8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
இரண்டு சமதள ஆடிகளுக்கிடைப்பட்ட கோணம் 45 எனில், தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையினைக் காண்க.
2.
நீரின் ஒளிவிலகல் எண் 4/3 மற்றும் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் 3/2. நீரின் ஒளிவிலகல் எண்ணைப் பொறுத்து கண்ணாடியின் ஒளிவிலகல் எண்ணைக் காண்க.
3.
ஒன்றுக்கொன்று 90° கோண சாய்வில் வைக்கப்பட்ட இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கு இடையே தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையைக் காண்க.
4.
பொருளின் அளவும், பிம்பத்தின் அளவும் சமமாக இருந்தால், பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் _____
ஈறிலாத் தொலைவு
F ல்
F க்கும் P க்கும் இடையில்
C ல்
5.
குவியதொலைவானது _______ பாதியளவு இருக்கும்.
வளைவு மையத்தில்
அச்சுக் கோட்டில்
வளைவு ஆரத்தில்
இவற்றில் எதுவுமில்லை
6.
கோளக ஆடியின் வடிவியல் மையம் _____ எனப்படும்.
7.
ஒளிக் கதிர் ஒன்றின் படுகோணத்தின் மதிப்பு 45° எனில் எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு _____
8.
அழகு நிலையங்களில் அலங்காரம் செய்யப் பயன்படும் கோளக ஆடி ______
9.
ஒளிவிலகல் எண்
10.
ஒளிவிலகல் எண்
11.
ஸ்நெல் விதி
12.
ஒழுங்கான எதிரொளிப்பு
13.
குவி ஆடி
14.
ஒளிவிலகலுக்கான ஸ்நெல் விதியினைக் கூறுக.
15.
பெரிஸ்கோப் செயல்படும் விதம் பற்றி விவரிக்கவும்.
16.
ஒளி எதிரொளித்தல் என்றால் என்ன? ஒழுங்கான மற்ற ஒழுங்கற்ற எதிரொளிப்புக்களைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
1.
கண்ணாடிகளுக்கு இடைப்பட்ட சாய்வு கோணம் 0 = 45°
பிம்பங்களின் எண்ணிக்கை = \(\frac { { 360 }^{ o } }{ \theta } -1\)
= \(\frac { { 360 }^{ o } }{ { 45 }^{ o } } -1\)
= 8 -1
பிம்பங்களின் எண்ணிக்கை = 7
2.
நீரின் μ = 4/3
கண்ணாடியின் μ = 3/2

\(\frac { \frac { 3 }{ 2 } }{ \frac { 4 }{ 3 } } =\frac { 9 }{ 8 } \)=1.125
3.
இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கு இடைபட்ட சாய்வுக்கோணம் \(\theta\) = 90°
தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை = ?
தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை = \(\frac{360^{\circ}}{\theta}-1\)
பிம்பங்களின் எண்ணிக்கை = \(\frac{360^{\circ}}{90^{\circ}}-1\)
= 4 - 1 = 3
தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை = 3
4.
(d)
C ல்
5.
(c)
வளைவு ஆரத்தில்
6.
( )
ஆடி மையம்
7.
( )
45o
8.
( )
குழி ஆடி
9.
கலைடாஸ்கோப்
10.
c / v = μ
11.
Sin i / Sin r = μ
12.
சமதளக் கண்ணாடி
13.
பின்னோக்குப் பார்வை ஆடி
14.
ஒளிவிலகலுக்கான ஸ்நெல் விதி:
(i) படுகதிர், விலகுகதிர் மற்றும் அவை சந்திக்கும் புள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை அனைத்தும் ஒரே தளத்தில் அமையும்.
(ii) படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் (i), விலகுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் (r) இடையே உள்ள தகவு, ஒளிவிலகல் எண்ணிற்குச் சமமாகும். இது ஒரு மாறிலி ஆகும்.
\(\frac { sin\quad i }{ sin\quad r } =\mu \)
15.
பெரிஸ்கோப்:
(i) ஒரு பொருளுக்கு அல்லது நீர்மூழ்கிக் கப்பலுக்கு மேலாகவோ அல்லது அதைச் சுற்றியோ உள்ள பிற பொருள்களையோ அல்லது கப்பல்களையோ பார்ப்பதற்கான கருவியே பெரிஸ்கோப் ஆகும்.
செயல்படும் விதம்
(i) ஒளி எதிரொளித்தல் விதிகளின் அடிப்படையில் இக்கருவி செயல்படுகிறது.
(ii) இதன் அமைப்பானது நீண்ட வெளிப்பகுதியையும், உட்பகுதியையும் கொண்டது.
(iii) உட்பகுதியில் 45° கோணச் சாய்வில் ஒவ்வொரு முனையிலும் கண்ணாடி அல்லது முப்பட்டகமானது பொருத்தப்பட்டுள்ளது.
(iv) நீண்ட தொலைவில் உள்ள பொருளிலிருந்து வரும் ஒளியானது பெரிஸ்கோப்பின் மேல்முனையில் உள்ள கண்ணாடியில் பட்டு, செங்குத்தாகக் கீழ்நோக்கி எதிரொளிக்கப்படுகிறது.
(v) இவ்வாறு வரும் ஒளியானது பெரிஸ்கோப்பின் கீழ்ப்பகுதியில் உள்ள கண்ணாடியால் மீண்டும் ஒருமுறை எதிரொளிக்கப்பட்டு கிடைமட்டத் திசையில் சென்று பார்ப்பவரின் கண்களை அடைகிறது.
(vi) சிக்கலான அமைப்புடைய சிலவகைப் பெரிஸ்கோப்களில் உயர் காட்சித்திறனைப் பெறுவதற்காக, கண்ணாடிகளுக்குப் பதிலாக ஒளியிழைகள் பயன்படுத்தப்படுகின்றன.
(vii) பெரிஸ்கோப்பின் பயன்பாட்டைப் பொறுத்து அதன் உட்பகுதியில் உள்ள கண்ணாடிகளுக்கிடையே உள்ள இடைவெளியானது மாற்றி அமைக்கப்படுகிறது.
16.
(1) பளபளப்பான, மென்மையான பரப்பில் பட்டு ஒளி திரும்பும் நிகழ்வு ஒளிஎதிரொளித்தல் எனப்படும்.
(2) எதிரொளிக்கும் பரப்பைப் பொருத்து எதிரொளித்தல் இரு வகைப்படும்.
(i) ஒழுங்கான எதிரொளிப்பு
(ii) ஒழுங்கற்ற எதிரொளிப்பு
ஒழுங்கான எதிரொளிப்பு:
(i) வழவழப்பான பரப்பின் மீது ஓர் ஒளிக்கற்றையானது விழும் போது நிகழும் எதிரொளிப்பு ஒழுங்கான எதிரொளிப்பு ஆகும்.
(ii) எதிரொளிப்பிற்குப் பின் ஒளிக்கதிர்கள் ஒன்றுக்கொன்று இணையாக உள்ளது.
(iii) ஒழுங்கான எதிரொளிப்பில் ஒவ்வொரு கதிரின் படுகோணமும் எதிரொளிப்புக் கோணமும் சமமாக உள்ளது.
(iv) எதிரொளித்தல் விதியானது பின்பற்றப்படுவதால் இதில் தெளிவான பிம்பம் கிடைக்கிறது.
(v) இது கண்ணாடி எதிரொளிப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
(vi) (எ.கா) சமதளக் கண்ணாடியில் உருவாகும் எதிரொளிப்பு.
ஒழுங்கற்ற எதிரொளிப்பு:
(i) சொரசொரப்பான (அல்லது) ஒழுங்கற்ற பரப்பின் மீது ஒளியானது படும்போது ஒவ்வொரு ஒளிக்கதிரும் வெவ்வேறு கோணத்தில் எதிரொளிக்கும். இது ஒழுங்கற்ற எதிரொளிப்பு எனப்படும்.
(ii) ஒழுங்கற்ற எதிரொளிப்பில், ஒவ்வொரு ஒளிக்கதிரின் படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் சமமாக இருக்காது.
(iii) ஒளி எதிரொளிப்பு விதிகள் சரியாக பொருந்தவில்லை. அதனால் பிம்பம் தெளிவாகக் கிடைக்காது.
(iv) இது பரவலான எதிரொளிப்பு என்றும் அழைக்கப்படும்.
(v) (எ.கா) சுவரின் மீது ஏற்படும் எதிரொளிப்பு
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards