான்
22.
சந்திராயன்
23.
நாசாவில் பணியாற்றிய சில இந்தியர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
24.
கிரையோஜெனிக் எரிபொருள் என்றால் என்ன?
25.
மங்கள்யான் திட்டத்தின் நோக்கங்களை வரிசைப்படுத்துக.
26.
சந்திராயன் 1 திட்டத்தின் நோக்கங்கள் யாவை?
27.
விண்மீன் திரள் - வரையறு.
28.
வான் பொருள்கள் என்றால் என்ன?
29.
சந்திரயான் – 1 ன் சாதனைகள் யாவை?
30.
நாசாவின் அப்போலோ திட்டங்கள் குறித்து குறிப்பு வரைக.
31.
ராக்கெட்டின் பகுதிகளை விளக்குக.
32.
நாம் எப்போதும் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. ஏன்?
1.
(b)
அப்போலோ 8
2.
(c)
மிகக் குறைந்த வெப்பநிலை
3.
(c)
நியூட்டன் மூன்றாம் விதி
4.
(d)
செவ்வாய்
5.
(a)
2008 அக்டோபர் 22
6.
(b)
செவ்வாய்
7.
(d)
இவை அனைத்தும்
8.
( )
நீல் ஆம்ஸ்ட்ராங்
9.
( )
மங்கல்யான்
10.
( )
687
11.
( )
பால்வெளி திரள்
12.
( )
வானியல்
13.
தவறு.
திட மற்றும் திரவ நிலைகளிலும் காணப்படும்.
14.
சரி
15.
தவறு.
புதன் கோள் சூரிய குடும்பத்தில் உள்ள மிகச் சிறிய கோள் ஆகும்.
16.
சரி
17.
சரி
18.
முதன்முதலில் மனிதனை நிலவில் தரையிறங்கச் செய்த திட்டம்
19.
முதன்முதலில் மனிதனை நிலவுக்கு அனுப்பிய திட்டம்
20.
எரிபொருள்
21.
செவ்வாய்
22.
சந்திரன்
23.
கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ்
24.
(i) கிரையோஜெனிக் இயக்கு பொருளில் எரிபொருள் அல்லது ஆக்ஸிகரணி அல்லது இரண்டும் திரவநிலை வாயுக்களாக இருக்கும். இவை மிகக்குறைந்த வெப்பநிலையில் இருக்கும்.
(ii) எரியூட்ட தனியான அமைப்புகள் தேவை இல்லை.
(iii) இவற்றை ஒன்றாக கலக்கும்போது ஒன்றோடொன்று வினைபுரிந்து எரியத் தொடங்குகின்றன.
25.
(i) கோள்களுக்கு இடையேயான விண்வெளித் திட்டத்திற்கு தேவையான தொழில் நுட்பத்தை உருவாக்குதல்.
(ii) செவ்வாயின் மேற்பரப்பை ஆராய்தல்.
(iii) செவ்வாயின் வளிமண்டலத்தில் உள்ள பகுதிப் பொருள்களை அறிதல்.
(iv) கடந்த காலத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது பற்றிய தகவல்களை அறிதல்.
(v) எதிர் காலத்தில் செவ்வாய்க் கோளில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை அறிதல்.
26.
(i) சந்திரனில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிதல்.
(ii) சந்திரனில் உள்ள தனிமங்களை கண்டறிதல்.
(iii) சந்திரனில் ஹீலியம் 3 இருப்பதை ஆராய்தல்.
(iv) சந்திரனின் முப்பரிமாண வரைபடத்தை உருவாக்குதல்.
(v) சூரிய குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியை ஆராய்தல்.
27.
லட்சக்கணக்கான விண்மீன் தொகுப்பு விண்மீன் திரள் எனப்படும். நமது விண்மீன் திரள்: பால்வெளி திரள்.
28.
விண்மீன்கள், கோள்கள், நிலா, விண்கற்கள், வால்மீன்கள் போன்றவைகள் வான் பொருட்கள் எனப்படும்.
29.
(i) சந்திரனின் மணற்மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்தது.
(ii) சந்திரன் முற்காலத்தில் உருகிய நிலையில் இருந்ததை உறுதி செய்தது.
(iii) அப்போலோ 15 மற்றும் அப்போலோ 11 ஆகியவை தரையிறங்கிய இடங்களின் படங்களை பதிவு செய்தது.
(iv) சந்திரனின் கனிம வளம் பற்றிய தகவல்கள் உயர்பகுதிறன் கொண்ட நிறமாலைமானி மூலம் பெறப்பட்டன.
(v) X - கதிர் படக்கருவியின் மூலம் சந்திரனில் அலுமினியம், மக்னீசியம் மற்றும் சிலிகான் இருப்பது கண்டறியப்பட்டது.
(vi) 75 நாட்களில் சுமார் 40 ஆயிரம் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.
(vii) பூமியின் முழு வடிவத்தையும் முதன் முதலாக பதிவு செய்து அனுப்பியது.
(viii) நிலவின் பரப்பில் மனிதர்களுக்கு உறைவிடமாகப் பயன்படும் பல குகைகளை கண்டறிந்தது.
30.
(i) நாசாவின் மிகப் புகழ் பெற்ற திட்டங்கள் அப்போலோ திட்டமாகும்.
(ii) இது ஒட்டுமொத்தமாக 17 திட்டங்களை கொண்டது.
(iii) அப்போலோ 8 என்பது முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய திட்டமாகும். இதில் விண்கலம் நிலவைச் சுற்றிய பின் பூமிக்கு வந்தடைந்தது.
(iv) அப்போலோ 11 திட்டமானது முதன்முதலில் மனிதனை நிலவில் தரையிறங்க செய்த திட்டமாகும். அப்போலோ 11 விண்கலமானது 1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் நாள் நிலவில் தரையிறங்கியது.
(v) அதில் நீல்ஆம்ஸ்ட்ராங், புஷ் ஆல்டிரின் மற்றும் மைக்கல் காலின்ஸ் சென்றனர்.
(vi) நீல்ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி பதித்த முதல் மனிதர் ஆவார்.
31.
ராக்கெட் என்பது மனிதர்களை அல்லது கருவிகளை பூமிக்கு அப்பால் விண்வெளிக்கு கொண்டு செல்ல உதவும் கருவியாகும்.
பாகங்கள்:
1) கட்டமைப்பு அமைப்பு
2) பணிச்சுமை அமைப்பு
3) வழிகாட்டும் அமைப்பு
4) உந்து விசை அமைப்பு
(i) கட்டமைப்பு அமைப்பு
சட்டம் வலிமையான, எடை குறைந்த அலுமினியம் அல்லது டைட்டானியத்தால் ஆனது. நிலைப்புத்தன்மைக்காக சட்டத்தின் அடிப்பகுதியில் துடுப்புகள் உள்ளன.
(ii) பணிச்சுமை அமைப்பு
விண்வெளியில் விடப்படும் செயற்கை கோள்கள். இது திட்டப்பணிகளைச் சார்ந்தது புவியின் சுற்று வட்டப் பாதைக்கு அல்லது நிலவின் மேற்பரப்பிற்கு மனிதர்களை கொண்டு
செல்வதற்கு ஏற்றவாறு சிறப்பு ராக்கெட்டுகள் உருவாக்கப்படுகிறது.
(iii) வழிகாட்டும் அமைப்பு
செல்ல வேண்டிய பாதையை காட்டும். இதில் உணர்விகள், கணினிகள் மற்றும் ரேடார் போன்றவை அமைந்திருக்கும்
(iv) உந்து விசை அமைப்பு
ராக்கெட்டின் பெரும்பகுதி இடத்தை நிரப்புவது. இதில் எரிபொருள் தொட்டிகள், இறைப்பான்கள், எரியூட்டும் அறை அமைந்திருக்கும்
வகைகள்: திரவ உந்து விசை அமைப்பு, திட உந்து விசை அமைப்பு
32.
நிலா பூமியை சுற்றிவரும் வேகமும், நிலா அதன் அச்சை பற்றிய சுழற்சி வேகமும் சமம். எனவே நாம் எப்பொழுதும் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்கிறோம்.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards