8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
திரவ நிலையில் உள்ள ஏதேனும் மூன்று சேர்மங்களைக் குறிப்பீடுக.
2.
வேதிக்குறியீடுகள் தரும் தகவல்கள் யாவை?
3.
பின்வரும் தனிமங்களின் குறியீடுகளை எழுதுக.
அ. ஆக்ஸிஜன்
ஆ. தங்கம்
இ. கால்சியம்
ஈ. காட்மியம்
உ. இரும்பு
4.
ஒரு வளிமண்டல அழுத்தம் - வரையறு.
5.
வளர்சிதை மாற்றம் - வரையறு.
6.
காற்று நுண்ணறைகளின் பணிகளைக் கூறுக.
7.
செல் மாறுபாடு அடைதல் என்றால் என்ன?
8.
பூஞ்சைகளின் ஏதேனும் இரு பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
9.
இரு விதையிலைத் தாவரங்களின் இரு பண்புகளை எழுதுக.
10.
தாலஸ் - வரையறு.
11.
ஒளிச்செறிவின் SI அலகு என்ன?
12.
SI முறையில் உள்ள அடிப்படை அளவுகள் எத்தனை?
13.
FPS முறையில் நிறையின் அலகு என்ன?
14.
பெனிசிலியத்தைக் கண்டறிந்தவர் யார்?
15.
நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாவின் பெயரை எழுதுக.
16.
கோளக ஆடி ஒன்றின் குவியத் தொலைவு 7 செ.மீ. எனில் ஆடியின் வளைவு ஆரம் என்ன?
17.
80°C என்பதைக் கெல்வினாக மாற்றுக.
18.
நிலக்கரியை கம்பியாக நீட்டலாம்.
19.
உலோகங்கள் பொதுவாக நல்ல மின்கடத்திகள் ஆனால் வெப்பத்தைக் கடத்துவதில்லை
20.
மனிதன் ஒரு வெப்ப இரத்த பிராணி
21.
உருளும் உராய்வு, நிலை உராய்வு, நழுவு உராய்வு.
22.
ஒளிச்சேர்க்கை ஏன் ஒரு வேதிவினையாகும்?
23.
மாசுபடுதல் என்றால் என்ன?
24.
வினைவேக மாற்றம் என்பதை வரையறுக்க.
25.
வேதிவினை என்பதை வரையறு.
1.
(i) ஹைட்ரோகுளோரிக் அமிலம்,
(ii) நீர்,
(iii) கந்தக அமிலம்.
2.
ஒரு தனிமத்தின் வேதிக்குறியீடு, அத்தனிமத்தின் பெயரைக் குறிக்கிறது; அத்தனிமத்தின் ஓர் அணுவைக் குறிக்கிறது.
3.
| தனிமம் | குறியீடு | ||
| அ. | ஆக்ஸிஜன் | - | O |
| ஆ. | தங்கம் | - | Au |
| இ. | கால்சியம் | - | Ca |
| ஈ. | காட்மியம் | - | Cd |
| உ. | இரும்பு | - | Fe |
4.
(i) ஒரு வளிமண்டல அழுத்தம் (1 atm) என்பது பாரோமீட்டர் திரவத் தம்பத்தில் உள்ள பாதரசத்தின் மீது காற்று செலுத்தும் அழுத்தம் ஆகும்.
(ii) 1 atm = பாரோமீட்டரில் உள்ள 76 செ.மீ பாதரசம் கொடுக்கும் அழுத்தம்
= 1.01 \(\times\) 105 Nm-2
5.
மொத்த உயிரி வேதிவினைகளும் ஆற்றலை வெளிப்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் அல்லது உயிரினத்திற்குள் ஆற்றலை பரிமாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி வளர்சிதை மாற்றமாகும்.
6.
(i) சுவாச மண்டலத்தின் செயல்மிகு அமைப்புகளாக அமைந்துள்ளன.
(ii) ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடின் வாயுப் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன.
7.
(i) கருவானது அளவு, வடிவம் மற்றும் உட்பொருள்களைக் கொண்ட திரள் செல்களைக் கொண்டது.
(ii) கரு செல்கள் படிப்படியாக அவற்றின் அமைப்பிலும் பணியிலும் மாற்றங்களை அடைகின்றன.
(iii) இந்நிகழ்வுக்கு செல் மாறுபாடடைதல் என்று பெயர்.
8.
(i) நுண்ணுயிர்க்கொல்லி:
பென்சிலின், நியோமைசின். ஜென்டாமைசின், எரித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர்க் கொல்லிகள் பூஞ்சைகளிலிருந்து தாயாரிக்கப்படுகின்றன. இவை பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.
(ii) உணவு:
காளான்கள் அதிக அளவு புரதத்தையும் தாதுப் பொருள்களையும் கொண்டுள்ளன. பொதுவாக உண்ணக்கூடிய காளான் அகாரிகஸ் வகையைச் சார்ந்தது ஆகும்.
9.
(i) விதைகள் இரண்டு விதையிலைகளைக் கொண்டிருக்கும்.
(ii) இவை ஆணிவேர்த் தொகுப்புடனும் இலைகள் வலைப்பின்னல் நரம்பமைவுடனும் காணப்படும்.
10.
பாசிகளின் தாவர உடலமானது தாலஸ் என அழைக்கப்படுகிறது. அதாவது தாவர உடலமானது வேர், தண்டு, இலை என வேறுபடுத்த இயலாது.
11.
கேண்டிலா
12.
ஏழு
13.
பவுண்ட்
14.
சர். அலெக்ஸாண்டர் பிளம்மிங்
15.
ரைசோபியம், சயனோ பாக்டீரியா, நாஸ்டாக்
16.
குவியத் தொவுை f = 7 செமீ
வளைவு ஆரம் R = ?
R = 2f
= 2 \(\times\) 7 = 14 செமீ
வளைவு ஆரம் = 14 செமீ
17.
K = C + 273
K = 80 + 273 = 353 கெல்வின்
80°C = 353 கெல்வின்
18.
தவறு.
நிலக்கரியைக் கம்பியாக நீட்ட இயலாது.
19.
தவறு
உலோகங்கள் பொதுவாக நல்ல மின்கடத்திகள் மற்றும் நல்ல வெப்பக்கடத்திகள் ஆகும்.
20.
சரி
21.
உருளும் உராய்வு, நழுவு உராய்வு, நிலை உராய்வு.
22.
ஒளிச்சேர்க்கை ஒரு மீளாவினை. கார்பன்டை ஆக்சைடு, நீர் ஆகியவை சூரிய ஒளியின் முன்னிலையில் வினைபுரிந்து ஸ்டார்ச் என்னும் புதிய பொருளை உருவாக்குவதால் ஒளிச்சேர்க்கை ஒரு வேதிவினை ஆகும்.
23.
சுற்றுச்சூழலின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படும் நிகழ்வு மாசுபடுதல் எனப்படும்.
24.
வினைவேகமாற்றம் என்பது ஒரு வேதிவினையில் வினைவேகமாற்றியைச் சேர்த்து அந்த வேதிவினையின் வேகத்தை அதிகரிக்கும் முறை ஆகும். இவ்வினையில் வினைவேக மாற்றியானது வேதி வினைக்கு உட்படாமல் இருந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும்.
25.
(i) ஒரு வேதிமாற்றம் என்பது நிரந்தரமான மீளாத்தன்மையுடைய மற்றும் புதிய பொருட்களை உருவாக்கக்கூடிய மாற்றமாகும்.
(ii) வேதியியல் மாற்றங்கள், வேதிவினைகள் என்று அழைக்கப்படுகின்றன.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards