8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
கொடுக்கப்பட்டுள்ள அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளை வேதிவினை நிகழத் தேவைப்படும் காரணிகளின் அடிப்படையில் வகைப்படுத்துக.
அ) விழாக்காலங்களில் பட்டாசு வெடித்தல்.
ஆ) வெயிலில் தொடர்ந்து துணிகளை உலர்த்தும்போது அவற்றின் நிறம் மங்குதல்.
இ) கோழி முட்டைகளைச் சமைத்தல்.
ஈ) பேட்டரிகளை மின்னேற்றம் செய்தல்
2.
அனைத்து பழங்களும், காய்கறிகளும் பழுப்பாதல் நிகழ்வுக்கு உள்ளாகின்றனவா? விளக்குக.
3.
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் அமில மழை உருவாகிறது என்பதை குறித்து விவாதிக்க.
4.
புவி வெப்பமாதலுக்கு படிம எரிபொருட்களை எரித்தலே காரணம் என்பதை நியாயப்படுத்துக.
5.
ஒரு பேக்கரியில் கேக்குகள் மற்றும் பன்கள் தயாரிப்பில் ஈஸ்ட்டின் பங்கு என்ன என்பதை விளக்குக.
6.
வேதிவினையில் வெப்பம், ஒளி, ஒலி மற்றும் அழுத்தம் உருவாதல் பற்றி விவரி.
7.
ஒரு வேதிவினை நடைபெறுவதற்கான ஏதேனும் மூன்று நிபந்தனைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
8.
மூன்று வகையான மாசுபடுதல்களை எடுத்துக்காட்டுடன் விவரிக்க?
1.
அ) விழாக்காலங்களில் பட்டாசு வெடித்தல். - வெப்பம்
ஆ) வெயிலில் தொடர்ந்து துணிகளை உலர்த்தும்போது அவற்றின் நிறம் மங்குதல். - வெப்பம்
இ) கோழி முட்டைகளைச் சமைத்தல். - வெப்பம்
ஈ) பேட்டரிகளை மின்னேற்றம் செய்தல் - மின்சாரம்
2.
இல்லை, அனைத்து பழங்களும், காய்கறிகளும் பழுப்பாதல் நிகழ்வுக்கு உள்ளாவதில்லை.
(i) ஆப்பிள் போன்ற பழங்களின் செல்களில் டைரோசினேஸ் என்ற என்சைம் உள்ளது.
(ii) அது ஆக்சிஜனுடன் தொடர்புக்கு வரும் பொழுது பழங்களிலுள்ள பீனாலிக் சேர்மங்களை பழுப்பு நிறமிகளாக மாறச் செய்கின்றன.
(iii) எனவே டைரோசினேஸ் என்சைம் உடைய பழங்கள் மட்டுமே பழுப்பாதல் நிகழ்வுக்கு உள்ளாகின்றன.
3.
சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் காற்றில் வெளியிடப்படும் பொழுது நிகழும் வேதிமாற்றத்தால் அமிலமழை உண்டாகிறது. வாகனம் வெளியிடும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகையினால் பெருமளவு சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் வளிமண்டலக் காற்றில் கலக்கின்றன. இது அமில மழைக்கு காரணமாக அமைகிறது.
4.
படிம எரிபொருட்களை பயன்படுத்தும் போது அவை அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுகின்றன. இவை புவியின் சராசரி வெப்பநிலையை அதிகரித்து புவி வெப்பமாதலுக்கு காரணமாக அமைகின்றன.
5.
(i) ஈஸ்ட் ஒரு உயிரி வினைவேகமாற்றி, கேக்குகள் மற்றும் பன்கள் தயாரிப்பில் ஈஸ்ட் சேர்க்கப்படும் பொழுது,
அ) நொதித்தல் செயலைத் துரிதப்படுத்துகிறது.
ஆ) வாயுவை வெளியிட்டு கேக் மாவை உப்பச் செய்கிறது.
இ) கேக் பஞ்சு போல் மிருதுவாக வரக் காரணமாகிறது.
ஈ) கேக்கிற்கு தனித்துவமான மணத்தைத் தருகிறது.
6.
வெப்பம் உருவாதல்:
(i) வேதிவினைகள் வெப்ப ஆற்றலை உருவாக்குகின்றன. இவ்வினைகள் வெப்ப உமிழ் வினைகள் எனப்படும். (எ.கா) சுட்ட சுண்ணாம்பு நீரைச் சேர்க்கும் பொழுது வெப்பம்
நிறைய வெளிப்பட்டு நீற்றுச் சுண்ணாம்பைத் தருகிறது.
ஒளி உருவாதல்:
(i) சில வேதிவினைகள் ஒளியை உருவாக்குகின்றன. (எ.கா) ஒரு மெக்னீசியம் நாடாவின் சிறு துண்டினை சுடரில் காட்டும் பொழுது அது எரிந்து கண்ணைக் கூசும் ஒளியையும்
வெப்பத்தையும் தருகிறது.
ஒலி உருவாதல்:
(i) சில வேதிவினைகள் ஒலியை உருவாக்குகின்றன. (எ.கா) வெடிகளில் உள்ள வேதிப்பொருள்கள் வினைபட்டு வெடித்து ஒலியை உருவாக்குகின்றன.
அழுத்தம் உருவாதல்:
(i) சில வேதிவினைகள் மூடிய கலனில் நிகழும் பொழுது வாயுக்கள் உருவாவதன் காரணமாக அழுத்தம் அதிகமாகி அவ்வழுத்தம் குறிப்பிட்ட அளவை மிஞ்சும் பொழுது கலன் வெடிக்கிறது. (எ.கா) வெடிகுண்டுகள், பட்டாசுகள் இந்த அடிப்படையில் செயல்படுகின்றன.
7.
i) இயல் நிலையில் சேர்தல்:
சில வேதிவினைகள் அவற்றின் வினைபடுபொருள்கள் இயல்நிலையில் தொடர்புக்கு வரும் பொழுது நிகழ்கிறது. எ.கா: சுட்ட சுண்ணாம்பு நீருடன் தொடர்பு கொள்ளும்
பொழுது நீற்றுச் சுண்ணாம்பு உருவாகிறது.
ii) கரைசல் நிலையில் உள்ளபோது நிகழும் வேதிவினைகள்:
சில வேதிவினைகளில் வினைபடு பொருள்கள் திண்மநிலையில் இருக்கும் பொழுது நிகழாமல் கரைசல் நிலையில் இருக்கும் பொழுது நிகழ்கின்றன. எ.கா: சில்வர் நைட்ரேட் கரைசலை சோடியம் குளோரைடு கரைசலுடன் சேர்க்கும் பொழுது வேதிவினை நிகழ்ந்து வெண்மையான சில்வர் குளோரைடு வீழ்படிவும், சோடியம் நைட்ரேட் கரைசலும் கிடைக்கின்றன.
iiii) மின்சாரம் மூலம் நிகழும் வேதிவினைகள்:
சில வேதிவினைகள் மின்சாரத்தைக் கொண்டு மட்டுமே நிகழும். இவ்வினைகள் மின்வேதிவினைகள் (அ) மின்னாற்பகுத்தல் வினைகள் எனப்படும். எ.கா: பிரைன் மின்னாற்பகுத்தலுக்கு உட்படும் பொழுது குளோரின், ஹைட்ரஜன் வாயுக்கள் வெளிவருகின்றன. சோடியம் ஹைட்ராக்சைடு கூடுதலாக உருவாகிறது.
8.
| வ. எண் | மாசுபடுதல் வகை | மாசுபடுதலை ஏற்படுத்தும் வேதிப்பொருள்கள் | விளைவுகள் |
| 1 | காற்று மாசுபாடு | கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, சல்பர், நைட்ரஜன் ஆக்சைடுகள், குளோரோ புளோரோ கார்பன்கள், மீத்தேன் போன்றவை. | அமில மழை, புவி வெப்பமயமாதல், சுவாசக் கோளாறுகள் போன்றவை. |
| 2 | நீர் மாசுபாடு | வேதிப்பொருள்கள் கொண்ட கழிவுநீர் (சாயப்பட்டறைகள்), டிடர்ஜெண்டுகள், கச்சா எண்ணெய் போன்றவை. | நீரின் தரம் குறைதல், தோல் நோய்கள் போன்றவை. |
| 3 | நில மாசுபாடு | யூரியா போன்ற உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லிகள் போன்றவை. | பயிரிடும் நிலம் கெட்டுப் போதல், புற்றுநோய், சுவாச நோய்கள். |
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards