8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science பொருளியல் - பொது மற்றும் தனியார் துறைகள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - நீதித்துறை Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Important Questions And Answers Study Material - QB365

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
ஒலி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் அதிகரிக்கும்போது, பின்வருவனவற்றுள் எது உண்மையாக இருக்கும்?
உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்
உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி மாறாது
சத்தம் அதிகரிக்கிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்
உரப்பு குறைகிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்.
2.
மனித காதுக்குக் கேட்கக்கூடிய அதிர்வெண் வரம்பு
2Hz முதல் 2,000 Hz வரை
20Hz முதல் 2,000 Hz வரை
20 Hz முதல் 20,000 Hz வரை
200Hz முதல் 20,000 Hz வரை
3.
இரைச்சலை ஏற்படுத்துவது
அதிக அதிர்வெண் கொண்ட அதிர்வுகள்
வழக்கமான அதிர்வுகள்
ஒழுங்கான மற்றும் சீரான அதிர்வுகள்
ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்
4.
பொருந்தாத ஒன்றைத் கண்டுபிடி
ஹார்மோனியம்
புல்லாங்குழல்
நாதஸ்வரம்
வயலின்
5.
சித்தார் எந்த வகையான இசைக்கருவி?
கம்பி கருவி
தாள வாத்தியம்
காற்று கருவி
இவை எதுவும் இல்லை
6.
ஒலி அலைகளின் வீச்சு இதைத் தீர்மானிக்கிறது.
வேகம்
சுருதி
உரப்பு
அதிர்வெண்
7.
பின்வருவனவற்றில் அதிர்வுகளின் பண்புகள் யாவை?
(i)அதிர்வெண்
(ii) கால அளவு
(iii) சுருதி
(iv) உரப்பு
i மற்றும் ii
ii மற்றும் iii
(iii) மற்றும் (iv)
(i) மற்றும் (iv)
8.
ஒலி அலைகள் எதில் மிக வேகமாக பயணிக்கின்றன?
காற்று
உலோகங்கள்
வெற்றிடம்
திரவங்கள்
9.
அதிர்வுறும் கம்பியின் தடிமன் அதிகரித்தால் அதன் சுருதி ___________ .
10.
ஒலியின் சுருதி அதிர்வுகளின் ______ ஐச் சார்ந்தது.
11.
உங்களால் கேட்க முடியாதா உயர் அதிர்வெண் ஒலிகள் _______ என அழைக்கப்படுகின்றன.
12.
ஒலி______ வடிவத்தில் பயணிக்கின்றது.
13.
தனி ஊசலின் அதிர்வுகள் _______ என்றும் அழைக்கப்படுகின்றன.
14.
ஒலி _______ ஆல் உருவாக்கப்படுகிறது.
15.
ஒலி
16.
இன்ஃப்ராசோனிக்ஸ்
17.
காற்றில் ஒலியின் வேகம்
18.
மீயொலி
19.
கூற்று : சந்திரனின் மேற்பரப்பில் இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் பேச முடியாது.
காரணம் : சந்திரனில் வளிமண்டலம் இல்லை.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் உண்மை மற்றும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.
உ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
20.
கூற்று :மின்னல் தாக்கும்போது மின்னலை பார்த்த சிறிது நேரம் கழித்து ஒலி கேட்கப்படுகிறது.
காரணம் : ஒலியின் வேகத்தை விட ஒளியின் வேகம் அதிகம்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் உண்மை மற்றும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.
உ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
21.
மரங்களை நடுவது எவ்வாறு ஒலி மாசுபாட்டைக் குறைக்க உதவுகிறது?
22.
பின்வரும் சொற்களை வரையறுக்கவும்
அ)வீச்சு
ஆ) உரப்பு
23.
ஒலி மாசுபாட்டினைக் குறைக்க எடுக்க வேண்டிய இரண்டு நடவடிக்கைகளைக் குறிப்பிடுக?
24.
ஒலி மாசுபாட்டின் விளைவுகள் யாவை?
25.
இசைக்கும் இரைச்சலுக்கும் இடையிலான இரண்டு வேறுபாடுகளைத் தருக.
26.
மீயொலி என்றால் என்ன?
27.
ஒலியின் உரப்பை நான்கு மடங்கு அதிகரிக்க, அதிர்வுகளின் வீச்சு எவ்வளவு மாற்றப்பட வேண்டும்?
28.
ஒளி ஒலியை விட வேகமாக பயணிக்கிறது என்பதை நிரூபிக்க ஒரு உதாரணம் தருக.
29.
அதிர்வுகள் என்றால் என்ன?
30.
2 கிலோ ஹெர்ட்ஸ் அதிர்வெண் மற்றும் 15 செ.மீ அலைநீளமும் கொண்ட ஒலி அலை 1.5 கி.மீ தொலைவு கடப்பதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் யாது?
31.
மனித காதின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை விவரி.
32.
ஒலி மாசுபாட்டின் விளைவுகளைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
33.
அலையின் பண்புகளும் யாவை?
34.
ஒலி வெற்றிடத்தின் வழியாக பரவ முடியாது என்பதைக் காட்ட ஒரு சோதனையை விவரி
35.
500 ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட ஒரு அலை 200 மீ/வி வேகத்தில் பரவுகிறது எனில் அலைநீளம் என்ன?
36.
25மீ/வி வேகம் மற்றும் 12.5மீ அலைநீளம் கொண்ட இயந்திரவியல் அலையின் அதிர்வெண் என்ன?
37.
ஒரு ஒலி அலை 8 வினாடிகளில் 2000 மீ பயணிக்கிறது எனில் ஒலியின் வேகம் என்ன ?
38.
துப்பாக்கியால் சுடப்பட்ட ஒலியை ருத்விக் மற்றும் ருகா ஆகிய இருவரும் 2 வினாடிக்குப் பிறகு கேட்கிறார்கள். துப்பாக்கி சுடப்பட்ட தொலைவிலிருந்து எவ்வளவு தொலைவில் அவர்கள் இருக்கிறார்கள்? (காற்றில் ஒலியின் வேகம் 331 ms-1)
1.
(a)
உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்
2.
(c)
20 Hz முதல் 20,000 Hz வரை
3.
(d)
ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்
4.
(a)
ஹார்மோனியம்
5.
(a)
கம்பி கருவி
6.
(c)
உரப்பு
7.
(a)
i மற்றும் ii
8.
(b)
உலோகங்கள்
9.
( )
குறையும்
10.
( )
அதிர்வெண்ணை
11.
( )
மீயொலி
12.
( )
நெட்டலைகள்
13.
( )
சீரலைவு
14.
( )
அதிர்வுறும் துகள்களால்
15.
ஊடகம் தேவை
16.
அதிர்வெண் 20 Hzக்கு கீழ் உள்ள ஒலி
17.
331 மீ/வி
18.
அதிர்வெண் 20000 Hz-க்கு மேல் உள்ள ஒலி
19.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் உண்மை மற்றும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
20.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் உண்மை மற்றும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
21.
மரங்கள் சிறந்த ஒலி உறிஞ்சும் தன்மை கொண்டதால் மரங்களை நடுவதன் மூலமலாக ஒலி மாசுபாட்டினைக் குறைக்கலாம்.
22.
அ) வீச்சு : அலையின் வீச்சு என்பது மையப்புள்ளியில் இருந்து துகளின் அதிகபட்ச இடப்பெயர்ச்சி ஆகும்.
ஆ) உரப்பு : மெல்லிய அல்லது பலவீனமான ஒலியை உரத்த ஒலியிலிருந்து வேறுபடுத்தும் பண்பு உரப்பு எனப்படும். உரப்பு வீச்சை சார்ந்தது.
23.
(i) சமூக, மத மற்றும் அரசியல் விழாக்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த கடுமையான வழிகாட்டுதல்கள் அமைக்கப்படவேண்டும்.
(ii) அனைத்து வாகனங்களும் குறைவான ஒலியெழுப்பும் சைலன்சர் கொண்டிருக்க வேண்டும்.
24.
எரிச்சல், மன அழுத்தம், பதட்டம், காது கேளாமை, கவனமின்மை, மயக்கம், உயர் இரத்த அழுத்தம் அல்லது சட்டென கோபப்படுதல் போன்ற கோளாறுகள் உருவாகும்.
25.
| இசை | இரைச்சல் |
| காதுக்கு இனிமையானது | காதுக்கு விரும்பத்தகாதது |
| குறிப்பிட்ட கால இடைவெளியில் உருவாக்கப்படும் |
ஒழுங்கற்ற கால இடைவெளியில் உருவாக்கப்படும் |
26.
2000 ஹெர்ட்ஸை விட அதிக அதிர்வெண் கொண்ட ஒலி மீயொலி என அழைக்கப்படுகிறது. வௌவால்கள், நாய்கள், டால்பின்கள் போன்ற விலங்குகள் மீயொலிகளை கேட்க முடிகிறது.
27.
உரப்பு \(\infty\) வீச்சு2
வீச்சு \(\infty\)
வீச்சு \(\infty\) √4
ஒலியின் உரப்பை நான்கு மடங்கு அதிகரிக்க, அதிர்வுகளின் வீச்சை இரண்டு மடங்கு அதிகரிக்க வேண்டும்.
28.
வானில் மின்னலும் இடியும் ஒரே நேரத்தில் தான் உருவாகின்றன. ஆனால் மின்னலைப் பார்த்து சில விநாடிகளுக்கு பிறகே இடியை கேட்க முடியும்.
29.
ஒரு பொருளின் முன்னும் பின்னுமான இயக்கம் அதிர்வு எனப்படும். இது சுற்றுப் புறத்திற்கு கடத்தப்படும்.
30.
கொடுக்கப்பட்டது: d = 1.5 Aமீ = 1500 மீ; \(\lambda\) = 15 செமீ = 0.15 மீ; n = 2கி.ஹெர்ட்ஸ் = 2000 Hz
v = d/t = n\(\lambda\)
t = d/n\(\lambda\) = 1500/(2000 \(\times\) 0.15) = 3/(4 \(\times\) 0.15) = 3/0.6 = 30/6 = 5
t = 5வினாடிகள்
31.
(i) நாம் காதுகள் வழியாக ஒலியைக் கேட்கிறோம்.
(ii) மனித காது காற்றின் உயர் அதிர்வெண் அதிர்வுகளை உள்ளிழுத்து அதிர்வடைகிறது.
(iii) மனித காதுகளின் வெளிப்புறம் மற்றும் புலப்படும் பகுதி பின்னா என்று அழைக்கப்படுகிறது.
(iv) இது சுற்றுப்புறத்தில் இருந்து ஒலியை சேகரிக்கும்படி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அழைக்கப்படுகிறது.
(v) பின்னர் அது காது கால்வாய் வழியாக, காது டிரம்மை அடையும்.
(vi) உள் காதில் இருந்து அதிர்வுகள், சிக்னல்கள் வடிவில் மூளைக்கு அனுப்பப்படுகின்றன. மூளை இந்த சமிக்ஞைகளை ஒலிகளாக உணர்கிறது.
32.
(i) விழாக்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு கடுமையான வழிகாட்டுதல்கள் அமைக்கப்பட வேண்டும்.
(ii) அனைத்து வாகனங்களும் குறைவான ஒலியெழுப்பும் சைலன்ஸர் பொருத்தப்பட வேண்டும்.
(iii) வாகனம் ஓட்டும் போது அதிகப்படியாக ஒலி எழுப்பும் கருவிகளை தவிர்க்க மக்களை ஊக்குவிக்க வேண்டும்.
(iv) தொழிற்துறை இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
(v) அனைத்து தகவல்தொடர்பு சாதனங்களும் குறைவான ஒலியில் இயக்கப்பட வேண்டும்.
(vi) மரங்களை நடவு செய்வதற்கும், திரைச்சீலைகள் மற்றும் ஒலி உறிஞ்சும் பொருட்களை உபயோகப்படுத்தவும் மக்களை ஊக்குவிக்க வேண்டும்.
33.
i) உரப்பு:
1. மெல்லிய அல்லது பலவீனமான ஒலியை உரத்த ஒலியிலிருந்து வேறுபடுத்தும் ஒலியின் பண்பே உரப்பு என வரையறுக்கப்படுகிறது.
2. ஒலியின் உரப்பு அதன் வீச்சைப் பொறுத்தது.
3. அதிக அலைவீச்சு சப்தமாகவும், குறைந்த அலைவீச்சு மெல்லிய ஒலியாகவும் இருக்கும்.
4. ஒலியின் உரத்தலின் அலகு டெசிபல் (dB) ஆகும்.
ii) சுருதி:
1. ஒரு தட்டையான ஒலி மற்றும் மென்மையான ஒலியை வேறுபடுத்தி அறிய உதவும் பண்பு சுருதி ஆகும்.
2. அதிர்வெண் அதிகமாக இருக்கும் போது சுருதி அதிகமாக இருக்கும்.
3. அதிர்வெண் குறைவாக இருக்கும் போது சுருதி குறைவாக இருக்கும்.
4. உயர் சுருதி ஒரு ஒலிக்கு மென்மையை கொடுக்கிறது.
5. உயர் சுருதிக்கு எ.கா. : விசில், மணி, வயலின், பெண் குரல்
6. குறைந்த சுருதிக்கு எ.கா. : டிரம், மிருதங்கம், ஆண் குரல்
iii) தரம்:
1. ஒரே சுருதி மற்றும் வீச்சு கொண்ட இரண்டு ஒலிகளை வேறுபடுத்தி அறிய உதவும் பண்பாகும்.
2. எ.கா: ஒவ்வொரு சுருவி உருவாக்கும் ஒலியையும் தரத்தின் மூலம் தெளிவாக அடையாளம் காணலாம்.
34.
(i) மணி ஜாடி மற்றும் அலைபேசியை எடுத்துக் கொள்ளுங்கள்.
(ii) அலைபேசியில் இசையை இசைக்க செய்து ஜாடியில் வைக்கவும்.
(iii) இப்போது ஒரு வெற்றிட பம்பைப் பயன்படுத்தி மணி ஜாடியிலிருந்து காற்றை வெளியேற்றவும்.
(iv) ஜாடியிலிருந்து மேலும் மேலும் காற்று அகற்றப்படுவதால் அலைபேசியிலிருந்து வரும் ஒலி குறைந்து கொண்டே வரும்.
(v) இறுதியில் நின்று விடும்.
(vi) இந்தச் சோதனையிலிருந்து ஒலி வெற்றிடத்தின் வழியாக பரவ முடியாது பது தெளிவாகத் தெரிகிறது.
35.
கொடுக்கப்பட்டது v = 200 மீவி-1 n = 500 Hz
v = n\(\lambda\)
\(\lambda\) = v / n = 200 / 500 = 0.4
\(\lambda\) = 0.4 மீ அல்லது 40 செமீ
36.
கொடுக்கப்பட்டது: v = 25மீவி-1 \(\lambda\) = 12.5 மீ
v=n\(\lambda\)
n =v / \(\lambda\) = 25 / 12.5 = 2
n = 2 Hz
37.
கொடுக்கப்பட்டது: d = 2000 மீ t = 8 வி
V = தூரம் / காலம் = d / t
v = 2000/8 = 250
v = 250 மீவி-1
38.
கொடுக்கப்பட்டது: v = 331 மீவி-1 t = 2 வி
V = தூரம் / காலம் = d / t
d = v \(\times\) t = 331\(\times\) 2 = 662
d = 662 மீ
8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - புவிப்படங்களைக் கற்றறிதல் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - தொழிலகங்கள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science வரலாறு - காலங்கள் தோறும் இந்தியப் பெண்களின் நிலை Important Questions And Answers Study Material - QB365
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards