8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
மூன்று வகையான மாசுபடுதல்களை எடுத்துக்காட்டுடன் விவரிக்க?
2.
காற்றில் ஒளியின் திசைவேகம் 3 × 108 மீவி-1 மற்றும் ஊடகத்தின் ஒளிவிலகல் எண் 1.5 எனில் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்தினைக் காண்க.
3.
பெரிஸ்கோப் செயல்படும் விதம் பற்றி விவரிக்கவும்.
4.
குழிஆடியில் தோன்றும் பிம்பங்களைப் பற்றி விவரிக்கவும்.
5.
உராய்வின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
6.
சவ்வூடு பரவலை உதாரணத்துடன் விளக்குக.
7.
நுண்ணுயிரிகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பொதுவான நோய்கம் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
8.
பாக்டீரியா மற்றும் அதன் அமைப்பினைப் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
9.
மருத்துவத் தாவரங்களின் பெயர்களை எழுதி அவற்றின் பயன்களை விவரிக்கவும்.
10.
அடிப்படை அளவுகளை அவற்றின் அலகுகளுடன் பட்டியலிடுக.
1.
| வ. எண் | மாசுபடுதல் வகை | மாசுபடுதலை ஏற்படுத்தும் வேதிப்பொருள்கள் | விளைவுகள் |
| 1 | காற்று மாசுபாடு | கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, சல்பர், நைட்ரஜன் ஆக்சைடுகள், குளோரோ புளோரோ கார்பன்கள், மீத்தேன் போன்றவை. | அமில மழை, புவி வெப்பமயமாதல், சுவாசக் கோளாறுகள் போன்றவை. |
| 2 | நீர் மாசுபாடு | வேதிப்பொருள்கள் கொண்ட கழிவுநீர் (சாயப்பட்டறைகள்), டிடர்ஜெண்டுகள், கச்சா எண்ணெய் போன்றவை. | நீரின் தரம் குறைதல், தோல் நோய்கள் போன்றவை. |
| 3 | நில மாசுபாடு | யூரியா போன்ற உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லிகள் போன்றவை. | பயிரிடும் நிலம் கெட்டுப் போதல், புற்றுநோய், சுவாச நோய்கள். |
2.
காற்றில் ஒளியின் திசைவேகம் C = 3 \(\times\) 108 மீவி-1
ஊடகத்தின் ஒளிவிலகல் எண் = 1.5
ஊடகத்தில் ஒளியில் திசைவேகம் V = ?
\(1.5 = \frac{3\times10^8}{v}\)
V = \(\frac { 3X{ 10 }^{ 8 } }{ 1.5 } \) = 2 \(\times\) 108 மீவி-1
ஊடகத்தில் ஒளியில் திசைவேகம் = 2 \(\times\) 108 மீவி-1
3.
பெரிஸ்கோப்:
(i) ஒரு பொருளுக்கு அல்லது நீர்மூழ்கிக் கப்பலுக்கு மேலாகவோ அல்லது அதைச் சுற்றியோ உள்ள பிற பொருள்களையோ அல்லது கப்பல்களையோ பார்ப்பதற்கான கருவியே பெரிஸ்கோப் ஆகும்.
செயல்படும் விதம்
(i) ஒளி எதிரொளித்தல் விதிகளின் அடிப்படையில் இக்கருவி செயல்படுகிறது.
(ii) இதன் அமைப்பானது நீண்ட வெளிப்பகுதியையும், உட்பகுதியையும் கொண்டது.
(iii) உட்பகுதியில் 45° கோணச் சாய்வில் ஒவ்வொரு முனையிலும் கண்ணாடி அல்லது முப்பட்டகமானது பொருத்தப்பட்டுள்ளது.
(iv) நீண்ட தொலைவில் உள்ள பொருளிலிருந்து வரும் ஒளியானது பெரிஸ்கோப்பின் மேல்முனையில் உள்ள கண்ணாடியில் பட்டு, செங்குத்தாகக் கீழ்நோக்கி எதிரொளிக்கப்படுகிறது.
(v) இவ்வாறு வரும் ஒளியானது பெரிஸ்கோப்பின் கீழ்ப்பகுதியில் உள்ள கண்ணாடியால் மீண்டும் ஒருமுறை எதிரொளிக்கப்பட்டு கிடைமட்டத் திசையில் சென்று பார்ப்பவரின் கண்களை அடைகிறது.
(vi) சிக்கலான அமைப்புடைய சிலவகைப் பெரிஸ்கோப்களில் உயர் காட்சித்திறனைப் பெறுவதற்காக, கண்ணாடிகளுக்குப் பதிலாக ஒளியிழைகள் பயன்படுத்தப்படுகின்றன.
(vii) பெரிஸ்கோப்பின் பயன்பாட்டைப் பொறுத்து அதன் உட்பகுதியில் உள்ள கண்ணாடிகளுக்கிடையே உள்ள இடைவெளியானது மாற்றி அமைக்கப்படுகிறது.
4.
(i) குவி ஆடிகள் மெய் பிம்பங்களைத் தோற்றுவிக்கும்.
(ii) குழி ஆடியின் முன் பொருள் வைக்கப்படும் இடத்தைப் பொறுத்து பிம்பத்தின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது.
| பொருளின் நிலை | பிம்பத்தின் நிலை | பிம்பத்தின் அளவு | பிம்பத்தின் தன்மை |
| ஈரில்லாத் தொலைவில் | F - இல் | மிகவும் சிறியது | தலைகீழான மெய் பிம்பம் |
| C - க்கு அப்பால் | C - க்கும் F - க்கும் இடையில் | சிறியது | தலைகீழான மெய் பிம்பம் |
| C - இல் | C - ல் | பொருளின் அளவில் இருக்கும் | தலைகீழான மெய் பிம்பம் |
| C - க்கும் F - க்கும் இடையில் | C - க்கு அப்பால் | பெரியது | தலைகீழான மெய் பிம்பம் |
| F - இல் | ஈறிலாத் தொலைவில் | மிகப் பெரியது | தலைகீழான மெய் பிம்பம் |
| F - க்கும் P - க்கும் இடையில் | ஆடிக்குப் பின்னால் | பெரியது | நேரான மாய பிம்பம் |
5.
உராய்வின் வகைகள்:
உராய்வு இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.
I. நிலை உராய்வு
II. இயக்க உராய்வு
I. நிலை உராய்வு:
ஓய்வு நிலையில் இருக்கும் பொருட்களால் உணரப்படும் உராய்வு நிலை உராய்வு எனப்படும்.
புவியில் ஓய்வுநிலையில் உள்ள பொருள்கள் நிலையான இடத்தைப் பெற்றுள்ளன.
எ.கா. கயிற்றில் உள்ள முடிச்சு.
II. இயக்க உராய்வு:
பொருள்கள் இயக்கத்தில் இருக்கும் போது ஏற்படும் உராய்வு இயக்க உராய்வு எனப்படும். இது 2 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.
(i) நழுவு உராய்வு
(ii) உருளும் உராய்வு:
(i) நழுவு உராய்வு:
ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் நழுவும் போது இரண்டு பொருட்களின் பரப்புகளுக்கு இடையே உருவாகும் உராய்வு நழுவு உராய்வு எனப்படும்.
எ.கா. பனிச்சறுக்கு வண்டி (sledge) பனியில் சறுக்குதல்
(ii) உருளும் உராய்வு:
ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் உருளும் போது அந்த இரண்டு பொருட்களின் மேற்பரப்புகளுக்கு இடையே உருவாகும் உராய்வு உருளும் உராய்வு எனப்படும். உருளும் உராய்வு நழுவு உராய்வை விட குறைவாக இருக்கும். எ.கா. தள்ளுவண்டிகள் மற்றும் பெட்டிகளில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு ஏற்படும் உராய்வு.
6.
சவ்வூடு பரவல்:
(i) நீர்த்த கரைசலில் இருந்து செறிவு மிக்க கரைசலுக்கு கரைப்பானின் மூலக்கூறுகள் அரை கடத்தி அல்லது தேர்வுக் கடத்து சவ்வின் வழியே இடப்பெயர்ச்சி அடையும் நிகழ்ச்சி ஆகும்.
(ii) சவ்வின் இருபுறமும் செறிவு சமநிலையை அடையும் வரை கரைப்பானின் மூலக்கூறுகள் செறிவு குறைந்த கரைசலில் இருந்து செறிவு மிக்க கரைசலுக்கு நகர்கின்றன.
(iii) செல்லிற்கு உள்ளேயும், வெளியேயும் மூலக்கூறுகள் இடம் பெயர்வது செல்களைச் சூழ்ந்துள்ள கரைசலின் செறிவைப் பொறுத்தது.
சவ்வூடு பரவலின் வகைகள்:
(i) மூன்று வகைப்படும்
i) ஒத்த செறிவு கரைசல்:
(i) செல்லின் உட்புறக் கரைசலின் செறிவும் வெளிப்புற கரைசலின் செறிவும் ஒரே மாதிரியாக இருக்கும்.
(ii) எ.கா - இரத்த சிவப்பணுக்கள் ஒத்த செறிவு கரைசலில் வைக்கப்படும் போது அதன் இயல்பு தட்டுவடிவத்திலேயே இருக்கும். ஏனெனில் செல்லினுள் நீர் செல்லும் வேகமும் வெளிவரும் வேகமும் சமமாகவே இருக்கும்.
ii) குறை செறிவு கரைசல்:
(i) செல்லின் வெளியில் உள்ள கரைசலின் செறிவு உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட குறைவு. அதனால் வெளியிலிருந்து நீரானது செல்லின் உள்ளே செல்கிறது.
(ii) எ.கா - இரத்த சிவப்பணுக்கள் குறை செறிவு கரைசலில் வைக்கப்படும் போது அது வீங்கி வெடித்து விடும்.
iii) மிகைச் செறிவு கரைசல்:
(i) செல்லின் வெளியில் உள்ள கரைசலின் செறிவு உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட அதிகம். இதனால் நீரானது செல்லை விட்டு வெளியேறுகிறது.
(ii) எ.கா - இரத்த சிவப்பணுக்கள் மிகை செறிவு கரைசலில் வைக்கப்படும்போது அவை சுருங்கி வடிவம் இழந்து காணப்படும்.
7.
| வ. எண் | மனிதரில் ஏற்படும் நோய்கள் | நோய் உண்டாக்கும் நுண்ணுயிரி |
பரவும் முறை | அறிகுறிகள் | தடுப்பு முறைகள் / சிகிச்சை |
| 1. | காசநோய்(டியூபர்குளோசிஸ்) | மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் (பாக்டீரியா) | காற்றின் மூலமும், நோய்த் தொற்று உடைய மனிதனின் சளி மூலம். | தொடர்ச்சியான இருமல், இரத்தத்துடன் கூடிய சளி, எடை இழப்பு, மூச்சு திணறல். | BCG தடுப்பூசி |
| 2. | காலரா | விப்ரியோ காலரா (பாக்டீரியா) | ஈக்களின் மூலமும், அசுத்தமான உணவு, மற்றும் நீர்ன் மூலமும் |
நீர்த்த வயிற்றுப் போக்கு, வாந்தி, விரைவான நீர் இழப்பு | காலராவுக்கு எதிரான தடுப்பூசி, தன் சுகாதாரம் |
| 3. | சாதாரண சளி | இன்புளூயன்சா (வைரஸ்) | காற்றின் மூலம் | சளி ஒழுகுதல், தும்முதல். | நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல் |
| 4. | ரேபிஸ் | ரேப்டோவிரிடி (வைரஸ்) | விலங்குகள் கடிப்பதனால் | காய்ச்சல், மாயத்தோற்றம், பக்கவாதம், உணவை விழுங்க இயலாமை. | ரேபிஸ்க்கு எதிரான தடுப்பூசி |
| 5. | அமீபிக் சீதபேதி | என்டமீபா ஹிஸ்டாலைடிகா (புரோட்டோசோவா) |
உணவு, நீர் மற்றும் ஈக்கள் | கடுமையான வயிற்றுப் போக்கு, இரத்தத்துடன் கூடிய மலம் | முறையான துப்புரவினை பராமரித்தல் மற்றும் மெட்ரோனிடையசோல் எதிர் உயிர்க் கொல்லிகளை பயன்படுத்த அறிவுறுத்தல் |
| 6. | மலேரியா | பிளாஸ்மோடியம் (புரோட்டோசோவா) | பெண் அனோபிலஸ் கொசு | குமட்டல், வாந்தி, கடும் காய்ச்சல் | மலேரியாவுக்கு எதிரான குயினைன், குளோரோகுயின் மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல், மேலும் கொசு வெறுக்கும் களிம்புகள் (விலக்கிகள்) கொசுவலைகளைப் பயன்படுத்துதல் |
8.
பாக்டீரியங்கள் ஒரு செல்லாலான புரோகேரியோட்டுகள் (உட்கரு அற்றவை) ஆகும். இவை பூமியில் முதன்முதலில் தோன்றிய வாழும் உயிரினமாகக் கருதப்படுகின்றன. வகைப்பாட்டியலில் மொனிரா என்னும் உலகத்தின் கீழ் இது இடம் பெற்றுள்ளது. பாக்டீரியாவைப் பற்றிய படிப்பு பாக்டீரியாலஜி எனப்படுகிறது. பாக்டீரியா 1μm முதல் 5μm (மைக்ரோமீட்டர்) அளவுடையது. இவை இரண்டு வகைப்படும்.
(i) காற்று சுவாச பாக்ரியா (கவாசத்திற்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது)
(ii) காற்றில்லா சுவாச பாக்டீரியா (சுவாசத்திற்கு ஆக்சிஜன் தேவைப்படுவதில்லை)
செல்லின் அமைப்பு:
பாக்டீரியாவின் வெளி அடுக்கு செல் சுவரினால் ஆனது. உட்கரு பொருள்கள் நியூக்ளியாய்டு எனக் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் உட்கரு சவ்வு காணப்படுவதில்லை. சைட்டோபிளாசத்தில் கூடுதலாகக் காணப்படும் குரோமோசோமல் டி.என்.ஏ-க்கள் பிளாஸ்மிட் என அழைக்கப்படுகின்றன. புரதச் சேர்க்கையானது 70S வகை ரைபோசோம்களால் நடைபெறுகிறது. சவ்வினால் மற்ற சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் (மைட்டோகாண்ட்ரியா, கோல்கை உடலம், எண்டோபிளாச வலைப்பின்னல்) காணப்படுவதில்லை. கசையிழையினால் இடப்பெயர்ச்சி நடைபெறுகின்றது.
9.
i) அகாலிஃபா இன்டிகா (குப்பைமேனி)
(i) இது யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சார்ந்தது.
(ii) இலையை அரைத்துப் பெறப்படும் பசை, தோலில் உள்ள கொப்புளங்களை ஆற்றுகிறது.
(iii) இலைச் சாற்றை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள உருளைப்புழுக்கள் அழியும்.
ii) ஏகில் மார்மிலோஸ் (வில்வம்)
(i) இது ரூட்டேசி குடும்பத்தைச் சார்ந்தது
(ii) இதன் காயானது செரிமானத்தைச் சரி செய்கிறது.
(iii) இது தீராத வயிற்றுப்போக்கு, சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.
iii) சொலானம் டிரைலொபேட்டம் (தூதுவளை)
(i) இது சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
(ii) இதன் இலைகளும் கனிகளும் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.
(iii) இது காசநோய் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
iv) ஃபில்லாந்தஸ் அமாரஸ் (கீழாநெல்லி)
(i) இது யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
(ii) முழுத்தாவரமும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
(iii) இது கல்லீரலுக்கு வலிமையைக் கொடுத்து, கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
V) அலோ வெரா (சோற்றுக் கற்றாழை)
(i) இது லில்லியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
(ii) இதன் இலைகள் மூலநோய் மற்றும் தோலில் தோன்றும் அழற்சியைக் குணப்படுத்துகிறது.
(iii) இது வயிற்றுப் புண்ணுக்குரிய மருந்தாகவும் பயன்படுகிறது.
10.
| அடிப்படை அளவு | SI அலகு | |
| (i) | நீளம் | மீட்டர் m |
| (ii) | நிறை | கிலோ கிராம் kg |
| (iii) | காலம் | வினாடி S |
| (iv) | வெப்பநிலை | கெல்வின் K |
| (v) | மின்னோட்டம் | ஆம்பியர் A |
| (vi) | பொருளின் அளவு | மோல் mol |
| (vii) | ஒளிச்செறிவு | கேண்டிலா cd |
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards