8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
டெரிடோஃபைட்டுகளின் ஏதேனும் நான்கு பண்புகளை எழுதுக.
2.
பிரையோ ஃபைட்டுகளில் எத்தனை வகுப்புகள் உள்ளது? அவை யாவை ?
3.
பாசிகளுக்கும் பூஞ்சைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
4.
பாசிகளின் ஏதேனும் மூன்று பொருளாதார முக்கியத்துவங்களை எழுதுக.
5.
இயற்கை வகைப்பாட்டு முறை பற்றி சுருக்கமாக எழுதுக.
6.
ஜிம்னோஸ்பெர்ம்களின் பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
7.
ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களுக்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக.
8.
ஒரு விதை யிலை மற்றும் இரு விதை யிலை தாவரங்களுக்கு இடையே உள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளை எழுதுக.
9.
பெந்தம் ஹுக்கர் வகை பாட்டு சுருக்க அட்டவணையை வரைக.
10.
மருத்துவத் தாவரங்களின் பெயர்களை எழுதி அவற்றின் பயன்களை விவரிக்கவும்.
1.
(i) இவை முதன்முதலில் தோன்றிய உண்மையான நிலத்தாவரங்கள். கடத்தும் திசுக்களான சைலம் மற்றும் ஃபுளோயம் இவற்றில் உள்ளன. எனவே இவை கடத்துத்திசு பூவாத்தாவரம் என அழைக்கப்படுகின்றன.
(ii) இவற்றில் சந்ததி மாற்றம் நடைபெறுகிறது. இருமய ஸ்போரோஃபைட் நிலையானது ஒருமய கேமீட்டோஃபைட் நிலையுடன் சந்ததி மாற்றம் நடைபெறுகிறது.
(iii) தாவர உடலமானது ஸ்போரோஃபைட் எனப்படும். இது தாவரத்தின் ஓங்குநிலை ஆகும். இது வேர், தண்டு, இலை எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
(iv) ஸ்போரோஃபைட்டானது ஸ்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. ஸ்போர்கள், வித்தகத்தினுள் உருவாகின்றன.
2.
பிரையோபைட்டுகளில் மூன்று வகுப்புகள் உள்ளன. அவை
(i) வகுப்பு 1 ஹிப்பாட்டிக்கே (ஈரல் வடிவம்) எ.கா. ரிக்சியா.
(ii) வகுப்பு 2 ஆந்தோசெரட்டே (கொம்பு வடிவம்) எ.கா. ஆந்தோசெரஸ்
(iii) வகுப்பு 3 மஸ்கி (மாஸ்கள்) எ.கா. ஃபியூனேரியா
3.
| வ. எண் | பாசிகள் | பூஞ்சைகள் |
| 1. | பாசிகள் தற்சார்பு உயிரிகள் | பூஞ்சைகள் பிறச்சார்பு உயிரிகள் |
| 2. | நிறமிகள் உள்ளது | நிறமிகள் இல்லை |
| 3. | சேகரிக்கும் உணவு ஸ்டார்ச் | சேகரிக்கும் உணவு கிளைக்கோஜன் மற்றும் எண்ணெய் |
| 4. | சில பாசிகள் புரோகேரியாட்டிக் செல் அமைப்பைப் பெற்றுள்ளது. எ.கா. சயனோ பாக்டீரியா (நாஸ்டாக்) | அனைத்தும் யூகேரியாட்டிக் செல் அமைப்பைக் கொண்டுள்ளன. எ.கா. அகாரிகஸ் |
4.
(1) அகார் அகார்: அகார் அகார் என்பது சிவப்பு பாசிகளிலிருந்து எடுக்கப்படுகிறது. இது ஆய்வகங்களில் வளர்ச்சி ஊக்கியாக விளங்குகிறது. எ.கா. ஜெலீடியம், கிரேசிலேரியா.
(2) விண்வெளிப் பயணத்தில் பாசிகள்: விண்வெளிப் பயணத்தின் போது குளோரெல்லா ஃபைரினாய்டோசா என்னும் பாசி, கார்பன் டை ஆக்ஸைடை அகற்றுவதற்கும் மனிதக் கழிவுகளை மட்கச் செய்வதற்கும் பயன்படுகிறது.
(3) தனிசெல் புரதம் (SCP): சில ஒரு செல் பாசிகள் மற்றும் நிலப் பச்சைப் பாசிகள் புரதத்தை உற்பத்தி செய்கின்றன. எ.கா. குளோரெல்லா, ஸ்பைருலினா.
5.
(i) தாவரங்களின் புறத்தோற்றப் பண்பு இனப்பெருக்கப் பண்பின் அடிப்படையில் இயற்கை வகைப்பாட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது.
(ii) உலர் தாவரத் தொகுப்பு மற்றும் தாவரவியல் பூங்காக்களில் தாவரங்களை வகைப்படுத்த இம்முறை பயன்படுத்தப்படுகிறது.
(iii) எ.கா. பெந்தம் மற்றும் ஹூக்கர் வகைப்பாட்டியல் முறை
6.
(i) ஊசியிலைத் தாவரங்களின் மரக்கட்டையானது தாள் தொழிற்சாலைகளில் தாள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. எ.கா. பைனஸ், அகாத்திஸ்
(ii) ஊசியிலைத் தாவரங்களின் மென்கட்டைகள் கட்டுமானத் தொழிலுக்கும், பொருள்களைப் பொதிவதற்கும் மற்றும் ஒட்டுப்பலகைத் தயாரிப்பிற்கும் பயன்படுகிறது. எ.கா. செட்ரஸ், அகாதிஸ்
(iii) பைனஸ் தாவரத்தின் பசையிலிருந்து பெறப்படும் டர்பன்டைன், வண்ணப்பூச்சு தயாரிப்பிற்குப் பயன்படுகிறது. மேலும் இது மூட்டுவலி மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.
(iv) பைனஸ் ஜெரார்டியானா என்னும் தாவரத்தின் விதைகள் உண்பதற்குப் பயன்படும்.
(v) எஃபிடிரின் என்னும் அல்கலாய்டு எஃபிட்ரா என்னும் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இது ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
(vi) அராவ்கேரியா பிட்வில்லீ என்னும் தாவரம் அழகுத் தாவரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
7.
| வ.எண் | ஜிம்னோஸ்பெர்ம் | ஆஞ்சியோஸ்பெர்ம் |
| 1. | ஜிம்னோஸ்பெர்ம் திறந்த விதைத் தாவரங்கள். சூலானது சூற்பையால் சூழப்பட்டிருப்பதில்லை | ஆஞ்சியோஸ்பெர்ம் மூடிய விதைத் தாவரங்கள். சூலானது சூற்பையால் சூழப்பட்டிருக்கும். |
| 2. | நீரைக் கடத்தக் கூடிய திசு ட்ரக்கீடுகள் ஆகும். | நீரைக் கடத்தும் சைலமானது சைலக் குழாய்கள், டிரக்கீடு, சைலம் பாரன்கைமா மற்றும் சைலம் நார்களைக் கொண்டுள்ளது. |
| 3. | உணவைக் கடத்தக் கூடிய திசு சல்லடை செல்லாகும். | உணவைக் கடத்தும். ஃபுளோயமானது சல்லடைக்குழாய், ஃபுளோயம் பாரன்கைமா, துணைசெல்கள் மற்றும் ஃபுளோயம் நார்களைக் கொண்டுள்ளது. |
| 4. | இவை பூவாத்தாவரங்கள் | இவை பூக்கும் தாவரங்கள் |
| 5. | கூம்புகள் பெரும்பாலும் ஒருபால் தன்மை உடையவை. அரிதாக இருபால் தன்மை உடையவை. |
மலர்கள் பெரும்பாலும் இருபால் தன்மை உடையவை; அரிதாக ஒருபால் தன்மை உடையவை. |
| 6. | ஒரே ஒரு உற்பத்தி வகைக் கருவுறுதல் நடைபெறும். | இரட்டைக் கருவுறுதல் நடைபெறும் |
8.
| எண் | ஒரு விதையிலைத் தாவரங்கள் | இரு விதையிலைத் தாவரங்கள் |
| 1. | விதை, ஒரு விதையிலையைக் கொண்டுள்ளது. | விதைகள் இரண்டு விதையிலைகளைக் கொண்டிருக்கும். |
| 2. | இத்தாவரங்கள் சல்லிவேர்த் தொகுப்புடன் காணப்படுகின்றன. | இத்தாவரங்கள் ஆணிவேர்த் தொகுப்புடன் காணப்படுகின்றன. |
| 3. | இலைகள் இணைப்போக்கு நரம்பமைவுடன் காணப்படுகின்றன | இலைகள் வலைப்பின்னல் நரம்பமைவுடன் காணப்படுகின்றன |
| 4. | மலர்கள் மூன்று அடுக்கு உடையவை | மலர்கள் நான்கு அல்லது ஐந்து அங்கங்களைக் கொண்டிருக்கும் |
| 5. | அல்லி மற்றும் புல்லி இதழ்கள் பிரிக்கப்படாமல் ஒரே வட்டத்தில் அமைந்திருக்கும். | அல்லி மற்றும் புல்லி. என இரண்டு இதழ் அடுக்குகளாக பிரிக்கப்பட்டிருக்கும். |
| 6. | மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் காற்றின் மூலம் நடைபெறும். எ.கா. புல், நெல் | மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் பூச்சிகள் மூலம் நடைபெறும். எ.கா. அவரை மாமரம் |
9.
10.
i) அகாலிஃபா இன்டிகா (குப்பைமேனி)
(i) இது யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சார்ந்தது.
(ii) இலையை அரைத்துப் பெறப்படும் பசை, தோலில் உள்ள கொப்புளங்களை ஆற்றுகிறது.
(iii) இலைச் சாற்றை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள உருளைப்புழுக்கள் அழியும்.
ii) ஏகில் மார்மிலோஸ் (வில்வம்)
(i) இது ரூட்டேசி குடும்பத்தைச் சார்ந்தது
(ii) இதன் காயானது செரிமானத்தைச் சரி செய்கிறது.
(iii) இது தீராத வயிற்றுப்போக்கு, சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.
iii) சொலானம் டிரைலொபேட்டம் (தூதுவளை)
(i) இது சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
(ii) இதன் இலைகளும் கனிகளும் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.
(iii) இது காசநோய் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
iv) ஃபில்லாந்தஸ் அமாரஸ் (கீழாநெல்லி)
(i) இது யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
(ii) முழுத்தாவரமும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
(iii) இது கல்லீரலுக்கு வலிமையைக் கொடுத்து, கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
V) அலோ வெரா (சோற்றுக் கற்றாழை)
(i) இது லில்லியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
(ii) இதன் இலைகள் மூலநோய் மற்றும் தோலில் தோன்றும் அழற்சியைக் குணப்படுத்துகிறது.
(iii) இது வயிற்றுப் புண்ணுக்குரிய மருந்தாகவும் பயன்படுகிறது.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards